விபீஷனின் அறைக்குள் பால் செம்புடன் நுழைந்தவள் முதலில் கண்டது என்னவோ சர்வசாதாரணமாக எவ்வித அலட்டலுமின்றி கட்டிலில் சாய்வாக அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த விபீஷனைத் தான்.
மெதுவாக கதவினை தாளிட்டு விட்டு கட்டிலின் அருகே வந்தவள் குரலை செருமினாள்.
ம்ஹூம், அவன் கண்டு கொண்ட போலவே தெரியவில்லை.
மெல்ல அவனை ஏறிட்டு பார்த்தவள் “பால்” என்றாள்.
அவள் வந்ததை அவன் உணர்ந்தான் தான். இருப்பினும் அவளை சீண்ட வேண்டுமென முடிவெடுத்து விட்டான் போலும், இதழ்களுக்குள் அவளறியாமல் புன்னகைத்துக் கொண்டவன் அவளை பார்க்காது “ சோ வாட்?” என்றான் வேண்டுமென்றே…
‘என்ன திமிர்? கொஞ்சம் என்னை பார்த்தா தான் என்னவாம்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவள் “ பால் கொடுக்க சொன்னாங்க” என்றவள் செம்பினை இப்போது அவனை நோக்கி நீட்டியே விட்டாள்.
அவளை ஓர் மார்க்கமாக பார்த்தவன் “டேபிள்ல வச்சிட்டு போய் படு” என்றவன் அலைபேசியை அணைத்து விட்டு கழுத்தில் நெட்டி முறித்த படி படுக்க ஆயத்தமாகவும், ‘இன்னைக்கு நாம கன்னி கழிய மாட்டோம் போல’ என மனதில் கடுப்பாக சொல்லிக் கொண்டவள் “டேபிள்ல வச்சிட்டு தூங்க ஒன்னும் பால் கொண்டு வர்ல. நாம குடிக்கணுமாம்” என்று சொன்னவளுக்கு உண்மையாகவே அதை சொல்லும் போது முகத்தில் வெட்கம் வந்து தானாக ஒட்டிக் கொண்டது.
“அப்போ குடிச்சிட்டு போய் தூங்கு” என்றவன் சிரிக்காமல் பேசியதே அதிசயம் தான்.
சட்டென சுதாரித்தவள் “மாமா” என்று அழைத்தே விட்டாள்.
அவனை முன்பிலிருந்தே ‘மாமா’ என்று அழைத்திராதவள் இப்போது சட்டென அவனை உரிமையாக அழைத்திருக்க, அவனுக்கோ அவளை இறுக அணைத்து முத்தம் கொடுக்க வேண்டுமென்ற பேரவா எழுந்தது.
அடக்கிக் கொண்டான்.
அவளுக்கு தன் மேல் காதல் வந்து விட்டது என எப்போதோ உணர்ந்து கொண்டவனுக்கு உலகையே வென்று விட்ட உணர்வு தான்.
ஆனால், அவளுக்கு இன்னுமே தன் காதலை அருகிலிருந்தே உணர வைக்க வேண்டும் என முடிவை எடுத்திருந்தனுக்கு அடுத்த நாளே ஶ்ரீ நவியிடம் அவள் எப்போதோ கூறிய வார்த்தைகள் அவனை வெகுவாக தாக்கியிருந்தது.
அவனை விட்டு கொடுக்க துணிந்திருந்தால் அவளை முழுதாக அவன் வெறுத்திருப்பான் அல்லவா! அதை நினைக்கும் போது தான் கண்மண் தெரியாத ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது.
திருமணத்தை வைத்துக் கொண்டு முற்றிலுமாக இருக்கும் மனநிலையை கெடுக்க அவனுக்கு மனமுமில்லை.
நன்றாக யோசித்தான்.
அதனைத் தொடர்ந்து வந்த இரு நாட்களும் அவளை கண்டு கொள்ளாது ஒருவித இறுக்கத்துடனேயே வலம் வந்தவனுடன் அவள் பேச முயன்று கொண்டிருப்பதும் தெரிந்தே தான் இருந்தது. யோசனையாகவே நாளைக் கடத்தியவனுக்கு திருமண நாள் அன்றே, காலையில் தான் மூளையில் மின்னல் வெட்டியதை போல தோன்றிய யோசனையில் அவனின் இதழ்களோ தாராளமாக விரிந்து கொண்டன.
