சீதளம் 13
மோதிரத்தை கையில் வாங்கிய மணமக்களும் புன்னகையோடு ஒருவர் கையில் மற்றொருவர் மாற்றிக்கொள்ள அங்கு சுற்றி இருந்த அனைவருமே அவர்கள் மேல் மலர் தூவி வாழ்த்தினார்கள்.
அப்பொழுது தான் மேகா ஒன்றை கவனித்தாள்.
தன்னை ஏதோ இறுக்கமாக பிடித்துக் இருப்பது போல் இருக்க குனிந்து பார்த்தவளோ திகைத்துப் போனாள்.
‘ தான் இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தோம்’ என்று நினைத்தாள்.
ஆம் வேந்தன் உடைய கைச்சிறைக்குள் அவனை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். ‘நான் எப்படி இந்த ஏலியன் கைக்குள்’ என்று யோசித்துப் பார்த்தவளோ ஐயோ என்று தன் தலையில் அடித்து கொண்டாள்.
ஆம் வேந்தன் சக்தியிடம் பேசிக்கொண்டு உள்ளே வரும் பொழுது சரியாக கதிரவன் மேகாவை அடிக்க கை ஓங்க, அவள் மேல் அடி விழுந்து விடக் கூடாது என்று நினைத்தவன், மிக விரைவாக அவள் அருகே வந்து அவளை தன்னுடைய கைக்குள் சுருட்டி கொண்டான் பாதுகாப்பாக.
அது என்னவோ அந்த பிரச்சனை முடிந்த பொழுதும் கூட அவளை தன்னுடைய பிடியிலிருந்து விலகாமல் வைத்திருக்க, அவளும் தான் ஒரு ஆணினுடைய கைக்குள் பந்தமாக அடங்கி கொண்டிருக்கிறோம் என்பது கூட தெரியாமலே இவ்வளவு நேரம் நின்றிருந்தவளுக்கு சற்று அசௌகரியமாக தோன்றவே தன்னை குனிந்து பார்த்தாள்.
மீண்டும் அவனை ஏறிட்டு பார்க்க அவனோ அவள் பார்ப்பதை கூட கவனிக்காமல் இன்னும் அவளை இறுக்கமாகவே தன்னுடன் பிடித்துக் கொண்டான் எங்கே தன்னுடைய கைச்சிறையை விட்டு அவள் வெளியே போனால் அவளுக்கு பாதுகாப்பு இல்லையோ என்று நினைத்தான் போல. தன்னுடைய பிடியை மட்டும் தளர்த்தவே இல்லை.
அவனுடைய பிடி மேலும் மேலும் இறுகிக் கொண்டே போக மேகாவோ தங்களையும் தங்களை சுற்றி இருக்கிறவர்களையும் ஒரு கணம் பார்த்தாள்.
அங்கு அனைவரின் பார்வையும் புது தம்பதிகளின் மேலே இருக்க இவர்களை யாரும் பார்க்கவில்லை.
‘ அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டவள் அவன் முகம் நோக்கி அண்ணாந்து பார்த்தவள் அவனுக்கு மட்டும் கேட்கும் பொருட்டு அவனை மெதுவாகவே அழைத்தாள்.
“ ஓய் ஏலியன்”
வேந்தனோ மேகாவின் குரல் தன் செவியல் வெல அவள் முகத்தை நோக்கி அவன் தன் சிரசை சற்று தாழ்த்த, இருவருடைய முகமும் உரச சற்றே இடைவெளி இருந்தது.
அவளுடைய முகத்தை மிக அருகில் பார்த்த வேந்தனோ தடுமாற ஆரம்பித்தான்.
ஆனாலும் தன்னுடைய தடுமாற்றத்தை அவளிடம் காட்டிக்க கூடாது என்றும் நினைத்துக் கொண்டான்.
