அத்தியாயம்-39 இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நிற்க….. ஆனால் தாத்தாவோ இது தனக்கு முன்னவே தெரியும் என்பது போல் நின்றுக்கொண்டு இருந்தார்.. இதனை ஆஸ்வதியும் மனதில் குறித்துக்கொண்டாள். “ஆதிக்கு ஆக்ஸிடன்ட் ஆனப்போ.. நா தான் அவர இப்டி பைத்தியம் மாறி நடிக்க சொன்னேன்.. ஏனா உங்க சதி வேலை எல்லாம் வெளில வரனும்னு தான்,.”என்றவன் கொஞ்சம் நிறுத்தி பின்…அபூர்வாவை பார்த்து “உங்க வீட்டுகாரர் மேல ஏற்கனவே நிறைய மோசடி புகார் வந்துச்சி.. சோ அதுக்காக அவர நாங்க காலையிலையே அரஸ்ட் பண்ணிட்டோம்.. இத ஏன் நா சொல்றனா.. இப்போ உங்க புருஷன் எங்கனு நீங்க தேடக்கூடாதுல அதான்…”என்றான் அபினவ் கேலி குரலில் “அப்புறம் உங்க வீட்டுக்காரர் ரெண்டு பேரும் இப்போ ஹாஸ்பிட்டல ஆபத்தான நிலையில தான் இருக்காங்க… இதுல வருத்தப்படுற விசியம் என்னனா.. அவங்க ரெண்டு பேரும் பக்கத்துல துணைக்கு கூட ஆள் இல்லாம….. கவர்மென்ட் ஹாஸ்பிட்டல ஏதோ ஒரு மூலையில கிடக்காங்க…..”என்றான் ஆதி.. “இவங்களா பண்ணுன தப்புக்கு அதான் கரெக்ட்டான தண்டனை. கடைசி நேரத்துல கூட பக்கத்துல துணைக்கு ஆள் இல்லாம சாவுற வரம் வேற யாருக்கும் கிடைக்கவே கூடாது.”என்றார் தாத்தா உடல் குலுங்கியவாறே.. அதை கண்ட ஆதி முகமும் கலங்கி போனது.. இவர்களால் எவ்வளவு இழப்பு தனக்கும் தன் தங்கைக்கும்.. அப்போது தான் தன் தங்கை அனிஷா நியாபகம் வந்தவனாக அவள் நின்ற இடத்தை பார்க்க….. ஆதியின் மனம் கொஞ்சம் இதமானது அவன் கண்ட காட்சியில். ஏனென்றால்.. அனிஷா தன் தாய். தந்தை இறந்த விதத்தை கேட்டு அதிர்ந்தவள்.. அதும் தன் தாய் தான் பிறந்த உடன் இறந்ததாக தான் இதுவரை தன்னிடம் தன் தந்தை சொல்லிருக்கிறார்.. ஆனால் அவள் பிறந்த அந்த ஆறு நாட்களில். அதும் கொடூரமான முறையில் அதும் தன் சொந்த பெரியப்பா.. அத்தை கைகளால் இறந்ததை கேட்டவள்.. அப்படியே அதிர்ந்து போய் கலங்கியவாறே நிற்க… அப்போது தான் இரு இரும்பு கை அவளை தன் பக்கம் இழுத்து தன்னுடன் இறுக்கி அணைத்துக்கொண்டது அது விதுன் அவன் தான் அங்கு நடக்கும் பேச்சிக்கள் அனைத்தும் தனக்கு முன்னவே தாத்தா கூறியுள்ளார் என்றாலும் அவனாலும் அதனை தாங்க முடியவில்லை அப்புறம் எப்படி தன்னவளால் தாங்க முடியும் என்று தான் அனிஷாவையே பார்த்துக்கொண்டு இருக்க….. அப்போது தான் அனிஷா தள்ளாடுவதையும். அவள் உடல் நடுக்கத்தையும் கவனித்தவன். யாரை பற்றியும் கவலை கொள்ளாமல் அனிஷாவை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டான்.. அனிஷாவோ,.. விதுனை இன்னும் இறுக்கிக்கொண்டு..”விது. அம்மா அப்பா..”என்று முனக… “ச்சு…அனி பேபி எல்லாம் சரி ஆகிடுமா..”