உயிர் போல காப்பேன்

4.8
(28)

அத்தியாயம்-9
அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.. விதுன் அங்கையே கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்ததால் அங்கயே சாப்பிட்டு கொள்வான். ஆனால் அவன் அங்கு இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டதற்கு பிறகு தான் சாப்பிட வருவான் ஆனால் அன்று அவன் ஆதியுடன் கீழே வந்ததினால் அவன் ஆதியை உட்கார வைத்துவிட்டு ஹாலுக்கு செல்ல முயல….. அதற்குள் ஆஸ்வதி..
“அண்ணா. எங்க போறீங்க….. உட்காருங்க… சாப்டலாம்…”என்ற் கூற…..
அதை கேட்ட அங்கு உட்கார்ந்திருக்கும் பரத்.. அஜய்.. அபூர்வா முகம் கறுத்துவிட்டது.. ஆஸ்வதியை அனைவரும் முறைக்க…
“ஆமா விதுன் உட்காருப்பா…”என்றார் தாத்தா..
அதில் தயங்குயவாறு விதுன்…”இல்ல தாத்தா நா அப்புறம் சாப்டுறேன்…”என்றான்..
“ம்ச். என்னப்பா. ஆரம்பத்துல ஒன்னா தானே உட்கார்ந்து சாப்டுவ….. திடிர்னு கொஞ்ச நாளா தான் இப்டி நடந்துக்குற…. இங்கையே தங்குனு சொன்னா கேட்காம கேஸ்ட் ஹவுஸ் போறேனு சொல்லிட்டு போற… இங்கையே சாப்டு சொன்னா எல்லாரும் சாப்டதுக்கு அப்புறம் சாப்டுறேனு சொல்ற…. என்னப்பா என்னாச்சி.”என்றார் தாத்தா அவர் பேசுவது மட்டும் தான் விதுனிடம் இருந்தது அவர் பார்வை முழுதும் அங்கு சுற்றி உட்கார்ந்திருந்தவர்களிடம் தான் இருந்தது.
அவர் பார்வையில் அனைவரும் நிமிர்ந்து பார்க்காமல் கீழே குனிந்தவாறு உட்கார்ந்திருக்க….. பெரியவர் யூகித்துவிட்டார். இது எல்லாம் தன் குடும்பத்தார்கள் வேலை என்று.அவர் முகம் கடுமையை காட்ட… பின் தன்னை சமாளித்துக்கொண்டு.
“உட்காருப்பா.. இங்க யாரும் உன்ன எதும் சொல்ல முடியாது ஏனா. இவங்களே இங்க கெஸ்ட் மாறிதான் தங்கிருக்காங்க….. இவங்களா எப்போ வேணா அவங்க வீட்டுக்கு போய்டுவாங்க….”என்றார் அனைவரையும் ஒரு நக்கல் பார்வை பார்த்துவிட்டு.
அதில் கடுப்பான அபூர்வா..”அப்பா இதலா சரி இல்லப்பா.. அஃப்ட்ரால் ஒரு வேலைக்காரன் அவன் முன்னாடி எங்கள இப்டி சொல்றது டூ மச்.”என்றார்.
அதை கேட்ட ஆஸ்வதி சடார் என்று விதுனின் முகம் காண அவன் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தது அதே நேரம் அனிஷாவும் விதுனை பார்க்க.. அவன் முகத்தில் இருந்து எதையும் அவளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை அதே நேரம் இவ்வளவு நேரம் தாத்தா பேசியதை எல்லாம் காதில் வாங்காமல் தன்னவள் கையால் சாப்பிட்டு கொண்டு இருந்த ஆதி காதிலும் அபூர்வா சொல்வது விழ….. டேபிள் கீழ் இருந்த அவன் கை கோவத்தில் முறுக்கிக்கொண்டான்..
“அபூர்வா வார்த்தைய பார்த்து பேசு. அவன் ஒன்னும் இங்க வேலைக்காரனாவோ வேலைப்பார்க்கவோ வர்ல…. அவன் என்ன வேலையில இருக்கானு உனக்கே தெரியும் அதை எல்லாம் விட்டுட்டு அவன் இங்க வந்து உட்கார்ந்துருக்கானா அதுக்கு ஒரே காரணம் அவன் ஃப்ரண்ட் ஆதித் மட்டும் தான் இத ஆதித்க்கு நாம செஞ்சிருக்கனும். ஆனா நமக்கு தான் நம்ம அண்ண பையன்.. தம்பி பையன்லா எப்டி போனாலும் பரவா இல்லையே.. நமக்கு இந்த வீடு.. பிஸ்னஸ் தானே முக்கியம்…”என்றார் அபூர்வாவை குத்தலுடன்..
