மான்ஸ்டர்-4

5
(9)

அத்தியாயம்-4

அந்த இருட்டு அறையின் ஒருபக்கத்தில் மர நாற்காலி ஒன்று போடப்பட்டிருக்க.. அந்த மர நாற்காலியிலோ ஒருவன் முகத்தில் ரத்தம் வழிய முணகியவாறே படுத்திருந்தான். அவனின் மூடப்பட்ட விழிகளோ அங்கும் இங்கு உருட்டியவாறே இருக்க.. அவன் வாயோ ஏதோ முணுமுணுத்தவாறே இருந்தது. அவன் கைகள் உடைக்கப்பட்டு, கால்களில் கீறப்பட்டு ரத்தம் கொஞ்ச கொஞ்சமாக அவன் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது.

அந்த இருட்டு அறையில் அவனை தவிற வேறு யாருமில்லை. அந்த இருட்டு அறையில் இருக்கும் ஒவ்வொரு நேரமும் அவன் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பது அவனுக்கே நன்றாக தெரியும்.

தண்ணீ தண்ணீ..”அவன் அணத்திக்கொண்டிருக்க ஆனால் பாவம் அதனை கேட்க தான் அங்கு யாருமே இல்லை. “அய்யோ தண்ணி குடுங்கலேன்..”கெஞ்சலாக கேட்டவனின் குரலுக்கு மதிப்பு கொடுத்தோ இல்லை வர வேண்டியவன் வந்ததாலோ அந்த இருட்டு அறை திறக்கப்பட.. அதன் வழியே செந்நிற விழிகளுடன், முகம் கற்பாறையாக இறுகிப்போய், ராட்ஸஸன் நடை நடந்து வந்தான் மார்ட்டின் லுதாஸ்.

மார்ட்டினின் விழிகளிலோ அப்படி ஒரு பழிவெறி. அதற்கு மாறாக அவன் முரட்டு உதடுகளோ அழகாக, கவர்ச்சியாக விரிந்திருக்க அதனை இந்நேரம் ஏதேனும் பெண்ணழகு பார்த்தால் அதில் மயங்கியே போயிருப்பாள். ஆனால் அந்த சிரிப்பிற்கு பின்னால் ஒரு கொடூரம் இருக்கின்றது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்..

மார்ட்டின் அந்த அடிப்பட்டவனுக்கு முன்னால் வந்து ஸ்டைலாக நின்றவனோ.. தனக்கு பின்னால் நிற்கும் அவனின் பிஏ கபீரை பார்க்க.. அவனும் தலையாட்டியவாறே ஒரு சேரினை தூக்கி வந்து அவன் முன்னால் போட்டான்.. அதில் ராஜ தோரணையில் இல்லை இல்லை அப்படியே அரிமாவை போல கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தவனோ..

ஹவ் ஆர் யூ மேத்யூ.. ஆர் யூ எஞ்சாயிங் தி டே..”குரலில் மொத்த நக்கலையும் திரட்டி மார்ட்டின் பேச.. அதில் எதிரில் உள்ளவனோ கண்கள் திறக்க முடியாமல் மெல்ல திறந்தவனுக்கோ பயம் அல்லுவிட்டது.

அதுவும் தன்னை இறை தேடும் கழுகு பார்வை பார்த்தவனை கண்ட மேத்யூவிற்கு தான் சாக போவது உறுதி என்று நன்றாக புரிந்தது. மார்ட்டினை கெஞ்சலாக பார்த்த மேத்யூவோ.. “பாஸ் ப்ளீஸ் ஹெல்ப் மீ..”என்று சன்னக்குரலில் கூறியவனோ.. “எனக்கு தண்ணீ வேணும் பாஸ்.. அத மட்டும் தர சொல்லுங்க.. ப்ளீஸ்..”என்று கெஞ்சியவனை கண்டு அந்த கல் மனம் படைத்தவனுக்கு கொஞ்சமும் பரிதாபம் வரவில்லை.

