தனக்குள்ளே சிரித்து வெட்கப்பட்டு கொண்டு வந்த அனன்யா, முதலில் கவனிக்கவில்லை. வண்டி தடுமாறுவதை…
ஆகாஷ் வண்டி ஓட்டுவதில் கவனத்தை வைக்கவில்லை என்பதை உணர்ந்தவள், அவனது தோளைத் தொட்டு சமாதானம் செய்ய முயல… திடீரென்று எதன் மீதோ மோதி தூக்கி வீசப்பட்டாள்.
அவள் மயங்கி கண் மூடும் முன்னே, பார்த்தது என்னவோ, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆகாஷை தான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு தான் கண் விழித்தாள் அனன்யா.
அவளது கண் பார்த்த விஷயத்தை, மூளை ஏற்க மறுக்க, பெரிதாக எந்த அடியும் படாத அவள் கண் விழிக்க தாமதம் ஆனது.
விளைவு, ஆகாஷின் உடலைக் கூட அவளால் பார்க்க முடியவில்லை.
அனன்யா கண் விழித்ததும் நர்ஸ் விஸ்வரூபனை அழைக்க… விரைந்து ஓடி வந்தான்.
” அந்துருண்டை…” என்ற அழைப்பில், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், ” மாமா” என்றவள் கதறி அழுதுத் கொண்டே எழுந்திருக்க முயற்சி செய்தாள்.
” கொஞ்சம் பொறு டா. ட்ரிப்ஸ் ஏறுது.” என்றுக் கூறியவன், அவளை சமாதனப்படுத்த முயல…
” ஆகாஷுக்கு ஒன்னும் இல்லை தான மாமா. நான் அவனைப் பார்க்கணும். ” என்றுக் கதற…
” ஷ்… காம் டவுன். இது ஹாஸ்பிடல்.” என்றான் விஸ்வரூபன்.
அப்போது தான், அவள் தான் எங்கே இருக்கிறோம் என்பதையே கவனித்தாள்.
இவ்வளவு நேரம் விஸ்வரூபன் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கிறது என்று சொன்னதைக் கூட உள்வாங்கிக் கொள்ளவில்லை.
” அப்போ ஆக்ஸிடென்ட் ஆனது உண்மை தானா… ஆகாஷ் இரத்த வெள்ளத்தில் கிடந்ததும் உண்மை தானா… ” என்று புலம்பியவள், தன் கழுத்தை வருடிப் பார்த்துக் கொண்டாள்.
மஞ்சள் கயிறு தென்பட… ” ஆகாஷ் உயிரோட தான இருக்கான். எங்க அவனைக் காணோம். நீங்க உள்ள விடலையா…” என்று அவளே எதாவது கூறுவதும், புலம்புவதுமாக இருக்க…
அவளை சமாளிக்க முடியாமல், நர்ஸிடம் உறங்குவதற்கான இன்ஜெக்ஷனை ரெடி பண்ண சொன்னவன், அதைப் போட்டும் விட்டான்.
அவள் மெல்ல புலம்பிக் கொண்டே உறங்கவும், கண் கலங்க அங்கிருந்த நாற்காலியில் ஓய்ந்துப் போய் அமர்ந்தான்.
இரண்டே நாட்களில் வீட்டோட நிம்மதியே பறந்திருந்தது.
வீட்டில் நிச்சயத்தார்த்ததிற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, இவளை காணவில்லை என்று டென்ஷனோடு இருக்க…
ஆதவனிடமிருந்து தான் அழைப்பு வந்திருந்தது.
அவர்களது ஹாஸ்பிடலில் அனன்யாவை சேர்த்திருப்பதாக கூறியவன், வேறு எதுவும் சொல்லவில்லை. அவனது குரலும் சரியில்லாமலிருக்க, என்னவோ ஏதோ என்று பயந்தவன் வீட்டில் கூற…
எல்லோருமே கிளம்பினர்… விஸ்வரூபன் தான், ” பாட்டி… அத்தை… நீங்க எல்லோரும் இங்கேயே இருங்க. அம்மா பாத்துக்கோங்க. நானும், அப்பாவும் போயிட்டு வர்றோம். அங்க எல்லாம் இவங்க வேண்டாம். அவங்க ஹாஸ்பிடல்ல தான் சேர்த்து இருக்காங்களாம்.” என.
” சரி.” என தலையாட்டினர்.