அதை கேட்டு இன்னும் கடுப்பான அபூர்வா எதோ பேச வர……”அப்பா இப்டி யாரோ தெரியாதவங்க முன்னாடி எல்லாம் எங்கள இப்டி பேசுறத நா ஏத்துக்க மாட்டேன்பா.”என்றார் பரத் அதில் ஆஸ்வதி தாத்தாவை ஒரு அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.. அவளுக்கு தான் தெரியுமே தன்னை தான் இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று.
“யார்டா இங்க தெரியாதவங்க…. என் கண்ணுக்கு யாரும் அப்டி தெரிலையே.”என்றார் பெரியவர்
“ம்ச் அப்பா இவ… இவ யாருப்பா.. இவ முன்னாடி எங்கள இப்டி பேசுறீங்க…..”என்றார் அபூர்வா
“என்னமா அபூர்வா.. காலையில நா சொன்னதுலாம் மறந்திட்டியா இவ யாருனு கேட்குற….. இவ இந்த வீட்டோட மருமக…. அதுவுமா மறந்து போச்சி.. உனக்கு கூட பிறந்த உன் அண்ண பையன தான் மறந்து போய்டும்னு நினைச்சேன். இப்போ எல்லாரையும் மறக்குறீயே.”என்றார் கிண்டலாக….
அதில் அசிங்கப்பட்ட அபூர்வா…”அப்பா..”என்றார் அழுத்தமாக
“என்னமா நா சொல்றது உண்மைதானே..”என்றார் அபூர்வாவை பார்த்து
“அப்பா.”என்று அஜய் எதோ சொல்ல வர…
“விதுன் இங்க உட்காருப்பா..”என்றார் ஆஸ்வதிக்கு பக்கத்தில் இருந்த இடத்தை காட்டி… அதை கேட்டு அனைவரும் தாத்தாவை எரிக்கும் பார்வை பார்க்க….. விதுன் தயங்கினான்.
“என்னப்பா உன் ஃப்ரண்டு ஆதித் சொன்னாதான் கேட்பியா.. இந்த தாத்தா சொன்னாலாம் கேட்க மாட்டியா.அப்போ உன் ஃப்ரண்டையே சொல்ல சொல்றேன். ஆதித் கண்ணா.,. உன் ப்ரண்டு சாப்டாம நிக்குறான் பாரு,. அவன உட்கார்ந்து சாப்ட சொல்லு..”என்றார்
அதை கேட்டு ஆதியும்..”ம்ம். நா சொன்னா அவன் கேட்பான் நாங்கதான் இப்போ ஃப்ரண்ட் ஆகிட்டோமே.. ஃப்ரண்ட் சொன்னா எல்லாம் கேட்கனுமாம். ஏஞ்சல் சொன்னா..”என்றான் ஆஸ்வதியை பார்த்தவாறு அதில் ஆஸ்வதி புன்னகைக்க……ஆதி விதுன் புறம் திரும்பி.”ம்ம்ம். வா விது. இன்னிக்கி வினிஜா ஆன்ட்டி பூரி போற்றுக்காங்க…. நெய் போட்டு.. வா நல்லா இருக்கு சாப்டலாம்..”என்றான். ஆதி சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கொண்டு.
அதை கேட்ட தாத்தா..”ஹாஹா.. அப்புறம் என்னடா விதுன் உன் ஃப்ரண்டே டிஸ்க்கு ரிவ்யூ சொல்லி சாப்ட சொல்லிட்டான் வா சாப்டு…”என்றார்.. அதில் ஆஸ்வதி. அனுஷா. விஷால் புன்னகைக்க….விதுனும் புன்னகையுடன் ஆஸ்வதி அருகில் உட்கார்ந்தான். அதை பார்த்த அனைவரும் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து செல்ல…. இஷானா தன் எதிரில் உட்கார்ந்திருந்த ஆஸ்வதியை முறைத்துக்கொண்டே எழ….. அவள் அருகில் உட்கார்ந்திருந்த ராம் மட்டும் தட்டில் கவனமாக பூரியை அடிக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அதை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட இஷானா. அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
இதை பார்த்த விதுன் முகம் சுருங்க.,. அதை பார்த்த தாத்தா…”அவங்களா போதுமான அளவு சாப்டுறுபாங்க விதுன். நீ சாப்டு.”என்று சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ எழுந்து சென்றார்..
