லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 10
கடற்கரையில் தன் தம்பியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இரணதீரன் “டேய் தம்பி வரியாடா? தம்மா நேரம் அலைல நீஞ்சி விளையாடலாம்..”
அலையோடு விளையாட அவன் தன் தம்பியை அழைக்க அதே நேரத்தில் அங்கே தன் தோழியோடு வந்திருந்த மலரழகி அந்த இருவரிடமிருந்து நான்கு ஐந்து அடி இடைவெளியில் அமர்ந்து அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாள்..
“ஹூம்.. இங்க ஒருத்தி காலம் முழுக்க உன்னோட விளையாட காத்திருக்கேன்.. அது புரியாம தம்பியோட போய் விளையாடுறேன்கறியேடா..” உள்ளுக்குள் புலம்பினாள் அவள்..
அவளின் தோழியோ “ஏய் மலரு.. என்னடி உன் ஆளு.. பீச்சுக்கு கூட தம்பியோட தான் வருவான் போலயே.. ரொம்ப கஷ்டம் டி.. இவனுக்கு எல்லாம் ரொமான்ஸை புரிய வச்சு.. காதல் வர வச்சு.. நீ காதலிச்சு.. கல்யாணம் பண்ணிக்கிட்டு.. இதெல்லாம் நடக்கிற காரியமா டி..? நிஜமாவே உனக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமாடி..?”
அவள் கேட்ட வேகத்தில் அவள் பக்கம் திரும்பி முறைத்த மலரழகி “ஏய்.. ஏதாவது ஏடாகூடமா பேசினே.. அவ்வளவு தான்.. உன் கழுத்தை அப்படியே நெரிச்சு கொன்னுடுவேன்.. சொல்லிட்டேன்.. எனக்கு என் தீரன் தான் வேணும்.. வேற யாரும் வேணாம்.. என் தீரனை எப்படி என்னை பார்க்க வைக்கணும்னு எனக்கு தெரியும்..”
அதற்குள் சகோதரர்கள் இருவரும் தங்கள் மேல் உடையை களைந்து விட்டு கடல் அலை அருகில் ஷாட்ஸோடு குதித்து அலையில் போட்டி போட்டு நீந்த தொடங்க மலர்ழகியோ தீரனை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள்..
ஏற்கனவே பலமுறை படப்பிடிப்புகளில் அவனுடைய தேக்கு மர தேகத்தின் திமிறி நிற்கும் அழகையும் அதன் வண்மையையும் திண்மையையும் பார்த்து ரசித்திருந்தவள் இப்போது நீரில் நனைந்த கிரேக்க சிற்பமாய் அவன் அலையை எதிர்த்து நீந்திக் கொண்டிருக்க அவனையே வைத்த கண்ணை விலக்காமல் பார்த்து ரசித்திருந்தாள் பேதை அவள்..
அடுத்த சில நொடிகளில் தோழியின் காதில் ஏதோ சொன்ன மலர் அவள் கையையும் பிடித்துக் கொண்டு அலையை நோக்கி போனாள்..
இங்கே தம்பியோடு நீந்தி கொண்டு வந்த இரணதீரன் சிறிது தூரம் கடலுக்குள் சென்றதும் இந்தரிடம் “போதும் இந்தரு.. ரொம்ப உள்ள போக வோணாம்.. இப்படியே கரைக்கு திரும்பிக்லாம்..” என்று சொல்லி மறுபடியும் கரை பக்கம் தம்பியோடு நீந்த ஆரம்பித்தான்..
மலரழகி தன் தோழியோடு விளையாடிக் கொண்டிருந்தவள் அவள் காதில் மறுபடியும் ஏதோ கிசுகிசுக்க அவளோ “ஐயோ வேணாண்டி.. இந்த விபரீத விளையாட்டு.. சொன்னா கேளு..” எனவும் அவளோ “அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடி.. என் தீரன் இருக்கான்.. அவன் பாத்துப்பான்..” என்று சொல்லி திடீரென தண்ணீருக்குள் நடந்து கடலுக்குள் செல்ல தொடங்கினாள்..
அவள் தோழி “ஏய் மலரு.. அடியேய்.. மலரூஊஊஊ.. வேணாம்டி.. நில்லுடி..” என்று கத்த கத்த அலைகளை எதிர்த்து கடலுக்குள் மெல்ல நகர்ந்தவள் ஒரு சில நொடிகளிலேயே அலையின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அப்படியே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாள்..
