ஆம், தானாகப் புன்னகைத்துக் கொண்டு வெட்கத்துடன் கரத்திற்கு முத்தமிட்டு கொண்டு இருந்தவளைப் பார்த்தே அதிர்ந்து போய் நின்ற சாரதா “அபிநயா” என்று அழைத்து இருந்தார்.
விழிகளை அகல விரித்து பக்கவாட்டாகத் திரும்பி ஹி ஹி ஹி என சிரித்து வைத்தவள் “அம்மா” என்றாள். மாறாக அவளின் மூளையோ எதைச் சொல்லி சமாளிக்கலாம் என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தது.
“அதுக்கு யாராச்சும் கைக்கு சிரிச்சிட்டே முத்தம் கொடுப்பாங்களா?” என்று கேட்க….
ஐயோ எதாச்சும் சமாளி டி என தனக்குள் சொல்லிக் கொண்டே “இது புது ட்ரீட்மெண்ட் மா யூநிவர்சிடில டிரெயின் பண்றாங்க. உங்களுக்கு இதெல்லாம் சொன்னா புரியாது மா. சரி வாங்க பசிக்குது” என்று சொல்லிக் கொண்டே சாரதாவைத் தாண்டி முன்னால் சென்றவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
அவளின் நடவடிக்கையை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட சாரதா “ கல்யாணம் ஆகப் போகுது இன்னும் சின்ன பிள்ள மாதிரி பண்ணிட்டு இருக்கா” எனச் சொல்லிக் கொண்டு சாப்பாட்டு மேசை அருகே வந்தவர் இருவருக்கும் உணவினை பரிமாற ஆரம்பித்து விட்டார்.
அன்று எனப் பார்த்து அவளுக்கு பிடித்த தோசையை வார்த்து இருந்தார் சாரதா.
பசி வயிற்றைக் கிள்ளியது தோசை என்றால் நிறையவே சாப்பிடுவாள் இப்போது தன் வலக் கரத்தினைப் பார்த்து விட்டு “சாப்பிட்டா சட்னி வாசம் அடிக்குமே! அச்சோ கடவுளே என்னை ஏன் பாடா படுத்துற என மனதில் சொல்லிக் கொண்டவள் அம்மா கைல செம்ம அடிமா கொஞ்சம் ஊட்டி விடுங்களே” என்க….
சாப்பிட்டுக் கொண்டு இருந்த வைத்தியநாதனுக்கும் சரி பரிமாறிக் கொண்டு இருந்த சாரதாவுக்கும் சரி ஒருங்கே அதிர்ச்சி தோன்றி இருக்க, இருவரின் திகைத்த தோற்றத்தில் அப்படி நான் என்னத்தை சொல்லிட்டேன் என மனதில் நினைத்துக் கொண்டே வெளியில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவள் “அப்பா சொல்லுங்க பா” என்று சொல்ல…
அவரும் குரலை செருமிக் கொண்டே “சாரதா அபிநயாவுக்கு ஊட்டி விடு” என்று சொல்ல…
அவரின் பேச்சுக்கு மறுப்பு ஏது!
ஒரு பெரு மூச்சுடன் அவளின் தட்டில் இருக்கும் தோசையை பிய்த்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்து விட்டார் சாரதா.
சாப்பிட்டுக் கொண்டே “எதுக்கு அவ்வளவு ஷாக் ரெண்டு பேருக்கும் அதுவும் பெத்த பிள்ளைக்கு ஊட்டி விடுறதுல என்ன இருக்கு?”
“நீயே தானே ஜஸ்ட் ஃபீவரா இருந்தால் கூட என்னை எதுக்கும் பக்கத்துல விட மாட்ட உன் வேலையை பார்த்துப்ப. இருபது வருஷத்துக்கு பிறகு இப்போ தான் என்னை ஊட்ட சொல்லி இருக்க அப்போ எங்களுக்கு ஷாக் ஆகாதா பின்ன”
அப்போது தான் அவளுக்கு புரிந்தது. “இப்படி மண்டைல இருக்க கொண்டையை மறந்து பல்ப் வாங்குறதே உனக்கு வேலையா போச்சு அபிநயா எனத் தன்னையே கடிந்துக் கொண்டவள் வைத்தியநாதனின் புன்னகைகையைக் கண்டு உள்ளம் கனிந்தவாலாய் அப்பா இப்போ ஹெல்த்க்கு எப்படி இருக்கு?” என்று கேட்டு இருந்தாள்.
