லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 13

5
(7)

 

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 13

 

எதிரில் தன்னை தாக்க வந்தவர்களை சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருந்தவனை கண்கொட்டாமல் பார்த்து விழுங்கிக் கொண்டிருந்தாள் மலரழகி..

 

“ஐயோ தீரு குட்டி.. எவ்வளவு அழகா ஸ்டைலா சண்டை போடுற டா..? ஃபேக் சண்டை தான்.. ஆனா கூட நீ பண்ணும் போது பாக்குறதுக்கு அவ்வளவு ரியலா இருக்குடா.. உன்னோட ஹைட்.. பாடி பில்ட்.. உன்னோட அந்த சிக்ஸ் பேக் உடம்பு.. உன்னோட ஆக்சன்.. ஸ்டைல்.. இதெல்லாம் பார்க்கும் போது அப்படியே ஓடி வந்து உன்னை கட்டிக்கிட்டு அழுத்தமா ஒரு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு..”

மனதிற்குள் பேசிக் கொண்டவளிடம் அவள் மனசாட்சியோ “அடியேய்.. அவன் ஒரு ஆஞ்சநேயர் பக்தன்.. அப்படி நீ ஏதாவது செஞ்சா முதல்ல உனக்கு கன்னம் பழுக்க அன்னைக்கு விழுந்த மாதிரி அடி தான் விழும்..” என்று சொல்லி எச்சரிக்கை செய்தது..

 

“அறைஞ்சா அறையட்டும்.. எப்படியாவது அவன் கை என் மேல பட்டா சரி..” என்று அதற்கும் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்..

ஷாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த தீரன் தனது இருக்கையில் அமரும்போது மலர் அழகியை பார்த்து விட்டிருந்தான்.. ஒரு பெருமூச்சை விட்டு கண்ணை மூடி திறந்தவன் அவளை ஒரு அலுப்பான பார்வை பார்க்க துள்ளி குதித்து அவன் அருகே ஓடியவள் “ஹாய் தீரா.. நீ என்னை எப்படி வேணா பாத்துக்கோ.. ஆனா நான் அன்னிக்கு சொன்னதை தான் தினமும் செய்வேன்.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. நீ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலன்னாலும் நான் உன்னை லவ் பண்றது மாறாது.. உன்னை ஒரு நாள் நிச்சயம் கல்யாணம் பண்ணியும் காட்டுவேன்.. உன் மனசை மாத்திக்கறதுக்கு ரெடியா இரு..” என்று சொன்னவள் அவன் கன்னத்தில் கை விரல்களை குவித்து கொஞ்சுவது போல் எடுத்து முத்தம் கொடுக்க அவனோ அவளை தீவிரமாய் முறைத்தான்..

 

“ஏய் சின்னகுட்டி.. த பாரு.. இது ஷூட்டிங் ஸ்பாட்டு.. இங்க நீ இப்பிடி அல்லாம் நடந்துக்கினு இருந்தா என் மானம் தான் போவும்.. சொன்னா கேட்டுக்க..  என்னால உன்னை லவ்வாங்கி அல்லாம் பண்ண முடியாது.. நான் ஒரு காரணமா தான் இது அல்லாம் சொல்லிக்கினு கீறேன்..”

 

“என்ன காரணம்.. மாத்தி மாத்தி எப்பவும் நீ அறைக்கிற அதே புளிச்ச மாவை தானே திரும்பவும் அறைக்க போறே.. நான் ரொம்ப சின்ன பொண்ணு.. நீ ரொம்ப வயசானவன்.. அதனால உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. நீ ஒரு ஆஞ்சநேயர் பக்தன்.. இதைதானே சொல்ல போற? கேட்டு கேட்டு புளிச்சு போச்சு தீரா.. அதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பொண்டாட்டியோட வாழ்ந்தா உனீ ஆஞ்சநேயர் ஒன்னும் சொல்ல மாட்டாரு.. எப்ப நம்ம கல்யாணம்..? நீ அதை மட்டும் சொல்லு.. நீ ஓகே சொன்னா எத்தனை வருஷம் வேணா வெயிட் பண்றதுக்கு நான் ரெடியா இருக்கேன்.. ஆனா என்ன..? இப்பவே உனக்கு 30 வயசு ஆகுது.. இன்னும் லேட் பண்ணா உனக்கு அறுபதாம் கல்யாணம் பண்ற வயசாயிடுமேன்னு பார்க்கிறேன்.. ஆனா எவ்வளவு வயசானாலும் என் செல்ல குட்டி இப்படியே தான் டா அழகா இருப்பே நீ.. எனக்கு தெரியும்..”

