எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

4.7
(42)

இதயம் – 7

முன் வாசலோடு மேலே செல்லும் படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தவன் முகத்தில் இதமாக தென்றல் மோத விழிகளை மூடி ஆழ்ந்து சுவாசித்தவன் கொழுசின் ஒலி கேட்கவும் அவனையே அறியாமல் இதழ்களும் விரிய அப்படியே நின்று இருந்தான் விக்ரம்.

 

இதயம் படபடக்க ஒரு ஆர்வத்தில் மேலேறி வந்தவளுக்கு இனிமேல் அவனை எப்படி எதிர் கொள்வது என்ற எண்ணத்துடன் சேர்ந்து தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவானோ என்ற பயமும் உள்ளூர அவளுக்கு தோன்றி இருந்தது என்னவோ உண்மை தான்.

 

பின்னால் வந்து நின்றவள் இதயமோ விட்டால் எம்பித் தரையில் குத்தித்து விடுவது போல  அதிவேகமாக துடித்தது. பதற்றத்தில் கைகளை பிசைந்தபடி நின்றவள் எதுவும் பேசாமல் நிற்க பொறுத்து பார்த்தவன் அவள் பேச வில்லை என்றதும் திரும்பி பக்கவாட்டு சுவற்றில் ஒற்றைக் காலை ஊன்றிய படி சாய்ந்து நின்றவன் அவளை தான் இமைக்காது பார்த்து இருந்தான்.

 

இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவி என்று அடித்துக் கூறினாலும் நம்ப முடியாத தோற்றம் அவளுடையது. பார்க்க பத்தொன்பது வயது பெண் போலத் தெரிந்தாள் அதுவும் படித்துக் கொண்டு இருக்கும் பெண் வேண்டாம் என சொன்னவன் இப்போது அவனுக்காக பார்த்த பெண் என்றதும் சாதாரணமாகத்  தோன்றும் ஈர்ப்பு அவளிடம் வந்து இருந்தது அவனுக்கே ஆச்சரியம் தான். இத்தனைக்கும் அவனுக்கு இருபத்து எட்டு வயது தான் ஆகின்றது.

 

தரையை பார்த்துக் கொண்டே கைகளை பிசைந்தபடி நின்றவளை  “கீழ என்ன தேடிட்டு இருக்க?” என்ற அவனின் கேள்வியில் விலுக்கென நிமிர்ந்துப் பார்த்தவள் ஒன்றும் இல்லை என்ற ரீதியில் தலையை இரு புறமும் அசைத்தாள். அவனை பார்த்தாலே தான் அவளுக்கு தொண்டைக் குழியிலேயே பேச வந்த வார்த்தைகள் யாவும் தேங்கி விடுகின்றன அல்லவா பின்னே எங்கனம் பேசுவது? “பேச மாட்டியா?” என்றான்.

 

“பேசுவேன்” என்றாள் தயங்கிய படி….

 

“இந்த கல்யாணம் பண்ணிக்க உனக்கு முழு சம்மதம் தானே ஐ மீன் என்னை பிடிச்சு இருக்கா?” என்ற அவனது நேரடி கேள்வியில் அவளுக்கோ அவளையே அறியாமல் முகம் சிவந்து விட அவளின் மனதோ “விட்டா இப்போவே உன்னை கடத்திட்டு போய்டுவேன் டா வாத்தி ஐயோ கேள்வி மேல கேள்வி கேட்டு கொல்றானே!” எனத் திட்ட மனதோடு பேசிக் கொண்டு இருந்தவள் முன் வந்து நின்றவன் சொடக்கிட, சுயத்திற்கு வந்தவள் அவன் தன் முன்னே நிற்கவும் அவளுக்கோ மயக்கம் வராத குறை தான்.

