சீதளம் 18
சென்னைக்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வர அவர்களை ஆவலாக கேட்ட அறிவழகிக்கோ அவளுடைய அம்மா சற்று நேரம் கழித்து சொல்வதாக கூறினார்.
ஆனால் அவளுக்கோ அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக இருந்தது.
அதனால் விடாமல் தன் தாயிடம் கேட்க அவளுடைய அன்னையோ அறிவழகியின் தொடர் தொல்லையால் அங்கு நடந்ததை அவளிடம் சொல்லியவர்,
“ இங்கு பாரு அறிவு இது எக்காரணத்தைக் கொண்டும் உன் அண்ணனுக்கு தெரியவே கூடாது அப்படி தெரிஞ்சா அவன் தாங்க மாட்டான்” என்று சொல்ல அறிவழகிக்கோ தன் அண்ணனிடம் எப்படியாவது இதை சொல்லியே ஆக வேண்டும். அவர்கள் பெரும் பணம் படைத்தவர்கள் என்றால் அது அவர்களுக்கு மட்டும் அதற்காக வீட்டிற்கு வந்தவர்களை இவ்வளவு கேவலமாகவா நடத்துவார்கள் என்ற கோபம் அவளுக்கு அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
“ என்னம்மா நீங்க இத அண்ணா கிட்ட சொல்லாம எப்படி இருக்க முடியும் உங்களை எவ்வளவு கேவலப்படுத்தி இருக்காங்க இதை நான் கண்டிப்பாக அண்ணா கிட்ட சொல்லியே தீருவேன்” என்று சென்றவளை கைபிடித்து இழுத்த அவளது அன்னையோ,
“ இங்க பாரு அறிவு அப்பா இது அண்ணாவுக்கு தெரியக் கூடாதுன்னு என்கிட்டயும் அப்பத்தாகிட்டயும் சத்தியம் வாங்கி இருக்காங்க நீயும் அண்ணா கிட்ட சொல்லக்கூடாது” என்று அவர் சொல்ல,
“ இது எப்படிமா அண்ணா கிட்ட சொல்லாம இருக்க முடியும் எனக்கு அவ்வளவு கோபம் வருது அவங்க மேல அண்ணா கிட்ட சொன்னா கண்டிப்பா அந்த ஆள சும்மா விடமாட்டான்” என்று சொல்ல,
“ இதுக்குத்தான் இதுக்குத்தான் அறிவு அப்பா அவனுக்கு இந்த விஷயம் தெரிய கூடாதுன்னு சொல்லி இருக்காங்க நீயும் எக்காரணத்தைக் கொண்டும் உங்க அண்ணன் கிட்ட இதை சொல்லக்கூடாது இது அம்மா மேல சாத்தியம்”
“ அம்மா என்ன செய்றீங்க” என்றவளுக்கு கண்களில் கண்ணீர் தான் வந்தது.
ஆனால் இது அனைத்தையும் அவர்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் வேலைக்காரர் ஒருவர் கதிரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டார். அவனுக்கோ அது மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது.
அதை வைத்து தான் பொது இடத்தில் அவனை அசிங்கப்படுத்தினான் கதிரவன்.
நடந்த அனைத்தையும் கேட்டறிந்த வேந்தனுக்கோ உள்ளுக்குள் எரிமலையே வெடிக்க தொடங்கியது. விவசாயம் பார்ப்பவன் என்றால் அவ்வளவு கேவலமா போய்விட்டார்களா. நீ கோடீஸ்வரன் என்றால் விவசாயம் பார்ப்பவர்களை கேவலமாக நடத்துவாயா.
தன்னுடைய மகளை ஒரு விவசாயம் செய்பவனுக்கு திருமணம் செய்து வைப்பதை அவ்வளவு கேவலமாக எண்ணுகிறாயா.
தன்னுடைய குடும்பம் தனக்காக அங்கு சென்று எவ்வளவு அவமானப்பட்டு வந்திருக்கிறார்கள் என்று நினைத்தவனுக்கோ தன் மேலையே கோபமாக வந்தது.
ஏற்கனவே அவனை கதிரவன் வேறு அவமானப்படுத்தி இருக்க அதற்கு முழுமுதற் காரணமான மேகாவின் மேலும் முகம் பார்க்காத மேகாவின் தந்தை மேலும் அவனுக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
தங்கள் குடும்பம் மீதும் அவனுக்கு கோபம் வந்தது.
தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் ஏன் இவர்கள் அங்கு பெண் கேட்க சென்றார்கள் எல்லாம் அதனால் வந்தது தானே என்றும் நினைத்தான்.
