பக்குனு இருக்குது பாக்காத-4

4.9
(12)

அத்தியாயம்-4
“நலங்கு மாவு சோப்.. எந்த வித கெமிக்கல் இன்கிரிடியன்டும் இல்லாம உங்களோட நலன் கருதி தயாரிக்கப்பட்ட சோப்.. அப்டியே பேபிஸ் மாதிரியான சாஃப்ட் ஸ்கின்ன தரக்கூடியது இந்த சோப்.. நுரைகள் அதிகமாகவும் அதே நேரத்துல நில் கெமிக்கல் ரியாக்ஷனும் இல்லாம தயாரிக்கப்பட்டது.. உங்களோட அழகான ஸ்கின்ஸ மேலும் மெருக்கூட்ட கூடியது.. இத போட்டா உங்க மனைவியோ, கணவனோ உங்கள விட்டு அங்க இங்க நகரமாட்டாங்க.. எப்போதும் உங்க நெருக்கத்திலையே இருப்பாங்க..”என்று பின்னால் குரல் கேட்க.. முன்னால் நின்றவாறே ஒரு அழகிய பெண்ணொருத்தி தன் அருகில் நிற்பவன் மீது உரசிக்கொண்டிருக்க.. அந்த உரசலை ரசித்தவாறே நின்றவனோ இதுதான் சான்ஸ் என்றது போல அவளின் இடையை வருடிக்கொண்டிருந்தான்.
“சூப்பர்.. சூப்பர்..”என்ற டேரக்டரின் குரல் கேட்க.. அனைவரும் அதில் இழித்தவாறே நகர்ந்தனர்..
“சூப்பரா ஆக்ட் பண்றீங்க தேஜூ.. யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்…”என்ற அந்த ஆண் மாடலோ அவளை தன் வலையில் விழ வைக்க வழிந்துக்கொண்டிருக்க..
அவளுக்கோ மமதை தலைக்கேறியது.. முகம் வஞ்சப்புகழ்ச்சியில் மகிழ்ச்சி விரவிக்கிடக்க.. “தேங்க்யூ டியூட்..”என்றாள் அவள்..
“மயூரன்னே கூப்டலாமே..”என்றான் அனைத்து பல்லையும் காட்டியவாறே
அதில் வேகமாக தலையாட்டியவளோ.. “ஓகே மயூரன்..”என்று கீச் கீச் குரலில் கூப்பிட
“ஓஓஓ வாவ்.. உங்க வாய்ஸ்ல என் பேரே எனக்கு அழகா தெரிதுங்க தேஜூ..”என்றான் அவன்
“ஓஓஓ ரியலி..”என்றவளோ “தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்..”என்றாள் இழித்தவாறே
அதில் புன்னகைத்தவனோ.. “எனக்கு காம்ப்ளிமென்டா எதும் இல்லையா..”என்றவாறே அவளை அனுவனுவாக ரசிக்க.. எத்தனை பேரை கடந்து வந்திருப்பாள் அவளுக்கு தெரியாதா அவன் பார்வையின் அர்த்தம்..
“ம்ம் என்ன வேணும்னு கேளுங்க மயூரன் நா என்னனாலும் தர ரெடி..”என்றாள் இரட்டை அர்த்தத்தில்..
பின்னே அப்படிதான் பேசுவாள் மயூரன் இப்போதைக்கு ஆட் ஷூட்டில் நடிக்க வந்திருப்பது பொழுது போக்காக தான்.. அவனின் செல்வ நிலையே வேறு.. உள்நாட்டு மந்திரியின் சின்ன வீட்டம்மாவின் மகன் ஆயிற்றே.. அதும் மயூரனின் மீது அவனின் மந்திரி தந்தைக்கு அவ்வளவு பாசமாம்.. அதனால் தான் அடுத்ததாக அவனை வைத்து நான்கு படம் ஷூட் பண்ண ஒத்துக்கொண்டார் அவனின் தந்தை..
அப்படிப்பட்டவனை தன் வலைக்குள் விழ வைத்தால் காலம் பூராவும் சினிமாவை விட்டு அவள் நகரவே வேண்டாம் என்ற எண்ணம் தான்.