“இப்போ கொஞ்சம் பெட்டர் ஃபீல் மா என்றவர் முகம் சுருங்க உன்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லி ரொம்ப கட்டாயப் படுத்திட்டேனா மா” என்று வினவ….
“ஐயோ அதெல்லாம் இல்லைபா எனக்கு முழு சம்மதம்” என்று சொன்னவளுக்கு குற்றவுணர்வாகிப் போனது விக்ரமாக இல்லையென்றால் எப்படியும் இந்த திருமணத்தை நிறுத்த முட்பட்டு இருப்பேன் அல்லவா என்று நினைத்தவளுக்கு முகம் சட்டென வாட “ஏன் மா முகம் வாடிப் போச்சு?” என்று வைத்தியநாதன் வினவ….
உடனே தன்னை சுதாரித்தவள் “மேரேஜ்க்கு பிறகு எப்படிப்பா உங்களை எல்லாம் விட்டு இருக்க போறேன்?” என்று கேட்டு இருக்க… அதற்கு மெலிதாக புன்னகைத்த வைத்தியநாதன் அந்த கவலை உனக்கு ஏன் மா மாப்பிளை வாங்குன புது வீடு அடுத்த தெருல தான் இருக்கு நாங்க அங்க வந்து உன்னை பார்க்கிறோம் மா” என்று சொல்ல….
முதலில் அதிர்ந்தவள் பின் ஆர்ப்பரித்த படி “நிஜமாவா அப்பா?” என்று கேட்டே விட்டாள்.
“ஆமா டி வாயை திற” என்று தோசையை ஊட்டி இருந்தார் சாரதா.
“எதுவும் நினைச்சு ஃபீல் பண்ணாத மா உனக்கு என்ன தேவைனாலும் அப்பாகிட்ட கேளு” என்றவர் அவளின் தலையை மென்மையாக வருடி விட்டு அறைக்குள் சென்று இருந்தார்.
இது அவளுக்கு புதிய விடயம் அல்லவா! பாவம் அவளும் ஒரு நாளைக்குள் எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவாள்.
“செம்ம ஜோலி லீவ்ல நம்ம வீட்டுக்கு வந்துடலாம் என்று மனதில் குத்தாட்டம் போட்டவள் அம்மா போதும் மா வயிறு ஃபுல் ஆச்சு நீங்க சாப்பிடுங்க என்று எழுந்தவள் சாரதாவை வலுக்கட்டாயமாக அமர வைத்து தோசையை எடுத்து வைத்தவள் சாப்பிடுங்க மா நான் அப்பாவுக்கு மாத்திரை எடுத்து கொடுத்திட்டு தூங்க போறேன் என்றவள் வைத்தியநாதனின் அறையை நோக்கி சென்று இருந்தாள் .
தன் உணர்வுகளை அடக்க பெரும் பாடு பட்டவள் ஒருவாறு அறைக்குள் நுழைத்துக் கொண்டவள் அறையினுள் வந்துக் கதவைத் தாழிட்டு விட்டு திரும்பியவள் மறுபடியும் தனது வலக் கரத்தினை பார்த்து வெட்கப் புன்னகையுடன் முத்தம் பதித்தாள்.
அவளின் மனசாட்சியே “ உனக்கு பைத்தியம் பிடிச்சிறிச்சு ” என்று சொல்ல… “எனக்கு தெரியும் நீ மூடு” என தன் மனதைக் கடித்தவள் மேசையின் முன் இருந்த கதிரையை இழுத்து போட்டுக் கொண்டு அமந்தவளுக்கு உண்மையிலேயே அவளின் பைத்தியக்கார தனத்தை நினைத்து புன்னகை தான் தோன்றியது.
