முரளியோட போஸ்மாட்டம் ரிப்போர்ட்டில் என்ன உள்ளது என்று டாக்டரிடம் விசாரித்தார் இன்ஸ்பெக்டர் ரகு. அதற்கு டாக்டர், “சார் இவரோட பிளட்ல போதை மருந்து அதிகமாக கலந்து இருக்கு…. அவரோட உடம்பில் எக்கச்சக்கமான வெட்டுக் காயங்கள் இருக்கு… அந்த காயங்களுக்கு மேலேயே மிளகாய் தூளை கொட்டியிருக்கிறாங்க… அப்புறம் ரெண்டு புல்லட் அவரோட உடம்பில இருந்திச்சு… அவரு இறந்ததுக்கு பிறகுதான் அவரை மரத்தில தொங்க விட்டிருக்கிறாங்க… சார் இது ப்ளான் பண்ணிப் பண்ண மர்டர் இது… ஆனால் இதை பண்ணவங்க முரளி மேல கோபத்தில பண்ண மாதிரி தெரியலை… துடிதுடிக்க அவரை கொல்லணும்னு மனசு நிறைய பகையோட பண்ணின மாதிரி இருக்கு….”
“இப்பிடி சித்திரவதை செய்து கொலை பண்ணும் அளவிற்கு முரளி என்ன பண்ணான்னு தெரியலையே…. ஓகே சார் அதை நான் பார்த்துக்கிறன்…. ”
“சரி சார்… சீக்கிரமா அந்த கொலைகாரனை கண்டுபிடிங்க….”
“கண்டிப்பா சார்…” என்றவர் டாக்டரிடம் இருந்த ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு சென்றார்.
அடுத்த நாள் காலையில் தர்மராஜின் வீட்டில் மக்கள் வந்து முரளியின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றனர். அவர்கள் முரளிக்காக வரவில்லை. தர்மராஜிற்காகவே வந்தார்கள். கவிதா மகனின் உடல் இருக்கும் கண்ணாடிப் பெட்டிக்கு அருகிலே உட்கார்ந்து கொண்டு இருந்தார். யார் சொல்லும் சமாதானத்தையும் அவர் மனம் ஏற்கவே இல்லை. தர்மராஜிற்கு மனைவியைப் போல அழ முடியவில்லை. அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தார். உறவினர்கள் நடக்க வேண்டிய காரியங்களை முன்னின்று செய்து கொண்டு இருந்தனர்.
நேரத்திற்கு எழுந்த அகமித்ரா தனது வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது பூ விற்கும் மல்லிகா வந்து, “மித்துக் கண்ணு…. மித்துக் கண்ணு….” என்றார். அவரது சத்தம் கேட்டு வெளியே வந்தாள் அகமித்ரா.
“உள்ளே வாங்க அக்கா….” என்றாள். அவரும் உள்ளே வந்து அமர்ந்தார்.
“என்ன மித்து இப்படி சொல்ற… ஊருக்கே தெரிந்த விஷயம் உனக்கு தெரியலைனு சொல்ற…. நம்ம தர்மராஜ் ஐயா இருக்கிறாருல அவரோட மகனை யாரோ கொலை பண்ணுட்டாங்களாம்… அவங்க வீட்டுக்குப் போற வழியில இருக்கிற மரத்தில தொங்க விட்டிருக்கிறாங்க… ஆனால் கொலை பண்ணினவன் யாருன்னும் தெரியாது… எதுக்காக கொலை பண்ணினான்னும் தெரியாது…” என்றார்.
இதைக் கேட்ட அகமித்ராவுக்கு தேவசூரனின் முகம் நினைவில் வர உடல் நடுங்கி, முத்து முத்தாக வியர்வை பூத்தது. அதைப் பார்த்த மல்லிகா, “என்ன கண்ணு இது… இந்த குளிரான நேரத்தில உனக்கு இப்படி உடம்பெல்லாம் வியர்க்குது… உடம்பு எதுவும் சரியில்லையா….?” என்று கேட்டார்.
அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட அகமித்ரா, “இ…. இல்… இல்லை அக்கா… நீங்க கொலைனு சொன்னீங்களா… அதுதான் பயத்தில வியர்க்குது….” என்றாள்.
“நல்ல பொண்ணுமா நீ… பசங்களுக்கு தைரியமா இருக்கணும்னு சொல்ற நீ தைரியமா இல்லையே….. சரி சரி அதை யோசிக்காதமா ஸ்கூலுக்கு போற வேலையைப் பாரு… இந்தா பூவை வாங்கிக்க….” என்றவர் வழமை போல பூவை அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்.
