சீதளம் 17
தங்களுடைய மகனுக்காக பெண் கேட்டு சென்னைக்கு வந்தவர்களோ மேகாவின் தந்தையிடம் மேகாவும் தன் மகன் வேந்தனும் விரும்புவதாகவும் தங்களுக்கும் இதில் முழு சம்மதம் என்றும் கூறியவர்கள் அவருடைய சம்மதத்தை எதிர்பார்க்க, அவரோ திடீரென்று இவர்கள் இப்படி சொல்வதை கேட்டவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இதில் தங்கள் மகளும் விரும்புகிறாள் என்று சொன்னதை குறித்துக் கொண்டவர்,
“ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் இப்ப வந்துடறேன்” என்று அவர்களிடம் சொல்லியவர் தன்னுடைய தொலைபேசியை எடுத்துக்கொண்டு தனியாக சென்றார்.
சென்றவர் அழைத்தது என்னவோ தன்னுடைய மகள் மேகாவிற்கு.
அங்கு ஹாஸ்டலில் தன்னுடைய தோழி பூங்கொடியிடம் பேசிக் கொண்டிருந்தவள் தன்னுடைய தந்தை அழைப்பு எடுக்கவும் போனை எடுத்து ஆன் செய்து,
“ ஹலோ அப்பா சொல்லுங்கப்பா” என்றாள்.
இங்கு சத்யராஜோ,
“ மேகா அப்பா உன்கிட்ட ஒன்னு கேட்பேன் நீ உண்மையை மட்டும் தான் சொல்லணும் சரியா” என்றார்.
“ என்னப்பா இது நான் உங்ககிட்ட எப்ப பொய் சொல்லி இருக்கேன் நீங்க எதுனாலும் கேளுங்க நான் உண்மையை சொல்றேன்” என்றாள்.
அதைக் கேட்டு அவருடைய இதழ்களும் சற்றே புன்னகைத்தது.
மீண்டும் தன்னுடைய மகளிடம் பேச ஆரம்பித்தார்.
“ மேகா நீ யாரையாவது விரும்புறியா” என்று பொதுவாக கேட்டார்.
அவளோ,
“ அப்பா காமெடி பண்றீங்களா இதைக் கேட்கத்தான் போன் பண்ணிங்களா” என்றாள்.
“ இல்லம்மா அப்பா உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன் அதான் நீ யாரையாவது விரும்புறியான்னு உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு எடுக்கலாம்னு இருக்கேன் அதான் கேட்டேன். சொல்லுமா நீ யாரையாவது விரும்புறியா? அப்படின்னா சொல்லு அப்பா அவரையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார். மேகாவும்,
“ அப்பா நான் யாரையும் லவ் பண்ணல இந்த மேகாவை இதுவரைக்கும் யாரும் இம்ப்ரஸ் பண்ணல எல்லாருமே சரியான ஜொல்லு பார்டிங்க. ஏதோ இதுவரைக்கும் பொண்ணுங்களை பார்த்ததே இல்லாத மாதிரி நடந்துக்குறாங்க இதுல இவங்கள நான் லவ் வேற பண்ணிருவேனா நெவர்” என்றவள் நினைவு வேந்தனிடம் சென்றது.
தன்னை பார்க்கும் போதெல்லாம் அவன் தன்னிடம் அத்து மீறுவதை ஏதோ ஒரு பொம்பள பொறுக்கி போல அவளுடைய மனதில் அவன் பதிந்து போனான்.
“ அப்போ அப்பா உனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யட்டுமா” என்று கேட்டார்.
“ தாராளமா செய்யுங்கப்பா உங்க விருப்பம்” என்று வைத்து விட்டாள். அதைக் கேட்ட இவருக்கு தன்னுடைய மகளை நினைத்து அவ்வளவு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
அதோடு வந்தவர்கள் மீது அவருக்கு அளவு கடந்த வெறுப்பு வந்தது.
ஏற்கனவே அவர்கள் விவசாயம் பார்க்கிறார்கள் என்று சொன்னதும் அவருக்கு அவர்களின் மேல் உடன்பாடு இல்லை.
இருந்தாலும் தன்னுடைய மகளும் அவருடைய மகனும் விரும்புவதாக சொன்னார்கள் அதனால் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்து கூட கூடாது என்று நினைத்தவர், தனியாக வந்து தன்னுடைய மகளிடம் அதை தெளிவு படுத்திக் கொண்டார்.
பின்பு நேராக அங்கு வந்தவர் அவர்கள் முன்னாள் அமர்ந்து,
“ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை நீங்க கிளம்பலாம்” என்று சொன்னார்.
