தணலின் சீதளம் 16

4.8
(11)

சீதளம் 16

“நீங்க என்னமா சொல்றீங்க எனக்கு எதுவும் புரியலையே” என்று அந்த அம்மாவிடம் வேந்தன் கேட்க, அப்பொழுது தன்னுடைய கரங்களை தட்டியவாறு அவன் முன்னே வந்த கதிரோ,
* அது எப்படி உனக்கு புரியும் யாருக்கும் தெரியாம அங்க போய் அசிங்கப்பட்டதை இங்க விம் வச்சு விளக்கவா முடியும். சரியான கேடி தாண்டா நீ அப்படியே முழு பூசணிக்காவ சோத்துக்குள்ள மறைச்ச மாதிரி ஒண்ணுமே தெரியாத மாதிரி பில்டப் பண்ற”
அவனுடைய ஏளனமாக பார்க்கும் அந்த பார்வையை பார்க்க வேந்தனுக்கோ சுல் என கோபம் வந்தது.
தன்னுடைய பற்களை கடித்து கொண்டு, “நான் என்னத்தடா மறச்சேன் எது பேசறதா இருந்தாலும் நேருக்கு நேரா பேசு” என்றான் அடக்கபட்ட கோபத்துடன்.
“இங்க பாருடா நம்ம மைனருக்கு கோபம் எல்லாம் வருது. அது எப்படிடா அவ்ளோ தூரம் அங்க அசிங்கப்பட்டு வந்து இங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி ஊருக்கு வெளி வேஷம் போடுறியா” என்று
அவன் மீண்டும் சொல்ல, இங்கு வேந்தனுக்கோ அடக்கி வைத்திருந்த கோபம் எங்கோ பறந்து போனது.
சட்டென தன்னுடைய வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டியவன் வேகமாக இறங்கி வந்து அவனுடைய காலரை கொத்தாக பிடித்தவன்,
“ டேய் மய** நான் என்னத்தடா மறச்சேன் எது செய்யறதா இருந்தாலும் எது சொல்றதா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா சொல்றதும் நேருக்கு நேரா செய்யறது தான் என்னோட பழக்கம் பொண்ணு மாதிரி இப்படி பொடி வச்ச பேசுறதும் மறைஞ்சி நின்னு செய்யறதும் என்னோட பழக்கம் கிடையாது. அது நீ செய்ற வேலை. இதுல நீ என்ன பத்தி குறை சொல்ல வந்துட்டியா ஒழுங்கா ஓடிப் போயிடு இருக்குற கோவத்துல மூஞ்சி முகரை எல்லாம் உடைச்சு விட்டுருவேன்” என்றவன் அவனுடைய காலரை விட்டுவிட்டு நகர போக கதிரோ,
“ அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுடுவேனா இரு மாப்ள என்னன்னு சொல்றேன்”
“ டேய் யாருக்கு யாருடா மாப்ள” என்று வேந்தன் சண்டைக்கு வர கதிரோ,
“ அட இருப்பா சும்மா சும்மா கோபப்பட்டுக்கிட்டு இந்த கோபத்தை அங்க பொண்ணு வீட்ல அசிங்கப்படும்போது காட்டி இருக்கலாமே”
“ டேய் வெண்ண நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் உனக்கு நேரடியா என்ன விஷயம்னு சொல்ல தெரியாதா அப்படி சொல்ல தெரியலனா மூடிக்கிட்டு போ சும்மா என் நேரத்தை வீணடிக்காத” “இன்னுமா உனக்கு புரியல நேத்து சென்னைக்கு பொண்ணு பார்க்க போய் அசிங்கப்பட்டு வந்த உன் குடும்பம் உன் கிட்ட சொல்லலையா, இல்ல உனக்கு தெரியாத மாதிரி நடிக்கிறியா” என்று ஏளனமாக கேட்டான் கதிரவன்.
