லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 8

4.4
(7)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 8

 

கல்லூரி முதல்வரிடம் இந்தர் சொன்னதை கேட்டு அப்படியே ஸ்தம்பித்து தன் செவிகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த மதி பேச்சற்று போனாள் அந்த நொடி.. 

 

இந்தர் தன்னிடம் அப்படி நடந்து கொண்டாலும் தன் பணியையோ தன் மரியாதையையோ பாதிக்கும் விஷயத்தை செய்ய மாட்டான் என்று முழுவதுமாக நம்பி இருந்தாள் அவள்..

 

ஆனால் இப்படி ஒரு பொய் சொல்லி தன்னை நிலை குலைய செய்தவனின் செயலை எப்படி ஜீரணித்துக் கொள்வது என்று தெரியாமல் எதுவும் கேட்க கூட தோன்றாது அவனை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

 

இந்தரோ அவள் கண்களை சந்திக்க முடியாமல் தலையை கவிழ்த்துக் கொண்டான்.. அவள் அவனின் அந்த தலை கவிழ்ப்பிலேயே அவனின் மனநிலை என்ன என்று புரிந்து கொண்டாள்.. சட்டென தன் நிலை மாற்றி உறுதியான பார்வையோடு கல்லூரி முதல்வர் பக்கம் திரும்பினாள்..

 

அவள் மனதில் ஓடியதோ “பொய் சொல்லும் இவனுக்கே அதை சொல்லும் போது நா கூசாத போது உண்மை மட்டுமே பேசும் நான் எதற்கு இவர்கள் முன் தலை குனிந்து பேசுவதற்கு தயங்கிக் கொண்டு இருக்க வேண்டும்” என்ற எண்ணம் தான்..

 

அந்த கல்லூரி முதல்வரோ “என்னம்மா மதி.. நீ இந்தர் ப்ரொபோஸ் பண்ணப்போ அக்செப்ட் பண்ணலன்னு சொன்னே.. வேணும்னா அவனையே கேட்டு பாருங்கன்னு அவ்வளவு கான்ஃபிடன்ட்டா சொன்னே.. ஆனா இப்ப அவன் என்னடானனா அவன் உன்னை லவ் பண்றதா சொன்னப்போ நீ அதை அக்சப்ட் பண்ணிக்கிட்டேன்னு சொல்றான்..”

 

“மேம்.. நான் என்ன செஞ்சேன்னு எனக்கு தெரியும்.. நான் எந்த தப்பும் பண்ணல.. நான் அவன் ப்ரொபோஸலை அக்சப்ட் பண்ணல.. இன் ஃபேக்ட் ஒரு ஸ்டூடண்டா இந்த மாதிரி பேசறது தப்புன்னு தான் அவனுக்கு நான் அட்வைஸ் பண்ணினேன்.. ஆனா அவன் எவ்வளவு கேட்டு பார்த்தும் நான் ஒத்துக்காததுனால இப்படி உங்க முன்னாடி வந்து சொன்னா வேற வழி இல்லாம நான் அக்செப்ட் பண்ணுவேன்னு நினைக்கிறான்.. ஆனா அது எப்படி இருந்தாலும் நடக்காது.. என் உயிரே போனாலும் நான் அந்த தப்பை பண்ண மாட்டேன்.. அவன் என்னோட ஸ்டூடண்ட்.. நான் அவனோட டீச்சர்.. அவ்வளவுதான்..”

 

அதற்குள் பார்கவி “ஆமாம் மேடம்.. சேகர் இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றதை பத்தி கேட்டதுனால தான் அவரை அடிச்சாங்கன்னு சொன்னாரு இல்ல.. அது முழுக்க முழுக்க பொய் மேடம்.. ஆக்சுவலா நான் பார்க்கும் போது சேகர் தான் மதி கைய புடிச்சு பின்னாடி இழுத்து முறுக்கி ரொம்ப கொடுமையா அவகிட்ட நடந்துக்கிட்டு இருந்தார்.. அதை தடுக்க போன என்னை கூட தள்ளிவிட்டார்.. அது மட்டும் இல்லாம அவ கிட்ட அவர் காதலை அக்செப்ட் பண்ணிக்கணும்னு கேட்டுகிட்டு இல்ல இல்ல மேடம் மிரட்டிக்கிட்டு இருந்தாரு..”

