நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(16)

4.7
(3)

வெற்றிமாறன் மெல்ல கண்விழித்து எழுந்தவன் சென்று குளித்து முடித்து வந்தவன் அம்மா என்றிட அவன் பக்கம் திரும்பவே இல்லை தெய்வானை. அவர் வேல்விழியிடம் பேசிக் கொண்டே அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். ஐயோ அத்தை போதும் என்றவளிடம் என்ன போதும் ஒழுங்கா சாப்பிடு உன்னையை இந்த வீட்டுக்கு நான் இருக்கேன்கிற நம்பிக்கையில் தான் உன் அம்மா அனுப்பி வச்சுருக்காங்க என்றவர் அவளுக்கு உணவை ஊட்டி விட்டார்.

அத்தை இந்தாங்க என்றவளிடம் என்னடி இது என்றார் தெய்வானை. இல்லை உங்க பையன் நீங்க கொடுத்திங்கனு நிச்சயம் முடிந்த மறுநாள் எனக்கு கொடுத்தார். இந்த செயின் உங்களோட மருமகளுக்குத் தானே சேரனும். இதை நீங்களே கயலுக்கு போட்டு விடுங்க அத்தை என்றாள் வேல்விழி. இதை அவன் உன் கழுத்தில் போட்டு விட்டானா என்றார் தெய்வானை. இல்லை அத்தை அன்னைக்கு கோவிலுக்கு எங்க கூட மாமாவும் வந்திருந்தாரே அப்பறம் எப்படி உங்க பையன் தான் பயந்தவராச்சே அதனால் கையில் தான் கொடுத்தார் என்றாள் வேல்விழி.  சரி என் கூட வா என்றவர் அவளை பூஜை அறைக்கு அழைத்து வந்தவர் ரத்னவேலுவை அழைத்தார்.

என்னங்க அண்ணி என்று வந்தவனிடம் இந்த செயினை உங்க மனைவி கழுத்தில் போட்டு விடுங்க தம்பி என்றார் தெய்வானை. அண்ணி என்றவனிடம் இது என் மருமகளுக்கு என்னோட சீதனம். இந்த வீட்டில் ஓரகத்தியா இருந்தாலும் அவள் என் அண்ணனோட மகள் அப்போ அவள் என்னோட மருமகள் தானே என்றார் தெய்வானை.

வேலு அதான் உன் அண்ணி சொல்லுதே என் சின்ன மருமகள் கழுத்தில் அந்த செயினை போட்டு விடுய்யா என்றார் துரைப்பாண்டியன். அவனும் தன் தந்தை பேச்சைக் கேட்டவனாக வேல்விழியின் கழுத்தில் அந்த செயினை அணிவித்தான்.

வெற்றிமாறனின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. எப்படி வேல்விழி உன்னால என்னை உடனே மறக்க முடிஞ்சது. ஒரே நாளில் நீ என் சித்தப்பாவுக்கு மனைவியாவே வாழ ஆரம்பிச்சுட்டியா என்று நினைத்தவனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டவன் அம்மா என்று தெய்வானையின் அருகில் வர ரேணுகா என்று கத்தினார் தெய்வானை. என்னம்மா ஏன் கத்துற விஷ்ணுவுக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்கேன் என்றாள் ரேணுகா. நல்லா கேட்டுக்கோ என்னோட மகன் நேற்று காலையிலே செத்துப் போயிட்டான். கண்டவனும் என்னை அம்மாஅம்மானு கூப்பிட்டால் செருப்பு பிஞ்சுரும் சொல்லி வை என்றவர் கோபமாக தன்னறைக்குச் சென்றார்.

அண்ணா கொஞ்ச நாளைக்கு அம்மாவை தொல்லை பண்ணாதே ப்ளீஸ் என்ற ரேணுகா தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டிட ஆரம்பித்தாள். வெற்றிமாறன் நொந்து போனான்.

மாமா என்றவளிடம் என்ன என்றான் ரத்னவேல். நான் என் அப்பாவை பார்க்கனும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறிங்களா என்றிட சரி வா கிளம்பு என்றான். அவளும் அவனுடன் கிளம்பி ஹாலுக்கு வர சின்னமாமா என்றாள் கயல்விழி.

சொல்லு கயலு என்றிட என் கூட டவுனுக்கு வர முடியுமா என்றவளிடம் அவன் பதில் கூற வரும் முன் என் புருசன் கூட நான் வெளியில் போகனும் கயல் நீ வேண்டும் என்றால் உன் புருசன் கூட போயேன் என்றாள். அவரு என்னோட மாமா எனக்கு என் மாமா கூட வெளியில் போக  நீ் யாரு பர்மிசன் கொடுக்க என்றாள் கயல்விழி. உன் மாமா கையால தாலி கட்டிகிட்ட பொண்டாட்டி என்றவள் மாமா வாங்க போகலாம் என்று கணவனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

ஏன் வேல்விழி இப்படி பண்ணுற என்றவனை முறைத்தவள் என்ன  இப்படி பண்ணுறாங்க என்றாள். நேற்று அவங்க பண்ணுனதை விடவா நான் பண்ணிட்டேன். சொல்லுங்க மாமா ஒரு பொண்ணு மணமேடையில் தாலி கட்டப் போறவனுக்காக காத்துட்டு இருக்கும் போது அவளோட தங்கச்சி அக்காவை கல்யாணம் பண்ணிக்க இருந்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி இழுத்துட்டு வந்து நின்னா அது எவ்வளவு பெரிய வலி தெரியுமா என்று அவள் அழுதிட வேல்விழி ப்ளீஸ் அழாதே என்றான்.

