அடுத்த நாள் கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று இருக்க, அதிகாலையே விழித்திருந்தாள் ஆஹித்யா.
மேனியெல்லாம் என்னவோ ஓர் பரவச உணர்வு அவளுக்கு,
என்னவெல்லாம் செய்துவிட்டான்? நினைக்கவே வெட்கமாக இருக்க, அதற்கு காரணமானவனை பக்கவாட்டாகத் திரும்பி பார்த்தாள்.
அவனோ, அவளை இறுக அணைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ‘உஃப்’ என இதழ் குவித்து ஊதியவளோ ‘எதுவும் தெரியாத பேபி போல தூங்குறதை பாரேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவளோ மெதுவாக அவனின் கரத்தை விலக்கி விட்டு எழுந்து தான் படுத்திருந்த இடத்தை பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்தாள்.
ஆம், அவளின் பெண்மைக்கான சுவடு கட்டில் விரிப்பில் இருக்க, அடுத்த கணமே நிறைவாக புன்னகைத்தவள் ‘அப்போ நாம வெர்ஜின் தான். ஹையோ! நான் வேற லூசுத்தனமா செக் பண்ண போனேனே’ என தலையில் தட்டிக் கொண்டே போர்வையை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டவள் ஹேங்கரிலிருந்த உடையை எடுக்க எத்தனித்த அதே சமயம் அவளை அப்படியே போர்வையோடு அலேக்காக தன் கரங்களில் ஏந்தியிருந்தான் ஜெய் ஆனந்த்.
“மாமா.. என்ன பண்றீங்க? இறக்கி விடுங்க” என்றாள்.
அவனா விடுவான்?
விடாகண்டன் ஆயிற்றே!
“இவ்ளோ ஏர்லியா எழுந்துட்ட?” என்று கேட்டுக் கொண்டே அவளை கட்டிலில் கிடத்தியவன் அவளின் போர்வைக்குள்ளேயே புகுந்துக் கொள்ள, அவளுக்கோ கூச்சம் ஒரு பக்கம் என்றால் இன்று கோயிலுக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வேறு.
இதில் இவன் வேறு பாடாய் படுத்துகின்றானே! என நொந்து கொண்டவளோ, தன் மேனியில் படர்ந்த அவனது கரத்தை மேலும் முன்னேற விடாது பிடித்துக் கொண்டவள் “ மாமா பிளீஸ் கோவில் போகணும். இப்போ வேணாமே” என்றாள் இறைஞ்சலாக…
அவளின் விழிகள் காட்டிய ஜாலத்தில் என்ன கண்டானோ “ம்ம் ஓகே” என்றவனோ போர்வையை இழுத்து தன் மேல் போட்டுக் கொள்ள, அவளோ அதிர்ந்து போய் அவனோடு ஒன்றியவள் “ அச்சோ என்ன விளையாட்டு இது? பெட்ஷீட்ட தாங்க மாமா” என்றாள் சிணுங்களாக,
“நோ வே” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்,
“இப்படியே எப்படி போறது? ஹையோ பிளீஸ் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்” என்றவளை விழுங்குவது போல பார்த்தவன் “நீ என்னை என்னவெல்லாமோ பண்ணிட்ட டி” என கிறக்கமாக சொன்னவன் அவளின் காது மடல்களை தன் இதழ்களால் உரச, அவளுக்கோ நிலை கொள்ளவே முடியவில்லை.
அவளும் பெண் தானே! இப்படியே இருந்தால் தன்னை உருக வைத்தே நினைத்ததை நடத்தி விடுவான் என உள்ளுணர்வு உந்தித் தள்ள, “என்னை மொத்தமா பார்த்துட்டீங்கல, இனி என்ன ப்ராப்ளம் எனக்கு?” என்று சொன்னவளோ மின்னல் வேகத்தில் கட்டிலிலிருந்து பாய்ந்தெழுந்தவள் ஹேங்கரிலிருந்த டவலை எடுத்து தன்னைச் சுற்றி போர்த்திய படி அவனை திரும்பியும் பாராது குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.
அவளையே விழி அகலாமல் பார்த்திருந்தவனோ இதழ் பிரித்து சத்தமாக சிரித்துக் கொண்டான்.
