அத்தியாயம் 14
பாட்டி தன்னுடைய சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று மீனுவுக்கும் விஹானுக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சை தொடங்க ஆனால் அங்கு நடந்ததோ விஹானுக்கும் லலிதாவுக்கும் திருமண ஏற்பாடு.
அதைக் கேட்டு தாங்க முடியாத மீனுவோ யாருக்கும் தெரியாமல் அவ்விடத்தை விட்டு அகன்று வந்தவள் தன்னுடைய அறைக்குச் சென்று மௌனமாக கண்ணீர் வடித்தாள்.
சிறிது நேரம் கழித்து அவளுடைய அறைக்குள் வந்த பாட்டியோ மீனுவின் அந்தக் கோலத்தைக் கண்டு கவளையுற்றவர்,
“ அம்மாடி மீனு” என்று அவர் அழைக்க சட்டென அவரை ஏறிட்டுப் பார்த்தவள்,
“பாட்டி” என்ற கதறலோடு ஓடி வந்து அவரை கட்டிக் கொண்டாள்.
“அழாதேட தங்கம் நான் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல அதோட மாப்பிள்ளை வேற விஹானும் லல்லுவும் விரும்புறாங்கன்னு வேற சொல்றாரு நீ விஹான விரும்புறத அவன்கிட்ட சொல்லலையா மீனு குட்டி” என்று பாட்டி கேட்க மீனுவோ, அவருடைய நெஞ்சத்தில் தலையை புதைத்தவாறு இரு பக்கமும் தலையை ஆட்டியவள்,
“ இல்ல பாட்டி என்னால அவர்கிட்ட பேசவே முடியல அப்புறம் எப்படி நான் என்னோட காதலை சொல்ல முடியும் அவர் பக்கத்துல வந்தாலே எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது பேச்சே வர மாட்டேங்குது பாட்டி” என்று அழுகையினூடே மீனு சொல்ல மீனுவை ஆதரவாக தட்டிக் கொடுத்த பாட்டியோ,
“ நான் வேணும்னா விஹான் கிட்ட பேசட்டுமா மீனும்மா இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல உன்னோட காதல் தெரிஞ்சா கண்டிப்பா என் பேரன் உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான்”
“ ஐயோ வேணாம் பாட்டி நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் அதோட லல்லுவும் அத்தானும் விரும்புறாங்க என்னோடது ஒரு தலைக் காதல் இப்ப போயி அவங்க கிட்ட சொல்றதுல எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.
அவங்க ரெண்டு பேரும் மனசார விரும்புறாங்க பாட்டி அவங்கள பிரிச்சு எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டாம். நீங்க எந்த காரணம் கொண்டும் இதை யாருக்கும் சொல்லக்கூடாது. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்யுங்க. என்னை பத்தி கவலைப்படாதீங்க பாட்டி. நான் கொஞ்சம் கொஞ்சமா நான் சரியாகிடுவேன்” என்றவளுக்கோ கண்ணீர் தான் நின்ற பாடு இல்லை.
பாட்டி அவளைத் தண்ணில் இருந்து பிரித்தவர் அவளுடைய நெற்றியில் இதிழ் பதித்து விட்டு,
“ உன்ன இந்த நிலைமையில என்னால பார்க்க முடியல மீனும்மா ஒன்னுமே செய்ய முடியாத இந்த கையாலாகாத பாட்டிய மன்னிச்சிடுடா”
“ ஐயோ பாட்டி ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க எது நடக்கணும்னு விதி இருக்கோ அப்படித்தான் நடக்கும் இதுல நீங்க உங்கள தப்பு சொல்லாதீங்க” என்றவள் பாட்டியை கட்டிக் கொண்டாள்.