இவனுடைய இந்த தடுமாற்றம் ஒருவேளை, ஒரு வேளை அவளுக்கு தெரிய வந்தால் ரொம்ப சீன் போடுவாள். ஏற்கனவே தான் பெரிய உலக அழகி என்ற நினைப்பு வேற இதில் எது வேறு அவளுக்கு தெரிய வந்தால் அவ்வளவுதான் வேண்டாம் சாமி என்று சடுதியில் எடுத்த முடிவோடு அவளுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்தவன்,
“ என்ன?” என்று கேட்டான்.
‘ என்னவா கொப்பன் மகனே இவனை என்ன செய்யலாம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவனை முறைத்து பார்த்தவள்,
“ என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க நீங்க கையை எடுங்க முதல்ல”
என்று சொன்னாள்.
அவனுக்கோ அப்பொழுதுதான் நினைவு வந்தது.
இவ்வளவு நேரமும் அவளை தன்னுடைய கைக்குள்ளே வைத்துக் கொண்டு இருந்தது.
ஆனாலும் அவள் சொன்னதும் தான் கையெடுக்க வேண்டுமா.
இவ்வளவு நேரமும் அவளும் தானே தன்னுடன் ஒட்டிக்கொண்டிருந்தாள்.
இன்னும் சிறிது நேரம் இருக்கட்டும் என்று நினைத்தவன்,
“ ஏன் நல்ல தானே இருக்க எதுக்கு எடுக்கணும்” என்று கேட்க அவளோ தங்களை சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“ யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க ஒழுங்கா கையை எடுங்க” என்று தன்னுடைய கையால் அவனுடைய கையை தன் உடலில் இருந்து பிரித்தெடுக்க முயற்சித்தாள்.
ஆனால் சிறிது கூட அவளால் அசைக்க முடியவில்லை.
“ஒரு இன்ச் கூட நகர மாட்டேங்குது” என்று புலம்பியவளை பார்த்து சிரித்தவன்,
“ சரி சரி போனா போகட்டும்னு விடுறேன்” என்றவாரு அவளை விடுவித்தான் வேந்தன்.
அவனிடமிருந்து சற்று விலகியவள் அவன் பிடித்திருந்த இடத்தை பார்க்க, அய்யோ பாவம் அதுவோ ஏற்கனவே அவளுடைய சிவந்த மேனியில் அவனுடைய கைத்தடங்கள் செந்நிறமாக தன்னுடைய தடத்தை பதித்திருந்தன.
அதை பார்த்தவளுக்கோ வேந்தனின் மீது கோபம் வர அவன் புறம் திரும்பி அவனை முறைத்துப் பார்த்தவள்,
“உங்க மனசுல நீங்க என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க இப்படியா கைத்தடம் விழுகிற அளவுக்கு இறுக்கி பிடிப்பீங்க. அன்னைக்கு என்னடான்னா என் இடுப்புலையும் தடம் படுற அளவுக்கு இறுக்கி புடிச்சீங்க எப்படி வலிச்சது தெரியுமா. அந்த காயம் கூட இன்னும் மாறல அதுக்குள்ள இன்னொரு அடையாளமா” என்று அவனை மெதுவாக திட்டிக் கொண்டிருக்க, அவளுடைய பேச்சில் சுவாரசியம் அடைந்த வேந்தனோ அவளைப் போலவே மெதுவாக,
“ என்னது அன்னைக்கு பிடிச்சதும் காயம் ஆயிட்டா இன்னும் இருக்கா அந்த காயம் எங்க காட்டு பாப்போம்” என்று பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் கேட்க,
அவளோ அவனுடைய எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் அவன் உண்மையாகத்தான் தன் மேல் பாவப்பட்டு கேட்கிறான் என்று நினைத்து,
“ ஆமா இங்க பாருங்க இன்னும் அந்த காயம் போகல” என்று தன்னுடைய இடுப்பை காட்டினாள்.