அவன் சிரிப்பது குளியலறை கதவில் மெல்லிய படபடப்புடன் சாய்ந்து நின்றிருந்த பெண்ணவளுக்கு கேட்க, “நினைச்சதை பண்ணாம விட மாட்டார்” என முணுமுணுத்துக் கொண்டே தன்னைத் தானே குனிந்து பார்த்தாள்.
அவன் ஸ்பரிசித்த அவளது மேனி.
“ஹையோ கடவுளே! வெட்க வெட்கமா வருதே” என சொல்லிக் கொண்டே இரு கரங்களினை உயர்த்தி அதில் முகத்தை புதைத்து வெட்கப்பட்டுக் கொண்டிருக்க “வாட்டர் சேவ் பண்ணலாமா?” என வெளியில் கேட்ட அவனது குரலில் சட்டென தன்னை மீட்டுக் கொண்டவளோ “ டுடே மட்டும் வாட்டர் வேஸ்ட் ஆகுறதுல தப்பில்ல” என்று வெட்க புன்னகையுடன் சொன்னவளோ ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளின் பதிலில் அவனுக்கோ மேலும் புன்னகை விரிந்தது.
ஹேங்கரிலிருந்த டி ஷர்ட்டை அணிந்துக் கொண்டவனோ கட்டிலின் விரிப்பை அகற்றி விட்டு வேறொன்றை மாற்றியவனோ அவள் வரும் வரை அலைபேசியை பார்த்த படி அமர்ந்திருக்க, அவளோ ஒரு மணிநேரமாகியும் வராது போக அலைபேசியை அணைத்து விட்டு கழுத்தில் நெட்டி முறித்த படியே எழுந்தவன் குளியலறையை நெருங்கி “இவ்ளோ நேரம் என்னடி பண்ணிட்டு இருக்க?” என்றான் பொறுமை இழந்து,
குளித்து முடித்து விட்டு டவலோடு உள்ளே நின்றவளுக்கோ உடையை அவரசத்தில் எடுத்து வராத மடத்தனத்தை நினைத்து நொந்து கொள்ள தான் முடிந்தது.
“ட்ரெஸ் எடுத்திட்டு வரல” என்றாள் குரல் உடைய,
அவளின் குரலில் தெரிந்த நடுக்கம் அவனை என்னவோ செய்ய “சோ வாட் டவல் இருக்கு தானே”
“ நீங்க எதுவும் பண்ண மாட்டீங்கல” என்றாள் மீண்டும் உள்ளே இருந்து கொண்டு,
மென்மையான அவனுக்கே கடுப்பாக இருந்திருக்க வேண்டும் போலும் “உன் சம்மதம் இல்லாம உன்மேல பாஞ்சிற மாட்டேன். கம் அவுட்” என்றான்.
அவளுக்குமே இதற்கு மேலும் இங்கே இருப்பது சரியென்று படவில்லை.
சட்டென கதவினை திறந்தவள் தன்னெதிரே நின்றிருந்தவனை பார்க்க வெட்கியவளாய் தலை தாழ்த்தி வாட்ராப் அருகே சென்றவள் சட்டென பின்னால் திரும்பி பார்த்தாள்.
அவனோ, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து, நின்ற இடத்தில் நின்ற படி அவளை தான் வைத்த விழி அகற்றாமல் பார்வையால் பருகிக் கொண்டிருக்க, “மாமா சொன்னிங்க தானே. என்ன பார்வை இது? இப்படி பார்க்காதீங்க” என்று சொல்ல,
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை நோக்கி அடிகளை வைத்து நெருங்க அவளோ, “ மாமா கோவில் போகணும்” என்று சொல்லிக் கொண்டே ஓரடி பின்னால் நகர்ந்தவள் வாட்ராப்பில் மோதி நிற்க, அவனோ அதற்குள் அவளை நெருங்கியவன் அவளின் பிறை நெற்றியில் உறவாடிக் கொண்டிருந்த முடிக்கற்றையை காதோரமாக ஒதுக்கி விட்டவன் “நான் தான் சொன்னேன்ல உன் பெர்மிஷன் இல்லாமல் உன்ல பாஞ்சிற மாட்டேன்டி அண்ட் மோரோவர் என்கிட்டயிருந்து மறைக்க உன்கிட்ட எதுவும் இல்லன்னு நினைக்கிறேன் என்று சொன்னவனோ சன்னமாக விசிலடித்தபடி பாஞ்சிற மாட்டேன்னு சொன்னேன் பட் அதுக்காக உன்ன பார்க்க வேணாம்னு சொல்ல உனக்கு ரைட்ஸ் இல்ல” என்று சொன்னவன் பார்வை அவளில் வஞ்சனையின்றி அழுத்தமாக படிந்தது.