 

சும்மாவே பேச நா எழவில்லை இதில் இவ்வளவு நெருக்கத்தில் நிற்கின்றானே! “ஆத்தி…. அடக்கிவாசி அபிநயா எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவள் நிலத்தை பார்த்துக் கொண்டே பிடிச்சு இருக்கு” என்றாள். அதை சொல்லி முடிப்பதற்குள் அவள் பட்ட பாடு அவளுக்கு தான் தெரியும். அவனோ அத்தோடு அவளை விடுவானா என்ன? இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவன் “நான் என்ன கீழ படுத்தா இருக்கேன் ? ஒற்றை கையால் புருவத்தை வருடிக் கொண்டே லுக் அட் மீ” என்றானே பார்க்கலாம்.

 

“எதே…பார்க்கணுமா? ஐயோ!” என மனதிற்குள் புலம்பியவள் இதழைக் கடித்து விடுத்து மெதுவாக அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

 

அவளது முக பாவனைகளை பார்த்துக் கொண்டு இருந்தவன் தன்னை அறியாமலேயே ரசித்தான் அவளது தனக்கான தவிப்பு, தடுமாற்றம் அனைத்தும் அவனுக்கு ஏதோ சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது. அவளை அணுவணுவாக ரசிக்கத் தோன்றியது.

 

எப்படியும் தன்னை பதில் சொல்ல வைக்காமல் விடவே மாட்டான் என அறிந்தவள் “பிடிச்சு இருக்கு” என்றாள்.

 

“என்ன பிடிச்சுருக்கு?” என்ற அவனின் அடுத்த கேள்வியில் அதிர்ந்து விழி விரித்தவள் “ஆத்தி வெட்கப்பட வச்சு கொல்றானே!” என நினைத்துக் கொண்டவளின் மேனியோ குப்பென்று வியர்த்து விட… அவளின் திகைத்த தோற்றத்தில் என்ன நினைத்தானோ அடுத்த கேள்வியை அவளை நோக்கி கேட்டு இருந்தான்.

 

ஆம், காலையில் அவன் ஹாலின் உள்ளே நுழையும் போது அவள் முதலில் எழுந்து நின்று திகைத்து விழித்ததையே கேட்டு இருந்தான் விக்ரம்.

 

“இதுக்கு முதல் கேட்டதே பரவால்ல போலயே என தனக்குள் சொல்லிக் கொண்டே “குட் மார்னிங் சொல்ல தான் சார் என்று ஒருவாறு திக்கித் திணறி கூறியவள் மனதிலோ நாம ஏன் எழும்பினோம்ன்னு தெரிஞ்சா அவ்வளவு தான் எதாச்சும் சமாளிப்போம்” என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது.

 

“ஓகே” என இழுவையாக சொன்னவனுக்கு அவள் சொன்னது பொய் என அப்பட்டமாக தெரிந்தது.

 

அவன் ஆசிரியர் என்பதையும் தாண்டி இந்தியாவில் பிசினெஸ் உலகையே வென்றவன் அல்லவா! தன் முன்னால் நின்று பேசிக் கொண்டு இருப்பவரை எடைப் போடவும் தெரிந்து இருந்தது அவனுக்கு…..

 

“அப்பாடா வாத்தி நம்பிருச்சு” என ஒரு பெரு மூச்சு விட… அதற்குள் அந்த கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும் “நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்னு  இப்போதைக்கு உன் ப்ரெண்ட்ஸ்க்கு தெரிய வேண்டாம் பிகாஸ் உன்னோட ஸ்டடீஸ் என்னால ஸ்பாயில் ஆகுறது எனக்கு விருப்பம் இல்லை என்றவன் தொடர்ந்து ஆப்ட்டர் மேரேஜ் சொல்லனும்னா சொல்லிக்கோ அண்ட் மோர் ஓவர் உன் ஸ்டடீஸ்க்கு நான் ஹெல்ப் பண்றேன்” என்றான் மென் புன்னகையுடன்….

 

“அப்போ நமக்குள்ள ரொமான்ஸ் எதுவும் நடக்காதா?” என தொண்டை வரை கேட்க வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவள் தலையை சரி என்ற ரீதியில் ஆட்டி வைத்தாள் பெண்ணவள்.

