“ஹிம்… ஆமாம் மாமா அன்னைக்கு நடந்தது வெறும் இன்சிடென்ட் தான். அதுலெல்லாம் அக்கா பெருசா பாதிக்கப்படல, லைட்டா பயந்திருந்தா. பட் நீங்க அவளுக்கு உங்களோட ஷர்ட் கொடுத்து மானத்த காப்பாத்திருக்கீங்க.
வீட்க்கு வந்து அதையும் எல்லார்கிட்டயுமே சொன்னா. உங்க முகத்த பார்க்க முடியலையேன்னு பீல் பண்ணா.
நாங்க எல்லாரும் பதறினாலும் உங்க மேல உங்க செயல் அம்மாக்கும் அப்பாக்கும் மதிப்பு மரியாதை கொடுத்துச்சி. அதனால மறுநாளே அம்மாவும் அப்பாவும் உங்களை நேர்ல பார்த்து நன்றி சொல்லணும்னு உங்க காலேஜ் வந்தாங்க.
அப்போ நீங்க உங்க அப்பா கூட பேசிட்டு இருந்தத அவங்க பாத்துட்டாங்க.
விசாரிச்சதுல சக்திவேல் பையன் தான் நீங்கன்னு தெரிஞ்ச உடனே அம்மாவும் அப்பாவும் ரொம்பவே பயந்துட்டாங்க.
உங்க கிட்ட பேச வந்தவங்க பேசாமலே காலேஜ் விட்டு வர.. துரதிஷ்டவசமா உங்க அப்பாவ சந்திக்கிற மாதிரியே ஆயிடுச்சு.
சரியா அக்கா அப்பா, அம்மாகிட்ட உங்களுக்கு நன்றி சொல்லியாச்சான்னு கேட்டுட்டு இருக்கும் போது தான் காலேஜ்ல வச்சு உங்க அப்பா பாத்துருக்காரு.
அக்கா பேசி முடிச்சுட்டு போக, உங்க அப்பா அக்காவ ஏதும் பண்ணிடுவேன்னு சொல்லி மிரட்டி இருப்பாரு நினைக்கிறேன்.
உங்க மூஞ்ச அவ பாக்கலன்னு சொன்னது தான் அம்மாக்கு பிளஸ்சா போச்சு. அதனால இனி அந்த காலேஜ்லயே படிச்சா உங்கள பாக்க நேரிடும், திரும்ப பிரச்சனைகள் வரும்.. அக்கா உயிருக்கு உங்க அப்பாவால ஆபத்து வரும்ன்னு தான் ட்ராப் அவுட் பண்ணிட்டு அவளை அமெரிக்கா அனுப்பிட்டாங்க.”
“ஏன் டா என் அப்பா மிரட்டலுக்கு பயந்து தான் அவள அனுப்புனாங்களா…? இந்த ஊர விட்டு போனதுக்கு அப்புறமும் என் அப்பா மாமா, அத்தைய நிம்மதியா வாழ விடலையா…?” ஆராய்ச்சியுடன் கேட்டான் இன்னுழவன் மேலும் புருவம் இடுக்க.
ஆமோதிபாய் தலை அசைத்தான் நிவர்த்தனன்.
“கடந்த ரெண்டு வருஷமா தான் மாமா உங்க அப்பாவால எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாம நாங்க குடும்பமா இருக்கோம் சேர்ந்து.” என்றான் ஆயாசமாய்.
இன்னுழவனோ மேலும் அதிர்ந்தான். ஏனெனில் நிவர்த்தனன் கூறியது போல் கடந்த இரண்டு வருடமாக தான் சக்திவேல் வீட்டோடு அடங்கி இருக்கிறார் இதய குறைப்பாட்டால்.