“அச்சோ மாமா, எனக்கு ஷையா இருக்கு… ப்ளீஸ்” என்றாள் நெளிந்து கொண்டே,
அவளின் அவஸ்தை கூட அவனுக்கு புன்னகையை தோற்றுவிக்க “ட்ரெஸ் பண்ணிட்டு வெயிட் பண்ணு ஃப்ரஷ்ஷாகிட்டு வரேன்” என்றவனோ குனிந்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டே சென்றிருந்தான்.
மேனி முழுதும் அவனால் செம்மை பூசிக்கொள்ள, விழிகளை மூடித் திறந்து ஓர் பெரு மூச்சுடன் உடையை எடுத்து அணிய ஆரம்பித்து விட்டாள்.
இங்கு இப்படி இருக்க, பவ்யாவோ விபீஷனை பேசி பேசியே ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.
“இப்போ என்னடி பண்ணனும்?” என்றான் நிதானமாக…
“முதல்ல புடவை ப்ளீட்டை சரி பண்ணி விடுங்க மாமா அதுக்கு பிறகு பேசிக்கலாம்” என்றவள் அவனை கேள்வியாக நோக்க, ஷர்ட்டை முட்டி வரை மடித்து விட்டவன் முகமோ சாதாரணமாக இருக்க, அவனோ சர்வ சாதாரணமாக குனிந்து அவளின் புடவையின் மடிப்பை சரிசெய்து விட ஆரம்பித்து விட்டான்.
அவளுக்கு தான் தெரியுமே அவன் அப்படியெல்லாம் நினைக்க மாட்டான் என்று, சீண்ட நினைத்து விட்டாள் போலும்,
“உன் காலை தொட்டு மெட்டி போட்டதா ஞாபகம்” என்றபடி எழுந்தவன் “ வாட் நெக்ஸ்ட்?” என்றான்.
‘ஆடு தானா வந்து சிக்கிடுச்சி சொல்லிடு பவ்யா’ என தனக்குள் சொல்லிக் கொண்டாவளோ “அப்போ நான் சொல்றதை பண்ணுவீங்களா?” என்றாள் பீடிகையாக,
“உனக்காக உயிரை கொடுக்க கூட யோசிக்க மாட்டேன்” என்றவன் காதலில் விழி விரித்தவள் “கோயில் போக ரெடியாகிட்டு என்ன பேச்சு இது?” என முறைத்தவள் அவனை சற்றே நெருங்கி ஷர்ட்டின் பட்டனை திருக, அவனுக்கோ அவளின் அருகாமையில் சித்தம் திணறியது.
“என்னடி என்னை பக்கத்துல வர வேணாம்னு சொல்லிட்டு டெம்ப்ட் பண்ணிட்டு இருக்க?” என்றான் மோகமாக,
“அச்சோ எப்ப பாரு அதே நினைப்பு தான். என்றவள் அதுஊஊ…” என இழுவையாக சொல்ல, “குயிக்கா சொல்லுடி இல்லனா செகண்ட் மார்னிங் ஆக்கிடுவேன்” என்று சொல்ல,
இதழ்களை சுழித்து முறைத்தவள் “பெரிய விஷயம்லாம் இல்ல. நீங்க ஶ்ரீநவி கூட பேச கூடாது தட்ஸ் ஆல்” என்று சொல்லி விட்டு அவன் முகத்தை பார்க்க, “ ரீசன்?” என்றவன் குரலில் என்னவோ மென்மையாக தான் இருந்தது.
