சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!!

4.7
(10)

Episode – 09

 

அவனின் கேள்வியில் அவனை எச்சில் விழுங்கிப் பார்த்தவள்,

 

“ம்ம்ம்…. நான் போகணும். கொஞ்சம் தள்ளுங்க.” என நா தந்தி அடிக்க கூற,

 

“உனக்கு அவ்வளவு பயம் இருக்குன்னா…. நான் சொல்றத செய்து இருக்கணும். சும்மா என்ன சீண்டி விட்டா இது தான் நடக்கும்.”

 

“நான் சொல்றத நடத்திக் காட்ட எந்த எல்லைக்கு வேணும் எண்டாலும் நான் போவன். அது உனக்கு இன்னைக்கு நல்லா புரிஞ்சு இருக்குமே.” என அவன் அழுத்தமான குரலில் கேட்க,

 

அவனின் முகத்தைப் பார்க்காது, பக்க வாட்டாக பார்த்துக் கொண்டு,

 

“அப்போ, இந்தக் கம்பெனி வாங்கினதுக்கும் நான் தான் காரணம்னு சொல்லுவீங்க போல….” என முணு முணுக்க,

 

“எனக்கு எப்பவும் என்னோட மூஞ்சய பார்த்து எதிர்க் கிறவங்கள தான் ரொம்ப பிடிக்கும். சோ, என்ன கேட்கிறதா இருந்தாலும் என்ன நேராப் பார்த்து கேளு.” என ஒருமையில் பேசியவனை சற்று திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

 

அவளின் பார்வையை உணர்ந்து கொண்டவன், விலகி நின்று கொண்டு,

 

அவளையே உறுத்து விழித்தபடி,

 

“நான் எனக்கு தோணினது நடக்கணும்னா…. காசு, டீசென்ட், நல்லது, நேர்மை, நியாயம்…. இது எல்லாம் பார்க்கவே மாட்டன். எந்த எல்லைக்கும் இறங்கிப் போய் வேலை செய்வன். இப்போ புரியுதா…. உன்னோட கேள்விக்கு இப்போ பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறன்.” என கூற,

 

அதற்கு மேல் அவனிடம் என்ன தான் பேசி விட முடியும் என எண்ணிக் கொண்டு,

 

அவன் எதிர் பாரா நேரம் படடென எழுந்து, அவனை விட்டு தூர நகர்ந்து வாசல் பக்கம் போய் நின்று கொண்டவள்,

 

“ஏதும் வேலை இருக்கா…. இல்ல…. நான் போகலாமா?” என கேட்க,

 

ஆரண்யன் ஏதோ சொல்ல வர அதற்குள் அவனின் போன் அடித்து அவனை தொந்தரவு செய்தது.

 

அதற்கு மேலும் அங்கு நிற்க, சொர்ணா என்ன முட்டாளா?, அவன் போனை எடுத்து பேச ஆரம்பிக்கவும், விட்டால் போதும் என ஓடி விட்டாள்.

 

வெளியே வந்தவள் தன்னை சாதாரணமாக காட்டிக் கொள்ள பட்ட பாடு இருக்கே…. அது சொல்லத் தீராது.

 

தனது சீட்டில் வந்து அமர்ந்தவள், ஒரு கணம் நிமிர்ந்து பார்க்க,

 

அங்கு வேலை செய்யும் பெண்களின் கவனம் முழுவதும் அவளைச் சுற்றியே இருந்தது.

 

அதிலும் அருணா…. ஒரு படி மேலே போய்,

 

“என்ன சொன்னார் சார்?, ஏன் உன்னை கூப்பிட்டாராம்?, எங்கள பத்தி ஏதும் கேட்டாரா?…. ஐ மீன் என்ன பத்தி?” என மெசேஜ்ஜில் அடுக்கடுக்காக கேட்க,

 

“இவ வேற என்னோட நிலைமை புரியாம…. அந்த ஆள பத்தி கேட்டுக் கிட்டு….” என திட்டிக் கொண்டு, நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்து விட்டு,

 

“ஒழுங்கா வேலைய பார்க்கலன்னா உங்க சார் உங்கள வேலைய விட்டு தூக்கிடுவாராம். எப்படி வசதி?” என மெசேஜ் பண்ணினாள்.

