உயிராய் உணர்வில் உறைந்தவளே…(1)

5
(7)

அழகான காலை வேளையில் இரை தேடும் பறவைகளாக மக்கள் கூட்டம் கூட்டமாக நகரமெங்கும் பரவிக் கிடந்தனர். அவரவர் தங்களின் வேலைகளுக்கு வாகனநெரிசலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களின் பயன்பாட்டிற்கு உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஆறடியில், சிக்ஸ்பேக் உடல்கட்டுடன், குத்தீட்டி பார்வையுடன் கூடிய பழுப்பு நிற விழிகள், கூரிய நாசி, புகைப்பழக்கம் இல்லாததால் சிவந்த உதடுகள், அளவான அழகான மீசையுடன் கூடிய ஆணழகனான இருபத்தி எட்டு வயது வாலிபன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். உடற்பயிற்சியை முடித்துக் கொண்டிருந்தவனின் செல்போன் ஒலிக்க காதில் அணிந்திருந்த ப்ளூடூத் ஹேட்செட் மூலம் அட்டன் செய்து பேசினான் நமது நாயகன் உதிரன்எழிலமுதன். சொல்லலுங்க பரமசிவம் என்ற உதிரன்எழிலமுதன் எதிர்த்திசையில் கேட்ட செய்தியில் ஆடிப்போய் விட்டான். நீங்க ஸ்பாட்ல தானே இருக்கிங்க என்ற உதிரனிடம் ஆமாம் சார் என்றார் பரமசிவம். சரி நான் உடனே வரேன் என்ற உதிரன் தன் வீட்டிற்குச் சென்று  குளித்து விட்டு தன்னுடைய காக்கிச் சட்டையை அணிந்து கொண்டான்.

உதிரன்எழிலமுதன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். கஞ்சி போட்டு அயன் செய்த சீருடையை அணிந்து கொண்டவன் கண்ணாடியின் முன்பு நின்றிருக்க அவனருகில் வந்தாள் அவனது தங்கை மகிழ்வதனி. அண்ணா ஒரு நிமிடம் என்றவள் தன் அண்ணனின் முன் வந்து அவனது மீசையை முறுக்கி விட்டவள் இப்போ தான் என் அண்ணா கெத்து என்றாள். மகிழ் என்று அவளது அன்னை மங்கையர்க்கரசி அழைக்க இதோ வரேன்மா என்றவள் ஓடினாள்.

உதிரன் புன்னகைத்து விட்டு தன் அறையை விட்டு வெளியே வந்தான். அவனது தந்தை நெடுஞ்செழியன் என்ன உதிரன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட என்றார். ஒரு மர்டர் நடந்துருக்குனு தகவல் வந்துச்சு அப்பா அதான் என்றவன் வரேன் அப்பா, வரேன் அம்மா என்று கூறி விட்டு தனது ராயல்என்ஃபீல்டு பைக்கில் கொலை நடந்ததாக தகவல் வந்த இடத்திற்கு கிளம்பினான்.

அது ஒரு பிரபலமான பள்ளிக்கூடம். அங்கு சென்ற உதிரனை எதிர்சென்று வரவேற்றார் ஹெட்கான்ஸ்டபிள் பரம்சிவம். சொல்லுங்க பரமசிவம் மர்டர் ஆன ஆள் யாரு என்னனு விசாரிச்சிங்களா என்றான் உதிரன். சார் மர்டர் ஆன ஆள் இந்த ஸ்கூல் டீச்சர் சார் அந்த ஆளுக்கு வயது நாற்பது இருக்கும் சார் என்ற பரமசிவன் டெட்பாடி சார் என்று காட்டினார். டெட்பாடியை சுற்றி மார்க் செய்யப்பட்டு தடவியல் துறை நிபுணர்கள் வரவைக்கப் பட்டு தடயங்கள் , கைரேகை எல்லாவற்றையும் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

