உயிர் போல காப்பேன்-5

4.8
(34)

அத்தியாயம்-5
ஆஸ்வதி ஹாலில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனாள்.. இவர் ஆதியின் தந்தை. இவர் இப்போது உயிருடன் இல்லையா.. அதும் தன்னவனின் அன்பு தந்தை.
ஆதியை பற்றி முதலில் அறிந்துக்கொண்டவளுக்கு ஆதியின் தந்தை மீது அவன் கொண்ட அன்பு எத்தகையது என்பது தெரியுமே அப்படிப்பட்ட தந்தையின் இழப்பு தன்னவனை எப்படி எல்லாம் மாற்றி இருக்கும் என்று உணர்ந்த ஆஸ்வதி முகம் இன்னும் அதிர்ந்தது.
அப்போ ஆதியின் இந்த நிலைக்கு காரணம் அவன் தந்தையின் இழப்பு தான் காரணமா என்று மனதிற்குள்ளே பேசிக்கொண்டவள் தன்னவனை காண… ஆதியோ ஆஸ்வதியின் அருகில் அவர்களுக்கு எதிரில் மாட்டப்பட்டு இருந்த ஆதியின் அப்பா புகைப்படத்தில் தான் உணர்வற்ற பார்வை பார்த்தவாறு இருந்தான்.. அதை கண்ட ஆஸ்வதியின் முகம் யோசனையில் மூழ்கியது.. அவளும் ஒருதரம் அந்த புகைப்படத்தை பார்த்தவாறு ஆதியை பார்க்க….. இப்போது ஆதியின் பார்வை முழுதும் மாறுப்பட்டு தான் அணிந்திருக்கும் சர்வானியின் ஹாலை இருக்கைகளாலும் இழுத்தவாறு விளையாடிக்கொண்டு இருந்தான்..
ஆஸ்வதி அவனின் இருமாறுப்பட்ட முகமாற்றத்தினை கண்டு குழம்பியது என்னவோ உண்மைதான்
பின் ஆஸ்வதி சுற்றிமுற்றி எதையோ தேட….. ஆனால் அவள் பார்வைக்கு அவள் தேடியது மட்டும் கிடைக்கவே இல்லை…அப்போது இவன் அம்மா.. என்று மறுபடி சுற்றி முற்றி தேட அதற்கும் பயன் பூஜியம் தான்.. ஆஸ்வதி எதை எதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள்.. அவளை நிகழ்காலத்திற்கு வர தாத்தா பேச தொண்டையை பேச செருமினார்..
“க்கும் என்று தன் குரலை சரி செய்துக்கொண்டு… மா ஆஸ்வதி இது என் மகன்,. விஷ்ணு சர்மா ஆதித்தோட அப்பா.. இப்போ இவர் உயிரோட இல்லை”என்றார் சோகமாக….
அதில் ஆஸ்வதியின் முகமும் சோகத்தை பூசிக்கொண்டது அதை ஒரு ஜோடிக்கண்கள் குறித்துக்கொண்டது.
“ஆதித் கண்ணா. அப்பா கிட்ட உன் புது ப்ரண்ட அறிமுகப்படுத்துப்பா..”என்றார்
“ஹாஹான்.. நா தான் அப்பாட்ட ஏஞ்சல பத்தி சொல்வேன்,.. வேற யாரும் சொல்லக்கூடாது.”என்று தன் அருகில் நிற்கும் விதுனை பார்த்து மிரட்டுவது போல் விரலை வைத்துக்கொண்டு பேச….அதில் தாத்தாவும்.,. விதுனும் புன்னகைத்தார்கள்.
“ம்ம்ம்.. சரி ஆதித். போ.. நீயே உன் ஏஞ்சல அப்பாக்கு இன்ட்ரோ. பண்ணு…நாங்க யாரும் உன் பக்கம் கூட வரல…..”என்றான் விதுன் அதை கேட்டு ஆஸ்வதி புன்னகைக்க…
“இவன் கிடக்கான்.. நீ வா ஏஞ்சல்.. எப்போ பாரு. இவனுக்கு என் கிட்ட ஃபைட் பண்ண தான் டைம் இருக்கும்.. ஆனா என் கூட விளையாட மட்டும் வரவே மாட்டான் போடா…”என்றான் ஆதித் முகத்தை திருப்பியவாறு…
அதில் சிரித்த விதுன்…”அதா உன் கூடவே எனி டைம் விளையாட ஒரு ஆள் கொண்டு வந்தாச்சே இனி நீ உன் ஏஞ்சல் கூடவே விளையாடு.. நா உனக்கு இனி தேவ இல்லைல…..”என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.