அகமித்ரா சுவாமி படங்களுக்கு பூவை போட்டவள், மீதியை தனது தலையிலும் வைத்துக் கொண்டாள். உணவை லஞ்ச் பாக்ஸில் போட்டு எடுத்துக் கொண்டு ஸ்கூலிற்குச் சென்றாள். அங்கே ரித்தேஷ் இன்று விடுமுறை என்று சில ஆசிரியர்கள் கவலைப்பட்டார்கள். இதை எதையும் யோசிக்காமல் தனது வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
இங்கே வீட்டில் அதிதி என்றும் இல்லாதவாறு அடம்பிடித்துக் கொண்டு இருந்தாள். “அம்மா நான் நேரத்துக்கு ஸ்கூல் போகணும் மித்து மிஸ் வந்திருப்பாங்க….”என்றாள்.
“சரி அதிதி ஆனால் உன்னோட மிஸ் வர லேட்டாகுமே அதுவரைக்கும் தனியாகவா இருப்ப…..?” என்றாள் அதிதியின் தாய்.
“நோ அம்மா… நான் என்னோட மிஸ் வர்ற வரைக்கும் மித்து மிஸ்கூடவே இருப்பேன்…” என்று அடம்பிடிக்க வர்மன் வந்து, “சரி விடுமா அதுதான் அந்த மிஸ் பார்த்துப்பான்னு சொல்றால்ல… நானே இன்னைக்கு ஸ்கூல்ல விட்டுட்டு, அந்த மித்து மிஸ்கிட்ட பேசிட்டு வர்றேன்….”
“சரிங்க…” என்றாள்.
பின்னர் அதிதியை தயார் செய்து, காலை உணவை ஊட்டி விட்டு, வர்மனுடன் பைக்கில் அனுப்பி வைத்தாள். அதிதியும் சமத்தாக தந்தையோடு பேசிக் கொண்டே சென்றாள். வீதியில் இருக்கும் எதையாவது காட்டி, ஆயிரம் கேள்விகள் கேட்டு விடுவாள். வர்மனும் அவள் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தான்.
ஸ்கூலுக்கு வந்ததும் ஓட முயன்ற மகளை தனது கைகளால் பிடித்துக் கொண்டு, “அதிதி இருடா அப்பாவும் உன்கூட வர்றேன்….” என்றவன் அவளை கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போனான். அங்கே இருந்த ஏனைய மிஸ்களிடம் அகமித்ரா பற்றி விசாரிக்க, அவர்கள் அகமித்ரா அவளது க்ளாஸ் றூமில் இருப்பதாக சொல்ல அங்கே சென்றான். அகமித்ரா தலையை கைகளால் ஏந்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள். வர்மனும் அதிதியும் க்ளாஸ்கு அருகில் வரும் போது வர்மனுக்கு ஹாஸ்பிடலில் இருந்து கால் வந்தது எமர்ஜென்சி என்று. சரி என்று அதிதியிடம், “அதிதி குட்டி, ஹாஸ்பிடல்ல எமர்ஜென்சினு கால் வந்திருக்கு… நான் உடனே போயாகணும்…. உன்னோட மித்து மிஸ்ஸை நான் அப்புறமா வந்து பார்க்கிறன்…” என்றவன் மகள் நெற்றியில் முத்தமிட்டு, அவளிடம் இருந்து முத்தத்தை பரிசாக வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சென்று விட்டான்.
அதிதி, “மித்து மிஸ்….” என்று அழைத்துக் கொண்டு மித்துவின் அருகில் சென்றாள். அவளைப் பார்த்து சிரித்த அகமித்ரா, “அடடே வாங்க அதிதி குட்டி….” என்று அவளைத் தூக்கி மேசை மீது வைத்து பேசிக் கொண்டு இருந்தாள். அவளது மழலை மொழியில் தன்னைத் தொலைத்திருந்தாள் அகமித்ரா.
