அத்தியாயம் 7
“ஹே ஹே ஸ்டாப் தி பைக் ஐ செட் ஸ்டாப் தி பைக்” என்று கொஞ்சம் சத்தமாகவே சொன்னான் விஹான்.
இருவரும் வீட்டிலிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே விஹானுக்கு பொறுமை பறந்தது. பின்னே இருக்காதா.
மீனுக்கோ விஹானை உடன் அழைத்துச் செல் என்று தாய் சொன்னதில் இருந்து அவள் எங்கே நார்மலாக இருந்தாள்.
இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்து வண்டியை எடுக்க அவனா சலித்தவாறே அவளின் பின்னே அமர அவ்வளவுதான் முடிந்தது. கொஞ்சம் நஞ்சம் இருந்த தைரியமும் அவளுக்கு டாட்டா பை சொல்லி விட்டு பறந்துவிட இங்கு இவளோ கைகள் நடுங்க ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வர பின்னால் அமர்ந்திருந்த விஹானுக்கோ வயிற்றுக்குள் பயப்பந்து உருல ஆரம்பித்தது.
“ஹே உனக்கு பைக் ட்ரைவ் பண்ண தெரியுமா?” என்று இவள் வண்டியை ஓட்டும் தினுசில் அவன் கேட்க இவளோ ஆம் என்று சொல்ல விஹானோ சரி பார்ப்போம் என்று நம்பிக் கொண்டிருக்கையில் வண்டி ஸ்பீட் பிரேக்கில் ஏறி இறங்க பிடிமானம் இன்றி அமர்ந்திருந்த விஹானோ சட்டென தன்னுடைய இரு கரங்களாலும் அவளுடைய இடையை பற்றிக்கொள்ள, இங்கு முன்னாள் அமர்ந்திருந்த மீனுவுக்கு தூக்கி வாரி போட்டது.
அவனுடைய இந்த திடீர் தொடுகையை எதிர்பார்க்காதவள் ஹான்பாரிலிருந்து தன்னுடைய கைகளை எடுக்க போக சில நொடி ஆகினும் அவள் செய்வதை யூகித்தவன் அவளுடைய இடையில் இருந்தத் தன்னுடைய இரு கரங்களையும் அவளுக்குப் பின்னாடி இருந்தவாறே அவளுடைய இடையினோடு ஹான்பாரைப் பிடித்தவன்,
“என்ன செய்ற இடியட்” என்று பிரேக் போட்டு நிறுத்தியவன் அவளைத் திட்ட தொடங்கினான்.
நம்ம மீனுவோ எப்பொழுதும் போல அவனிடம், “சாரி சாரி சரிங்க சாரி” என்று அழுது விடுபவள் போல அவனிடம் கேட்டாள்.
அதைப் பார்த்து தன்னுடைய தலையில் அடித்துக் கொண்ட விஹானோ,
“சரி இட்ஸ் ஓகே இனிமேலாவது பார்த்து போ” என்று சொன்னவன் மீண்டும் எந்த நம்பிக்கையில் அவளுடன் செல்ல தயாரானானோ தெரியாது.
பார்ப்போம் ஒழுங்காக அவனை வீட்டிலிருந்து அழைத்த சென்றபடி திரும்ப வீட்டில் கொண்டு வந்து விடுவாளா என்று.
மீனுவோ தன் மனதிற்குள்ளேயே கடவுளிடம் வேண்டிக்கொண்டவள் புறப்பட்டாள்.
வண்டியின் வேகமோ இருபதை தாண்டவில்லை. ஆனால் அவளின் நேரமோ என்னவோ கடவுளும் சதி செய்துவிட சிறிது தூரத்திலேயே அவளுடைய வண்டி ஆட்டம் காண ஆரம்பித்தது.
அவளால் தன் பின்னே மிக நெருக்கத்தில் அமர்ந்திருக்கும் விஹானின் நெருக்கத்தை தாழ இயலாதவலாள் இயல்பாகவே அவளால் இருக்க முடியவில்லை. இதில் எங்கிருந்து வண்டியை செலுத்த.
இதற்கு மேலும் பொறுமை இல்லாத விஹான் அவளை வண்டியை நிப்பாட்ட சொல்லி விட்டான்.