 

“அதற்கு அட கொடுமைய….” என போட்டு முறைக்கும் எம். ஒ.ஜி ஒன்றை அனுப்பி வைத்தாள் அருணா.

 

சொர்ணாவும் பார்த்து விட்டு மென் புன்னகையுடன் தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.

 

அதன் பிறகு அன்றைய நாளில், ஆரண்யன் எந்த விதத்திலும், சொர்ணாவை தொந்தரவு செய்ய வில்லை.

 

சொர்ணாவும், “அப்பாடா…. சைத்தானோட இன்னையோட கோட்டா முடிஞ்சுது போல.” என எண்ணிக் கொண்டாள்.

 

உண்மையில், ஆரண்யனுக்கு அடுத்தடுத்த வேலைகள் குவிந்தது தான் காரணமே தவிர,

 

அவள் எண்ணியது போல அல்ல. வேலைகள் இல்லாது போய் இருந்தால் அவளை வதைப்பதையே ஒரு வேலையாக செய்து இருப்பான் அவன்.

 

மறு நாள் காலையில் வேலைக்கு வந்தவள், தளத்தில் எங்கேணும் ஆரண்யன் தென் படுகிறானா என பார்த்து விட்டு நிம்மதிப் பெரு மூச்சு விட்ட படி நடந்தாள்.

 

நடந்தவள், யாரோ ஒருவருடன் மோதி விட்டு,

 

“சாரி…. தெரியாம….” என ஆரம்பித்த பிறகு தான், தான் மோதிய நபர் யார் என நிமிர்ந்து பார்த்தாள்.

 

அப்போது தான், யாரைப் பார்க்க கூடாது என வேண்டுதல் வைத்தாளோ அவனே அவளை உறுத்து விழித்துக் கொண்டு இருப்பது புரிந்தது.

 

“அச்சோ, மறுபடியும் சிங்கத்தோட பிடரிய பிடிச்சு இழுத்து இருக்கம் போலயே. ஆத்தி இப்போ அது என்ன செய்யப் போகுதோ?” என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், அவனை உள்ள விலங்குகள் எல்லாவற்று டனும் ஒப்பிட்டு திட்டித் தீர்த்தாள்.

 

அவளது முழிப் பார்வையை வைத்தே…. அவள் தன்னை திட்டுகிறாள் என உணர்ந்து கொண்டவன்,

 

“என்ன மிஸ் சொர்ணாம்பிகை. இப்படியே நிக்கிறதா எண்ணமா?, கொஞ்சம் வழி விட்டு விலகி நின்னீங்கன்னா? நான் என்னோட வேலைக்கு போக வசதியா இருக்கும். உங்களுக்கு எப்படி வசதி?” என கேலியாக வினவ,

 

அவளோ, பட்டென விலகி நின்று கொண்டு,

 

“சாரி சார் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.” என கூறவும்,

 

அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “இதென்ன டென்ஷன் இன்னும் நிறைய ட்விஸ்ட் இருக்கு மேடம். வெயிட் அண்ட் சீ. இன்னைக்கு நாள் அமோகமா ஆரம்பிச்சு இருக்கு. போகப் போக பார்ப்பம்.” என கூறி விட்டு அவன் செல்ல,

 

சொர்ணா தான் சற்று நேரம் பிரீஸ் மோடில் நின்றாள்.

 

ஆனால் தொடர்ந்து அப்படி நிற்க முடியாதே. ஆகவே தன்னை சமன் செய்து கொண்டு தனது சீட்டில் போய் அமர்ந்து கொண்டவளுக்கு, அடுத்து என்ன செய்வது எனப் புரியாத நிலை தான்.