பின்னே ஏன் பரிதாபம் வர வேண்டும். மார்ட்டினை பொருத்தவரை அவனுக்கு பொய் கூறினாலோ, ஏமாற்றினாலோ, அவனிடம் திருடினாலோ சுத்தமாக பிடிக்காது. அதற்கு அவன் டிஸ்னரியில் ஒரே தண்டனை மரணம் மட்டும் தான். அதனை நாலு வருடமாக அவனுடன் இருந்த மேத்யூ மீறினால் சும்மா விடுவானா..

ஒரு மிகப்பெரிய டீல் ஒன்று லண்டனிலிருந்து மார்ட்டினுக்கு வந்தது. சுமார் நாலு கோடி மதிப்பிலான உலகத்திலையே அரிய வகை வைரமான பச்சை நிற வைரம் வேண்டுமென்று. அதற்காக மார்ட்டின் டீல் எல்லாம் பேசி முடித்தவனுக்கு அந்த பச்சை நிற வைரம் எங்கே இருக்கின்றது அதனை எப்படி திட்டம் போட்டு தூக்க வேண்டும் என்று அனைத்தும் அத்துப்படி.

அதற்கு திட்டத்தை வகுத்து கொடுத்த மார்ட்டினோ அந்த பொருப்பை இதோ இப்போது அடி வாங்கி கட்டப்பட்டு இருக்கும் மேத்யூவிடம் தான் கொடுத்தான். அனைத்தும் மார்ட்டினின் திட்டப்படி போக.. ஆனால் கடைசியாக மேத்யூ மார்ட்டினுக்கு துரோகம் செய்ய முயன்றவாறே அந்த பச்சை நிற வைரத்தை மார்ட்டினின் எதிரி கேங்கான ஈகில் கேங்கிடம் கொண்டு போய் கொடுக்க.. மார்ட்டினுக்கோ கொலைவெறி அதிகமாகியது.

கிட்டதட்ட நான்கு நாட்களாக மார்ட்டின் மேத்யூவை தூக்க முயன்றவன் இன்று காலையில் தான் அவனை தூக்கிக்கொண்டு வந்திருந்தான். மார்ட்டினை பொருத்தவரை அவனிடம் நேரடியாக மோதுபவர்களை கூட அவன் விட்டுவிடுவான்.. ஆனால் அவனின் பின்னாலையே இருந்து முதுகை குத்த பார்ப்பவனுக்கு அவ்வளவு தான். மார்ட்டினின் நீதி அவர்களுக்கு மரணம் தான்.

அதனை தான் இப்போது மேத்யூவிற்கு கொடுக்க தயாராக உட்கார்ந்திருக்கின்றான்.

பாஸ்.. பாஸ்.. அந்த ஈகில் கரான் என்ன பயமுறுத்திட்டான் பாஸ்.. என் என்..”திணறிக்கொண்டிருந்தவனை நக்கலாக பார்த்த மார்ட்டினோ.. “என்ன உன் பேமிலிய தூக்கிட்டானா.. அதான சொல்ல வர..”என்றவனின் முகத்தில் கொஞ்சமும் இரக்கமே இல்லை.

அதிலையே மேத்யூவிற்கு மார்ட்டினுக்கு தான் பொய்தான் சொல்கிறோம் என்பது புரிந்து போனது. “ம்ம்ம் வெல் வெல் வெல்.. உன் ஃபேமிலி இப்போ மும்பையிலையே இல்ல ஏதோ ஆந்திரா பக்கம் அனுப்பிட்ட அதுவும் எனக்கு தெரியும்.. இந்த டீலுக்காக அந்த கரான் உனக்கு நாற்பது லட்சம் பேரம் பேசிருக்கான்.. அதுக்காக ஆசப்பட்டு தான் இத நீ செஞ்ச…”என்று அனைத்தையும் புட்டு புட்டு வைத்தவனை கண்டவனுக்கு எச்சில் விழுங்க முடியாத அளவிற்கு தொண்டை வலிக்கண்டது.