“ஹான் அப்டிலா ஒன்னும் இல்ல….. அப்புறம் யாரு எனக்கு சாக்கிலா வாங்கிதரது.”என்றான் ஆதித் அதிர்ச்சியாக
“ஹாஹா.. அப்போ.. விதுன் உனக்கு சாக்லேட் வாங்கிதர மட்டும் தான் தேவைப்படுறானா.. இனி.”என்றார் தாத்தா சிரித்தவாறு..
‘எனக்கு தெரியாதுப்பா.. நா விச்சுஅப்பாட்ட போறேன்.நீ வா ஏஞ்சல் நாம போலாம்…”என்று ஆஸ்வதி கையை பிடித்துக்கொண்டு விஷ்ணு புகைப்படம் அருகில் அழைத்து சென்றான்.
“ப்பா.. இது என் ஏஞ்சல் தாத்தூ எனக்கு புதுசா விளையாட….. அப்புறம் என்ன குளிப்பாட்ட….. அப்புறம் சாப்பாடு குடுக்க….. அப்புறம்..அப்புறம்..”என்று யோசிக்க…
“ம்ம் உன் கூட சேர்ந்து வாலு தனம் பண்ண……”என்று விதுன் எடுத்துக் கொடுக்க…. அதை கேட்டு ஆதித் அவனை பார்த்து முறைத்தான்
“பார்ரா..முறைக்குறத….”என்று விதுன் கிண்டல் செய்ய….
“தாத்தூ அவன அமைதியா இருக்க சொல்லு.. இல்லனா.. உன் ஆதித் கண்ணாக்கு கோவம் வரும்.”என்றான் மூக்கை சுழித்துக்கொண்டு..
அவனின் இந்த மூக்கு சுழிப்பில் ஆஸ்வதி மயங்கி போனாள் ஆதித்தை இந்த பாவனையில் அவள் பார்த்ததே இல்லை.கோவப்பட்டு பார்த்திருக்கிறாள்.. புன்னகைத்து பார்த்திருக்கிறாள்.. ஏன் எரிச்சலாகி கூட பார்த்திருக்கிறாள். ஆனால் இது. இந்த தோற்றம்.. அவளுக்கு புதிது
பின் திரும்பி.. தன் தந்தையை கூர்மையாக பார்த்தவாறே..”என் கூட நீ தான் இல்லாம போய்ட்ட… தாத்தூ பாரு எனக்கு புது ப்ரண்டுலா குடுத்துருக்கு. நீ தான் என் பர்த்டேக்கு ஒன்னுமே தரல….”என்று அவரிடம் புகார் வாசிக்க…
இவ்வளவு நேரம் இருந்த இலகுதன்மை மாறி அங்கு சோகம் ஆட்கொண்டது.. தாத்தா தன் அன்பு மகனின் புகைப்படத்தை கண்டவாறே
“ஏன் விஷ்ணு எங்கள விட்டு போன…. உன்ன மட்டுமே உலகம்னு இருந்தவன இப்டி தனியா விட்டுட்டு போக உனக்கு எப்டி மனசு வந்திச்சி…நீ இல்லாம ஆதித் எப்டி குழந்தையா மாறிட்டான் பாத்தியா அவன தினமும் ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் காப்பாத்துறது எனக்கு அவ்வளவு போராட்டமா இருக்கு விஷ்ணு.. அவன குழந்தைனு கூட பாக்காம இங்க என்னலா நடக்குது. ம்ம்ம்.. இனி நா எல்லாத்தையும் ஆஸ்வதிட்ட ஒப்படைச்சிட்டேன் இவ தான் உன் மருமக….. எப்டி இருக்கா.. உன் மருமக… கண்டிப்பா இவ உன் மகனுக்கு துணையா நிப்பா அவன எந்த ஆபத்தும் வராம பாத்துப்பா.”என்று போட்டோவில் இருக்கும் தன் மகனிடம் மனதில் பேசியவாறே நிற்க….
இங்கு ஆதி பேசுவதை கேட்டு ஆஸ்வதி தன் கணவனின் கையை பற்றி அவர் போட்டோ அருகில் அழைத்து சென்று கை கூப்பி வணங்கினாள்.. அதை பார்த்து ஆதித்தும் வணங்கினான் அதை பார்த்த தாத்தாவிற்கு மனநிறைவாக இருந்தது.. ஆனால் அங்கு இருந்த சிலருக்கு கடுப்பாக இருந்தது..