அங்கே சென்ற விஸ்வரூபன் ரிஷப்ஷனில் விசாரித்தான்…
ஆஸ்பத்திரியில் எல்லோருமே படபடவென டென்ஷெனோடு அங்கும், இங்கும் குழப்பத்தோடு போய் கொண்டிருந்தனர்.
இவன் விசாரிப்பதற்கு கூட யாரும் ஒழுங்காக பதில் சொல்லாமல் இருந்தனர்.
” வாட்ஸ் கோயிங் ஆன். ” என்று கத்தினான். அதற்குப் பிறகு தான் தெரியும் ஆகாஷோட தான் வெளியே சென்றிருக்கிறாள். அவன் இறந்து விட்டான் என்று…
அதற்குப் பிறகு நேரத்தை வீணாக்காமல் இவர்களது ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸை வரவழைத்து, அனுவை அழைத்துக்கொண்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
அனு, ஆகாஷுடன் இன்னும் கான்டாக்ட் வைத்திருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இன்னும் இதை விட பெரிய அதிர்ச்சியை ஹாஸ்பிடல் சென்று தெரிந்துக் கொண்டான்.
விஸ்வரூபன் வீட்டிற்கு ஃபோன் செய்து, அனுவிற்கு லேசான மயக்கம் தான் என்றும், தங்களது ஹாஸ்பிட்டலில் ஒரு செக்கப் செய்து விடலாம் என்று அங்கு செல்வதாகக் கூறினான்.
அவன் சொன்னதைக் கேட்டதும், வீட்டிலிருந்த அனைவரும் ஹாஸ்பிடலுக்கு விரைந்து வந்திருந்தனர்.
ருக்குமணி மெல்ல அனன்யாவின் தலையை கோதி அவளை வருடினார்.
கௌரியோ, தான் ஒரு டாக்டர் என்பதை மறந்து விஸ்வரூபனிடம், ” ரூபா… இன்னும் அனு ஏன் கண் முழிக்கலை.” என பதட்டத்துடன் வினவினார்.
” அத்தை… அனுவுக்கு ஒன்னுமில்லை… அதிர்ச்சியில் சின்ன மயக்கம் தான். கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டேன். நீங்க வேணும்னாலும் செக் பண்ணுங்க.” என.
அவனிடமிருந்து ஸ்டெதெஸ்கோப்பை எடுத்து கழுத்தில் வைத்து செக் பண்ண… ஏதோ கழுத்தில் இடறியது. என்னவென்று எடுத்துப் பார்த்த கௌரி, கையிலிருந்த தாலியைப் பார்த்து அதிர்ந்தாள்.
லேசாக தள்ளாட… அருகில் இருந்த ரஞ்சிதம் பிடித்துக் கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் அந்த இடமே களேபரமாக இருந்தது.
விஷ்வரூபனுக்கு மண்டை காய்ந்தாலும், அவன் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாறு இருந்தது.
பாட்டியை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பியவன், கௌரியை ஒரு ரூமில் அட்மிஷன் செய்ய, ரஞ்சிதம் பார்த்துக் கொண்டார்.
கௌரிக்கு சீக்கிரமே குணமாகிட வீட்டிற்குச் சென்று விட்டார்.
அனன்யாவை இவனது கவனிப்பில் வைத்திருந்தான்.
அப்போது தான், வெளியே சென்ற போது, அனன்யா கண் விழித்ததும் அல்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தாள்.
மயக்கம் தெளிந்த பிறகும், நடந்த எதையும் ஏற்கும் பக்குவமில்லாமல் இருந்தாள் அனன்யா.
இதெல்லாம் கனவாகவே இருக்கக் கூடாதா என்று ஏங்க ஆரம்பித்தாள்.
முதலில் இதெல்லாம் அவளது கவனத்தை ஈர்க்கவில்லை. ரஞ்சிதம் வந்து, ” அனு… அந்த தாலியை கழற்றிடு மா.” என்று பரிவாகக் கூற…
” மாட்டேன்… நான் கழற்ற மாட்டேன்… என் ஆகாஷ் இங்க தான் இருக்கார். நீங்க தான் பார்க்க விடாமாட்டேங்குறீங்க.” என்று தாலியைப் பற்றிக் கொண்டு கத்த ஆரம்பித்தாள் அனன்யா.
அனன்யாவின் சத்தத்தில் வேகமாக வந்த விஸ்வரூபன், ” என்னாச்சு மா?” என்று வினவ.
” அதுப்பா… உங்க பாட்டி அனுக் கழுத்தில இருக்கிறதை கழற்றி போட சொன்னாங்க.” என்று சங்கடமான குரலில் கூறினார்.