ஆம், அவளைக் கண்டு கொள்ளாமலேயே இருந்து அவளை சீண்டி பார்க்க முடிவெடுத்து விட்டான்.
விழிகளை இறுக மூடித் திறந்து இதழ் குவித்து உஷ்ண பெரு மூச்சை விட்டுக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தவன் “என்ன என்னை லவ் பண்றியா?” என்று கேட்டவனை சட்டென ஏறிட்டு பார்த்தவளுக்கு காதலை காலம் தாழ்த்தி சொல்லும் எண்ணம் எல்லாம் இல்லை போலும் இதழ் பிரித்து வெட்கப் புன்னகையுடன் “அதான் தெரியுதுல. டுடே நமக்கு என்ன நாள்னு தெரியுமா?” என அவன் இன்னும் தன்னை கண்டு கொள்ளாதது போல இருக்கவும் ஒருவித ஏக்கத்துடன் அவனுக்கு புரிய வைக்கும் நோக்குடன் கேட்டு வைக்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்தவன் “வொய் நாட் நல்லவே தெரியுது என ஒற்றை புருவத்தை வருடிக் கொண்டே அண்ட் இன்னைக்கு நமக்கு மேரேஜ் ஆகியிருக்கு தட்ஸ் ஆல்” என தோள்களை குலுக்கிக் கொண்டே தன் முன் ஒருத்தி நிற்கின்றாள் என கண்டு கொள்ளாது விழிகளை மூடிக் கொள்ள, பொறுமை இழந்த பெண்ணவளோ “ஓஹ் கோட் விபீஷன்” என்ற படி சலிப்பாக கட்டிலில் அமர்ந்தவள் முயன்று வரவழைத்த பொறுமையுடன் “இந்த ரூம் டிசைன்லாம் எவ்ளோ அழகா ரொமான்டிக்கா என அழுத்தமாக சொன்னவள் செம்மையா அரேஞ்ச் பண்ணியிருக்காங்கல” என்றவள் சற்றே அவனை நெருங்கி அமர்ந்து “மாமா” என்றாள் மிக மிக மென்மையாக,
அவளின் அழைப்பில் சட்டென விழிகளை திறந்தவன் புருவங்கள் உயர ” இந்த சினிமால வர்ற போல லவ்ன்னு சொல்லிட்டு என்னை சீட் பண்ற ப்ரீ- பிளான் ஏதும் இருந்தா இப்பவே சொல்லிடு” என்றானே பார்க்கலாம்.
அவளுக்கோ செருப்பால் அடித்த உணர்வு.
அவனது வார்த்தைகளில் சட்டென விழிகளும் கலங்கி விட, இப்போது பதறுவது அவன் முறையாகி போனது.
அவள் அழுவது கூட அவனுக்கு தான் வலித்தது.
“படுத்துறா…” என இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டே எழுந்தவன் தலையை தாழ்த்தி வெடித்து வரவிருக்கும் அழுகையை கட்டுப்படுத்த படாத பாடு பட்டுக் கொண்டிருந்தவளை நெருங்கியவன் “இப்போ என்னடி?” என்றான் சலிப்பாக,
அருகில் கேட்ட அவனது குரலில் இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த அழுகை மொத்தமும் மடை திறந்த வெள்ளம் போல அவன் முன் வெடித்தது.
உடல் நடுங்க அழுதுக் கொண்டிருந்தவளை இழுத்து அணைத்தவன் “அழாதடி, எதுக்கு இப்போ அழற?” என்று கேட்டபடி அவளது தலையை மிக மென்மையாக வருடிவிட, அதிலோ அவளழுகை கூடியது தான் மிச்சம்.
“பவி பிளீஸ் டோண்ட் க்ரை. இட்ஸ் ஹர்டிங் மீ டூ” என்றவன் அணைப்பு கூட இறுகியது.
அவளின் அழுகையில் அவனது மனமோ அவளை கஷ்டபடுத்தி விட்டோமோ என பலவாறு எண்ணி நிலையில்லாமல் தவித்தது.
