“ஹாசினி காம் டவுன் காம் டவுன், உனக்கு என்னாச்சு, பர்ஸ்ட் கொஞ்சம் பொறுமையா உட்கார், என்ன விஷயம் சொல்லிட்டு சத்தம் போடு, ஓ… காட் ஹாசினி” என அர்ஜுன் கூறிய எந்த வார்த்தையும் சுஹாசினியை அமைதிப்படுத்த வில்லை…
அர்ஜுனோ அவளே முடிக்கட்டும் என காதில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. வேறு என்ன செய்ய முடியும்.. வேறு யாராவது இருந்தால், ஏதாவது செய்யலாம்.. வேறு எவரும் இங்கு வந்து அர்ஜுன் முன்பு இப்புடி குரலை உயர்த்த முடியாது அது வேறு விஷயம், அப்புடி செய்ய நினைத்தால் அர்ஜுன் அவதாரம் வேறாக இருக்கும்… இவள் கல்லூரியில் ஒன்றாக படித்தவள், அவனின் தோழி இந்துவின் தோழி வேறு, அதனால் அமைதியாக இருக்கின்றான்..
“நீ ரொம்ப மோசமானவன் உன் மனசு எல்லாம் அழுக்கு, நீ நினைக்கிற எதுவும் நடக்கவே நடக்காது” அர்ஜுனை திட்டி கொண்டு இருந்த ஹாசினிக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேலாக மூச்சடைக்க கத்தி கொண்டு இருந்ததில் மூச்சு வாங்க ஆரம்பித்தது, அதோடு தொண்டை வரண்டு போக இரும ஆரம்பித்தாள்..
அதை பார்த்து “ஏய் ஹாசி”னி என பதறிய அர்ஜுன், “வா வந்து உட்கார்” என நாற்காலியில் அவளை அமர வைத்து, மேசையிலிருந்த வாட்டர் பாட்டில் மூடியை கழற்றி விட்டு பாட்டிலை அவளிடம் நீட்ட, அவளுக்கும் தற்போது தண்ணீர் தேவைப்பட்டதால் வாங்கி குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்..
அவளை கை கட்டியபடி முறைத்த அர்ஜுன் “தேவையா இது எல்லாம் பொறுமையா பேசி இருந்தா இப்புடி நடந்து இருக்குமா, எதுக்கு இவ்வளோ ஆவேசம்” என முறைத்தபடி கேட்க,
“நீ பண்ணுன காரியத்திற்கு கோவப்படாம வேற என்ன பண்ண முடியும்” மீண்டும் கோவமாக அவனை முறைத்தாள்..
உஃப் என மூச்சை இழுத்து விட்டவன், “வந்ததிலிருந்து பண்ணுனேன் பண்ணுனேன் கத்திட்டு இருக்க, அப்புடி நான் என்ன பண்ணுனேன் அதை முதல்ல சொல்லும்மா” என கேட்கவும்,
“சும்மா ஏதும் தெரியாத போல நடிக்காத, நீ பண்ணுன காரியம் உனக்கு தெரியாதா”,
“அர்ஜுன் கண்ட்ரோல்” என அவள் அளித்த பதிலில் உண்டான கடுப்பை விரல்களை மடக்கியும் பல்லை கடித்தும் கட்டுப்படுத்தியவன்,
“தெரியலையே, தெரியாம தான் உன்கிட்ட கேட்கிறேன்.. ஏன்னா தினமும் நான் காலையிலிருந்து நைட்டு வரை நிறைய காரியம் பண்ணுறேன்.. அதில் நீ எந்த காரியத்தை சொல்றேன்னு தெரியாததால் தான் உன்கிட்ட கேட்கிறேன் சொல்லு” என்றான் அர்ஜுன் கொஞ்சம் எரிச்சலுடன், பின்ன எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருப்பது,
“இந்த நக்கல் பேச்சு எல்லாம் என்கிட்ட வச்சுக்காத கெட்ட கோவம் வரும்” என ஹாசினி கோவப்பட்டாலும் காலையில் வீட்டில் நடந்ததை சொல்ல,
“வாட்…. என்ன சொல்ற, நீ சொல்றது எல்லாம் உண்மையா” என அதிர்ந்தபடி அர்ஜுன் கேட்க,
எதிரே நின்று இருந்த பெண்ணவளோ “திரும்ப திரும்ப நடிக்காத அர்ஜுன், உனக்கு தெரியாமலா உன் வீட்டுலிருந்து என் வீட்டுக்கு கல்யாண பேச்சு வந்து இருக்கும்” …
“என்கூட ஒன்னா தானே காலேஜ் படிச்ச,உனக்கு தெரியும் தானே எனக்கும் ஹரிஷ்க்குமான காதல்.. அப்புடி இருந்தும் உன்னால் எப்புடி இந்த மேரேஜ் ப்ரோபசலை அனுப்ப முடிஞ்சுது” என மீண்டும் கோபத்தோடு திட்ட ஆரம்பிக்க
அர்ஜுனோ தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தபடி போனை காதில் வைத்தான்..