என்றான் அவளை இன்னும் தன்னுடன் இறுக்கியவாறே.. அதில் இன்னும் அவள் உடல் குலுங்க….. விதுனின் சட்டை அவள் கண்ணீரால் நனைந்தது.. அவள் முதுகை ஆதரவாக தடவி விட….. அப்போது தான் ஆஸ்வதி அனியின் நிலையை நினைத்தவாறே அவள் அருகில் நெருங்க பார்க்க….. ஆனால் அவளால் முடியவில்லை. அவளின் கை ஆதியிடம் இறுக்கிக்கொண்டு கிடந்தது அதனை பார்த்தவள் ஆதியை நிமிர்ந்து புரியாமல் பார்க்க….. ஆதி போகாதே என்பது போல் தலை ஆட்டினான் “இவங்கள கூட்டிட்டு போய் ஜீப்ல ஏத்துங்க…..”என்ற அபினவ் அன்று ஹாஸ்பிட்டலில் கூறியதாவது “என் அக்கா மாதவி.”என்றான் ஆதியிடம்.. அதை கேட்ட ஆதி அவனை புரியாமல் பார்க்க… “அவங்க கொன்னது என் அக்கா மாதவி.”என்றான் இறுகிய குரலில் அதை கேட்ட ஆதி அவனை அதிர்ச்சியுடன் பார்க்க….”எனக்கும் என் அக்காக்கும் வயசு ரொம்ப டிப்ரன்ட் நா அப்போதா 10 படிச்சிட்டு இருந்தேன் அப்போதான் என் அக்காக்கு புது வேலை கிடச்சிருக்குறதா சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டா.. அவளுக்கு நானா ரொம்ப இஷ்டம்.. என்னை படிக்க வச்சி பெரிய ஆள் ஆக்கனும்னு சொல்லிட்டே இருப்பா.. அப்போதான் திடிர்னு ஒருநாள் நைட் அவ காணாமல் போய்ட்டா.. அவள எங்கெல்லாமோ தேடுனாங்க என் அம்மா.. ஆனா அவ கிடைக்கவே இல்லை அப்போதான் நா உங்க பெரியப்பா ஆபிஸ்ல தான் அவ வேலைப்பார்க்குறத கண்டுப்பிடிச்சி அவங்க மேல என் அம்மாவ கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சென் ஆனா அது அவங்க பணத்துக்கு முன்னால ஒருநாள் கூட நிக்கல…. என் அக்காவ அசிங்கமா பேசுனாங்க…. அப்புறம் நாங்க அவள தேடுறத கூட விட்டுட்டோம்.. எங்கோ ஒரு இடத்துல அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ்றானு நினைச்சோம்.. ஆனா. இப்டி.”என்றவன் குரல் தடுமாற,. அதை ஆதி வேதனையுடன் கேட்டுக்கொண்டு இருந்தான்.. “ம்கும் அப்புறம் நா வளர்ந்ததும் என் அக்கா ஆசைப்பட்ட படி பெரிய போலீஸா ஆகனும்னு தீவிரமா படிச்சென் என் அக்காவ கொன்னுட்டாங்கனே உங்க அப்பா அனுப்புன இந்த வீடியோ மூலமா தான் தெரிஞ்சது.. “என்றான் கமறிய குரலில் “அவங்க யாரையும் சும்மா விடக்கூடாது…”என்று ஆதி கர்ஜீக்க…. “ம்ம்ம் பொருமை ஆதி இப்போ போனா நமக்கு அவங்க பண்ண தப்புக்கு எந்த எவிடன்ஸும் இல்லாம போய்டும் பொருமையா தான் அவங்கள நாம தூக்கனும்…”என்றான் “ஆனா அதுக்கு நீ ஒன்னு பண்ணனும்…”என்றான் அபினவ் ஆதி அவனை புரியாமல் பார்க்க….”நா அவங்களோட கூட்டத்த பிடிக்கற வர நீ அந்த வீட்ல பைத்தியம் மாறி நடிக்கனும்…”என்றான் “அவன் செய்வான் தம்பி…”என்றவாறே உள்ளே வந்தார் தாத்தா. இருவரும் அதிர்ந்து போய் அவரை பார்க்க…. அவரோ கண்கள் சிவந்து முகம் வாடி போய் வந்திருந்தார். தன் செல்ல மகனை பறிக்கொடுத்த துக்கம் அவருக்கு.. “தாத்தா..”என்றான் ஆதி “என்னை மன்னிச்சிடு கண்ணா. துரோகிங்கள… கொலைக்காரங்கள இவ்வளவு நாள் நா வீட்டுலையே வச்சிருக்கேன்.”என்றார் ஆதி கையை பிடித்து கதறியவாறே. “தாத்தா உங்களுக்கு.”என்றான் ஆதி எப்படி தெரியும் என்று “என் பையன் விஷ்ணு கடைசி வர இந்த கிழத்த நம்பிருக்கான் அதுக்கு சாட்சி அந்த வீடியோவ எனக்கும் அனுப்பிட்டான்.”