ஒரு நிமிடம் இறுகக் கண் மூடித் திறந்தவன் அங்கு கத்திக் கொண்டிருந்த அனன்யாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
“தம்பி… ” என்ற ரஞ்சிதத்தின் குரலை அலட்சியம் செய்தவன்,
அனுவிடம், ” இங்க உனக்காக ஒரு குடும்பம் பரிதவிச்சிட்டு இருக்கே அது உன் கண்ணுக்கு தெரியலையா? உன்னை உயிரா வளர்த்த பாட்டி, அம்மா உன் கிட்ட பேசாமல் இருக்கிறது கூட உனக்குத் தெரியலை. நடுவில வந்தவன் உனக்கு முக்கியமா போய்ட்டானா.” என்று கத்த…
அப்போ தான் அவர்கள் இருவரும் பேசாததையே உணர்ந்தவள், அழுதுக் கரைந்தாள்.
” இங்கே பாரு அனு… முதல்ல அழறதை நிறுத்து. நாளையிலிருந்து காலேஜுக்கு போற… புரியுதா?” என்ற விஸ்வரூபன் கண்களாலே ரஞ்சிதத்தை பார்த்துக்க சொல்லி விட்டு சென்றான்.
அவள் அருகே அமர்ந்த ரஞ்சிதம், ” இங்கே பாருடா அனு. அந்த பையன் இப்போ உயிரோட இல்லை. இந்த மஞ்சள் கயிறை போட்டுருந்தா மட்டும் அவன் உயிரோடு வரப்போவதில்லை. இதை கழற்றி ஏதாவது கோயில்ல போட்டுட்டா பாட்டியின் கோபம் கொஞ்சம் குறையலாம்.” என்று அது, இது என பேசி அவள் கழுத்திலிருந்து கழற்றினார்.
அடுத்து அவள் அழுத அழுகையை காண சகிக்காமல் வெளியே சென்றவரோ, வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்.
பிறந்ததிலிருந்தே எதற்கும் கண் கலங்க விடாமல், பார்த்து பார்த்து வளர்த்த குழந்தையின் கதறலைத் தாங்கும் சக்தியில்லாமல் வெளியே வந்து விட்டார்.
மறுநாள் காலேஜுக்கு கிளம்புமாறு கரெக்டா வந்து எழுப்ப…
” மாமா… ப்ளீஸ்… நான் அந்த காலேஜிக்கு போகலை. என்னால… என்னால ” என்று தடுமாறியபடியே அவனைப் பார்க்க…
அந்த பரிதாப தோற்றத்தை பார்க்க சகிக்காமல் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.
அந்த வழியாக சென்ற ருக்குமணியின் கண்களில் அந்தக் காட்சிப்பட்டு அவரது மனதில் வேறு ஒரு யோசனையை தோற்றுவித்தது.
” அனு … சரிடா… சீக்கிரமே நம்ம காலேஜ்ல சேர்க்க ஏற்பாடு பண்ணுறேன். நீ பழசையே நினைச்சுட்டு இருக்காத… சரியா…” என்று வினவ.
” ம்…” என்று தலை ஆட்டினாள்
ஒன்றிரண்டு முறை ருக்குமணியிடமும், கௌரியிடமும் பேச முயன்றாள்.
அவர்கள் பேசாமல் இருக்க… அதற்கு பிறகு தனக்குள்ளேயே ஒடுங்கிப் போனாள்.
அவளது அறை தான் அவளது உலகமாக மாறியது.
ரஞ்சிதத்தின் வற்புறுத்தலில் பேருக்கு சாப்பிட்டு விட்டு அவளது அறைக்குச் சென்று விடுவாள்.
நாட்கள் விரைந்தோட, ஒரு நாள் வீட்டிற்கு வந்த விஸ்வரூபன், பார்த்தது என்னவோ, ஒரு இட்லியை எடுத்து விழுங்கிக் கொண்டிருந்த அனன்யாவை தான்.
ஆளே அரையாளாகத் தெரிந்தாள். காற்று அடித்தால் ஒடிந்து விழுவதுப் போல் இருந்தாள்.
சாப்பிட்டேன் என்று பேர் பண்ணியவள் எழுந்து செல்ல…
அவளது கைப் பிடித்து அமர வைத்த விஸ்வரூபன், ” இப்படி ஒரு இட்லி சாப்பிட்டா உடம்பு என்னத்துக்காகும்?” என்று கடிந்தவன், அவளுக்கு ஊட்டி விட்டான்.