இங்கு விஹானோ தன்னுடைய அறையில் பால்கனியில் தன்னுடைய கை வளைவுக்குள் லல்லுவை வைத்துக்கொண்டு அவளுடைய விழிகளைப் பார்த்தவாறே,
“ என்ன மேடம் என் கூட ஆஸ்திரேலியா வர ரெடியா இருக்கீங்களா?” என்று கேட்க அவளோ வெட்கப்பட்டவள் சரியென சம்மதம் கூற, அவளுடைய அந்த வெட்கத்தை ரசித்தவனோ அவளுடைய இரு கன்னங்களையும் தாங்கியவன் தன்னுடைய இதழை அவளுடைய இதழில் பதிக்க எண்ணியவன் சற்று அவளை நோக்கி குனிய அவளோ, அவன் சரியாக அவளுடைய இதழில் இதல் பதிக்கும் சமயம் இருவருடைய இதழ்களுக்கும் இடையில் கரத்தை வைத்து மறைத்தவள் இல்லை எனும் விதமாக தலையை பின்னோக்கி இழுத்துக் கொண்டாள்.
அதில் ஏமாற்றம் அடைந்த விஹானோ,
“ என்ன லாலி நமக்குத் தான் கல்யாணம் ஆகப்போகுதுல ஒரு கிஸ் கூட கிடையாதா” என்று ஏமாற்றம் அடைந்த விரக்தியில் அவளை ஏக்கமாக பார்த்து கேட்க அவளோ,
“ஆஹான் அதான் நீங்களே சொன்னீங்களே கல்யாணம் ஆகபோகுதுன்னு எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். என்னதான் நாம் மாடர்னா இருந்தாலும் இந்த கிராமத்தில வளர்ந்தவ சோ கல்யாணத்துக்கு முன்னாடி நோ டச்சிங் டச்சிங் ஓகே” என்றாள்.
“விக்ரம் நீங்க ஹால்ல சொன்னது எல்லாம் உண்மையா நம்ம விஹானும் லல்லுவும் காதலிக்கிறாங்களா? ஊது எப்போதிலிருந்து. நான் இங்கதான் இருக்கேன் ஆனா எனக்கு இந்த விஷயம் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுல இருக்கிற உங்களுக்குத் தெரிந்திருக்கு” என்று சித்ரா விக்ரமிடம் கேட்க, அதற்கு விக்ரமோ அவரை ஏற இறங்க பார்த்தவர் ஒரு நக்கல் சிரிப்புடன்,
“ ஏன் டார்லிங் உங்களுக்கு உங்க ஃபேமிலிய பார்த்ததும் மகனை அம்போன்னு விட்டுட்டீங்க. அவன் என்ன செய்றான் எது செய்றான்னு கூட இந்த மேடமுக்குத் தெரியல அப்புறம் எப்படி அவன் உன் கிட்ட சொல்லி இருக்க முடியும்.
மேடம் தான் ஃபுல் பிஸி ஆகிட்டீங்களே. எனக்கு கூட ஒரு போன் பன்னி என்னங்க செய்றீங்க சாப்டீங்களா தூங்குனீங்களா அப்படின்னு கூட ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்கி போன் பேசுறதுக்கு கூட உங்களுக்கு நேரமில்லை” என்று சித்ராவை அவர் வார, உடனே சித்ரா அசடு வழிந்தவாறு,
“ என்னங்க நீங்க இப்படி எல்லாம் சொல்றீங்க. நான் அங்க இருக்கும் போது உங்களை நான் நல்லா பார்க்கவே இல்லையா? அப்புறம் நீங்க ரெண்டு பேரும் என்ன சின்ன பிள்ளையா இடுப்புல எப்பவும் தூக்கியே வச்சுக்கிட்டு இருக்குறதுக்கு இத்தனை வருஷமா உங்க ரெண்டு பேரையும் எப்படி பாத்துக்கிட்டேன். ஏதோ இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது அதுக்குள்ள அப்பாவும் பிள்ளையும் என் மேல எவ்ளோ பெரிய பழி எல்லாம் போடுறீங்க” என்றார் சித்ரா.
“ பாருடா என் பொண்டாட்டிக்கு இப்படி கோபப்பட எல்லாம் தெரியுமா? இந்த வயசுலயும் இவ்வளவு அழகா க்யூட்டா கோபப்பட என் பொண்டாட்டியாள மட்டும் தான் முடியும்” என்றவர் சித்ராவின் கன்னத்தில் முத்தமிட்டார் விக்ரம்.