“சாரி, எனக்கு அப்போ உங்க மேல லவ் இல்ல, அதனால தான் என்னென்னவோ உளறி வச்சிருக்கேன் என மூக்கை உறிஞ்சிவள் உங்களையும் என் பின்னாடி அலையவிட்டு ரொம்பவே கஷ்டபடுத்திட்டேன்ல சாரி….” என அவனது மார்புக்குள் புதைந்து விடுபவள் போல ஒன்றியவளின் கன்னங்களை பற்றி தன்னிலிருந்து பிரித்தெடுத்து அவள் முகத்தை பார்த்தான்.
அழுது அழுது முகம் வீங்கி கண்கள் சிவந்து நின்றவளை ஆழ்ந்து பார்த்த படி “செம்ம டயர்ட்டா இருக்கு தூங்கலாமா?” என்றான் தீவிரமாக,
என்னவோ பேசத் தான் போகின்றான் என நினைத்தவளுக்கு அவனின் பேச்சில் ஒரு கணம் திகைத்து விழித்து பின் நன்றாக முறைத்து வைத்தவள் சட்டென அவனிலிருந்து பிரிந்து முகத்தை அழுந்த துடைத்தவள் “சாரி” என குரல் நடுங்க கூறிவிட்டு திரும்பியவளின் இடையை இறுக பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான்.
அவன் இழுத்த வேகத்தில் மீண்டும் அவன் மார்பில் வந்து மோதியவள், அவனின் எதிர் பாரா இச் செயலில் விதிர்விதித்து போய் நிமிர்ந்து பார்த்து “தூங்கலாம்னு சொன்ன போல ஞாபகம்” என்றாள் வேறெங்கோ பார்த்துக் கொண்டு,
“மை ஸ்வீட் அங்ரி பெர்ட், லுக் அட் மீ” என்றான் அவளை தன் அணைப்பிலேயே வைத்துக் கொண்டு,
“முடியாது நான் பார்க்க மாட்டேன் தூங்கலாம்” என்றாள் பாவை.
“ஓகே தூங்கலாமே என்றவன் அவளின் கன்னங்களை இரு கரங்களாலும் பற்றி தன்னை பார்க்க செய்தவன் பட் வில் ஸ்லீப் லேட் நைட்” என்று சொன்னவன் அவள் சுதாரிக்கும் முதலே தனது இதழ்களை அவளின் இதழ்களில் ஆழப் பொருத்தி இருந்தான்.
அதிர்ந்து விழிகளை விரித்தவளுக்கு அவனை விட்டு விலகும் எண்ணமெல்லாம் துளியும் இல்லை போலும், சுகமாக விழிகளை மூடிக் கொண்டவளோ அவனது இதழ் முத்தத்திற்கு பதில் முத்தம் வழங்க ஆரம்பித்து விட்டாள்.
இருவரும் பரிமாறிக் கொண்ட முதல் இதழ் முத்தம்.
அவனுள் அவளுக்கான காதல் நிரம்பிக் கிடக்க, அவளை வலிக்க வைத்து விட கூடாது என மென்மையாக முத்தம் பதித்துக் கொண்டு இருந்தவனுக்கோ அவளின் பதில் முத்தம் சற்றே இன்ப அதிர்ச்சியை கொடுக்க, அவளுக்காகவே உணர்வுகளை அடக்கி வைத்திருந்தவனின் உணர்வுகளோ அவளாலேயே விமோசனம் அடைந்து விட்டன போலும்,
அதன் பின் கேட்கவும் வேண்டுமா?
இருவரும் கட்டிலின் வசமானார்கள்.
அவனின் காதலில் விழுந்தவள் அவள்.
இப்போது அவனின் சரிபாதியாகியும் விட்டாள்.
அவனின் சிறு சிறு தொடுகைக்கும் அவளின் மேனி உருகிக் குலைய ஆரம்பித்து விட, “மாமா லைட்ஸ் ஆ ஃப் பண்ணுங்க பிளீஸ்” என்றாள் சிணுங்களாக,
“இனிமேல் மறைக்க என்ன இருக்கு?” என்ற அவனது கேள்வியில், முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டவளுக்கு எப்போது தன் மேனியிலிருந்து புடவையை அகற்றினான் என்றே அவளுக்கு தெரியவில்லை.
அவளுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.
இதே திருமணம் பேசும் முன்னரே அவள் இருந்த மனநிலையில் நீ அவன் காதலில் உருகி கரைந்து பித்தாகி அலையப்போகின்றாய் என கூறி இருந்தால் வாய்விட்டு சிரித்திருப்பாள்.
ஆனால், இப்போதோ அவன் முன்னிலையில் தான் இருக்கும் நிலை என்ன? அதுவும் அவன் மீது அளவற்ற காதலோடு, நினைக்கவே மொத்த மேனியும் சிலிர்த்து சிவந்து போனது.
விழிகள் மூடி தன்னை பார்க்க வெட்கியவளாய் தான் முன் மலர்ந்து கிடக்கும் தன்னவளை பார்த்தவன் மெலிதாக புன்னகைத்த படியே குனிந்து அவளின் மூடிய விழிகளில் முத்தங்களை பதித்தவன் “ ஷல் ஐ ஸ்டார்ட்?” என இவ்வளவும் செய்து விட்டு கேட்டானே பார்க்கலாம்.
அளவில்லா உணர்ச்சி பெருக்கில் மோன நிலையில் கட்டுண்டு கிடந்தவள் பட்டென விழிகளை திறந்தாள். அவளோ, தயக்கத்தை தாண்டும் நிலையை எல்லாம் எப்போதோ கடந்து விட்டாள்.
கேசம் களைந்து எதுவும் அறியாதவனை போல இவ்வளவு நேரமும் தன்னை அவனில் மயக்கி கரைய வைத்து என்னவெல்லாம் செய்து விட்டு என்ன நிலையில் வைத்துக் கொண்டு என்ன கேட்கிறான்?” என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவள் ஒன்றும் அவனுக்கு சளைத்தவள் அல்லவே!
அவளின் வழமையான துடுக்குத்தனம் தலை தூக்க, கலைந்த அவனது கேசத்தை மேலும் கலைத்து விளையாடிய படியே “ வேணாம் நாளைக்கு பார்த்துக்கலாம் இப்போ எனக்கு செம்ம தூக்கம்” என்று சொன்னவள் போர்வையை எடுத்து இருவரையும் மறைத்தவள் அவனை அணைத்துக் கொண்டே விழிகளை மூடிக் கொண்டாள்.
அவள் அதை சொல்லும் போதே அவனின் முகத்தில் ஏதேனும் ஏமாற்றம் தெரிகின்றதா? என்று பார்த்தவளுக்கு இறுதியில் அவனது முகத்தில் தோன்றிய கனிவான புன்னகையில் அவள் தான் ஏமாற்றம் கொண்டாள்.
தான் அவனை அணைத்ததும் பதில் வார்த்தை பேசாது அவளை தன் மார்புக்குள் புதைத்து வைப்பவன் போல அவளை இறுக அணைத்துக் கொண்டவன் காதலில் சித்தம் திணறி போனாள் பாவையவள்.
என்ன மாதிரியான ஆணவன்.
அவள் தான் அவனை உணர்ந்தாலே! தன் மீதான அவனது கட்டுக்கடங்கா மோகத்தை, அப்படியென்றால் நான் சொன்னதற்காக தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டானா? என்ற கேள்வி எழவும், அவளுக்கோ குற்ற உணர்வாகி போனது.
“நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன் நாம லேட்டா தூங்கலாமே” என்றாள்.
“எனக்காக பார்க்காத பவி. எனக்கு உன் ஹெல்த் தான் இம்போர்டன்ட் சோ தூங்கு” என்றவன் அவளின் தலையை வருடி விட, அவளுக்கோ மீண்டும் அழுகை வரும் போலானது.
எச்சிலை கூட்டி அடக்க முயன்றாள். முடியவில்லை.
சரேலென ஒற்றை விழியிலிருந்து கண்ணீர் வழிந்து அவனது மார்பை நனைத்தது.
பதறி போய் அவளை தன்னிலிருந்து பிரித்தவன் “ஏன் அழற? நான் உன்ன ஹர்ட் பண்ணிட்டனா?” என கேட்டுக் கொண்டே அவளது விழிகளில் நில்லாமல் வழிந்த கண்ணீரை துடைத்தவனின் வார்த்தைகளில் உடல் நடுங்க அவனை இறுக அணைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள் பெண்ணவள்.