 

அப்படி அவள் சொன்னது தான்.. சேகரின் பக்கம் திரும்பிய இந்தர் “உனக்கு என்ன தைரியம் இருந்தா என் மதியை காதலிக்கிறேனு சொல்லுவ..?” என்று மறுபடியும் அடிக்கப் போக அவனை அந்த கல்லூரியின் பியூன் வந்து இழுத்து பிடித்து தடுத்தார்..

 

சேகரோ அமைதியாக இல்லாமல் “ஏன்டா.. அவளை விட 10 வயசு சின்னவன் நீ.. அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணுவ.. நான் அவளை விட ரெண்டு வயசு பெரியவன்.. நான் அவளை லவ் பண்றேன்னு சொல்ல கூடாதா? அதுல என்னடா தப்பு..? படிக்கிற வயசுல பொறுக்கி மாதிரி பாடம் எடுக்கிற டீச்சர் கிட்ட லவ் சொல்லிட்டு என்னை அடிக்க வரியா நீ? கொன்னுடுவேன்டா உன்னை..” என்று அது கல்லூரி முதல்வரின் அறை என்பதை கூடமறந்து பதிலுக்கு பதில் பேசினான்..

 

கல்லூரி முதல்வருக்கோ பொறுமை பறந்து போனது “ஷட் அப் போத் ஆஃப் யூ.. என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் இந்த காலேஜை பத்தி? இது காலேஜா.. இல்ல.. உங்களோட லவ்வர்ஸ் பார்க்கா..? ரெண்டு பேரும் ஒரு டீச்சர் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணதும் இல்லாம அவங்களுக்காக நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குறீங்க..? அசிங்கமா இல்ல உங்களுக்கெல்லாம்..? மிஸ் மதி.. எனக்கு என்னவோ இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறதிலிருந்தே நீங்க சொன்னது தான் உண்மையா இருக்கும்னு தோணுது..” 

 

அங்கு நடந்த கலவரத்திலிருந்து உண்மையை உணர்ந்து கொண்டார் அந்த கல்லூரி முதல்வர்.. பல மனிதர்களை கடந்து வந்தவர் ஆயிற்றே.. அத்தனை வருட அனுபவம் அவருக்கு எளிதில் உண்மையை கண்டடைய உதவியது..

 

“ஆமா மேடம்.. இந்த இந்தர் நான் ஸ்டாஃப் ரூம்க்கு போய் ஒரு ஃபைவ் மினிட்ஸ் கழிச்சு தான் மேடம் வந்தான்.. அதுவரைக்கும் இந்த சேகர் மதியோட கையை முறுக்கி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே ஆகணும்னு மிரட்டிக்கிட்டு இருந்தான்..”

 

மதியழகி பார்கவியின் கையைப் பிடித்து அழுத்தி அவளுக்கு பார்வையாலேயே நன்றி சொன்னாள்.. அவளோ “விடு மதி.. நடந்ததை தானே நான் சொல்றேன்.. இந்த ஆம்பளைங்க எல்லாம் என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்களோ தெரியல.. அவங்க ஒன்னு நினைச்சுட்டாங்கனா அது நடந்தே ஆகணும்.. நம்ம மனசை பத்தி எல்லாம் அவங்க யோசிக்கிறதே கிடையாது..”

 

சேகர் இந்தர் இருவரையும் மாறி மாறி முறைத்துக் கொண்டே சொன்னாள் பார்கவி..

 

“சேகர்.. உங்களை இந்த வேலையில இருந்து இதோட டிஸ்மிஸ் பண்ணறேன்.. உங்களோட டிஸ்மிஸல் ஆர்டர்ல நீங்க செஞ்ச தப்பை எல்லாம் மென்ஷன் பண்ண போறேன்.. அப்பதான் வேலை செய்ற இடத்துல பொண்ணுங்க கிட்ட இப்படி நடந்துக்குறவங்களுக்கு எல்லாம் ஒரு பாடமா இருக்கும்..”