 

வழக்கம் போல, அருணா சொர்ணாவிடம் வம்பிழுத்து விட்டு,

 

“என்னாச்சு சொர்ணா உன்னோட முகத்தில ஒரு வித கலவரம் தெரியுதே. பளிச் சின்னு இருக்கிற உன்னோட முகம் ஏன் காலையிலயே களை இழந்து போய் இருக்கு?, வீட்டுல ஏதும் பிரச்சனையா?, இல்லை வர்ற வழில ஏதும் பிரச்சனையா?” என கேட்க,

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் நார்மலா தான் இருக்கேன். நீ வேலையப் பாரு.” என கூறி விட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

 

ஆனால் அவளைக் கவனிப்பதையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டு இருப்பவன், அங்கு ஒருத்தன் இருக்கிறானே.

 

அவனோ, “இருடி, இன்னைக்கு எப்படியும் காலையில ஏற்பட்ட டென்ஷன்ல நீ வேலையில தப்பு பண்ணாமலா இருப்பாய்?, அப்போ பாருடி உனக்கு இருக்கு.” என கறுவிக் கொண்டு இருந்தான்.

 

அதே போல, எப்போதும் வேலையில் கவனமாக இருப்பவள்,

 

கவனச் சிதறல் காரணமாக ஒரு பிழையை விட்டு விட்டாள்.

 

அதனைக் கவனிக்காது ஆரண்யனிடம் அனுப்பியும் விட்டாள்.

 

இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…. என பைலை பார்த்ததும் பிழையைக் கண்டு பிடித்து விசில் அடித்தவன்,

 

அடுத்த நொடி சொர்ணாவை வர சொன்னான்.

 

“அவளும் இப்போ எதுக்கு என்ன வர சொல்றான் இந்த டென்சன் பார்ட்டி?” என எண்ணிக் கொண்டு, அவனின் முன்னால் போய் நிற்க,

 

அவளைப் பார்த்து கேலியாக சிரித்தவன்,

 

“நான் சும்மா இருந்தாலும், நீயே வாலண்டரியா வந்து தலையைக் கொடுக்கிறீயே…. அதுக்கு அப்புறமும் நான் சும்மா இருந்தா எப்படி?” என கேட்டவனை அவள் புரியாது பார்க்கவும்,

 

அவள் பிழை செய்த இடத்தில் வட்டம் போட்டு, அவளின் முன்னே தூக்கிப் போட,

 

யோசனையுடன், பைலை தூக்கிப் பார்த்தவள்,

 

“இதில என்ன பிழை?” என முணு முணுத்த படி,

அவன் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்தாள்.

 

அப்போது தான், தான் செய்த தவறு விளங்க,

 

“சாரி சார், ஏதோ ஒரு நினைவில தப்பு பண்ணிட்டன். இனிமேல் இப்படி நடக்காது. இப்போ உடனே கரெக்ட் பண்ணிக் கொண்டு வரேன்.” என கூறியபடி, செல்ல ஆரம்பிக்க,

 

எட்டி அவள் கைகளில் இருந்த பைலைப் பறித்தவன்,

 

“அது எப்படி மேடம், அவ்வளவு சீக்கிரம் உங்கள சும்மா விடுறது?, ஒரு வார்த்தை சொல்லுவாங்களே…. இந்த மூவில எல்லாம் வருமே…. ஆஹ்…. நினைவு வந்துடிச்சு. தொக்கா மாட்டி இருக்கீங்க. எப்படி விடுறது மேடம். கொஞ்சம் என் மனசு ஆறும் மட்டும் ஏதும் பண்ணணுமே….” என கூற,

 

சொர்ணாக்கு, நெஞ்சுக்குள் கிலி பரவியது.

 

“அவன் என்ன செய்யப் போகிறானோ?” என எண்ணிப் பயந்து போனவள், அவனை அதே கலக்கத்துடன் பார்க்க,

 

“என்ன பயமா இருக்கா…. சரி உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. உனக்காக கொஞ்சம் இறங்கி வரேன். என்னோட காலுல விழுந்து என்ன மன்னிச்சிடுங்கன்னு கெஞ்சுறதோட, இந்த வேலயை விட்டுட்டு ஒரு ஆறு…. சரி வேணாம் நாலு மாசம் மட்டும் என்னோட கம்பெனில எனக்கு அடிமையா வேலை பார். உன்ன போனா போகட்டும்னு மன்னிச்சு விடுறேன்.” என எகத்தாளம் நிறைந்த குரலில் கூறியவனை என்ன செய்தால் தகும் எனும் ரீதியில் பார்த்து வைத்தாள் சொர்ணா.