இதைப் பார்த்த அவள் தோழிக்கு இதயம் படப்படவென துடிக்க தொடங்கியது.. ஒரு நொடி செயலற்று நின்று மறுபடியும் அப்போது தான் கரைக்கு நீந்தி வந்து கொண்டிருந்த தீரனும் அவன் தம்பி இந்தரும் கரையை நெருங்கி இருக்க அவர்கள் பக்கம் திரும்பி சத்தமாக கத்தினாள்..
“சார் சார்.. என் ஃப்ரெண்ட்டை அலை அடிச்சிட்டு போகுது சார்.. அங்க பாருங்க சார்.. ரொம்ப தூரம் உள்ள இழுத்துட்டு போயிட்டுது சார்.. கொஞ்சம் காப்பாத்துங்க சார்.. அவளுக்கு நீச்சல் கூட தெரியாது சார்..” எனவும் அந்த தண்ணீர் பரப்புக்குள் திரும்பி பார்த்தவன் அங்கே மலரழகி தண்ணீரில் மூச்சு திணறிக்கொண்டு இன்னும் இரண்டு மூன்று நிமிடங்களில் முழுகி விடும் ஆபத்தில் இருந்ததை பார்த்தான்..
வேகவேகமாக அண்ணன் தம்பி இருவரும் மலரழகியை காப்பாற்ற அவளை நோக்கி நீச்சல் அடித்து சென்றார்கள்.. மலரழகி தீரன் வந்து தன்னை காக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆப்த்தான செயலை செய்திருக்க ஆனால் இந்தர் அவனை விட வேகமாக நீந்தி சென்று மலரழகியை காப்பாற்றி கரைக்கு இழுத்து வர முயன்றான்.. அவளோ அவன் கையில் இருந்து நழுவி விடுபட்டு போக போராட தொடங்கினாள்..
அதை புரிந்து கொண்டவன் “ஹலோ.. என்ன பண்றீங்க? இப்படி போனீங்கன்னா செத்து போயிருவீங்க.. என்ன..? சூசைட் அட்டெம்ப்ட் ஏதாவது பண்றீங்களா? அதெல்லாம் ரொம்ப தப்பு மேடம்.. முதல்ல வாங்க.. எதுவா இருந்தாலும் கரைக்கு போய் சரி பண்ணிக்கலாம்..” என்றவன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் காற்றோடு கரைந்து போனது.. அவள் செவிக்குள் ஒரு வார்த்தை கூட நுழைந்து இருக்கவில்லை..
அதற்கு மேல் அவளிடம் பேசி பயன் இல்லை என்று புரிந்து கொண்டவன் அவள் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து வர அவளுக்கோ முடி ஏகத்துக்கும் வலித்தது..
“ஐயோ.. வலிக்குது.. விடுங்க..” என்று கத்தியவளை “அப்போ பேசாம அமைதியா என் கூட கரைக்கு வரணும்.. என் கையில இருந்து நழுவி போகக்கூடாது.. உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான் அவன்..
அவளோ எரிச்சலோடு “தெரியாது.. ஆனா நீங்க எதுக்கு என்னை காப்பாத்துனீங்க..? உங்களை யாரு என்னை காப்பாத்த வர சொன்னா..?”
“தற்கொலை பண்ணிக்கிறவங்க எல்லாரும் இப்படி சொல்றது சகஜம் தான்.. ஆனால் தற்கொலை எதுக்குமே தீர்வு கிடையாது..” என்று சொன்னவன் கடலில் இருந்து சிறிது வெளி பக்கமாக வந்ததும் அவளை இரு கையில் ஏந்தி கரைக்கு நடந்து வந்தான்..
அவளோ இந்தரின் வெற்று மார்போடு அவள் உடல் அங்காங்கே பட்டு உரசி கொண்டிருக்க அவளை அவன் கையில் ஏந்தி தூக்கி வந்தது சுத்தமாக பிடிக்காமல் அவன் கையில் நிலை கொள்ளாமல் நெளிந்து கொண்டிருந்தாள் பாவை அவள்..
ஆனால் இன்னும் இரண்டு நிமிடங்கள் தாமதம் ஆகி இருந்தால் அவள் முழுகி இருப்பது நிச்சயம்.. அலை அடித்துப் போன வேகத்தில் உடம்பு முழுவதும் வலி எடுக்க லேசாக மயக்கம் வந்தது அவளுக்கு.. அப்படியே கரைக்கு வருவதற்குள் அவன் கைகளிலேயே மயங்கி அவள் சரிய “ஹலோ.. மேடம்.. என்ன ஆச்சு? இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு தானே இருந்தாங்க? அண்ணா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கண்ணா..” என்று தன் அண்ணனுக்கும் குரல் கொடுத்தான் இந்தர்..
