அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 102🔥🔥

5
(3)

பரீட்சை – 102

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

நித்திலாவை பல் பிடுங்கிய பாம்பாய் அடக்கி வைத்த அருண் அதன் பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்று அவளிடமும் விஷ்வாவிடமும் விளக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்..

 

அவளும் வேறு வழி இன்றி அந்த காவல் நிலையத்திற்கு வந்து அவன் சொன்னபடியே சாட்சி சொல்லிவிட்டு எதுவும் செய்ய முடியாத தன் கையாலாகாத நிலையை நொந்து கொண்டு தன் தந்தையை தேடி சென்று விட்டாள்..

 

அருணின் ஆட்கள் ஒவ்வொரு நொடியும் நித்திலாவை கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.. நித்திலாவை மட்டும் இன்றி நித்திலாவின் தந்தையின் நடவடிக்கைகளையும் கண்காணித்து அருணுக்கு தகவல் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அவர்கள்..

 

அன்று நிகழ்ந்தவை அனைத்தையும் சொல்லி முடித்த அருண் “இனிமே நித்திலாவால அஸ்வினிக்கு எந்த பாதிப்பும் வராது.. நீங்க தைரியமா இருக்கலாம்.. நிலவழகனுக்கும் சின்ன பையனுக்கும் இந்த விஷயத்தை எல்லாம் சொல்லி இருந்தா அவங்களை மோப்பம் புடிச்சு அந்த நித்திலாவோட அப்பா என் வரைக்கும் வந்து என் நிலைமையை தெரிஞ்சுக்கிட்டு இருப்பாரு.. அஸ்வினி உயிருக்கு மறுபடியும் ஆபத்து ஆயிரும்.. அதனால தான் அவங்க யார் கிட்டயும் விஷயத்தை சொல்ல விடல நான்.. அந்த மலை மேல வர்றதுக்கு முன்னாடி விஷ்வா கிட்ட மறுபடியும் என்னையும் வைஷ்ணவியையும் மீட் பண்ண வேணாம்னு தான் சொன்னேன்.. ஆனா விஷ்வாவும் வைஷூவும் அதுக்கு ஒத்துக்கல.. அதுவும் விஷ்வா நான் ஹாஸ்பிடலுக்கு வந்தப்புறம் என் நிலைமை என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு அடம் பிடிச்சான்.. நான் எவ்வளவு சொல்லியும் இதோ இந்த வைஷூ விஷ்வா கிட்ட அந்த ஹோட்டல்ல நைட்டு மீட் பண்ணறேன்னு சொல்லி இருந்தா.. முதல்ல கோபப்பட்டாலும் அப்புறம் எனக்கு உங்ககிட்ட எப்படியும் எல்லா விஷயத்தையும் சொல்லணும்னு மனசுல தோண ஆரம்பிச்சுது.. நீங்க எப்படியும் விஷ்வா மூலமா என்னை தேடி கண்டுபிடிச்சிடுவீங்கன்னு எனக்கு தெரியும்.. அதனாலதான் நேத்து நைட்டு நானே என்னை தனியா விட்டுப் போக மாட்டேன்னு சொன்ன வைஷூவை கம்பல் பண்ணி அந்த ஹோட்டலுக்கு அனுப்பி வெச்சேன்”

 

அவன் முகம் மிகவும் களைத்து போயிருந்தது.. அதை கண்ட‌ ராம் “சரி.. அதான் எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டீங்க இல்ல? நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நானும் வைஷ்ணவியும் வெளியே போய் இருக்கோம்.. நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க..”

 

ராம் அவனுக்காக கவலைப்பட்டு சொல்ல “இனிமே ஒரு பெரிய தூக்கம் நிம்மதியா போட போறேன்.. அஷ்வினிக்கு ஆபத்து வந்துருமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்துக்கிட்டு இருந்தேன்.. இப்பதான் நிம்மதியா இருக்கு எனக்கு.. இனிமே எனக்கு எந்த கவலையும் இல்லை.. எக்ஸ்ட்ரா நிம்மதியோட ஒரு பெரிய தூக்கம் போடறதுக்கு ரெடியா இருக்கேன் நான்‌‌..” 

 

அவன் சொன்னதை கேட்டவன் “உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது அருண்? இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. நீங்க தூங்குங்க நானும் வைஷுவும் உங்களை டிஸ்டர்ப் பண்ணாம வெளியில உட்கார்ந்துகிட்டு இருக்கோம்.. டூ அவர்ஸாவது நீங்க தூங்குனா தான் உங்களுக்கு நல்லது..”