“அப்போ அதுக்கு முன்னாடி…?” இன்னுழவன் கேட்க,
“சின்ன வயசுல இருந்து நானும் சரி அக்காவும் சரி வ்வோர்த் ஸ்டாண்டர் வர தான் ஃபேமிலியா ஒண்ணா இருந்தோம் மாமா அப்பா,அம்மா கூட. அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேருமே ஹாஸ்டல்ல தான் படிச்சோம்.”
ஐந்தாம் வகுப்பிலேயேவா! அச்சிறுமை பருவத்திலே தாய் தந்தை இருந்தும் விடுதியில் வளர்ந்தர்களா…? எவ்வளவு கொடுமை நாட்களை கடந்து வந்திருபார்கள். நினைக்கவே நெஞ்சம் பதபதைத்தது இன்னுழவனுக்கு.
“காரணம் எதற்கும் பெறாத சாதியா…?” என்றான் விட்டேரியாக இன்னுழவன்.
“ஆமா மாமா சாதி வெறில உறுன உங்க அப்பா. கல்யாணம் பண்ணிக்கிட்டு சொந்த ஊர்ல இருந்து வெளியில வந்ததுக்கு அப்புறமும் உங்க அப்பா எங்க அம்மா,அப்பாவ நிம்மதியா வாழ விடாம நிறைய டார்ச்சர் பண்ணி இருக்காரு.
அடியாட்களை வைத்து அப்பாவெல்லாம் அடிச்சும் போட்டு இருக்காரு.
அதுக்கெல்லாம் பயந்துகிட்டு தான் எங்க ரெண்டு பேரையுமே ஹாஸ்டல்ல வளர்த்தாங்க வேற ஸ்டேட்ல.
நாங்க ரெண்டு பேருமே ஹாஸ்டல்ல படிச்சு ஹாஸ்டல்லையே வளர்ந்து அப்பா,அம்மா பாசம் கூட பக்கத்துல கிடைக்க முடியாத அளவுக்கு இருந்தோம்.
நானும் அக்காவும் அந்த நாட்களை ரொம்பவே ஏங்கியிருக்கோம். பொம்பள புள்ளைங்களா இரண்டு பேரும் இருந்திருந்தோம்னா ஒரே ஹாஸ்டல்ல தங்கி இருப்போம். விதி பையன் பொண்ணா போனதால வேற வேற ஹாஸ்டல்ல தங்க, எங்களுடைய வீடு அப்படின்னா அது ஸ்கூல் தான்.
அங்க அவ எனக்கு அம்மா, அப்பாவா இருந்தா. நான் அவளுக்கு அம்மா,அப்பாவா எல்லாமுமா இருந்தோம்.
அதுக்கு அப்புறம் தான் கஷ்டப்பட்டு அப்பாவுடைய ஃபிரண்ட் கமிஷனர் மூலமா உங்க அப்பாவால முழுமையா எந்த பிரச்சினையும் வராதபடி ப்ரொடக்ஷனோட நாங்க டெல்லில இருந்து சென்னை வந்தோம்.
ரொம்ப கஷ்டப்பட்டு தான் அம்மா சம்மதிச்சாங்க அக்கா சென்னைல படிக்கிறதுக்கு. அப்பவும் ஹாஸ்டல்ல தான் படிக்கணும் கண்டிஷன் வச்சாங்க.
அப்பதான் அந்த மாதிரி இன்சிடென்ட் நடந்து திரும்பியும் அக்காவை எங்கள விட்டு பிரிச்சு அமெரிக்கா அனுப்புனாங்க.
அக்கா மேற்படிப்புக்காக அமெரிக்கா போனா.. நான் மேற்ப்படிப்புக்காக ஆஸ்திரேலியா போனேன்.
எங்களுடைய சந்திப்பு இந்தியாவில் எப்போதுமே இருக்காது. சிசி ஆஸ்திரேலிய வருவா, இல்லன்னா நான் அமெரிக்கா போவேன். எங்கள பார்க்குறதுனாலும் அப்பா, அம்மா தான் வந்து பாத்துட்டு போவாங்க. இங்க நாங்க அங்க வர மாட்டோம்.