ஆனால், அவளுக்கு தான் உள்ளே நடுக்கமாக இருந்தது.
எங்கே மீண்டும் பேசாமல் விட்டு விடுவானோ என்று, அதற்காக மனதின் உள்ளே குறுகுறுத்துக் கொண்டிருந்ததை அவளால் கேட்காமல் இருக்க முடியுமா என்ன?
“எனக்கு பிடிக்கல” என்றாள் ஒற்றை வரியில்,
“என்னை சந்தேகபடறியா?” என்றவனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தவள் “ என்னை பார்த்தா அப்படியா தெரியுது” என்றவளை விடாது “ அப்போ ஏன் பேச கூடாது?” என்றான் கேள்வியாக,
அவனின் கேள்வியில் எரிச்சலடைந்தவள் “சாருக்கு அவங்க கூட பேசணும்னு ஆசை போல சோ அதான் கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க. எனக்கு தான் பிடிக்கதுன்னு சொல்றேன்ல அப்புறம் என்ன கேள்வி?” என்றாளே பார்க்கலாம்.
அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன் அப்போதும் கூட பொறுமையாக அவளை பார்த்தவன் “என்மேல அவ்ளோ பொசசிவ்வா என்ன? என்றான் மெலிதாக புன்னகைத்த படி,
“பேச்சை மாத்த ட்ரை பண்ண வேணாம்”
“ஓகே நான் அவ கூட பேசல பட்” என்று சொல்ல வந்தவனை “ என்ன பட்?” என்றாள் வெடுக்கென்று,
அவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்து இறுக அணைத்துக் கொண்டவனோ “அங்க்ரி பெர்ட்” என்று சொல்ல,
“பட் என்ன?” என்றாள் விடாது.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்த படி “நானா பேச மாட்டேன் ஓகேவா?” என்க,
“ஓகே…” என ஒரு யோசனையுடன் சொன்னவள் பின் ஏதோ புரிவது போலிருக்க, பல்லைக் கடித்தவள் “அப்போ அவ பேசுனா?” என்று கேட்கும் போதே அவனின் அலைபேசி ஒலிக்க, “வெயிட் அ செக்” என்று சொன்னவனோ அலைபேசியை எடுத்து பார்த்தான்.
எடுத்தது என்னவோ அவனின் நண்பன் தான்.
ஒரு பெரு மூச்சுடன் அழைப்பை துண்டித்தவன் நிமிர்ந்து “என்ன கேட்ட?” என்றான் குறும்பாக,
சட்டென அவனின் அணைப்பிலிருந்து திமிறி விலகியவள் “நத்திங், நீங்க பேச கூடாது அவ்ளோ தான்” என்றவளோ கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்று விட, இதழ் குவித்து ஊதிக் கொண்டே கேசத்தை கோதிய படி அவளைப் பின் தொடர்ந்து அறையை விட்டு வெளியேறியிருந்தான் விபீஷன்.
***************************
இங்கோ, தனது கரத்திலிருந்த அவளது ரிப்போர்ட்டை வெறித்து பார்த்த படி நின்றிருந்தாள் ஆஹித்யா.
அவளையே கூர்ந்து கவனித்த படி நின்றிருந்த ஜெய் ஆனந்த்தோ அவளின் உணர்வுகளை சரியாக கணித்தவனாய் “என்ன நெகடிவ்ன்னு ரிசல்ட் இருக்கா?” என்றான் சர்வ சாதாரணமாக,
எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே அவனை ஏறிட்டு பார்த்தவள் “பட் நான் வெர்ஜின் தானே” என்றாள் புரியாமல், “நீ டெஸ்ட் பண்ணதுக்கான உண்மையான ரீசன் ஐ டோண்ட் க்னோ” என அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொன்னவன் “உன்மேல இல்லாத நம்பிக்கை தான் ஜஸ்ட் சயின்ஸ் மேல வந்துச்சா?” என்ற அவனின் கேள்வியில் அவளுக்கோ கண்கள் கலங்கி விட, அவனோ கொஞ்சம் கூட அசராமல் மேலும் தொடர்ந்து “நான் சொல்லலனா அப்போவே அந்த ரிப்போர்ட்டை ஓபன் பண்ணி பார்த்திருப்ப அண்ட் நெக்ஸ்ட் என்னை மேரேஜ் பண்ணியிருக்க மாட்டல?” என்று சொன்னவன் குரல் கடினமாக ஒலிக்க, அவளுக்கோ உடல் தூக்கி வாரி போட்டது.
