என் செல்ல நரகமே 2

4.6
(13)

செல்லம் 2

அன்னையின் பேச்சால் எழுந்த அடக்க முடியாத கோவத்தை எல்லாம் வண்டியின் ஆக்சிலேட்டரில் காண்பிக்க, வண்டியோ பறந்து கொண்டு இருந்தது.. 

மகளுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டுமென எல்லா பெற்றவர்களுக்குமான நியாயமான ஆசை தான்.. ஆனால் தன்னால் அதை இந்த ஜென்மத்தில் நிறைவேற்ற முடியாதே, அதை சொன்னால் புரிந்து கொள்வார்களா, 

தனக்கும் மட்டும் என்ன ஆசையா, இப்புடி தாய் தந்தையை கஷ்டப்படுத்த, ஆனால் முடியாதே, தன்னால்  திருமணம் செய்ய முடியாதே, காதல், திருமணம், குழந்தை என்ற ஆசையை எல்லாம் தான் வேரோடு ஒருவன் பிடிங்கி தன்னோடு எடுத்து சென்றுனது விட்டானே,

‘ஹரிஷ்’

ஒரு காலத்தில் ஹாசினியின் அனைத்துமாய் இருந்தவன்.. அது என்ன ஒரு காலத்தில் இப்போதும் அவளின் மனதின் இண்டு இடுக்கு என ஒரு இடத்தையும் விடாது மனம் முழுவதும் வியாபித்து இருப்பவன் அவன் மட்டுமே, இப்புடி மனதில் ஒருவன் சிம்மாசனமிட்டு இருக்கும் போது, வேறு ஒரு வாழ்க்கையை எப்புடி ஏற்பது.. அவளால் அது முடியுமா?  நிச்சயம் முடியாது, ஹரிஷை மறப்பது அவள் மரணிப்பதுக்கு சமம்.. 

இந்த அம்மாவிடம் இதை எல்லாம் விளக்க முடியுமா? அப்புடி எவ்வளவு எடுத்து சொன்னாலும், அவர்கள் எல்லாத்தையம் மறந்துட்டு உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோடி என்று தானே சொல்வார்கள் பெற்ற பாசம் மகள் காலம் முழுக்க இந்த உலகில் இப்போது இல்லாதவனை நினைத்து கொண்டே வாழ போகிறேன் என்று சொன்னால் அதை அவர்களால் ஏற்க முடியுமா? 

ஹரிஷ் சுஹாசினி கல்லுரி காலத்தில் அறிமுகமானவன்.. இவர்கள் கல்லூரி அல்ல.. வேறு கல்லூரி.. முதலில் நட்பாக ஆரம்பித்த பழக்கம் எந்த புள்ளியில் காதலாக மாறியது என இருவருக்குமே தெரியாது.. ஆனால் காதலித்தார்கள்.. ஆத்மார்த்தமான ஆழமான காதல் அது.. 

ஹாசினி சிடுசிடுப்பு பேர் வழி எதுகெடுத்தாலும் கோபப்படுகிறவள் என்றால், ஹரிஷ் மென்மையானவன் கோவம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவன்.. அவன் முகத்தில் எப்போதும் சின்ன சிரிப்பு ஒட்டி இருக்கும்.. ஹாசினியை ஈர்த்ததும் அது தான்.. கல்லூரி முடிந்ததும் இரு வீட்டிலும் பேசி திருமணம் செய்து கொள்வோம் என்ற முடிவில் இருந்தார்கள்..

ஆனால் நடந்ததோ வேறு, ஹாசினிக்கு கல்லூரி முடிந்ததும். அவள் நண்பர்கள் தோழிகள் என அனைவரும் கொடைக்கானல் சுற்றுலாவுக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்தனர். முதலில் சென்ற ஹாசினி அங்கிருந்து போன் செய்து ஹரிஷை அழைக்க, அவனும் இவளுக்காகவே வந்தான்.. இரண்டு நாள் அவனோடு கொடைக்கானலை சந்தோஷமாக சுற்றி திரிந்தாள்..

விதி யாரை விட்டது.. அனைத்திலும் நேர்த்தியான ஹரிஷ்க்கு சமீபகாலமாக செல்ஃபி மோகம் மட்டும் உண்டு.. ஒரு மலையின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுக்க முற்பட்ட போது கால் இடறி கீழே விழுந்து இறந்து விட்டான்.. 