இதை கேட்டு செல்வரத்தினம் அவருடைய மனைவி பாட்டி என மூவருடைய முகமும் வாடியது.
“சார் இப்படி அவசரப்பட்டு முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க என் பையனும் உங்க பொண்ணும் விரும்புறாங்க அதுக்காகவாவது கொஞ்சம் யோசிச்சு சொல்லலாமே” என்று சொல்ல அதற்கு சத்தமாக சிரித்த சத்யராஜ்,
“ யாரு உன் பையனும் என் பொண்ணும் விரும்புறாங்க அப்படின்னு நீங்க நினைச்சுக்கிட்டா அது உங்க முட்டாள்தனம். நீங்க முதல்ல இதை சொல்லும் போதே நான் கொஞ்சம் யோசிச்சேன் இருந்தாலும் அவசரப்பட்டு பேசிடக்கூடாதுன்னு பொறுமையாக இருந்தேன். என் பொண்ணு ஒன்னும் யாரையும் விரும்பல சரியா. அதோட ஒரு விவசாயம் பார்க்கிற ஒருத்தனுக்கு என்னோட பொண்ண கட்டி கொடுக்கறதில எனக்கு உடன்பாடு இல்லை நீங்க போகலாம்” என்றார். விவசாயம் பார்க்கிற ஒருத்தனுக்கு என்னோட பொண்ண கட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னதும் செல்வரத்தினத்திற்கு கோபம் வந்தது. ஆனாலும் அதை வெளி காட்டாது அவரிடம் தன்மையாகவே,
“ ஏங்க விவசாயம் பார்க்கிறவன்னா உங்களுக்கு இளக்காரமா இருக்கா” என்று கேட்க அதற்கு சத்யராஜ்,
“ நான் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் தெரியுமா உனக்கு அதுவும் போக என் பொண்ணு டாக்டருக்கு படிக்கிறா எப்படி பார்த்தாலும் எங்களோட லெவலுக்கும் உன்னோட லெவலுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எந்த தைரியத்துல நீ என் பொண்ணு கேட்டு என் வீட்டுக்கு வந்தேன்னு எனக்கு தெரியல. இதுல உன் பையன் விவசாயம் பாக்குறான்னு வேற சொல்ற. எனக்கு இந்த கிராமத்துக்காரங்களை பார்த்தாலே பிடிக்காது” என்று சொல்லிக் கொண்டிருக்க அப்பொழுது சத்யராஜ் மனைவி சுபாஷினி அவர்களுக்கு குடிக்க ஜூஸ் கொண்டுவர அவரைப் பார்த்த சத்யராஜ்,
“ இனி இது இவங்களுக்கு தேவைப்படாது நீ கொண்டு போ” “என்னங்க என்ன இப்படி பேசுறீங்க அவங்க என்ன நினைப்பாங்க நம்மள பத்தி” என்று சுபாஷினி சொல்ல அதற்கு அவரை கைநீட்டி எச்சரித்த சத்யராஜ்,
“ என்ன இந்த பட்டிக்காட பார்த்ததும் இந்த பட்டிக்காடுக்கு கஷ்டமா இருக்கோ அது சரி நீயும் இவங்கள மாதிரி ஒரு கிராமத்தில இருந்து வந்தவள் தானே அதான் அவங்கள சொல்லவும் உனக்கு பொத்துக்கிட்டு வருது. என்னோட வாழ்க்கையில உன்ன கல்யாணம் பண்ணி பெரிய தப்பு பண்ண மாதிரி என் பொண்ணையும் இதோ இவங்கள மாதிரி விவசாயம் பார்க்கிற இவங்களோட பையனுக்கு கொடுத்து அவ வாழ்க்கையையும் பாழாக்க விரும்பமாட்டேன். அவளுக்கு என்ன மாதிரி ஒரு பெரிய கோடீஸ்வரனை பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்.
உங்களுக்கு இன்னும் நான் சொல்றது புரியலையா கிளம்புங்க இங்க இருந்து முதல்ல” என்று சொல்ல சுபாஷினி உட்பட செல்வரத்தினம் குடும்பத்திற்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
வடிவுக்கரசிக்கோ தன்னுடைய மகனைக் கண்டு மனம் வாடியது.
தங்களுடைய ஊரில் தங்களுடைய மகன் எவ்வளவு பெரிய மனிதன். அவனை அந்த ஊரில் இருக்கும் அனைவருமே எவ்வளவு மரியாதையாக நடத்துவார்கள் ஆனால் இங்கு தன்னுடைய மகனை ஒரு பிச்சைக்காரனை விட கேவலமாக நடத்துகிறானே. இவன் பணக்காரனாக இருந்தால் இவன் என்ன வேணாலும் பேசலாமா என்றவருக்கோ சத்யராஜின் மேல் அளவு கடந்த கோபம் வந்தது.