ஆனாலும் பெண்ணென்று இருந்தால் பலரும் கேட்கத்தானே செய்வார்கள். ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில் முடித்து விடாமல் எங்களுடைய குடும்பத்தையும் எங்களுடைய தொழிலையும் இப்படியா கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்து இவர்களிடம் திரும்பியவன்,
“ இதை ஏன் என்கிட்ட முதல்லயே சொல்லல” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.
“விவசாயம் பார்க்கிறவனுக்கு தன்னோட பொண்ண கட்டி கொடுக்க மாட்டேன்னு தானே சொன்னாங்க அதே விவசாயம் பாக்குறவன் தான் அவனோட மருமகன் இதை அவனேநினைச்சாலும் மாற்ற முடியாது” என்றவன் உடனே சென்னைக்கு கிளம்பினான்.
அவனுடைய குடும்பத்தினர் எவ்வளவோ தடுத்து பார்த்தார்கள்.
ஆனால் யாருடைய வார்த்தையையும் செவி சாய்க்காதவன் அங்கிருந்து கிளம்பினான்.
அதிகாலை சென்னை வந்தவன் மேகாவின் வீட்டின் முகவரி தெரியாததால் என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு பூங்கொடியின் ஞாபகம் வர உடனே அவளுக்கு அழைப்பு எடுத்தான்.
மேகாவின் வீட்டினுடைய முகவரியை விசாரிக்க அவளும்,
“ என்னன்னா ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் உங்க அப்பா மேகா வீட்டோட அட்ரஸ் கேட்டாங்க இப்போ நீங்க கேக்குறீங்க” என்று சொல்ல,
“ அது அவங்க அப்பா கிட்ட ஒரு சின்ன டீலிங் பேச வேண்டி இருக்குமா அதான்” என்று அவன் சொன்னான்.
அதற்கு,
“ சரி அண்ணா நோட் பண்ணிக்கோங்க” எண்ட்ரவல் மேகாவினுடைய முகவரியை கொடுத்தவள்.
“ அண்ணா இன்னைக்கு அவங்க வீட்ல” என்று ஏதோ சொல்ல வர உடனே போனை கட் பண்ணியவன் தன்னுடைய வண்டியை கிளப்பினான்.
இங்கு போனை பார்த்த பூங்கொடியோ,
“ ஐயோ இந்த அண்ணா நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்காமல் போன கட் பண்ணிட்டாங்க. என்னவா இருக்கும் அன்னைக்கு இவங்க அப்பா கேட்டாங்க இன்னைக்கு இந்த அண்ணா கேக்குறாங்க ஏதாவது பிரச்சனையா இருக்குமா. சரி ஏதோ ஒன்னு எதுக்கு நம்ம மண்டையை பிச்சுக்கணும் மேகா இங்க வரும்போது அவ கிட்ட கேட்டுக்கலாம்” என்றவள் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
இங்கு பூங்கொடியிடம் முகவரியை வாங்கியவன் நேராக அங்கு வந்தவன் செக்யூரிட்டி தடுக்க அவரை அடித்து உள்ளே நுழைந்தவன் கண்டதோ மேகாவுக்கும் சத்யராஜின் பிசினஸ் நண்பனுமான அவருடைய மகனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்ததை.
அவனோ மேகாவின் கையைப் பிடித்து மோதிரத்தை போட்டுக் கொண்டிருக்க மேகாவோ சிரித்துக்கொண்டு இருந்தவள் திரும்ப அவனுடைய விரலைப் பிடித்து மோதிரத்தை போட போக அதை கண்ட வேந்தனோ நொடியும் தாமதிக்காமல் அவர்கள் முன்னே வந்தவன் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து அங்கு இருப்பவர்கள் முன்னிலையில் மேகாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
அனைவரும் அதை பார்த்து அதிர்ந்து நிற்க மேகாவோ இந்த நேரத்தில் இங்கு வேந்தனை எதிர்பாராதவள் அதிர்ச்சியோடு நிற்க.
அவள் கையில் இருந்த மோதிரமோ கைநழுவி கீழே உருண்டோடியது. இவனோ தாலியை கட்டியதோடு மட்டுமல்லாமல் தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் பொருட்படுத்தாமல் அவளை இழுத்து அவள் இதழோடு இதழைப் பொருத்தியவன் ஆழ்ந்து முத்தமிட்டு கொண்டிருந்தான்.