 

கல்லூரி முதல்வர் சொன்னதை கேட்ட மதியழகி “மேடம்.. எனக்கு சேகர் ஃபேமிலியை பத்தி தெரியும் மேடம்.. அவங்க வீட்ல அவர் சம்பளத்தை நம்பி நிறைய பேர் இருக்காங்க..  நீங்க அவரை வேலையை விட்டு அனுப்புறது சரியான தண்டனை தான்.. ஆனா அவர் செஞ்ச தப்புக்கு அவங்க ஃபேமிலியை தாண்டிக்காதிங்க மேடம்.. நீங்க அவரை டிஸ்மிஸ் பண்ணாதீங்க மேடம்.. அவரையே ரெசிக்னேஷன் கொடுத்துட்டு போக சொல்லுங்க.. இதனால அவருக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்த மாதிரி இருக்கும்.. வேற இடத்துல அவருக்கு வேலை கிடைக்கும்.. ஆனா போற இடத்துல நல்லவிதமா நடந்துக்க சொல்லுங்க அவரை..”

 

அவள் சேகரை முறைத்த படி சொல்லவும் கல்லூரி முதல்வர் “என்ன சேகர்.. இப்பவும் மதி உங்க ஃபேமிலியோட வெல்பீயிங் பத்தி யோசிக்கிறாங்க.. நீங்க அவங்களுக்கு அவ்வளவு கொடுமை பண்ணியும் அவங்க உங்க ஃபியூச்சரை பத்தி யோசிக்கிறாங்க.. அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்றீங்களோ இல்லையோ.. இனிமே அவங்கள இந்த மாதிரி தொந்தரவு பண்ணாம இருங்க..  என்ன ரெசிக்னேஷன் கொடுக்குறீங்களா இல்ல நான் டிஸ்மிஸ் பண்ணவா?” என்று கேட்க “இல்ல மேடம்.. நானே ரெசிக்னேஷன் கொடுக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு தன் ராஜினாமா கடிதத்தை எழுத அங்கு இருந்து வெளியே போய் விட்டான்..

 

இந்தர் பக்கம் திரும்பிய கல்லூரி முதல்வர் “என்ன இந்தர் ஒன்னையும் டிஸ்மிஸ் பண்ணிடலாமா?” என்று கேட்க “எதுக்கு மேடம்? நான் என்ன தப்பு செஞ்சேன்..? எனக்கு அவங்களை பிடிச்சிருந்தது.. அவங்களை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ப்ரொபோஸ் பண்ணேன்.. இதில என்ன தப்பு இருக்கு..? இத்தனைக்கும் நான் இப்பவே கல்யாணம் பண்ணனும்னு சொல்லல.. நான் படிச்சு முடிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்.. ஏன் கம்மி வயசுக்குற பையன் தன்னை விட அதிகமா வயசு இருக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா.. இல்ல ஒரு ஸ்டூடன்ட் ஒரு டீச்சரை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா நம்ம நாட்டுல..? அப்படி ஏதும் ரூல்ஸ் இருக்கிறதா எனக்கு தெரியல.. நான் மதிக்கிட்ட எதுவும் முறை தவறியும் நடக்கல.. நான் நாகரீகமா தான் என் விருப்பத்தை அவங்க கிட்ட சொன்னேன்.. அஃப்கோர்ஸ் அவங்க என் ப்ரொபோஸலை அக்செப்ட் பண்ணல.. அக்சப்ட் பண்ணிட்டாங்கன்னு நான் உங்ககிட்ட சொன்னது பொய்.. அது மட்டும் தான் நான் செஞ்ச தப்பு.. அதுக்கு வேணா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. ஆனா நீங்க டிஸ்மிஸ் பண்ற அளவுக்கு நான் எதுவும் தப்பு செஞ்சதா எனக்கு தெரியல..”

 

தைரியமாய்  கல்லூரி முதல்வர் கண்களை பார்த்து பதில் சொன்னான் இந்தர்..

 

“நீ என்னைக்கு ஃபர்ஸ்ட் மதி கிட்ட ப்ரொபோஸ் பண்ண..?” 

 

“நேத்து பண்ணினேன் மேடம்..”

 

“அப்போ அவங்க என்ன சொன்னாங்கன்னு என்கிட்ட சொல்ல முடியுமா?”