பிணத்தின் அருகில் வந்த உதிரன் பிணத்தின் மீது போர்த்தப்பட்டு இருக்கும் வெள்ளைத் துணியை நீக்கச் சொல்லவும் வெள்ளைத் துணி நீக்கப்பட்டது. பிணத்தின் கண்கள் தோண்டப்பட்டு இருந்தது. நாக்கு அறுக்கப்பட்டு, பற்கள் உடைக்கப்பட்டு , கை விரல்கள் துண்டிக்கப்பட்டு, பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு உடல் முழுக்க கத்திக் குத்துகள் இருக்க கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தது. இந்த ஆளோட பெயர் என்ன என்ற உதிரனிடம் சக்கரவர்த்தி சார் அதோ இந்த ஆளோட மனைவி அழுதுகிட்டு நிற்கிறார்கள் என்றார் பரமசிவம். ஆமா டெட்பாடியை யார் பர்ஸ்ட் பார்த்தது என்ற உதிரனிடம் வாட்ச்மேன் தான் பார்த்து இருக்கிறார் என்ற பரமசிவன் வாட்ச்மேன் முருகனை அழைக்க முருகன் வந்தான். சொல்லுயா என்ன நடந்துச்சுனு ஐயாகிட்ட சொல்லு என்று பரமசிவம் கூறவும் வாட்ச்மேன் முருகன் கூறத் தொடங்கினான்.

ஐயா காலையில் ஆறு மணிக்கு எல்லாம் ராத்திரி வாட்ச்மேன் மணி கிளம்பிருவானுங்க அதுக்குள்ளவே நானும் வந்துருவேனுங்க இன்னைக்கு என்னடானா என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைனு கொஞ்சம் தாமதமா வந்தேன். ஆனால் மணி கிளம்பலைங்க தூங்கிட்டு இருந்தான் அவனை எழுப்பி என்ன ஏதுனு கேட்டால் என்னனு தெரியல அண்ணே ராத்திரி ஏதோ எறும்பு கடிச்ச மாதிரி இருந்துச்சு அவ்வளவு தான் தெரியும் நல்ல உறக்கம் அப்படினு சொல்லிட்டு அவன் கிளம்பிட்டானுங்க நான் எல்லா க்ளாஸ்ரூமையும் திறக்கலாம்னு வந்து திறந்து பார்த்தப்ப சக்கரவர்த்தி சார் இந்த க்ளாஸ்ரூம்ல செத்துக் கிடக்காருங்க என்றான் முருகன்.

அந்த மணி எங்கே முருகன் என்ற உதிரனிடம் போன் பண்ணி வரச் சொன்னேனுங்க என்றவன் ஐயா அதோ மணியே வந்துட்டானுங்க என்று அவர்களை நோக்கி வரும் மணியைக் காட்டினான் முருகன். உன் பேருதான் மணியா என்ற உதிரனிடம் ஆமாங்க சார் என்றான் மணி. சரி என்ன நடந்துச்சு என்ற உதிரனிடம் தெரியலை சார் எப்பவும் ராத்திரி தூங்காமல் காவல்காக்கிறது தான் என்னோட பழக்கம் ஆனால் நேத்து ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும் ஏதோ கையில் சுருக்குனு எறும்பு கடிச்ச மாதிரி இருந்துச்சு என்னனு கையை தேய்ச்சுட்டு பார்த்தாள் எனக்கு தலை சுத்துற மாதிரி இருந்துச்சு அவ்வளவு தான் சார் எனக்கு தெரியும் காலையில் முருகா அண்ணே எழுப்பவும் தான் நானே கண் விழிச்சேன் என்றான் மணி. முருகன், மணி இருவரின் வாக்குமூலமும் சந்தேகப் படும் படி உதிரனுக்குத் தோன்றவில்லை. இருந்தும் அவர்களைக் கண்காணிக்க இரண்டு கான்ஸ்டபிளை நிர்ணயித்தவன் மற்ற ஆசிரியர்களிடம் இது பற்றி விசாரிக்க சப்இன்ஸ்பெக்டர்  கார்முகிலனை அனுப்பி வைத்தான்.