 

“தன்னை எவ்வளவு கேவலமாக எண்ணிக் கொண்டு இருக்கிறான்?, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மிருகம். இவன் கிட்ட கெஞ்சுறத விட, தண்டனை அனுபவிக்கிறதே பரவாயில்லை.” என எண்ணிக் கொண்டவள் மறைக்காது எரிச்சலை முகத்தில் காட்டிக் கொண்டு,

 

“உங்க கிட்ட கெஞ்சுறத விட, எனக்கு தண்டனையே மேல். நான் எதுக்கு உங்க காலுல விழணும்?, நீங்க என்ன பெரியவங்களா…. இல்ல…. கடவுளா?…. சக மனுஷன். அதுவும் மத்தவங்க கஷ்டப் படுறத பார்த்து சந்தோஷப் படுற கேவலமான மனுஷன். உங்க காலுல நான் விழணுமா? நெவெர்….” என அழுத்தமாக கூற,

 

அவளது பேச்சு அவனுக்கு இன்னும் கோபத்தை கிளப்பி அவனது மூர்க்கத் தனத்தை கூட்டியது.

 

“ஓஹ்…. உனக்கு அவ்வளவு திமிரா?” என அவன் எகிற,

 

“இது திமிர் இல்ல சார், தன் மானம். என்னோட தன் மானத்தை சீண்டிப் பார்த்தால்…. நான் அமைதியா இருக்க மாட்டன்.” என பதிலுக்கு சொர்ணா அழுத்த மாக கூற,

 

அவனும், ஒரு கணம் அவளைக் கூர்ந்து பார்த்தவன்,

 

“சரி நீ போய் உன் வேலையப் பாரு. உனக்கு இதுக்குரிய தண்டனை என்னன்னு நான் ஈவினிங் சொல்றேன். போங்க மேடம்.” என ஒரு வித சிரிப்புடன் கூறியவன்,

 

அவள் போனதும், அங்கும் இங்கும் கோபத்தை அடக்க முடியாது நடை பயின்று விட்டு, ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரு செக்கனில் காலி பண்ணினான்.

 

அப்போதும் கோபம் அடங்க மறுக்க,

 

தனது கோர்ட் டை கழட்டி எறிந்தவன், டையையும் தளர்த்தி விட்டு, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு, நெற்றியை நீவிக் கொண்டு,

 

“என்னையே, தோற்கடிக்கப் பார்க்கிறாய் நீ?, அது இந்த ஆரண்யன் கிட்ட நடக்கவே நடக்காது. உனக்கு இந்த முறை நான் கொடுக்கிற தண்டனைல நீ இனி என்ன கண்டாலே அலறணும்.”

என கறுவிக் கொண்டவன்,

 

அந்த நாள் முடிய,

அனைவரும் கிளம்பும் நேரம் சொர்ணாவை தனது கேபினிற்கு வர சொல்லி அழைத்தான்.

 

“அதானே இவ்வளவு நேரம் சைலன்ட்டா இருக்கானேன்னு பார்த்தன்.” என எண்ணியபடி,

 

அவனைக் காண சென்றவளை,

 

“உட்காருங்க மேடம்.” என கூறியவன்,

 

ஒரு பைலைத் தூக்கி அவளுக்கு முன்னால் போட்டு,

 

“ஒழுங்கா இதில இருக்கிற வேர்ட்ஸ் எல்லாம் கரெக்ட் பண்ணிக் கொடுத்திட்டு போங்க.” என கூறினான்.

 

அவளும், “இது சின்ன வேலை தானே இதில என்ன இருக்கு?” என எண்ணி பைலைத் திறந்தவள்,

 

உள்ளுக்குள் இருந்த சொற்களைக் கண்டு திகைத்துப் போனாள்.