 

“அவங்க எனக்கு அந்த மாதிரி எதுவும் ஐடியா இல்லை.. என்னால உன் ப்ரொபோஸலை அக்செப்ட் பண்ண முடியாதுன்னு தான் சொன்னாங்க.. இன் ஃபேக்ட் எங்க வீட்ல எங்க அம்மா அப்பா எங்க அண்ணா என்னை வளர்த்த விதத்தை பத்தி தப்பா பேசினாங்க.. நான் செய்யறது தப்புன்னு எனக்கு அட்வைஸ் பண்ணாங்க”

 

“அதெல்லாம் விடு.. அதெல்லாம் கோவத்துல பேசுறது.. ஆனா உன் ப்ரொபோஸலை அக்சப்ட் பண்ண முடியாதுன்னு நேத்து மதியம் உன்கிட்ட தெளிவா சொல்லிட்டாங்க இல்ல..? ஆமா.. அதுக்கு அப்புறம் நீ மறுபடியும் மதி கிட்ட பேசுனியா?”

 

“பேசினேன் மேடம்.. இன்னிக்கு காலைல பேசினேன் மேடம்.. மறுபடியும் மதி கிட்ட என்னை அவங்களுடைய லைஃப் பார்ட்னரா ஏத்துக்க சொல்லி கேட்டேன்.. ஆனா அவங்க வேற யாரையோ விரும்புறதா என்கிட்ட சொன்னாங்க.. அவங்களோட வயசு அதிகமானவரை விரும்புறதா சொன்னாங்க.. ஆனாலும் நான் அதை நம்பல.. ஏன்னா மதியை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அவங்க ஈவினிங் ஒரு பார்ட் டைம் ஜாப் பண்றாங்கன்றது கூட எனக்கு தெரியும்.. அவங்க குடும்பத்தை பத்தியும் எனக்கு தெரியும்.. அவங்க தன்னோட தங்கச்சி வாழ்க்கை செட்டில் ஆகாம கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க எனக்கு நல்லாவே தெரியும்”

 

“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்? எல்லா இடத்துக்கும் அவங்களை ஃபாலோ பண்ணி போனியா?”

 

புருவம் நெறித்து கல்லூரி முதல்வர் கேட்க “இதில என்ன டவுட் மேடம்? ஃபாலோ பண்ணாம எனக்கு எப்படி அவங்களை பத்தி எல்லா டீடெயில்ஸூம் தெரியும்.. ஆமா.. அவங்களை நான் அவங்கள பார்த்த நாளா ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன்..”

 

அவன் தெனாவட்டாய் பதில் சொல்ல கல்லூரி முதல்வரோ “முதல்ல இஷ்டம் இல்லாதவங்களை உன் லவ்வை அக்செப்ட் பண்ண சொல்லி ஃபோர்ஸ் பண்ணி இருக்கே.. அவங்களை இவ்வளவு நாளா ஸ்டாக் பண்ணி இருக்கே.. உன் மேல மதி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாங்கன்னா உன் வாழ்க்கையே அழிஞ்சிடும்.. நான் தப்பே பண்ணல தப்பே பண்ணலைன்னு சொல்றியே.. உன் மேல இஷ்டம் இல்லன்னு சொல்ற பொண்ணை.. இன்னொருத்தரை விரும்பறேன்னு சொல்ற பொண்ணை.. நீ உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி ஃபோர்ஸ் பண்றது தப்பு கிடையாதா? உங்க ஊர்ல இதுக்கு பேரு தப்பு இல்லையாப்பா..?”

 

“இல்ல மேடம்.. மதிக்கு நிச்சயமா என் மேல விருப்பம் இருக்கு.. ஆனா தன்னைவிட எட்டு ஒன்பது வயசு சின்ன பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த சமூகம் என்ன சொல்லுமோன்ற பயத்துல தான் அவங்க என் பிரபோசலை அக்செப்ட் பண்ணிக்க தயங்குறாங்களே தவிர இந்த சொசைட்டி இந்த மாதிரி ஒரு கல்யாணத்தை அக்னாலேஜ் பண்ணா அவங்களும் என் ப்ரொபோஸலை இந்நேரம் அக்செப்ட் பண்ணி இருப்பாங்க.. அவங்க வேற ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்றதும் பொய்.. என்னை சமாளிக்கறதுக்காக அவங்க சொல்ற பொய் அது.. இது எனக்கு நல்லாவே தெரியும்.. அதனாலதான் என்னைதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி அவங்களை நான் ஃபோர்ஸ் பண்ணேன்..”

