தேவசூரனுடன் அகமித்ரா கத்திக் கொண்டு இருக்கும் போது அவளது போனுக்கு மெசேஜ் வந்தது. ‘யார்டா அது இந்த நேரத்தில…’ என நினைத்தவள் போனை எடுத்துப் பார்த்தாள். அதில் அவளுக்குத் தெரியாத புது நம்பரில் இருந்து “ஹாய் மை டியர் டார்லிங்…. ஸ்வீட் ஹார்ட்… லவ் அண்ட் ஹக்ஸ்….” என்று வந்திருந்தது. அதைப் பார்த்தவள் ஆஅதிர்ச்சி அடைந்தாள். அவளது முகத்தை பார்த்த தேவசூரனின் முகத்தில் குழப்பம் படர்ந்தது. அகமித்ரா போனை அணைத்து தனது பர்ஸில் வைத்தாள்.
தேவசூரன், “நல்லா யோசிச்சிப் பாருங்க மிஸ்… நான் வர்றேன்…” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். நேராக தேவசூரன் சென்றது நித்யாவின் இந்த நிலைமைக்கு காரணமானவனைத் தேடியே. தேவசூரன் செல்லும் போதே அவனது ஆட்களை அவனை கடத்தி தங்கள் இடத்திற்கு கொண்டு வந்திருந்தனர். தேவசூரன் நினைப்பதை அவர்கள் முடிப்பவர்களாக இருந்தனர். அங்கே சென்ற தேவசூரன் கட்டிப் போட்டு இருந்தவன் நெஞ்சிலே ஏறி மிதித்தான். கீழே விழுந்தவனை போட்டு தனது காலினாலே மிதித்தான். அந்த அடியைத் தாங்க முடியாமல் கதறினான். தேவசூரன் அதை கவனிக்கவில்லை. அவனை மீண்டும் நிமிர்த்தி வைக்கச் சொன்னான். இருவர் வந்து அவனை கதிரையோடு தூக்கி நேராக நிமிர்த்தி இருக்க வைத்தனர். ஒரு சேரை தனது காலால் இழுத்துப் போட்டு, அவனுக்கு முன்னால் இருந்தான்.
“நீ படிக்கிற வயசில படிக்காமல் இப்படி ஊர் சுற்றி திரியிறது போதாதுனு, படிக்க போற பிள்ளைகளையும் தொல்லை பண்ணிட்டு இருக்க… ஒரு பொண்ணு உன்னை லவ் பண்ணலனா அதற்கு உடனே அசிட் அடிச்சிடுவியா… போலீஸ்ல உன்னை மாட்டி விட்டதுக்கு அசிட் அடிச்சிருக்க… காலம் எவ்வளவு மாறியிருக்கு… இப்பவும் பொண்ணுங்க உங்களை விரும்பல, அவமானப்படுத்துனா அசிட் அடிக்கிறதை விடமாட்டீங்களா….? நல்லவேளை அந்த பொண்ணோட கையில பட்டுச்சு.. முகத்துல பட்டிருந்தா அந்த பொண்ணோட எதிர்காலம் என்னவாகும்…?” என்றவனுக்கு கோபம் அடங்கவில்லை. எழுந்த அவனை அறைந்தான்.
“நித்யாவிற்கு எதுவும் பெரிதாக ஆபத்து இல்லைன்னு சொன்னதால மட்டும்தான் நீ இப்போ உயிரோட இருக்க… இல்லைனு வை உன்னை பார்சல் பண்ணி அனுப்பியிருப்பேன்…. இன்னொரு தடவை எந்த பொண்ணையாவது தப்பான நோக்கத்தில பார்த்த அப்பறம் உன்னோட சாவை பார்த்து அந்த சாவே பயப்படும்…” என்றவன் அவனது ஆட்களுக்கு கண்ணைக் காட்ட அவர்கள் அவனை விட அழைத்துச் சென்றனர்.
தனது அறைக்கு வந்த தேவசூரன் குளியல் அறைக்குச் சென்றான். குளிர்ந்த நீரில் தனது கோபம் குறையும் வரை குளித்தான். எந்தத் தப்பையும் மன்னிக்கும் தேவசூரனால் பெண்களுக்கு செய்யும் தவறை மட்டும் மன்னிக்கவே முடியாது… குளித்து விட்டு வந்து கட்டிலில் படுத்து கண்களை மூடினான். மூடியவன் விழிகளுக்குள் வந்து நின்றாள் அகமித்ரா.