ஹாசினியோ, “ஹரிஷ் இப்ப இந்த உலகத்தில் இல்லாம இருக்கலாம்.. ஆனா என் மனசில் எப்பவும் இருப்பான். அவனை மறந்துட்டு இன்னோரு வாழ்க்கை நான் வா”.. என ஹாசினி அர்ஜுனை பார்த்து மூக்கு விடைக்க சத்தம் போட்டு கொண்டு இருந்தவள் பேச்சு நின்றது, எதிரே நின்று இருந்த அர்ஜுன் கத்திய கத்தலில் அவன் குரலில் இருந்த கோவத்தில்,
“அம்மா என்ன பண்ணி இருக்கீங்க.. யாரை கேட்டு இப்ப கல்யாண பேச்சை தொடங்கி இருக்கீங்க.. உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன், கல்யாணம் காதுகுத்து கருமாதின்னு எந்த பேச்சும் வேணாம்னு.. ஆனா நீங்க எனக்கே தெரியாமா”, இவ்வளவு நேரம் ஹாசினி போட்டது எல்லாம் சத்தமா என அவளே எண்ணும் அளவுக்கு மேசையில் இருந்த பொருட்கள் கூட அதிரும் அளவு இருந்தது அர்ஜுனின் கோபக்குரல்,
மறுமுனையில் ஏதோ சொல்ல முயற்சிக்க,” வேணாம் நீங்க எந்த எக்ஸ்ப்ளேசனும் கொடுக்காதீங்க.. எதுவும் வேண்டாம்.. இதோட விடுங்க.. திரும்ப திரும்ப கல்யாண பேச்சை ஆரம்பிச்சு என்னை டென்ஷன் பண்ணாதீங்க ப்ளீஸ்” என கத்தி விட்டு போனை வைத்தவன்,
தன்னை அதிர்ச்சியேடு பார்த்து கொண்டு இருந்த ஹாசினியிடம், “சாரி ஹாசினி எங்க வீட்டு ஆட்களால் உனக்கு ஏற்பட்ட தொந்தரவுக்கு, உண்மையா எனக்கு எதுவும் தெரியாது… தெரிஞ்சு இருந்தா இதை இவ்வளோ தூரம் வர விட்டு இருக்க மாட்டேன்.. நீ கிளம்பு இனி எந்த பிரச்சினையும் வராது” என்றான் அர்ஜுன் குரலில் இன்னுமே காட்டம் இருக்க தான் செய்தது..
ஹாசினிக்கோ கல்யாணம் பிடிக்காததால் இவ்ளோ கத்துனான? இல்லை என்னை கல்யாணம் பண்ண சொன்னதால் இவ்வளோ கத்துனான? எதுக்கு கல்யாணம் வேண்டாம் சொல்றான் என்ற கேள்வி மனதில் எழுந்தது.. என்னவாக இருந்தா உனக்கு என்ன, நீ வந்த வேலை நல்லபடியா முடிஞ்சதில்ல கிளம்பு என மனம் ஒரு புறம் சொன்னாலும், மறுபுறமோ என்னவாக இருக்கும் என்ற கேள்வி மண்டையை குடைந்தது.. அதோட அறையிலிருந்து வெளியேற கதவு வரை வந்தவள்,
“ஹாசினி” என்ற அர்ஜுன் குரலில் திரும்பி பார்த்தாள்..