 

மறுபடியும் அவள் கொஞ்சவது போல் செய்ய சுற்று முற்றும் பார்த்த தீரன் பல்லை கடித்தான்..

 

“இதா பாரு.. கட்ச்சியா ஒன்னு சொல்றேன்.. நான் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ்வாங்கி பண்ணிக்கினு கீறேன்.. உன்னை அல்லாம் கட்டிக்கிட்டு என்னால அதுக்கு துரோகம் பண்ண முடியாது.. அதனால இதோட போய் படிக்கிற வேலைய பாத்துக்க..”

 

அவன் சொன்னதைக் கேட்டவள் சத்தமாக சிரித்தாள்.. “ஓ.. லவ் பண்றியா? ஆமா.. இந்த ஐடியா உனக்கு யார் கொடுத்தா? இதை நான் நம்புவேன்னு நீ நினைக்கிறியா? அன்னிக்கு நான் கடல்ல விழ போனப்ப கூட நீ இப்படி லவ் பண்ணறதா ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல.. இப்போ என் தொந்தரவு தாங்காம எப்படி கழட்டி விடுறதுன்னு தெரியாம இப்படி நீ சொன்னா நான் நம்பிடுவேனா..? அதுக்கு வேற ஆளை பார்.. இங்க பாரு.. நான் உன்னை லவ் பண்றது பண்றது தான்.. உன்னை தான் கட்டிப்பேன்..”

 

அவள் குரலில் இன்னும் உறுதி அதிகமாய் தெரிய அவனுக்குள் கவலை குடி கொண்டது..

 

“அட இன்னாமே நீ.. நான் எம்மா தூரம் சொல்லிக்கினு கீறேன்.. கொஞ்சம் கூட காதுல வாங்காம நீ பேசினதையே பேசிக்கினிருக்கிற.. அன்னைக்கு நான் ஏன் சொல்லலனா நான் லவ் பண்ணுறது இங்கே எவனுக்குமே தெரியாது.. அந்த பொண்ணு இப்போதைக்கு என்னை கண்ணாலம் கட்டிக்க முடியாதுன்னு சொல்லி கீது.. அதனால கண்ணாலம் கட்டிக்கிற டைம் வர வரைக்கும் இந்த மேட்டரு யாருக்கும் தெரிய வேணாம்னு சொல்லி கீது.. அதான் அன்னைக்கு நான் உன்கிட்ட சொல்லல.. ஆனா அன்னைக்கு நட்ந்ததை போய் அது கிட்ட சொல்லவும் அதுதான் மேட்டரை உன்கிட்ட சொல்ல சொல்லுச்சு.. சொல்லறதை கேட்டுக்க.. என்னை மறந்துட்டு போய் உருப்படியா டாக்டராவற வேலைய பாரு..”

 

“சொல்லு சொல்லு.. நீ என்ன வேணா பேசு.. நான் கேட்கிறேன்.. ஆனா சத்தியமா நம்ப மாட்டேன்..” அவள் இன்னும் அழுத்தமாய் சொல்ல “அப்போ என் வார்த்தையை  நம்பிக்கிட மாட்டே..‌‌ சரி.. அடுத்த நாயித்துக்கியமை நானும் அந்த பொண்ணும் வெளியில சும்மா ஜாலியா போவ போறோம்.. எங்க போறோம்னு உன்கிட்ட சொல்றேன்.. அங்கே வந்து பார்த்துக்க.. இப்ப எட்த்தை காலி பண்ணு..”

 

இப்போது அவள் முகத்தில் சிறு மாற்றம் தெரிந்தது. அதுவரை உறுதியாக பேசிக் கொண்டிருந்தவள் சற்று அமைதியாக இருக்கவும் அந்த இடைவெளியை அவன் பயன்படுத்திக் கொண்டான்..