அப்போதும் விதுன் உண்ணாமல் அப்படியே உட்கார்ந்திருக்க….”அண்ணா. கார்ல வரும் போது தாத்தா எனக்கு என்ன சொன்னாங்கனு நியாபகம் இருக்கா…”என்றாள் அவனை கூர்மையாக பார்த்தவாறே
அதை கேட்ட விதுன் அவளை புரியாமல் பார்க்க……”நாம ஒதுங்கி போக ஒதுங்கி போக தான் எல்லாரும் நம்மள ஏறி மிதிப்பாங்க….. அத கேட்டு நானும் என் கணவனுக்காக என்னை மாத்திக்கிட்டேன். இப்போ நீங்க என்ன செய்றதா இருக்கீங்க……”என்றாள் ஆஸ்வதி அர்த்தமாக அவனை பார்த்தவாறே.
அதை கேட்டு புன்னகைத்த விதுன் “இப்போ சாப்டலாம்னு இருக்கேன்மா..”என்றான்
அதை கேட்ட ஆஸ்வதி விதுனை பார்த்து புன்னகைக்க… அவனும் அவளை பார்த்து தலை ஆட்டிவிட்டு சாப்பிட்டான்.. அவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனுக்கு எதிரில் உட்கார்ந்து அனு ரசித்துக்கொண்டிருந்தாள்..
இப்படியாக அந்த நாள் ஓட….. இரவும் அது போல தான் அனைவரும் ஆஸ்வதியை முறைத்துக்கொண்டே சாப்பிட்டனர் திரும்ப அவர்களால் வாய் கொடுத்து பெரியவரிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர் அவர்கள் சாப்பிட்டு தங்கள் அறைக்குள்ளே சென்றுவிட்டனர் அப்போது தான் ஆஸ்வதி ஆதியுடன் பேசிக்கொண்டே அவனுக்கு சாப்பாடு ஊட்ட அதை சாப்பிட்ட பின்பு
“ஏஞ்சல் எனக்கு தூக்கம் வருது நா போய் தாத்தாட்ட படுத்துக்கவா..தாத்தா நா இல்லாமா தூங்க மாட்டாரு.”என்றான். ஆதி
அவளும் சரி சொல்லி அனுப்பி வைத்தாள்.. அங்கு தாத்தா என்ன சொன்னாரோ முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வந்தான் ஆதி
அதை பார்த்து”என்னங்க ஆச்சி ஆதி”என்றாள் ஆஸ்வதி
“இல்ல தாத்தூ உன் ரூம்லயே படுனுசொல்லிடுச்சி அதான் நா எப்டி ஏஞ்சல் தனியா படுப்பேன்.. அந்த பப்ளு இல்ல….. அவன் என்ட சொன்னான் ஒரு நாளு இங்க அவ பேய் பாத்தானாம் அது என்ன மாறி குட்டி புள்ளைங்களலா தூக்கிட்டு போய்டும்னு”என்றான் உதட்டை பிதிக்கியவாறு.
அதை கேட்டுக்கொண்டே வந்த விதுன்,,,,, “இல்ல ஆதி இங்க அது மாறிலா ஒன்னும் இல்ல நீ பயப்படாத…. இனி உங்கூட உன் ஏஞ்சல் இருப்பாங்க அவங்க உன்ன விட்டு எப்போதும் பிரியமாட்டாங்க….அவங்களும் உன் ரூம் தானே சோ பயப்படகூடாது.”என்றான் விதுன்.
அவன் பேசியதிலே இனி உன்னவிட்டு பிரியமாட்டாள் என்பதை மட்டும் ஆதி பிடித்துக்கொண்டு..ஆஸ்வதியை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே “ஏஞ்சல் உண்மையாவா..” என்றான் ஆச்சரியமாக….. ஆஸ்வதி அவன் எதை உண்மை என்று கேட்கிறான் என்பதை புரிந்தும் அவன் வாயில் இருந்து வர வைக்க “எது ஆதி உண்மை…”என்றாள் அவனை ஏக்கமாக பார்த்துக்கொண்டு..