 

ஒவ்வொரு சொற்களுக்குள் சொற்கள் புகுத்தப்பட்டு, சிறு சிறு எழுத்துக்களில், கண்ணுக்கு புலனே ஆகாத அளவுக்கு இருந்தது சொற்களின் அணி வகுப்பு.

 

அதனை எப்படி கரெக்ட் பண்ணுவது எனப் புரியாது முழித்தவள் முகத்தில் திகைப்பை மறைக்காது காட்டியபடி, ஆரண்யணைப் பார்க்க,

 

அவனோ, “என்ன மேடம் தலை சுத்துது போல. இத செய்து முடிச்சிட்டு நீங்க தாராளமா போகலாம். உங்க தகுதிக்கு இதெல்லாம் சின்ன வேலை தான். பார்த்து செய்ங்க.” என கேலியாக கூறியவன், அவளை நோக்கி கேலியாக புருவத்தை தூக்கியும் இறக்கினான்.

 

அவனது செய்கைகளில் கோபம் வந்தாலும்,

 

“இதெல்லாம் அநியாயம் சார்.” என சற்று அழுத்தமாக கூறியவளின் அருகே நெருங்கி, அவளது கண்களை உற்றுப் பார்த்தவன்,

 

“எனக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப நியாயமா தான் தெரியுது. ஒழுங்கா செய்து முடி.” என கூறி விட்டு,

 

தன் இருக்கையில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு இருந்தான்.

 

சொர்ணாவோ, அவனை வெறித்துப் பார்த்து விட்டு,

அந்த பைலில் உள்ள சொற்களை திருத்த ஆரம்பித்தாள்.

 

சுமார், ஒரு மணி நேரம் கடந்து இருக்கும். அதற்குள் உண்மையில் களைத்துப் போனாள் சொர்ணா.

 

கண் எல்லாம் வலித்து, தலை வேறு விண் விண்ணென்று குத்த ஆரம்பித்தது.

 

தலையை பிடித்துக்கொண்டே, அதற்கு மேல் முடியாது அவள் ஆரண்யனை நிமிர்ந்து பார்க்க,

 

அவனோ, அவளையே பார்த்துக் கொண்டு, “என்ன மேடம், உலகம் உங்கள சுத்துதா?, இல்ல நீங்க உலகத்த சுத்துறீங்களா?” என கேலியாக கேட்க,

 

அவனை முறைத்துப் பார்த்தாள் சொர்ணா.

 

அவளின் முறைப்புக்கு பதி லாக தானும் முறைத்துப் பார்த்தவன்,

 

“என்ன திமிராடி?, முறைப்பு எல்லாம் பலமா இருக்கு?” என அழுத்தமாக கேட்டான்.

 

அவனது “டி” போட்ட அழைப்பில், உள்ளுக்குள் கோபம் முகிழ்த்தாலும், அமைதியாக மீண்டும் பைலை பார்த்தவளின் போன் அடித்து அடுத்த தலை வலியைக் கொடுத்தது.

 

தனது தந்தையின் எண்ணை போனில் கண்டவளுக்கு அப்போது தான் அவருக்கு தான் வர லேட் ஆகும் என்ன அழைத்துக் கூறாதது நினைவுக்கு வந்தது.

 

“அச்சோ என்ன காரியம் செய்து வச்சிருக்கேன்?, எப்படி மறந்தன்?” என தலையில் அடித்து கொண்டவள்,

 

அவசரமாக, “சார், அப்பா கிட்ட பேசிட்டு வரேன்.” என கூறிவிட்டு அவனது அறையை விட்டு வெளியில் ஓடிச் சென்றாள்.

 

அவளது பலவீனம் அவளின் அப்பா என அப்போது ஆரண்யனுக்கு நன்றாகவே புரிந்து விட்டது.

 

அவள் போனதும் அதுவரையும் அவள் கஷ்டப்பட்டு செய்து வைத்திருந்த பேப்பரைத் தூக்கி ஒருவித கேள்வியுடன் பார்த்தவன்,

 

“நோட் பேட் ரொம்ப சின்சியரா தான் வேலை செய்து இருக்கா.” என எண்ணிக் கொண்டு சாவகாசமாக அதனை கிழித்துக் குப்பைக் கூடைக்குள் போட்டான்.

