எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 13

4.7
(40)

இதயம் – 13

“ஹலோ…  ஆர் யூ ஸ்டடியிங்? என்றவன் தொடர்ந்து சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல அப்போ நீ படி நான் வச்சிடுறேன்” என்ற விக்ரம் அழைப்பைத் துண்டிக்க போக…..

அவன் அப்படி சொல்லவும் தான் அதிர்ச்சியில் இருந்து சுயம் அடைந்தவள் “வெயிட் வெயிட் சார் வச்சிடாதீங்க  எனத் தட்டுத் தடுமாறி சொன்னவள் இப்போ படிச்சு முடிச்சிட்டேன் பேசலாம்” என்றாளே பார்க்கலாம்.

அவளின் மனசாட்சியே அவளைக் காரி உமிழ்ந்தது.

“ஹும்… என்றவன் அவளோடு பேச வேண்டும் என்ற தூண்டுதலில் என்ன படிச்சிட்டு இருந்த?”

அவளுக்கு மீண்டும் தூக்கி வாரிப் போட்டது. அவள் எங்கே படித்தாள்? குரலை செருமிக் கொண்டவள் “அனாடோமி தியரி தான் சார்”

“ஹும்.. நான் சொல்லனும்னு நினைச்சேன் நீ ரியலிஸ்டிக் ஆஹ் ஆன்சர் பண்ணி இருந்த ரியலி இம்பிரஸிவ் என்றவன் கெமிஸ்ட்ரில என்ன டவுட் இருந்தாலும் கேளு சொல்லி தரேன்” என்றும் சொல்லி இருக்க….

இதழ்கள் புன்னகையில் விரிய “தேங்க்ஸ் சார்…நிறைய டவுட்ஸ் இருக்கு நீங்க தான் ஃபுல்லா க்ளியர் பண்ணணும்” என்று அவள் வெட்கத்தில் விரல் நகத்தை கடித்துக் கொண்டு இரட்டை அர்த்தத்தில் பேச….. “ஹும் யுனிவர்சிட்டில ஃப்ரீ டைம் அப்போ டைம் வேஸ்ட் பண்ணாம வந்து கேளு சொல்லி தரேன் என்றவன் எப்போ ஹாஸ்பிடல் டிரெய்னிங் ஸ்டார்ட் உனக்கு?

“டூ வீக்ஸ்க்கு பிறகு சார் என்றவள் நிறுத்தி ஏன் சார்?”

“ஜஸ்ட் கேட்டேன் தட்ஸ் ஆல் என்றவன் இப்போ எதுவும் டவுட்ஸ் இருந்தால் கேளு சொல்லி தரேன்” என்றிட இவளுக்கோ இங்கு எரிச்சலாகி விட்டது. “வீட்லயும் அந்த பாலா போன கெமிஸ்ட்ரியை பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கான். நான் தான் லவ் பண்ண சொல்லி கொடுக்கணும் போல” என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டவள் இட்ஸ் ஓகே சார் நாளைக்கு கேக்குறேன்” என்று விட…

அதற்குமேல் அவனும் தூண்டித் துருவாமல் “ஹூம் ஓகே குட் நைட் என்றவன் அழைப்பை துண்டிக்க சென்று பின் நினைவு வந்தவனாய் யுனிவர்சிட்டில சார் சொன்னா போதும்” என்றவன் புன்னகையுடன் அழைப்பை துண்டித்து இருந்தான்.

அவளுக்கோ வானத்தில் பறக்கும் உணர்வு.

அப்படியே கட்டிலில் விழுந்து டெடியைக் கட்டிப் பிடித்துக் கொண்டவளுக்கு இன்னுமே அவன் தான் இப்படி எல்லாம் பேசுகின்றானா? என்ற வியப்பு தான். கைகளால் துழாவி போனை எடுத்தவள் அவனின் தொலைபேசி எண்ணை “ஐ லவ் யூ” என்று பதிந்தவள் முகத்தில் அவ்வளவு வெட்கம்.