ஆஸ்வதி மனதில்..”உங்க மேல ஆதி எவ்வளவு அன்பு வச்சிருந்தார்னு முழுசா எனக்கு தெரியாதுனாலும் ஏதோ. கொஞ்சம் தெரியும். அவ்வளவு அன்பு வச்ச உங்க மகன இப்டி பாதிலையே விட்டுட்டு போய்ட்டீங்களே. அதுனால தான் ஆதிக்கு இப்டி ஆச்சா,.. நா பார்த்த ஆதிக்கும். இப்போ பாக்குற ஆதிக்கும் உள்ள வித்தியாசம் உங்களாலதானா.. என்று பேசியவள்..பின் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு..எவ்வளவு ஆபத்து வந்தாலும் சரி.. இல்ல இன்னும் இழப்புகள் வந்தாலும் சரி இனி உங்க மகன் பக்கம் எதையும் நெருங்க விடமாட்டேன்.. எதா இருந்தாலும் இனி என்னை மீறி தான் ஆதிக்கிட்ட நெருங்கும் இது நா உங்களுக்கு தர வாக்கு..”என்று மனதார பேசியவள். நிமிர்ந்து புகைப்படத்தை பார்க்க….. ஆதித்தின் அப்பா முகத்தில் முன்பை விட இப்போது அதிக பிரகாசம் வந்தது போல் தோன்றியது
ஆஸ்வதி தன் அருகில் திரும்பி ஆதித்தை பார்க்க…. அவனோ ஆஸ்வதியை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.. அதனை கண்ட ஆஸ்வதி ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டாள்…அவளது அதிர்ந்த பார்வையை பார்த்த ஆதி ஒரு பெரிய புன்னகையை அவளுக்கு கொடுத்துவிட்டு நிற்க….
ஆஸ்வதி புரியாமல் தன்னை சமாளித்துக்கொண்டு திரும்பி தாத்தாவை பார்த்தாள்.. தாத்தா அவளை பார்த்து தலை ஆட்டியவாறு
“வாமா ஆஸ்வதி நாம ஹாலுக்கு போய்டலாம்.”என்று அழைக்க….. அதற்கு ஒரு தலை அசைப்பை கொடுத்துவிட்டு ஆதியை பார்த்தாள் அவனோ இவ்வளவு நேரம் இல்லாத மிரட்சி திரும்ப அவன் முகத்தில் தெரிந்தது.. ஆஸ்வதி பின் மறைந்தவாறே.. அவளுடன் சேர்ந்து ஹாலுக்கு வந்தான்.. ஆஸ்வதி ஆதியின் மிரட்சியை கண்டு எதனால் ஆதி மிரள்கிறான் என்று புரிந்துக்கொண்டாள்
தனது யோசனையை தற்காலிகமாக ஒத்திவைத்தவாறே தாத்தாவின் பின்னால் செல்ல… அங்கு
தாத்தா ஹாலில் கூட்டமாக நின்றுக்கொண்டிருந்தவர்களை காட்டி…“மா. ஆஸ்வதி இவங்க தான் நம்ம குடும்பம்…இங்க இருக்கவங்கள உனக்கு அறிமுகப்படுத்துறேன் மா” என்று அவர்கள் அருகில் அழைத்து சென்றவர்..
முதலில் ஆஸ்வதியை பாசமாக பார்த்த அந்த இருவரை காட்டி “இவ என் முத பொண்ணு பேரு ரூபாவதி இவ கணவர் 10 வருசத்துக்கு முந்தி இறந்துட்டார். இவ என் அன்பு பேத்தி. அஞ்சலி. என் மகளுக்கு குழந்தை இல்லாம கல்யாணம் ஆகி 10 வருடத்துக்கு அப்புறம் பிறந்தா என் செல்லம் இவ…”என்றார் அஞ்சலியை தலையில் வருடி அவளும் ஆஸ்வதியை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள்.. அவள் அம்மாவும்..”எப்டி மா இருக்க….”என்றார் பாசமாக
அதற்கு ஆஸ்வதியும் “நா நல்லா இருக்கேன்மா..”என்று பேசியவள்.”ம்ம்ம். உங்கள நா அம்மாமு கூப்டலாம்ல…..”என்றாள் ஆஸ்வதி தயக்கமாக….