 

“த பாரு.. நான் மெய்யாங்காட்டியும் தான் சொல்றேன்.. உனக்கு நம்பிக்கை இல்லைன்னா அடுத்த வாரம் நீயே வந்து பாரு.. எனக்கு ஷாட்க்கு டைம் ஆவுது.. நீ கெள்ம்பு..” என்றவன் எழுந்து இயக்குனர் அழைக்காமலேயே அடுத்த காட்சிக்கு போய் தயாராக நின்று கொண்டான்..

 

முகத்தில் வண்டி வருத்தம் அப்பட்டமாக எதிரொலிக்க அங்கிருந்து ஒரு யோசனையுடனே நகர்ந்தாள் மலரழகி..

 

அவள் முகத்தில் இருந்த வருத்தத்தை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஒரு நிம்மதி படர்ந்தது.. அந்த நிம்மதியுடன் அடுத்த ஷாட்டை அமர்க்களமாக செய்து முடித்து இருந்தான் அவன்..

 

அடுத்த நாள் சொன்னது போலவே பார்கவியின் வீட்டில் பார்கவி பாண்டி மதியழகி தீரன் நால்வரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்..

 

இருவரையும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார்கள் பார்கவியும் பாண்டியும்..

 

அவனை கண்ட நொடி மதியழகிக்குள் ஒரு வித பதட்டம் சூழ்ந்து கொண்டது.. அவன் படங்களில் கதாநாயகனின் நகலாக நடிப்பவன் என்று பார்கவி சொல்லி இருக்க அவனோ ஒரு  கதாநாயகன் என்றே சொல்லும் படி ஆணழகனாய் இருந்தான்..

 

அவனுடைய உயரத்தையும் உடற்கட்டையும் முகவெட்டையும் கண்டவளுக்கு அவனோடு நடிப்பதை நினைக்கும் போது உள்ளுக்குள் உதறல் எடுத்தது.. ஒரு பழுப்பு நிற டி-ஷர்ட்டும் நீல நிற ஜீன்ஸும் அணிந்து பார்ப்பதற்கு அப்படியே அக்மார்க் சினிமா கதாநாயகன் போல் இருந்தவனை கண்டவளுக்கு பேச கூட நா எழாமல் மேல் அண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது..

 

ஆனால் இங்கே தீரனோ வேறு ஒரு அவஸ்தையில் இருந்தான்.. மதியை பார்த்த நொடி அவனுக்குள் என்னென்னவோ உணர்வுகள்..

அந்த உணர்வுகளை சமாளிக்க முடியாமல் தவித்தான் அவன்.. அவளோடு இணையாக தான் நடிக்க போகிறோம் என்ற நினைப்பே அவனுக்குள் ஏதோ ஒரு இனிப்பான உணர்வை விதைத்தது..

 

ஊதா நிற காட்டன் புடவை நேர்த்தியாக அவள் மேனியோடு உறைந்து போய் இருக்க அதிக ஒப்பனை இல்லாத வட்ட முகத்தில் வில்லாய் வளைந்த புருவங்களுக்கு கீழ் அம்பாய் பாயும் அலைபாயும் விழிகளோடு கூடிய பளிச்சிடும் விண்மீன் கண்கள்.. கூரான நாசி.. செம்மாதுளை சாறு எடுத்து செய்து வைத்த இனிப்பு துண்டமாய் இரு உதடுகள்.. கேள்வியாய் வளைந்திருந்த செவிகள்.. அவற்றின் மேல் அணிகலனாய் இருந்த மகிழ்ச்சியில் குதுகலமாய் துள்ளி ஆடிக்கொண்டிருந்த சிறிய ஜிமிக்கி.. பிறை நெற்றியில் அழகாய் சிறியதாய் வட்டமான பொட்டு.. நடு முதுகு வரை அழகாய் பின்னலிட்ட கூந்தல்.. கதிரின் ஒளியை தாங்கியது போல் மஞ்சள் நிற அழகு மேனி என்று அவள் அழகை ஒவ்வொன்றாய் விழிகளால் அளந்தபடி இருந்தவன் மெல்லிய அவளின் சங்கு கழுத்தை பிரமிப்பாய் பார்த்தபடி விழிகள் மேலும் கீழ இறங்க அதன் அத்துமீறலை தடுக்க வேண்டி தன் பார்வையை அவளிடம் இருந்து படாத பாடுபட்டு அகற்றிக் கொண்டான்..

 

அவள் அழகை அவன் அங்குலம் அங்குலமாய் ரசித்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் அவன் மனசாட்சி அவனை ஏகத்துக்கும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தது..

