உயிர் போல காப்பேன்-32

4.9
(16)

அத்தியாயம்-32
“ஆஸ்வதி கண்ணா. இது என்னோட நம்பர் டா.. இந்த நம்பர் இங்க உள்ள யாருக்கும் தெரியாது, இது உனக்கும் என் ஆபிஸ் பி.ஏக்கு மட்டும் தான் தெரியும்… எதாவது இக்கட்டான சூழ்நிலையில தான் என் பி.ஏ என்னை அழைப்பான். நீயும் இங்க யாராவது எதாவது உன்ட பிரச்சனை பண்ணுனா உடனே என்னை கூப்டுமா. சரியா”என்றார் தாத்தா ஆதிக்கை தன் அருகில் உட்கார வைத்து அவன் தலையை ஆதரவாக தடவியவாறு..
“சரி தாத்தா நீங்க ஒன்னும் கவலைப்படாம கிளம்புங்க…. நான் இங்க எல்லாத்தையும் பாத்துக்குறேன்..”என்றாள் அவரை பார்த்து மெலிதாக புன்னகைத்துக்கொண்டு..
“சரிமா.உங்கூட விதுன் துணைக்கு இருப்பான்.. அப்புறம் மா…உன்ட ஒன்னு சொல்லனும் இங்க இருக்குறவங்க எல்லாம் உன்ன எவ்வளவு வேணும்னாலும் பேசுவாங்க…..அது நீ அவங்களுக்கு பேச இடம் கொடுக்கிற வர….. நீ திரும்ப அவங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தா அவங்க எல்லாம் அடங்கிடுவாங்க…. நா சொல்றது உனக்கு புரிதா.”என்றார் அவளை பார்த்து
அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்த ஆஸ்வதி”புரிது தாத்தா. நா பாத்துக்குறேன் நீங்க பத்தரமா போய்ட்டு வாங்க….மறக்காம உங்க டாப்லேட்லாம் போடுங்க….”என்றாள் அவரை பார்த்து.
“சரிடா நான் பாத்துக்குறேன்..அப்புறம் ஆதிக்க நல்லா பாத்துக்கடா. அவனுக்கு இங்க எதோ ஆபத்து இருக்குற மாறி எனக்கு தோணுது.”என்றார் அவளை அர்த்தமாக பார்த்துக்கொண்டு,
“சரி தாத்தா..”என்று கிளம்பும் அவரை நல்ல படியாக அனுப்பி வைத்தாள் ஆஸ்வதி.
“ம்ம்ம்.. பாத்தியா..அண்ணா இந்த கொடுமைய…. நம்ம கிட்ட ஒரு தடவ சொன்னதோட சரி திரும்ப அவரு நம்மட்ட மூஞ்ச கூட காட்டல பாரு.எல்லாம் இவளால வந்தது..”என்றாள் அபூர்வா தன் அண்ணன் அஜயிடமும் பரத்திடமும்.
“விடு அபூர்வா பாத்துக்கலாம்..எங்க போய்ட போறா”என்றான் அஜய் அவளை முறைத்துக்கொண்டே
இங்கு ஆஸ்வதி தாத்தாவை வழி அனுப்பிவிட்டு தங்கள் அறைக்கு வர…..ஆதிக் தங்கள் கட்டிலில் உட்கார்ந்து தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் ஆஸ்வதி அவன் அருகில் சென்று..
“என்னாச்சி என் ஆதிக்கி ஏன் சோகமா உட்கார்ந்துருக்கீங்க…. ”என்றாள் ஆஸ்வதி
ஆதி அவள் பேசுவதை கேட்டு அவளை நிமிர்ந்து…அவளது முகத்தையே ஆழ்ந்து பார்த்தான்.ஆஸ்வதி அவனது இந்த பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் தன் தலையை குனிந்துக்கொண்டாள்.
“ஏன் ஆதி இப்டி பாக்குறீங்க…..”என்றாள் ஆஸ்வதி மெதுவாக
“தாத்தூ என்னை விட்டுட்டு ஊருக்கு போறாரு ஏஞ்சல் அதான் எனக்கு பயமா இருக்கு”என்றான் ஆதிக்
அவன் அப்படி சொன்னதும் அவன் இருபக்க கன்னத்திலும் கை வைத்து தாங்கி
“ஏஞ்சல் தான் இருக்கேன்ல இன்னும் ஏன் பயம்.”என்றாள்
“இல்ல அந்த ப்ரேம் என்னை அடிக்க வருவான். ஆனா இப்போ அவன் இல்ல….. ஆனா அந்த அபூர்வா அத்த இல்ல அவங்க அடிக்கடி என்னை முறைச்சிட்டே இருக்காங்க…..தாத்தா இல்லைனா அவங்களுக்கு என்னை தான் அடிக்க தோணும்..”என்றான் சிறு பிள்ளை போல உதட்டை சுருக்கி..