அதில் ரூபாவதி ஆஸ்வதியின் தலையை பாசமாக வருடியவாறு…”என்னமா நீ இதுக்குலா போய் தயக்கமா கேட்டுக்கிட்டு. உன்ன பத்தி அப்பா சொன்னப்ப…. உன்ன பாக்கனும்னு எனக்கு ஆச…. ஆனா சூழ்நிலை சரி இல்ல… என்றவாறு தன் எதிரில் நிற்கும் சிலரை அவர் தயக்கமாக ஏறிட… அதிலே ஆஸ்வதி அவர் யாரை கூறுகிறார் என்பது புரிந்து போனது…பின் “அஞ்சலி மாறி நீயும் எனக்கு பொண்ணு தான். உனக்கு எப்டி தோணுதோ அப்டியே கூப்டு.”என்றார் பாசமாக…
அதில் ஆஸ்வதி கண்கள் கலங்கியவாறே ரூபாவதி காலில் விழ….. “அய்யோ. என்னமா நீ.. முத முதல கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்துருக்க… நல்லா ஜோடியா வாழ்றவங்க கால்ல விழாம என் காலுல போய் விழுந்துகிட்டு.”என்றார்
அதை கேட்டு புன்னகைத்த ஆஸ்வதி…”ஒரு நாள் வாழ்ந்தாலும் உண்மையா.. மனசு முழுதும் காதலோட… மனநிறைவோட வாழ்ந்தவங்களோட ஆசிர்வாதம் போதும்மா.. அப்டி பாத்தா நீங்க அப்டிதானே இருந்துருப்பீங்க…..”என்றாள் ஆஸ்வதி
அதனை கேட்ட ரூபாவதி கண்கள் கலங்கியது…ரூபாவதி தன் அத்தை மகனையே திருமணம் செய்துக்கொண்டாள்…அதும் விரும்பி…தன் கணவனுடம் சிறிது காலமே வாழ்ந்தாலும் அவர் நினைவிலே தன் இறுதி மூச்சினை முடித்துக்கொள்வதே ரூபாவதியின் ஆசை.
ஆஸ்வதி அஞ்சலியை நட்பாக பார்க்க……”இப்போதா காலேஜ் 1 வருசம் படிக்கிறா மெடிக்கல்..”என்றார் ரூபாவதி அதனை கேட்டு ஆஸ்வதியும் அஞ்சலியை பார்த்து புன்னகைக்க….. அஞ்சலியும் அவளை பார்த்து கள்ளம் இல்லா புன்னகையை சிந்தினாள்..
“மா ஆஸ்வதி வா நாம அடுத்தவங்கள பாக்கலாம்..”என்றார் அதற்கு மெலிதாக தலை அசைத்தவாறே தாத்தா பின்னால் செல்ல….
அங்கு இருவர் ஜோடியாக நின்றிருந்தனர்.இதுவரை ஆஸ்வதியை கடுமையாக,எரிச்சலாக, கோவமாக பார்த்த பார்வைக்கு சொந்தகாரர்கள்…”இவன் என் இரண்டாவது பையன் பரத் சர்மா.. இது அவர் மனைவி பூனம் சர்மா, இரண்டு பேரும் பிஸினஸ் பாத்துட்டு இருக்காங்க…”என்றார் தாத்தா
ஆஸ்வதி அந்த இருவரையும் பார்த்து புன்னகைத்தவாறே அவர்கள் காலில் விழ சென்றாள் ஆனால் அவர்கள் இருவரும் விலகிக்கொண்டனர் இதிலே அவர்களுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று புரிந்துக்கொண்டாள் ஆஸ்வதியின் முகம் கலங்கி போனது.. ஆனால் அதனை வெளிக்காட்டாமல் அவர்களை புரியாத பார்வை பார்க்க… அவர்களோ இவளை காண பிடிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டனர்.
தாத்தா அதனை கவனித்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு அடுத்து நின்றவர்களை காட்டி.“மா இவன் என் பேரன் இவர்களோட மகன். ப்ரேம் சர்மா.”என்று ஆதியை விட உயரம் குறைவாக ஒருத்தனை காட்டினார்.. அவன் வேறு யாரும் இல்லை ஆஸ்வதி உள்ளே வந்ததில் இருந்து யார் அவளை கண்களால் கபளீகரம் செய்துக்கொண்டு இருந்தானோ அவன் தான் இப்போதும் அவன் ஆஸ்வதியையே கண்களால் கூறுப்போட்டவாறே
“ஹாய் ஐ ம் ப்ரேம்.”என்றான் அவளை பார்த்து கண் அடித்தவாறே.. அவனின் இந்த செயலை கண்ட ஆஸ்வதி முகம் கோவத்தில் சிவந்து போக அவனை முறைத்தவாறே வணக்கம் என்று கைகூப்ப…..
“ஓஓஓ… இவளுக்கு இந்த மேனர்ஸ் கூட இல்லையா. “என்று கேலியாகவும் ஏளனமாகவும் ஒரு குரல் வர….ஆஸ்வதி குரல் வந்த திசையை பார்த்து திரும்பினாள்..