 

அவனை குழந்தையை மிரட்டும் தாயைப் போல தோளை பிடித்து உறங்கச் சொல்லி சொன்னவன் வைஷுக்கு கண்ணை காட்டி வெளியே வர சொல்லி இருவரும் வெளியே இருந்த ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தார்கள்..

 

வெளியே வந்து அமர்ந்தவன் “வைஷூ.. நீயும் விஷ்வாவும் ஏதோ அருண் சொன்னார்னு அவரோட இந்த நிலைமையை பத்தி சின்ன பையன் கிட்டயும் நிலவழகன் கிட்டயும் சொல்லாம இருக்கீங்க.. ஆனா நாளை பின்ன அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க உங்களை தானே கேள்வி கேப்பாங்க.. என்ன பதில் சொல்வீங்க நீங்க ரெண்டு பேரும்..? இப்பதான் அந்த நித்திலாவால தேஜூவுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லைனு தெரிஞ்சு போச்சு இல்ல? பேசாம அவங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டா என்ன?”

 

“எனக்கும் தோணிச்சு ராம் சார்.. ஆனா அருண் சார் சொல்றதை மீறி எனக்கு எதுவும் பண்ண முடியல..” என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கி கண்ணீர் ஆறாய் பெருக தொடங்கியது..

 

“வைஷு அழாத மா.. அருணை நீ விரும்பற இல்ல?” என்று கேட்டது தான் தாமதம்.. அவன் தோளில் சாய்ந்து கதறி கதறி அழ ஆரம்பித்தாள் வைஷு..

 

“என்னால முடியல ராம் சார்.. ஒவ்வொரு தடவை அவர் நான் நிம்மதியா போயிடுவேன் போயிடுவேன்னு சொல்லும்போதும் எனக்கு உயிரே போய்ட்டு வருது.. கடவுள் ஏன் சார் இவ்வளவு கொடுமைக்காரரா இருக்காரு? அதுவும் அவரு மனசு ஒவ்வொரு நிமிஷமும் யாருக்காக துடிச்சுக்கிட்டு இருக்கோ அவங்களும் அவரையே நெனச்சு ஒவ்வொரு நிமிஷமும் இப்ப துடிச்சிட்டு இருக்கற நானும் சேர்ந்து அவரோட இந்த நிலைமைக்கு காரணம் ஆயிட்டோம்.. அவருக்கு அப்படி ஒரு கொடுமையை அதுவும் எங்களை செய்ய வெச்ச அந்த கடவுளுக்கு கண்ணே இல்ல சார்.. என்னால என்னையே மன்னிக்க முடியல ராம் சார்..”

 

மேலும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு கதறியவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அவள் தலையை வருடிவிட்டான் ராம்..

 

அவர்கள் பேசியது அத்தனையும் தெள்ளத் தெளிவாக காதில் விழ அதற்கு மேல் அங்கு ஒளிந்து கொண்டிருக்க முடியாமல் வெளியே வந்தார்கள் அங்கிருந்த சுவற்றின் பின்னால் மறைந்திருந்த நிலவழகனும் சின்ன பையனும்.. 

 

ராமும் வைஷூவும் அவர்களைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.. இருவரும் வைஷ்ணவியை முறைத்து விட்டு அந்த அறைக்குள் போக எத்தனிக்க “ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. இப்போ உள்ள போகாதீங்க.. அருண் இவ்வளவு நேரம்  ரொம்ப மூச்சு திணறலோட பேசிட்டு இப்பதான் தூங்கி இருக்காரு.. ரொம்ப அடம் புடிச்சு கஷ்டப்பட்டு அவரை தூங்க வச்சிருக்கேன்.. அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..” 

 

ராம் சொல்ல இருவரும் சேர்ந்து வைஷ்ணவியைதான் முறைத்துக் கொண்டு இருந்தார்கள் வெகுநேரமாய்..

 

“என்ன வைஷு..? இவ்வளவு நாளா நாங்க எல்லாம் அவரோட கூடவே இருந்தோம்… நேத்து வந்த நீங்க எங்க கிட்ட இருந்து அவர் நிலைமையை மறைச்சு வெச்சு மொத்தமா எங்க கண்ணிலேயே காட்டாம அவரை ஒளிச்சு வச்சுட முடியும்னு நெனச்சீங்களா? அது உங்களால முடியாது வைஷூ.. ஏன்னா எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப் அப்படி.. என்ன நினைப்புல இந்த வேலை எல்லாம் நீங்க பண்ணினீங்க?” அடுக்கடுக்காய் தொடுத்த கேள்விச் சரத்தில் திக்கு முக்காடி போய் நின்றாள் வைஷ்ணவி..