“அதுலா நான் பாத்துக்குறேன். இனி அவர் உங்க பக்கம் வரமாட்டார்…சரியா..”என்றாள்
அதனை கேட்டு சிரித்த ஆதிக்”உண்மையாவா..”என்றான் ஆதி கண்கள் மின்ன…
அந்த பாவனையில் ஆஸ்வதி மயங்கி தான் போனாள். அவள் அவனையே ரசித்துப்பார்க்க….
“உண்மையா”என்றான் ஆதி அவளை உலுக்கியவாறு..தன் கை விரலை அவளை நோக்கி நீட்டி..
“உண்மையா..”என்றாள் அவன் விரலை தன் விரலால் பிடித்துக்கொண்டு
அதனை பார்த்ததும் அவன் அவளை பார்த்து குழந்தையாக சிரித்தான்
பின் இருவரும் ஒருவரைக்கொருவர்.. பிடித்து தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அதனை பார்த்த அபூர்வா. ஆஸ்வதியை மனதில் திட்டியபடி…
“இவள இதோட விடக்கூடாது கொஞ்சம் விட்டா இவன எப்டியாச்சும் சரி பண்ணிடுவா போல இருக்கு…. இன்னிக்கி இருக்கு உனக்கு” என்று அபூர்வா இருவரும் இருக்கும் திசை பக்கம் கோவமாக அவன் அருகில் வந்தார். அதனை பார்க்காமல் இருவரும் சிரித்து விளையாடிக்கொண்டு இருந்தனர்…
“ஏய். லூசு இங்க என்ன பண்ற….”என்றார் அபூர்வா அவனை பார்த்து. அபூர்வாவை பார்த்ததும் ஆதிக் பயந்து போய் ஆஸ்வதி பின்னால் ஒழிந்துக்கொண்டான்
ஆஸ்வதி அபூர்வா பேசுவதை பார்த்து.”அவர் ஒன்னும் லூசு இல்ல… கொஞ்சம் பாத்து பேசுங்க….”என்றாள் ஆஸ்வதி அவரை கோவமாக முறைத்துக்கொண்டு..
அபூர்வா அவள் பேசுவதை கேட்டு. ஹாஹா.. என்று சத்தமாக சிரித்தவாறே அவளை கேலியாக பார்த்து
“உனக்கு இவன பத்தி என்ன தெரியும். இவன் நல்லா இருந்த போது.. எப்டி இருந்தானு தெரியுமா.”என்றாள் அபூர்வா நக்கலாக
“அது பத்தி எனக்கு தெரிய வேணாம்…இவர் என் கணவர் அவ்வளவு தான் “என்றாள் அபூர்வாவை பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு.
“உனக்கு தெரிய வேணாம்னாலும்.. நா இவன பத்தி உனக்கு சொல்றேன்…இவன் போகாத பப் இல்ல….. அடிக்காத ட்ரக்ஸ் இல்ல… இவன் கூட தினம் தினம் ஒரு பொண்ணு நான் பாத்துருக்கேன்.”என்றாள் அபூர்வா ஆதியை முறைத்தவாறே. அவளின் முகத்தில் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்து..
ஆனால் அவள் முகம் அவன் நினைத்ததற்கு எதிராக எந்த மாற்றமும் இல்லாமல் தெளிவாக இருந்தது,.. அதில் இன்னும் அபூர்வாவிற்கு கோவம் ஏறியது…
“அவர் எப்டி இருந்தாலும்…என் புருஷன் தான் அதுல எந்த மாற்றமும் இல்லை..”என்றாள் அபூர்வாவை முறைத்தவாறு.
அதனை கேட்ட அபூர்வா…அவளை பார்த்து முறைத்தவாறு
“நான் சொன்னா நம்ப மாட்ட… அவனோட லேப்டாப் உன் ரூம்ல தான் இருக்கு. அத போய் பாரு. அவனப்பத்தி உனக்கு தெரியும். தேவை இல்லாம அவன நம்பி உன் வாழ்க்கைய வீண் ஆக்காத….”என்றாள் அபூர்வா..இது அவர்களின் இன்னொரு திட்டம்.. ஆதியை கெட்டவனாக சித்தரித்து அவளை இங்கிருந்து ஓட வைப்பது.
“ம்ச்,. எனக்கு அவர பத்தி தெரிய எதும் இல்ல…. அவர் முன்னாடி எப்டி இருந்தாலும் சரி ஆனா. அவர் இப்போ எனக்கு குழந்தை மாறி “என்றாள் அபூர்வாவை அசால்ட்டாக பார்த்தவாறே.அதில் அபூர்வா . ஆஸ்வதியை பார்த்து முறைத்தவாறே
“இவ்வளவு சொல்றேன் அப்பயும் அவன் என் கணவன்.. என் உயிர்னு டையலாக் பேசுற… என்ன பயம் விட்டு போச்சா..”என்று ஆஸ்வதிக்கு மிக அருகில் நெருங்கி நின்ற அபூர்வா.
“உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு நா தரேன்.. அத வாங்கிட்டு இங்க இருந்து ஓடி போய்டு. இல்ல உன்ன கொன்னு இங்கையே புதைச்சிடுவோம்.”என்றார் அபூர்வா அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்…. அதில் ஆஸ்வதி அவனை பார்த்து மிரளாமல் அவரின் கண்களை நோக்கி..
“முடியாது…”என்றாள் அழுத்தமாக…. எவ்வளவு கீழ் தரமாக இறங்குகிறார்கள். என்று மனதில் நினைத்தவாறே.
“இவ்வளவு சொல்றேன் இன்னும் உனக்கு எங்கள பாத்தா பயம் வரலையா..”என்றார் அபூர்வா..
“எனக்கு நீங்க ரெண்டு கால்.. ரெண்டு கை.. ஒரு தலை இருக்குற மனுசனா தான் தெரியுறீங்க….. என்னிக்கி உங்களுக்கு எக்ஸ்ரா. ஒரு கால்.. ஒரு வால் முளைக்குதோ அன்னிக்கி உங்கள பார்த்து நா பயப்படுறேன்…”என்றாள் ஆஸ்வதி அபூர்வாவை பார்த்து முறைத்துக்கொண்டு ஆதிக் பயத்தில் ஆஸ்வதியின் புடவையை பிடித்தவாறு நிற்க.,.
“ஓஓஓ….. ஹாஹா. இங்க பாருடா. மேடம் வந்ததுக்கு இப்போ ரொம்ப தைரியமாயிட்டீங்க போல… “என்றவாறே அங்கு வந்தாள் அதிதி கிண்டலாக….
அதில் ஆஸ்வதியும் புன்னகையுடன்.. அதிதியை பார்த்தவாறே
“ம்ம்ம். அன்னிக்கி கிட்சன்ல எங்கிட்ட அடி வாங்கிட்டு போனப்போ உன்ன லாஸ்ட்டா பார்த்தது.. இப்போதா உன்ன திரும்ப பாக்குறேன்மா..”என்றாள் அதிதியை பார்த்து கிண்டலாக
அதில் கடுப்பான அதிதி..”இப்போ என்ன சொல்ல வர உனக்கு பயந்து தான் நா இங்க வராம இருந்தேனா.”என்றாள்..
ஆஸ்வதி இரு கையையும் விரித்தவாறே..”இருக்கலாம்..”என்றாள்.
அதனை கேட்ட அதிதி கோவமாக ஆஸ்வதி அருகில் நெருங்க… அபூர்வா உடனே அதிதியை தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.. ஆஸ்வதி ப்ரேமையே அடித்தவாளாகிற்றே.. அதும் இல்லாமல் அதிதியும் தான் ஒரு தரம் அவளிடம் ந்னறாக வாங்கிக்கட்டிக்கொண்டாள்..
“ம்ச்,. மா என்ன விடு…”என்று அபூர்வா கையில் இருந்து விடுபட போராட…..
அபூர்வாவோ.”கொஞ்சம் அமைதியா இரு அதிதி.. அவ உன்ன வேணுக்குனு சண்டைக்கு இழுக்குறா. நீயும் அவகிட்ட வாய குடுக்குற….. ஏற்கனவே அவ கிட்ட வாய குடுத்துதானே வாங்கிக்கட்டிக்கிட்ட….”என்றார் அபூர்வா
“மா.. உன்ன அத கேட்டேனா.. விடு என்னை..”என்று அவர் கையை உதறிவிட்டு ஆஸ்வதியை முறைத்தவாறே தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
இங்கு அபூர்வாவோ ஆஸ்வதியை முறைத்தவாறே.”என் அப்பா இருக்குற தைரியத்துல ஆடாத,. இப்போ அவர் இல்ல அத நியாபகம் வச்சிக்கோ.”என்றார் அபூர்வா
“ம்ம்ம். அத தான் நானும் சொல்றேன் தாத்தா இங்க இல்ல…. அவர் இல்லாத நேரத்துல வீண எங்கிட்ட வம்பு பண்ணாதீங்க… தாத்தா இருந்தாவாச்சும் அவர் முகத்துக்காக உங்கள மன்னிச்சி விட்டுட்டு இருக்கேன்.. இல்ல……”என்று ஆஸ்வதி தைரியமாக அவரை பார்த்து முறைக்க….
“உனக்கு ரொம்ப தைரியம்.”என்றார் அபூர்வா கோவத்தில் பல்லை கடித்துக்கொண்டு.