கரையில் அவளை மண் தரையில் படுக்க வைத்தான்..
அவளைப் பார்த்து “தண்ணி குட்ச்சி இருப்பாங்கடா..” என்று சொன்ன தீரன் அவளின் தோழியை பார்த்து “ஏங்க.. இன்னா அப்படியே பார்த்துக்கினு கீறிங்க? அவங்க வவுத்தை அமுக்கி தண்ணிய வெளியே எடுக்க மொயற்சி பண்ணுங்க..” என்று அவளை அவசரப்படுத்த அவளோ அவன் பேசிய பாஷையில் அதிர்ந்து போய் அப்படியே அவனைப் பார்த்தபடி சிலையாக நின்றாள்..
“ஏம்மா கண்ணு.. இன்னா வச்ச கண்ணி வாங்காம அப்படியே என்னியே பார்த்துக்கினு இருக்கிறே.. இன்னா.. உனிக்கு ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்டா?” என்று கேட்க சில நொடிகள் தடுமாறியவள் பிறகு தன்னை தானே சுதாரித்து கொண்டு அவன் சொன்னபடியே மலரின் வயிற்றை மெதுவாக அமுக்கினாள்..
கொஞ்சம் கொஞ்சமாக மலர் தான் விழுங்கிய தண்ணீர் எல்லாவற்றையும் வெளியே உமிழ்ந்த மலரழகி லேசாக கண்ணை திறந்து பார்க்க எதிரில் நின்று கொண்டிருந்த தீரனை பார்த்தவள் அதன் பிறகு தன் பக்கத்திலே அமர்ந்திருந்த இந்தரைபார்த்து ஓ என அழ தொடங்கினாள்..
அவள் நினைத்தது ஒன்று.. ஆனால் அங்கு நடந்தது ஒன்று.. அவளால் அதை தாங்கவே முடியவில்லை..
“அதான் என் தீரன் இருக்காரு இல்ல? அவர் என்னை காப்பாத்தி இழுத்துட்டு வந்திருப்பாரு இல்ல? நீங்க என்னை காப்பாத்தலன்னு இங்க யாரு அழுதாங்க..? நீங்க என்னை காப்பாத்தி உங்க கையில தூக்கிட்டு வந்ததுக்கு நான் அப்படியே கடலோடயே போய் இருக்கலாம்..”
அவளுடைய திட்டம் தவிடு பொடி ஆகிவிட்டதே என்ற ஆதங்கம் அவளுக்கு.. அந்த எரிச்சலை முழுவதுமாய் இந்த் மேல் கொட்டினாள் அவள்..
ஆனால் அவளை புருவம் சுருக்கி பார்த்த தீரனோ “என்ன உளரிக்கினு இருக்கற..? டேய் தம்பி.. இவ இன்னாடா சொல்றா?” என்று புரியாமல் கேட்க மலரழகி “உண்மையா தான் சொல்றேன்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. நான் உங்களை விரும்புறேன்.. கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா உங்களை தான் கட்டிக்குவேன்.. இல்ல இப்படியே காலம் முழுக்க இருந்திடுவேன்.. உங்களுக்கு எப்படியாவது என் காதலை புரிய வச்சிரணும்னு தான் நான் உங்க சூட்டிங்க்கு கூட வந்தேன்.. ஆனா நீங்க தான் பொண்ணுங்க பக்கம் திரும்பவே மாட்டேங்கிறீங்களே.. அதான்.. உங்களை என் பக்கம் திரும்ப வைக்க இன்னைக்கு..” அவள் சொல்லி முடிக்கும் முன்னால் அவளின் கன்னம் பழுத்திருந்தது..
இந்தர் தான் அவளை அடித்திருந்தான். “அறிவு இருக்கா உனக்கு? மூளையை கழட்டி வச்சிட்டு வந்து இருக்கியா? எங்க அண்ணாவை காதலிக்கிறேனா அவர்கிட்ட நேரா வந்து சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு இப்ப நீ பண்ண வேலையில உன் உயிர் போயிருந்தா யாரு பதில் சொல்றது? ஒருவேளை எங்களால உன்னை காப்பாத்த முடியாம நீ செத்து செத்து போயிருந்தன்னா உன் ஃப்ரெண்டு ஸ்டேஷன்ல போய் எங்க அண்ணன் பேரை சொல்லி அவருக்காக தான் நீ உயிரை விட்டன்னு சொன்னா.. எங்க அண்ணன் வாழ்க்கை என்னத்துக்காவறது..? என் அண்ணனை காதலிக்கிற நீ அவர்கிட்ட உன் காதலை கூட சொல்லாம நீ பாட்டுக்கு தண்ணில அடிச்சுட்டு போய் செத்துப் போயிருந்தன்னா அப்புறம் எப்படி எங்க அண்ணனை கல்யாணம் பண்ணி இருப்ப? இன்னும் ரெண்டு நிமிஷம் லேட்டாகி இருந்தாலும் உன் உயிர் போய் இருக்கும் டி லூசு..”
சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தான் இந்தர்.. அதற்குள் அவன் அருகில் வந்த இரணதீரன் “இந்தர் நீ வுட்றா தம்பி.. நான் பேசிக்றேன்..” என்றான்..
“நான் கூட எவனையோ நம்பி காதல்ல தோத்துட்டா போல.. அதான் தற்கொலை பண்ணிக்க கடல்ல விழுந்துட்டா போலன்னு நினைச்சேன்.. கடைசில பார்த்தா உங்ககிட்ட தன்னோட காதலை சொல்லணும்ங்கிறதுக்காக உயிரை விட போய் இருக்கா.. இந்த கிராக்கு.. என்னால இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலண்ணா.. காதல் வந்தா இவ்வளவு பைத்தியமாவா ஆயிடுவாங்க?” என்றவன் உள்ளுக்குள் “நான் கூட தான் காதலிக்கிறேன்.. அதுக்காக பைத்தியக்காரத்தனமா என் உயிரை எல்லாம் கொடுக்க மாட்டேன் பிடிவாதம் பிடிச்சு எப்படியாவது என் காதல்ல ஜெயிக்கணும்னு தான் பார்ப்பேன்.. இந்த பொண்ணு என்னன்னா கடல்ல குதிச்சு அல்மோஸ்ட் சொர்க்கலோகத்தை பார்த்துட்டு வந்திருக்கா..”
இப்படி பேசுபவன் எதிர்காலத்தில் ஒரு நாள் தானும் இதே தவறை தான் தான் காதல் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பிடிவாதக்காக செய்து எல்லோரையும் கவலையில் மூழ்கடிக்க போகிறான்..
இந்தரை தள்ளி நிறுத்திவிட்டு மலரழகியின் அருகில் வந்த தீரன் “தா பாரு.. உன்ன பாத்தா ரொம்ப சின்ன பொண்ணா தெரியுற.. தம்மாத்தூண்டு இருந்துக்கினு இந்த வயசுல இந்த மாதிரி காதலு கீதலு அது இதுன்னு புரியாம பேசிக்கினு இருக்கற.. உனிக்கு என் உருவத்தை பார்த்து ஒரு இது வந்துக்கினு இருக்கும்.. அந்த இதுக்கு பேரு லவ்வெல்லாம் இல்ல.. நீயே அப்படி எல்லாம் நெனச்சுக்கினு உன் வாய்க்கையை கெத்துக்காத.. இன்னியும் ஒரு நாலஞ்சி வருஷம் ஓடிச்சின்னா உனக்கே எல்லாம் க்ளியராயி பூடும்.. தோபாரு.. என்னை விட சிறுசா நம்ம இந்தர் மாறி சும்மா ஹீரோ கணக்கா எவனியாவது ஒரு டீஜன்டான ஆளு கிடைச்சா நீ இப்படி வெச்சிருக்கிறியே இந்த லவ்வு அது இருக்கிற இடம் தெரியாம காணாம பூடும்.. அப்போ உனிக்கு புரியும்.. உண்மையான காதல்னா என்னன்னு.. அதாங்காட்டியும் இல்லாம என் வாய்க்கையில பொண்ணுங்களுக்கு எடமே கிடையாது.. நான் தீவிர ஆஞ்சநேயர் பக்தன்.. கடைசி வரைக்கும் இந்த தீரன் ஒண்டிக்கட்டையா தான் இருப்பேன்.. இத்தை யாருமே மாத்த முடியாதி.. என் வாய்க்கையில எங்க அம்மாவை தவிர எந்த லேடியும் கிடையாது.. இப்போ அவங்களும் இல்லை.. அதனால என் வாய்க்கையை பொருத்தவரைக்கும் எனக்கு என் தம்பி மட்டும்தான்.. அதனால இந்த பச்சப்புள்ளத்தனமா நடந்துக்கினு இருக்காம ஒழுங்கா போய் படிக்கிற வேலையை பாரு.. உன்னை பார்த்தாலே தெரியுது.. காலேஜ் படிக்கிற பொண்ணுன்னு.. நல்லா பட்ச்சு பெரிய ஆளா ஆயிக்கினன்னு வை.. என்னை விட நல்ல ஆளா உனிக்கு ஏத்தவனா தானே தேடி வந்து உன்னை கண்ணாலம் செஞ்சுக்குவான்.. போ போய் உருப்படற வழியை பாரு..”
