உயிராய் உணர்வில் உறைந்தவளே…(4)

4.8
(4)

எவ்வளவு நேரம் இப்படியே அமர்ந்திருப்பது என்று நினைத்த குந்தவை எழுந்து செல்ல அவள் அமர்ந்திருந்த இடத்தில் நின்றிருந்த படகின் மறுபுறம் இருந்து உதிரனும் எழுந்தான். அங்கு அவனைக் கண்டவள் எழில் என்று அவனது கையை பிடிக்க அதை உதற முயன்றான். அவள் விடாமல் பிடித்தவள் என்னை மன்னிக்கவே மாட்டிங்களா எழில் என்றதும் மன்னிக்கவா உன்னையா நான் செத்தபிறகு செய்ய என்றவன் வார்த்தையை முழுங்கிக் கொண்டு நீ செய்த காரியத்தை வாயால கூட சொல்ல முடியலடி. உனக்கு தெரியும்லடி சில சென்டிமென்ட் எனக்கு எமோசனல் அட்டாச்னு என்றவன் எல்லாமே முடியப் போகுது குந்தவை இன்னும் ஒரு வாரம் அப்பறம் நீ யாரோ நான் யாரோ என்றவன் அவளது கையை உதறினான்.

 

அவள் அப்படியே நின்றவளால் நடந்த எதையுமே மாற்ற முடியவில்லை. எல்லாமே என்னோட தப்பு தான் எழில் மன்னிக்க கூடாதா உங்களோட காதல் என்னோட தப்பை மன்னிக்காதா என்றவளிடம் காதல் செத்துப் போச்சு குந்தவை. செத்துப் போன காதலால் ஒன்றுமே செய்ய முடியாது என்றவன் கிளம்பிச் சென்றான்.

 

அவன் செல்லும் திசையை கண்ணீரோடு பார்த்தவள் அமைதியாக சென்று தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

 

நெஞ்சம் என்னும் ஊரினிலே

காதல் என்னும் தெருவினிலே

கனவு என்னும்வாசலிலே

என்னை விட்டுவிட்டு

போனாயே….🎶

 

வாழ்க்கை என்னும் வீதியிலே

மனசு என்னும் தேரினிலே

ஆசை என்னும்போதையிலே

என்னை விட்டுவிட்டு

போனாயே…🎶

 

நான் தனியாய்தனியாய்

நடந்தேனே….🎶

 

சிறு பனியாய் பனியாய்

கரைந்தேனே… 🎶

 

ஒரு நுரையாய்நுரையாய்

நடந்தேனே காதலாலே…🎶

 

என்ன அக்கா ஏன் இவ்வளவு டல்லா வந்திருக்க என்றவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். என்னால முடியலடா இன்னும் எத்தனை நாள் தான் இந்த தண்டனை எனக்கு ஏதாவது விச ஊசி போட்டு கொன்னுரு என்ற தன் அக்காவிடம் பைத்தியமா அக்கா நீ என்றான் அவளது தம்பி அருண்மொழி. பைத்தியம் தான்டா என்றவளின் கண்ணீரைத் துடைத்தவன் அக்கா அத்தான் சீக்கிரமே உன்னை புரிஞ்சுப்பாரு என்ற தம்பியின் தோளில் சாய்ந்தவள் அமைதியாக கண்களை இறுக மூடித் திறந்தாள். சரியென்று எழுந்தவள் தன்னறைக்குச் சென்று தன்னுடைய லேப்டாப்பில் மூழ்கி விட்டாள்.

 

மறுநாள் பொழுது நன்றாகவே விடிந்தது. அருண்மொழி தன் தந்தை வாசுதேவனிடம் அப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்றான். சொல்லுப்பா என்றவரிடம் அக்கா பத்தி என்றவனிடம் எந்த அக்கா உன் அக்கா இரண்டுமே உருப்படாததுக தான் அதுங்களை பத்தி பேச என்ன இருக்கு ஒன்னு என் மானத்தை வாங்குனுச்சு, இன்னொன்னு என் உயிரை வாங்கிட்டு இருக்கு என்றார் வாசுதேவன். அப்பா நீங்க போயி அத்தான் கிட்ட பேசினால் அவர் கேட்பாருனு தோணுது என்ற அருண்மொழியிடம் அருண் உனக்கு என் தங்கச்சி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற ஆசை எதாவது இருந்தால் சொல்லு போயி பேசுறேன். உன் அக்கா வாழ்க்கை பத்தி என்னால பேச முடியாது. பெத்த கடமைக்கு காலம் பூராவும் வச்சு சோறு போடுறேன் ஆனால் உதிரன் கிட்ட என்னால பேச முடியாது. அவரா மனசு மாறி இவளை ஏத்துக்கிட்டால் ஏத்துக்கட்டும் நான் போயி பேச மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார் வாசுதேவன். கவலையுடன் எழுந்த அருண் தன் அம்மாவின் முகத்தை பார்க்க  அவரோ விடுப்பா நடக்கிறது தான் நடக்கும் என்றார். அவனும் அமைதியாக தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றான்.