“உனக்கு ஹரிஷ் எப்புடியோ, அப்புடி தான் எனக்கும் ஒருத்தி இருக்கா, காலேஜ் டைம்மிலிருந்தே, அவ தான் எனக்கும் எல்லாம்.. அவளை தவிர வேறு ஒருத்தரை என் வாழ்க்கையா என்னால்லையும் எப்பவும் நினைச்சு பார்க்க முடியாது.. இந்த ஜென்மத்தில் எனக்கு அவ மட்டும் தான், சோ இனிமே உண்மை என்ன ஏதுன்னு தெரியாம நீயா சும்மா கற்பனை பண்ணிட்டு தைய தைக்கான்னு குதிக்காத” என்றான்
“என்னது நீ லவ் பண்ணுனியா” அதிர்ச்சியாக ஹானிசி கேட்க,
“ஏன் பண்ண கூடாதா என்ன? அதுக்கு நீ ஏன் முகத்தை இப்புடி வச்சு கேட்கிற” என்றதும்,
“இல்லை லவ் பண்ணுனேன் சொல்ற, எனக்கு தெரியாதுல்ல அதான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்” என்றவள்,
மேலும் “இந்த விஷயத்தை உன் வீட்டில் சொல்லி அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி இருக்கலாமே” என்ற ஹாசினியை பார்த்து விரக்தியாக சிரித்தவன்
“அதுக்கு வாய்ப்பு இருந்திருந்தா எப்பவோ பண்ணி இருப்பேனே” நீ இப்புடி இங்க வந்து சத்தம் போடற நிலைமை வந்து இருக்காதே”என்றான்..
“ஏன் என்னாச்சு” என கேட்டவள், ஒரு நொடி நிறுத்தி “ஹரிஷ் போல அந்த பொண்ணும்”,
“ச்சே ச்சே அப்புடி எல்லாம் இல்ல”அவசரமாக மறுத்தான்.. “அப்புறம் என்னாச்சு” ஹாசினி கேட்க,
“எல்லா காதலும் கல்யாணத்தில் முடியறதில்லை.. சிலரை சந்தர்ப்பம் சூழ்நிலை பிரிச்சு வச்சு வேடிக்கை பார்க்கும்.. என் கதையும் அப்புடி தான்” என்றான்..
ஹாசினிக்கு அவன் சொன்னதை கேட்டு கஷ்டமாகி போனது… அவள் நிலையும் அது தானே, அவள் காதலை விதி பிரித்து விட்டது.. ஆனால் தன்னை விட அர்ஜுன் நிலை மோசம் என தோன்றியது.. விரும்பியவர்கள் உயிரோடு இருந்தும் அவர்களை வேறு ஒருவருடன் பார்ப்பது எவ்வளவு கொடுமை, பற்றாததுக்கு அவள் வீடு போல அவன் வீட்டிலும் கல்யாண நச்சரிப்பு.. அவன் நிலை புரியாது திட்டி விட்டோமே என தன்னை தானே கடிந்து கொண்டாள்..
“சாரி அர்ஜுன்” மனதார மன்னிப்பு கேட்க,
“நீ எதுக்கு கேட்கிற, நான் தான் உன்கிட்ட கேட்கனும்.. எங்க அம்மாவால் உனக்கு தான் ரொம்ப கஷ்டமா போய்ட்டுல சாரி” என்றான்..
பரவாயில்லை என்றவள் அர்ஜுன் அறையிலிருந்து வெளி வந்தாள் ஹாசினி.. அப்பாடா பிரச்சினை முடிந்தது என்ற நிம்மதி பெருமூச்சு ஒன்று வந்தது..
என்ன முடிஞ்சுது இந்த அர்ஜுன் இல்லைன்னா என்ன, ஏதாவது ஆகாஷ் அரவிந்த் சாமின்னு கோமதி யாரையாவது கொண்டு வந்து நிப்பாட்ட தான் போகுது… எத்தனை பேரிடம் போய் கெஞ்ச போற, இப்ப நடக்கிறதை எல்லாம் பார்த்தா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம கோமதி தூங்காது.. அப்பா உடல்நிலையை வைத்து இன்னும் அதிகமாக கோமதி தன்னை திருமணத்திற்கு நெருங்குவார் என்ன பண்ண போறேன் என குழப்போதோடு
அதே நேரம் அர்ஜுன் பேசியது எனக்குன்னு ஒருத்தி இருக்கா, அவளை தவிர வேற யாருக்கும் வாழ்க்கையில் இடமில்லை என்றது மண்டைக்குள் வந்து வந்து போனது..