பாதியிலே, ” போதும் மாமா.” என்று தடுத்தாள் அனன்யா.
” ஷ்… சும்மா இரு. ” என்றவன் மீண்டும் ஊட்ட…
அவளோ கைகளைப் பொத்திக் கொண்டு ஓடி வாஷ்பேஷனில் வாமிட் செய்தாள்.
ஹாலில் உட்கார்ந்து இருந்த ருக்குமணி அதிர்ச்சியுடன் பேத்தியை பார்த்தாள்.
தனது கோபத்தை மறந்து, ‘கடவுளே நான் நினைக்கிறது மட்டும் இருக்கக் கூடாது.’ என்று கடவுளுக்கு ஒரு அவசர வேண்டுதலை வைத்து விட்டு, பல்ஸ் செக் செய்தாள் கௌரி.
கடவுள் அவளது வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை.
கண்களில் இருந்து கண்ணீர் வழிய… என்னவென்று பார்த்த விஸ்வரூபனிடம், “ஆமாம்.” என்று கூறினாள்.
ரஞ்சிதமும், ருக்குமணியும் என்னவென்று விசாரிக்க…
கௌரியோ, ஒன்றும் சொல்லத் தோணாமல், மகளது எதிர்காலத்தை நினைத்து குழம்பிப் போயிருந்தார்.
ருக்குமணியோ, இயல்புக்கு மாறாக படபடப்பாக இருந்தார். ” என்னன்னு யாராவது சொல்லுங்க. என் பேத்திக்கு ஒன்னும் இல்லை தான… அவ என் பேத்தியா தான இருக்கா.” என்று வினவ.
அப்போது தான் அனன்யாவுக்கு அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது புரிந்து அதிர்ந்தவள், ‘ அப்படியும் இருக்குமோ…’ என்று எண்ணி தனது வயிற்றை தடவினாள்.
எல்லோரும் குழந்தையாக இருக்கக்கூடாது என்று நினைக்க… அவளோ,’ குழந்தையாக இருக்கக்கூடாதா?’ என்று ஏங்கினாள்.
கடவுள் அவளுக்கு அந்த ஒரு சிறு ஆறுதலையாவது தர எண்ணினார் போல…
” பாட்டி… ஷீ இஸ் ப்ரெக்னன்ட்.” என்ற நிதர்சனத்தை போட்டுடைத்தான். விஸ்வரூபன்.
” ஐயோ!” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார் ருக்குமணி.
அப்போது தான் உள்ளே நுழைந்தார் கிருஷ்ணன்.
ஒன்றுக்கு மூன்றாக டாக்டர்கள் இருந்தும் அந்த நேரத்தில் அவர்களுக்கு பதட்டம் தான் தோன்றியது.
நல்ல நேரமாக, கிருஷ்ணனின் கார் ட்ரைவர் சாவியை வைக்க உள்ளே வர, அவரை காரெடுக்க சொல்லி அவர்களின் ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்.
ஐசியுவில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சிவியர் ஹார்ட் அட்டாக். அவரது வயதுக்கு காப்பாற்றுவது கடினம் என்று புரிந்த விஸ்வரூபனின் கண்களில் கண்ணீர்த்துளி.
இரவு முழுவதும் யாரும் உறங்காமல், ஐசியு வாசலிலே காத்திருக்க…
விடியற்காலையில் கண் விழித்தார் ருக்குமணி.
எல்லோரும் அவரை சூழ்ந்துக் கொண்டனர்.
எல்லோரையும் பார்த்து, ” எனக்கு ஒன்னுமில்லை பயப்படாதீங்க.” என்றவர், விஸ்வரூபனையும், அனன்யாவையும் அருகே அழைத்தார்.
விஸ்வரூபனிடம், ” அனுவை நீ தான் பார்த்துக்கனும் பா… நீ இப்பவே என் கண் முன்னாலயே , அவ கழுத்துல மூணு முடிச்சு போடு.”என்றுக் கூற.
விஸ்வரூபனோ, ” பாட்டி…” என்று ஏதோ கூற வர…
” நீ எதுவும் சொல்ல வேண்டாம். என் பேத்தி இந்த நிலைமையில் இருக்கிறதுக்கு நீ தான் காரணம். என் கூடவே வச்சிருந்தா இப்படி ஆகியிருக்காதே. ” என்று புலம்ப…
” பாட்டி… மாமாவ எதுவும் சொல்லாதீங்க.” என்று அனு அழ.