அதில் தன்னவளின் ஏக்கத்தை புரிந்துக்கொண்ட ஆதி முகம் இறுகிப்போனது. பின் முகத்தை திருப்பிக்கொண்டே… தன் ஏஞ்சலிடம் திரும்பி “விது உண்மையா சொல்றானா.இனி நீ எங்கூடதானே இருப்ப…..”என்றான்
“ஆமா ஆதித் அண்ணா அண்ணி இனி உன் கூடதான் எப்போதும் இருப்பாங்க…. உன்னவிட்டு இனி ஆஸ்வதி அண்ணி எங்கையும் போகமாட்டாங்க அண்ணா”என்றாள் அனி..
“லூசு விது என் ஏஞ்சல தான சொல்றான் நீ யார சொல்ற”என்றான் ஆதி…அழகாக உதட்டை பிதுக்கிக்கொண்டு எதுவும் தெரியாதது போல…..
அதை கேட்டு சிரித்த அனைவரும்.. ஆஸ்வதி அவனை பார்த்து பக்கத்தில் உட்கார வைத்து “ஆதி உங்களுக்கு ஆதினு ஒரு பேரு இருக்குல… அது மாறி எனக்கும் ஒரு பேரு இருக்குமே..”என்றாள் யோசித்துக்கொண்டு
“ஆமால உன் பேரு என்ன ஏஞ்சல்.”என்றான் ஆர்வமாக…
“ஆஸ்வதி”என்றாள் அழகாக சிரித்தவாறு அதில் ஆதி முகம் அவளை அப்பட்டமாக ரசித்தது.. இதை இரு கண்கள் மனதில் குறித்துக்கொண்டது..
“அய் உன் பேரு என் பேரு மாறி அழகா இருக்கு”என்றான்.. அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு.. ஆஸ்வதி அவனின் இந்த விழி வீச்சில் அதிர்ந்து பின் அவனை கூர்மையாக பார்க்க….. அதற்குள் ஆதி முகத்தை திருப்பிக்கொண்டான்.
பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு அவர் அவர் அறைக்கு சென்றுவிட்டனர்… ஆஸ்வதியும் ஆதியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு அழைத்து சென்றாள்.
அங்கு சென்றதும்,.. அவனை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு பின் எங்கே படுப்பது என்று பார்க்க…. ஆதி அவளை தான் ஆழமாக பார்த்துக்கொண்டிருந்தான்.. ஒரு பக்கம் அவளது முகத்தை ரசித்தாலும் இன்னோரு பக்கம் அவளது நிலை உணர்ந்து வருந்தினான் எப்படி இருக்க வேண்டியவள் தன்னவள்.. இந்த வீட்டில் உரிமையாக நடமாட வேண்டியவள் ஆனால் தன்னால் தான் அவள் இப்போது அனைத்து பேச்சியும் வாங்க வேண்டியது உள்ளது ஆனால் அவனாலும் முழுதும் இதில் இருந்து வர முடியவில்லை.. அவன் இழப்புக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டுமே, பரவாயில்லை.. சிறிது நாட்கள் தன்னவள் தனக்காக கொஞ்சம் தாங்கித்தான் ஆக வேண்டும். அதன் பின் தன்னவளை பூ போல தாங்க வேண்டும் என்று நினைத்தான் ஆதி ஆஸ்வதியை பார்க்க… அவள் அவன் அருகில் வந்து கைப்பிடித்து அழைத்து சென்று மேலே படுக்க சொல்லிவிட்டு அவள் கீழே ஒரு சிறு பேட்டை போட்டு படுக்க ஆயுதமானாள்.
ஆதி கட்டிலில் படுத்துக்கொண்டே ஆஸ்வதியின் செயல்களை காண .. ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்து உறங்க முற்பட….. அவளுக்கு இன்று நடந்தது அனைத்தும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது தன் சித்தி ஏன் தன் தங்கை போல இல்லை தன் தாத்தாவாது ஆதிதான் மாப்பிள்ளை என்று சொல்லிருக்கலாம் அதனால் தானே இன்று ஆதியுடனான தன் திருமணத்தை தன்னால் ரசிக்க முடியவில்லை..