தேவசூரன் காலையிலேயே அவனது இருட்டு அறையின் ஒரு பக்க சுவற்றில் இருந்த போட்டோக்களை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஒரு கையில் சிகரெட் இருந்தது. சிறிது நேரத்தின் பின்னர் ஒரு போட்டோ மீது குண்டூசியை குத்தியவன் கண்கள் சிவந்தன. பின்னர் அங்கிருந்து வந்தவன், தனது அறைக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் ரெடியாகி வந்தவன் ஜீப்பில் ஏறி, அவனைத் தொடர்ந்து அவனது ஆட்களும் வண்டிகளில் தேவசூரனை பின் தொடர்ந்தனர். போகும் வழியில் இருந்த பூக் கடையில் ஒரு பெரிய மாலையாக வாங்கிக் கொண்டான். நேராக தேவசூரன் சென்றது தர்மராஜின் வீட்டிற்கு. அங்கே சென்று மலர் மாலையை கண்ணாடி பாக்ஸ் மீது வைத்து விட்டு அவனையே பார்த்துக் கொண்டு நின்றான். பின் அங்கிருந்த அனைவரையும் நோட்டம் விட்டான். அவனது பார்வை ஒரு இடத்தில் அதிக நேரம் நின்று திரும்பியது. மெல்ல வந்து தர்மராஜ் அருகே வந்தான். அவரிடம் ஆறுதலாக பேசி விட்டு சிறிது நேரம் அங்கே நின்று விட்டு வெளியே வந்தான்.
வர்மன் வேகவேகமா ஹாஸ்பிடலுக்கு வந்தான். அங்கே எமர்ஜென்சி வார்ட்டில் ஸ்கூல் படிக்கும் சிறுமி ஒருத்தி படுத்திருந்தாள். அவளது கையில் தீக்காயம் இருந்து. வர்மன் அங்கிருந்த நர்ஸிடம் என்ன நடந்தது என்று விசாரித்தவாறு சிகிச்சையை ஆரம்பித்தான்.
“டாக்டர் இந்த பொண்ணை ஒரு பையன் கொஞ்ச நாளாக ஃபாலோ பண்ணிட்டு இருந்திருக்கிறான்… ஒரு நாள் இந்தப் பொண்ணுக்கு ப்ரொபோஸ் பண்ணியிருக்கிறான்… அவள் பயந்து போய் வீட்ல சொல்லியிருக்கிறா டாக்டர்… ஆனால் அவங்க நீ அதை கண்டுக்காம இரும்மானு சொல்லியிருக்கிறாங்க.. அந்த பையனும் டெய்லி ஃபாலோ பண்ணி லவ் பண்ணுன்னு டார்ச்சர் பண்ண, இவ பக்கத்தில இருந்த போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லியிருக்கிறா… அவங்க வந்து இந்த பையனோட பேரன்ட்ஸை வரச் சொல்லி வார்னிங் குடுத்து அனுப்ப, அந்த கோபத்தில இந்த பொண்ணோட முகத்தில அசிட் அடிக்க வந்திருக்கிறான்… நல்ல வேளை டாக்டர் இவ முகத்தை கையால் மறைக்க அசிட் கையிலதான் பட்டிருக்கு….” என்றார்.
வர்மன் மருந்து போட்டு முடித்து விட்டு வெளியே வந்தான். அங்கே நின்ற அந்த பெண்ணின் பேரன்ட்ஸிடம், “பயப்படாதீங்க உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் இல்லை…. அவங்களோட கையில்தான் காயம் இருக்கு… அது குணமாக எப்படியும் மூன்று மாசமாகும்… அதுவரைக்கும் நான் குடுக்கிற மெடிசினை கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க…. நான் அப்புறமா வந்து பார்க்கிறன்…” என்று சென்று விட்டான்.
அதே நேரத்தில் அகமித்ராவும் அமிர்தாவும் அந்த ஹாஸ்பிடலுக்கு வேகமாக வந்து சேர்ந்தனர். அங்கிருந்தவர்களை கண்டு கொண்டு அவர்களிடம் வந்தார்கள்.
“அம்மா நித்யாவிற்கு இப்போ எப்படி இருக்கு….?” என்று கேட்டாள் அகமித்ரா.
“எங்களுக்கு இப்போதான் விஷயம் தெரிந்தது… உடனே ஓடி வர்றோம் நித்யா பேசினாளா….?” என்று கேட்டாள் அமிர்தா.
நித்யாவின் தாய், “என் பொண்ணோட கையிலதான்மா காயம்… அது குணமாக மூன்று மாசமாகும்னு டாக்டர் சொன்னாரு… படுபாவி அவன் நல்லா இருப்பானா…? கட்டையில போக….” என்று அழுதும், திட்டியும் அவரது மனதை தேற்ற முயன்றார் நித்யாவின் தாய்.