அதைக் கண்ட சத்யராஜுக்கும் அவருடைய நண்பருக்கும் அவருடைய மகனுக்கும் ஆத்திரமாக வர மூவரும் அவனைப் பிடித்து இழுக்க அவர்கள் மூவரையும் ஒரே தள்ளாக தள்ளினான்.
“டேய் யாருடா நீ எங்க வந்து என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்க”
என்று சத்யராஜ் கேட்க மேகாவின் இதழிலிருந்து தன்னுடைய இதழை பிரித்தவன் அவளை தன்னுடைய கைக்குள் அழுத்திப் பிடித்துக் கொண்டு சத்தியராஜிடம் வந்தவன்,
“ என்ன சொன்ன என்ன சொன்ன நீ விவசாயம் பார்க்கிறவனுக்கு உன் பொண்ண கட்டி கொடுக்க மாட்டேன்னு தானே சொன்ன. இங்க பாரு அதே விவசாயம் பார்க்கிறவன் தான் உன் பொண்ணுக்கு புருஷன் உனக்கு மருமகன் இதை யாரு நினைச்சாலும் மாற்ற முடியாது. வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தவங்கள எவ்வளவு கேவலமா அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்க நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன் ச்சை. ஆமா ஏதோ சொன்னியாமே நீ பெரிய பணக்காரன் உன் பொண்ணு டாக்டருக்கு படிக்கிறான்னு கேவலம் விவசாயம் பார்க்கிற எனக்கு கட்டிக் கொடுக்கணுமான்னே சொல்லியிருக்க. விவசாயம் பார்க்கிறவன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா அங்க சேர்த்துக்கொள்ள விவசாயி கால வைக்கலன்னா இங்க நீங்க எல்லாரும் சோத்துல கை வைக்க முடியாது. அப்படிப்பட்ட விவசாயி உனக்கு ஏளனமா தெரியிராங்களா.அப்பரம்
ஏதோ உன் பொண்ணு டாக்டர் டாக்டர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறியே வெட்னரி டாக்டர் தானே அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு” என்றான் வேந்தன்.
“டேய் நீ நீ பெரிய தப்பு பண்ணிட்ட நீ அவ கழுத்துல தாலி கட்டிட்டா அவளுக்கு புருஷன் ஆகிட முடியுமா. இப்ப உன் கண்ணு முன்னாடி அதை அத்து காட்டுறேன் பாரு” என்று மேகாவின் கழுத்தில் இருந்த தாலியை அவிழ்க்க அவளை சத்யராஜ் நெருங்க ஒற்றை கையால் அவருடைய நெஞ்சில் கை வைத்த வேந்தனோ,
“ என்ன அவ கழுத்துல இருந்து அவ்வளவு சீக்கிரம் நான் கட்டின தாலிய எடுத்துடலாம்னு நினைச்சியா அந்த தாலி மேல கைய வச்ச நீ உசுரோட இருக்கிற கடைசி நொடி அந்த நொடியாதான் இருக்கும். நீ மட்டும் இல்ல அவ கழுத்துல இருக்குற தாலியை யாரு எடுக்கணும்னு நினைச்சாலும் அவங்களுக்கும் அந்த கதிதான்” மேகாவின் புறம் திரும்பி,
“ ஏன் அதை உன் பொண்ணே நினைச்சாலும் அவளுக்கும் அந்த கதிதான். இனி அவளோட வாழ்க்கை இந்த மதுரவேந்தனோட பொண்டாட்டியாதான் வாழனும். அத மாத்தணும்னு யாரு முடிவு பண்ணாலும் அவங்க வாழ்க்கையும் மாறிப்போகும். உனக்கு இந்த விவசாயி தான் மருமகன் இதை மண்டையில நல்லா ஏத்திக்கோ” என்றவன் மேகாவின் புறம் திரும்ப அவளோ நடந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க அவளைப் பார்த்தவன் மேகாவின் தோளை பிடித்து ஒரு சுற்று சுற்றியவன் மீண்டும் தன்னுடைய கை வளைவுக்குள் கொண்டு வர அப்பொழுதே சுயம் வந்தவள் அவனை அதிர்ச்சி கலந்த விழிகளோடு பார்க்க அவனோ அப்போதும் அவளைப் பார்த்து ஒற்றை கண்ணடித்து சிமிட்டியவன், “என்ன பொண்டாட்டி மாமா பண்ண அதிரடியில இன்னும் அதிர்ச்சியா இருக்கியா” என்றவன் அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு,
“ மாமா போயிட்டு வரேன்” என்றவன் புயல் போல அங்கிருந்து கிளம்பினான்.