ஹாஸ்பிடலில் நித்யா கண்வித்து பேசிய பிறகு, அகமித்ராவும் அமிர்தாவும் அவளுடன் பேசி விட்டு, பேரன்ட்ஸ்க்கும் ஆறுதல் சொல்லி விட்டுச் சென்றனர். செல்லும் வழியில் அமிர்தா அகமித்ராவிடம், “ஏன் மித்து இத்தனை நாள்ல நீ இப்பிடி கத்திப் பேசி நான் பார்த்ததே இல்லை…. நீ ஏன் தேவசூரன் சாரைப் பார்த்தா மட்டும் அந்நியனா மாறிடுற…?” என்று கேட்டாள்.
அதற்கு அகமித்ரா, “நீ வேற ஏன்டி… எனக்கு அவனை பார்த்தாலே பிடிக்கலடி…. தப்பு செய்தால் தண்டனை கொடுக்க போலீஸ் இருக்கு சட்டம் இருக்கு… இவன் யாரு தண்டனை கொடுக்க….? அதுதான் அவனைப் பார்த்தாலே கோபம் வருது….”என்றாள். அதற்கு சிரித்துக் கொண்ட அமிர்தா, “போலீஸ் செய்யாததை அவரு செய்றாரு…. எனக்கு அவரு பண்றது தப்பில்லைன்னு தோணுது… நீ வேற அவரை பார்க்கவே பிடிக்கல… நினைச்சாலே கோபம் வேற வருதுன்னு சொல்ற… நீ வேணும்னா பாரு ஒருநாள் இல்லை ஒருநாள் அவரை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லப் போற…” என்றாள்.
“அதற்கு இந்த ஜென்மத்தில் வாய்ப்பே இல்லை… நீ எதையாவது உளறிட்டு இருக்காத…” என்றாள் அகமித்ரா.
“சரி சரி விடு பார்க்கத்தானே போறேன்…”
“அமிர்தா ப்ளீஸ் டி அப்பிடி சொல்லாத… நான் வேற டென்ஷன்ல இருக்கிறன்…..”
“என்னடி என்னாச்சி….?”
“ஹாஸ்பிடல்ல இருக்கும் போது எனக்கு தெரியாத நம்பர்ல இருந்து மெசேஜ் வந்திருக்குடி…”
“நீ டென்ஷனாகும் அளவுக்கு மெசேஜா… அப்பிடி என்ன வந்திருக்கு….?”
“இங்க பாரு அமிர்தா… ஸ்வீட்டி, ஸ்வீட் ஹார்ட், லவ் அண்ட் ஹக்ஸ்னு வந்திருக்கு…..”
“என்னடி இப்பிடி வந்திருக்கு அப்போ கண்டிப்பா உனக்கு வந்தது இல்லை… ஒருவேளை வேற யாருக்கோ அனுப்ப இருந்தது மாறி உனக்கு வந்திருக்கு அதை விடுடி…”
“இல்லை அமிர்தா ஒரு தடவை வந்திருந்தா பரவாயில்லை… நேற்று நைட்டும் வந்திச்சு….”
“அது யாருடி இப்பிடி மெசேஜ் போட்டு விளையாடுறது…?”
“அதுதான் எனக்குத் தெரியல்லை…. பயமா இருக்கு டி…”
“வேணும்னா அந்த நம்பருக்கு கால் பண்ணிப் பார்க்கலாம் யாரு என்னனு கேளு… இதுக்கு மேல எனக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்கனு சொல்லிட்டு போனை வச்சிடு…” என்றாள் அமிர்தா.
“இல்லை அமிர்தா…. எனக்கு பயமாக இருக்கு… திரும்ப மெசேஜ் இல்லைனா கால் வந்தா அந்த நம்பரை ப்ளாக் பண்ணிடுவன்…”
“சரி என்னவோ பண்ணு… ஆனால் ஏதாவது பிரச்சினைனா எங்கிட்ட சொல்லு…. நான் எப்பவும் உனக்காக இருப்பேன்….”
