எழில் என்ன இது வேலை பார்க்கும் போது தொல்லை பண்ணாதிங்க என்றவளிடம் நான் என் பொண்டாட்டியை தொல்லை பண்ணுவேன், வம்பு பண்ணுவேன் எவன் என்னை கேட்பான் என்றவன் அவள் காதில் மெல்ல பாடினான்.
நான் ஆசையை வென்ற
ஒரு புத்தனும்அல்ல …
என் காதலைசொல்ல
நான் கம்பனும்அல்ல …
உன் காது கடித்தேன்
நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன்
இது கற்பனை அல்ல….
என்ன சார் பாட்டுலாம் பலமா இருக்கு என்றவளிடம் பாட்டு மட்டும் இல்லடி மாமா ஆளே பலமான ஆள் தான் என்று அவளது காதில் அவன் ஏதோ சொல்ல போடா பொறுக்கி என்றாள். பொறுக்கி இல்லை செல்லம் போலீஸ் என்றவனை முறைத்தாள். சரி ஓகே அதான் வேலை முடிச்சுட்டியே வா என்றவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றான். லைட்டை எல்லாம் யாரு உங்க அப்பத்தாவா ஆஃப் பண்ணும் என்றவளிடம் ஹும் உங்க அப்பத்தா ஆஃப் பண்ணும் என்றான். அவனை முறைத்தவளின் நெற்றியில் முட்டியவன் விளக்கை அணைத்ததுடன் தன்னவளையும் அணைத்தான்.
ஒவ்வொரு நாளும் அவள் அவனிடம் சின்னச் சின்ன விசயங்களுக்கும் சண்டை இடுவதும் அவன் அவளை சமாதானம் செய்வதுமாக அவர்களது வாழ்க்கை சந்தோசமாகவே சென்று கொண்டிருந்தது. இருவருக்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டது.
அந்த சமயத்தில் தான் உதிரனின் ஸ்டேசனில் ஒரு லேடி சப்இன்ஸ்பெக்டர் ஸ்வேதா டிரான்ஸ்பரில் வந்து சேர்ந்தாள். அவளும் , உதிரனும் சேர்ந்து ஒரு மர்டர் கேஸ் விசாரணையை நடத்தினர். அந்த கேஸ் விவகாரத்தில் அவனுடைய அசிஸ்டென்ட் ஸ்வேதா.
அந்த கேஸ் இரவு பகலாக வேலை பிழிந்து எடுத்தது. அதனால் அவன் வீட்டிற்கு வரும் நேரம் மிகவும் தாமதமானது. அவன் வருவதற்குள் அவள் தூங்கி விடுவாள்.இருவரும் அதிகம் வாய்விட்டு பேசிக் கொள்வது கூட குறைந்து விட்டது. அதில் குந்தவைக்கு தான் கணவனின் மீது பயங்கர கோபம். போதாக்குறைக்கு ஸ்வேதா அடிக்கடி போன் செய்வது வேறு குந்தவைக்கு மேலும் கோபத்தை வர வைத்தது.
அன்று சாம்பவிக்கு வளைகாப்பு நடைபெற்றது. அதற்கு குந்தவை, உதிரன் இருவரும் கிளம்பிச் சென்றனர். விசேசத்தில் வந்திருந்த சொந்த பந்தங்கள் எல்லோரும் குந்தவையிடம் விசேசம் இல்லையா விசேசம் இல்லையா என்று கேட்டு அவளை ஒரு வழி செய்தனர். அதில் அவள் நொந்து போயிருக்க அந்த நேரம் ஸ்வேதா உதிரனுக்கு போன் செய்து கேஸ் விசயமாக வரச் சொல்ல அவனும் கிளம்பி விட்டான். அதில் மேலும் கடுப்பானவள் அவன் வருவதற்குள் கோபமாக வீட்டிற்குச் சென்றாள்.