தன் தங்கை விஷாலி தன்னை அன்னை போல அல்லவா பார்த்துக்கொண்டாள்.. அவளிடம் கடைசியாக கூட ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லையே.. அதும் இந்த சித்தியால் தானே.. விஷாலியிடம் அவள் சித்தி தான் சொல்லவிடாமல் செய்தார் என்பதும் ஒரு காரணம் என்றால்.. விஷாலி தன்னை இந்த திருமணம் செய்ய சம்மதித்திருக்கமாட்டாள் என்பது வேறு ஒன்று. அவள் மட்டும் இந்த திருமணத்தை நடக்கவிடாமல் செய்திருந்தால் அவளது கனவு படிப்பு அவளுக்கு கிடைத்திருக்காது.. இன்னொன்று தன் ஆதியுடன் இப்படிபட்ட முடிச்சி விழாமலே போய் இருக்கும் அல்லவா.இது அனைத்தும் ஆஸ்வதியின் சித்தியால் தான்.அதும் அவள் சித்தி. ஆதியை பற்றி சொன்னாள் தான். அதனுடன் சேர்த்து தான் இந்த திருமணத்தை மறுக்காத அளவிற்கு விஷாலியின் படிப்பையும் சேர்த்து அல்லவா க்கு வைத்து முடித்தார் அதுவும் நல்லதற்கு தான் இல்லை என்றால் தன்னுடைய ஆதியுடன் கனவில் மட்டுமே வாழ்ந்துருப்பாள்..ஆஸ்வதி இதை எல்லாம் நினைத்துக்கொண்டே படுத்திருக்க…
ஆதி கொஞ்ச நேரம் அவள் படுத்திருப்பதையே கூர்மையாக பார்த்துக்கொண்டே இருந்தான்.. ஆஸ்வதியின் முகம் யோசனையில் சுருங்குவதை பார்த்துக்கொண்டே இருந்தான் பின் ஆதி இறங்கி வந்து அவளிடம் படுத்துக்கொண்டான் தன் அருகில் எதோ அரவம் தெரியவும் அதுவரை யோசனையில் இருந்தவள் அதிர்ந்து திரும்பி பார்த்தாள் அங்கு ஆதி இவளது புடவையின் நுனியை கைகளில் பிடித்துக்கொண்டு படுத்திருந்தான்.
அவன் படுத்திருக்கும் நிலையை கண்ட ஆஸ்வதி மனம் நெருடியது.. ஏனென்றால் ஆதரவற்ற குழந்தை படுத்திருப்பது போல காலை சுருட்டிக்கொண்டு ஒரு கையை தன் தலையின் கீழே வைத்துக்கொண்டு ஒரு கையில் அவள் புடவையை இறுக்கிக்கொண்டு படுத்திருந்தான். அவன் உடல் ஆஸ்வதியின் உடல் இன்னும் ஒரு இன்ச் நகர்ந்தால் உரசுவது போல தான் படுத்திருந்தான். அதில் ஆஸ்வதியின் உடல் சிலிர்த்து படபடத்தது…அவன் மூச்சிக்காற்று வேறு அவளது பின் கழுத்தில் உரசிக்கொண்டு அவளது உடலை சுட்டது. இருந்தும் அவன் படுத்திருந்த கோலம் அவள் மனதை நெருட….. அவன் பக்கம் முழுதாக திரும்பி.
“என்னாச்சி.. ஆதி இங்க ஏன் படுக்கிறீங்க”என்றாள். அவனது கேசத்தை கையால் அளந்துக்கொண்டு அதில் ஆதியின் உடல் நெகிழ்ந்து போனது தன்னவளின் அருகாமை அவனையும் பித்தம் கொள்ள செய்தது தான். ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.. அவளின் முகத்தை பார்க்க முகம் சிவந்து போய் இருந்தது அவன் அருகாமையில்.
