காலை பொழுதில் சிறுவர் சிறுமியர் என்னை சூழ்ந்திருக்க, என் முதல் கதையை எழுதுகிறேன்! என் கதையையே எழுதுகிறேன்!
ஆன்டி ஹீரோ கதைகளின் மாபெரும் ரசிகை நான்! இன்று என் வாழ்க்கையில் நான் விரும்பி படிக்கும் கதாநாயகனை போல் ஒருவனுடன் தான் வாழுகிறேன்! ஆனால் பாருங்கள் கதைகளில் நான் படிக்கும் கதாபாத்திரத்தை நேசித்த என்னால் நிதர்சனமாக அப்படி ஒருவனுடன் வாழ முடியவில்லை! இவ்வளவு ஏன் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியவில்லை!
என் சுவாசத்திற்காக நான் நடத்தும் போராட்டம் இது!
இது என் கதை! நான் சுதந்திரமாக சுவாசிக்க போராடும் ஒரு சிறு கதை!
இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது, இதே பூங்காவில் என் நெருங்கிய தோழி அம்ருதாவுடன் நான் பேசிய தருணங்கள்!
“ஹே அந்த ஹீரோ செம்ம ஹண்ட்சம் டி… அப்படியே அந்த சிகரெட்டை ஹீரோயின் முகத்துல ஊதுவான் பாரு… அதுலயும் அந்த இன்னொரு கதையோட ஹீரோ, ப்பா என்ன மசல்ஸ் அவனுக்கு, அந்த பிளேட்டை தூக்கி அடிக்கிறத அந்த ரைட்டர் எழுதி இருப்பாங்க பாரு, இன்னொரு தடவ அவன் மசல்ஸ் பார்க்கவே படிக்கலாம் போல… அதுவும் இந்த எஐ கூட எவ்வளோ அழகா இந்த ஆன்டி ஹிரோஸிக்குலாம் படம் கொடுக்குதுல… கடைசியா அவங்க ஹீரோயின் கூட ரொமன்ஸ்லாம் பண்றத பார்த்தா வாவ்”, என்று அன்று பேசியதை நினைத்து இன்று சிரிப்பு தான் வருகிறது!
அப்போதே என் தோழி அம்ருதா கூறினால், “லூசு போல பேசாத, அவனுங்களாம் கதைக்கு வேணா நல்லா இருப்பானுங்க… முதல்ல கதைலேயே எப்படி அவனுங்கள மக்கள் ரசிக்குறாங்கனு எனக்கு தெரியல… ஏதோ கோவக்காரனா இருந்தா பரவால்ல, பொண்டாட்டிய ரக ரகமா டார்ச்சர் பன்னிட்டு கடைசியா கால்ல விழுந்தா மன்னிச்சிரணுமா?”, என்று அவள் மூச்சு வாங்கி பேசினால்.
மேலும் தொடர்ந்தால், “இதையே ஒரு பொண்ணு பண்ணா ஓகேனு சொல்லிருவாங்களா? இல்ல தான… இப்படியே நம்ப எல்லாம் யோசிக்கறதுனால தான் இன்னும் நம்ப அடிமையா இருக்கோம்… நீ சொல்றியே ஆன்டி ஹீரோ அவனுக்கு ஏன் இவளோ காத்தாடிகள்னு உனக்கு தெரியுமா?”, என்று அவள் கேட்க, நானோ இல்லை என்று தலையசைத்தேன்.
“ஏனா நிறைய பெண்கள் அந்த மாதிரி டாக்ஸிக் வாழ்க்கைல தான் இருக்காங்க… அவங்களுக்கே டாக்ஸிக்னு தெரியல… என் புருஷன் என்ன வெளியவே விட மாட்டாரு தெரியுமா? அப்படியே கைல வச்சி தாங்குறாருனு லூசு போல பேசுற பெண்கள் இருக்காங்க… அதுக்கு காரணம் அவங்க மேல இருக்க நம்பிக்கை இன்மைனு நிறைய பெண்களுக்கு புரியர்தே இல்லை! சரி ஏன் பெண்கள் மட்டும் ஆண் நண்பர்கள் நட்பை தூண்டிச்சுக்கணும்! கேட்டா பொஸசிவ்ன்ஸ்! சரி இதையே அவங்க புருஷன் மார்கள் எல்லாரையும் அவங்க பெண் நண்பிகளோட நட்பை தூண்டிச்சுக்க சொல்ல சொல்லு… ஒருத்தனும் பண்ண மாட்டான்… அதுக்காக எல்லா ஆண்களும் இப்படி இருக்காங்கனு நான் சொல்ல வரல…”, என்று சொன்னவள் அருகில் இருந்தா பாட்டால் எடுத்து தண்ணீரை அருந்தினாள்.