என்னால முடியலை சத்தியமா அவங்களை பார்க்கும் பொழுது எல்லாம் என் அப்பா நெஞ்சைப் பிடிச்சுட்டு விழுந்தது தான் என் ஞாபகத்திற்கு வருது அது மட்டும் இல்லை நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாமல் அழுதுட்டு நிற்கனும்னு தானே அவங்க ஆசைப் பட்டாங்க. கிடைச்ச வாழ்க்கையை ஆசைப்பட்டு நான் சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கேன்னு அவங்க கிட்ட காட்டினால் என் சந்தோசத்தைப் பார்த்து நொந்தே சாவட்டும் என்றாள்.

சரி வேலு கண்ணைத் துடைச்சுக்கோ ஹாஸ்பிடல் வந்துருச்சு என்றவன் அவளுடன் மருத்துவமனைக்குச் சென்றான்.

அம்மா என்று தன் அன்னையிடம் ஓடியவள் அம்மா அப்பா எப்படி இருக்காங்க என்றவளிடம் அப்பா கண் முழுச்சுட்டாரு அம்மு என்றவர் வா அப்பாவை பார்த்துட்டு வரலாம் என்று மகளை அழைத்துச் சென்றார்.

அப்பா என்ற வேல்விழியைக் கண்டதும் கண்ணீர் வடித்த ராஜசேகரன் ஏதோ சொல்ல வர அவரது கண்களைத் துடைத்தவள் அப்பா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்  நீங்க என் வாழ்க்கையை நினைச்சு கவலைப் படக்கூடாது. மாமா ரொம்ப நல்லவர் என்னை பத்திரமா பாத்துக்குவாரு அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டது என்னோட அதிர்ஷ்டம் என்றாள். ராஜசேகரன் ஏதோ கூற வர ஒன்றும் இல்லைப்பா இந்தக் கல்யாணம் எப்படி நடந்தாலும் சரி இப்போ உங்க பொண்ணு சந்தோசமா இருக்கேன் அதனால என் அப்பாவும் சந்தோசமா இருக்கனும் என்றவள் அவரது கையை தன் கைக்குள் வைத்து சீக்கிரம் எந்திருச்சு வந்துருங்கப்பா நீங்கள் நம்ம வீட்டிற்கு வந்த பிறகு தான் நான் மறுவீட்டு அழைப்புக்கு நம்ம வீட்டுக்கு வருவேன் என்றாள் வேல்விழி.

அந்த நேரம் அங்கு வந்த செவிலியர் அனைவரையும் வெளியே செல்லச் சொல்லவும் வெளியே வந்தனர். வேலு அப்பாகிட்ட சொன்னதெல்லாம் என்ற ராஜேஸ்வரியிடம் உண்மை தான் அம்மா. மாமாவை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்னோட கல்யாணம் மாமா கூட நடந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் என்றவள் தன் சித்தப்பாவின் அருகில் சென்றாள்.

விஜயசேகரனின் அருகில் சென்றவள் என் மேல கோபமா சித்தப்பா என்றவளிடம் இல்லைடா அம்மு உன் மேல நான் எப்படிமா கோபம் படுவேன் என்றவரிடம் அப்பறம் ஏன் என்னைப் பார்த்துட்டு பார்க்காத மாதிரி நிற்கிறிங்க என்றாள் வேல்விழி. இல்லைம்மா என்னால முடியலடா என் பொண்ணு உனக்கு பண்ணுன துரோகத்தை ஜீரணிக்க முடியலை என்றவரிடம் அவள் எனக்கு நல்லது தான் பண்ணி இருக்காள் சித்தப்பா என்றாள் வேல்விழி. என்னம்மா சொல்லுற என்றவரிடம் அவள் மட்டும் வெற்றி அத்தானை கல்யாணம் பண்ணிக்கவில்லை என்றால் எனக்கு எப்படி ரத்னவேல் மாமா கூட கல்யாணம் நடந்திருக்கும் சொல்லுங்க எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க கயல் தான் காரணம் அவளை நான் மன்னிச்சுட்டேன். நீங்களும் மன்னிச்சுருங்க சித்தப்பா.