“அடேய் தீரா.. நீ ஆஞ்சநேயர் பக்தன் டா.. உன் விரதத்தை இந்த பொண்ணு காலி பண்ணிடும் போலயே..”

மாறி மாறி மனசாட்சி மிரட்டவும் தன் விரதத்தை எப்படி பாதுகாக்க போகிறோம் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவன்..

 

முதல் பார்வையிலேயே ஒரு ஆஞ்சநேயர் பக்தனை தலைகீழாய் கவிழ்த்து போட்டிருந்தாள் பெண்ணவள்..

 

இருவருமே நேருக்கு நேர் கண் கொண்டு பார்ப்பதையே தவிர்த்து இருந்தார்கள்..

 

கண்கள் கலக்கும் போது அவன் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் அவள் உள்ளே ஊடுருவும் பார்வை பார்க்க அந்தப் பார்வையை சமாளிக்க முடியாமல் திணறிப் போனாள் பெண்ணவள்..

இமைகளை தாழ்த்தி தரையை பார்த்துக் கொண்டிருந்தவள் மறந்தும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை..

 

அவனோ அவள் பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தான்.. அவளின் அழகான மீன் விழிகளை சந்தித்தவன் அந்த விழிகளின் ஆழத்தில் மீண்டும் மீண்டும் விழ ஆசை கொண்டான்..

 

ஆனால் அவளோ அதுவரை சேகரின் காம பார்வை.. இந்தரின் காதல் என்று நினைத்துக் கொண்டு பாசமும் மதிப்பும் கலந்து பார்க்கும் பார்வை.. என இப்படிப்பட்ட பார்வைகளை தான் ஒரு ஆணிடம் எதிர் கொண்டு இருக்கிறாள்..

ஆனால் இந்தப் பார்வையோ அவளுக்குள் என்னென்னவோ செய்தது..

 

பார்கவி “ரெண்டு பேரும் இப்படி அமைதியா இருக்கீங்க?! ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கலைன்னா அப்புறம் எப்படி ஒன்னா சேர்ந்து நடிப்பீங்க.. உங்க பிரச்சனைகளை பேசிகிட்டு எப்படி நடிக்க போறீங்க.. நீங்க எங்க மீட் பண்ணதா சொல்ல போறீங்க.. இதெல்லாம் பேசிக்கிட்டா தானே உங்க பின்னாடி சுத்துற அந்த பிள்ளைங்க முன்னாடி நடிக்கும் போது உங்களுக்கு ஈசியா இருக்கும்..”

 

அவள் சொன்னதைக் கேட்ட மதிக்கோ இன்னும் படபடப்பாய் ஆனது..

“ஏய் பவி.. என்னால முடியாதுடி.. நான் பேசாம வேற ஏதாவது வழியில அந்த பையனை சமாளிச்சுக்கிறேன்.. அவரை அவர் சூட்டிங் ஸ்பாட்டில ஏதாவது ஒரு துணை நடிகை இல்லன்னா ஹீரோயின் யாரையாவது பார்த்து அவங்களோட ஆக்ட் பண்ணி அந்த பொண்ணை சமாளிச்சுக்க சொல்லு.. என்னால இப்படி எல்லாம் நடிக்க முடியும்னு தோணலை. இது எனக்கு சரி வராது.. நான் கிளம்புறேன் டி..” என்று எழுந்து நின்று அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள் அவள்..

 

அங்கிருந்த மற்ற மூவரும் அவள் சொன்னதை கேட்டு அப்படியே அவளை அதிர்ச்சியோடு பார்த்திருந்தார்கள்..

அதிலும் தீரனுக்கோ உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போல் இருந்தது.. அவளுடன் ஒரு நாளாக இருந்தாலும் ஜோடியாக இணைந்து நடிக்கப் போகிறோம் என்று ஆனந்தத்தில் களித்திருந்தவன் அவள் சொன்ன அந்த வார்த்தையில் அப்படியே பதறி போனான்..