ஆம் அவன் சொல்வது உண்மைதான் நாற்பது லட்சத்திற்கு ஆசைப்பட்டு இப்போது மார்ட்டினின் கையால் உயிர் விடப்போவது உறுதியாகிவிட்டதே என்று நினைக்க மேத்யூவிற்கு பயம் நெஞ்சை கவ்வியது.

மார்ட்டினை பொருத்தவரை எவ்வளவு கேட்டாலும் அள்ளிக்கொடுப்பான்.. ஆனால் ஏமாற்றினால் சாவடிதான். இப்போது மேத்யூவிற்கும் சாவடிதான். மார்ட்டின் ஹாயாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்தவனோ.. “வெல்.. ஐ ஹேவ் டூ கோ.. சீக்கரமா உன்ன முடிச்சிட்டு நான் மீட்டிங் போனும்,”ஏதோ சிஸ்டம் வேலை போல கூறியவனோ அடுத்த நிமிடம் யோசிக்காமல் தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த கன்னை எடுத்தவன் கண நேரத்தில் மேத்யூவின் தலையில் சுட்டு மூளையை வெளியேடுத்தான்.

ஷட்.. ஏமாத்திட்டு கத சொல்றான்..”ஆக்ரோஷமாக அதே நேரம் ராட்ஸஸனாக கத்திய மார்ட்டினோ.. கபீரை பார்த்து.. “ஐ வான்ட் தட் க்ரீன் டைமன்ட் வித் தின் ஒன் ஹவர்.. அரெஞ்ச் பண்ணு..”என்றவனோ இறந்தவனை கூட திரும்பி பார்க்காமல் அரிமா கணக்காக நடந்து சென்றான். இதுதான் மார்ட்டின் தேவை இல்லாமல் யார் வாழ்க்கையிலும் தலையிட மாட்டான். தலையிட்டால் அடியோடு அலசி ஆராயாமல் விடமாட்டான். சில நேரம் இப்படி கொலை கூட சாத்தியம் தான்.

மைத்ரேயி தன்னுடைய வீட்டில் அதுவும் தன் அறையில் உட்கார்ந்து குலுங்கி குலுங்கி அழுதவாறு இருந்தாள். அவளது கண்ணும், முகமுமே அழுது அழுது சிவந்து போயிருந்தது.. இப்போது மட்டுமல்ல கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவளது நிலை இப்படித்தான் இருக்கிறது.. அப்படிப்பட்ட சம்பவம் தான் அவள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது.. மைத்ரேயியின் மனமும் உலைக்கலனாக கொதித்துக் கொண்டிருந்தது.. ஆனால் அதனை விட அதிகமாக பயம் தான் மனதில் பற்றி கொண்டிருந்தது.

அதற்கும் காரணம் இருந்தது அல்லவா.. இந்த ஒரு வாரம் அவள் வீட்டில் அரங்கேறிய விடயங்கள் எல்லாம் அவளை அடியோடு  சாய்த்து விட்டிருந்தது.. கண்கள் மூடினாலே அந்த கொடூர முகம் தான் முன்னாள் வந்து வந்து இம்சை செய்து கொண்டிருந்தது..

நல்லா கேட்டுக்க இந்த வீட்டை விட்டு மட்டும் எங்கயாச்சும் வெளியில போன அவ்வளவுதான் உன்னை இப்படியே கொன்னுட்டு எவனோடவோ ஓடி போயிட்டான்னு கதை கட்டி விடுறதுக்கு எனக்கு ரொம்ப நேரம் ஆயிடாது..”காஞ்சனா தன்னுடைய கொடூர முகத்தை காட்டி மிரட்டிக் கொண்டிருக்க.. அதனை இப்போது நினைத்தாலும் மைத்ரேயிற்கு படபடவென்று நெஞ்சம் அடித்துக் கொண்டது.