என்றார் பின் தன்னை சமாளித்துக்கொண்டவர்..”அவனுங்க யாரையும் விட கூடாது.. அவங்க எல்லாரும் கண்டிப்பா தண்டனை அனுபவிக்கனும்…”என்றார் தாத்தா அதன் பின் தான் ஆதி பைத்தியம் போல நடித்தது இரவில் வீட்டை ஏதேனும் எவிடன்ஸ் கிடைக்கிறதா என்று அலையும் போது தான் ஆஸ்வதி கண்ணில் மாட்டியது. அப்போது அவளை தன்னை வைத்தே மிரட்டி ஓடியது அனைத்தும் ப்ரேமை அடித்து போட்டதும் இவன் தான். இப்போது”கான்ஸ்டபிள் ஹாஸ்பிட்டல இருக்க அந்த மூணு பேரையும் அங்கையே வச்சி லாக் பண்ணுங்க….. இந்த மூணு பேரையும் லாக்கப்ல போடுங்க….. அப்புறம் அந்த மித்ரன் அவனையும் இந்த விக்னேஷையும் தனி செல்லுல போடுங்க….. இனி இவங்களா எப்டி வெளில வராங்கனு பாக்குறேன்…”என்று கர்ஜீத்தான் அபினவ் அதன் படி அனைவரையும் ஜீப்பில் ஏற்ற அபூர்வா மட்டும் தன் தந்தையை பார்த்து காப்பாற்றுமாறு கெஞ்ச அவர் அவள் பக்கம் கூட திரும்பவில்லை.. அனைத்தும் முடிந்ததும் அங்கிருந்து அனைவரையும் அனுப்பிய அபினவ் உடனே இரு உடல்களையும் தோட்டத்தில் இருந்து தோண்டி எடுத்தனர். அப்போது அனி கதறிய கதறல் அனைவரது கண்ணீலும் கண்ணீர் வர வைத்தது ஆதி மொளனமாக அழ….. ஆஸ்வதியும் அதில் கலங்கி போனாள். அவளுக்கும் அனி, தன்னவன் படும் பாடு மேலும் வேதனை ஆக்கியது.. அனைத்தும் முடிந்து இன்றுடன் 1வாரம் ஆனது.. மதுரா, மாதவி இருவரது உடலும் உடனே ப்ரேத பரிசோதனை செய்து 2நாளில் ரிப்போர்ட் தர கோர்ட் உத்தரவிட்டது.. அது போல் குணாலின் மரணத்தையும் தோண்டி எடுத்து கொலை வழக்காக மாற்றியது உடனே 1வாரத்தி கோர்ட் இந்த கேஸிற்கு ஜட்ஜ்மன்ட் வழங்குவதாக சொன்னது இது அனைத்து டிவி சேனலிலும் லைவ்வில் ஓடியது அதுப்படி அனைத்து ஆவணங்களையும் அபினவ் பார்த்து பார்த்து தாக்கல் செய்ய…. “இந்த தொடர் கொலைகளின் வழக்கு நம்மை மிகவும் பாதித்திருக்கிறது இது போல் சொந்த பந்தங்களையே கொல்லும் அளவிற்கு அனைவரது சொத்தின் மீதான ஆசைகளை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.. இனி இது போல் யாருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக உடனே இந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்குகிறது. குணால், மிஸ் மதுரா,மாதவி,கடைசியாக விஷ்ணு சர்மா இவர்கள் நால்வரின் கொலைக்கு காரணமாக இருந்த பரத், அஜய்,ரியா,பூனம், அபூர்வா,மித்ரன் இவர்களுக்கு இந்த கோர்ட் சாகும் வரை சிறையில் இருக்குமாறும், அதில் பரத்,அஜய் இரண்டு பேரும் சரியாகும் வரை மருத்துவமனையில் இருக்கவும்.. பின் சரியானதும் சிறைக்கு அழைத்து வருமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் கூறுகிறது. பின் ப்ரேம் விஷ்ணு சர்மா கொலையில் சம்பந்தம் இருப்பதாக கோர்ட்டில் நிருபிக்கப்பட்டாலும் அவம் கோமாவில் இருப்பதால் அவன் சரி ஆகும் வரை அவனை மருத்துவமனை காவலில் வைக்க இந்த கோர்ட் முடிவு செய்கிறது…”என்று கூறிய நீதிபதி அனைவரையும் பார்த்துவிட்டு ஜட்ஜ்மென்ட்டில் தன் கையெப்பத்தை போட்டுவிட்டு எழுந்து சென்றார்.. இந்த காட்சி அனைத்து டிவிகளிலும் ஓட… இதனை ஆதியும், ஆஸ்வதியும் தங்கள் அறையில் உட்கார்ந்து பார்க்க….