“இங்க பாரு இதுக்கு பிறகும் உன்னை நம்பி என் உயிரை பணயம் வைக்க நான் விரும்பல நான் ட்ரைவ் பண்றேன் எங்க போகணும்னு வழிய மட்டும் காட்டு ஓகே” சென்று அவளிடம் சொன்னவன் அவளை இறங்க சொல்லிவிட்டு இவன் வண்டியில் அமர்ந்து அவளை பின்னே அமரச் சொல்ல அவளோ ஒரு கையால் தாவணையின் முந்தானையை திருகிக் கொண்டு மற்றும் ஒரு கையால் நகத்தை கடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்க, அதைப் பார்த்தவனுக்கோ அப்படியே அவள் தலையில் நங்கு என்று கொட்டி விடலாமா என்று தோன்ற,
“வாட் வரியா இல்லையா” என்று கேட்டான்.
“அவளோ தயங்கியவாறே தன்னுடைய பாவாடையை நன்கு பிடித்துக் கொண்டவள் ஒரு சைடாக வண்டயில் அமர்ந்து கொண்டு போகலாம் என்றாள். அதன் பின்பு வண்டியை எடுத்தவன் எடுத்தவுடனே ஆக்சிலேட்டரை திருக்க இங்கு பிடிமானம் இல்லாமல் அமர்ந்திருந்த மீனுவோ சட்டென அவனுடைய தோள்பட்டையில் அழுத்தமாக அவளுடைய கையை பதித்தாள்.
தோளில் பதிந்த கையை எடுக்க மனம் இல்லாமல் அவனுடனான இந்த பயணத்தை ரசித்து கொண்டு வந்தாள் மீனு.
அவனும் போகும் வழி எங்கும் அவளிடம் வழி கேட்டு கேட்டு சென்று கொண்டிருக்க இதற்கு இடையில் டிராபிக் போலீஸ் இவர்கள் வண்டியை மரித்தார்.
விஹானோ கேஷுவலாகவே இறங்கி அவரிடம் எதற்காக வண்டியை நிறுத்துகிறீர்கள் என்று கேட்க அவரோ,
“என்ன மேன் ஒன் வே ல இவ்வளவு வேகமா வர என்ன வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா” என்று கேட்க இவனோ,
“ எது வெறும் 30 ஸ்பீடுல வர்றது உங்க ஊர்ல அதிவேகமா” என்று கேட்க அதற்கு அந்த இன்ஸ்பெக்டரோ,
“ என்ன மேன் வேகமா வந்துட்டு கூட கூட பேசிகிட்டு இருக்க முதல்ல லைசென்ஸ் எடு” என்று கேட்க,
“உடனே விஹானை முந்தி கொண்டு வந்த மீனுவோ,
“சார் சார் அவரு ஃபாரின் அவருக்கு இங்க லைசன்ஸ் கிடையாது இது என்னோட வண்டி நான்தான் ஓட்டிட்டு வந்தேன் சட்டுன்னு எனக்கு தல சுத்துற மாதிரி இருந்துச்சு அதனால தான் ஒரு எமர்ஜென்சிக்கு அவர் வண்டி ஓட்டினார்” விஹானை காப்பாற்ற அவரிடம் பொய் கூறினாள் மீனு.
“ என்னமா லைசன்ஸ் இல்லாம வண்டி ஓட்ட கூடாதுன்னு தெரியாது உன்னால வண்டி ஓட்ட முடியலன்ன எதுக்கு வீட்ல இருந்து வண்டி எடுத்துட்டு வரீங்க அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்க தான் வண்டி ஓட்டிட்டு போகணும் அவரு ஓட்ட கூடாது” என்று அந்த டிராபிக் போலீஸ் சொல்ல விஹானோ,
“என்ன சார் பேசுறீங்க அவங்களுக்கு தான் உடம்பு சரியில்லைன்னு சொல்றாங்கல்ல ஒரு எமர்ஜென்சிக்கு வண்டி ஓட்டிட்டு போறதுனால எந்த குத்தமும் கிடையாது அதுவும் போக நீங்க சொல்ற மாதிரி நான் ஒன்னும் ஹை ஸ்பீடுல வரல ஜஸ்ட் 30 எங்களுக்கும் சட்டத்தை பத்தி தெரியும்” என்று அவன் மேலும் தனக்கு தெரிந்ததைக் கூற அந்த ட்ராபிக் போலீஸோ என்ன இவன் நம்மளுக்கு மேல சட்டத்தைக் கரைச்சு குடிச்சி இருப்பான் போல இருக்கு என்று நினைத்தவர்,
“ சரி சரி ஏதோ இந்த ஒரு தடவை மன்னிச்சு விடுறேன் போங்க போங்க” என்று சொல்ல விஹானோ அவரை ஏற இறங்க பார்த்தவன் அவ்விடம் விட்டு அகன்று சற்று தூரம் வந்தவன் மீனுவிடம்,
“உங்க ஊரு போ**சுக்கு அ***கிறதே கிடையாதா சரியான ஸ்டுப்பிட் மாதிரி பிஹேவ் பண்றாரு” என்று சொல்ல அவளோ,
“சாரிங்க ஏதோ தெரியாம நடந்துருச்சு” என்று சொல்ல இவனோ,
“ உனக்கு இந்த சாரி இதைத் தவிர வேற வார்த்தைகளே தெரியாதா எப்போ உன்கிட்ட கேட்டாலும் சாரி மன்னிச்சிடுங்க இது மட்டுமே சொல்ற சரி உன் பேர் என்ன” என்று இப்பொழுது தான் அவளிடம் பெயரை கேட்டான்.