அவனோ அவள் தன்னுடன் பேசும் போது அவள் திக்கித் திணறி பேசுவதை நினைத்து இன்னுமே இதழ்களில் தேங்கிய புன்னகையுடன் பால்கனியில் நின்று இருந்தான்.

இருவரும் எதிர்ப் பார்த்து இருந்த அடுத்த நாள் காலையும் விடிய அன்று சீக்கிரமாகவே பல்கலைக் கழகத்திற்கு புறப்பட்டு இருந்தான் விக்ரம்.

அவனைப் பார்க்க முதலில் அவள் வந்து இருப்பாள் ஆனால் இன்றோ அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்க அவனே செமினார் ஹாலிற்குள் யாரும் வருவதற்கு முன்பே வந்து அமர்ந்து இருந்தான்.

ஆனால், நம் நாயகியோ இரவு முழுதும் அவனின் நினைவில் விழித்து இருந்தவள் உறங்கவே சாமத்தைக் கடந்து இருக்க.. இதோ இப்போது விடிந்தும் அவள் நேசிக்கும் அவளவன் அவளுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றான் என்று அறியாமலேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

“அபிநயா… அபிநயா…. என்று கதைவை உடைக்காத குறையாக தட்டிக் கொண்டு நின்ற சாரதா அவள் இன்னும் எழவில்லை என்றதும் இறுதியில் பொறுமை போக அவரின் அலைபேசியில் இருந்து அவளுக்கு அழைப்பை எடுத்து இருந்தார்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அலைபேசியின் கணீர் ஒலியில் தூக்கி வாரிப் போட எழுந்தவள் மணியை பார்த்தவள் அதுவோ காலை 7.30 என்று காட்ட… அரண்டு போனவள் அழைப்பை ஏற்று “இதோ அம்மா எழுந்துட்டேன்” என்றவள் அழைப்பை அணைத்து விட்டு அரக்கப் பறக்க எழுந்து கதவை திறந்தவள் “சாரிமா நைட் படிச்சிட்டு தூங்க லேட் ஆகிறிச்சு” என்று அவள் சொல்லும் போதே “த்து” என்றது மனசாட்சி.

“உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படி உடம்பை வருத்தி படிக்காதனு என்றவர் அவளின் சிவந்து தடித்து இருந்த விழிகளை பார்த்து  விட்டு போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாமா சாப்பிடலாம்” என்க….

அவளும் விட்டால் போதுமென வேக வேகமாக குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

இப்போது அவளைக் கேட்டாள் யார் எழுந்தவுடன் காலையிலேயே பல் தேய்க்கவும் முகம் கழுவவும் சொல்லி வைத்தது என்று ஆத்திரத்தில் குதறி விடும் நிலையில் தான் இருந்தாள்.

ஏதோ கடனே என்று அவசரமாக தன் காலைக் கடன்களை முடித்து விட்டு ஆயத்தமானவள் அவளுக்கென ஆயத்தப் படுத்தி வைத்திருந்த உணவைக் கூட சாப்பிடாமல் சாரதா கூறுவதையும் காதில் வாங்காமல் “பை மா இட்ஸ் கெட்டிங் லேட்” என்று கிளம்பி இருந்தாள்.

அவளின் சந்தோசமான மனநிலை இன்னும் சற்று நேரத்திலேயே காணாமல் போய் விடும் என்று பாவம் அவளுக்கே தெரியாது.

அவளின் நேரத்திற்கு ஒரு ஆட்டோ கூட அங்கு வரவில்லை பல்லைக் கடித்துக் கொண்டு பதற்றமாக நின்றவள் அருகே ஒரு வயதான பெண்மணி வந்து அவளோடு வளவளவென கதைத்துக் கொண்டிருக்க “எங்க இருந்துடா எனக்குனு வர்றீங்க” என்று அவள் மனம் ஓலமிட அவர் கூறும் சொந்த கதை சோகக் கதை எதுவும் அவளின் காதில் நுழையக் கூட இல்லை மாறாக அவளின் கவனம் முழுதும் சாலையில் ஆட்டோ வருமா என்று தான் பதிந்து இருந்தது.