இப்ப இந்த ரெண்டு வருஷமா தான் உங்க அப்பாவால பிரச்சனை வரல அப்படிங்கற பட்சத்தில் தான் அப்பாவும் அம்மாவும் எங்கள இந்தியாவுக்கு வரயே அனுமதி கொடுத்தாங்க.
விளையாட்டா ஒருநாள் ரேடியோல டெம்ப்ரவரி ஆர் ஜே வேலைக்கு சிசி வாய்ஸ் ரெகார்ட் செஞ்சு அனுப்பிச்சி. அதுலயும் அக்கா வாய்ஸ் பிடிச்சி செலக்ட் ஆனது உங்க அப்பா தொந்தரவு இல்லாம இருந்ததுனாலயும் ஒத்துகிட்டாங்க.
சிசிக்கு அந்த ஆர் ஜே ஒர்க் ரொம்ப பிடிச்சி போச்சி. சின்ன வயசுல இருந்து விடுதிங்கிற சிறைக்கு வலம் வந்தவளுக்கு அங்க முகம் தெரியாத நிறைய பேர்கிட்ட பேசி சந்தோசமா இருந்தது என் அக்கா மனச ஆறுதல் படுத்திச்சி.
உங்கள அக்கா காலேஜ்ல பார்த்தது கூட கிடையாது. சீனியர் இன்னுழவன் அப்படிங்கற பேரு மட்டும் தான் அக்காக்கு தெரியும். அன்னைக்கு நடந்த இன்சிடெண்ட்லயும் அக்கா உங்களோட முகத்தை பார்க்கல.
நீங்க எந்த ஊரு யாரு எதுவுமே தெரியாது. அமெரிக்காக்கு அக்காவ அனுப்பும் போது கூட உங்க கிட்ட பேச மாட்டேன், திரும்பி கூட பார்க்க மாட்டேன், நீங்க இருக்க திசை பக்கமே போக மாட்டேன் இங்கேயே இருக்கேனு அக்கா ரொம்ப கதறுனா..
ஆனா அம்மாவும் அப்பாவும் அதுக்கு ஒத்துக்கல. ஏன்னா அவங்களும் பெத்தவங்க தானே! எங்களோட பிரிவு வலி அவங்களுக்கு புரியாம இல்ல. உங்க அப்பாவால எங்களுக்கு ஆபத்து வந்துருமோங்கற பயம். மனச கல்லாகிட்டு எங்கள பிரிஞ்சி இருந்து வளர்த்தாங்க.
பல நாள் ரொம்ப பீல் பண்ணிருக்காங்க, காதலிக்காமலேயே இருந்து இருக்கலாமோ அப்பிடிங்கிற வரைக்கும்.
நானும் நிறைய டைம் கேட்டு பார்த்துட்டேன். உங்க அப்பா அப்பிடி என்ன செஞ்சிருவாருன்னு. அவரு வேற ஏதும் செஞ்சாரா அப்பிடின்னும் சொல்லவே மாட்டாங்க. உங்க அப்பா பேர் கேட்டாலே அம்மா, அப்பா ரொம்ப பயப்படுவாங்க.
முதல் முறையே நீங்க ரேடியோ ஸ்டேஷனில பேசின உடனே அக்கா எனக்கு கால் பண்ணா.
உங்ககிட்ட அவ சகஜமா பேசினா அப்படின்னா உங்களுடைய பெயர் அந்த பெயர் அவளுக்கு அப்பவே மனசுல தாக்கமாயிடுச்சு.
அப்பிடி என்ன தவிர்த்து பழகி சிரிச்சது உங்ககிட்ட தான். காரணம் உங்க பேர், காலேஜ்ல அவ கேட்ட இன்னுழவன்.