அங்கு ப்ரேமின் ஜாடையில் ஒருத்தி நிற்க… ” இவ என் பேத்தி. இசானா சர்மா ப்ரேமோட தங்கை…”என்று அவளை காட்ட…..வீட்டில் இருக்கும் போதே விலை உயர்ந்த கற்கள் பதித்த ஒரு குர்த்தியை அணிந்துக்கொண்டு அதற்கு மேட்ஸாக வைரத்தால் ஆன அணிகலங்கள் அணிந்துக்கொண்டு ஆஸ்வதியை இகழ்ச்சியாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆஸ்வதி அவளை பார்த்து எதும் சொல்லாமல் நிற்க அதில் கடுப்பான இஷானா
“உனக்கு மேனர்ஸ் தான் தெரியாதுனு நினைச்சேன்.. மரியாதையும் தெரியாதா.”என்றாள் கேவலமாக பார்வை பார்த்தவாரே
அதில் ஆஸ்வதி கோவமாக புரியவில்லை என்பது போல் ஒரு பார்வை பார்க்க…..”இல்ல கல்யாணம் ஆகி வந்துருக்க….. பெரியவ என் கால இன்னும் விழவே இல்லையே அத சொன்னேன்.”என்றாள் இகழ்ச்சியாக….
அதற்கு ஆஸ்வதி கேலியாக ஒரு புன்னகை புரிந்தவாறே..”பெரியவங்க காலுல ஏற்கனவே விழுந்துட்டேன்..”என்க…. அதை கேட்ட ஒருவன் பகீர் என்று சிரித்துவிட….. தாத்தாவிற்கும் புன்னகையில் உதடு துடித்தது.ஆனால் தாமே சிரித்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நிற்க….. விதுனோ வாயை கைகளால் மூடிக்கொண்டு சிரித்தான்..
“அப்பா எங்க இருந்து வந்தாளோ தேவதை மாறி. இவ்ளோ நாள் என்னால செய்யமுடியாதத ஒரே நிமிஷத்துல என் பொண்டாட்டிய அசிங்கப்படுத்திட்டா.உனக்கு கோவிலே கட்லாம்மா..”என்று ஒருவன் மனதிலே ஆஸ்வதியை பாராட்ட….
அதில் கேவமான இஷானா..”பாத்தீங்களா தாத்தா உங்க முன்னாடியே எப்டி பேசுறானு கொஞ்சம் கூட அண்ணினு மரியாத இருக்கா.. இதுக்கு தான் நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி ஒருத்திய புடிக்கனும்ன்றது இப்போ பாருங்க லோ க்ளாஸ லாம் உள்ள கூட்டிட்டு வந்து.ச்ச……”என்று இஷானா முகத்தை சுழிக்க….
அதில் கடுப்பான ஆஸ்வதி “என்ன லோ க்ளாஸ்..யாரு லோ க்ளாஸ்..”என்றாள் அமைதியாக அதே நேரம் அழுத்தமாக…
அவள் குரலில் இருந்த கடுமையை கண்ட தாத்தா…”மா…இவர் தான் இஷானா கணவர்.. ராம் .. இது இவங்க பசங்க….. பப்ளு, ஆக்ஸி..”என்று அவர்களை அறிமுகம் படுத்தினார்.
ஆஸ்வதி வேண்டும் என்றே ராமை பார்த்து…”உங்களுக்கு கண்டிப்பா ஒரு கோவில கட்டிடனும் அண்ணா..”என்றாள் கிண்டலாக…. இதை கேட்டும் கேட்காததை போல் நின்ற ஆதி ஆஸ்வதியையே அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தான்.
இது இஷானா காதில் விழுந்து அவள் கோவமாக எதோ பேச வர…. அதற்குள் தாத்தா..
“மா.. ராம் பெரிய பில்டர்மா..கோவில் ப்ராஜக்ட் கூட பண்ணுவாரு.”என்றார் தாத்தாவும் கிண்டலாக… அதை கேட்ட ஆஸ்வதி மெதுவாக சிரிக்க….. ராமிற்கும் புன்னகை வந்துவிட்டது.. அவனும் சத்தமாக சிரிக்க….
“ஹாய் அண்ணா.”என்றாள் புன்னகையுடன்…
அவனும் ஆஸ்வதியை பார்த்து புன்னகைத்தவாறே.