“என் பொண்ணோட முகத்தை பார்த்து எப்பிடி அவனுக்கு அசிட் அடிக்க மனசு வந்திச்சுனு தெரியலையே….” என்று புலம்பினார் நித்யாவின் தந்தை.
அதே நேரத்தில் அங்கு வந்து நின்றவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் அனைவரும். ஆம் சாட்சாத் தேவசூரனே தான் அங்கே வந்து கொண்டிருந்தான்.
‘ஐயோ இவனா… இவன் எங்க இங்க வர்றான்….?” என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு நின்றிருந்தாள் அகமித்ரா. அங்கே வந்தவன் பார்வை முதலில் அகமித்ராவிடம் பட்டு வந்தது. பின் நித்யாவின் தாயிடம், “உங்க பொண்ணை நான் பார்க்கணும்….” என்றவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றுவிட்டான். அவனை உள்ளே செல்ல விடாமல் தடுக்கும் தைரியமும் யாருக்கும் இல்லை. தேவசூரன் சென்று நித்யா அருகில் நின்றான். கலங்கிய அவன் கண்களை துடைத்துக் கொண்டு கூலர்ஸை அணிந்து கொண்டான். வெளியே வந்து அங்கே நின்ற நித்யாவின் பேரன்ட்ஸிடம், “நீங்க என்ன பண்ணப் போறதா இருக்கிறீங்க…..?” என்று கேட்டான்.
அதற்கு நித்யாவின் தந்தை, “எங்களுக்கு ஒண்ணுமே புரியல சார்… எங்க பொண்ணு பத்திரமா எங்ககிட்ட வந்தா போதும்…” என்றார்.
“உங்க பொண்ணு வர்றது இருக்கட்டும்… இதுக்கு காரணமானவனை என்ன பண்ணப் போறீங்க….?”
“எங்களால என்ன சார் பண்ண முடியும்…?” என்று அவர் சொல்லும் போது தேவசூரன், “நான் அவனுக்கு குடுக்க வேண்டிய தண்டனையை குடுத்திடுறன்….” என்றான்.
“ஹலோ சார் இதுல எதுக்கு நீங்க தலையிடுறீங்க… அவளோட பேரன்ட்ஸ் அன்ட் நாங்க என்ன பண்ணணுமோ அதை பார்த்துக்கிறம்… நீநீங்க உங்க வேலையை பாருங்க….”என்றாள் அகமித்ரா. ஆமா பேசியது அகமித்ராவேதான். அகமித்ரா அவளுக்கு அருகில் ஆட்கள் இருந்தால் மிகவும் தைரியமாக இருப்பாள். யாரும் இல்லாமல் தனியாக இருந்தால்தான் பேச பயம்.
அதற்கு தேவசூரன், “ஓ… மிஸ்ஸா… சொல்லுங்க உங்களால என்ன பண்ண முடியும்…? மிஞ்சி மிஞ்சி போனால் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க முடியும்… போலீஸ் அவனை உள்ளே போடலாம்னு பார்த்தா, அவனை பெத்தவங்க ஜாமின்ல அவனை வெளியில் எடுப்பாங்க அவன் மறுபடியும் வெளியில வருவான்… வேற பொண்ணுங்க பின்னாடி சுத்துவான், அப்புறம் அவங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணுவான் இதுதான் அவனோட வேலையா இருக்கும்… அதனால எத்தனை பொண்ணுங்களுக்கு பிரச்சனை…?” என்றான்.
“அப்போ அவனை என்ன கொலையா பண்ணணும்…?” என்றாள் அகமித்ரா.
அவளை முறைத்துப் பார்த்த தேவசூரன், “இந்த விஷயத்துக்கு கொலை பண்ணணும்னு இல்லை மிஸ்…” என்றவன் பேரன்ட்ஸ் பக்கம் திரும்பி, “நீங்க கவலைப்படாதீங்க அந்த பையனால உங்க பொண்ணுக்கு… இல்லை இல்லை.. உங்க பொண்ணுக்கு மட்டும் இல்லை வேற எந்தப் பொண்ணுக்கும் அவனால பிரச்சனை வராத மாதிரி பண்ணிடுறன்….” என்றான்.
அதை நேரத்தில் அகமித்ராவின் போனுக்கு வந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
பட்டூஸ் பெரிய எபி குடுத்திருக்கிறன் படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊 மறக்காமல் ரேட்டிங்கையும் குடுத்திடுங்க🙈🙈
Good
Thank you so much sis 💙
Very nice epi sis