பிணத்தை பிரேதப்பரிசோதனை செய்ய அனுப்பி வைத்த பிறகு  கார்முகிலன் அருகில் சென்றான். என்னாச்சு முகிலன் என்ற உதிரனிடம் சார் இந்த ஆளைப் பத்தி யாருமே தப்பா சொல்ல மாட்டேங்கிறாங்க ரொம்ப நல்ல மாதிரினு சொல்லுறாங்க என்றான். எதார்த்தமாக உதிரனின் பார்வை அங்கு நின்றிருந்த சிவப்பு நிற புடவை அணிந்த பெண்ணின் மீது பதிந்தது. அவளைப் பார்த்தவன் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டான் அது போதாதா அந்த காரிகைக்கு.

அவ்வளவு தான் மிகவும் குஷியானாள் குந்தவைதேவி. நம் நாயகி. அதே பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறாள். அவளுக்கு பல நாட்களாகவே நம் நாயகனின் மீது காதல் அவன் தான் அவளைத் திரும்பி கூட பார்ப்பது இல்லை. என்ன செய்வது அவன் பார்க்கவில்லை என்றாள் என்ன நான் பார்க்கிறேன் என்று பின்னாலே சுற்ற ஆரம்பித்தாள். அது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்ததே தவிர காதலைக் கொடுக்கவில்லை.

குந்தவைதேவி இருபத்திஐந்து வயது மங்கை. ஐந்தரை அடி உயரம், குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லாத அளவான உடலமைப்பு, வட்டமானமுகம், பிறை போன்ற நெற்றி, வில் போன்ற புருவங்கள்,  வேல்போன்ற விழிகள், கூரியநாசி, செந்நிற அதரங்கள் என அவளைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். பேரழகி என்று சொல்ல முடியாது என்றாலும் பார்ப்போரை ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகி. என்ன நம்ம நாயகன் தான் கண்டுகொள்ள மாட்டான்.

என்ன இன்ஸ்பெக்டர் சார் என்னை மட்டும் விசாரிக்காமல் போறிங்க என்றவளை முறைத்தவன் கிளம்பினான்.

ஏன்டி கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா அந்த ஆளுதான் உன்னை பிடிக்கலைனு சொல்லிட்டாரே அப்பறம் ஏன்டி அந்த ஆள் பின்னாடியே சுத்துற என்ற தோழி கவிதாவிடம் கவி டார்லிங் அவருக்கு பிடிக்கலைனா என்ன எனக்கு பிடிச்சுருக்கே என்றாள் குந்தவை. சரி இப்போ இந்த சக்கரவர்த்தி சார் எப்படி இறந்திருப்பாரு யாரு அவரை கொலை பண்ணிருப்பாங்க என்ற கவிதாவிடம் தெரியலையே எவன் பண்ணுன வேலைனு எவன் பண்ணுனானோ அவன் நல்லா இருக்கனும் என்ற குந்தவையை கேள்வியாக பார்த்தாள் கவிதா.

இல்லைடி இந்த மர்டர் நடந்ததால தானே என் ஆளை இப்போ பார்க்க முடிந்தது என்ற குந்தவையை முறைத்த கவிதா நீயெல்லாம் என்ன பிறவிடி என்றாள். மனிதபிறவி தான் டார்லிங் என்ற குந்தவை கொலை நடந்திருப்பதால் இன்று பள்ளி விடுமுறை அதனால் தன் ஷ்கூட்டரில் வீட்டிற்குச் சென்றாள்.