அவளின் நேரத்திற்கு அன்று எனப் பார்த்து எட்டு மணியைப் போல ஒரு ஆட்டோ வர அந்த வயதான பெண்மணிக்கு “பை பாட்டி” என்றவள் கைக் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே “அண்ணா யுனிவர்சிட்டில இறக்கி விடுங்க” என்றிட….

எட்டு அரை மணிக்கு ஆரம்பிக்கும் அவனின் முதல் வகுப்பு வேறு மேலும் அங்கு செல்லவே நாற்பத்து ஐந்து நிமிடங்களை பிடிக்கும். நேரம் போகப் போக அவளுக்கோ உடலோ பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் கூட இவ்வாறு தாமதமாக அவள் சென்றதும் இல்லை இறுதியாண்டு என்பதால் நேரத்திற்கு வர வேண்டும் என்ற கட்டளை வேறு தனது நடுக்கத்தை மறைத்துக் கொண்டவள் “அண்ணா கொஞ்சம் வேகமா போங்க எய்ட் தர்ட்டிக்கு முதல் போய்ட முடியுமா?” என்று கேட்டவளை கண்ணாடியூடு பார்த்தவர் “எவ்வளவு வேகமாக போனாலும் எட்டரை மணியை கடந்திரும் மா” என்றவர் அவளின் பதற்றமான முகத்தைப் பார்த்து இன்னும் வேகமாக செல்ல…

அந்தோ பரிதாபம் அவள் எதற்கு பயந்தாளோ அதே போல எட்டரை மணியை கடந்தும் விட்டது.

இனி பயந்து என்ன பயன் வருவதை எதிர்கொள்ள தானே வேண்டும்.

இதோ, பல்கலைக்கழக நுழைவாயிலை அடைந்தவள் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

எரிச்சலாக இருந்தது.

காலையிலேயே ஒருவரின் நடமாட்டம் கூட இருக்கவில்லை. ஆம், அவள் தானே தாமதமாக வந்து இருந்தாள். அழுகையோ பயத்தில் இதோ வந்து விடும் போல இருக்க இன்னும் வேகமாக நடந்தாள்.

இவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்தில் நாற்பத்தியொரு கல்வித் துறைகளில் இவள் படிக்கும் மருத்துவ பீடத்திற்கு உரித்தான செமினார் ஹாலிற்கு செல்லவே பதினைந்து நிமிடங்களை அங்கேயே கடந்து விட்டு இருந்தன. ஹாலினை நெருங்கும் போதே விக்ரமின் ஆளுமையான கணீர் குரல் அவளின் செவியை வந்தடைய அவளுக்கோ பதற்றம் கூடிப் போனது.

தன்னை முயன்று திடப் படுத்திக் கொண்டவள் “எக்ஸ்கியுஸ் சார்” என்றிட…

அவள் விடுமுறை எடுக்கவில்லை மாறாக தாமதமாகத் தான் வரப் போகின்றாள் என்று தெரிந்துக் கொண்டவன் உள்ளே கழன்ற கோபத்தில் இருக்க… இதோ அவன் நினைத்ததைப் போல தாமதமாக வந்து மேலும் அவனின் கோபத்தை தூபம் போட்டு ஏற்றி விட்டு இருந்தாள்.

புத்தகத்தை மேசையில் வைத்து விட்டு அவளை பார்க்காது புரோஜக்டரை ஒன் செய்து பாடம் எடுக்கத் தொடங்கி விட… அவளுக்கோ அழுகை தொண்டையை அடைத்தது.

இதற்கு திட்டி இருந்தால் கூட பரவாயில்லையே என்று அவள் நினைக்கும் அளவிற்கு இறுகிய முகத்துடன் இருந்தவனை பார்க்க உள்ளுக்குள் பதறியது அவளுக்கு…..