“கண்டிப்பா அமிர்தா….”என்றாள். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று விட்டனர்.
இங்கே ரகு தலையை பிய்த்துக் கொண்டு இருந்தான். முரளியின் இறுதி காரியங்கள் முடிந்த பிறகு தர்மராஜ் அவனை அழைத்து தனது மகனை கொலை செய்தவனை பத்து நாட்களுக்குள் கண்டுபிடித்து தருமாறு கூறினார். ரகுவும் எவ்வளவோ முயற்சி செய்தான். ஆனால் ஒரு சிறிய தடயமும் கிடைக்கவில்லை. எல்லாம் பக்காவா ப்ளான் போட்டு செய்திருந்தது. முரளியை எதற்காக கொலை செய்தார்கள் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். அப்போதுதான் அவனுக்கு, ‘நான் ஒரு பொறுக்கி’ என்று எழுதப்பட்ட வாசகம் முரளியின் கழுத்தில் கிடந்தது ஞாபகம் வந்தது. ‘அப்போ முரளி ஏதோ தப்பு பண்ணியிருக்கிறான்… அதற்கு யாரோ பழிவாங்கியிருக்கிறாங்க… ஆனால் முரளி என்ன பண்ணான்னு தெரியலையே….’ என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.
இரவுக்கே உரிய அமைதி நிறைந்திருந்தது. இரவு நேர உணவை அதிதிக்கு ஊட்டிக் கொண்டு இருந்தாள் அதிதியின் தாய் தேவி. வர்மன் அப்போதுதான் ஹாஸ்பிடலில் இருந்து வந்தவன், முதலில் சென்று குளித்து விட்டே மனைவி மற்றும் மகள் அருகே வந்தான். தந்தையைப் பார்த்தும் அவனிடம் தாவ முயன்றாள் அதிதி. அதைப் பார்த்தவள், “ம்கூம்… ஸ்கூல் விட்டு வந்ததில இருந்து என்னோட இருந்திட்டு… இப்போ அப்பா வந்ததும் என்னை மறந்திட்டு அவர்கிட்ட போறல நீ…” என்று அதிதியுடன் சண்டை போட்டாள். அதற்கு அதிதி “வெவ்வேவேவே…” என்று பழிப்புக் காட்டினாள். அவளை உச்சி மோர்ந்த வர்மன், “ஆமா என் பொண்ணு என்கூடவே தான் இருப்பா…” என்றான்.
“நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு… இதோ சாப்பாடு மீதியை நீங்களே ஊட்டி விடுங்க… நான் போய் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்…” என்று நகரப்போனவள் கையைப் பிடித்தவன், “குட்டிம்மா நீ பண்றது நியாயமே இல்லை… அதிதியைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே… நான் ஊட்டினா சரியா சாப்பிட மாட்டா… அங்க இங்கன்னு ஓடிட்டே இருப்பா…. இன்னைக்கு ஹாஸ்பிடல்ல வேற பேஷண்ட்ஸ் அதிகம்… ரொம்ப டயர்டா இருக்குடா…. ப்ளீஸ் நீயே ஊட்டிடேன் நான் பாவம்ல….” என்று தேவியை தாஜா செய்து கொண்டான்.
“இந்த தடவை விடுறன்… சரி நீங்க சாப்டு போய் தூங்குங்க நான் அதிதிக்கு சாப்பாட்டை கொடுத்திட்டு வர்றேன்….” என்றவள் வர்மனுக்கு சாப்பாட்டை எடுத்துக் கொடுத்து விட்டு மீண்டும் அதிதிக்கு சாப்பாட்டை ஊட்டி விட ஆரம்பித்தாள். வர்மன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டான். தேவி அதிதிக்கு சாப்பாட்டை கொடுத்து விட்டு, சிறிது நேரத்தின் பின்னர் அவளை தூங்க வைத்து வர்மன் அருகில் படுக்க வைத்து விட்டு வந்து, அவளும் சாப்பிட்டு, சமையல் அறை வேலைகளை முடித்து விட்டு அறைக்குள் சென்றாள். அங்கே மகளை சுவற்றின் ஓரத்தில் தலையணையை வைத்து அதன் அருகில் மகளை அணைத்துக் கொண்டு தூங்கினான். அதைப் பார்த்து சிரித்தவள், அவன் அருகில் வந்து படுத்தாள். உடனே அவன் கரம் இவளை இறுக அணைத்துக் கொண்டது.