அவனுக்கோ அவளுடைய இடுப்பை பார்த்ததும் அதை தொட்டுப் பார்க்க கைகள் பரபரத்தன.
சட்டென உயிர பார்த்த தன்னுடைய கரத்தை மடக்கி அடக்கி கொண்டவன், “அச்சச்சோ பாவம் இப்படி செவந்து போயிருச்சே நான் வேணா மருந்து போட்டு விடவா” என்று அவன் இராகமாக கேட்க அவளும்,
“ இதுதான் உங்க ஊரு வழக்கமா செய்கிறதையும் செஞ்சுட்டு அதுக்கு நீங்களே மறந்து வேற போட்டு விடுவீங்களா ஒன்னும் தேவையில்லை” என்று சொன்னாள்.
“ அப்படியெல்லாம் இல்லை இங்க என்னாலதான காயம் பட்டுச்சு அதான் நானே மருந்து போட்டு விடலாம்னு” என்று அவளுடைய இடையில் தொடப்போக அவனுடைய எண்ணத்தை இப்பொழுது புரிந்து கொண்டவள் சட்டென அவனுடைய கையில் ஒரு அடி போட்டு,
“ ஆசை தோசை சரியான ஆளுதான் நீங்க. கொஞ்ச நேரத்துல நானே என்ன செய்றேன்னு மறந்துட்டேன் நீங்க மருந்தெல்லாம் எப்படி போடுவீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கு வேற ஆளை பாருங்க” என்றவள் அவன் அருகில் இருந்து பூங்கொடியின் அருகில் வந்து நின்று கொண்டாள்.
அவனோ அவளிடம் வம்பு இழுத்ததை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க அவன் முன்னே வந்து நின்றான் சக்தி.
“ஏன்டா நீ பண்றதெல்லாம் பார்த்தா உனக்கே நல்லா இருக்கா. கேட்டா லவ் இல்லைன்னு சொல்ற. ஆனா நீ பண்ற வேலை எல்லாம், என்னடா இது” என்று அவனை முறைத்தவாறே கேட்க,
அவனோ குறும்பு புன்னகையோடு அவனைப் பார்த்தவன் அவனுடைய தோளில் கைவைத்து,
“ இதுவரைக்கும் இல்ல மச்சான் ஆனா இனி பண்ணலாம்னு தோணுது நீ என்ன சொல்ற” என்று பதில் இவனுக்கு கூறினாலும் அவனுடைய பார்வை என்னவோ மேகாவின் மேல் இருக்க, சக்தியோ அவனை மேலும் கேளும் பார்த்தவன்,
“ இந்தப் பொழப்புக்கு.. ஏன்டா இதை முதல்லயே சொல்ல வேண்டியது தானடா நீ பாக்குற பார்வை பார்த்து தான் நானே கண்டுபிடிச்சிட்டேனே. மொஷப் படிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாது” என்று சக்தி சொல்ல,
“ சரி சரி விட்றா மச்சான். சரியான திமிர் பிடிச்சா பொண்ணா இருப்பா போல இருக்குடா.. நமக்கு இது சரியா வருமா அப்படின்னு யோசிச்சேன் ஆனா நமக்கு ஏத்த ஆள் தான் டா” என்று வேந்தன் சொன்னான்.
சின்னச்சாமியோ செல்வரத்தினத்திடம் கையெடுத்து கும்பிட்டவர்,
“ ஐயா ரொம்ப நன்றிங்க நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிஞ்சது உங்க புண்ணியத்துல. அந்த கதிர் பையன் பண்ண பிரச்சனையில எங்க நிச்சயதார்த்தம் நடக்காம போயிருமோன்னு ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன். என் பொண்ணோட வாழ்க்கை என்னாகும்ன்னு ரொம்ப பயமா இருந்துச்சு. நல்ல வேலை இந்த பொண்ணாலும் உங்க பையனாலையும் அந்த பிரச்சனை முடிஞ்சு போச்சு” என்றவர் மேகாவின் தலையை வருடி விட்டார்.