ஒரு நாள் எதார்த்தமா வீட்ல பேசி சிரிக்கும்போது அப்பா உங்களை பத்தி பேசிட்டு எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருந்திருந்தா உங்களுக்கு அக்காவை கட்டி இருக்கலாம்னு அவர் விரக்தியா பேச… அது அம்மா மனசுல ஆழமாக பதிஞ்சிருச்சி.
அப்பாக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குது நினைச்சுட்டு தான் அம்மா அவசர அவசரமா அந்த ஷாம்பு பாட்டில அதான் அந்த வீணா போன ஷாம அக்காக்கு பேசி முடிச்சாங்க.
அதே நேரத்துல உங்கள மனசார விரும்ப ஆரம்பிச்சிட்டா. அத வெளிலயும் சொல்ல முடியாம.. ரேடியோல உங்ககிட்டயும் சொல்ல முடியாம.. ரொம்ப தவிச்சு போய்ட்டா.” என நிவர்த்தனன் பேச பேச… இன்னுழவன் விழிகள் பனித்தன உடையவளை எண்ணி.
“அவளோட ஆசை எல்லாம் இந்த ஊர்லேயே இருக்கணும், சொந்த பந்தங்களுடன் சந்தோஷமா இருக்கணும். சின்ன வயசுல இருந்து பெத்தவங்க பாசத்துக்கு ஏங்குன மாதிரி வருங்காலத்தில் அவளோட குழந்தையும் ஏங்க கூடாது அப்படிங்கிறது தான்.
அதுக்கும் அம்மாவே தடையா இருக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டா.
நீங்க தான் காலேஜ் இன்னுழவன், என் மாமா இன்னுழவன், அப்பா சொன்ன ஊர் தலைவர் இன்னுழவன், ரேடியோல அக்கா கூட தினமும் பேசுன இன்னுழவன் எல்லாம் நீங்க தான்னு எங்களுக்கு தெரியாது.
ஏதோ மேஜிக் மாதிரி இருக்கு நீங்க கோவிலுக்கு வந்தது, அக்காவ கலயாணம் பண்ணது எல்லாம் எங்களுக்கு.
எப்படியோ அவ உங்ககிட்டே வந்து சேர்ந்துட்டா. அதுவே எனக்கு போதும்.
இன்னுழவன் கையை இருக்க பற்றியவன், “ப்ளீஸ் எனக்காக பத்திரமா பாத்துக்கோங்க என் சிசிய. இனியாது எந்த விஷயத்துக்காகவும் அவ ஏங்க வேண்டாம், வாழ்க்கையில நிறைய இழந்துட்டா.
அம்மா,அப்பா, தம்பி எல்லாரும் இருந்துமே அனாதையா தான் ரெண்டு பேருமே வளர்ந்தோம் வெவ்வேறு திசைகள்ல.
இன்னைக்கு சொந்த ஊருக்கு வந்து சொந்த பந்தங்கள் கூட இருக்கும்போது எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா மாமா.” என உணர்ச்சி வசத்தில் இன்னுழவனைக் கட்டி அணைத்திருந்தான் நிவர்த்தனன்.
இன்னுழவனும் அணைத்து முதுகு தட்டி அவனை சமப்படுத்தினாலும்.. அறியாது தன்னாலும் அறிந்தும் தன் தந்தையாலும் தன்னவள் பட்ட துயரத்தை எல்லாம் நினைத்து பார்த்தவனுக்கோ நெஞ்சுக் கூட்டில் நெருஞ்சி முள் தைத்தது.
அணைத்து நிவர்த்தனனை விடுவித்தவன், “என்ன சொல்லணும் எனக்கு தெரியல நிவர்த்தனா. இதெல்லாம் அனுபவிச்சு தான் உன் அக்கா என்கிட்ட வரணும்னு இருந்திருக்கு. என் அப்பா பண்ணதுக்கு நீங்க அனுபவிச்ச வலிக்கு என்னால மன்னிப்பு மட்டும் தான் கேட்க முடியும்.” என்றவன் கை கூப்பினான் குரல் கமர.
