உயிராய் உணர்வில் உறைந்தவளே…(7)

5
(3)

குந்தவை உதிரனின் அறைக்குள் நுழைந்து கணவனைத் தேட அவனோ பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதிலே தெரிந்தது ஏதோ கேஸ் விசயமாக தான் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று அதைக் கண்டவளுக்கு எரிச்சல் தான் வந்தது. கோபமாக சென்று மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

போன் பேசி விட்டு வந்தவன் மனைவியைக் கண்டான். அவள் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் குந்தவி என்றிட கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல் நடித்தாள். என்ன குந்தவி இது பர்ஸ்ட் நைட் அதுவுமா இப்படி தூங்குற என்றவன் சரி நீ தூங்கு எனக்கு ஸ்டேசன்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு கிளம்புறேன் என்று அவன் கூறியதும் சட்டென்று எழுந்தவள் அவன் சட்டையைப் பிடித்து இப்ப மட்டும் நீ ஸ்டேசனுக்குப் போன அவ்வளவு தான் என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்க அவளருகில் வந்து அவளை பின்னிருந்து அணைத்தவன் என் செல்லத்தை கொஞ்சுற நேரத்தில் ஸ்டேசன்ல என்ன கிரிமினல்சையாடி கொஞ்சப் போறேன். நீ பாட்டுக்கு பர்ஸ்ட் நைட்ல மாமனுக்கு பாலைக் கொடுக்காமல் படுத்துகிட்ட அதான் உன்னை எப்படி எந்திரிக்க வைத்தேன் பார்த்தியா என்றான் உதிரன்எழிலமுதன். அவன் கையைத் தட்டி விட்டவளின் கையைப் பிடித்தவன் என்னடி ரொம்ப தான் ஓவரா பண்ற என்றான். அதான் தெரியுதுல நான் ஓவரா பண்றேன்னு அப்பறம் என்ன போயி படுத்து தூங்குங்க என்று கூறி விட்டு தரையில் பெட்சீட்டை விரித்தாள். என்ன டார்லிங் இது உனக்கு மெத்தை பிடிக்கலையா சரி அப்போ நானும் என் செல்லக்குட்டி கூடவே தரையில் படுத்துக்கிறேன் என்றவன் அவள் மடியில் படுத்துக் கொள்ள எழில் எழுந்திருங்க என்றாள். முடியாது என்றவனது தலைமுடியை பிடித்து ஆட்டி வைத்தாள். அவனோ அவளையே ரசித்துக் கொண்டு இருந்தான்.

என் முகத்தில் என்ன படமா ஓடுது இப்படி வச்ச கண் எடுக்காமல் பார்க்கிறிங்க என்றவளிடம் ஆமாம் பேபி பிட்டு படம் ஒடுது என்று கண்ணடித்தவனை முறைத்தாள். பேபி முறைக்கும் போது செமையா இருக்கடி என்றவன் எக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான். அதில் அவள் லேசாக சிரித்தாலும் அவனை மீண்டும் முறைததாள். குந்தவி என்றவன் அவளது விரலைப் பிடித்து சொடுக்கிட்டுக் கொண்டிருக்க என்ன என்றாள். உனக்கு என்னை நிஜமாவே பிடிக்கலையாடி என்றான்.

உங்களை பிடிக்கும் உதிரன்எழிலமுதனை பிடிக்கும் ஆனால் இன்ஸ்பெக்டர் உதிரன்எழிலமுதனை பிடிக்காது என்றாள். இரண்டும் ஒன்று தானடி என்றவனிடம் அதெல்லாம் எனக்கு தெரியாது காக்கிச்சட்டையை கழட்டுறிங்களோ இல்லையோ இந்த ரூம்குள்ள வரும் போது குந்தவையோட புருசனா மட்டும் தான் வரனும். என் கூட இருக்கும் போது இன்ஸ்பெக்டரா இருக்க கூடாது. ஸ்டேசன்ல இருந்து போன் கால் என்கூட இருக்கும் போது பேசக்கூடாது. குறிப்பா லேடி போலீஸோட நட்பு இருக்கவே கூடாது அப்பறம் நான் எப்போ வெளியில் கூட்டிட்டு போக சொன்னாலும. உடனே வீட்டுக்கு வரணும். வேலை இருக்கு அது இதுனு சாக்கு சொன்னிங்க அவ்வளவு தான் என்றாள். அவள் மீது இருந்த அதிகப்படியான காதலால் அவனும் சரியென்று கூறினான்.