“அட என்ன சின்னச்சாமி நீ அப்படியெல்லாம் விட்டுருவோமா அந்த பயல பத்தி தான் தெரியுமே. அவன் என்ன சொன்னாலும் நாங்க நம்பிருவோமா. நடந்தது நினைச்சு கவலைப்படாம இனி நடக்க போறத நல்லபடியா செய். உனக்கு என்ன உதவி வேணாலும் என்கிட்ட தயங்காம கேளு. நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு கல்யாணத்தை எப்ப வைக்க போற” என்று செல்வரத்தினம் கேட்க அதற்கு சின்னச்சாமியும்,
“ இன்னும் ஒரு மாசத்துல பொண்ணுக்கு படிப்பு முடியுது ஐயா அதுக்கப்புறம் கல்யாணத்தை வைக்கலாமுன்னு இருக்கிறேன். கண்டிப்பா அதுக்கும் நீங்கதான் முன்னே இருந்து தாலி எடுத்து கொடுத்து கல்யாணத்தை நல்லபடியா நடத்தி கொடுக்கணும்” என்றார்.
செல்வரத்தினமோ,
“ அதுக்கு என்னப்பா நல்லபடி செஞ்சு முடிச்சிடலாம்” என்றவர் மேகாவை பார்த்து,
“ அம்மாடி சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் உண்மையை தைரியமா பேசணம்மா நீ.. உன்னோட இந்த தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார்.
அதற்கு மேகாவோ லேசாக புன்னகைத்தவன்,
“ ரொம்ப நன்றி அங்கிள்” என்றாள். “சரிங்கய்யா வாங்க சாப்பிட போகலாம்” என்று சின்னச்சாமி செல்வரத்தினத்தின் குடும்பத்தை சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்றார்.
இங்கு தங்களுடைய காட்டு பங்களாவிற்கு வந்த கதிரவனோ ரகுவந்தனை வரச் சொன்னவன் இங்கு நிச்சயதார்த்த வீட்டில் நடந்ததை கூறினான்.
“ என்னடா மாப்பிள்ளை இப்படி நடந்துட்டா நம்ம ஒரு பிளான் போட்டா அந்த வெளியூர் காரப்பிள்ளை இப்படி எல்லாத்தையும் பாழாக்கிட்டாளே. நீ சொன்னதை அங்கிருந்த ஒருத்தர் கூட வாடா நம்பல”
“ ஆமாடா நான் போட்டோ காட்டியும் கூட ஒருத்தரும் நம்பல ஏன்னா அந்த போட்டோ பொய்யின்னு அந்த பூங்கொடியோட ஃப்ரெண்டுக்காரி அத்தனை பேர் முன்னாடியும் போட்டு உடைச்சிட்டா”
“ அந்த போட்டோ பொய்யின்னு அவளுக்கு எப்படிடா தெரியும்”
“ டேய் டேய் அந்த பொண்ணு பட்டணத்துல படிச்ச புள்ள டா நம்ம ஊரு ஆட்கள் மாதிரி எதுவும் தெரியாதவ இல்ல அந்த போட்டோ டூப்ளிகேட்ன்னு அவ்வளத்தையும் சொல்லிட்டா டா. இதுல அந்த வேந்தன் வேற என்ன அடிச்சிட்டான். ரொம்ப அசிங்கமா போயிருச்சு அத்தனை பேரும் முன்னாடியும்”
“ சரி விடுடா மாப்ள கவலைப்படாதே, யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதான்னு சொல்லுவாங்க. காத்து இப்ப அவங்க பக்கம் வீசுது அவங்க ஆடுகிறாங்க நமக்குன்னு ஒரு நேரம் வரும் அப்ப பாத்துக்கலாம் அவங்களை” என்றான் ரகுவந்தன்.
Lovlyyyyyyyyyy ❤️❤️❤️