“பவி, ஹியர் லுக் அட் மீ” என அவளை தன்னிலிருந்து மெல்ல விலக்க முயன்றான்.
அவளோ அவன் மார்போடு மேலும் ஒன்றிக் கொண்டே “ சாரி மாமா, சாரி… நான் உங்களை புரிஞ்சிக்காம ஹர்ட் பண்ணிட்டேன்” என்று சொன்னவள் மேனியோ அழுகையில் நடுங்கியது.
“இட்ஸ் ஓகேடி அதெல்லாம் பாஸ்ட், இப்போ இந்த செகண்ட் நானும் நீயும் ஜஸ்ட் இமேஜின் தட். சும்மா அழாத இட்ஸ் ஹர்டிங்” என்றவன் குரல் அவனையும் மீறி உடைந்து ஒலித்தது.
“ஐயோ! இப்படி பேசாதீங்க மாமா. எனக்கு இன்னும் அழ தோணுது” என்று குரல் நடுங்க சொன்னவள் நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்துக் கொண்டே “நான் எப்பவோ இதை உங்ககிட்ட சொல்லியிருக்கணும் மாமா பட் இனியும் லேட் பண்ண விரும்பல என்றவள் மேலும் அவனை நெருங்கி ஐ…” என்று அவன் அவளிடமிருந்து கேட்க தவமாய் கிடந்த அவ் வார்த்தகளை உதிர்க்க முதலே அவளை மேலும் பேச விடாது அவளின் இதழ் மேல் தன் விரல் வைத்தவன் “ நீ சொல்லி தான் எனக்கு தெரியனும்னு இல்லடி ஐ ஆல்ரெடி பீல் யுவர் லவ். என்றவன் அவளின் இரு நீள் விழிகளை பார்த்துக் கொண்டே இங்கிலீஷ்ல அந்த மூணு வார்த்தையை சொன்ன போல லவ் ஆகிடுமா இட்ஸ் அ பீல்டி அதுவும் உன் இந்த ச்சபி கண்ண பார்த்தாலே என்மேல நீ வச்சிருக்க லவ்வ புரிஞ்சிரிக்க மாட்டேன்னா நினைக்கிற?” என்றவனை ஓர் அதிர்வோடு பார்த்தவள் “அதில்ல மாமா” என்று ஏதோ சொல்ல வந்தவள் இதழில் இதழ் பதித்து விலகியவன் “உனக்கு என்மேல கொஞ்சம் கூட ஃபீலிங்ஸ் இல்லனாலும் உன்னோட இப்போ ட்ரெஸ் இல்லாம.. இவ்ளோ கிளோஸ்ல இருந்தும் உன்ன எதுவும் பண்ணாம பீலிங்ஸ கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்க மாட்டேன் டி. எனக்கு நீ என்னை முழுசா பீல் பண்ணனும். என்னை மொத்தமா உணரணும் அதுவே எனக்கு ஹேப்பி தான்” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
“தூக்கம் வருதுன்னு சொன்ன போல ஞாபகம்” என்றான் அவளை சீண்டுவதற்கென்றே, “இப்போ இல்ல அஸ் ஆல்வேஸ் யூ கென் டேக் மீ. உங்களுக்கு உரிமையான ஒன்னை இப்படி தான் பெர்மிஷன் கேட்டு வாங்கிட்டு இருப்பீங்களா?” என்று பொறுமை இழந்து சீறினாள்.
“எனக்கு பிடிச்சதே உன்னோட இந்த அங்கிரி பெர்ட் வைப் தான். செம்ம கிக்கா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே அவள் நாசியில் மென்மையாக இதழ் பதித்தவன் கரமோ அவளின் மேனியை வருட ஆரம்பித்து விட, அவளுக்கோ உணர்வுகள் எழுந்து பேயாட்டம் போட ஆரம்பித்து விட்டன.
அதனை தொடர்ந்து நடந்தவைகள் அனைத்துக்கும் இருவரும் பொறுப்பாகி போக, அவ் அறை முழுதும் முத்த சத்தங்களும் அவளின் முனகல்களுமே எதிரொலித்துக் கொண்டிருந்தன.
Super sis