என்னதான் அவள் கல்லூரிக்கு சென்று படித்தாலும் அவளுடைய சுபாவமே இப்படி பயப்படும் சுபாவம் தான்.. அப்படித்தான் அவளுடைய வாழ்க்கை அவளை அடித்துப் போட்டிருந்தது.. ஒருவேளை அவளது தந்தையாச்சும் அவள் பக்கம் நின்று இருந்தால் இன்று தைரியமாக இருந்திருப்பாளோ என்னவோ.. ஆனால் அவளின் தந்தை மாணிக்கவாசகத்திற்கு தான் இப்போது பணப்பேய் பிடித்து இருந்தது அல்லவா.. பணத்திற்காக சொந்த மகளையே விற்க தயாராக இருக்கும் தனது தந்தையை நினைக்க நினைக்க பெண்ணவளுக்கு பயத்தை விட வெறுப்பு அதிகமாகியது..

ஒரு வாரத்திற்கு முன்பு மாணிக்கவாசகம் படபடத்துப்போன முகத்துடனே வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார். மைத்ரேயி என்னதான் அதனை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தாலும் அதனை பற்றி கேட்க குரல் வரவில்லை அவளுக்கு.

அவளுக்கும் காஞ்சனா வேலையாக கொடுத்து பெண்டை நிமிர்த்து கொண்டிருந்தாள். “ஒரு வேலையும் செய்றது இல்ல நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்க வேண்டியது..” என்று வாசிப்பாடி கொண்டே தான் இருந்தாள் அந்த ராட்ஸஸியும். பாவம் மைத்ரேயி உண்ணும் இரண்டு இட்லியும், ஒரு பிடி சோறும் காஞ்சனாவிற்கு ஒரு குண்டான் உண்பது போல தான் தெரிந்தது.

இப்போது மாணிக்கவாசகம் நெஞ்சம் படபடக்க அங்கு வீட்டின் முற்றத்திலேயே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தவரை காஞ்சனா புருவம் சுருக்கி பார்த்தவர் என்னங்க என்னாச்சு ஏன் இப்படி படபடன்னு சுத்திகிட்டு இருக்கீங்க..” என்று கேட்டவரை நிமிர்ந்து எரித்த பார்வை பார்த்த மாணிக்கவாசகமோ..

என்ன ஏன் கேட்குற… எல்லாம் உன்னாலயும் உன் புள்ளையாளையும் தாண்டி நான் இந்த நிலைமையில இருக்கேன்..”எடுத்ததும் எரிந்து விழ.. அதனைப் பார்த்து காஞ்சனாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.. “ம்ச் அட நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலையே…”அலங்கலாய்த்து கூறியவளை கண்டு அவ்வளவு வெறுப்பு மண்டியது மாணிக்கத்திற்கு..

ஓ புரியாது புரியாது உனக்கு எதுவுமே புரியாதுடி.. எல்லாமே உன் பையன தலையில தூக்கி வச்சுக்கிட்டு அவனுக்கு பணம் பணம்னு வாரி வாரி இறைச்சிக்கிட்டு இருந்தியே அந்த பணத்தினால் வந்து வினைடி இது..” என்று எகிறிக்கொண்டிருந்தவர் சட்டென்று முகம் கலக்கத்துடன் ம்ச் நான் என்னத்தடி சொல்றது நம்மளோட ரெண்டு மில்லையும் அரசாங்கம் இழுத்து மூடிட்டு.. அது உனக்கு தெரியுமா.. சும்மா வீட்ல திண்ணுட்டு சுத்துனா என்னத்த தெரிய போது உனக்கு..”கடைசி வரியை வெறுப்பாக கூறிய மாணிகவாசகம் காட்டுக் கத்தலாக…

அந்த எடுப்பட்டவன் எங்க போய் தொலைஞ்சான்…”என்றவரை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாத காஞ்சனாவின் செவிகள் அந்த மில் மூடப்பட்டதிலையே நிலைத்ததுதான் கேள்விப்பட்ட விடயத்தில் ஐயோ என்று நெஞ்சில் கையை வைத்துவிட்டாள்..