கீழே தாத்தா, அனிஷா,விதுன் ,விஷால்,அதிதி,ராக்ஷி,லிஷா அனைவரும் பார்த்தனர்.. பூனம் கைது செய்யப்பட்ட உடனே ராம் வீட்டிற்கு வந்து இஷானாவை தன் வீட்டிற்கு அழைக்க…. அவளோ தன் தாயை காப்பாற்ற போகிறேன் என்று வீரமாக பேச… உடனே ராம் விட்ட அறையில் அனைத்தும் மறந்து போய் அவன் பின்னாலே கிளம்பிவிட்டாள்.அவளும் காதலித்தாள் அல்லவா.. தன் தாய் தந்தைகளை பற்றி தெரிந்துக்கொண்ட விஷால், அதிதி, ராக்ஷி ,லிஷா அனைவரும் தங்கள் பெற்றோரை அடியோடு வெறுத்தனர்.. அதிதி பணம் இருக்கும் தைரியத்தில் ஆடுவாளே தவிர கொலை செய்யும் அளவிற்கு கெட்டவள் இல்லை. அதனால் அவளுக்கும் தன் தாய் தந்தை செயல் அவர்களை அடியோடு வெறுக்க வைத்தது.. அனைவரது முகமும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்க… அனிஷா எழுந்து தோட்டத்திற்கு சென்றுவிட்டாள் அவளையே பார்த்துக்கொண்டு இருந்த விதுன் அவளின் பின்னால் போய்விட்டான் அனி தோட்டத்தில் போட்டு இருந்த ஒரு கல் மேடையில் உட்கார்ந்தவள் எஙோ ஓரிடத்தை வெறித்துக்கொண்டு இருக்க… அவள் அருகில் வந்து உட்கார்ந்தான் விதுன் அதனை உணர்ந்தாலும் அவள் அதனை கண்டுக்கொள்ளாமல் இருக்க….விதுன் எதோ பேச ஆரம்பிக்க….. உடனே அனி”இந்த கொலைக்கார குடும்பத்துல பிறந்த நா உங்களுக்கு வேணா விது…”என்றாள். அவள் சொன்னதை கேட்ட விதுன் அவளை ஆழமாக பார்த்தவாறே. “ம்ம்ம்.. சரி அப்போ எனக்கு நீயே வேற பொண்ணு பாரேன்”என்றான் நக்கல் குரலில் அதை கேட்ட அனி அவனை பார்த்து முறைக்க… அதில் விதுனின் முகம் புன்னகையை பூசிக்கொண்டது. ஆனால் அனியோ கோவமாக எழுந்து செல்ல பார்க்க அவள் கையை பிடித்து இழுத்த விதுன் அவளை ஒரு ஓரமாக கூட்டி சென்று அவளை சுவற்றில் சாய்த்து…நெருங்கி நின்றவாறே “அனி பேபி வேற பொண்ணு பாக்குறீயா..”என்றான் குழைவான குரலில்.. அதில் கோவப்பட்ட அனி அவனை தள்ளிவிட பார்க்க… ஆனால் அவனோ இன்னும் அவளுடன் ஒட்டிக்கொண்டே…”ஏற்கனவே 15வருஷம் உன்ன விட்டு பிரிஞ்சி இருந்தாச்சி. இனி என்னால இருக்க முடியாதுப்பா. நீ என்னை கட்டிக்கிட்டு உன் டாக்டர் படிப்ப கட்டிக்க…..என்ன….”என்றவாறே அவள் பேசமுடியாத அளவிற்கு அவளை ஒரு வழி ஆக்கிவிட்டு தான் அவளை விட்டான் அதும் அவன் சொன்ன 15வருட காதல் அவளை இன்னும் அவன் மீது பித்தாக்கியது…”ஹேய் 15வருசக்காதல்னா அப்போ எனக்கு 8தானே…”என்றாள் அனிஷா அவன் அதற்கு குறும்பு புன்னகை சிந்தியவன். ஆம் என்று தலை ஆட்ட… அதில் சந்தோஷப்பட்ட அனி அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.. இங்கு இவர்கள் இப்படி என்றால் அங்கு ஒரு ஜோடி அப்படி
Super and intresting sis 💞