ஆனாலும் தன் மகனின் முன்னால் அமைதி காத்தார் எதுவும் சொல்லாமல். அவருடைய உள்ளமும் வெந்து கொண்டிருந்தது.
உடனே அன்னலட்சுமியோ செல்வ ரத்தினத்தின் கையைப் பிடித்தவர் கண்கள் கலகியவாறு,
“ என்னங்க வாங்க போவோம் நம்ம ஏதோ அவசரப்பட்டு வந்துட்டோம்னு நினைக்கிறேன் நம்ம மேல தான் தப்பு வாங்க போகலாம்” என்று அழைத்தார்.
“இருமா நம்ம பையன் இந்த வீட்டு பொண்ணு மேல ஆசைப்பட்டுட்டான் கொஞ்சம் பொறுமையாக இரு நான் அவருக்கு சொல்லி புரிய வைக்கிறேன்” என்று அப்பொழுதும் பொறுமையை இழுத்து பிடித்தவர் தன்னுடைய மகனுக்காக பணிந்து பேச முன் வந்தார்.
“இங்க பாருங்க உங்க பணம் சொத்து இது மேல எல்லாம் எங்களுக்கு எந்த ஒரு நாட்டமும் கிடையாது என் பையன் உங்க பொண்ண விரும்புறான் கடைசியா ஒரு தடவை யோசிச்சு சொல்லுங்க” என்று கேட்க சத்யராஜிக்கோ இவன் என்ன பைத்தியக்காரனா நான் இவ்வளவு தூரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் எதுவும் புரியாமல் மீண்டும் அதையே கூறுகிறானே என்று நினைத்தவருக்கோ கோபம் அதிகரித்தது.
“ உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா உன் பையன் விரும்பினா தரதரம் பார்க்காம எங்க வேணா பொண்ணு கேட்டு வந்துருவியா உன் பையனுக்கு ஏத்த மாதிரி உங்க கிராமத்திலேயே ஏதோ கூலி வேலைக்கு போற பொண்ணா பாத்து கட்டி வை இன்னொரு தடவை பொண்ணு அது இதுன்னு என் வீட்டு வாசப்படி வரணும்னு நினைக்காதே வெளிய போ முதல்ல” என்றவர்,
“ செக்யூரிட்டி” என்று கத்தி அழைக்க வாசலில் நின்ற செக்யூரிட்டியோ அவருடைய சத்தத்தை கேட்டு உள்ளே வர,
“ இவங்கள முதல்ல வெளிய தள்ளுங்க இனி இந்த மாதிரி ஆளுங்க யாராவது வந்தாங்கன்னா என்கிட்ட கேட்க வேண்டாம் அப்படியே கழுத்த புடிச்சு வெளியே தள்ளு” என்று சொல்ல செல்வரத்தினத்திற்கோ அது செருப்பால் அடித்தது போல இருந்தது.
செக்யூரிட்டி அவர்களது அருகில் வர அவரை கைநீட்டி தடுத்த செல்வரத்தினமோ,
“ உங்களுக்கு எந்த அவசியம் வராது நாங்களே போகிறோம்” என்று சொன்னவருக்கோ பேச்சு தினற ஆரம்பித்தது.
உடனே அன்னலட்சுமி அவருடைய கையை பிடிக்க,
“ ஒன்னும் இல்லமா நான் நல்லா இருக்கேன் வாங்க போகலாம்” என்று தன்னுடைய மனைவியையும் தன்னுடைய அன்னையையும் அழைத்தவர் சத்தியராஜ் முன்பு கையெடுத்து கும்பிட்டவர்,
“ மன்னிச்சிடுங்க இடம் தெரியாமல் வந்து பேசுனது எங்க தப்புதான் நாங்க கிளம்புறோம்” என்று சொல்லியவர் அங்கிருந்து கிளம்பினார்.
வரும் வழியில் அவர்கள் இருவரிடமும்,
“ இங்க பாருங்க இங்க நடந்தது எக்காரணத்தைக் கொண்டும் வேந்தனுக்கு தெரியக்கூடாது. அவனைப் பொறுத்த வரைக்கும் நம்ம சென்னைக்கு வந்தது என் நண்பனோட பொண்ணு கல்யாணத்துக்கு அது அப்படியே இருக்கட்டும் அவனுக்கு தெரியக்கூடாது ரெண்டு பேரும் சத்தியம் பண்ணுங்க” என்றார்.