இது மைத்ரேயிக்கும் புதிய விடயம் தான்.. அவளும் அதிர்ச்சியாக தன்னுடைய தந்தையையே பார்த்துக் கொண்டிருக்க.. இதனை எல்லாம் ரமணி தன்னுடைய அறையில் படுத்தவாரு கேட்டுக் கொண்டிருந்தார்..

அட என்னங்க சொல்றீங்க எதுக்காக கவர்மெண்ட் புடுங்கிச்சு..”அதிர்ச்சியை இன்னும் குறைக்காமல் கத்திய காஞ்சனாவினை பார்த்து அலுத்து போனது அந்த சுயநலத்திற்கு..

ம்ம் புடுங்காம என்னடி பண்ணும் நீயும், உன் புள்ளையும் சேர்ந்துக்கிட்டு ஒரு காரியம் பண்ணிங்களே அதான் அந்த கவர்மெண்ட் ஓட ரேஷன் கடை அரிசி மூட்டைகளை தூக்கிட்டு வந்து நம்மளோட மில்லு ரெண்டுத்துலையும் போட்டு வச்சிருந்தீங்களே..அதுவும் அந்த மண்ணா போன ரேஷன் கடைக்காரனை நம்பி அதனால வந்து வென தாண்டி இது..” என்று தலையில் அடித்துக் கொண்டார் மாணிக்கவாசகம்.

ஆம் காஞ்சனாவிற்கு அதிக பணத்தாசை. அதன் விளைவு தான் இப்போது மாணிக்கவாசகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். காஞ்சனா அந்த ஊர் நியாய விலைக் கடையிலிருந்து ஒரு நாற்பது மூட்டை அரிசியை அந்த ரேஷன்கடைகாரனிடம் ஒரு டீலை பேசிய காஞ்சனா தன்னுடைய மில்லிலையே தனது மகன் மூலமாக மூட்டையை கொண்டு வந்து அடுக்க.. அது எப்படியோ போலீசுக்கு தெரிந்து போனது.. அதன் விளைவு இப்போது மாணிக்கவாசகத்தின் இரு மில்களும் சீல் வைத்து பூட்டப்பட்டிருந்தது.

நல்லவேளையாக மாணிக்கவாசகத்தையோ அல்லது ராகவையோ போலீஸ் கைது செய்யவில்லை.. அதற்கு காரணம் மாணிக்கவாசகம் தன்னுடைய மகனையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள  தன்னிடம் வேலை செய்யும் ஒரு ஆளை பணத்தை கொடுத்து தான் தான் திருடிக் கொண்டு வந்து இங்கு வைத்ததாக ஒத்துக்கொள்ள வைத்து அவனை உள்ளே தள்ளி இருந்தார்.. அதனால் மாணிக்கவாசகமும், காஞ்சனாவும்.ராகவும் இப்போது வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர்..

ஆனால் மில்லை மட்டும் காப்பாற்ற எந்த வழியும் இல்லை.. ஏனென்றால் அரசாங்கத்தின் முத்திரை பதித்த ஒரு மூட்டை திருடினாலும் குற்றம் குற்றம் தானே.. அந்த பொருளை பதுக்கி வைக்க மாணிக்கவாசகத்தின் மில் உபயோகப்படுத்தியதால் அந்த மில்லை இப்போது சீல் வைத்து மூடப்பட்டிருந்தார்கள்.. எப்படியும் அந்த கேஸை உடைத்து மில்லை காப்பாற்ற இப்போதைக்கு எந்த வழியும் இல்லை..