“ஹாய் மா..வாழ்த்துக்கள்..”என்றான்… அதனை பார்த்த இஷானா. தன் கணவனை முறைத்துக்கொண்டே அவன் காலை ஒரு மிதி மிதித்தாள் அதில் ராம் ஆஸ்வதியை பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டாள். இதனை கண்ட ஆஸ்வதி இஷானாவை முறைத்துக்கொண்டே அடுத்து உள்ளவர்கள் பக்கம் செல்ல…
அங்கு நின்றிருந்த பப்ளு…ஆக்ஸியை பார்த்து மெலிதாக புன்னகைத்தவாறே. “ஹாய்…”என்றாள் அவர்களும் தன் அன்னையை போல முகத்தை திருப்பிக்கொள்ள…. அதில் முகத்தை பாவமாக வைத்துக்கொண்ட ஆஸ்வதி.. அவர்கள் உயரத்திற்கு உட்கார்ந்தவாறே அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெலிதாக
“பேசமாட்டீங்களா.. என்றாள் அவர்களிடம் எந்த பதிலும் இல்லாமல் போக.. ‘சரி பேச வேண்டாம் ஆனா இனி என் ஆதியை எதாவது டிஸ்டர்ப் பண்ணீங்க….உங்கள என்ன செய்வேனு எனக்கே தெரியாது…”என்று ஆஸ்வதி சிரித்தவாறே முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் மிரட்ட….. அதில் அந்த இருவரும் அரண்டு போய் அவளை பார்த்தனர்..
அப்போதும் இஷானா அருகில் நின்றவாறே ப்ரேம் ஆஸ்வதியையே துகில் உரிக்கும் பார்வை பார்க்க அப்போது தான் தான் வந்ததில் இருந்து தன்னை துகில் உரிக்கும் பார்வை பார்ப்பவன் இவர்களது மகனா என்று யோசித்தவள்.. ஆஸ்வதி ப்ரேமை கண்களால் எரிக்கும் பார்வை பார்த்துக்கொண்டே இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல் திமிராக சிரித்தவாறே நின்றிருந்தாள்.
அவளின் இந்த திமிரான பார்வையை கண்டு இசானா கண்டும் கானாதது போல தன் கணவருடம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
ஆனால் ப்ரேம் இவளை இன்னும் இன்னும் ரசிக்கும் பார்வை பார்த்து கால் முதல் தலை வரை பெருமூச்சுடன் பார்த்தான்.
அடுத்து”இவன் என் 3வது பையன் அஜய் சர்மா.. இது அவன் மனைவி ரியா சர்மா” என்றார். அவர்களை பார்த்து ஆஸ்வதி புன்னகையுடன் அவர்கள் காலிலும் விழ போனதும் “வேண்டாம்.”என்று ஒதுங்கிக்கொண்டனர்..
அதனை ஆஸ்வதி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உதட்டை சுழித்துக்கொண்டு நின்றுவிட்டாள் அவளின் இந்த பாவனை அஜயிற்கும் ரியாவிற்கும் கோவத்தை தூண்டியது ஆனால் பெரியவருக்காக அமைதியாக நின்றிருந்தனர்.
“இது அவங்க பசங்க லிசா சர்மா இது அவள் கணவன் ரித்விக் இது அவங்க பசங்க ஆஜிஸ்.. ரியா. என்று அறிமுகப்படுத்த… லிசா ஆஸ்வதியை பார்த்து நட்பாக புன்னகைக்க….ஆஸ்வதிக்கு முதல் முறையில் தெரிந்த நட்பு புன்னகையில் கொஞ்சம் பெரிதாக புன்னகைத்தாள்.. ஆஜிஸும்..ரியாவும் அவளை பார்த்து புன்னகைக்க… அவளும் அவர்களை பார்த்து புன்னகைத்தாள்.
“அப்புறம் இது இவங்களோட பையன் என் பேரன் விஷால் சர்மா”என்றார் அவன் தான் இங்கு வந்த போது அவளை பார்த்த நட்பு பார்வை பார்த்தவன்.
“ஹாய் அண்ணி ஐ ம் விஷால்”என்று கையை நீட்டினான்..
அவளும் அவனை பார்த்து “ஹாய் ஐ ம் ஆஸ்வதி ஆஸ்வதி ஆதித் சர்மா..”என்றாள் சிரித்தவாறு..
அதை கேட்டு சிரித்தவாறு “ஹா அண்ணி இப்பொதா உங்களுக்கு மேரேஜ் ஆச்சினு தாத்தா சொன்னாங்க அதுக்குள்ள அண்ணா பேர உங்க கூட சேர்த்துட்டீங்களா… “என்றான் கேலியாக….
