தணலின் சீதளம் 15

4.4
(12)

சீதளம் 15

“அடியே மேகா நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா வேந்தன் அண்ணா பொருத்தமா இருப்பாரு. உனக்கு ரொம்ப பிடிச்ச வீரா கூட அங்க தான் இருக்கு. ஒரு கல்லுல ரெண்டு மாங்கா எப்படி உனக்கு ஓகேவா”
“பைத்தியமாடி பிடிச்சிருக்கு உனக்கு வீராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். அதுக்காக அந்த ஏலியனை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா” என்று அவள் சொல்ல அப்பொழுது அவ்வழியை கடந்து வந்த வேந்தன் மேகாவின் கண்ணில் விழ அவனை வம்பிழுக்கும் பொருட்டு அவனை அழைத்தாள்.
“ஓய் ஏலியன் என்ன இந்த பக்கம் பொம்பளைங்க குளிக்கிறது கணக்கு தெரியலையா நீங்க பாட்டுக்கு வாரிங்க” என்றாள் மேகா.
அவனோ,
“பொம்பளைங்க குளிக்கிறார்களா யாரு என் கணக்கு அப்படி யாரும் தெரியலையே”
“ யோவ் என்ன விளையாடுறியா என்னைய பார்த்தா பொம்பள மாதிரி தெரியலையா”
அதற்கு கலகலவென்று சிரித்த வேந்தனோ,
“ யாரு நீ பொம்பளையா நீ தான் ஆம்பளைக்கு சரிக்கு சமமா நின்னு சண்டை போடுவியே உன்னைய பார்த்தா எனக்கு பொம்பளை மாதிரியே தோணல. அது சரி மாடுகளை குளிப்பாட்டுற இடத்துல பொம்பள நீ எதுக்குமா குளிக்கிற” என்று கேட்க சட்டென அவனைப் பூங்கொடி திரும்பி பார்க்க அவளை கண்ணை காட்டி விட்டான் வேந்தன்.
“எது மாடுகளை குளிப்பாட்டுற இடமா ஓய் பொய் சொல்லாதீங்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. ஏன் பூங்கொடி நீ சொல்லு இது மாடுகளை குளிப்பாட்டுற இடமா இல்ல தானே” “இல்ல மேகா மாடுகளையும் குளிப்பாட்டுவாங்க” என்று சொன்னாள். “ஏய் பூங்கொடி என்னடி நீயும் இந்த ஆளு கூட சேர்ந்துட்டியா நாம இங்க வந்ததிலிருந்து இதுல தான் குளிக்கிறோம். ஆனால் நீ அப்படி எதுவும் சொல்லவே இல்லையே”
“ நீ கேட்கவே இல்லையே மேகா அதுவும் போக ஆடு மாடுகளையும் ஒரு பக்கம் குளிப்பாட்டுவாங்க இன்னொரு பக்கம் ஆளுங்களும் குளிப்பாங்க இதுல என்ன இருக்கு அப்படின்னு நானும் ஒன்னும் சொல்லல” அதற்கு வேந்தனோ,
“ சரி நாங்க சொல்றத தான் நீ நம்பல வீரா சொன்னாலுமா நீ நம்ப மாட்ட. என்ன வீரா நீ சொல்லு ஆமா தானே” என்று வீராவிடம் கேட்க,
அதுவும் ஆம் என்பது போல தன் தலையை மேலும் கீழும் ஆட்டியது.
அதைப் பார்த்ததும் மேகாவுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை.
என்ன தான் இத்தனை நாள் இங்கு வந்து குளித்தது ஆடு மாடுகள் குளிப்பாட்டும் இங்கையா என்று நினைத்தவளுக்கும் எங்கு சென்று முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.
உடனே ஆற்றில் இருந்து வெளியே வந்தாள்.
ஒரு உள்பாவாடையை மார்பு வரை கட்டி இருந்தாள்.
தண்ணீரிலிருந்து வெளியே வந்ததால் அவள் உடுத்திருந்த அந்த ஒற்றை ஆடையோ அவள் உடலோடு ஒட்டி அவளுடைய பெண்மையின் வனப்பை அழகாகவும் கவர்ச்சியாகவும் வெளிக்காட்டியது.
அவளை அந்தக் கோலத்தில் பார்த்த வேந்தனுக்கோ மூச்சடைத்து போனது.
சட்டென தன்னுடைய தலையை கீழே சாய்த்து கொண்டான்.
வெளியே வந்தவள் தான் கொண்டு வந்திருந்த ஆடைகளில் துவாளையை எடுத்து தன்னை போர்த்திக் கொண்டவள் பூங்கொடியே அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை கடந்து போனதும்,
“ஹப்பா என்ன பொண்ணுடா வேந்தா கொடுத்து வச்சவன்டா நீ” என்று தன்னையே பாராட்டிக் கொண்டவன்,
“யாருகிட்ட என்னையவே சீண்டி பாக்குறியா எப்படி ஓட வச்சேன்” என்று சொல்லி சிரித்தவன் தன்னுடைய வேலையை பார்க்க புறப்பட்டான்.