கதறி அழுது துடித்து நரக வேதனையை அனுபவித்தது கொண்டு இருக்கின்றாள் ஆறு ஆண்டுகளாக சுஹாசினி.. தான் வர சொல்லவில்லை என்றால் வந்து இருக்க மாட்டானே, வராமல் இருந்திருந்தால் இது நிகழ்ந்து இருக்காதே, என்னால் தான் ஹரிஷ்க்கு இந்த நிலைமை.. அவன் இறப்புக்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்வும் இன்று வரை அவளை கொன்று கொண்டு இருக்கிறதே.. 

அவனை எப்புடி என்னால் மறக்க முடியும்? இந்த அம்மா ஏன் என்னை இவ்வளவு படுத்துறாங்க என்ன பண்ணுறது என்ற தீவிர யோசனையோடு பள்ளி வந்தடைந்தவள், அன்றும் மாணவர்களை படுத்தி எடுத்தாள்..

ப்ரேக் டைம் பதினோரு மணி வாக்கில் தன் போனை எடுத்து பார்க்க அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது.. கோவத்தில் எடுக்கவில்லை.. திரும்ப திரும்ப அழைப்பு வர கட் செய்தாள்.. அடுத்த இரண்டு நிமிடத்தில் சுமை தாங்கி என ஹாசினி சேமித்த வைத்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.. அதையும் வேகமாக கட் செய்தாள்..

அந்த சுமை தாங்கி வேறு யாருமல்ல சுஹாசினியின் ஆருயிர் தோழி இந்து.. உண்மையில் இவளையும் இவள் புலம்பல்களையும் கோவத்தையும் கண்ணீரையும் தாங்குகிற சுமை தாங்கி தான் அவள்..

அன்னைக்கு நிகர் என சொல்லலாம்.. ஆம் இவளும் சமீபகாலமாக நடந்ததையே எவ்ளோ நாளைக்கு நினைச்சிட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிக்க போற ஹாசினி கல்யாணம் பண்ணிக்கோடா, என அம்மா கோமதிக்கு நிகர் நச்சரிக்க ஆரம்பித்து இருக்கிறாள்.. இப்போது கூட கோமதி இவளிடம் காலை நடந்ததை அடுக்கி இருக்க வேண்டும்.. 

அதுக்காக சத்தம் போட, அவங்களை புரிஞ்சுக்கோடா என அறிவுரை மழையில் நனைக்க தான் அழைப்பாள் என கட் செய்தவள் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்..

மாலை நான்கு மணி பள்ளி முடிய, வீட்டிற்கு லேட்டா தான் போகனும், இல்ல கோமதி சும்மா விடாது.. அதோடு லேட்டா போய் பயப்படுத்துனா தான்,இன்னும் கொஞ்ச நாளைக்கு கல்யாண பேச்சை எடுக்க பயப்படும் என நினைத்தவள்,

எதற்கும் போனை எடுத்து பார்ப்போம் என தன் போனை இப்போது எடுத்து பார்க்க அதில் இந்துவும், தங்கை அம்முவும் மாறி மாறி போட்டி போட்டு 50 மிஸ்டு காலுக்கு மேல் விடுத்து இருந்தனர்.. இப்போது கூட அம்மு அழைக்க எத்தனை தடவை கூப்பிட்டாலும் எடுக்க மாட்டேன் என்ற உறுதி எடுத்தவள், எடுக்கவில்லை,

அடுத்த நொடி வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ்.. அம்மு தான்  வாய்ஸ் நோட் ஒன்று அனுப்பி இருந்தாள்..

இவளுக்கு இப்ப என்ன தான் பிரச்சினையோ சலித்து கொண்டே மெசேஜ் ஓபன் செய்து கேட்க, “அக்கா ஏன் போன் எடுக்க மாட்டேங்கிற, அப்பா காலையில் தீடிர்னு மயக்கம் போட்டுட்டாங்களாம்.. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்க சீக்கிரம் வா” என்று அதில் இருந்தது.. 

கேட்டவள் முகத்தில் அவ்வளவு அதிர்ச்சி,

அடுத்த நொடி பதறி அடித்து கொண்டு ஓடி தன் வண்டியை எடுத்து கொண்டு வேகமாக சென்றாள்.. இந்நேரம்  அம்மு சொன்ன விஷயத்தை கேட்ட அதிர்ச்சியிலும் பதட்டத்திலும் உடல் நடுங்கியது.. உள்ளங்கை கூட வேர்த்து விட ஆக்சிலேட்டரை வழுக்கியது இருந்தும் சமாளித்து எப்புடியோ அம்மு சொன்ன மருத்துவமனைக்கு வந்து விட்டாள்.. 