குழந்தைகள் தப்பு பண்ணுறது இயல்பு தானே அவங்களை பெத்தவங்களே மன்னிக்கவில்லை என்றால் எப்படி அதனால் அவளை மன்னிச்சுருங்க சித்தப்பா என்றாள். உனக்கு ரொம்ப பெரிய மனசு அம்மு ஆனால் உன் சித்தப்பாவுக்கு அவ்வளவு பெரிய மனசு இல்லை . அவள் பண்ணினது துரோகம் அதை என்னால அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க முடியாது. நீ சந்தோசமா வாழனும் அது மட்டும் தான் என்னோட ஆசை என்றவர் ரத்னவேலுவின் கையைப் பிடித்துக் கொண்டு எங்க வீட்டோட சந்தோசமே என் பொண்ணு வேல்விழி தான் அவளை பத்திரமா பார்த்துக்கோ மாப்பிள்ளை உன் வீட்டு ஆளுங்க எப்படினு நான் சொல்லி தான் உனக்கு தெரியனும்னு இல்லை அதனால தான் சொல்கிறேன் அவளை தொலைச்சுறாதே என்றார். ஐயோ அத்தான் நீங்க கவலைப் படாதிங்க வேல்விழியை பத்திரமா பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்றான் ரத்னவேல்.

கோவிலுக்குச் சென்று விட்டு மருத்துவமனைக்கு வந்தார் வடிவுடைநாயகி அப்பத்தா என்று ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்டாள் வேல்விழி. வேலு சொல்லுத்தா எப்படி இருக்க என்றவரிடம் நல்லா இருக்கேன் அப்பத்தா என்றாள் வேல்விழி. நீ நல்லா இருப்பத்தா உன் வாழ்க்கை சந்தோசமா அமையும் இப்போ தான் உங்க இரண்டுபேரு ஜாதகத்தையும் சோசியர்கிட்ட கொடுத்து பார்த்துட்டு வரேன். நீங்க ரெண்டு பேரும் அமோகமாக வாழ்விங்கனு சொன்னாரு என்ற வடிவுடைநாயகி பேத்தியின் நெற்றியில் முத்தமிட்டார்.

சாப்பிட்டிங்களா அப்பத்தா என்றவளிடம் சாப்பிட்டேன் தங்கம் என்றவர் ரத்னவேலின் கையைப் பிடித்து என் உயிரே என் பேத்தி வேல்விழி தான். அவளை மட்டும் பத்திரமா பார்த்துக்கய்யா என்றிட அத்தை அவளை நான் பத்திரமா பார்த்துக்கிறேன் என்றான் ரத்னவேல்.

அவனை தனியாக அழைத்துச் சென்ற வடிவுடைநாயகி என் பேத்திக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்குவியா மருமகனே என்றவரிடம் கண்டிப்பா அத்தை என்றான். மூத்தவளையும் பத்திரமா பார்த்துப்பனு தான் உனக்கு கட்டி வச்சேன் அவளோட தலையெழுத்து அப்படித் தான் போகனும்னு எழுதி இருந்திருக்கு என்றவர் கண் கழங்கிட என்னைக்கோ விட்டுட்டுப் போனவளை நினைச்சுகிட்டு உன்னை நம்பி வந்தவளை தொலைச்சுராதேய்யா என்றார் வடிவுடைநாயகி.

என்னோட தேன்மொழியை எப்படி அத்தை மறப்பேன் என்றவனிடம் நான் என்னைக்குமே உன்னை உன்னோட தேன்மொழியை மறக்க சொல்லவில்லை ஆனால் வேல்விழியை எப்பவும் மறக்காமல் நீ இருக்கனும்னு தான் சொல்லுறேன். சோசியர் சொன்னது எதுவும் சரியாப் படலை. இப்போதைக்கு வேல்விழிக்கும், உனக்கும் அவ்வளவு நல்லா இல்லை. எத்தனை பிரச்சனை வந்தாலும் என் பேத்தியை உன்னோட கைக்குள்ள இறுக்கிப் பிடிச்சுப்பேன்னு சத்தியம் பண்ணிக் கொடு ரத்னவேலு என்றார் வடிவுடைநாயகி.

சத்தியம் அத்தை உங்க பேத்தி வேல்விழி கையை எப்பவும் விடமாட்டேன். அவளை என்னை விட்டு பிரிக்கனும்னா அது என் மரணமா மட்டும் தான் இருக்கும் என்றான்  ரத்னவேல். இந்த வார்த்தை போதும் சாமி எனக்கு இது போதும் என்ற வடிவுடைநாயகி கொஞ்சம் கவனமா இருப்பா சின்னக் கவனக்குறைவால தான் நாம எத்தனையோ அழகான விசயங்களைத் தொலைச்சுட்டு இருக்கோம் என்றவரிடம் இந்த முறை சின்னதா கூட என் கவனம் சிதறாது அத்தை என்றான் ரத்னவேல்.

உனக்கு உண்மையாவே என் கூட வாழ சந்தோசமா வேல்விழி என்றான் ரத்னவேல். சந்தோசமானு கேட்டால் எப்படி சொல்லுவேன். நீங்க என் அக்காவோட கணவர் , எனக்கும் உங்களுக்கும் வயசு வித்தியாசம் அதிகம், நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியுமானு தெரியலை, என்றவள் நான் சொன்னது போல தான் நம்ம அறைக்குள்ள நீங்கள் யாரோ, நான் யாரோ அந்த அறையை விட்டு வந்தால் நாம இரண்டு பேரும் ஆதர்ச தம்பதிகள் என்றாள்.

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!