 

அவள் பெயர் மதியழகி என்று தெரிந்த கணமே அந்தப் பெயர் மிகப் பொருத்தமாக அவளுக்கு வைக்கப்பட்டிருந்தது என்று எண்ணிக் கொண்டிருந்தான்.‌ அப்படி ஒரு அழகை கொண்டு இருக்கும் அந்த தேவதையுடன் ஒரு நாள் செலவிட்டாலும் அது தன் வாழ்வில் இன்பத்தின் எல்லையை கொடுக்கும் என்று எண்ணி இருந்தவனுக்கு அவள் சொன்ன வார்த்தை ஏனோ கையில் புதையல் கிடைத்த மறுநொடியே அது மாயமானதை போன்ற ஏமாற்றத்தை கொடுத்தது..

 

எழுந்து நின்றவளை அவளின் தோள்பட்டையை அழுத்தி அமர வைத்தாள் பார்கவி..

 

தீரனோ அவள் சொன்ன வார்த்தையில் தவித்து போனான்..

“ஐயோ.. இவங்க ஏன் இப்படி சொல்றாங்க..? ஒருவேளை நம்மள பத்தி தப்பா நினைச்சுட்டாங்களோ..? நான் ஏதாவது தப்பா நடந்துக்குவேன்னு பயப்படுறாங்களோ..”

இப்படி யோசித்தவன் சற்றும் தாமதிக்காமல் உடனேவே அவளிடம் “மேடம்.. என்னிய பார்த்தா உங்களுக்கு ஒரு காண்டி வில்லங்கம் புட்ச்ச ஆள் மாறி இருக்குதோ இன்னாவோ.. ஆனா நம்ம செய்ற இந்த டகாலிட்டி வேலையில என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.. நான் உங்களாண்ட ஏதாவது சில்மிசம் பண்ணிக்குவேன்னு பயந்துக்குனீங்களா? அப்படி எல்லாம் நீங்க பயந்துக்கவே வோணாம்.. இந்த தீரன் ஒரு பக்காவான அனுமார் சிஷ்யன்.. எதுக்காகவும் என் ஆஞ்சநேயர் சாமிக்கு கெட்ட பேரு வர மாதிரி இந்த தீரன் என்னிக்கும் நடக்க மாட்டான்..”

 

கதாநாயகன் கணக்காய் அழகாய் இருந்தவன் வாயிலிருந்து அப்படி ஒரு பாஷையை எதிர்பார்க்கவில்லை மதி..

அவன் பேச்சைக் கேட்ட நொடி அப்படியே ஸ்தம்பித்து உறைந்து போய் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..

 

பெண்ணல்ல பெண்ணல்ல
ஊதாப்பூ..
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ…

கண்ணல்ல கண்ணல்ல
அல்லிப்பூ..
சிரிப்பு
மல்லிகைப்பூ..

 

சிறு கைவளை
கொஞ்சிடும் கொய்யாப்பூ..
அவள் கைவிரல்
ஒவ்வொன்றும்
பன்னீர்ப்பூ..

மைவிழி ஜாடைகள்
முல்லைப்பூ…
மணக்கும் சந்தனப்பூ..

 

சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும்

ஜாதிப்பூ
சிற்றிடை மீது

வாழைப்பூ
ஜொலிக்கும்

செண்பகப்பூ..

 

தென்றலைப் போல
நடப்பவள்
என்னைத்தழுவ
காத்து கிடப்பவள்
செந்தமிழ்
நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு
வாய்த்த மருமகள்..

 

சிந்தையில் தாவும்
பூங்கிளி
அவள் சொல்லிடும்
வார்த்தை தேன்துளி
அஞ்சுகம்
போல இருப்பவள்
கொட்டும்
அருவி போல
சிரிப்பவள்..

 

மெல்லியதாமரை
காலெடுத்து
நடையை பழகும்
பூந்தேரு
மெட்டியை காலில்
நான் மாட்ட
மயங்கும் பூங்கொடி..

 

சித்திரை மாத
நிலவொளி.. அவள்
சில்லென தீண்டும்
பனித்துளி..
கொஞ்சிடும்
பாத கொலுசுகள்..
அவை
கொட்டிடும்
காதல் முரசுகள்..

 

பழத்தைப் போல

இருப்பவள்

வெல்லப்பாகைப்

போல இனிப்பவள்

சின்ன மை

விழி மெல்ல

திறப்பவள்

அதில் மன்மத ராகம்

படிப்பவள்

உச்சியில்வாசனைப்

பூமுடித்து

உலவும்அழகு

பூந்தோட்டம்

மெத்தையில்

நானும்சீராட்ட

பிறந்த மோகனம்

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!