 

சொர்ணாவோ, தந்தையிடம் குறைந்தது இன்னும் ஒரு மணித்தியாலத்திற்குள் வீட்டுக்கு வந்து விடுவதாகவும் வேலை சற்று அதிகம் எனவும் கூறி விட்டு வைத்தவள் மீண்டும் வந்து,

 

தனது இருக்கையில் அமர்ந்து அதுவரையும் எழுதி வைத்திருந்த பேப்பரைத் தேட அது காணாமல் போயிருந்தது.

 

“இங்க தானே வைச்சிட்டுப் போனன்.” என யோசித்தபடி அங்குமிங்கும் தேடியவளை அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு காபியை அருந்திக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.

 

அவளின் தவிப்பை கண்டு அவனது இதழ்களுக்குள் புன்னகை பூத்தது.

 

அதனைக் காட்டாது மறைத்துக் கொண்டவன் “என்ன, இப்போ எதுக்கு அங்கயும் இங்கயும் தலைய ஆட்டிக் கொண்டு இருக்கிறாய்?, சீக்கிரம் சொன்னத செய்து முடி.” என அழுத்தமாக கூறவும்,

 

“இல்ல நான் இங்க தான் கரெக்ட் பண்ணின பேப்பர வச்சுட்டு போன் பேச போனன். அந்தப் பேப்பரைக் காணல. அதுக்குள்ள எங்க போய் இருக்கும்?” என்றபடி பார்த்தவள்,

 

அப்போது தான் அந்த பேப்பரின் கிழிந்த சிறு துகள் ஒன்று பறந்து விழுந்து இருப்பது போல தோன்றவே,

 

அந்தப் பேப்பரை தூக்கிப் பார்த்தவள் கேள்வியாக ஆரண்யனைப் பார்க்க,

 

அவனும், “என்ன பேப்பர் துண்டு இது?, எங்க இருந்து இப்போ இங்க பறந்து இருக்கு?” என அவளையே திருப்பி கேள்வியாக பார்த்து வைத்தான்.

 

அதிலே குழம்பிப் போனவள், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அங்கிருந்த குப்பைக் கூடைக்குள் எட்டி பார்த்தாள்.

 

அப்போது தான், அவள் இதுவரையும் கஷ்டப்பட்டு செய்து வைத்திருந்தவை யாவும் குப்பையாக அங்கே கிழித்து போடப்பட்டிருப்பதை கண்டு கொண்டாள் பெண்ணவள்.

 

அவளுக்கு நன்றாகவே தெரியும் இந்த வேலையை செய்தது. தனக்கு முன்னால் இருப்பவன் தானென்று.

 

அவனின் மீது கோபம் கட்டுக்கடங்காது பெருக,

 

“நீங்க என்னதான் நினைச்சு கொண்டு இருக்கீங்க?, உங்க இஷ்டத்துக்கு என்ன ஆட்டி வைக்கலாம்னா?, நான் கஷ்டப்பட்டு செஞ்சத இப்போ எதுக்கு இப்படி பண்ணி வச்சிருக்கீங்க?, என டஸ்பினை சுட்டிக் காட்டிக் கேட்டவள்,

 

“கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மனுஷன்.”

 

அவன், என்னடி குரல் உயருது?, என எகிறிக் கொண்டு வரவும், கண்கள் இருட்டி, தலை சுத்தி மயங்கி விழுந்தாள்.

 

இனி சொர்ணாவின் நிலை என்ன?

 

ஆரண்யன் ஆடப் போகும் ஆட்டம் என்ன?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.

 

திரும்ப வந்தாச்சு மக்காஸ்…வேலைகள் கொஞ்சம் அதிகமா இருந்துது.. அதனால தான் இந்தப் பக்கம் வர முடியல…இனி முடிந்த அளவு வேகமாக எபிகள் வரும்.

 

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….

 

இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!