பிறகு, “நிறைய ஆண்கள் நல்லவங்களாவும் இருக்காங்க… ஆனா உண்மை என்ன தெரியுமா? கதைல மட்டும் இல்ல நிஜத்துலயும் நல்ல ஆண்களுக்கு மதிப்பே இல்ல… ஆன்டி ஹீரோன்னு பின்னாடி போற மக்கள் எத்தனையோ நல்ல ஹீரோ கதைகளை வாசிக்கறதே இல்ல.. அதுக்கு காரணம் என்ன தெரியுமா! வெளி தோற்றம்! மற்றும் அவங்க என்ன பன்றாங்க அப்படினு வர்ணிச்சு எழுத்தாளர்கள் எழுதுற திறனும் தான்! இது கூட பரவால்ல… இன்னொன்னு சொன்னா ஏத்துப்பாங்களானு கூட தெரியல! ஆனாலும் சொல்றேன்… இத எல்லாத்தயும் கொஞ்சம் ஜெனெரலைஸ் பன்றாங்க… இதெல்லாம் இப்படி தான்… பெண்கள்னா ஆண்கள் சாரி சொன்னா அக்ஸப்ட் பண்ணிக்கனும்னு ஒரு மைண்ட் செட் கிரீயேட் பன்றாங்க… ஆன்டி ஹீரோ ஸ்டோரி முக்காவாசில ஹீரோயின ரேப் தான் பன்றான்… எப்படி ரேப் பண்ணவன் கூட ஒரு பெண்ணாலே வாழ முடியும்?”, என்று அவள் என்னை பார்த்து கேட்டாள்.
“ஏன் வாழ முடியாது? அவரு என்ன ரேப் பண்ணிட்டு கூட வாழ மாட்டேன்னா சொல்ராங்க? கல்யாணம் பண்ணிக்குறாங்க தானே? குழந்தை வந்தா இனிஷியல் கொடுக்குறாங்க தானே?”, என்று கேட்ட என்னை நினைத்தால் இப்போது எனக்கே ஆத்திரமாக வருகிறது!
“அவன் குழந்தைக்கு ஆயா வேலை பார்க்கவா இருக்கும்… இங்க பாரு நிஜத்துல அப்படி ஒருத்தனோட வாழவே முடியாது!”, என்று அவள் சொல்லி சென்றதும் தான் எத்தனை உண்மை என்று இன்று காலம் கடந்து நான் உணர்கிறேன்!
அப்போது தான் எனக்கும் மாப்பிளை பார்த்திருந்தார்கள். அந்த கேடுகெட்டவனின் பெயர் விக்னேஸ்வரன்! இவனுக்கு போய் அறிவுடையவன் என்கிற பொருளில் பெயரை வைத்த அந்த நபர் என் கையில் கிடைத்தால் இன்று என் கையாலேயே அவரை கொன்று போட்டிருப்பேன்!
அழகானவன் தான், நல்ல உத்யோகத்தில் உள்ளான், அவனின் முகத்தில் நான் படித்த ஆன்டி ஹீரோவை போல் கடுமையும் இருந்தது!
பின் இருவரும் பேச, மாடிக்கு சென்றோம்!
“ஹே! எனக்கு ஒரு பாஸ்ட் லவ் இருந்தா!”, என்று அவன் ஆரம்பிக்க, “அட என்னோட அந்த ரைட்டரோட ஆன்டி ஹீரோவ போலவே!”, என்று என் மனது நான் நான்கு நாள் முன்னாடி படித்த ஆன்டி ஹீரோவை நினைத்து கொள்ள, அவனும் அவனின் காதல் கதையை கூறி முடிக்க, “என் கூட அவளுக்கு செட் ஆகல… அதான் போய்ட்டா… ஆனா அவளை இன்னைக்கு வரைக்கும் கிஸ் கூட பண்ணது இல்ல”, என்று அவன் சொன்னதும், “அப்போ எனக்கே எனக்கானவன் தான்”, என்று என் மனம் குத்தாட்டம் போட்டது!