“முடியாது.. என்னை பொறுத்த வரைக்கும் நான் வெச்சிருக்கறது உண்மையான காதல் தான்.. நீ மட்டும் தான் எனக்கு புருஷன் ஆக முடியும்.. நான் மட்டும் தான் உனக்கு பொண்டாட்டி.. வேற யாரையும் உனக்கு பொண்டாட்டியா வர விடமாட்டேன்.. ஆஞ்சநேயர் பக்தனா இருக்கிற நீ கூடிய சீக்கிரம் ராம பக்தனா ஆயிரு.. அப்போ ஏக பத்தினி விரதனா காலம் முழுக்க என்னை கட்டிக்கிட்டு சந்தோசமா வாழலாம்..”
“இங்க பாரு.. அப்படியே நான் ஆஞ்சநேயர் சாமி சொல்லி என் விரதத்தை வுட்டாலும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. தம்மாத்தூண்டு பொண்ணு நீ.. எனக்கு 30 வயசு ஆவுது.. உனிக்கு 18 வயசு தான் இருக்கும் போல.. என்னால உன்னோட கண்ணாலங்கறது எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாது.. போய் படிப்பை பாரு.. இந்த நெனைப்பை இத்தோட வுட்டுடு..” அவன் சொல்ல சொல்ல அவள் பிடிவாதமோ கூடிக் கொண்டே போனது..
தீரன் தான் சிடுசிடுவென அவளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தானே தவிர இந்தருக்கோ அவள் பிடிவாதம் ரொம்ப பிடித்திருந்தது.. தான் மதியழகியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது போல் காதல் கொண்டவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள் என்பதை அவனால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது..
அதே நினைப்பில் “ஏன்ணா.. இதுல என்ன தப்பு இருக்கு? வயசை பார்த்து காதல் வராது.. 18 வயசு பொண்ணா இருந்தா என்ன..? உங்களை பிடிச்சிருக்கு அவளுக்கு.. அதுதான் முக்கியம்… நீங்க அவ கூட வாழ்க்கை முழுக்க வரணும்னு எதிர்பார்க்கிறா.. அவ அதை சொல்றதுக்கு எடுத்து கிட்ட முறை வேணா தப்பா இருக்கலாம்.. ஆனா அவ காதல் தப்பு கிடையாதுண்ணா.. நீங்க ஆஞ்சநேயர் பக்தர்.. அதனால யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்கன்னு ரீசன் சொல்லலாம்.. ஆனா அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அதுக்கு ஒரு காரணம் சொல்றீங்க பாருங்க.. அதை என்னால ஒத்துக்க முடியாது.. அதுக்காக நீங்க இவளை வேணான்னு சொல்றது நியாயமே கடையாதுண்ணா….”
“ஏய் இந்தரு.. என்னடா பேசற..? இதெல்லாம் ரொம்ப பெரிய பேஜாராயிடும்டா.. நீ கொஞ்சம் கம்முனு கட..” என்று சொல்லி “இங்க பாரு.. நீ ஆசைப்பட்டது நடக்காது.. அவ்ளோதான்.. போய் உன் வேலைய பாரு.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. உன்னை பாத்துட்டு இருக்கறது எனக்கு வேலை இல்லை..” என்று கடற்கரைக்கு வெளியே போக நடக்க தொடங்கியவன் அவள் குரலில் மறுபடியும் அப்படியே சிலையாக நின்றான்..
“போங்க போங்க.. நீங்க இந்த ரோட்டை தாண்டறதுக்கு முன்னாடி நான் இந்த கடலுக்குள்ள போய் சமாதியாகி இருப்பேன்.. நான் உங்களை விரும்பினேன்.. நீங்க என் காதல ஏத்துக்கல.. அதனால நான் காதல் தோல்வில செத்து போயிட்டேன்னு என் ஃபோன்ல போலீஸ்க்கு மெசேஜ் போட்டுட்டு நான் போறேன்..” என்று திரும்பி கடலுக்குள் போக போனவளை வேக வேகமாக வந்து இழுத்து பிடித்து திருப்பி ஓங்கி அறைந்திருந்தான் தீரன்..
உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா..
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்திடு கண்ணா..
உயிர் காதலன் நீயாக..
உந்தன் காதலி நானாக..
இன்பங்
கள் தேனாக..
இங்கு பொங்கட்டும் தானாக..
பனிவாடையில் வாடுது
வாசனைப் பூச் செண்டு..
தொடரும்..