அதை கேட்ட ஆஸ்வதி குறும்பாக…” அவருக்கும் எனக்கும் எப்போ மேரேஜ்னு பேசுனாங்களோ. அப்போவே உங்க அண்ணா நேம் என் பேர்கூட இணைஞ்சிடுச்சி..”என்றாள்
அதைக்கேட்ட விஷால்…”ஹா அண்ணி சான்ஸ்ஸே இல்ல….. வந்ததுமேவா.”என்றான் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு..
அதை பார்த்த ஆஸ்வதி புன்னகைக்க… அதை இரு கண்கள் கனிவுடன் வருட… ஒரு ஜோடி கண்கள் காதலுடன் வருட… நட்பாக… வன்மமாக என்று பார்த்துக்கொன்டிருந்தது மற்ற கண்கள்,..,,..
“விஷால் இங்க பாத்தியா தாத்தூ எங்கூட விளையாட ஒரு ஏஞ்சல் வாங்கிக் கொடுத்தாரு…உனக்கு வாங்கிக்கொடுத்தாரா..”என்றான் ஆதி விஷாலின் தோளை பிடித்து ஆட்டிக்கொண்டு..
“ஆஆஆ….. அண்ணா.. நா சின்ன பிள்ளைனா.. இப்டி ஒட்டகம் மாறி வளர்ந்துட்டு என் தோள பிடிச்சி ஆட்டுனா நா தாங்குவனா.”என்றான் விஷால் கத்தியவாறே
“ஹி ஹி.. “என்று ஆதி விஷாலை இன்னும் உலுக்க…
“அய்யோ அண்ணா.. எனக்கும் ஒரு ஏஞ்சல விளையாட வாங்கித்தர சொல்லு தாத்தாவ… நா கேட்டா வாங்கித்தர மாட்டாரு.. நீ எனக்காக பேசி வாங்கித்தாயேன்…”என்றான் கொஞ்சல் மொழியில் விஷால்..
“ஹான். நா சொன்னா தாத்தூ கேட்பாரு என்று சொல்லி தாத்தா பக்கம் திரும்பிய ஆதி…தாத்தூ விஷால் பாவம் இல்ல…. அவனுக்கும் விளையாட ஒரு ஏஞ்சல் வாங்கித்தாங்களேன்…”என்று முகத்தை சுருக்கிக்கொண்டு ஆதி கேட்க….. அந்த பாவனையில் தாத்தா சத்தமாக புன்னகைத்துவிட்டார்…என்றால் ஆஸ்வதி ஆதியை ரசித்துக்கொண்டு இருந்தாள்.. அவனது சிறுபிள்ளை போல முகத்தை சுருக்கிக்கொண்டு பேசியது அவளை வெகுவாக ஈர்த்தது
“அவன் இன்னும் பெரியவன் ஆகல ஆதித் கண்ணா. இப்போதான் அவன் காலேஜே சேர்ந்திருக்கான் இப்போ போய் அவனுக்கு ஏஞ்சல் வாங்கிக்கொடுத்தா அவன் சரியாவே படிக்கமாட்டான்..”என்றார் தாத்தா
“ஆமா ஆமா. நீ படிக்கமாட்ட……என்று சொன்னவன் சிறிது நேரத்தில் எதோ யோசித்தவன்,.”ஆமா தாத்தூ அப்போ நா பெரியவனாகிட்டேனா…”என்றான் கன்னத்தில் ஒரு விரலால் தட்டியவாறே.
“ஆமா ஆமா ஆதித் இப்போதா போன மாசம் பெரியவனான….”என்று விடுன் புன்னகையுடன் சொல்ல….
அதை கேட்ட ஆதி..”ஓஓ…. அப்போ உனக்கு ஏஞ்சல் இப்போ இல்ல… என்ன மாறி பிக் பாயா ஆகு அப்போ தான் ஏஞ்சல்..”என்றான் ஆதி குழந்தை குரலில் மிரட்டுவது போல…..
விஷால் அதை கேட்டு உதட்டை பிதுக்க….. ஆஸ்வதி விஷாலை பார்த்து சிரித்தாள்..
அதில் பக்கத்தில் நின்றிருந்த 20 வயது பெண் கடுப்பாகி..”ஹலோ.. என்றாள் வெடுக்கென்று…ஆஸ்வதி புறம் வேண்டா வெறுப்பாக கை நீட்டி அதை கண்ட ஆஸ்வதி அவள் புறம் கைநீட்ட… அவள் கையை ஆட்டியவாறு..” ஐ ம் அதிதி.. விஷாலோட அத்த பொண்ணு. இன்ஃபேக்ட் நானும் அவனும் படிச்சி முடிச்சோனே மேரேஜ் பண்ணிக்க போறோம்.”என்றாள் வெடுக்கென்று,.
