சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 11

5
(2)

Episode – 11

திடுமென உள்ளே வந்தவர், “அம்மாடி நிறுத்தும்மா.” என ஒரே சொல்லில் சொர்ணாவை தடுத்து நிறுத்தினார்.

அவளும், “யாரு இது இந்த நேரத்தில?” என திகைத்துப் போய் ஆரண்யனை விட்டு விலகித் திரும்பிப் பார்க்க,

அங்கே ஆரண்யனை முறைத்துப் பார்த்தபடி, அறுபதுகளின் முதிர்வுடன் கூடிய கம்பீரத்துடன் நின்று கொண்டு இருந்தார் அவனின் தந்தை.

ஆரண்யனோ, தலை முடியைக் கோதிய படி,

“நீங்க என்ன இந்த நேரத்தில இங்க?, நான் தான் வீட்டுக்கு வர லேட் ஆகும்னு சொல்லி இருந்தனே. அப்புறம் என்ன?” என கேட்டான்.

அவனின் பேச்சில், பல்லைக் கடித்தவர்,

“ஏன் உனக்கு நான் இப்ப வந்தது பிரச்சனையா இருக்கோ?, இல்ல உன்னோட திட்டம் பாழாய்ப் போச்சுதுன்னு கோபமா இருக்கோ?” என அவனது ஸ்டைலிலேயே கேட்க,

அவரின் பேச்சில், “என்ன இவர் இந்த ஹிட்லர் கிட்ட இவ்வளவு தைரியமா பேசுறாரு. அப்போ இவர் யாரா இருக்கும்?” என எண்ணிக் கொண்டவள்,

அவரை சற்று கூர்ந்து பார்த்தாள்.

பார்த்தவளுக்கு அவரின் ஜாடை புரிய,

“ஓஹ்…. ஹிட்லரோட அப்பாவா இவரு…. முகத்தை பார்த்தா அப்படி தான் தெரியுது. ஆனா இந்த பெரிய மனிதரோட முகத்தில கம்பீரம் கலந்த சாந்தம் தெரியுது. ஆனா இந்த ஹிட்லர் டோட்டலா வேற மாதிரி இருக்கானே. சரியான சிடு மூஞ்சி.”

“என்னவோ இவரால தான் இப்போதைக்கு நான் தப்பிச்சு இருக்கேன். பேசாம இங்க இருந்து கிளம்பிடுவம்.” என எண்ணியவள், தனது போனை மெதுவாக மேசையில் இருந்து எட்டி எடுக்க,

அவளை அனல் பறக்க பார்த்தான் ஆரண்யன்.

அதே நேரம், அவளைக் கருணையுடன் பார்த்தவர்,

“ஹாய் மிஸ் சொர்ணாம்பிகை என்னோட பெயர் ஆதித்ய சக்கரவர்த்தி. நான் உன்னோட பாஸ் ஆரண்யனோட அப்பா. உன்ன பத்தி எல்லாமே எனக்கு தெரியும்மா.

அதனால நீ என்னைப் பார்த்தோ…. என் மகனைப் பார்த்தோ பயப்பிட வேண்டிய அவசியமே இல்ல. உன்ன பத்தி எல்லாமே தெரியும்…. ஐ மீன் நீ என்னோட மகனை அடிச்சதுல இருந்து இப்போ அவன் உன்னை காலுல விழ சொல்லும் வரைக்கும் நடந்தது எல்லாம் எனக்கு தெரியும்.” என அவர் கூற,

சொர்ணா, அவரை அதிர்ந்து போய் பார்த்தாள் என்றால்….

ஆரண்யனோ, ஏற்கனவே எனக்கு தெரியும். என்பது போல, ஒரு தோரணையில் அசால்டாக நின்று கொண்டு இருந்தான்.

சொர்ணாவோ, “சார்…. அது வந்து….” என இழுக்க,

“அம்மாடி, சொர்ணா நீ இப்படி பயந்து போக வேண்டிய அவசியமே இல்லை. என்ன நீ உன்னோட அப்பா மாதிரி நினைச்சுக்கோ. உனக்கு ஏதும் உதவி தேவைன்னா கூட தயங்காம என்ன கேளு. நான் கண்டிப்பா செய்றேன். எவனும் எந்தக் கேள்வியும் என்ன கேட்க முடியாது.” என கூற,

ஆரண்யனின் கை முஷ்டிகள், இறுகிப் போனது தந்தையின் பேச்சில்.