மறுநாள் ஒரு வாரம் லீவு முடிந்து பூங்கொடியும் மேகாவும் தாங்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்றார்கள்.
பூங்கொடி அங்கு ஹாஸ்டலில் தான் தங்கி படிக்கிறாள்.
இவளும் அவளுடன் ஹாஸ்டலில் தான் தங்கி படிக்கிறாள்.
ஆனால் பாதிநாள் அவள் வீட்டில், பாதி நாள் ஹாஸ்டல்.
அவள் படிக்கும் கல்லூரி அவளுடைய அப்பாவின் நண்பர் உடையது.
அதனால் அவளுக்கு அந்த கல்லூரியில் கொஞ்சம் சலுகைகளும் இருந்தன .
அவளுடைய அப்பாவிற்கு தன் பெண்ணை ஒரு பெரிய மருத்துவராக ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவளும் அவருடைய ஆசையை நிறைவேற்றினால் தான். ஆனால் பாதி தான்.
அவள் அப்பா ஆசைப்பட்ட மாதிரி டாக்டராகவும் அவளுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தனக்கு விளங்குகள் பிடித்ததால் வெட்னரி டாக்டராகவும் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு தன் அன்னையின் சமையல் மிகவும் பிடிக்கும்.
அதனால் மாதத்தில் பாதி நாட்கள் வீட்டிற்கு வந்து விடுவாள்.
தான் செல்லும்போதெல்லாம் பூங்கொடியையும் தன்னுடன் வருமாறு அழைப்பாள்.
பூங்கொடியோ முதல் இரண்டு முறை அவளுடன் அங்கு சென்றாள்.
அங்கு அவள் வீட்டின் ஆடம்பரத்தை பார்த்து அதன் பிறகு அவள் அங்கு செல்வதை நிறுத்தி விட்டாள்.
மேகா எவ்வளவோ அவளை அழைத்துப் பார்த்தாள்.
ஆனால் பூங்கொடியோ,
“ இல்லடி என்னால அங்க வர முடியாது நீ வேனா போயிட்டு வா என்ன கம்பெல் பண்ணாத”
“ ஏண்டி நான் எங்க வீட்டுக்கு தான கூப்பிடுறேன் ஏதோ உன்ன ஆளில்லாத காட்டுக்குள்ள கூட்டிட்டு போற மாதிரி இப்படி பயப்படுற”
“ அப்படி இல்லடி மேகா என்னால அங்க நார்மலா இருக்க முடியல ஒரு மாதிரி அன் கம்பர்ட்டபிளா ஃபீல் ஆகுது அதான் நான் வரலைன்னு சொல்றேன் நீ போயிட்டு வா” என்றாள்.
அவள் அவ்வளவு சொல்லியும் அதையும் மீறி மேகா எவ்வளவோ வற்புறுத்தி பார்த்தாள்.
ஆனால் பூங்கொடிதான் முடிவாக தான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தான் எவ்வளவு அழைத்தாலும் பூங்கொடி தன்னுடன் வரமாட்டாள் என்று தெரிந்த பிறகு அவளுக்காக மேகா தன் அன்னையின் கையால் செய்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பாள்.
இங்கு வேந்தன் வீட்டிலோ சென்னைக்கு சென்றவர்கள் இப்பொழுதுதான் வீடு திரும்பினார்கள்.
அவர்கள் வந்ததும் அறிவழகியோ ஆர்வமாக அவர்கள் அருகில் வந்தவள்,
“ அப்பத்தா என்னாச்சு எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதா” என்று அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக கேட்டாள்.
அன்னலட்சுமியோ,
“ அறிவு இப்பதான வந்தோம் கொஞ்சம் இருமா அப்புறம் சொல்றோம் ரொம்ப சோர்வா இருக்கு டீ போட்டு கொண்டு வரியா” என்றார்.
“ சரிமா” என்றவள் சமையல் அறைக்குள் வந்து அவர்கள் அனைவருக்கும் டீ போட்டுக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவளுடைய மனதோ,
‘ அங்கு என்ன நடந்திருக்கும் தன் அண்ணனுக்கு மேகாவை திருமணம் செய்து வைக்க அவர்கள் சம்மதம் கூறினார்களா’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
பின்பு கையில் டீக்க போடு வந்தவள் அவர்கள் அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவர்கள் குடித்து முடிக்கும் வரைக்கும் பொறுமையாக காத்திருந்தவள் அதன்பிறகு மீண்டும் அவர்களிடம் கேட்டாள்.