 

 

என்ன மேடம் சோகமா இருக்கிங்க என்ற சுதர்சனிடம் டேய் இது டியூசன் தானே இங்கேயும் மேடம்னு தான் சொல்லுவியா அக்கானு கூப்பிடுடா என்றாள் குந்தவை. போங்க மேடம் ஸ்கூல்ல மேடம் , டியூசன்ல அக்கா இந்த கன்பியூசன்ல உங்களை ஸ்கூல்ல அக்கா அக்கானு கூப்பிட்டு பல்பு வாங்குறதே என் வழக்கமா போச்சு என்றவனைப் பார்த்து சிரித்தவள் சரி போயி டெஸ்ட் எழுது என்றாள். வாடா வந்தியத்தேவா இவ்வளவு லேட்டா என்ற குந்தவையிடம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் டார்லிங் என்றவன் உன்னிடம் ஒரு ஓலையுடன் வந்தேன் குந்தவை என்ற ஐந்தாம் வகுப்பு மாணவன் ரேயானைப் பார்த்து சிரித்தாள் குந்தவை. அடேய் உன்னை டிராமால வந்தியத்தேவனா நடிக்க சொன்னா அப்படியே மாறிட்டியா என்ன ஓலைடா அது என்றாள். உன் ஆளு அந்த போலீஸ்காரர் ஏதோ கேஸ் விசயமா உன்னை விசாரிக்கனுமாம் அதான் மேல வரலாமானு கேட்டாருனு ஆண்ட்டி சொல்லச் சொன்னாங்க என்றான் ரேயான். சரி நீ போயி ஹோம்வொர்க் பண்ணு நான் வரேன் என்றவள் கீழே சென்றாள்.

 

கணவன் வந்திருக்கிறான் என்றதும் வேகமாக சென்று முகம் கழுவி, வேறு புடவை அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து, உச்சி வகுடில் குங்குமம் வைத்து தலைநிறைய பூ வைத்து ஏதோ முதலிரவுக்கு தயாராகி வந்த புதுப்பொண்ணு போல் அவன் முன்பு நின்றாள். அவளைப் பார்த்தவன் உங்க கிட்ட உங்க ஸ்கூல்ல நடந்த மர்டர் கேஸ் பத்தி விசாரிக்கனும் என்றான்.

 

அவளும் அவன் பின்னால் சென்றாள். சொல்லுங்க அன்னைக்கு பாத்ரூம்ல என்ன நடந்துச்சு என்றான். என்ன நடந்துச்சுனா என்றவளிடம் என்ன பார்த்திங்க நீங்க பார்க்கும் போதே அவங்க செத்துக் கிடந்தாங்களா இல்லை நீங்கதான் கொலை பண்ணுனிங்களா என்றவனை முறைத்தவள் எனக்கு வேற வேலை இல்லை பாரு அந்த பொம்பளையை கொலை பண்ண என்றாள். அவன் அவளை முறைக்கவும் அவள் கூற ஆரம்பித்தாள்.

 

பாத்ரூம் போனப்ப மலர்கொடி இறந்து கிடந்த டாய்லெட் டோர் ஓபன்ல இருந்தது. மத்த டோர் எல்லாம் க்ளோஸ் இது மட்டும் ஏன் ஓபன்ல இருக்கு என்று நினைத்து  அந்த கதவை சாத்த போனப்ப தான் இரத்த வெள்ளத்தில் மலர்கொடி கிடந்தாங்க. எனக்கு இரத்தத்தை பார்த்தாலே வலிப்பு வந்துரும் அதனால அங்கிருந்து வேகமா ஓடி வந்துட்டேன். இருந்தாலும் வலிப்பும் வந்திருச்சு என்றாள்.