“எனக்கு தைரியம் இல்லனு நா சொல்லவே இல்லையே.”என்றாள் ஆஸ்வதி நக்கலாக….
அவள் இவ்வாறு பேசியதும் அபூர்வா அவளை ஆராய்ச்சியாக பார்த்தார்.. இவ்வளவு நாளாக அடங்கி இருந்தவள் இன்று எப்படி இப்படி திமிராக பேசுகிறாள். என்று அவளை பார்க்க….. அவளோ. அவரையே தான் உன்னிப்பாக பார்த்தாள்..
“ஏய் இங்க என்ன பண்ற…. போய் எங்களுக்கு சாப்பாடு அரேஜ் பண்ணு. வெட்டியா சீன் போடுறது..”என்றவாறு அங்கு வந்தார் ரியா..
அவரை பார்த்ததும் ஆஸ்வதி அவரை அசராமல் பார்த்தவள்..
“நா இந்த வீட்டு மருமகளா வந்துருக்கேன். வேலைக்காரியா இல்ல…..”என்று அவர் முகத்தை பார்த்து திமிர்வாக பேச…..
அதில் அதிர்ந்த ரியா…”இங்க பார்த்தியா அபூர்வா.. மாமா இருந்த வர இவ எப்டி இருந்தா இப்போ இவ எப்டி இருக்கானு.. அவர் இருக்குறப்போ நல்ல அமைதியான பொண்ணு மாறி நடிச்சிருக்கா…”என்றார் கோவமாக….. அவருக்கு பின்னாலே அனைவரும் வந்துவிட்டனர்.
அதில் முகம் சிவக்க நின்ற ஆஸ்வதி…”யாருக்கு முன்னாடியும் நடிக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல… இப்போவும் எப்போவும் நா நானா தான் இருக்கேன்”என்றாள்
அவளின் இந்த நேரிடையான தாக்குதலில் அங்கிருக்கும் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள் பரத்தோ… ஆஸ்வதியை முறைத்து பார்க்க…. அவள் அங்கு நிற்கும் யாரையும் ஒரு பொருட்டாக கூட நினைக்காமல் தூரத்தில் விளையாடும் ஆதித்தை பார்த்து.
“ஆதி வாங்க…. ப்ளே பண்ணது போதும். சாப்ட போலாம்.”என்றாள் ஆஸ்வதி
இவள் குரல் கேட்டதும் உடனே ஆதி இவள் அருகில் ஓடி வந்து
“ஹான் ஹான் ஏஞ்சல் போலாம்.. எனக்கும் ரொம்ப பசிக்கிது…”என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு. அவன் பாவனையில் உதட்டில் புன்னகை ஒன்று பூக்க…
“ம்ம் ம்ம் போலாம். இங்க என்ன வெட்டி பேச்சி…”என்ற ஆஸ்வதி அங்கு நிற்பவர்களை கேலியாக பார்த்துக்கொண்டே அங்கிருந்து செல்ல….
அதில் அனைவருக்கும் முகம் மிளகாய் தின்றது போல சிவந்து போனது
“ஏன்டா இஷா இவ என்ன இன்னிக்கி இவ்ளோ வித்தியாசமா நடந்துக்குறா…”என்றார் அபூர்வா
“ம்ம் ஆமா அத்த இவ பேச்சே வரவர சரி இல்ல….. வந்தப்போ. குனிஞ்ச தல நிமிராம இருந்தா இப்போ என்னனா. நம்மளையே எதிர்த்து பேசுறா..”என்றாள் அப்போது தான் அந்த பக்கம் வந்த இஷானா.
“ஆமா இஷு. இப்போ கூட நா போய் சூடா பக்கோடா போட்டு தானு சொன்னேன். அதுக்கு என்னமோ. கொலை பண்ண சொன்னது மாறி ஒரு லுக் விடுறா..”என்றான் இஷானா கணவன். ராம் இஷானாவை கேலியாக ஒரு பார்வை பார்த்தவாறு.
அவன் சொன்னதை கேட்ட இஷானா…”ஏன் ராம் உங்களுக்கு இந்த சாப்பாட்ட தவிர வேற ஒன்னும் யோக்கவே தோணாதா…”என்றாள் அவனை முறைத்துக்கொண்டு..
“நா என்ன பண்றது இஷா இந்த வீட்ல எனக்கு இருக்குற ஒரே வேலை அது மட்டும் தானே…”என்ற ராம் இஷானாவை முறைத்தபடி அங்கிருந்து சென்றுவிட்டான்..
இங்கே இப்படி இருக்க அப்போது தான் வெளியில் கிளம்பிய பரத்.. அஜய் கார் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டது என்று கால் வந்ததும் அந்த வீடே அதிர்ந்து போய் விட்டது

(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!