“இன்னும் தூங்கலயா நீங்க….?”
“நீ பக்கத்துல இல்லாம தூக்கம் வரலை… சும்மா கண்ணை மூடிப் படுத்திருந்தேன் தேவிமா…” என்றவன் அவளை தன் புறம் திருப்பினான். அவளும் அவன் நெஞ்சிலே சாய்ந்தாள்.
“குட்டிம்மா நான் உங்கிட்ட ஒண்ணு கேட்பேன் நீ கோவப்படக் கூடாது…”
“அப்போ நான் கோவப்படுற மாதிரி நீங்க ஏதோ கேட்க போறீங்க…”
“இல்லைடா அதிதிக்கு ஒரு தம்பி இருந்தா நல்லா இருக்கும்ல…” என்றவனை பார்த்தவள்,
“என்ன திடீர்னு சார் அதிதிக்கு தம்பி கேட்கிறீங்க…”
“சரிடி அதிதிக்கு கேட்கல… எனக்கு இன்னொரு குழந்தை வேணும்…” என்றான்.
“இப்போ கடை எல்லாம் மூடி இருக்கும்…. நான் காலையில கடைக்குப் போய் வாங்கிட்டு வர்றேன்….” என்றவளை முறைத்தவன், “தேவி விளையாடாதடி.. எனக்கு பையன் பெத்துக் குடுக்க முடியுமா முடியாதா…”
“போங்க வரு…” என்றவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு காதில் ஏதோ சொல்ல, வர்மன் முதலில் லைட்டை அணைத்து விட்டு மனைவியை அணைத்துக் கொண்டு தனது தேடலைத் தொடங்கினான்.
தேவசூரன் அவனது ஆட்களை அழைத்து அவர்களிடம் ஒரு போட்டோவைக் காட்டினான். உடனே அங்கிருந்த ஒருவன், “ என்ன அண்ணாத்த இந்த போட்டோல இருக்கிறவங்க கையை எடுக்கணுமா… இல்லை காலை எடுக்கணுமா… ஒரே அடியாக மேலே அனுப்பவா….?” என்றான். அதைக் கேட்டு அங்கி சிரித்தனர். தேவசூரன், “நீங்க இந்த போட்டோல இருக்கிறவங்களை இருபத்து நான்கு மணி நேரமும் ஃபாலோ பண்ணிட்டே இருக்கணும்… ஒருத்தரும் உங்க பார்வையில இருந்து தப்பிக்க கூடாது…. எனக்கு அவங்க என்ன பண்ணிட்டு இருக்கிறாங்கனு சொல்லிட்டே இருக்கணும்…. நான் சொன்னது புரிஞ்சிதா….?”
“நல்லா புரிஞ்சிது அண்ணாத்த…”
“சரி நீங்க போகலாம்… பதபத்திரமா இருங்க… அவங்க கண்ணுல நீங்க படவே கூடாது….” என்று அனுப்பி அவர்களை அனுப்பி வைத்தான்.
வாசல் கதவு, ஜன்னல்கள் எல்லாவற்றையும் அடைத்து விட்டு அறைக்குள் வந்தாள் அகமித்ரா. ஸ்கூல் வேலை கொஞ்சம் இருக்க அதை செய்து கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு கால் வர, போனை எடுத்துப் பார்க்க அது புதிய நம்பராக இருந்தது. அவள் காலை எடுக்கவில்லை. பின்னர் மீண்டும் அதே நம்பரில் இருந்து கால் வர ஏதாவது அவசரமாக இருக்குமோ என்று நினைத்து போனை எடுத்து காலை ஆன் பண்ணினாள். அந்தப் பக்கம் பேசியது யாரென்று அறிந்தவள் குழப்பமடைந்தாள்.
பட்டூஸ் கதை எப்பிடி இருக்குனு சொல்லிட்டுப் போங்கப்பா 😊😊