 

“தட்ஸ் குட் என்றவன் வா கீழ போகலாம் என்றவன் அவளின் கையை பற்றிய படி முன்னால் செல்ல அவனோடு இழு பட்டு பின்னால் சென்றவளின் முகத்திலோ அதிர்ச்சி, வெட்கம் போன்ற கலவையான உணர்வுக் குவியலோடு அவளின் மனம் குத்தாட்டம் போட்டது என்னவோ உண்மை தான்.

அவனை நான்கு வருடங்களாக காதலிக்கிறாள். இப்போது தன்னவனின் முதல் ஸ்பரிசம் அவளைத் தீண்டும் போது கசக்குமா என்ன? வெட்கப் புன்னகையுடன் அவனின் விரல்களோடு தன் விரல்களை கோர்க்க முயலும் போது அவனோ அவளின் கையை விடுவித்து இருந்தான்.

 

குழந்தையிடம் இருந்து மிட்டாயை பிடிங்கியதைப் போல அவளின் முகமோ சட்டென வாட அவனின் கையை பார்த்துக் கொண்டு இருந்தவளின் கவனத்தை அவனின் “அபி” என்ற அழைப்பு மீட்டு இருக்க , விழிகள் வியப்பில் விரிய அவனை ஏறிட்டு பார்க்க… அவனோ   கண்களால் கதவைக் காட்டினான். அப்போது தான் வாசலில் வந்து நிற்பதை உணர்ந்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன அங்கே மேலும் நிற்க முடியாமல் நேரே தனது அறைக்குள் புகுந்து கதைவை தாழ் போட்டு விட்டு அதில் சாய்ந்து  நின்றவளுக்கு இதயம் வேகமாக துடித்தது “ஐயோ அதுக்குள்ள படில இறங்கி வந்திட்டமோ? ஓ மை கடவுளே! அப்பாபாபா… இன்னும் கூட படி கட்டி இருந்தால் தான் என்னவாம்” என வெளிப்படையாக சொல்லிக் கொண்டவள் அவளின் தந்தைக்கு திட்டவும் மறக்கவில்லை .

 

அவளை உள்ளே போக சொல்லி விட்டு சிறிது நேரம் வெளியில் நின்றவனுக்கும் ஏதோ புது வித உணர்வு தான். ஏதோ வேகத்தில் அவளின் கையைப் பற்றி பிடித்து விட்டது உரைக்க… மீண்டும் அவளின் கையை விட மனமில்லாமல் படி இறங்கியவனுக்கு இப்போது அவளின் மென் ஸ்பரிசம் தித்திக்கச் செய்ய அவனது மனமோ “ அவ  படிச்சு முடிக்கட்டும் விக்ரம் தேவையில்லாமல் கற்பனை பண்ணிக்காத” என எச்சரிக்க அவனின் இதழ்களில் இருந்த மென் புன்னகை கூட மறைந்து இருந்தது.

 

ஆனால் அவளோ தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் கட்டிலில் அமர்ந்த படி அவன் பற்றிப் பிடித்த தன் வலக் கையினை முகத்திற்கு நேராக கொண்டு வந்தவள் என்ன நினைத்தாளோ அவனின் ஸ்பரிசம் இன்னுமே தன் கைகளில் ஒட்டிக் கொண்டு இருப்பது போல உணர்ந்தவள் தன் கைக்கு தானே முத்தம் பதித்தவள் “அச்சோ அபினு அழைச்சானே” என தன் முகத்தை வெட்கத்தில் மூடிக் கொண்டவள் கதவு தட்டும் ஓசையில் தன்னை மறந்து தனியாக உலறிக் கொண்டு இருப்பதை நினைத்து நொந்தவள் “நல்லவேளை கதவை லாக் பண்ணிட்டேன்” என சொல்லிக் கொண்டே வேகமாக எழுந்துச் சென்று கதவைத் திறந்தாள். “மாப்ள வீட்ல கிளம்பப் போறாங்க டி ரூம்குள்ள என்ன பண்ணிட்டு இருக்க?” என்று சாரதா கேட்க…. வழமை போல அவளின் மனதோ “வேற என்ன உங்க மாப்ள மந்திறிச்சு விட்டுட்டாரு” என கவுண்டர் கொடுக்க…வெளியில் ஒன்றும் தெரியாததை போல சிரித்து வைத்தவள்  நீங்க போங்க மா நான் வரேன் என்றவள் அறைக்குள் வந்து கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்து விட்டு ஹாலிற்கு விரைந்து இருந்தாள் பெண்ணவள்.