அவனது முகமும் இறுகி கறுத்துப் போனது. அவனுக்கு இதை விட ஒரு அவமானத் தருணம் இல்லை என்பது போல நின்று கொண்டு இருந்தவனின் கோபம் முழுவதும் திரும்பியது என்னவோ தந்தையின் அருகே வாயைப் பிளந்து நின்று கொண்டு இருந்த சொர்ணா மீது தான்.

அவளோ, ஒரு கணம் அங்கே முகம் கறுக்க நின்று கொண்டு இருந்த, ஆரண்யனைப் பார்த்து விட்டு,

“இவனுக்கு இவர் தான் சரியான ஆள். கடவுள் இருக்கான் குமாரு. இவன் இப்படி நிக்கிறத பார்க்க அவ்வளவு ஆனந்தமா இருக்கு.” என எண்ணிக் கொண்டவள் முகம் மலர,

“நன்றி சார், இனி மேல் ஏதும் தேவைன்னா கண்டிப்பா கேட்கிறேன்.” என கூறியவள்,

ஒரு பார்வை ஆரண்யனை நோக்கி வீசி விட்டு, தனது உடைமைகளை அவசரமாக எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்க,

அவளின் பார்வையும், அவனுக்குள் இருந்த எரிமலையை இன்னும் ஊதி பெரியது ஆக்கியதே தவிர, கொஞ்சமும் குறைக்கவில்லை.

சொர்ணா கதவைத் திறக்க போக, “கொஞ்சம் பொறும்மா. இந்த நேரத்தில நீ தனியா கிளம்பிப் போறது சேப்டி இல்லம்மா. நான் உன்ன ட்ரோப் பண்ண சொல்றேன்.” என கூற,

அதற்கு மேலும் அடக்க முடியாது ஆரண்யன்,

“டாட்….” என கத்த,

அதே நேரம், “இல்ல…. இல்ல…. அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார். நான் தனிய போய்க் கொள்ளுவன்.” என அவசரமாக கூறினாள் சொர்ணா.

அப்போதும் விடாது, “என்னம்மா நீ?, இந்த நேரத்தில எப்படி தனிய போவாய்?, உனக்கு ஏதும் நடந்தா அப்புறம் உன்னோட அப்பாக்கு யாரு பதில் சொல்லுவாங்கம்மா?, நீ வேற தங்க சிலை மாதிரி இருக்காய். இந்த நேரத்தில போறது சேப் இல்லம்மா.” என கூற,

அவர், சொர்ணாவை அழகு என கூறியதை தாங்க முடியாது மேசையில் ஒரு முறை ஓங்கி அடித்தவன், “ஷிட்” என கத்தினான்.

அதோடு நிறுத்தாது, “இவ பெரிய உலக அழகி. இவளுக்கு பாதுகாப்பு ஒன்னு தான் குறைச்சல். இவளப் போய் எவன் கடத்துவான். தயிர் சாதம்.” என சத்தமாக கூறியும் கொண்டான்.

அவனின் சத்தத்திற்கு பயப்பிட அவர் என்ன சாதாரண ஆளா?, அவனுக்கே தந்தை அல்லவா அவர்.

“என்ன பிரச்சனை உனக்கு?, எதுக்கு இப்போ கத்துறாய்?, எனக்கு அந்தப் பொண்ணோட சேப்டி முக்கியம். உனக்கு எதைப் பத்தியும் அக்கறை இல்லை. பழி வாங்குறது தான் முக்கியம். ஆனா எனக்கு உன்ன போல நடக்க தெரியல. என்ன கடவுள் அப்படி படைச்சிட்டார் போல. என்ன செய்வம்?, என்னோட டிசைன் அப்படிப்பா.” என அவனை விடவும் கேலிக் குரலில் கூற,

ஆரண்யன் மேலும் முகம் கறுத்துப் போனான்.

அவனின் முகக் கன்றல் ஒரு விதத்தில், சொர்ணாக்கு ஆறுதலைக் கொடுத்தது.

அவளோ, “சார் ப்ளீஸ். ஏன் நீங்க இரண்டு பேரும் இந்த சின்ன விஷயத்துக்கு வாக்கு வாதப் படுறீங்க?” என மென் குரலில் கூற,

ஆதித்ய சக்கரவர்த்தி, அப்போதும் விடாது,

“அம்மாடி, நீ கிளம்பும்மா நானே உன்னை ட்ரோப் பண்ணுறேன்.” என கூறிவிட்டு,

அவளின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்க,

அவளோ, கடைக் கண்ணால், ஆரண்யனை ஒரு பார்வை பார்த்தவள்,

அவன் கையைக் கட்டிக் கொண்டு விறைத்துப் போய் நிற்கவும்,

அவனைப் பார்க்கப் பயந்து அங்கிருந்து இழுபட்டு செல்ல ஆரம்பிக்க,

தந்தையை மீறி எதுவும் செய்ய முடியாது, அப்படியே நின்று கொண்டு இருந்தவன் மனம் மூர்க்கத் தனம் கொண்டது தான் உண்மை.