 

அவன் தெளிவாய் சொன்ன நேரம் அப்படியே கண்ணை மூடி பெருமூச்சு விட்டாள் மதியழகி.. கல்லூரி முதல்வருக்கும் அவன் பிடிவாதம் புரிந்தது..

 

“சரி.. இனிமே உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல.. நாளைக்கு உங்க அண்ணாவை என்னை பாக்க வர சொல்லு.. நான் எதுவா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கிறேன்.. அவரையே கேட்ட ஒரு முடிவுக்கு வரலாம் நீ செஞ்சது தப்பா இல்லையான்னு..”

 

இந்த வார்த்தையில் இந்தர் கொஞ்சம் பதட்டமானான்.. 

 

பயத்தில் எச்சில் விழுங்கிய படி “அண்ணாவா? அண்ணா எதுக்கு மேடம்?” என்று கேட்டவனை பார்த்த கல்லூரி முதல்வர் “பரவாயில்ல.. பய சிக்கிட்டான்.. இவனோட வீக்னெஸ் என்னன்னு தெரிஞ்சிருச்சு.. இனிமே இவனை வழிக்கு கொண்டு வந்துடலாம்.” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார்..

 

“அவரை எதுக்கு கூப்பிடுறீங்க மேடம்..? உங்களுக்கு என்ன இப்ப..? நான் மதியை டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அவ்வளவு தானே? சரி மேடம்.. இனிமே நான் அவங்களை இந்த காலேஜ்குள்ள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. அவங்களை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கவும் மாட்டேன்.. இந்த காலேஜ்க்குள்ள அவங்க கிட்ட நான் பேசக்கூட மாட்டேன்.. ஆனா எங்க அண்ணாவை எல்லாம் நான் கூட்டிட்டு வர மாட்டேன்.. அவர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ற அளவுக்கு நான் எந்த தப்பு பண்ணதா எனக்கு தோணல.. அப்படி உங்களுக்கு டிஸ்மிஸ் பண்ணி தான் ஆகனும்னா என்னை டிஸ்மிஸ் பண்ணிக்கோங்க.. நான் அதை பத்தி எங்க அண்ணா கிட்ட சொல்லி சமாளிச்சுக்கிறேன்.. ஆனா எந்த காரணத்தை கொண்டும் எங்க அண்ணா இது விஷயமா காலேஜுக்கு வர மாட்டாரு..” 

 

உறுதியான குரலில் சொன்னவனுக்கோ உள்ளுக்குள் தன் அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வேதனை படுவார் என்று எண்ணுகையில் பெரிய கலவரமே மூண்டது அவன் மனதில்..

 

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…

நீருக்குள் மூழ்கிடும் தாமரை…

சட்டென்று மாறுது வானிலை…

பெண்ணே உன் மேல் பிழை…

 

நில்லாமல் வீசிடும் பேரலை…

நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…

பொன்வண்ணம் சூடிய காரிகை…

பெண்ணே நீ காஞ்சனை…

 

ஓம் சாந்தி சாந்தி ஓம் சாந்தி…

என் உயிரை உயிரை நீ ஏந்தி…

ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…

இனி நீதான் எந்தன் அந்தாதி…

 

ஏதோ ஒன்று என்னை ஈா்க்க…

மூக்கின் நுனி மா்மம் சோ்க்க…

கள்ளத்தனம் ஏதும் இல்லா…

புன்னகையோ போகன்வில்லா…

 

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ…

நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ…

 

என்னோடு வா வீடு வரைக்கும்…

என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…

 

இவள் யாரோ யாரோ தெரியாதே…

இவள் பின்னால் நெஞ்சே போகாதே…

 

இது பொய்யோ மெய்யோ தெரியாதே…

இவள் பின்னால் நெஞ்சே போகாதே..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!