“ அம்மா இப்பவாவது சொல்லுங்களேன் அங்கே என்ன நடந்தது. அவங்க சரின்னு சொல்லிட்டாங்களா” என்று ஆவலாக கேட்க, மீண்டும் அன்னலட்சுமியோ,
“ என்ன அறிவு இப்போ உடனே தெரிஞ்சுகிட்டு நீ என்ன செய்யப் போற போய் படிக்கிற வழியை பாரு சும்மா எல்லாத்துலையும் மூக்கை நுழைச்சுக்கிட்டு” என்று திட்டி விட்டார். ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அவளுடைய மலர்ந்த முகமோ தன் அன்னையுனுடைய இந்த வெடுக்கென கூற்றில் அவளுடைய மலர்ந்த முகமோ வாடியது.
பிறகு அங்கு எதையும் கேட்காதவள் எழுந்து தன் அறைக்க சென்று விட்டாள். உள்ளே வந்தவளோ,
“ இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு அம்மா இப்படி கோவப்படுறாங்க. அம்மா இப்படி கோபப்படுறவங்க இல்லையே ஆனா இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி கோபப்படுறாங்க என்ன நடந்திருக்கும். வர வழியில ஏதாவது பிரச்சனையா இருக்குமோ அதான் அம்மா இப்படி கோபப்படுறாங்கன்னு நினைக்கிறேன் சரி கொஞ்ச நேரம் கழிச்சு கேட்போம்” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்த வேலனோ சென்னைக்கு போன தன்னுடைய தந்தை தாய் அப்பத்தா மூவரும் வீட்டில் அமர்ந்திருக்க அவர்களைப் பார்த்தவன் புன்னகை முகமாய் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து,
“ என்னப்பா நண்பனோட பொண்ணு கல்யாணத்துக்கு போறேன்னு சொன்னீங்க ரெண்டு நாள் கூட முழுசா முடியல அதுக்குள்ள வந்துட்டீங்க. இங்க இருக்கிற வேலைகளை நான்தான் பார்த்துக்கிறேன்னு சொன்னேனே. அதுக்குள்ள ஏன் பா சீக்கிரம் வந்தீங்க இன்னும் ஒரு ரெண்டு நாள் அங்கு இருந்து உங்க தோழன் கூட இருந்துட்டு வந்திருக்கலாமே” என்று கேட்டான். செல்வரத்தினமோ,
“ என்னப்பா அவன் பொண்ணுக்கு கல்யாணத்தை வச்சிருக்கான் எவ்வளவு வேலை இருக்கும் அத விட்டுட்டு என் கூட பேசுறதுக்கா அவளுக்கு நேரம் இருக்கும். அதான் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க உடனே கிளம்பிட்டோம்” என்றார்.
“அட ஆமா இல்ல நானும் அதை மறந்தே போயிட்டேன்”
என்று சொன்னவன் சிறிது நேரம் அவர்களுடன் பேசி விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான் வேந்தன்.
“இந்த அற லூசு எங்க போச்சு நாலு நாளா நம்ம கண்ணுலையே சிக்க மாட்டேங்குறாளே ஒருவேளை ஊருக்கு போயிட்டாளோ” என்று தன்னுடைய தங்கையை காலேஜில் விட்டுவிட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தவனுடைய யோசனையோ மேகாவின் பக்கம் சென்றது.
அங்கு இவன் செல்வதை பார்த்த ஊர் மக்கள் சில பேரோ இவனைப் பார்த்து பக்கத்தில் இருப்பவரிடம் குசு குசு என்று பேசினார்கள்.
இவனோ அதை கண்டு கொண்டவன்,
‘ என்ன இது எதுக்கு எல்லாரும் நம்மள ஒரு மாதிரி பாக்குறாங்க அதுவும் போக நம்மள பாத்துட்டு குசு குசுன்னு வேற பேசுறாங்க என்னவா இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டு வந்தவனை ஒரு நடுத்தர வயது பெண்மணி அவனுடைய வண்டியை மறித்து,
“ ஐயா மனசுல எதுவும் வச்சிக்காதையா எல்லாம் நல்லபடியா நடக்கும் இந்த பொண்ணு இல்லனா ஊர் உலகத்துல வேற பொண்ணே இல்லையா” என்று அவனுக்கு ஆறுதல் சொல்ல, அவனுக்கோ தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
அந்த அம்மாவிடம் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்க, அவர் சொல்ல வருவதற்குள் இன்னொரு ஏளனமான ஒரு குரலில் அவனுடைய செவிக்கு வந்தடைந்தது அந்த வார்த்தைகள்.
அதைக் கேட்ட அந்த ஆறடி ஆண் மகனுக்கோ கண்கள் சிவப்பேர ருத்ர மூர்த்தியாக நின்றான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!