மாணிக்கவாசகம் தேடி போன ஆட்கள் எல்லாருமே கொஞ்ச நாள் அமைதியா இருங்க அப்பதான் அந்த மில்ல காப்பாத்த முடியும்.. சும்மா அவசரப்பட்டு மில்லு காப்பாத்தறோம் காப்பாத்துறோம்னு சுத்திட்டு இருந்தீங்கன்னா உங்களையும் சேர்த்து உள்ளதா போடுவாங்க..” என்று எச்சரிக்கை செய்து கொண்டு இருக்க அதனால் மாணிக்கவாசகம் அப்படியே அமைதியாக இருந்து விட்டார்.

இதனை கேட்ட காஞ்சனாவோ நெஞ்சில் கையை வைத்து திருத்திருவென விழித்துக் கொண்டிருக்க.. “உன்னோட பேராசை தாண்டி இப்படி ஒரு இக்கட்டுல கொண்டு வந்து மாட்டிவிட்டுருக்கு.. அந்த மூட்டையை கொண்டு வந்து ரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கு வித்து நீ என்னத்த தான் சம்பாதிக்க போற.. இப்ப பாரு நமக்கு சோறு போடுற அந்த மில்லையே  இனி திறக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்துட்ட..” என்று கத்திக் கொண்டிருந்தார்.

காஞ்சனா தலையில் கையை வைத்து அப்படியே உட்கார்ந்து விட.. மாணிக்கவாசகத்துக்கோ அப்படியே காஞ்சனாவை அடித்துக்கொல்ல தோன்றியது.. “எங்கடி உன் புள்ள அரும புள்ள காலையில பொறுக்க போயிட்டானா..” என்று கத்தியவரோ எல்லாம் இந்த தருதலையால வந்தது..”என்று தலையில் ஓங்கி அடித்துக் கொண்டவருக்கு இன்னொரு பக்கம் மிகப்பெரிய பிரச்சினையாக அவர் செய்த செயல் ஒன்று அவரை அழிக்க ஓங்கி நின்றது.

அதுதான் அவரின் நண்பர் ஒருவருக்கு ஜாமின் கையெழுத்து போடுவதாக மிகப்பெரிய தொகை ஒன்றிருக்கு ஜாமீன் கையெழுத்து போட.. அந்த பெரிய தொகையை வாங்கிய மாணிக்கவாசகத்தின் நண்பரோ அந்த மிகப்பெரிய தொகையை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவிட்டார்.. ஆனால் ஜாமீன் கையெழுத்து போட்ட மாணிக்கவாசகமும் இப்போது மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறார்..

எல்லாம் என் தலையெழுத்து எல்லாம் ஒரே இடத்துல வந்து  மோதுற மாதிரி நான் ஒருத்தனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அது இப்ப எனக்கே வந்து வினையா நிக்குது..” என்று அதையும் வாய்விட்டே புலம்பியவரை கண்ட காஞ்சனாவோ முகம் அதிர.. “என்ன சொன்னீங்க..” என்று வெகுண்டு எழுந்துவிட்டாள்.

உடனே மாணிக்கவாசகம் தயங்கியவரே நின்றவர் அதன் பிறகு தான் செய்த செயலையும் கூற உங்களுக்கு அறிவு இருக்கா… யாருக்காவது போய் ஜாமீன் கையெழுத்து போடுவாங்களா..”என்று எகிறிக்கொண்டிருக்க..

ம்ம் உனக்கும் உன் பிள்ளைக்கு இருந்த அறிவை விட எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி தாண்டி இருந்தது.. அவன் என்னோட உயிர் நண்பன் தான் இப்படி கையெழுத்து போட்டேன்.. ஆனா இப்படி ஒரேடியா கால வாரிவிட்டு ஓடுவானு நான் நெனச்சியா பார்த்தேன்..” என்று புலம்பியவரோ தலையில் கையை வைத்து நின்றுவிட..

இப்போது காஞ்சனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.. “எவ்வளவு தாங்க வாங்கினீங்க..”ஆக்ரோஷமாக கேட்டவளிடம் தயங்கியவாறே… “ஒரு நாலு கோடி இருக்கும்..” என்று ஆசால்டாக கூறினார்.