பின்பு என்ன, எங்கள் இருவரின் திருமணமும் கோலாகலமாக நடந்து ஏறியது!
அதற்கு பின் தான் வாழ்க்கை எனக்கு என்று வகுத்துள்ள பாடத்தை நான் பயில துவங்கினேன்!
அன்று முதல் இரவில், “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”, என்று நான் சொல்ல, “அதெல்லாம் முடியாது!”, என்று அவன் சொன்னவன், அதற்கு மேல் என்னை பேசவே விடவில்லை!
படிக்கும் பொழுது எழுத்தாளர்கள் என்னவோ, கதாநாயகிகளுக்கு சிறிது நேரம் கழித்து அவனின் மேல் உணர்வு பெருக்கெடுத்து ஓடுவதை போல் காண்பிக்கிறார்கள்!
எனக்கு அன்று தான் முதன் முதலில் ஆன்டி ஹீரோ கதை எழுதும் கதாசிரியர்களின் மேல் அத்தனை கோவம் வந்தது!
எத்தனை பெரிய பொய் உரைத்து இருக்கிறார்கள்!
என்னால் அவனுடன் ஒன்றவே முடியவில்லையே!
அவனின் தீண்டல் முதல், என்னுள் அவன் சேர்தல் வரை அத்தனை இடமும் வலித்தது!
என் பெண்மையை என் கணவன் அல்ல ஒரு கயவன் சூறையாடுவதை போன்று தான் நான் உணர்ந்தேன்!
நான் கிளர்ச்சி அடையவில்லை! மாறாக கொதித்து எழுந்தேன்! என் கணவன்! என்னை தொட்டு தாலி கட்டியவன் தான்! உரிமையுடைவன் தான்! ஆனால் என் அனுமதி இல்லாமல் என்னை தொடுவது எனக்கு தான் அருவெறுத்தது!
வலி, உடல் முழுக்க வலி! அதை விட மனம் ரணமாக வலித்தது!
அடுத்து நடந்தது தான் இன்னும் கொடுமை! ஆன்டி ஹீரோ கதைகளில் வருவது போல் அவன் என்னை அணைத்து கொண்டு படுப்பான் என்று நான் நினைத்து இருக்க, அவனோ என்னில் இருந்து விளகியவன், அவன் திரும்பி படுத்து கொண்டான்!
நான் மொத்தமாக உடைந்து விட்டேன்!
கதையில் வரும் ஆன்டி ஹீரோக்களை போல் இல்லையா அவன்!
அப்போதும் கூட என் பேதை மனம் நான் படித்த இன்னொரு ஆன்டி ஹீரோ நாவலை தான் நினைத்தது!
இப்படி ஒரு ஹீரோ இருப்பான், அவனின் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டு பிள்ளை உண்டாகிய பின் நன்கு கவனித்து கொள்வான்!
“சரி போக போக சரி ஆகிடும்”, என்று நான் நினைத்து கொண்டே தூங்கிவிட்டேன்!
அடுத்த நாள் யாரோ என்னை உள்ளுக்குவது போல் இருந்தது!
நானோ கண்களை மிக கடினப்பட்டு தான் திறந்தேன்! முதல் முறை உடலுறவு, அதுவும் வன்மையாக… இன்னும் உடல் வலித்தது தான்!
என் கணவன் தான் நின்று கொண்டு இருந்தான்!
“என்ன டி இன்னும் தூங்குற? போ போய் எனக்கு சமையல் செய் பசிக்குது”, என்று அவன் சொல்ல, அன்று இதே வார்த்தைகளை நான் படித்த ஆன்டி ஹீரோ கூற ரசித்த என்னால் என் கணவன் கூறும் போது அதை ரசிக்க முடியவில்லை!
எனக்கு அவன் அரக்கனாக தான் தெரிந்தான்!