 

சின்ன பையன், “அக்கா.. என்னோட சின்ன வயசுல இருந்து அவரோட கூடவே இருந்து இருக்கேன்.. எனக்கு அவ்ளோ செஞ்ச அவரை இப்படி கஷ்டப்பட விட்டுட்டு எங்களை அவர்கிட்ட இருந்து தள்ளி வைச்சுட முடியும்னு எப்படிக்கா நெனைச்சீங்க?” இருவரும் மாறி மாறி வைஷூவை கேள்விகளால் துளைத்தெடுக்க அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.. ராம் அவள் உதவிக்கு வந்தான்..

 

“கொஞ்சம் ரெண்டு பேரும் அமைதியா இருங்க.. ஆக்சுவலா வைஷ்ணவி அருணை பத்தி உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு நினைக்கல.. அருண் அவளை எதுவும் சொல்றதுக்கு விடல.. மீறி அவ அந்த மாதிரி ஏதாவது செஞ்சு இருந்தான்னா அருண் வைஷ்ணவிக்கும் தெரியாம எங்கேயாவது போய் இருப்பாரு.. இப்ப ஏதோ அவ ஒருத்தியையாவது அவருக்கு துணையா இருக்க அவர் அனுமதிச்சு இருக்காரு..  நீங்க சொல்ற மாதிரி உங்க கிட்ட சொல்றதுக்கு அவ ட்ரை பண்ணி இருந்தா கூட அவளும் இல்லாம அவர் தனியா எங்கயாவது போய் கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பாரு.. அது இன்னும் கொடுமையா இருந்திருக்கும்.. அவரு தேஜூவோட சேஃப்டிக்காக தான் உங்க யார்கிட்டயும் இந்த விஷயத்தை பத்தி சொல்லல.. ஆனா நீங்க எப்படியோ இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இங்க வந்து இருக்கீங்க.. இந்த விஷயம் தெரிஞ்சாலே அவர் உள்ளுக்குள்ள தேஜூவை நெனைச்சு பயந்து போவாரு.. ஏன்னா தேஜூவை நித்திலாங்கற ஆபத்து சுத்தி சுத்தி வந்துகிட்டு தான் இருக்கு..”

 

இருவரிடமும் ராம் சொன்ன சமாதானங்கள் எதுவும் எடுபடவில்லை.. “என்ன சொல்றீங்க ராம் சார்? எங்க அண்ணன் முழுசா எங்களை விட்டு போகிற நிலைமையில் இருக்காருன்னு இப்ப நீங்க பேசிட்டு இருந்ததை நாங்க கேட்டோம்.. எங்க கண்ணுல கூட காட்டாம அவரை இப்படி ஒளிச்சு வைக்கிறது எப்படி பார்த்தாலும் நியாயம் கிடையாது ராம் சார்.. அவரே அதை பண்ண சொல்லி இருந்தாலும் நான் அவர் கிட்டயும் சண்டை போடுவேன்” சின்ன பையன் சொன்னதை கேட்டு ராம் சிரித்தான்..

 

“சின்ன பையா.. நீ அருண் மேலே எவ்வளவு பாசம் வச்சிருக்கிறேன்னு எனக்கு தெரியும்.. ஆனா உன்னோட அண்ணன் தேஜு மேல எவ்வளவு உயிரை வெச்சிருக்கிறார்னு உனக்கு தெரியும் இல்ல? அவளுக்கு சின்ன கீறல் பட்டா கூட அவர் தாங்க மாட்டார்.. அதுக்காக அவர் ஒரு வேலையை பண்ணும்போது யார் தான் என்ன பண்ண முடியும்? அவர் பண்றது தப்புன்னு உன்னால அவர்கிட்ட சொல்ல முடியுமா? உனக்கு தெரியாதா தேஜூவோட சேஃப்டியை பொறுத்த வரைக்கும் அவரு எப்படி யோசிப்பார்ன்னு.. நீ அவர் கூடவே இருந்து அவரை அணு அணுவா தெரிஞ்சுகிட்டவன்.. இதெல்லாம் நான் உனக்கு சொல்லணுமா? உனக்கு அவரை பத்தி நல்லாவே தெரியும்.. அவர் ஏன் இப்படி எல்லாம் பண்றாருன்னு நீ புரிஞ்சுக்கோ சின்ன பையா..”

 

ராம் பேசியதை கேட்டவன் முகத்தை மூடிக்கொண்டு அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கதறி கதறி அழ ஆரம்பித்தான்..