“பரவால்லையே உனக்கு இன்னைக்கு கொடுத்து வச்சிருக்கு எனத் தன் வலக் கரத்தைப் பார்த்து பேசியவள் எவ்வளவு நாளைக்கு உன்னை நான் பத்தரமா எந்த அழுக்கும் படாமல் பார்த்துக்கிறது?” எனப் பேசியவள் அவன் பிடித்த தன் கரத்தில் இருக்கும் அவனது வாசம் சென்று விடக் கூடாது என சற்று முன்னர் சாப்பிடும் போது அவள் செய்த அலப்பறைகளை நினைத்து அவளுக்கு மேலும் இதழ்களில் புன்னகை விரிய “படுத்துறடா வாத்தி” என சொல்லிக் கொண்டாள்.
அந்த நாள் அவளின் மறக்க முடியாத நாளாக மாறிப் போக முகம் கொள்ளா சந்தோஷத்தில் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டவள் “ஐயோ! நாளைக்கு அவரை கண்டால் பேசலாமா? வேணாமா? என நாடியில் கை வைத்து யோசித்தவள் ஹையோ! எனக்கு வெட்க வெட்கமா வருதே! எனப் புலம்பிக் கொண்டு கட்டிலில் புரண்டு படுத்தவள் இப்போ என்னைப் போல வாத்தி என்னைப் பற்றி யோசிச்சிட்டு இருப்பாரா? இல்லனா தூங்குவாறா?” என பலவாறு புலம்பிய படி இரு கைகளாலும் முகத்தை மூடி வெட்கப் புன்னகையுடன் கட்டிலில் புரண்டு படுத்தவள் “அம்மாமாமா…” என்ற அலறலோடு கீழே விழுந்து இருந்தாள் பெண்ணவள்.
நல்லவேளை அவளின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை.
கீழே விழுந்தவளுக்கு கொஞ்சம் கூட இடுப்பை அசைக்க முடியாத நிலை தான். நன்றாக அடிபட்டு இருந்தது.
மிகவும் சிரமப்பட்டு இடுப்பைப் பிடித்துக்கொண்டு நிலத்தில் ஒற்றைக் கையினை அழுந்த ஊன்றிய படி எழுந்தவள் மெதுவாகச் சென்று செல்ஃபில் இருந்த ஓயில்மென்ட்டை எடுத்துப் பூசிக் கொண்டவளுக்கு இடுப்பை அசைக்கவே பெரும்பாடாகிப் போனது.
“ஐயோ! முடியலையே என இடுப்பை பிடித்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு இந்த வலியோடு நாளை எப்படி பல்கலைக்கழகத்திற்கு செல்வது? என்ற எண்ணம் தான். சிக் லீவ் போடவும் முடியாதே அதை விட முக்கியமா நான் வாத்தியை சைட் அடிக்கணும்” எனச் சொல்லிக் கொண்டவள் இதழ் கடித்து வந்த வலியை கட்டுப் படுத்திக் கொண்டு தனது இடையை மெதுவாக நீவ ஆரம்பித்து விட்டாள்.
அதே சமயம் விக்ரமோ நாளைய நாளுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் பற்றிய குறிப்புக்களை ஆராய்ந்துக் கொண்டு இருந்தான். அவனின் ஆசிரியத் தொழிலை தனது உயிரை விட மேலாக நேசிக்கிறான். அதனாலோ என்னவோ அதில் மூழ்கிப் போனவனுக்கு தான் ஒரு பெண்ணின் மனதில் காதலை வளர்த்து விட்டு வந்து இருக்கின்றோம் என்று அறியாமலேயே அவன் இருக்க, இங்கோ பெண்ணவள் அவனின் நினைவுகளுடன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள்.
அவள் ஆவலாக எதிர்ப் பார்த்து இருந்த அடுத்த நாள் காலையும் விடிய வழமைக்கு மாறாக அதிகாலை ஆறு மணிக்கே விழித்தவள் வழமைப் போல தனது அலைபேசியில் இருக்கும் அந்த புகைப்படத்திற்கு முத்தங்களை வாரி வழங்கியவள் துள்ளலோடு கட்டிலில் இருந்து எழுந்தவளுக்கு சுள்லென்ற வலி இடையில் இருந்து ஊடுருவ, அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.