அவன் அவளைத் தேடி அவளது அம்மா வீட்டிற்கு செல்ல குந்தவை கிளம்பி விட்டாள் என்று தேவகி கூறினார். அவனும் நேராக வீட்டிற்கு கிளம்பினான். அவளோ இருளில் அமர்ந்து கால்களைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
அவன் சென்று லைட்டை சுவிட்ச்ஆன் செய்தான். நடு வீட்டில் சோபாவில் இருகால்களையும் கட்டிக் கொண்டு முகத்தை புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
குந்தவி என்னாச்சுமா என்றவன் அவள் தோள்களைத் தொட அவனது கையை தட்டி விட்டவள் எங்கே போனிங்க என்றாள். ஒரு கேஸ் விசயமா முக்கியமான வேலை குந்தவி என்றவனின் சட்டையைப் பிடித்தவள் உங்களுக்கு எத்தனை முறை சொல்லுறது என் கூட இருக்கும் போது கேஸ் எல்லாம் மூட்டை கட்டி வைங்கனு என்றவள் நீங்க பாட்டிற்கு என்னை விட்டுட்டு போயிட்டிங்க அந்த மீனாட்சி அத்தை என்ன சொன்னாங்க தெரியுமா அக்கா கையில் ஆசையா வளையல் போடப் போனப்ப எனக்கு குழந்தை இன்னும் உண்டாகலையாம் அதனால் நான் போடக்கூடாதாம். அதோடவா விட்டாங்க என்ன ஆச்சு நீயும் , உன் புருசனும் சந்தோசமா தானே இருக்கிங்க அப்பறம் ஏன் இன்னும் உனக்கு குழந்தை உண்டாகலை அது இதுனு என்னை படுத்தி எடுத்துட்டாங்க. அவங்க பேசும் போது அத்தையும், அம்மாவும் கூட எதுவுமே சொல்லலை என் கூட நீங்களும் இல்லை அந்த இடத்தில் நான் எவ்வளவு தனிமையா இருந்தேன்னு தெரியுமா என்று அழுதவளின் கண்ணீரைத் துடைத்தவன் சாரிமா ஒரு முக்கியமான வேலை அதனால் தான் என்றவனின் கையைத் தட்டி விட்டவள் உங்களுக்கு எப்பவும் அந்த ஸ்வேதா கூட ஊரை சுத்துறது தானே வேலை. கேட்டால் கேஸ் கண்டுபிடிக்கிறாங்களாம் என்றாள்.
குந்தவி தப்பா பேசாதடி அந்த பொண்ணு என்னோட அசிஸ்டென்ட் இப்போ நீ உன் கூட படிக்கிற பசங்க கூட பேச மாட்டியா என்ன அந்த மாதிரி தான் அவள் என்னோட கொலிக் அவ்வளவு தான் என்னை சந்தேகப் படாதடி என் வாழ்க்கையில் என் குந்தவி தவிர வேற யாருக்கும் இடம் இல்லை என்று அவன் அவளது கன்னத்தில் கை வைத்தான்.
அவனது கையைத் தட்டி விட்டவள் இதற்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை அது என்ன எல்லோரும் பிள்ளை பிள்ளைனு என் கிட்டையே கேட்கிறாங்க உங்க கிட்ட தானே கேட்கனும் என்றவள் சும்மா பிள்ளை என்ன வானத்தில் இருந்து குதிச்சா வரும் நாம ஒருத்தர் கூட ஒருத்தர் பேசியே ஒரு மாசத்துக்கு மேல ஆகுது என்று கூறி விட்டு அழுதாள்.
குந்தவி சாரிமா இந்த கேஸ் முடிஞ்சுருச்சுனா ஒன் வீக் லீவ் போட்டு உன் கூடவே இருக்கேன் என் செல்லம்ல இப்போ என்னடி நமக்கு வயசா போச்சு எனக்கு இருபத்திஐந்து உனக்கு இருபத்தி இரண்டு ஏதோ நமக்கு ஐம்பது வயசு மாதிரி புலம்புற முயற்சி திருவினையாக்கும். நம்ம முயற்சி பண்ணிகிட்டே இருப்போம் என்றவன் சரிடா குட்டி இனி உனக்காக நான் தினமும் ஒன்பது மணிக்கே வீட்டுக்கு வந்துருவேன் சரியா என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் ஒன்றும் வேண்டாம் போடா என்றிட என் குந்தவியை விட்டு எங்கடி போகப் போறேன் என்று அவளை அள்ளிக் கொண்டு மெத்தையில் சரித்து அவள் மீது படர்ந்தவன் அவளிடம் தன் தேடலைத் தொடங்கினான்.
ஆனால் அவன் சொன்னபடி நடந்து கொள்ளவே முடியவில்லை. அவன் எவ்வளவு முயன்றும் வீட்டிற்கு சீக்கிரம் வர முடியவில்லை. குந்தவையின் கோபம் தான் அதிகமானது.
அன்று காலையில் எழுந்தவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. அதை கண்டு கொள்ளாமல் கல்லூரிக்கு கிளம்பினாள். ஆனால் அவளுக்கு தலை சுற்றல் எடுத்து மயங்கி விழுந்தாள். பானுமதி அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
குந்தவையை பரிசோதித்த மருத்துவர் அவளிடம் வாழ்த்துக்கள் குந்தவை நீங்க கர்ப்பமாக இருக்கிறிங்க என்றதும் அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. மூன்று மாதங்களாக கணவனை சரியாக பார்க்க முடியவில்லை, பேசமுடியவில்லை என்ற கவலையில் நாள் தள்ளி போயிருப்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை. தான் கர்ப்பமாக இருப்பதை தன் கணவனிடம் கூற நினைத்தவள் அவனுக்கு போன் செய்திட அவனது போனை அட்டன் செய்த ஸ்வேதா ஹலோ என்றிட அதில் கடுப்பான குந்தவை யார்டி நீ என்றாள். போன் பண்ணுனது நீ தானடி எடுத்த எடுப்பில் யாருடிங்கிற என்ற ஸ்வேதாவிடம் என் புருசனோட போனை எடுத்தது மட்டும் இல்லாமல் என்னையவே யார்னு கேட்கிற நீ யாருடி என்றாள் குந்தவை.