ஆரண்யனின் தந்தையோ, சொர்ணாவை காரில் அழைத்துக் கொண்டு கிளம்பியவர், அவளிடம் இயல்பாக பேசியதோடு, அவளையும் தன்னுடன் இயல்பாக பேச வைத்தார்.

ஒவ்வொருவரும் பழகும் விதம் தானே அவர்களுக்குள் ஒரு நல்ல உறவை ஏற்படுத்த அடிப்படையாக இருக்கும். அந்த வகையில் அவளது மனதில் அவரும், அவரின் மனதில் அவளும் தந்தை மகள் போல பதிந்து போனார்கள்.

அவளை அவளது வீட்டு வாசலில் இறக்கி விட்டவர், அதோடு நிறுத்தாது, கூடவே தானும் இறங்கி, தன்னை சொர்ணாவின் கம்பெனி முதலாளி என அறிமுகப் படுத்திக் கொண்டு,

சொர்ணாவின் தந்தையிடம், தாமதம் ஆனதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

அவரது செய்கையில், சொர்ணாவின் தந்தையின் முகம் தெளிந்தது என்றால், அவளின் முகமும், மனமும் நிறைந்து போனது.

அவரும் சற்று நேரத்தில் கிளம்பு விட,

சொர்ணாவும், மன நிம்மதி உடன், தந்தையுடன், உரையாடி விட்டு, சாப்பிட்டு விட்டு தூங்க ஆய்த்தம் ஆனாள்.

கடந்த சில வாரங்களாக ஆரண்யனால் உருவான இறுக்கம், மன உளைச்சல் எல்லாம் இல்லாது போய் இருந்தது.

முகத்தில் ஒரு வித மென் புன்னகை உடன், அவள் உறங்க எண்ணி கண் மூடும் நேரம், அவளின் போன் வழக்கம் போல கரடி வேலை பார்த்தது.

“யாரு இது இந்த நேரத்தில?”, என யோசித்தவள், போனை எடுத்துப் பார்க்க, தொடுதிரையில் ஹிட்லர் காலிங்க் என ஒலிர்ந்தது.

அதுவும் நார்மல் கால் அல்ல. வீடியோ கால்.

அதனைக் கண்டதும், முகத்தில் இருந்த புன்னகை யாவும் வடிந்து போக, போனை வெறித்துப் பார்த்தவள், அப்படியே அமர்ந்து இருந்தாள்.

ஆனால் போன் மீண்டும் மீண்டும் அடிக்கவும், என்ன செய்வது எனப் புரியாது, அப்படியே அவள் அமர்ந்து இருக்க, போன் கட் ஆகி அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

அந்த மெசேஜ் ஓபன் பண்ணப் படவில்லை என்றதும், மீண்டும் மீண்டும் அவளுக்கு மெசேஜ் வர,

அதற்கு மேலும் முடியாது, மெசேஜ்ஜை ஓபன் பண்ணிப் பார்த்தாள் அவள்.

கண்டிப்பாக அந்த மெசேஜ் ஜில் நல்ல விடயம் வந்து இருக்காது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும், எதையும் தாங்கும் இதயத்துடன் ஒரு வித பெரு மூச்சுடன், அதனை ஓபன் பண்ணிப் பார்த்தாள் அவள்.

அதிலே, “இப்போ வீடியோ கால் நீ அட்டென்ட் பண்ணல ன்னா…. அடுத்த நிமிஷம் உங்க வீட்டு முன்னாடி நான் வந்து நிற்பன். அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல.” என அனுப்பப் பட்டு இருந்தது.

அதற்கு மேலும் போனை ஆன்ஸர் பண்ணாமல் இருக்க மனம் வருமா அவளுக்கு?

அடுத்து ஒரே ரிங்கில் போனை எடுத்தவள் கண்டது.. ஆபீசில் அவனது ரூமில், சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு, அவள் கண்ட அதே ஆடையுடன், கோர்ட்டை கழட்டி எறிந்து விட்டு,

ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டு இருந்தவனைத் தான்.