அப்படியே அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு இன்னும் அழுகையை கூட்டும் வகையிலும் அந்த சம்பவம் நடந்தேறியது.

பொதுவாக அவன் கேட்ட கேள்விக்கு… ருத்ரா கையை உயர்த்தி விட்டு எழுந்து பதில் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவள் மயங்கி சரிய உடனே “ஓஹ் ஷிட் என்றவன் செய்வதறியாது அவனே விரைந்து சென்று கீழே விழாமல் தாங்கிப் பிடித்தவன் கிவ் சம் ஸ்பேஸ் என்றவன் அவளை இருக்கையில் அமர்த்தியவன் நாடியை பிடித்துப் பார்த்து விட்டு நத்திங் சீரியஸ் பட் ஷி இஸ் வெரி வீக் பிளீஸ் செக் ஹேர் என்று அவள் அருகில் அமர்ந்திருந்த அவளின் நண்பிகளிடம் கூறிவிட்டு வில் கன்டினியூ த செஸ்ஷன் ஆப்டெர் தி இன்டர்வல்” என்றவன் வெளியில் அவனையே விழிகள் கலங்க வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை ஒரு ஆழ்ந்த பார்வைப் பார்த்து விட்டு வெளியேறி இருந்தான்.

அவன் சென்றதும் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு உள்ளே வந்தவளை பிடித்துக் கொண்ட விஷாலி “ஏன் டி லேட்?” என்று கேட்டவளிடம் ஒன்றும் கூறாது எங்கே வாயை திறந்தால் விம்மி வெடித்து அழுது விடுவோமோ என்றுப் பயந்தவள் அமைதியாக வந்து அமர்ந்துக் கொள்ள….

இவள் இப்படி அல்லவே என்று அதிர்ந்த விஷாலி “உனக்கு என்னடி ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க வாயை திறந்து சொல்லேன்” என்று உலுக்க…

“ப்ச்… என்ன ஆகணும் இப்போ? ஒரு அரை மணித்தியாலம் லேட் ஆஹ் வந்துட்டேன் அதுக்கு…” என்றவளுக்கு மேலும் பேச முடியாமல் குரல் உடைய…. “அதுக்கு என்ன டி? லேட் ஆஹ் வந்தா எல்லாரும் பண்றதை தான் சார் பண்ணார் அதுக்காக ஏன் இப்போ முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க?”

“நீ ருத்ராவை போய் என்னனு பாரு  நான் ஓகே ஆகிடுவேன் போ” என்று அவளை அனுப்பப் பார்க்க….

“எனக்கு நீ தான் பெஸ்டி ஃபர்ஸ்ட் உன்னை டீல் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் பார்க்கலாம்” என்க…

“நான் வர்ல அவளைப் பார்க்க”

“ஏன் டி?”

எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டே “ஏன் விக்ரம் அவளைத் தூக்கணும்?” எனக் குரல் தழுதழுக்க கூறியவளை பார்த்து நன்றாக முறைத்து வைத்தவள் “டோண்ட் யூ ஹேவ் அ சென்ஸ் அபிநயா? நீ ஒரு டாக்டரா? ஏன் டி இப்படி சுயநலவாதி மாதிரி பேசுற ஷி இஸ் அ ஃபேஷன்ட் நவ். அவளுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணார் அதுக்கும் மேல அவர் லெக்ச்சரர் கண்ணு முன்னாடி ஒரு பொண்ணு மயங்கி விழுறப்போ அதைப் பார்த்திட்டு இருக்க எந்த ஆம்பலையும் நின்னு பொறுமையா பார்த்திட்டு இருக்க மாட்டான்” என்று சரமாரியாக திட்டிக் கொண்டு போனவளை “நீ என்னோட ப்ரெண்ட் இல்லை போ” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளின் விக்ரம் மீதான அபரிவிதமான காதலால் இப்படி பேசுகின்றாள் எனப் புரிந்துக் கொண்ட விஷாலி “ஹே… இங்க பாரு” என்று அவளின் முகத்தை திருப்ப…