உடனே சித்ராவோ,
“ என்னங்க இது சின்ன புள்ள மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கீங்க யாராவது வந்தா என்ன நினைப்பாங்க”
“ அடியே நீ என் பொண்டாட்டி டி யாரு வந்தா எனக்கு என்ன? என்ன உங்க வீட்ல இருக்கேன்னு தைரியமா முப்பது வருஷத்துக்கு முன்னாடியே இந்த குண்டு தக்காளியை தூக்கிட்டு போனவன் வயசானாலும் அந்த கெத்து எப்பவும் போகாதுடி யார் வந்தாலும் அவங்க முன்னாடியே உனக்கு நான் முத்தம் கொடுப்பேன்” என்று மீண்டும் சித்ராவின் அருகில் வர அவரோ,
“ ஐயோ தெரியாம சொல்லிட்டேன். சரி சரி இதெல்லாம் இருக்கட்டும். சொல்லுங்க நீங்க ஹால்ல சொன்னதெல்லாம் உண்மையா?” என்று கேட்க விக்ரமும் ஆமாம் என்று சொல்ல சித்ராவோ,
“ பரவால்லங்க எப்படியோ நான் நினைச்ச மாதிரி என் அண்ணன் பொண்ணு எனக்கு மருமகளா வரப்போறா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இனிமே எல்லாம் ஊருக்கு வரணும்னா உங்களையோ இல்ல உங்க பிள்ளையையோ நான் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது நானும் என் மருமகளும் உடனே வருவோம் போவோம் எப்படி” என்று சித்ரா சொல்ல விக்ரமோ வாயில் கை வைத்தவாறு அவரை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
இங்கு கீழே ராமச்சந்திரன் தன்னுடைய மனைவி பத்மாவையும் தன்னுடைய அம்மாவையும் தனியாக அழைத்து வந்தவர் அவர்களிடம் கலந்துரையாடினார்.
“ அம்மா என்னம்மா இப்படி ஆகிப் போச்சு நம்ம ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்குது. அதுவும் போக மூத்த பொண்ணு இருக்கும்போது சின்னவளுக்கு எப்படிம்மா நாம கல்யாணம் பண்ணி வைக்கிறது. அவங்கதான் வெளிநாட்டில இருக்கிறவங்க. நம்ம இந்த கிராமத்தில் இருக்கிறவங்க இந்த ஊர்காரங்க என்ன பேசுவாங்க ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசுவாங்களே மா” என்று சொல்ல பத்மாவும்,
“ஆமாங்க நானும் அதைத்தான் நினைச்சேன். அப்புறம் இந்த சின்னவளை பாருங்களேன் ஆரம்பத்துல இவதான் அவங்க வர்றது புடிக்கல அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தாவ இப்ப ரெண்டு பேரும் காதலிக்கிற அளவுக்கு வந்திருக்காங்க” என்க.
பாட்டியோ,
“ ராமு பத்மா அவங்க சொல்லுவாங்க இவங்க சொல்வாங்கன்னு நம்ம புள்ளைங்க வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிட முடியாது.
மீனுவா இருந்தா என்ன லல்லுவா இருந்தா என்ன ரெண்டும் நம்ம பிள்ளைங்க நமக்குத் தெரியும் நம்ம பிள்ளைகளுக்கு எப்ப எப்போ என்ன செய்யணும்னு.
நாம மீனுக்கும் விஹானுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சோம். ஆனா அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்கன்னு சொல்லும் போது நாம என்ன செய்ய முடியும்.
நம்ம மீனுக்கு என்ன இனி அவளுக்குன்னு ஒருத்தன் பிறந்தா வரப்போறான் அவளுக்காக ஒரு ராஜகுமாரன் பிறந்திருப்பான். கண்டிப்பா அந்த ராஜகுமாரன் அவள தேடி வருவான். இப்போ நம்ம இந்த கல்யாணத்தை மாப்பிள்ளை சொல்ற மாதிரி அடுத்த வாரம் செய்ய ஏற்பாடு செய்வோம் நீ நாளைக்கே அதுக்கான வேலையை ஆரம்பிச்சிடு ராமு” என்றார் பாட்டி.