 

வேகமாக முன்னால் வந்தவள் பார்வை வைத்தியநாதனை கட்டி அணைத்து பேசிக் கொண்டு இருந்த விக்ரமில் காதலாக படிய, அவளருகில் குரலை செருமிய படி வந்து நின்ற ஆழினி “என்னவாம் உன் வாத்தி?” ….

 

“அச்சோ அக்கா மெதுவா பேசுங்க எனப் பதறியவள் தொடர்ந்து அவர் பக்கத்துல போனாலே பேச்சே வருது இல்ல அக்கா ஹார்ட் பீட் ரெய்ஸ் ஆகுது”

 

“ஸ்டார்டிங் எல்லாம் அப்படி தான் இருக்கும் பட் நீ ரொம்ப ஷிவர் ஆகாதடி பேச ட்ரை பண்ணு” என்க….

 

“இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்சமா ஏதாச்சும் ட்ரை பண்ணனும் அக்கா” என்று வெட்கப் புன்னகையுடன் சொல்லிக் கொண்டவள் பார்வை அவனை விட்டு நகரவே இல்லை. “ஹும் ஸ்டடீஸ்லயும் போகஸ் பண்ணுடி நெக்ஸ்ட் வீக் ஷாப்பிங் பண்றப்போ மீட் பண்ணலாம் பை” என்றவள் அவளை அணைத்து விடுவித்து  விட்டு விலக… “ஷாப்பிங் ஆஹ் பட் செமினார் இருக்கும் அக்கா எப்படி உங்ககூட ஜாயின் பண்றது?” எனக் கேட்டவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த ஆழினி “உன்னோட நிச்சயதார்த்த டிரஸ் எடுக்க நீ தானே வரணும்” என கூறியவளை விழி விரித்து பார்த்தவள்  “வாட்? நிச்சயதார்த்தமா அது எப்போ?” என அதிர்ச்சியாக கேட்டவளை பார்த்தவள் “அதுவும் நெக்ஸ்ட் வீக்ல தான் பாலன்ஸ் நாங்க கிளம்பின பிறகு ஆன்டி சொல்லுவாங்க” என அவளிடம் கூறி விட்டு வெளியேறியவளை பார்த்து விட்டு எதேச்சையாக திரும்பியவள் விக்ரம் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து முகம் சிவந்தவள் அவனது  அவனது விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை மொத்தமாக அவன்பால் ஈர்த்து இருந்தது.

 

அனைவரும் கிளம்பி இருக்க, விக்ரம் தான் தனக்கு பார்த்த மாப்பிள்ளை என தெரிந்த கணத்தில் இருந்து மந்திரித்து விட்டது போல வீட்டில் நடமாடிக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்.

இரவு நேரமும் வந்து இருக்க, வைத்தியநாதன் தன் மகளின் பூரிப்பான முகத்தைப் பார்த்து மனம் கொள்ளா சந்தோசத்துடன் சாரதாவை ஓர் அர்த்தப் பார்வைப் பார்த்து விட்டு “அபிநயாவை சாப்பிட கூட்டிட்டு வா” என்க…

புன்னகைத்த படியே “சரிங்க” என்றவர் அவளை சாப்பிட  அழைக்கச் சென்ற சாரதா அவளின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவர் அப்படியே அதிர்ந்து நின்று இருந்தார்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!