இப்போது அன்று நான் என் நண்பியுடன் பேசிய வார்தையைகள் நினைவு வந்தது!
“எவளோ அழகா சொல்றான் பாரு டி! என் செல்லத்துக்கு பசிக்குது அதனால அவரு கேட்குறாரு! இந்த ஹீரோயின்க்கு செஞ்சு தர என்ன வலிக்குதா?”, என்று கேட்டது இன்று எனக்கு வலித்தது!
ஒரு பெண்ணாக இப்போது என்னால் அந்த வலியை புரிந்து கொள்ள முடிந்தது!
மிக மிக கடினப்பட்டு என் படுக்கையில் இருந்து எழுந்தேன்.. எப்படியோ ஒரு வழியாக குளித்து முடித்து அவனிற்காக சமையல் செய்து மேஜையில் வைத்தேன்!
அவனும் வந்து அமர்ந்தான்! அவனுக்கு நான் பரிமாற, ஒரு வாய் தான் வைத்து இருப்பேன்!
தட்டை தூக்கி அடித்து இருந்தான்! அதில் இருந்த சுட சுட சாம்பார் என் முகத்திலும் பட்டது!
என் தோழி அம்ருதாவிடம் நான் பேசிய வார்த்தைகள் இன்று மீண்டும் எனக்கு நினைவில் வந்தது!
இந்த காட்சியை தான் நான் ரசித்தேனா!
“என்ன எழவு டி இது? ஒரு உப்பு இல்ல உரப்பு இல்ல! இந்த கருமத்த மனுஷன் சாப்பிடுவானா?”, என்று கேட்க, எனக்கோ கண்களில் கண்ணீர் வழிந்தோடியது!
இன்று வரை என் பெற்றோர்கள் கூட என்னை அடித்தது இல்லை! ஆனால் என்னை ஒரே நாளில் இப்படி இழிவாக அவன் நடத்துவதை தாங்கி கொள்ளவே முடியவில்லை!
அவன் வெளியில் சென்று விட்டான்!
நானோ அப்படியே அமர்ந்து இருந்தேன்!
மதியம் கூட சாப்பிடவில்லை! சாப்பிடவும் தோன்றவில்லை…
இரவு எட்டு மணியளவில் உள்ளே அவன் நுழைய, எனக்கோ தூக்கிவாரி போட்டது!
நிற்க கூட முடியாமல், முழு போதையில் அல்லவா அவன் வந்திருந்தான்… அவனுக்கு குடிக்கும் பழக்கம் உள்ளது என்பதை அவன் சொல்லவே இல்லை!
“நீங்க குடிப்பிங்களா?”, என்று அவனை கேட்க, “ஆமா டி…”, என்று சொன்னவன், அடுத்து என் புடவையில் கை வைக்க, “என்ன பண்றீங்க?”, என்று கேட்டுக்கொண்டே நான் நகர்நது செல்ல, அவன் விட்டால் தானே!
நடு ஹாலில் என்னை நான் வேண்டாம் என்று சொல்லியும் சூறையாடினான்!
இப்படியாக ஒரு காட்சியை நானும் கதைகளில் படித்துள்ளேன்! அதற்கு பின் ஹீரோவை ஹீரோயினிற்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்!
அப்போது நான் சொல்லிய வார்த்தைகள், “அதான் ஹீரோவே கல்யாணம் பண்ணிகிட்டாருல… மாறிருவாரு”, என்று சொன்னது, இன்று அருவெறுத்தது!
ச்சீ, ஒரு கற்பழிப்பவனுடன் திருமணமா? அன்று இனித்தது, இன்று கேட்கவே நாராசமாக இருந்தது!
அப்போதே அம்ருதா கூறினால், “ஏன் டி நீங்கலாம் முன்னேறவே மாட்டிங்களா? வுமன் எம்பொவெர்மென்ட் பத்தி பக்கம் பக்கமா பேசுறீங்க.. ஆனா இன்னும் நாட்டாமை படம் மாறி ரேப் பண்றவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சா செம்ம ஹீரோன்னு பாராட்டு பத்திரம் வாசிக்குறீங்க… அப்போ எல்லா ரேப்பிஸ்ட்க்கும் எதுக்கு தண்டனை எல்லாம்? ரேப் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிரலாமா?”, என்று அவள் கேட்ட வார்த்தைகள் அன்று உரைக்கவில்லை!