ஆதி அவளின் முகமாற்றத்தை ரசித்தவாறே…“ஏஞ்சல் நா மட்டும் தனியா படுத்ததில்லை தாத்தூ தான் நா தூங்குற வர பக்கத்துல படுத்துருப்பாங்க……எனக்கு இருட்டுனா பயம் தாத்தூ இன்னிக்கி என்னை இங்க தூங்க சொல்லிட்டாங்க…. ஆனா நீ என்னை தனியா விட்டுட்டு இங்க படுத்துட்ட……”என்றான் அவள் புடவை நுனியை கையில் சுருக்கிக்கொண்டு…
“ஓஓ….சாரி ஆதி.. எனக்கு தெரியாதுல.. நா நெனைச்சேன் ஆதி ரொம்ப தைரியமானவருனு.. அதா நா இங்க படுத்தேன்….சரி அப்போ வாங்க மேல நா நீங்க தூங்குற வர உங்க பக்கத்துலயே இருக்கேன்”என்று ஆஸ்வதி எழ… “நா தைரியமானவன் தான் ஏஞ்சல்.. ஆனா எனக்கு இருட்டு, டாக், அப்புறம் பேய்னா தான் பயம்.”என்றான் உதட்டை சுருக்கியவாறு அதில் ஆஸ்வதி இவ்வளவு நேரம் இருந்த யோசனையை கைவிட்டு அவனை பார்த்து காதலாக சிரித்தாள்.. அதில் ஆதியின் முகம் சற்று இறுகி பின் இளகியது.பின் அவன் உட்கார்ந்தவாறே அவளை தூக்கி விடுமாறு கை நீட்ட…..அவளும் புன்னகையுடன் அவன் கையை பிடித்து தூக்கிவிட்டாள். அவனும் சிறுபிள்ளை போல கோணலாக ஒரு சிரிப்பை சிந்திவிட்டு எழுந்தான்…
பின் அவனை மேலே படுக்க வைத்து அவன் அருகில் உட்கார்ந்து தட்டிக்கொடுத்தாள். அவன் வெகுநேரம் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான். இதில் என்னவென்றால் இருவரின் கைகளும் இன்னும் இணைந்து தான் இருந்தது.. ஆனால் அதனை இருவரும் உணர வில்லை.. பின் சிறிது நேரத்தில் ஆதி கண்கள் தானாக சொக்கியது அவளின் அருகாமை அது அவனுக்கு நிம்மதியாக இருந்ததோ என்னமோ நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டான் ஆஸ்வதி உட்கார்ந்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்..
ஒரே நாளில் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதை நினைத்து ஆஸ்வதி ஒரு பெருமூச்சை மட்டுமே விட முடிந்தது…அதும் ஆதியை நினைத்து.. அவன் ஏன் இப்படி உள்ளான் எதனால் இப்படி இருக்கிறான். . இந்த வீட்டுல அவனை ஏன் எல்லாரும் ஒரு மாறியே நடத்துறாங்க…. இங்க என்னமோ ஒன்னு சரி இல்ல…. என்ன ஆனாலும் சரி நா உங்களுக்கு எதும் ஆக விடமாட்டேன். என்று ஆதியை பார்த்தவாறே சொல்ல…..பின் யோசனையாக அவளுக்கு இங்கு எதோ சரியில்லாததை போல் தான் தோன்றியது அதும் கீழே சாப்பிடும் போதும் அவளை அனைவரும் பார்த்த பார்வையில் எதோ ஒன்று என்ன அது.. அதும் தன் கணவனை அவர்கள் பார்க்கும் பார்வையில் துளியும் அன்பு, பாசம், எதுமே இல்லயே…“என்று அவளிடமே மானசிகமாக பேசிக்கொண்டு இருந்தாள்.. சிறிது நேரத்தில் அவளும் அவன் மீதே சாய்ந்து உறங்கிவிட்டாள்
நடுனிசி 2 மணி இருக்கும். நன்றாக உறங்கிக்கொண்டு இருந்த ஆஸ்வதிக்கு தண்ணீர் தாகத்தால் விழிப்பு வர எழுந்து அமர்ந்தாள்.. அப்போது தான் தான் ஆதி பேட்டுலயே படுத்துவிட்டதை நினைத்து தலையில் அடித்துக்கொண்டு. ஆதியை திரும்பி பார்த்தாள்.. ஆனால் அவன் அங்கு இல்லை. “எங்க போனாங்க இந்த நேரத்துல”என்று யோசித்தவாறு பாத்ரூம் அறையில் இருப்பாறோ என்று தள்ளிப்பார்க்க அதும் உடனே திறந்துக்கொண்டது…அங்கு அவன் இல்லை.”இங்கையும் இல்லையே எங்க போய் இருப்பாரு”என்று யோசித்தவாறு அறையை விட்டு வெளியில் வந்தாள்..
அப்போது ஆஸ்வதி இருட்டில் யாரோ ஒரு முரட்டு உருவத்தின் பிடியில் வலுவாக சிக்கிக்கொண்டு இருந்தாள்..

(வருவாள்…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உயிர் போல காப்பேன்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!