ஆம், அவன் சொல்வது உண்மை தானே! இதை நம்பி அவளது காதலை அல்லவா தொலைத்திருப்பாள்.
எதை சொல்வது ? அவனது கேள்விகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாக சென்று நேரே அவளது இதயத்தை தாக்கியதை போலிருந்தது.
கனவு கண்டேன். அதில் என் கற்பை இழந்து விட்டேன். இப்போது நான் கற்புடையவளா? என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வந்தேன் என்றா சொல்ல முடியும்? அவசரப்பட்டு தான் செய்த மடத்தனத்தை நினைத்து நொந்து கொண்டவளோ “சாரி மாமா, நான்…” என்று ஏதோ சொல்ல வந்தவளை “வில் யூ பிளீஸ் ஷட்அப் என உச்சகட்ட ஆத்திரத்தில் சீறியவனோ யூ க்னோ? கான்சிஸ்டன்சிலி ஸ்போர்ட்ஸ், சைக்கிலிங் பண்ற பொண்ணுங்களுக்கு கூட ஹைமன் பிரேக் ஆகி இருக்க சான்ஸ் இருக்கும் அதுக்காக இப்படி தான் எல்லாரும் ப்ரூஃப் பண்ணிட்டு இருக்கணுமா?” என்று கேட்டவன் கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்பின.
அன்றே அவள் மீது கட்டுக்கடங்காமல் பெருகிய ஆத்திரத்தை கட்டுப் படுத்தி கொண்டிருந்தவனுக்கோ, இப்போது கண்மண் தெரியாத ஆத்திரம் அவனையும் மீறி வெடித்திருந்தது.
அவளிடம் இதனை பற்றி ,மென்மையாக பேச வேண்டுமென்று தான் நினைத்திருந்தான் ஆனால் விதி யாரை விட்டது?
என்னவோ அவள் கன்னித்தன்மையை பரிசோதிக்க வந்ததை அவனால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவளின் நடுங்கிய குரலில் தன்னை நொடிப்பொழுதில் மீட்டுக் கொண்டவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை ஒரு பெரு மூச்சுடன் பார்த்தான்.
அவளோ, ஒருவித இயலாமையுடன் அவனை தவிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, நொடிப்பொழுதில் மென்மையாக புன்னகைத்த படி அவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்து அணைத்திருந்தான்.
அவளின் தவிப்பு அவனைக் கொள்ளாமல் கொன்றது.
அவனின் இறுகிய அணைப்பே அவளை உடைய வைக்க போதுமானதாக இருக்க “சாரி மாமா…சாரி” என்று கலங்யவாறு கூற, அதில் உடல் இறுகினாலும் இதழ் கடித்து தன்னை மீட்டுக் கொண்டவனோ
“ரொம்ப திட்டிட்டேனா?” என்றவனிடம் “ரொம்ப ரொம்ப” என்றால் மூக்கை உறிஞ்சிய படி,
“சாரிடி”
“நான் தான் தப்பு பண்ணிட்டேன் சாரி மாமா” என்றவளிடம் “இப்படியே என்னன்னவோ பீல் பண்ண வைக்கிறடி. ஐம் டெம்ப்டிங்” என்றவன் திடீர் பேச்சில் சட்டென கலக்கம் மறைந்து பதறி விலகியவள் “ மாமா பிளீஸ் இப்படி பேசாதீங்களேன்” என்று சிணுங்கிக் கொண்டே அவன் பிடியிலிருந்து விலகியவள் விட்டால் போதுமென கதவைத் திறந்து கொண்டு வெளியில் ஓடியிருந்தாள்.
போகும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் நினைத்ததை அவன் மாத்திரமே அறிந்திருந்தால் என்னவோ அவன் உடல் சட்டென இறுகி விறைத்து போனது.