அவள் சொன்னதை கேட்டவனோ.. “ஆகா பட்சி விழுந்துடுச்சி..”என்று நினைத்தவாறே.. “நான் கேட்டது எல்லாமே கிடைக்குமா..”என்று இரட்டை அர்த்தத்தில் கண் சிமிட்டி கேட்க..
“யா வித் ப்ளஷர்..”என்றாள் அவன் கை மீது கை வைத்தவாறே.. அதில் மயங்கி போனான் மயூரன்.. ஆளை கொள்ளும் அழகி தான் அவள் மெலுகு பொம்மை உருவம்.. நல்ல கொலுக் கொலுக்கென்று இருப்பவள்.. இளம் சிட்டு.. அவள் நிறமே சுண்டி இழுக்கும் அதில் பாதி மேக்கப் அது வேறு விசயம்.
“அப்போ நாம ஷூட் முடிஞ்சதும்..”என்று அவன் இழுக்க.. அவள் குலுக்கி சிரித்தாள்.. அவள் ஏதோ கூற வர..
அப்போது “வாட் தெ ஹெல் இஸ் கோயிங் ஆன்..”என்ற கம்பீர குரல் கேட்க.. அந்த ஆட் ஸ்டூடியோவில் இருந்த மொத்த நபர்களும் அந்த கர்ஜனையில் அதிர்ந்து போனார்கள்.
மயூரன் சத்தம் வந்த திசையில் மிரண்ட பார்வை பார்க்க.. அங்கோ வீறுக்கொண்ட சிங்கமாக நின்றிருந்தான் அவிரன் எழிலன்பன். அந்த எ.எ அட்வர்டைசிங் கம்பெனியின் உரிமையாளன்.
அவிரன் அங்கிருக்கும் அனைவரையும் தன் கூர்மையான கண்களால் கூறு போட.. அங்கிருந்த அனைவரது கண்களும் அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்துக்கொண்டனர்.
அவிரன் எழிலன்பன் அவனை பற்றி பார்த்தால்.. அலை அலையான கேசத்தை உடையவன் அதனை கொஞ்சம் பங் போல வளர்த்து அதில் சிறிய குடுமி ஒன்றை போட்டிருந்தான். நல்ல அகண்ட நெற்றி அதில் இஷ்டத்திற்கு புரளும் அவனின் கேசம். நல்ல அடர்த்தியான புருவம்.. அதுவும் இரண்டு புருவமும் நடு நெற்றில் சேர்ந்தே இருக்கும்.. அதன் பின் நல்ல கூர்மையான க்ரே நிறக்கண்கள்.. அதுவும் அவன் கண்களை சுருக்கி பார்க்கும் விதமே அனைவரையும் பயத்திற்குள்ளாக்கும். நல்ல மலைமுகடு போன்ற நாசி, வரிவரியான சிவந்த, இறுகிய உதடுகள். அதன் மீது லேசான மீசையை ட்ரிம் செய்து வைத்திருந்தான். தாடையில் சிறிது தாடியை ட்ரிம் செய்திருந்தான். அழகிய இடது கன்னத்தில் ஒற்றை மச்சம். அதுவோ அவ்வளவு அழகாக இருந்தது அவனுக்கு.
அவனது உடல்கட்டை பார்த்தாலே நமக்கு தெரிந்து போனது நன்றாக உடலை வருத்தி அந்த உடற்கட்டை கொண்டு வந்திருப்பான் என்று.. இப்போது கருப்பு நிற சேர்ட்டையும், அதற்கு மேட்சாக கருப்பு நிற பேண்டையும் போட்டுக்கொண்டு ஒற்றை கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு ஒற்றை கையால் தன் தாடையை வருடியவாறே நின்றிருந்தான் அவன்.