“என்னடா இது எப்படி ஆபீஸ் ரூம் திடீர்னு ஜிம்மா மாறிப் போச்சு?, என்னாச்சு இவருக்கு?” என யோசிக்க, சொடக்கிட்டு கூப்பிட்டவன்,

“என்ன எப்படிடா என்னோட கேபின் இப்படி ஜிம்மா மாறிச்சுதுன்னு யோசிக்கிறீங்க போல மேடம், நான் நினைச்சா எதுவும் என்னால செய்ய முடியும். ஆனா உன்னோட விஷயம் தான்….” என ஓடிக் கொண்டு இருப்பதை நிறுத்தி விட்டு அவளை உறுத்து விழித்தபடி கூறியவனின் கண்களில் அனல் தெறித்தது.

அவனின் உடல் முழுவதும் வியர்வையில் குளித்து இருந்தது.

அந்த வியர்வையின் அளவு சொன்னது, அவனது கோபத்தை.

“உன்னால என்னோட நிம்மதி போச்சு. ஆனா நீ நிம்மதியா தூங்க ரெடியாகுறாய் போல. உன்ன அப்படி தூங்க விட நான் என்ன முட்டாளா?, இல்ல மடையனா?, அதான் கால் பண்ணேன். என்னோட அப்பாவையே என்ன எதிர்க்க வைச்சிட்டாய் இல்ல. இவ்வளவு நாளும் உன்ன என்னோட எதிரின்னு தான் சிம்பிளா நினைச்சேன். ஆனா இன்னையில இருந்து நீ தான் என்னோட பரம எதிரி. உன்ன நான் எந்தக் காரணம் கொண்டும் நிம்மதியா இருக்க விட் மாட்டேன்டி. உன்னால எனக்கு தொடர் அவமானம் மட்டும் தான். இத சொல்லத் தான் கால் பண்ணேன்.”

“உனக்கு என் அப்பாவால நல்ல காலம்னு நினைச்சுக் கொண்டு இருந்தாய்னா…. அந்த நினைப்பை அடியோட தூக்கிப் போடு. இனி மேல் தான் இன்னும் நிறைய கெட்ட காலம், பாடங்கள் நீ என்கிட்ட இருந்து படிக்கப் போறாய் புரிஞ்சுக்கோ. என் கண்ணு இனி மேல் உன்ன மட்டும் தான் போகஸ் பண்ணும்.” என போனுக்கு அருகில் முகத்தை கொண்டு போய் கண்ணை சுட்டிக் காட்டியவன், அவள் அதிர்ந்த முகத்தை திருப்தி யாக பார்த்துக் கொண்டே போனை பட்டென கட் பண்ணினான்.

அவன் போனை வைத்ததும், “இந்த சைத்தான், சைக்கோ ஒரு நாளும் திருந்தாது. என்னையும் நிம்மதியா இருக்க விடாது. ஒருமையில கதைக்கிற அளவுக்கு தான் இருக்கு இவனோட செய்கை. இவனுக்கு எதுக்கு மரியாதை எல்லாம்.” என தலையில் அடித்துக் கொண்டவள், அமைதியாக உறங்கிப் போனாள்.

ஆனால் உறக்கமும் வராது, கோபமும் அடங்காது ஆபீஸ் லேயே தங்கி இருந்தவன் ஆரண்யன் தான்.

அவனுக்கு இப்போது தனது தந்தையின் மீதும் கோபம் வந்தது தான்.

ஆனாலும் அடக்கிக் கொண்டு திரும்ப பாயும் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தான்.

அதே போல ஆதித்ய சக்கரவர்த்திக்கும் மகனைப் பற்றிய எண்ணத்தில் தூக்கம் வர மறுத்தது தான்.

அவனது பிடிவாதமும், கோபமும், வன்மமும் அவர் அறிந்தது ஆயிற்றே.

அவனுக்கு தந்தை அல்லவா அவர்.

“அவனை

எப்படித்தான் மாற்றப் போகிறோமோ தெரியலயே.” கல்யாணம் பண்ண கேட்டாலும் மாட்டேன்னு அடம் பண்றான்.”

“ஒருத்தரை அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டா இறங்கிப் போய் வேலை செய்றான்?, இவனோட குணம் எப்போ மாறுமோ?, இன்னும் எத்தனை பேர் இவனால பாதிக்கப் பட போறாங்களோ?” என மனதிற்குள்

அங்கலாய்த்துக் கொண்டவருக்கும் அன்று இரவு தூக்கம் பறிபோனது தான் உண்மை.

பாயக் காத்து இருக்கும் சிறுத்தையாக இருப்பவன் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

சொர்ணாக்கு தொடர்ந்தும் ஆதித்ய சக்கரவர்த்தியின் ஆதரவு கிடைக்குமா?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!