ஆனால் இன்று செருப்பால் அடித்த உணர்வு!
அவள் கூறியதும் தான் எத்தனை உண்மை! கதைக்கும் உண்மை வாழ்க்கைக்கும் விண்ணிற்கும் மண்ணிற்கும் உள்ள தூரமாக தெரிந்தது!
அடுத்த நாள் காலை விடிய, ஒன்றுமே நடவாதது போல் விக்னேஷ் வர, “என்ன டி முறைக்கிற?”, என்று கேட்டவனின் குரலில் அத்தனை கடினம்!
“குடிப்பிங்களா? அதுவும் குடுச்சிட்டு என் கூட…”, என்று நான் நிறுத்திக்கொள்ள, “என்ன குடிச்சிட்டு உன் கூட படுக்குறேனா?”, என்று அவன் கேட்க, நானோ முகத்தை திருப்பி கொண்டேன்!
அவனை பார்க்க கூட பிடிக்கவில்லை!
அவனோ என் தடையை இறுக பிடித்து அவன் புறம் திருப்பி, அவனின் முகத்தை அருகில் கொண்டு வர, குமட்டி கொண்டு வந்தது!
அப்போது தான் சிகரெட் பிடித்து இருப்பான் போல! மீண்டும் நான் படிக்கும் கதையின் நினைவுகள்!
“அந்த ஹீரோ சிகரெட் புகைய ஹீரோயின் முகத்துல விடுவாரு பாரு…”, என்று நான் அறியாமல் பேசியதை கண்டு நானே ஒரு பெண்ணாக வெட்கினேன்!
என்னால் அவன் சிகரெட் பிடித்து விட்டு நெருங்கி வருவதையே சகித்து கொள்ள முடியவில்லையே! எப்படி அந்த பெண் அவனின் புகையை ரசிக்க முடிந்து இருக்கும்?
மது மற்றும் புகை நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று எல்லா படத்திற்கு முன் சொல்வது போல், கதாரிசியர்கள் ஏன் சொல்வதில்லை!
நிச்சயமாக இதோடு சொல்ல வேண்டும்! ஹீரோக்கள் புகை விடுவதை கூட ரசிக்கும் வண்ணம் எழுதி என் போல் சிறு பெண்ணின் மூளையை சலவை செய்து விடுகிறார்கள் அல்லவா!
கருத்து சுதந்திரம் உள்ளது என்று நிதர்சனத்தை எழுத மறந்து விடுகிறார்களோ?
இந்த கதையில் வரும் கதாபாத்திரம் யாவும் கற்பனையே என்று ஆரம்பிப்பவர்கள்.. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் இவர்களுடன் எப்படி வாழ வேண்டும் என்று எழுதினால் தானே பெண்ணியம் பேச முடியும்!
அதை விட கொடுமை இப்படி பல ஆன்டி ஹீரோ கதைகளை எழுதுபவர்கள் பெண்களே!
அப்படி என்றால் இப்படி தான் அனைவரின் வாழ்க்கையும் இருக்கிறதா? அதனால் தான் அவர்கள் ஆன்டி ஹீரோக்களை ரசிக்க வைக்கிறார்களா?
இப்படி பல கேள்விகள் என்னுள்!!!
“என்ன டி யோசிச்சிட்டு இருக்க? இங்க பாரு நான் குடிப்பேன்… கூத்தடிப்பேன்.. ஏன் வேணும்னா கூத்தியால கூட கூட்டிட்டு வருவேன்.. எனக்கு அடங்குன பொண்டாட்டியா நீ இருக்கனும்… இல்லனு வை”, என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து விட்டு சென்றான்.
நான் அப்படியே இடிந்து அமர்ந்து விட்டேன்!
என் மனத்துக்குள் ஆயிரம் கேள்விகள்! கதைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் தான் எத்தனை வித்தியாசம்?
கதை, கதை, என்று கதையின் பின்னால் சென்று கற்பனையில் மட்டுமே பார்த்து என் கண்முன் நடக்கும் காட்சிகளை காண தவறவிட்டு விட்டேனோ என்று தோன்றியது!