“ மீனு மீனாட்சி” என்றாள்.
“ஓகே மீனா இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு” என்று கேட்க அவளோ,
“ வந்தாச்சு அதோ அந்த ஹோட்டல் பக்கத்துல தான் வந்துட்டோம்” என்றாள்.
அவள் சொன்னது போலவே லல்லுவின் பொட்டிக் அருகே வந்தவன், “இதுவா ?” என்று கேட்க அவளும் “ஆமாம்” என்று சொல்ல இருவரும் உள்ளே சென்றார்கள்.
“ அங்கு லல்லுவோ ஒரு அழகான சிகப்பு நிற மாடல் பிராக் ஒன்றை வடிவமைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த ஃபிராக் முடியும் தருவாயில் இருக்க பைனலாக அதற்கு ஒரு பெரிய பிளவரை வைத்துக் கொண்டிருந்தாள் லல்லு.
“ உள்ளே வந்த விஹானோ அந்த பொட்டிக்கு இருந்த வடிவமைப்பை பார்த்தவன்,
“வாவ் நைய்ஸ் லுக்கிங்” என்று பாராட்டிய படியே லல்லுவின் அருகில் வந்தவன்,
“இந்த பிராக் பியூட்டிஃபுல் பென்டாஸ்டிக் இத நீதான் ரெடி பண்ணியா ?” என்று லல்லுவைப் பார்த்து கேட்க அவளோ அப்பொழுதுதான் யார் என்று நிமிர்ந்து பார்த்தவள், மீனாவும் விஹானும் வந்திருக்க அவர்களைப் பார்த்தவள், அவன் தன்னுடைய டிசைனைப் பற்றி காம்ப்ளிமென்ட் கொடுக்கவும் புன்னகைத்தவள்,
“ஆமா இது என்னோட ஓன் டிசைன் இப்பதான் இதை ரெடி பண்றேன்” என்று சொன்னாள் லல்லு.
“ உனக்கு நல்ல டேலண்ட் இருக்கு கங்குராட்ஸ்” என்று அவள் முன்னே கையை நீட்ட அவளோ சிரித்தவாறு அவளுடைய கையை அவனுடைய கையோடு சேர்த்து குலுக்கினாள். “வாட்ஸ் யுவர் நேம்?” என்று அவளைப் பார்த்து கேட்க அவளோ,
“ லலிதா வீட்ல எல்லாரும் லல்லுன்னு கூப்பிடுவாங்க நீங்களும் அப்படியே கூப்பிடுங்க” என்று சொல்ல விஹானோ,
“ லல்லி லல்லி லலிதா லாலி லாலி ஓகே இது பெட்டர்” என்று சொன்னதும் மேலும் இருவரும் அவளுடைய டிசைனிங் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது மீனு தன் தங்கைக்கு எனக் கொண்டு வந்த பாயாசத்தை லல்லுவுக்கும் விஹானுக்கும் என இரு டம்ளரில் ஊற்றி கொண்டு வந்து இருவரிடமும் நீட்டினாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவளிடம் இருந்து விடைபெற்று கிளம்பினார்கள்.
“ ஓகே லாலி எனக்கு இன்னும் ஒன் ஹவர் கான்ஃபரன்ஸ் மீட்டிங் இருக்கு நம்ம நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்” என்று சொன்னவன் மீனுடன் அவ்விடம் விட்டு கிளம்பினான்.