வீட்டிற்கு வந்த குந்தவையிடம் என்ன குந்தவி அதற்குள்ளே வந்துட்ட என்றார் அவளது அம்மா தேவகி. எங்க ஸ்கூல் டீச்சர் சக்கரவர்த்தி சாரை யாரோ கொலை பண்ணி டெட்பாடியை ஸ்கூல்ல போட்ருக்கானுங்க அதனால்  ஸ்கூல் லீவு என்றவள் தன்னறைக்குச் சென்று தனது லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கா என்று வந்தாள் அவளது தங்கை சங்கவி. என்ன சங்கவி என்றவளிடம் என்ன கொஞ்சம் ஹாப்பி மூட் அத்தானை பார்த்தியா என்றாள் சங்கவி. எப்படிடி என்ற குந்தவையிடம் இதில் என்ன ஆச்சர்யம் உங்க ஸ்கூல் அவரோட ஸ்டேசன் லிமிட்ல தானே வருது என்ற சங்கவி நீயூஸ்ல பார்த்தேன் என்றாள். குந்தவை சிரித்து விட்டு தன் வேலையை கவனித்தாள்.

இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்ற சங்கவியிடம் தெரியலையே சங்கவி என்ற குந்தவை தன் வேலையை கவனிக்க தன் அக்காவின் வாழ்வை நினைத்த சங்கவிக்குத் தான் கண்கள் கலங்கியது.

என்ன சங்கவி ஒரு மாதிரியா இருக்க என்ற தேவகியிடம் நீங்களாவது மாமா வீட்டில் போயி பேசலாம்ல அம்மா அக்கா இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே இருப்பாள் என்றாள் சங்கவி. உங்க அப்பாவை பத்தி தான் உனக்கு தெரியுமே சங்கவி அவரை மீறி என்னால் என்ன செய்ய முடியும் என்ற தேவகியை ஆற்றாமையுடன் பார்த்தாள் சங்கவி. அந்த நேரம் அங்கு வந்தார் வாசுதேவன்.

என்ன சங்கவி உங்க அம்மாகிட்ட ஏதோ பஞ்சாயத்து பேசுற போல என்ற வாசுதேவனிடம் இல்லைப்பா அக்கா என்று ஏதோ கூற வந்தவளிடம் அது முடிஞ்சு போன கதை அதைப் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்ற வாசுதேவன் தேவகி என்றிட சாப்பாடு எடுத்து வைத்தார் தேவகி. அமைதியாக சாப்பிட்ட வாசுதேவன் இன்றைக்கு சாயந்தரம் உன்னை பொண்ணு பார்க்க வராங்க சங்கவி அதனால் தயாரா இரு என்று கூறி விட்டு கிளம்பினார் வாசுதேவன்.

என்னங்க யோசனை என்ற மங்கையர்க்கரசியிடம் ஒன்றும் இல்லை எல்லாம் நம்ம உதிரன் பத்தி தான் மங்கை என்றார் நெடுஞ்செழியன். தேவகி போன் பண்ணி இருந்தாள் சங்கவிக்கு உன் அண்ணன் வரன் பார்த்துட்டு இருக்காராம் என்ற நெடுஞ்செழியனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலையை கவிழ்ந்து கொண்டார் மங்கையர்க்கரசி. நம்ம பையனோட பிடிவாதம் என்னை என்னங்க பண்ண சொல்றிங்க என்ற மங்கையிடம் புரியுது மங்கை அவனோட வாழ்க்கையை நாம தான் சரி பண்ணனும் என்றார் நெடுஞ்செழியன்.

அப்பா என்ற மகிழ்வதனியிடம் சொல்லும்மா என்றார் நெடுஞ்செழியன். அண்ணாகிட்ட நீங்களே பேசி பார்க்கலாமே என்றவளிடம் நான் சொன்னால் மட்டும் அவன் கேட்கப் போகிறானா விடுமா நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று கூறி விட்டு எழுந்து சென்றார் நெடுஞ்செழியன்.

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!