கதை உலகம், படிக்கும் வரையில் தான், படித்து முடித்து வெளியே வரும் போது அதை நினைத்து நிதர்சனத்தை மறந்து விட கூடாது என்று எனக்கு அப்போது தோன்ற வில்லை!
இதுவே என் வாழ்க்கையில் தொடர்கதை ஆனது!
ஆனால் அவனின் பெற்றோர் மற்றும் என் பெற்றோர் வரும் நாட்களில் மட்டும் என்னை நான்றாக தான் பார்த்து கொள்வான்!
எனக்கே சில நேரம் தோன்றும், அப்போது என்னுடன் வாழும் நபர் தான் வேறோ என்று! இவனுக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் இருக்கிறதா? என்று நான் நினைத்த நேரங்கள் பல உண்டு!
ஆறு மாதங்கள் கடந்த நிலையில், நான் கர்ப்பம் தரித்தது இருப்பது உறுதியானது!
அதை அவனிடம் கூறினேன்!
“ஓஹ் நான் ஆம்பளன்னு எனக்கு தெரியும்.. சரி வா ஹாஸ்பிடல் போய்ட்டு வந்திறலாம்”, என்று சொன்னவன், என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
மருத்துவரும் பரிசோதித்து விட்டு, என் கர்ப்பத்தை உறுதி செய்ய, அன்றில் இருந்து என்னை பெரிதாக கொடுமை படுத்த வில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்!
நான் எப்படி இருக்கிறேன் என்றெல்லாம் கவலை இல்லை!
ஐந்து மாத கருவை நான் சுமந்து கொண்டிருந்தேன்!
அவனும் என்னுடன் பரிசோதனைக்கு வருவதாக கூறினான்!
அழைத்து சென்றேன்! என்னுடன் வந்தவன், மருத்துவருடன் தனியாக சில நேரம் பேசிவிட்டு, வீட்டிற்கு வர, மாத்திரைகளை கொடுத்தான்!
நானும் உண்டேன்!
அடுத்த ஒரு மணி நேரத்தில், வயிறில் சுள்ளென்ற வலி, என் காலுக்கடியில் ஈரம்!
ஆம் என் குழந்தை கலைந்து விட்டு இருந்தது!
நான் அலறிய அலறல் பக்கத்தில் உள்ளவர்கள் கூட உள்ளே வந்து விட, அவனோ நிதானமாக தான் வந்தான்!
அப்போதே ஏதோ தவறாக பட்டது!
மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டேன்! கண்விழித்த எனக்கு டிஎன்சி செய்து இருந்தார்கள்!
என் கண்களில் இரத்தம் வராத குறை தான்!
அப்போது அங்கு வந்த தாதி ஒருவர், “ஏன் மா பெண் குழந்தைனு கருவை கலச்சிட்டீங்க?”, என்று கேட்க, எனக்கோ உடலே விரைத்து விட்டது!
“என்ன சொல்றிங்க?”, என்று கண்கள் விரிய நான் கேட்க, “உங்க புருஷன் தான் அன்னைக்கு டாக்டர்க்கு காசு கொடுத்து, என்ன குழந்தைனு தெரிஞ்சிக்கிட்டு, என் பொண்டாட்டிக்கு பெண் குழந்தை பிடிக்காது… கலச்சிருங்கனு மாத்திரை வாங்கிட்டு போனாரு… டாக்டர் உயிருக்கு ஆபத்துனு சொல்லும் போது கூட, அவளுக்கு பெண் குழந்தைனு தெரிஞ்சா அவ கொலை பன்னிருவானு சொன்னாரு மா”, என்று அவர் சொல்ல நான் மறித்து விட்டேன்!
பின்பு சில மணி நேரம் கழித்து, அந்த கொலைகாரன் வந்தான்!
ஆம் கொலைகாரன் தானே! என் பிள்ளையை கொன்ற அவன் கொலைகாரன் தானே!