சரிடி உன் எல்லா கண்டிசன்க்கும் ஒத்துக்கிறேன் இப்பவாச்சும் சொல்லேன்டி ஐ லவ் யூ னு என்றவனிடம் முடியாது சொல்லவே மாட்டேன் என்றாள். ஏன்டி என்றவன் அவளை அணைத்துக் கொள்ள இப்பவும் சொல்ல மாட்டியா என்றிட மாட்டேன் என்றான். அவளை தூக்கி மெத்தையில் சரித்தவன் அவள் மீது படர்ந்து இப்பவும் சொல்ல மாட்டியா என்றிட மாட்டேன் என்றள். அப்போ சொல்லாத இந்த வாய்க்கு பனிஷ்மென்ட் கொடுக்கனுமே என்றவன் அவளிதழில் தன் இதழைப் பதிக்க அவள் அவன் சட்டையை இறுக்கியவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அவன் தன் இதழைப் பிரிக்க நினைத்த நேரம் அவள் அவனிதழை தனதாக்கிட மனைவியின் சம்மதம் கிடைக்கவே அவன் அவளை மெல்ல தன் காதலால் ஆள ஆரம்பித்தான். அவள் கை விரல் தொடங்கி உச்சி முதல் பாதம் வரை அவளை முத்தத்தில் சிலிர்க்க வைத்தவன் அவளது பெண்மையை மெல்ல மெல்ல தன் வசப் படுத்தி அவளை முழுவதும் தனதாக்கினான். மங்கையவள் நாணத்தில் சிவக்க அவளை தன் காதலால் இன்னும் சிலிர்க்க வைத்து மேலும் சிவக்க வைத்தான். இருவரும் இருடல் ஓருயிராக இனிய தாம்பத்யம் தொடங்கி இல்லற பந்த்ததில் இணைந்தனர்.



மறுநாள் விடியல் குந்தவைக்கு தன் கணவனின் முகத்தில் தான் இருந்தது. கண்விழித்து எழுந்தவள் குழந்தை போல் உறங்கும் தன் கணவனின் நெற்றியில் முத்தமிட ஐ லவ் யூ குந்தவி என்றவனோ அவளை தன்னோடு இறுக்கினான். எழில் என்ன பண்ணுறிங்க விடிஞ்சுருச்சு விடுங்க என்றாள் குந்தவை. என்ன பண்ணப் போறேனு உனக்கு தெரியாதா குந்தவி என்றவன் அவளைத் தன்னோடு இறுக்கிட ஐயோ எழில் விடிஞ்சுருச்சு இன்னும் நாம வெளியில் போகலைனா என்ன நினைப்பாங்க என்றவளிடம் அவங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல என்ன நடந்துச்சோ அது தான் நடக்குதுனு நினைப்பாங்க நீ சும்மா இருடி என்றவன் தன்னவளிடம் தன் தேடலைத் தெடங்கினான்.

ஒரு வழியாக இருவரும் எழுந்து குளித்து முடித்து அறையை விட்டு வெளியே வந்தனர். மருமகளின் முகத்தின் செழுமையைக் கண்ட மங்கையர்க்கரசி அவளை திருஷ்டி கழித்தார்.

பிறகு மறுவீடு சடங்கு, விருந்து அது இது என்று ஒருவாரம் கழிந்தது. இருவரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர். குந்தவை இந்த ஒரு வாரத்தில் அவன் தன்னுடனே இருப்பதால் கணவன் மீது அலாதி அன்பைக் கொண்டிருந்தாள். அவளை அவன் உள்ளங்கையில் வைத்து தாங்கினான். அவளுடனே இருந்தான். அவளை விட்டுப் பிரியாமல் அவளுடனே அவன் இருப்பது அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