வண்டியை பார்க் செய்து விட்டு அம்மு சொன்ன அறைக்கான வழியை ரிஷப்சனில் கேட்டுவிட்டு அங்கு விரைந்தாள்.. 

வேகமாக வந்தவள் நடை மெதுவானது.. அறைக்கு வெளியே போடப்பட்டு இருந்த நீண்ட இரும்பு சேரில் முகத்தை இரு கைகளால் மூடியபடி அமர்ந்து இருந்தார் கோமதி.. அவர் அருகே அம்மு அமர்ந்து இருந்தாள்..

அவர் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்தவள் மனம் பிசைந்தது.. அருகே சென்றவள் “அம்மா” என தழுதழுத்த குரலில் அழைக்க, நிமிர்ந்து பார்த்தார் கோமதி.. 

“அப்பாவுக்கு என்னாச்சுமா?” அழுகையை முழுங்கியபடி கேட்டாள்.. அவர் பதில் சொல்லவில்லை.. முகத்தை திருப்பி கொண்டார்.. காலை போல் இப்போது கோவம் வரவில்லை.. 

“அக்கா அப்பா” என அம்மு சொல்ல வர, அவளை தடுத்த இந்து  

 “ஹாசினி இங்க வா” என கொஞ்சம்   தள்ளி அழைத்து சென்றாள்.. 

“இந்து என்னடி ஆச்சு?” என ஹாசினி கேட்கவும், அவளை முறைத்த இந்து,

“யாராவது இரண்டு மூணு தடவை விடாம போன் அடிச்சா ஏதோ அவசரத்திற்கு தான் போன் பண்ணுவாங்க, படிச்ச உனக்கு இது கூட தெரியாதா?  அதை எடுத்து கூட பேச முடியாதா? உன்னால்ல, அப்புடி என்னடி கோவம்?” என ஹாசினியை முதலில்  கடிந்த இந்து,

“அம்மா மார்னிங் லேவனோ க்ளாக் கால் பண்ணுனாங்க, அப்பா தீடிர்னு மயக்கம் போட்டுட்டாங்க இந்து, தண்ணி தெளிச்சு கூட எழும்பலை பயமா இருக்குன்னு, உடனே ஆம்புலன்ஸ் வர வைச்சு அப்பாவை ஹாஸ்பிடலில் சேர்த்துட்டோம்” என்றாள் இந்து.. 

“அப்பா இப்ப எப்புடி இருக்காங்க.. எதனால் மயக்கம் டாக்டர் என்ன சொல்றாங்கடி?” சுஹாசினி கேள்விகளை அடுக்க,

“அப்பாவுக்கு மைல்ட் அட்டாக்” இந்து சொல்லவும்,

“இந்து” என பதறினாள் ஹாசினி..

“டாக்டர் அதான்டி சொன்னாங்க.. அப்பாவுக்கு பயங்கர டிப்ரஷன், ஹை ப்ரஷர் அதனால் தான் அட்டாக் வந்து இருக்காம்” என இந்து சொல்லவும்,

“இப்புடி உடம்பை வருத்திக்கிற அளவு அப்புடி அப்பாவுக்கு என்ன இந்து கவலை” ஹாசினி கேட்கவும்,

இந்து பதில் சொல்லவில்லை.. ஹாசினியை தான் அழுத்தமாக பார்த்தாள்.. 

அந்த பார்வை உணர்த்தியது.. நீ தான், உன்னால் தான், உன் தந்தைக்கு இந்த நிலை என,  

ஹாசினி கையை அழுத்தமாக பற்றி ஒன்னும் ஆகாது என ஆறுதல் சொன்ன இந்து.. “அப்பா மதியமே கண் முழிச்சிட்டாங்கடா, இது தான் பர்ஸ்ட் அட்டாக் அதனால் பெருசா பயப்பட வேண்டியதில்லை டாக்டர் சொன்னாங்க.. ஆனா கவனமா பார்த்துக்கணும்.. அவங்க மனசு சங்கடப்படாம கஷ்டப்படுத்தாம முக்கியமா டிப்ரஷன் ஆகாம பார்த்துக்கணும் அது தான் அவர் ஹெல்த்க்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னாங்கடா” என இந்து சொன்னதையே தான்..

செல்வத்தை பரிசோதித்த டாக்டரும் கூறினார்.. “இன்னைக்கு ஒரு நாள் ஹாஸ்பிடலில் இருக்கட்டும்.. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்” என்றார்.. 