“ப்ச்… மாமா என்ன பண்றீங்க..” என இறக்கி விட்டான் இன்னுழவன் கரத்தை நிவர்த்தனன்.
“இனிமேல் உன் அக்கா இதெல்லாம் அனுபவிக்க மாட்டா நான் இருக்கிறேன். உன் அக்கா பேரு மேக விருஷ்டி அது மட்டும் தான் எனக்கும் தெரியும்.
சடனா உங்க அக்கா காலேஜ் ட்ராப் பண்ண பிறகு எனக்கு இன்பர்மேஷன் வந்துச்சு.
அன்னைக்கு நடந்த இஸ்ஸுவால தான் போறாளான்னு யோசிச்சேன். இதுக்கெல்லாம் பயந்துகிட்டு காலேஜ் விட்டு போகக்கூடாதுனு அவ கிட்ட பேசுறதுக்காக தான் மறுநாள் அவள தேடினேன். எதுக்காக காலேஜ் ட்ராப் அவுட் பண்ணிட்டு போறான்னு தேட ஆரம்பிச்சேன்.
கொஞ்ச நாள் கழிச்சு தான் அன்னைக்கு மேக விருஷ்டி அப்பா அம்மாவா வந்த மாமா, அத்தைகிட்ட என் அப்பா ஏதோ பேசியிருக்காரு.. அதுக்கு அப்புறம் தான் அவ டிராப் அவுட் செஞ்சு இருக்கான்னு தகவல்.
எனக்கு ஏதோ தப்பா பட்டுச்சி, அதனால தான் அவளை நான் இன்னும் தீவிரமா தேட ஆரம்பிச்சேன். ஆனா அவ எனக்கு கிடைக்கல.
எனக்கு சரியா கல்யாணத்தப்ப காலைல தான் உங்க அக்கா பயோடேட்டா கிடைச்சுச்சு ரேடியோ ஸ்டேஷன் இருந்து.
அண்ட் அப்ப தான் நான் தேட ஆரம்பிச்ச பொண்ணும் உங்க அக்கா தாங்கிற தகவலும் எனக்கு தெரிஞ்சுச்சு.
மேக விருஷ்டி பெயரை வச்சு தான் நானும் ரேடியோவில் பேச ஆரம்பிச்சேன். இன்பக்ட் உன் அக்கா மாதிரியே தான்.
அதுவே எங்களோட மனசு ஒன்னு சேர்க்கணும்னு எங்களுக்கு அப்ப தெரியல. ஆனா போகப் போக தெரிஞ்சிச்சு.
உன் அக்காக்கு தான் கல்யாணம் அப்படின்னு சொன்னதும் அதுவும் அவளோட சம்மதத்தோடன்னு தெரிஞ்சதும் ரொம்ப கோவமாயிருச்சு.
பட் அவள் நிலைமை இருந்து பார்த்தா அவ மனச என்னால புரிஞ்சுக்க முடியுது. இனி நீ பயப்படாம இரு. உன் அக்காக்கு இல்ல, என் பொண்டாட்டிக்கு என் அப்பாவாலயும் யாராலயும் எதுவும் ஆக விடமாட்டேன். முக்கியமாக உங்களுக்கும் தான்.
இந்த ஊர்லயேனாலும் நீங்க இருக்கலாம். இல்ல வந்து வந்து போகலாம். அது உங்க இஷ்டம். இனிமேல் எந்த பிரச்சினையும் வராது என்ன நம்பு” என்ன தீர்க்கமாய் உறுதியளித்தான் இன்னுழவன்.
நிவர்த்தனனோ புன்சிரிப்புடன் “உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு மாமா” என்க,
பெருமூச்சுடன் அவன் தோளை தட்டி மென்னகையுடன் நகர்ந்தான் இன்னுழவன்.