என்னது 4 கோடியா..” என்று நெஞ்சில் கையை வைத்த காஞ்சனா இப்ப அவ்ளோ காசுக்கு எங்கங்க போறது…” என்று கதறலாக கேட்டார் காஞ்சனா.

ம்ச் அது தெரிஞ்சா நான் ஏண்டி உன் கிட்ட வந்து பொலம்பிட்டு இருக்க போறேன்..” என்றவாறே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். “ஐயோ ஐயோ என் குடும்பமே இப்படி நாசமா போதே..” என்று காஞ்சனா தன்னுடைய புலம்பலை ஆரம்பிக்க..

மாணிக்கவாசகம் கடுப்பானவர்… அட கொஞ்சம் வாயை மூடுறியா..” என்று அதட்டலாக கத்தியவாறே அப்படியே சேரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். அவருக்கும் அவ்வளவு கலக்கம் தான். அந்த ஜாமீன் கையெழுத்து போடப்பட்டவனோ சாதாரணமான ஆள் எல்லாம் இல்லை.. அந்த மதுரையிலேயே மிகவும் மோசமான கட்டப்பஞ்சாயத்து செய்பவன்.. அவனிடம் எப்படி தான் சமாளிக்க போகிறேன் என்று நினைக்கவே அவருக்கு நெஞ்சமே வலித்தது.

அந்நேரம் பார்த்து ராகவ் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தவன் அப்பா அப்பா உங்கள தேடி சில ஆளுங்க வந்திருக்காங்க..” என்று கூற மாணிக்கவாசகமும் இருந்த கடுப்பில் வெகுண்டு எழுந்தவர் ராகவை நோக்கி சென்று ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்துவிட்டார்.

அதில் ராகவ் அதிர்ச்சியாக நிற்க.. “ஏங்க..” என்று கத்தினாள் காஞ்சனா.

ம்ச் வாய மூடுடி கொன்னுடுவேன் உன்ன…” என்று அதட்டியவறோ… தன் மகன் பக்கம் திரும்பியவறோ… “யாரை கேட்டுடா நீ இப்படி அரசாங்கத்தோட முத்திரை பதிச்ச மூட்டையை கொண்டு வந்து நம்ம மில்லுல ஒளிச்சு வைச்ச..” என்று கத்த.

அவனோ சாதாரணமாக ம்ச் ப்பா.. இப்ப அதனால என்னப்பா..”சாவகாசமாக கேட்டவனை கொலைவெறியில் முறைத்தவர்.. “எவ்ளோ சாதாரணமா கேக்குற டா நீ..” இன்னும் வெறிகொண்டு அவனை நாலு அறை அறைந்தவரோ மில் பூட்டியதையும் தான் ஜாமீன் கையெழுத்து போட்டதையும் வேதனையுடன் கூறிக் கொண்டிருந்தவருக்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அதனை எல்லாம் கேட்டு ராகவ் முகத்தை சுளித்தவாரே நின்றவன்.. “ம்ச் பா சரிப்பா விடுங்க இப்ப வந்திருப்பது ரொம்ப பெரிய ஆஃபர்..” என்று கூற அதில் மாணிக்கவாசகம் அவனை முறைத்தவாறு நின்று இருந்தார்.

அட முறைக்கிறத முதல்ல நிறுத்துங்கப்பா… நான் எவ்வளவு பெரிய வேலையை பார்த்துட்டு வந்து இருக்கேன் தெரியுமா உங்களுக்கு..” என்று தன்னையே பெருமையாக கூறியவன்//தன்னுடைய அக்காவின் வாழ்க்கையை அடியோடு சீரழிக்க வழி செய்துவிட்டு வந்திருப்பது பாவம் அவனுக்கே தெரியாது.

(கேப்பச்சினோ..) 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!