 

“அப்போ அண்ணன் எங்களை விட்டு போயிடுவாரா? அவருக்கு என்னதான் ஆச்சு சார்?” என்று சின்ன பையன் கேட்க இருவரையும் அமர வைத்து நிகழ்ந்த எல்லாவற்றையும் விளக்கி கூறினான் ராம்..

 

“அருண் வளரும்போது தனியா ஒரு அனாதை ஆசிரமத்தில வாழ்ந்தவரு.. ஆனா அவரோட அன்பால இப்ப இவ்வளவு உறவுகளை அவர் சம்பாதிச்சு வெச்சிருக்கிறார். இப்போ நம்ப ஒவ்வொருத்தரும் அவரை எப்படியாவது காப்பாத்திட முடியாதான்னு துடிக்கறோம் பாருங்க.. இதுதான் அவர் நல்ல குணத்துக்கு கடவுள் அவருக்கு கொடுத்த பரிசு… ஆனா அந்த இதயம் இன்னும் எவ்வளவு நேரம் துடிக்க போகுதுன்னு தெரியாது.. அதுவரைக்கும் அவருக்கு தைரியம் கொடுக்க வேண்டியது நம்மளோட கடமை.. அது வரைக்கும் அவரை விட்டுக்கொடுக்காம காப்பாத்தறதுக்கு முயற்சி செய்ய வேண்டியது நம்மளோட கடமை.. இப்ப அவர் உள்ள தூங்கிட்டு இருக்காரு.. ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு நம்ம எல்லாரும் அவரை போய் பார்க்கலாம்.. அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்..” ராம் சொல்ல வைஷு சுற்றிலும் கண்களை அலையவிட்டுக் கொண்டிருந்தாள்..

 

“என்ன வைஷூக்கா.. சுத்தி சுத்தி பார்த்துட்டு இருக்கீங்க..?” சின்ன பையன் அழுகையை அடக்கியபடி கேட்க “இல்ல நீங்க ரெண்டு பேரும் எப்படியோ இங்க வந்துட்டீங்க.. உங்களை யாராவது ஃபாலோ பண்றாங்களான்னு பார்த்தேன்..” அவள் சொன்னதை கேட்ட நிலவழகன் “இல்ல நாங்க ரெண்டு பேரும் தனியா இங்க வரல.. எங்களோட இன்னொரு ஆளு வந்து இருக்காரு..” என்றான்..

 

மெதுவாக மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான் விஷ்வா..

 

“நீங்க அந்த ஹோட்டல்ல விஷ்வாவையும் வைஷூவையும் மீட் பண்ணின அப்பறம் நாங்க விஷ்வாவை மெரட்டி விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு நாங்க வந்த வண்டியிலேயே விஷ்வாவையும் ஏத்திக்கிட்டு உங்களை ஃபாலோ பண்ணி வந்தோம்.. ஆனா ஒரு இடத்துல உங்க ஆட்டோவை மிஸ் பண்ணிட்டோம்.. உங்க ஆட்டோ எங்க போச்சுன்னு தெரியல..  ஊரெல்லாம் சுத்தி தேடிட்டு இருந்தோம்.. சின்ன பையன் தான் திடீர்னு அனேகமா இந்த ஹாஸ்பிடல்ல தான் அருணை சேர்த்து இருக்கணும்னு சொன்னான்.. அப்பதான் நாங்க இந்த ஹாஸ்பிடல்ல ரெசப்சன்ல வந்து உங்களை பத்தி கேட்டோம்.. ஆனா அவங்க அருண் இங்க இல்லைன்னு சொல்லிட்டாங்க.. சந்தேகத்தோட நாங்க வெளியில தான் நின்னுட்டு இருந்தோம்.. ஆனா சின்ன பையன் மட்டும் ரொம்ப உறுதியா இருந்தான்.. அருண் சார் இங்க தான் இருக்கணும்னு சொல்லிட்டே இருந்தான்.. அதனால அங்கேயே வெயிட் பண்ணி ரிசப்ஷன்ல யாரும் இல்லாத டைம்ல சட்டுன்னு உள்ள வந்துட்டோம்..”

 

நிலவழகன் சொன்னதை அங்கிருந்த நால்வர் மட்டுமின்றி அவர்களை பின் தொடர்ந்து வந்திருந்த நித்திலாவின் தந்தை ஈஸ்வரமூர்த்தியின் அடியாளும் ஒரு மூலையில் மறைந்து நின்று கேட்டுக் கொண்டு இருந்தான்..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!