நிலைமையின் தீவிரம் உணர்ந்தவள் “இது சரி பட்டு வராது இன்னைக்கு நான் போயே ஆகணுமே” என நின்ற நிலையிலேயே யோசித்தவளுக்கு மாத்திரைகள் சிலவற்றை அன்னையின் அறையில் வைத்தது நினைவுக்கு வர… அந்த நிலையிலும் கூட முகத்தில் புன்னகை அரும்பியது அவளுக்கு……
“எப்படியாச்சும் சத்தம் போடாம போய் எடுத்திட்டு வந்திடணும் இல்லனா என்னை போகவே விட மாட்டாங்க அம்மா” என மனதில் நினைத்துக் கொண்டவள் தன்னை சமன் செய்த படி இடையில் இருந்து கையை எடுத்துக் கொண்டவள் தான் திடமாக நடப்பதை போல வலியை முகத்தில் காட்டது மிகவும் சிரமப்பட்டு வெளியில் வந்தவள் சாரதாவின் அறையை பார்க்க அதுவோ லேசாக திறந்த நிலையில் இருக்க “ஆத்தி அம்மா எழுந்துட்டாங்க போலயே” என பதறியவள் தனது முயற்சியை கை விடாமல் மெதுவாக நடந்து சத்தம் எழுப்பாமல் அறைக்குள்ளும் வந்து விட்டாள்.
உள்ளே நுழைந்ததும் அறையை சுற்றி தன் விழிகளை சுழல விட்டவளுக்கு அப்போது தான் ஆசுவாசமாக இருந்தது.
வைத்தியநாதன் அதி காலையில் எழும் பழக்கம் இருப்பதால் அவரும் அந்த அறையில் இல்லாமல் போக பெரு மூச்சுடன் டிராயரில் இருக்கும் வலி நிவாரணி மாத்திரையை விழுங்கி மேசையில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீரை அருந்தியவள் சாரதாவின் குரலில் திடுக்கிட்டு விழித்தவள் வலியை முகத்தில் காட்டாது மெதுவாக கதவின் புறம் திரும்பியவள் “என் பாட்டில்ல தண்ணி தீந்து போச்சு மா அதான்” என தன் கையில் இருந்த போத்தலை அசைத்துக் காட்ட அவளை விசித்திரமாகப் பார்த்தவர் அவளை நெருங்கி வர அவளுக்கோ இதயம் படபடக்க ஆரம்பித்து விட்டது.
விழி விரித்து அவரையே பார்த்துக் கொண்டு நின்றவளை “அப்பாவோட ட்ரெஸ் எடுக்கணும் கொஞ்சம் விலகி நில்லு டி” என்றவர் அவளை லேசாக தான் விலக்கி இருப்பார் சாரதாவின் கரமோ அவளின் இடையில் பட்டு விட சும்மாவே வலியை அடக்க பெரும் பாடு பட்டுக் கொண்டு இருந்தவள் அம்மாமா என்று வலியில் அலற….
அவளின் அலறலில் பதறிப் போய் “என்னடி?” என அவளின் இடையை பிடிக்கப் போக, உடனே தன்னை சுதாரித்தவள் சாரதாவின் கையை தன் இடையை பிடிக்க விடாமல் பற்றிக் கொண்டவள் சத்தமாக “அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தறியாடி…” எனப் பாடல் பாட….
சாரதவுக்கோ பொறுமை காற்றில் பறக்க “காலையிலயே என்ன விளையாட்டு அபிநயா இது? இப்படி கத்தி தான் பாட்டு பாடனுமா? அப்பாவோட பிராப்ளம் உனக்கு தெரியும் தானே ஒரு டாக்டர் மாதிரியா நடந்துகுற?” என கேள்விகளை சரமாரியாக கேட்க….
“அம்மா மார்னிங் அந்த பாட்டு கேட்டேன் அதான் கொஞ்சம் வைப் ஆகிறிச்சு சாரி சாரி” என சாரதாவின் கன்னம் கிள்ளியவள் விட்டால் போதுமென தன் அறையை நோக்கி விரைந்து இருந்தாள்.
போகும் அவளை பார்த்து பெருமூச்சு விட்ட படி “கல்யாணம் பண்ணி ஒரு வீட்டுக்கு போய் குடும்பம் நடத்தனும்னு கொஞ்சமும் எண்ணம் இல்லை இவளுக்கு…” என தலையில் தட்டிக் கொண்டவர் உடையை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று இருந்தார்.