அவளிடம் எதுவும் சொல்லாமல், ” விஸ்வரூபா… இந்த பாட்டியோட
கடைசி ஆசை. என் பேத்தியை நீதான் கட்டிக்கணும். ” என.
விஸ்வரூபன் வாயடைத்து நின்றான்.
அனன்யா தான்,” பாட்டி… மாமாவை என்னால அப்படியெல்லாம் நினைக்க முடியாது. அதுவுமில்லாமல் மாமா லவ் பண்றாங்க.” என்று கத்த…
” டேய் விஸ்வரூபா… என் பேத்தியை தவிர வேற யாரை கல்யாணம் பண்ணாலும், என் ஆத்மா சாந்தி அடையாது. நான் செத்தாலும் பார்த்துட்டே இருப்பேன். என் வீட்ல, என் பேத்தியை கண்ணீர் விட வைத்து விட்டு, நீங்க எல்லாம் சந்தோஷமா கும்மாளம் போடுவீங்களா? எங்கிருந்தோ வந்தவங்க இங்கே சந்தோஷமா இருப்பாங்க. இந்த வீட்ல பொறந்த என் பொண்ணும், பேத்தியும் கண்ணீர் விடணுமா? ” என்று ஆங்கரமாக அந்த அணையப் போகும் ஆத்மா கூற…
மொத்தம் குடும்பமும் அதிர்ந்தது.
‘ தன்னால் ராதிகாவின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது.’ என்று எண்ணிய விஸ்வரூபன், ” அப்படியெல்லாம் பேசாதீங்க பாட்டி. நான் அனன்யாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்று இறுகிய குரலில் கூறினான்.
இன்று…
குற்றவுணர்வுடன் தலைக்குனிந்த விஸ்வரூபன் அருகில் சென்ற ராதிகா, கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ நிமிர்ந்தபாடில்லை என்றவுடன்,” ஹலோ… இப்போ என்ன நடந்திடுச்சுன்னு சார் சீன் போட்டுட்டு இருக்கீங்க.” என்றாள் ராதிகா.
” ஹேய் ராதா… ரியல்லி சாரி. உண்மையிலே உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் நினைக்கலை. காட்… உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் விலகி விலகிப் போனேன். கடைசியா எங்க பாட்டி நினைச்சது மாதிரியே நடந்துடுச்சு. ” என்று அவளது கையைப் பற்றி, பித்துப் பிடித்தாற் போலக் கூறினான்…
“விஷ்வா… காம் டவுன். என்னை நல்லா பாருங்க. நான் எங்கேயாவது ஹர்ட் ஆன மாதிரி தெரியுறேனா. உங்களால என்னை கஷ்டப்படுத்த தான் முடியுமா? யார் என்ன சொன்னால் என்ன?”
” ராதா… நான் நம்ம வாழ்க்கைய எப்படியெல்லாம் ஆரம்பிக்கணும்னு கனவு கண்டேன் தெரியுமா? இப்படி செல்ஃப் கண்ட்ரோல் இல்லாமல் இருப்பேன் நினைக்கலை.” என்று பெருமூச்சு விட்டான்.
” விஷ்வா… கஷ்டப்பட்டு தான், நான் உங்களை அக்ஸப்ட் பண்ணேன் நினைக்கிறீங்களா? என்னோட காதலை உணரவில்லையா?” என்று தன் சிவந்த முகத்தை, மறைத்துக் கொண்டே வினவினாள்.
அவளை ஆசையாகப் பார்த்தவன், இழுத்து அணைத்துக் கொண்டான்.
” சரி விடுங்க விஷ்வா… பாட்டி என்ன சொன்னாங்க. அனுவோட காதலை ஏன் அக்ஸப்ட் பண்ணிக்கல” என்று வினவ.
அவளை தன் அணைப்பிலிருந்து விடுவித்தவன், ” பாட்டி விஷயம் நான் சொல்றேன். அனுவைப் பத்தி உன் ஃப்ரெண்ட் சொல்லலையா.” என்று கூர்ந்துப் பார்க்க.
” அவனோட அண்ணனைப் பத்தி சொல்ல வேண்டியதைப் பற்றி சொன்னான். ஆனால் அனுவைப் பத்தி நீங்க தான் சொல்லணும்.” என்றாள் ராதிகா.
பெருமூச்சு விட்டுக் கொண்ட விஸ்வரூபன் நடந்த அனைத்தை
யும் கூறினான்.
அனு காதலில் விழுந்ததிலிருந்து, அவளது காதலுக்கு வந்த தடை முதற்கொண்டு, பாட்டியின் சாபம் வரைக்கும் கூற…