இன்னுழவன் நிவர்த்தனனுடன் பேசிவிட்டு கம்பெனிக்கு செல்லவே எத்தனித்தவன் மனமோ தன்னவன் நினைத்து பாரம் ஏறி இருக்க மீண்டும் அறைக்குச் சென்றான் .
அறைக் கதவையவன் திறந்து உள்ளே செல்ல , அங்கு விழித்து கட்டியில் சாய்ந்த படிய அமர்ந்திருந்தாள் மேக விருஷ்டி எங்கோ பார்த்தவாரு கவலை தோய்ந்த முகத்துடன்.
“ஏய் ஏஞ்சல் நீ தூங்கிட்டு தான இருந்த மா.. எப்ப முழிச்ச?”
அவளோ, “தூங்குனேன்.. ஆனா தூக்கம் வரல…” என்றாள் குரல் தளர்ந்து.
“ஏண்டா..?” என்று அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மார்பில் சாய்த்தான் இன்னுழவன்.
அவளும் ஏறெடுத்து அவன் விழி பார்த்தவள், “என்கிட்ட பேசாம இருக்க மாட்டீங்க இல்ல உழவா. அப்பிடி நான் ஏதாவது தப்பு பண்ணாலும் என்ன அடிக்க கூட செய்ங்க. ஆனா, ஒதுக்கி தனியா பேசாம மட்டும் இருக்காதிங்க ப்ளீஸ்” ஏக்கம் நிறைந்த குரலில் கேட்டவள் விழிகளில் விழி நீர் ஊற்று.
அவனுக்கோ நெஞ்சு கூட்டில் வலி ஏற அவள் கன்னம் தாங்கியவன், “ஏய் ஏஞ்சல் இன்னுமா நீ அதேயே நினைச்சுட்டு இருக்க. நான் தான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் இல்லபா. நான் உன்கிட்ட பேசாம எப்படி இருப்பேன்.” என அவள் உச்சந்தலையில் ஆழ முத்தமிட்டவன் மனமோ அவனுக்கு எடுத்துரைத்து அறிவுறுத்தவும் செய்தது.
தன்னவள் சிறுவயதில் இருந்து கடந்து வந்த தனிமை என்னும் பாதையின் சுவடு அவளுக்குள் ஆறா வடுவாய் இன்னும் ரணப்படுத்துகிறது, மீண்டும் அவ்வாறு ஒரு சூழ்நிலைக்கு அவளை தள்ளி விடாதே என்றும்
மேலும் காலையில் சக்திவேலை தண்டிபதற்காக, தான் கூறிய வார்த்தையின் வீரியம் அவள் மனதை வெகுவாய் தாக்கி உள்ளது என்றும்.
“சரி நீ தூங்குபா எத பற்றியும் யோசிக்காம” என்றவன் அணைத்து அவள் தலை வருட..
“நீங்க என் கூடவே இருக்களேன் உழவா ப்ளீஸ்..” விழிநீர் படலத்துடன் அவள் யாசிக்க,
“ஏஞ்சல்… நான் எங்கேயும் போகல. இங்கதான் இருப்பேன் உன்கிட்ட. நீ தூங்குபா” என்றவன் மேலும் அவனுக்குள் அவளை வாகுவாக அணைத்து கொண்டான்.
பெண்ணவள் தன்னவனுக்குள் புதைந்து மீண்டும் விழிகள் மூடியவள் நித்திரை செல்ல…
உடையவள் மனக் காயத்தை தானே கிளறி விட்டேனே! என அவனை எண்ணி அவனுக்கே கோவமும் வந்தது ஒருபுறம் என்றால்..
மறுபுறம் விழிகளோ தனலாய் சிவக்க, தன்னவளுக்கும் தன் மாமனவன் குடும்பத்திற்கும் தந்தையவன் செய்த அனைத்து இன்னல்களையும் நினைத்தவனுக்கு உறக்க தூரம் போக அக்னீ ஜூவாலை எரிந்தது மனதுக்குள் சக்திவேல் மீது கடும் கோபத்துடன்.