கொஞ்ச நேரத்தில் செல்வம் கண் விழித்து விட்டார்.. அவரை பார்க்க அனைவரும் அறைக்குள் செல்ல,

“ஏய் கோமதி சும்மா அழுது ஊரை கூட்டாத எனக்கு ஒன்னுமில்லை” என மனைவியை அதட்டியவர்,

அடுத்து பார்த்தது ஹாசினியை தான்.. “அப்பாவுக்கும் ஒன்னுமில்ல டா.. சின்ன மயக்கம் தான்.. ஆனா உன் அம்மாவும் இந்த டாக்டரும் தான் அதை பெரிய விஷயமாக்கிறாங்க.. எனக்கு ஒன்னுமில்லை பயப்படாத” என்றார் சிரித்தபடி, 

இவ்வளவு நேரமும் கண்ணீரை அடக்கி கொண்டு இருந்தவள், இந்த இடத்தில் உடைந்து விட்டாள்.. தந்தையின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவள், “உங்களுக்கு என்ன செய்ய தோணுதோ அதை செய்கப்பா.. எனக்கு சம்மதம்” என்றாள் ஹாசினி அழுகையோடு, செல்வம் முகத்திலும் கோமதி முகத்திலும் அவ்வளவு சந்தோஷம்..

காலை செல்வத்தை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு, ஹாசினி பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டு இருக்க,

“உன் வாட்ஸ் அப்பிற்கு மாப்பிள்ளை போட்டோ அனுப்பி இருக்கேன் பார்த்து சொல்லுடி”  என்றபடி நாசினி முன்பு வந்து நின்றார் கோமதி.. 

நைட்டு தான் சரி என்று ஒத்து கொண்டாள்.. அதுக்குள்ள மாப்பிள்ளையா? ஹாசினிக்கு தான் இப்போது என்ன செய்வது என தெரியவில்லை.. நேற்று இருந்த எமோஷனில் சரி என்று விட்டாள்.. 

ஆனால் இரவு முழுவதும் அவசரப்பட்டுடோமோ, கொஞ்சம் பொறுமையா வேற மாதிரி இதை சரி பண்ணி இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது.. 

எப்புடி என்னால் கல்யாணம் பண்ண முடியும்.. ஹரிஷ் ஏன்டா என்னை விட்டு போன, பாரு இப்ப எவ்வளவு கஷ்டப்படுறேன்னு, 

இதில் இன்னோருத்தர் வாழ்க்கையும் அடங்கி இருக்கே, என்ன பண்ண என பல யோசனை ஓட,

 இறுதியாக இப்ப தானே சரின்னு சொல்லி இருக்கோம்.. வரன் அமைய எப்புடியும் பத்து நாள் ஒரு மாசம் கூட ஆகும்… அப்புடியே அமைஞ்சாலும் இந்த தடவை நாமா வேண்டாம் சொல்ல கூடாது.. அந்த மாப்பிள்ளை கைல்ல கால்ல விழுந்து  அவனை வேண்டாம் சொல்ல வச்சிட்டனும்.. அப்புடி அவங்க வேண்டா சொல்லிட்டா கோமதியும் நம்மகிட்ட சண்டைக்கு வராது,

அப்பாவை  வேற ஏதாவது சொல்லி சமாதானம் பண்ணிக்கலாம் என்று எல்லாம் முடிவு எடுத்த பின்பு தான் அவளுக்கு தூக்கமே வந்தது.. 

ஆனால் இப்புடி மறுநாளே மாப்பிள்ளை போட்டோ என கோமதி வந்து நிற்க ஹாசினியின் நிலை தான் அய்யோ டா என்று இருந்தது..

“அப்புறமா பார்த்துக்கிறேன்” என்றாள்..

“ஏன் இப்பவே நல்ல நேரம் தான் இப்பவே பாரு” என்ற கோமதியின் நச்சரிப்பு தாங்காமல்,

கோமதி அனுப்பிய போட்டோவை பார்த்தவளுக்கு “இவனா” என்ற அதிர்ச்சியும் கோவமும் ஒருங்கே வந்தது.. போட்டோவில் அழகாய் சிரித்து கொண்டு இருந்த தேவ் அர்ஜுனாவை பார்த்து,

இந்த கடன்காரனுக்கு இன்னுமா கல்யாணம் ஆகலை என்ற கேள்வியும் மனதிற்குள் வந்தது… 

 

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!