 

சரி ஓகே அந்த மலர்கொடி எப்படிப் பட்ட பெண் என்றான். அவங்களோட எனக்கு அவ்வளவு பழக்கம் கிடையாது. எப்பவாச்சும் பார்த்தால் சிரிப்பாங்க என்றவளிடம் சரி சக்கரவர்த்தி எப்படி என்றான். அவர் கூடவும் எனக்கு அவ்வளவா பழக்கம் இல்லை என்றவளிடம் மேலும் சில விவரங்களைக் கேட்டு விட்டு சென்றான்.

 

அடுத்ததாக அவன் சக்கரவர்த்தியின் வீட்டிற்குச் சென்றான். அங்கு சக்கரவர்த்தியின் மனைவி செல்வராணியிடம் விசாரிக்க என் புருசன் ரொம்ப தங்கமானவரு நிறைய மாணவர்கள் படிப்புக்கு உதவி பண்ணி இருக்காரு என்று கூறி அவரை கொலை பண்ணுன பாவிங்களை சும்மா விடாதிங்க என்று அழ ஆரம்பிக்க அவரிடம் விசாரித்தவன் சக்கரவர்த்தியின் அறைக்குச் சென்றான். அங்கு ஏதும் தகவல் கிடைக்குமா என்று தேடியவனுக்கு ஒரு முக்கியமான எவிடன்ஸ் கிடைத்தது. ஆனால் இந்த எவிடன்ஸ் வைத்து எப்படி கொலைகாரனை நெருங்க முடியும் என்று யோசித்தான்.

 

அந்த நேரம் சரியாக முகிலனிடம் இருந்து போன் வந்தது. அதில் கேட்ட தகவலில் அதிர்ந்தவன் வாட் என்ன சொல்றிங்க முகிலன் என்றவன் உடனே கிளம்பினான்.

 

மீண்டும் ஒரு கொலை அதே பள்ளியில் வேதியியல் ஆய்வகத்தில் கொலை நடந்திருக்கிறது  என்ற தகவலைத் தான் முகிலன் சொல்ல வேகமாக அந்த இடம் நோக்கி வந்தான் உதிரன்.

 

என்னாச்சு முகிலன் என்ற உதிரனிடம் சேம் டைப் மர்டர் சார் என்றான் முகிலன். எக்ஸ்ட்ராவா லேப்ல உள்ள சில பொருட்களை யூஸ் பணணி பாடியை கொஞ்சம் சிதைச்சுருக்காங்க என்றான் முகிலன். இந்த ஆளு யாரு என்ற உதிரனிடம் கெமிஸ்ட்ரி டீச்சர் சந்திரன் என்றான் முகிலன்.

 

யாருதான் இப்படி கொலை பண்ணுறானுகளோ அந்த கொலை காரனுங்க மட்டும் என் கையில் கிடைக்கட்டும் கைமா பண்ணிடுறேன் என்று பல்லைக் கடித்த உதிரனின் கண்களில் அது தட்டுப்பட்டது.

 

முகிலன் ஒரு நிமிடம் இதை நோட் பண்ணிங்களா இது ஏதோ க்ளூ மாதிரி இருக்கு என்றவன் லேபில் இருந்த கரும்பலகையில் இருந்த சின்னஞ்சிறிய ஓவியத்தை பார்த்தான்.

 

அதில் ஒரு அறை , அந்த அறைக்குள் சில நாற்காலிகள்  இருப்பது போல் வரையப்பட்டிருந்தது. இது என்ன இடம் ஏதோ ஆபிஸ் ரூம் போல இருக்கே என்று யோசித்த உதிரனுக்கு மற்ற இரண்டு கொலைகள் நடந்த இடத்தில் இது போல் ஏதாவது பார்த்தோமா என்று சிந்திக்கத் தொடங்கினான்.

 

டெட்பாடியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவன் நேராக ஸ்டேசனுக்குச் சென்று மற்ற கொலைகள் நடந்த இடத்தில் எடுத்த போட்டோக்களை ஆய்வு செய்தான். அவன் எதிர்பார்த்த விசயம் கிடைத்து விட்டது என்று நினைத்தான். அந்த நேரம் கமிஷ்னர் ஆபிஸில் இருந்து அழைப்பு வரவும் அங்கே சென்றான் உதிரன்.