அதில் கடுப்பான விஷால்“அதிதி உங்கிட்ட நான் சொன்னேனா உன்ன நா கல்யாணம் பண்ணிக்கிறேனு.”என்றான் கோவமாக…
“அப்டிதானே நம்ம பேரன்ட்ஸ் பேசிட்டு இருக்காங்க…..”என்றாள் அதிதி தெனாவட்டாக…
அதில் இன்னும் கடுப்பானவன்…”தாத்தா எடுக்குறதுதான் இந்த வீட்ல முடிவு.. அது மட்டும் இல்லாம எனக்கு உன்ன கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லனு ஆல்ரெடி நா என் அம்மாட்ட சொல்லிட்டேன் இதுக்கு மேல யரௌகிட்டையும் இப்டி சொல்லிட்டு சுத்தாத…”என்று விஷால் கத்த…..
“விஷால்.”என்று ரியா எதோ சொல்ல வர….
“ம்ச் அம்மா ஆல்ரெடி நா என் முடிவ சொல்லிட்டேன்.. நா இப்போதான் காலேஜே ஜாய்ன் பண்ணிருக்கேன்.. இந்த பேச்ச இதுக்கு மேல எடுக்காதீங்க……”என்றவன்..
“அதிதி. இரு தாத்தா அடுத்து உன்ட தான் வருவாறு..அதுக்குள்ள என்ன அவசரம்.உன்னோட ஹோல் ஹிஸ்ட்ரிய அண்ணிக்கு கேட்க நேரம் இல்லையோ என்னவோ….அண்ணி இவளுக்குனு ஒன்னும் பெரிய ஹிஸ்ட்ரிலா இல்ல… ”என்றான் விஷால் நக்கலாக… அதில் இன்னும் கடுப்பான அதிதி. விஷாலை பார்த்து முறைத்தவாறு
”நீ அதிகமா பேசுற விஷால்.. அப்புறம் எனக்கு கோவம் வந்து இந்த வீட்ட விட்டு போய்டுவேன்…”என்றாள் அதிதி. அவளுக்கு இது பழக்கம் தான் யாராவது அவளை திட்டினாளோ. இல்லை அவள் கேட்டதை வாங்கித்தரவில்லை என்றாளோ அவள் இப்படி தான் சொல்வாள். அதற்கு பயந்தே அவளது பெற்றோர் அவளுக்கு இஷ்டத்திற்கு வாங்கி குவிப்பார்கள்..அதை கேட்ட .. ஆஸ்வதி அதிர்ச்சியுடன் விஷாலை பார்க்க….. அவன் சாதாரணமாக நின்றுக்கொண்டு
“அண்ணி நீங்க வந்த நேரம் எனக்கு எதோ நல்லது நடக்குறது மாறி தெரிது அண்ணி அது மட்டும் நடந்துது.. என் லைஃப் ஃபுல்லா லக்கி சார்ம் நீங்க தான்.”என்றான் ஆஸ்வதியை குறும்பு புன்னகையுடன் பார்த்துவிட்டு.
அதில் இன்னும் எரிச்சலுடன் அதிதி தன் அருகில் நிற்கும் அவள் அன்னையை பார்க்க…. அவர் ஆஸ்வதியை தான் முறைத்தார்..
அதை கண்டுக்கொள்ளாத பெரியவர்…“அடுத்து ஆதித்தோட அப்பா விஷ்ணு தான்மா எனக்கு 4வது மகன்.. “என்றவர் சிறிது நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு மெளனமாக நிற்க….. அவர் முகம் வேதனையில் சுருங்கியது.. ஆஸ்வதிக்கு அவர் ஏன் இவ்வளவு வேதனைப்படுகிறார்.. ஒருவேளை அவரின் மகன் இழப்பை தாங்க முடியாமல் தான் தாத்தாவின் முகம் இப்படி இருக்கிறது என்று ஆஸ்வதி நினைத்துக்கொண்டாள் ஆனால் அவர் எதோ மறைப்பது போலவும் அவளுக்கு தோன்றியது.
பின் கொஞ்ச நேரம் இடைவேளை விட்டவர்.. “விஷ்ணுக்கு முதல ஆதித். அப்புறம் ஆதித் க்கு ஒரு தங்கை இருக்கா.”என்றார்..
”அது நா தான் அண்ணி”என்று ஒரு குரல் கேட்க….
குரல் வந்த திசையில் அனைவரும் திரும்ப….. இளம் மஞ்சள் நிற அனார்கலி உடை அணிந்து வந்தாள் 18 வயது இளம் பெண்.. பார்க்க ஆதித் போல் நல்ல நிறம்.
(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உயிர் போல காப்பேன்-5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!