அதைக் கேட்ட வேந்தனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
‘ என் அப்பா சென்னைக்கு போனது அவருடைய நண்பரின் மகள் கல்யாணத்துக்கு இவன் என்ன வேறு ஏதோ சொல்கிறான். இருந்தாலும் நேற்று அவர்கள் அங்கிருந்து வந்ததிலிருந்து அவர்களின் முகம் கூட சரியில்லையே. இவன் சொல்வதற்கும் அதுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமோ’ என்று வேந்தன் சிந்தித்துக் கொண்டிருக்க, அவன் முகத்தின் முன்னால் சொடக்கு போட்டு அழைத்த கதிரோ அவனுடைய கவனம் தன் புறம் திரும்பவும்,
“ என்ன மாப்ள இப்ப ஞாபகம் வந்ததா ஏன்டா உன் மூஞ்சிய கண்ணாடில எல்லாம் பார்க்க மாட்டியா உன் மூஞ்சிக்கு சென்னை பொண்ணு கேக்குது அதுவும் டாக்டர் பொண்ணு. இல்ல எனக்கு புரியல எந்த நம்பிக்கையில உன் குடும்பம் அங்க பொண்ணு கேக்க போனாங்க”
“ டேய் என்னடா உளறிக்கிட்டு இருக்க என் குடும்பம் சென்னைக்கு போனது அப்பாவோட பிரண்டு பொண்ணு கல்யாணத்துக்கு நீ ஏதோ தேவையில்லாத பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்” என்றான் வேந்தன். அதைக்கேட்ட கதிரோ,
“ ஓஓஓ உன் குடும்பம் உன்கிட்ட இப்படி சொல்லி வச்சிருக்க அது சரி நான் கூட உனக்கு தெரிஞ்சி இருந்து தான் தெரியாம நடிக்கிறியோன்னு நினைச்சேன் பரவால்ல உன் குடும்பமே அதை உன்கிட்ட சொல்லலை போல இருக்கு. எப்படி சொல்லுவாங்க அந்த அளவுக்கு இல்ல அவங்க அசிங்கப்பட்டு வந்தாங்க உனக்காக பொண்ணு கேக்க போயி. ஏன்டா பொண்ணு கேக்குறதுக்கும் ஒரு தரா தரம் வேணாம்
உனக்காக அங்க சென்னைக்கு போய் பொண்ணு கேட்டு அந்த ஆளு விவசாயம் பார்க்கிறவனுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்க முடியாதுன்னு அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டது உங்க அப்பா உன்கிட்ட சொல்லல” என்று சொல்ல வேந்தனோ,
“ டேய் என்னடா சொல்ற உன் பாட்டுக்கு உளறிட்டு இருக்காத” என்று அவனுடைய சட்டை காலரை பிடித்தான். அவனுக்கோ இவன் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படியெல்லாம் நடந்து இருக்காது இருக்கவும் கூடாது என்று நினைத்தான்.
கதிரோ ஒரு நக்கல் சிரிப்போடு அதை தட்டி விட்டவன்,
“ உண்மையா இல்லையான்னு நீ உங்க அப்பா கிட்டயே போய் கேளு” என்றான் கதிர்.
“கேட்கிறேன் டா கேட்கிறேன் நீ சொன்னது மட்டும் பொய்யா இருந்துச்சு உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று சொன்னவன் அதே கோபத்தோடு தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான்.
இங்கே கதிரோ வேந்தனை அசிங்கப்படுத்துவதை நினைத்து சந்தோஷப்பட்டவன் அதை கொண்டாடுவதற்கு தன்னுடைய நண்பனுக்கு அழைப்பு எடுத்து சரக்கு பாட்டில்களோடு வருமாறு சொன்னான்.
இங்கு மிகுந்த கோபத்தோடு வீட்டிற்கு வந்த வேந்தனோ வண்டியை வாசலில் நிப்பாட்டி விட்டு வேக வேகமாக உள்ளே வந்தவன் அங்கு நடு ஹாலில் நின்று கொண்டு,
“ அப்பா அம்மா அப்பத்தா” என்று மூவரையும் கத்தி அழைத்தான்.
“ எல்லாரும் எங்க இருக்கீங்க சீக்கிரம் வாங்க” என்று கத்தினான்.
அவனுடைய குரலை கேட்டு அவர்கள் மூவரும் அவன் முன்னே வந்தார்கள்.
அவனுடைய அப்பத்தாவோ,
“ என்ன ராசா” என்று கேட்க அவனோ,
“ அப்பதா இப்ப நான் கேட்க போற கேள்விக்கு நீங்க மூணு பேரும் உண்மையை மட்டும் தான் சொல்லணும் என் கிட்ட பொய் சொல்லணும்னு நினைக்காதீங்க” என்றவன்,
“ நீங்க மூணு பேரும் சென்னைக்கு எதுக்காக போனீங்க?” என்று கோபமாக கேட்க அவர்களுக்கோ அவன் கேட்ட கேள்வியில் தூக்கி வாரி போட்டது. அவனுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று சற்று பயந்தவர்கள்,
“ அதுதான் அன்னைக்கு உன்கிட்ட சொன்னனேப்பா என் பிரண்டோட பொண்ணு கல்யாணத்துக்கு போறோம்னு இப்போ திரும்பவும் நீ தெரியாதது மாதிரி கேட்கிற” என்று சற்று தயக்கமாகவே அவனிடம் சொன்னார் செல்வரத்தினம்.
அதைக் கேட்ட வேந்தனோ அவரை ஒரு மாதிரியாக பார்த்தவன் நேராக அவர் அருகில் வந்து அவருடைய கையை தன் தலையில் வைத்தவன்,
“ அப்பா உண்மையாவே நீங்க சென்னைக்கு போனது உங்க பிரண்டோட பொண்ணு கல்யாணத்துக்கு தானா என் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க” என்று கேட்டான்.
அவரோ அவன் தலையில் உள்ள தன்னுடைய கையை எடுக்க போக அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டவன் அவரை நேர் பார்வையாக பார்த்து,
“ அப்பா எனக்கு உண்மையை மட்டும் சொல்லுங்க எதுக்காக நீங்க சென்னைக்கு போனீங்க” என்று மீண்டும் கேட்டான்.