 

என்ன மிஸ்டர் உதிரன்எழிலமுதன் அந்த ஸ்கூல் மர்டர் கண்டினியூவ் ஆகிட்டே இருக்கு அது பத்தி என்ன தகவல் என்றவர் பத்திரிக்கை காரனுங்களுக்கு பதில் சொல்ல முடியலையா என்று சளித்துக் கொண்டார் கமிஷ்னர் சிவப்பிரகாஷ். சார் அது ஒரு சைக்ளிங் மர்டர் போல தான் சார் தோணுது. இன்னமும் இந்த கொலைகள் தொடரும்னு தான் தோணுது ஆனால் ரீசன் புரியலை. கொலை செய்யப்பட்ட டீச்சர்ஸ் மேல எந்த தப்புமே யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க எப்படி இவ்வளவு பெர்பெக்ட்டா இந்த டீச்சர்ஸ் இருக்காங்கனும் தெரியலை. இறந்து போன  ஒவ்வொரு டீச்சர்ஸும் ப்ரண்ட்ஸானு பார்த்தாலும் கிடையாது அதான் குழப்பமா இருக்கு என்றான் உதிரன். இன்னும் சில விசயங்களைப் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் உதிரன்.

 

அந்த பங்களாவிற்குள் நுழைந்தது ஒரு பிஎம்டபிள்யூ கார். அதில் இருந்து இறங்கினான் கோர்ட் சூட் எல்லாம் போட்டு பார்க்க நன்றாக ஆறடி உயரம், கட்டுக்கோப்பான உடலமைப்பு , வலது கையில் பிளாட்டினம் பிரேஸ்லெட், இடது ரோலக்ஸ் கைக்கடிகாரம், கண்ணில் கூலிங்க்ளாஸ்,  காலில் நல்ல ப்ராண்ட்ட்ஷூ அணிந்திருந்தான். அவன் முகமெங்கும் கடுமையுடன் அந்த பங்களாவிற்குள் நுழைய அங்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சூர்யகுமார் நின்றிருந்தார்.

 

அவரை முறைத்தவன் என்ன மிஸ்டர் சூர்யக்குமார் நம்ம ஸ்கூல் டீச்சர்ஸ் ஒவ்வொருத்தரா செத்துக்கிட்டு இருக்காங்க என்றிட எனக்கு ஒன்றும் புரியல சார் யார் தான் இப்படி கொலை பண்றாங்கனே தெரியலை என்றார் சூர்யக்குமார்.

 

ஸ்கூல்ல சிசிடிவி கேமரால கூட எதுவும் பதிவாகாமல் இருப்பது தான்  பிரச்சனை தலைமை ஆசிரியரிடம் என்ன சொல்றிங்க என்றான் அவன் விமலனாதித்யன். அந்த பள்ளியின் ஓனர் அவன்.

 

ஆமாம் சார் ஒரு புட்டேஜ்ல கூட இவங்க மர்டர் பதியலை பிணம் கிடக்கிறது மட்டும் தான் பதிஞ்சுருக்கு என்றதும் விமலனாத்தியனிற்கு தூக்கிவாரிப் போட்டது. சார் இது பேய், பிசாசு என்று கூறிய சூர்யக்குமாரிடம் முட்டாள் எந்த காலத்தில் இருக்க பேயாம், பிசாசாம். கொலைகாரனுங்க  ஜாமர் கூட யூஸ் பண்ணிருக்கலாம் என்றவன் இந்த கேஸை விசாரிக்கிற இன்ஸ்பெக்டர் எப்படி என்றதும் அந்த ஆள் பெயர் உதிரன்எழிலமுதன் . ஆளு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாம் சார் என்ற சூர்யக்குமாரிடம் பிழைக்கத் தெரியாதவன் என்ற விமலன்  சரி நீ கிளம்பு அடுத்து எந்த கொலையும் நடக்க கூடாது என்று எச்சரித்தான் . சூர்யகுமாரோ என்னமோ நான் தான் எல்லா கொலையும் பண்றது மாதிரி இவன் என்னை மிரட்டுறான்

ஐயோ காலக் கொடுமை என்று கூறி விட்டு கிளம்பினார்.

 

 

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!