மேடம் சாரி நான் ஸ்வேதா உதிரன் சாரோட அசிஸ்டென்ட் என்றவள் சார் குளிச்சுட்டு இருக்காங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறி விட்டு போனை வைத்தாள். அதில் நொந்தே போனாள் குந்தவை.
ஆத்திரமும், கோபமும் ஒன்று சேர்ந்து வீட்டிற்கு வந்தவள் வீடு திறந்திருக்கவும் உள்ளே செல்ல அவளுடைய புடவை அதுவும் அவளவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த புடவையை ஒருத்தி கட்டி இருந்தாள். அதைக் கண்டவளுக்கு தட்டாமாலை சுற்றி கண்ணெல்லாம் இருட்டிக் கொண்டு வந்தது. தன்னை சுதாரித்தவள் ஏய் யார்டி நீ எதுக்குடி என் புடவையை கட்டிருக்க என்றவளிடம் ஏய் குந்தவி ரிலாக்ஸ்டி நான் தான் கொடுத்தேன். அவங்க என்னோட அசிஸ்டென்ட் ஸ்வேதா அவங்களும் நானும் ஒரு இன்வஷ்டிகேசன் விசயமா வெளியில் போனப்ப பைக் வழுக்கி சேத்துல விழுந்துட்டோம். அது தான் நம்ம வீடு பக்கம் தானேனு வந்து குளிச்சுட்டு ட்ரஸ் மாத்துனோம். அவங்க ட்ரஸ் புல்லா சகதி அதான் உன் புடவையை எடுத்துக் கொடுத்தேன் என்றான் உதிரன். அவனை முறைத்தவள் என்ன கதை சொல்லுறிங்க எழில் இது என்ன புதுப் பழக்கம் என்றாள். குந்தவி அது வந்து என்றவனிடம் இவளுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன பழக்கம் உங்களுக்கு நல்லாவே தெரியும் என்னோட திங்க்ஸ் எதையும் நான் சங்கவிக்கும், சாம்பவி அக்காவுக்கும் கூட கொடுக்க மாட்டேன் அப்படி இருக்கும் போது என்னோட புடவை அதுவும் என்னோட பர்த்டேக்கு நீங்க வாங்கிக் கொடுத்த புடவையை எவளோ ஒருத்திக்கு கட்டிக்க கொடுத்தால் என்ன அர்த்தம் என்று உதிரனிடம் தொடங்கியவள் ஸ்வேதாவைப் பார்த்து ஏன்டி உனக்கு அறிவு இல்லை எவன் என்ன கொடுத்தாலும் வாங்கி மாட்டிப்பியா என்றிட குந்தவி என்ற உதிரன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். சாரி ஸ்வேதா என்றவனிடம் இட்ஸ் ஓகே சார் என்றவள் குந்தவையிடம் சாரி மேடம் என்று விட்டு காய்ந்து கொண்டிருந்த தன் உடையை அணிந்து கொண்டு குந்தவையின் புடவையை அவளிடம் கொடுக்க அதை வாங்கியவள் அழுது கொண்டே தன்னறைக்குச் சென்றாள்.
ஸ்வேதா சென்றதும் என்னடி உன் மனசுல நினைச்சுட்டு இருக்க இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் ஒரு புடவையை அந்த பொண்ணு கட்டுனது அவ்வளவு பெரிய குத்தமாடி இப்படி சீன் போடுற என்றவன் அவளை மேலும் அடிக்கப் போக மேஜையில் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்தவனின் கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது.
மேஜையில் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டில் குந்தவை கர்ப்பமாக இருப்பதாக எழுதி இருக்க குந்தஙி குந்தவி என்றவன் அவளைக் கட்டிக் கொண்டு அவள் வயிற்றில் முத்தமிட அவனைத் தள்ளி விட்டவள் என் கிட்ட பேசாதிங்க எழில் என்றாள். ஏன்டி ஐயோ சாரிடி குட்டி ஏதோ கோபத்தில் அடிச்சுட்டேன் உன் எழிலை மன்னிக்க மாட்டியா என்றவன் அவளைக் கட்டிக் கொள்ள மன்னிக்க முடியாது எவளோ ஒருத்திக்காக என்னை அடிச்சுட்டிங்கல என்றவள் அழ ஆரம்பிக்க அவளை சமாதானம் செய்வதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றானது.
அடுத்து வந்த நாட்களும் உதிரனுக்கு சோதனையாக தான் இருந்தது. உதிரனுக்கு மட்டும் இல்லாமல் ஸ்வேதாவிற்கும் சோதனையான நாட்களாக அமைந்தது தான் குந்தவையின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
….தொடரும்….