அவளோ விஷாலியின் கையை தட்டி விட…

மீண்டும் அவளின் முகத்தை வலுக்கட்டாயமாகத் தன்னை நோக்கித் திருப்பி பார்க்கச் செய்தவள் “ஓகே கூல் டி இட்ஸ் ஜஸ்ட் ஹெல்ப்”  என்று பொறுமையாக புரிய வைக்க முயற்சித்தாள். ஆனால் அவளோ “ஐ காண்ட் அவர் என்னை தவிர யாரையும் தொடக் கூடாது” என்றவளைப் பார்த்து “அப்போ ருத்ரா இடத்துல நான் இருந்து இருந்தாலும் இப்படி தானே நீ நினைச்சு இருப்ப செல்பிஷ்” என்று அவளை சரியான இடம் பார்த்து அவள் வார்த்தைகளை வீச….

“நாட் லைக் தட்.. நீ என்னோட ப்ரெண்ட். ருத்ரா வேற நீ வேற”

“என்னை தொட்டு தூக்குனா ஓகேவா அப்போ?”

“ஒப்கோர்ஸ் பிகாஸ் நீ என்னோட ப்ரெண்ட்”

“ஓகே லீவ் இட்… நீ கூல் ஆக ஐடியா தரேன் கொஞ்சம் சிரி” என்றாள் கதையை மாற்றும் பொருட்டு…..

அவள் சிரிக்கும் நிலையில் இல்லை இன்னுமே கோபம் கழன்றுக் கொண்டு இருந்தது அவளுக்கு…..

“ஓகே அப்போ போ எனக்கு ஒரு டவுட் இருக்கு அதை வாத்திகிட்ட போய் நானே க்ளியர் பண்ணிக்கிறேன்” என எழுந்தவளை பிடித்து இழுத்தவள் “என்னனு எழுதி தா. நானே போய் கேட்டுட்டு வரேன்” என்று மலர்ந்து புன்னகைத்தவளை பார்த்து “தட்ஸ் மை கேர்ள்” என்று விட்டு ஏற்கனவே எழுதி வைத்து இருந்த தாளை கிழித்து அவளிடம் கொடுத்தவள் வாத்திகிட்ட ஏடாகூடமா ஏதும் பேசி வச்சிடாத கன்ட்ரோல் யூவர் ஃபீலிங்ஸ் அபிநயா” என்று அவளை ஒரு பெரு மூச்சுடன் அனுப்பி வைத்து இருந்தாள் விஷாலி.

பாவம், அவள் செய்து வைக்கப் போகும் விடயம் தெரிந்து இருந்தால் அனுப்பி இருக்க மாட்டாளோ என்னவோ!

ஸ்டாப் ரூமை நெருங்கியதும் அவளின் வெண்ணிற கோர்ட்டின் பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து கேள்விக்கு கீழே நோட் என்று போட்டு அவள் மனதில் உள்ளதை எழுதி விட்டு தடதடக்கும் இதயத்துடன் விக்ரம் முன் சென்று நின்று இருந்தாள் அபிநயா.

எழுதிக் கொண்டு இருந்தவன் முகமோ சாதாரணமாக இருக்க இப்போது அபிநயாவைக் கண்ட பின் அவனே புன்னகைத்து விட்டு “டவுட் ஆஹ்? என்று அவளின் கையில் இருந்த தாளை பார்த்து விட்டு அவன் கேட்க…

அவளும் ஆம் என்ற ரீதியில் தலையை ஆட்டி விட்டு ஏதோ குருட்டு நம்பிக்கையில் அவனிடம் தாளையும் கொடுத்து விட்டாள்.

அதை வாங்கிப் புன்னகை முகமாகப் படித்தவன் முகமோ அவள் கேள்விக்கு கீழே எழுதி வைத்திருந்ததைப் படித்த பின் அவனின் முகமோ கொஞ்சம் கொஞ்சமாக புன்னகை மறைந்து அப்பட்டமான கோபத்தில் சிவந்து விட்டு இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!