மூளைக்குள் தீடிரென ஒரு யோசனை மின்னலாய் வெட்டி சென்றது..
நடந்து கொண்டு இருந்தவள் நடை நின்றது.. ‘சரியா வருமா கண்மூடி நின்ற இடத்திலே ஒரு நொடி யோசித்தாள்’.. சரியா வரும் என்றது உள்மனம்..
உடனே அவசரமாக தன் கைப்பையிலிருந்த போனை எடுத்தவள், சுமை தாங்கி என பதிந்து வைத்திருந்த இந்து எண்ணிற்கு அழைக்க போனவள், பின்பு வேண்டாம் என தனக்கு தானே தலை அசைத்து கொண்டு
வேறு எண்ணிற்கு அழைத்தாள்..
அர்ஜுன் முகத்தை வைத்து பார்க்கும் போது அவன் கூறியது உண்மை தான் என்று தோன்றியது.. இருந்தாலும் ஒரு தடவைக்கு இரு தடவை அதை வேறு யாரிடமாவது உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.. ஒரு வேளை அர்ஜுன் விளையாட்டுக்கு பொய் சொல்லி இருந்தால், அதனால் தான் இந்த குறுக்கு விசாரணை,
இந்து உயிர்த்தோழி தான் ஆனால் அர்ஜுன் மீதும் அவளுக்கு அன்பு அதிகம்.. அதனால் அவள் வேண்டாம் என பல்லவிக்கு அழைத்தாள்.. அவளும் இவர்ளோடு படித்த தோழி,
மறுமுனையில் போனை எடுத்த பல்லவி, “ஹே சுஹா எப்புடி இரு”.. என பல்லவி பேச ஆரம்பிக்கும் முன்பே ஹாசினி,
“பல்லவி அர்ஜுன் காலேஜ் படிக்கிற டைம் லவ் பண்ணுனான” என எடுத்த எடுப்பிலே கேட்க,
“ஹெங்” என்ற பல்லவி, “இதை கேட்கவா கால் பண்ணுன” சந்தேகமாக கேட்டாள்,
“ஆமா சொல்லு அர்ஜுன் லவ் பண்ணுனான”,
“தெரியலையே.. ஆனா அவர் பொண்ணு லவ் பண்ணி தான் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க.. அவர் லவ் பண்ணினாரா இல்லையான்னு தெரியலையே, நீ கவலையை விடு நெக்ஸ்ட் மன்த் நான் அவரை தான் இண்டர்வூயு எடுக்க போறேன்.. அப்ப இந்த கேள்விக்கான ஆன்சர் கரந்திட்டு வந்து சொல்றேன்” என்றாள் பல்லவி..
“செருப்பு பிஞ்சிடும் நான் கேட்டது அர்ஜுன், நம்ம கூட படிச்ச தேவ் அர்ஜுனன் பத்திடி பைத்தியம்” ஹாசினி கோவப்பட,
ஓ.. அவனா, பர்ஸ்டே தெளிவா கேட்டு இருக்கலாம்ல, அர்ஜுன் மொட்டையா சொன்னா எப்புடி? அவன் லவ் தான், உங்க வீட்டு லவ் எங்க வீட்டு லவ் இல்ல, பயங்கரமான லவ் என பல்லவி மேலும் பேச வருவதற்குள் கட் செய்தவள்,
திரும்பி வேகமாக அர்ஜுன் அறைக்கு சென்றாள்.. இந்த முறை கதவை தட்டிவிட்டு
உள்ளே சென்றாள்..
திரும்ப வந்த நின்ற ஹாசினியை அர்ஜுன் கேள்வியாக பார்க்க,
அர்ஜுன் இப்ப உன் வீட்டிலும் பிரச்சினை என் வீட்டிலையும் பிர்ச்சினை,
நான் சொல்ற போல பண்ணினா, நம்ம இப்ப நிற்கிற இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கலாம் என்றதும்,
“என்ன பண்ணனும் அர்ஜுன் கேட்க”
நம்ம இரண்டு பேரும் கல்யாணம் “பண்ணனும், பண்ணிக்கலாமா” என ஹாசினி கேட்டதும்
வாட்… என அதிர்ந்தவன் இது என்ன பைத்தியக்கார தனமான யோசனை ஹாசினி என அந்த அறையே மீண்டும் அதிரும் அளவு கத்தியே விட்டான்…