பத்து நிமிடம் என்னுடன் படுத்த அவனுக்கும் தான் என் வலி தெரியுமா? ஐந்து மாதங்களாக என் மகவை தடவி தடவி நான் அதனுடன் உறவாடியது? எத்தனை நாள் என் பிள்ளைக்காக எனக்கு பிடித்த உணவை கூட நான் தள்ளி வைத்து இருப்பேன்? தினமும் காலை வரும் மசக்கையின் மயக்கத்தை கூட சுகமாய் ஏற்றதும் தான் அந்த கொடிவனும் அறிந்திடுவானோ!
மனிதனா இவன்? மிருகத்திற்கு கூட இவனை விட நல்ல மனது உள்ளது போல!
கூடவே என் அன்னை தந்தை, அவனின் பெற்றோர்களும் நுழைய, அருகில் இருந்த கத்தியை எடுத்து அவனை குத்தவே போய் விட்டேன்!
என் கையில் இருந்த சலைன் பாட்டில் அறுந்து விழுந்தது கூட எனக்கு தெரியவில்லை!
அவனை கொன்று விட வேண்டும் என்கிற வேட்கை மட்டும் தான்!
“என்ன பண்ற மா நீ?”, என்று என் அன்னை கேட்க, திருமணம் ஆனது முதல் இன்று இப்போது வரை அவன் செய்த அனைத்து கொடுமையையும் கூற, “மாப்பிளை நல்லவரு மா”, என்று என் தந்தை அவனுக்கு சான்றிதழ் கொடுக்க, “அப்போ நீங்களே அவன் கூட வாழுங்க! எனக்கு டிவோர்ஸ் கொடுக்க சொல்லுங்க”, என்கவும், அவன் கூட அதிர்ந்து விட்டான்!
“ஹே செல்லம் இதுக்கு எதுக்கு டிவோர்ஸ்லாம்”, என்று அவன் நடிக்க, இது ஒன்றும் ஆன்டி ஹீரோ நாவல் இல்லையே, நானும் அந்த கதைகளில் வரும் லூசு ஹீரோயின் அல்ல, அவனை மன்னித்து பரந்த மனப்பான்மையுடன் ஏற்று கொள்ள, “எனக்கு டிவோர்ஸ் வேணும்… இல்லனா உன்ன டொமெஸ்டிக் வைலென்ஸ் கேஸ்ல உள்ள தள்ளிருவேன்! எப்படி வசதி?”, என்று கேட்க, அவனுக்கு அதற்கு மேல் பேசவும் தான் முடியுமா என்ன!
என் பெற்றோர்கள் தான் ஒப்புக்கொள்ள வில்லை!
“உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன்! எனக்கு படிப்பு இருக்கு நான் பொழச்சுக்குவேன்”, என்று சொல்லிவிட்டு மொத்தமாக வெளியே வந்து விட்டேன்!
இப்போது ஒரு லேடிஸ் ஹோஸ்டேலில் தான் வசிக்கிறேன்!
எத்தனையோ முறை என் பெற்றோர்களும், அந்த கொடியவனும் வந்து என்னை சமாதானம் செய்ய முயற்சிக்க, அதற்கெல்லாம் மசியும் ஆள் நானில்லை என்று அவர்கள் அறியவில்லை!
இன்று தான் அந்த நன்னாள்! எங்கள் விவகாரத்தின் கடைசி ஹியரிங்! இப்போது தான் செல்ல போகிறேன்!
கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் அவனிடம் இருந்து விடுதலை பெற மூச்சு முட்டாமல் சுதந்திரமாக சுவாசிக்க போராடி கொண்டு இருக்கிறேன்!
சென்று விட்டு வந்து மீதி கதையை எழுதுகிறேன்!
அடுத்த மூன்று மணி நேரம் கழித்து அதே இடத்தில் வந்து அமர்ந்து இருக்கிறேன்!
நான் நினைத்தது போல் எனக்கு இன்று முழுமையான விடுதலை! அந்த அரக்கனிடம் இருந்து!
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மூச்சு மூட்டிய ஒரு வாழ்க்கை!
தூங்க முடியவில்லை! எத்தனை நாள் நான் கவுன்செலிங் சென்றேன் என்று எனக்கே தெரியவில்லை!
நிம்மதியாக சுவாசிக்க கூட முடியவில்லை! ஆனால் இன்று சுவாசிக்கிறேன்! சுதந்திரமாக சுவாசிக்கிறேன்!