“அதெல்லாம் வேண்டாம்பா உன்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கமா போனது எங்க தப்பு இதை இப்படியே விட்டுடு பெருசு பண்ணாத பா” என்று அன்னலட்சுமி சொல்ல வேந்தனுக்கோ அப்படி அங்கு என்னதான் நடந்திருக்கும் அம்மா இப்படி மனசு வருத்தப்பட்டு பேசுறாங்க என்று யோசித்தான்.
தங்களுடைய மகனிடம் இதை சொன்னால் அவன் எப்படி தாங்குவான் என்று அவர் தயங்கிக் கொண்டே இருக்க வேந்தனோ பொறுமை இழந்தவன்,
“அப்பா தயவு செஞ்சு நீங்க ஏன் சென்னைக்கு போனீங்கன்னு சொல்லுங்க எனக்கு இப்ப தெரிஞ்சு ஆகணும்” என்றான்.
வேந்தனிடம் தன்னுடைய நண்பனின் மகளுடைய திருமணத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர்கள் பூங்கொடியிடம் மேகாவின் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு அங்கு சென்றார்கள்.
மிகப்பெரிய கேட்டில் ‘சத்யராஜ் இல்லம்’ என்று பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்க அருகில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒரு காவலாளி இருந்தார்.
இவர்களைப் பார்த்ததும் அவர்,
“ யார் சார் நீங்க யார பார்க்கணும்” என்று விசாரிக்க செல்வரத்தினமோ,
“ சத்யராஜ் சார பார்க்கணும்” என்று சொல்ல அவரும்,
“ உங்ககிட்ட அப்பாயின்மென்ட் இருக்கா” என்று கேட்டார் அந்த காவலாளி. “இல்லைங்க அப்படி எதுவும் இல்லை நாங்க மதுரையில் இருந்து வாரோம் கொஞ்சம் அவரை பார்த்து பேசணும்” என்று சொல்ல காவலாளியும்,
“ இல்ல சார் அப்பாயின்மென்ட் இல்லாம யாரையும் சார் பார்க்க மாட்டாங்க நீங்க போங்க” என்றார்.
அப்பொழுது அங்கு கார்டனில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சத்தியராஜ் பேசி முடித்துவிட்டு உள்ளே செல்ல போக அவருடைய காதில் விழுந்தது காவலாளியின் குரலும் செல்வரத்தினத்தின் குரலும்.
உடனே தன்னுடைய காவலாளிக்கு அழைப்பு எடுத்தவர்,
“ என்ன பிரச்சனை” என்று விசாரிக்க,
“ சார் மதுரையில் இருந்து ஒரு குடும்பம் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க அப்பாயின்மென்ட் இருக்கான்னு கேட்டான் இல்லன்னு சொல்றாங்க. அப்பாயின்மென்ட் இல்லாம சாரை பார்க்க முடியாதுன்னு சொல்லி அவங்கள அனுப்பிட்டு இருக்கேன் சார்” என்று அவர் சொல்ல சற்று யோசித்த சத்யராஜ்,
“ இல்ல பரவாயில்ல அவங்களை உள்ள அனுப்பிவிடு” என்றார்.
“ ஓகே சார்” என்று அலைபேசியை வைத்தவர் இவர்களிடம்,
“ நீங்க உள்ள போகலாம் சார் வர சொல்லிட்டாங்க” என்று சொல்ல உடனே வடிவுக்கரசியோ தன் மகனிடம்,
“ ரொம்ப நல்ல மனுஷன் போல வாங்க” என்று சொல்ல அதை ஆமோதித்தார் செல்வரத்தினம்.
“ பின்பு மூவரும் உள்ளே செல்ல அவர்களை இன் முகத்துடனே வரவேற்றார் சத்யராஜ்.
“ வாங்க உட்காருங்க சுபா ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்காங்க அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா” என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லிவிட்டு அவர்களிடம் தன்னை பார்க்க வந்த நோக்கத்தை விசாரித்தார். “வணக்கமுங்க என் பெயர் செல்வரத்தினம். இவங்க என்னோட மனைவி அன்னலட்சுமி அப்புறம் இவங்க என்னோட அம்மா வடிவக்கரசி மதுரை தான் எங்க சொந்த ஊரு. சொந்தமா விவசாயம் செய்கிறோம். எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. பையன் பேரு மதுரவேந்தன் அக்ரிகல்ச்சர் படிச்சிட்டு ஊரிலேயே அவனும் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கான். பொண்ணு இன்ஜினியர் படிச்சிட்டு இருக்கா என்ன விஷயம்னா போன வாரம் எங்க ஊர்ல உங்க பொண்ண பார்த்தோம்.
என் பையனும் உங்க பொண்ணும் விரும்புறாங்க. எங்களுக்கும் உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருந்துச்சு அதான் நேரா உங்க கிட்ட வந்து பொண்ணு கேட்கலாம்ன்னு கிளம்பி வந்துட்டோம் நீங்க என்ன சொல்றீங்க” என்று சுத்தி வளைக்காமல் தாங்கள் வந்த நோக்கத்தை சத்யராஜிடம் மிகத் தெளிவாகவே சொன்னார் செல்வரத்தினம்.
ஆனால் அதற்கு சத்யராஜின் பதில் என்னவாக இருக்கும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!