என்ன புகழ் இப்பவாச்சும் நம்மளை வீட்டுக்கு கூப்பிடலாம்ல அதான் உங்க அண்ணனுக்கும், குந்தவைக்கும் கல்யாணம் ஆகிருச்சே இன்னமும் நம்மளை இப்படி அவங்க ஒதுக்கி வைக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு என்றாள் சாம்பவி. இதோ பாரு சாவி அவங்க நம்ம மேல கோபம் படுறதும் நியாயம் தானே நாம லவ் பண்ற விசயத்தை முன்னமே சொல்லாமல் அண்ணாக்கும் , உனக்கும் நிச்சயம் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கும் போது நாம இரண்டுபேரும் மாலையும் , கழுத்துமாக வந்து நின்றாள் என்ன அர்த்தம் என்றான் அதிரன்புகழினியன். இல்லை புகழ் என்ற சாம்பவியிடம் சாவி ப்ளீஸ் விடு நம்மளை ஏத்துக்காமல் எங்கே போகப் போறாங்க என்றவன் தன் மனைவியை அணைத்திட கணவனின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டாள். அவளை அணைத்தபடியே அவனும் மெத்தையில் சரிந்தான்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் உதிரன் ஸ்டேசனுக்கு கிளம்பினான். அவளும் தன் கல்லூரிக்கு கிளம்பினாள். என்னடி சோகமா முகத்தை தூக்கி வச்சுகிட்டு இருக்க என்றவனிடம் இன்னைக்கு நீங்க வேலைக்கு போகனுமா என்றவளிடம் பேபிமா மாமன் வேலைக்கு போனால் தானே சோறு திங்க முடியும் நீ என்ன பண்ணுற சமத்துப் பாப்பாவா காலேஜ் கிளம்பு உன்னை ட்ராப் பண்ணிட்டு நானும் ஸ்டேசன் போறேன் என்று அவளது கன்னம் கிள்ளினான். அவனைப் பார்த்து உதட்டை சுழித்தவளின் அருகில் வந்து இப்படிலாம் வேலைக்கு கிளம்பும் நேரத்தில் செய்யக்கூடாது பட்டு என்றவன் சரி வா கிளம்புவோம் என்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

ஒரு வாரம் லீவு போட்டதின் விளைவு பாவம் உதிரனால் அன்று ஸ்டேசன் விட்டு எங்கும் நகர முடியவில்லை. வேலைப்பளுவில் மனைவியை கல்லூரியில் இருந்து அழைத்து வர வேண்டும் என்பதையே மறந்து விட்டான். பெண்டிங் கேஸ் பைல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து முடித்தவன் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்க்க இரவு எட்டு மணி அடக்கடவுளே அவள் வேற சாமி ஆடுவாளே என்று நினைத்து அவசரமாக அவன் கிளம்பிய நேரம் ஒரு மர்டர் கேஸ் விசயபாக பேச கமிஷ்னர் அவனை பர்சனலாக போன் செய்து அழைத்தார். அந்த அழைப்பை மறுக்க முடியாமல் உதிரன் அங்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து சேர மணி பதினொன்று ஆனது.

வீட்டில் விளக்கு கூட போடாமல் கோபமாக அமர்ந்திருந்த மனைவியின் அருகில் சென்று அவள் தோளில் கை வைத்தான் உதிரன். குந்தவி சாரிடி வேலை அதிகம் அதான் லேட் நான் வேலை டென்சன்ல மறந்துட்டேன்டி என்றான். இன்று கல்லூரி முடிந்த பிறகு அவளை சினிமாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி இருந்தான். ஆனால் அவன் வேலைப்பளுவில் அதை மறந்து விட அம்மணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. பட்டு, செல்லம் சாரிடி என்றவன் காதைப் பிடிக்க அவனை முறைத்து விட்டு எழுந்து சென்றாள். பேபி ப்ளீஸ்டி நான் என்னடி பண்ணுவேன் ஒன் வீக் லீவு போட்டதோட விளைவு என்றான்.

இதற்கு தான் நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். உங்களால் நான் ஆசைப்பட்ட மாதிரி இருக்க முடியாது எழில் என்றவளிடம் சாரிமா ப்ளீஸ் கண்டிப்பா சன்டே நான் உன்னை சினிமாக்கு அழைச்சுட்டு போறேன்டி ப்ளீஸ்டி என்று அவன் கெஞ்சிட கொஞ்சம் மனது இறங்கியவள் அமைதியாக இருக்க குந்தவி பசிக்குதுடி என்றான். உடனே அவனை சாப்பிட வரச் சொன்னாள். அவன் நேராக உணவு மேஜையில் அமரப்போக கொன்னுருவேன் முதல்ல இந்த காக்கியை கழட்டி வைத்து விட்டு வந்து சாப்பிடு என்று அவள் மிரட்டிட சிரித்தவன் சரிடி என்று உடை மாற்றி வந்து சாப்பிட்டான். அவளுக்கும் ஊட்டி விட்டவன் சாரிடி என்றான். முதல் முறை அப்படிங்கிறதால மன்னிக்கிறேன் இனி இப்படி நடந்துச்சு கொன்னுருவேன் என்றவளை தன்னோடு அணைத்தவன் தூங்கலாமா என்றிட இந்த பாத்திரங்களை உங்க அப்பத்தாவா கழுவி வைக்கும் என்றவள் பாத்திரத்தைக் கழுவ ஆரம்பிக்க அவளது கணவனோ அவளை சீண்ட நினைத்து அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டு அவளை இம்சை செய்ய ஆரம்பித்தான்.

….தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!