எந்த ஒரு தடையும் இன்றி எனக்காக சுவாசிக்கிறேன்!
நான் என்ன செய்கிறேன் என்று சொல்லவில்லையே!
ஆசிரியை நான்! இன்று முதல் கதாரியையாகவும் பரிமாற்றம் பெற போகிறேன்!
என் வாழ்நாளில் என்றும் ஆன்டி ஹீரோ கதைகளை எழுதவே கூடாது என்று சபதம் எடுத்து விட்டேன்!
நிதர்சனத்தை எழுதலாம், கற்பனையையும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து நல்லவனை எழுதலாம், ஆனால் ஒரு கேடு கெட்டவனை மன்னித்து அவனிடம் இருக்கலாம் என்று அவ்வாழ்க்கையை நான் பொதுமை படுத்த விரும்பவில்லை!
அதற்காக சிறு சிறு பிரச்சனைகளுக்கு விவாகரத்து தீர்வும் அல்ல! சிறிது சகித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டு வாழலாம்… ஆனால் சுரணை இல்லாமல் வாழ கூடாது அல்லவா!
சுயமரியாதை என்றும் முக்கியம் என்பதை தான் நான் என் எழுத்துக்களில் காட்ட விரும்புகிறேன்!
சுதந்திரம் என்றும் முக்கியம்! அதுவும் சுதந்திரமாய் சுவாசிக்க நல்ல மனநிலை முக்கியம்!
என் பெயர் நான் சொல்லவே இல்லையே! ஸ்வாதிந்தா!
என் பெயருக்கு அர்த்தம் என்னவென்று கேட்டால் இன்னும் மிரண்டு விடுவீர்கள்! சுதந்திரம்!
என் பெயரின் அடையாளத்திற்காக மட்டும் இன்றி, என் சுய அடையாளத்திற்காகவும் போராடினேன்! ஜெய்த்தும் விட்டேன்!
இனி என் வாழ்வில் ஒரு ஆண்மகன் வரலாம், வராமலும் போகலாம்! ஆனால் நிச்சயம் அது ஒரு ஆன்டி ஹீரோவாக இருக்காது!
என்றும் சுதந்திரமாய் சுவாசிக்க விரும்பும்!
நான் உங்கள்,
ஸ்வாதிந்தா!
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.7 / 5. Vote count: 59
No votes so far! Be the first to rate this post.
Post Views:720
8 thoughts on “சுதந்திரமாய் சுவாசிக்கிறேன்!”
Jeesha sri
செம்ம ஸ்டோரி… இன்னும் தொடர்ந்து eluthalainu எனக்கு டென்ஷன் ஆகுது ma 😍👏🏼❤️🔥
Wowwwwww superb akka it’s really superb story…… story ya padika aramichi unga story start pantra varaikum nanum idhe thought la irundhaa still iam realised imagine nd real life nanum sometimes yosipa epdi oru villan range ku irukrava hero ah Vara mudium nu bt after some months he change adhulam love vandhudum adhunalaa adha accept panaaa bt real life seriously ipdi irukum na imagine panave illa akka …….. Superb akka congratulations for ur nxt story akka waiting…………
செம்ம ஸ்டோரி… இன்னும் தொடர்ந்து eluthalainu எனக்கு டென்ஷன் ஆகுது ma 😍👏🏼❤️🔥
Thank you baby!
Wow super da. Nujama antiheroes pola oruthan koodala kuppai kotta mudiyathu.
Thank you akka
Super sis innum neraiya eludhudhanum sis
Thank you so much
Wowwwwww superb akka it’s really superb story…… story ya padika aramichi unga story start pantra varaikum nanum idhe thought la irundhaa still iam realised imagine nd real life nanum sometimes yosipa epdi oru villan range ku irukrava hero ah Vara mudium nu bt after some months he change adhulam love vandhudum adhunalaa adha accept panaaa bt real life seriously ipdi irukum na imagine panave illa akka …….. Superb akka congratulations for ur nxt story akka waiting…………
Best wishes akka quickly upload nxt story in ur way….. ❤️❤️❤️❤️❤️❤️❤️