“ஐ வான்ட் ஆன்சர் இடியட்ஸ்.. வாட் தெ ஹெல் இஸ் கோயிங் ஆன்..”என்று மறுபடி தன் ஆக்ரோஷமான குரலில் கத்த
அதில் பதறிய அவனின் பிஏவோ.. “சா.. ம்கூம்.. சார் அந்த மம்சிஸ் சோப்க்கான ஆட் ஷூட் நடந்துட்டு இருக்கு சார்..”என்று அவன் திக்கி திணறியவாறே கூற
அவனை கண்கள் சுருக்கி பார்த்தவனோ ஒற்றை கையை அவனை நோக்கி நீட்ட.. அதனை பார்த்த அவனது மேனேஜர் கிஷனோ முதலில் புரியாமல் நின்றவன் அவிரன் முறைப்பதை பார்த்து புரிந்து போனது அவனுக்கு…
“சா சாரி சார்.. இதோ..”என்றவாறே டேரக்டரின் அருகில் ஓடியவன் அவர் கையில் இருந்த பேப்பரை கிட்டதட்ட பிடிங்கிக்கொண்டு ஓடியவன் அவிரனிடம் அதனை நீட்டியவாறே நிற்க..
அவிரனோ அங்கு நிற்கும் அனைவரையும் பார்த்தவாறே அந்த பேப்பரில் தன் கவனத்தை திருப்பினான்.. அதனை தன் லேசர் கண்களால் ஆராய்ந்தவாறே ஒருநிமிடத்திற்கும் குறைவாக நின்றவன் சட்டென்று கையில் இருந்த பேப்பரை பறக்கவிட்டிருந்தான்.
“ஹவ் ரப்பிஸ்..”என்று அவிரன் அந்த அறையே அதிர கத்த.. அதில் அங்கு நிற்கும் அனைவருக்கும் உடல் நடுக்கம் கொண்டது. இப்போது சென்னையில் இருக்கும் முக்கியமான மிகவும் பிரபலமான ஆட் கம்பெனியில் அவிரனின் கம்பெனியும் ஒன்று.. சுமார் மூன்று வருடங்களாக சிறந்த விளம்பர கம்பெனி என்ற விருதை வாங்கிக்கொண்டிருக்கிறது. அதற்காக அதிகமாக உழைத்தவன் அவிரன் தான். அப்படிப்பட்ட நிறுவனத்தில் இப்படி ஒரு மட்டமான ஆட்டிற்கான டயலாக்கை அவன் எப்படி அனுமதிப்பான்.
“வாட் இஸ் திஸ்..”என்று அவன் திரும்பவும் கத்த..
அதில் கிஷனின் உடல் நடுக்கம் கொண்டது. அவிரனை பொறுத்தவரை இந்த பிஸினஸை ரசித்து,ருசித்து நடத்துக்கின்றான்.. அதற்கு ஏதெனும் ஒரு பங்கம் வந்தால் அவன் எப்படி பொருப்பான். இது கிஷனுக்கும் நன்றாக தெரியும்.
“சா.. சார் நான் என்னன்னு பாக்குறேன் சார்..”என்று கிஷன் இழுக்க..
அதில் கையை கட்டிக்கொண்டு அவனை தெனாவட்டாக பார்த்தவன்.. “ஓஓஓ பாக்குறீங்களா.. எப்போ சார் பாப்பீங்க..”என்று நக்கலாக கேட்க
அதில் பயந்தவாறே நின்றிருந்தான் அவன்.. “இங்க பாத்தீங்களா டையலாக்ஸ் சும்மா அல்லுதுல்ல.. ம்ம்.. படிச்சி பாத்தீங்களா.. சரி ஓகே நானே உங்களுக்கு படிச்சி காட்றேன்.”என்றவன் கீழே விழுந்திருந்த அந்த பேப்பரை கை நீட்டி எடுக்க சைகை செய்தவன்.. அது தன் கைக்கு வந்ததும்.. “எந்த வித கெமிக்கலும் கலக்காத சோப்… ம்ம் எந்தவித கெமிக்கலும் கலக்காதது உங்களுக்கு எப்டி டேரக்டர் சார் தெரியும்..”என்று டேரக்டரை மிரட்டிய கூர்மையான பார்வையுடன் கேட்க..
அந்த பார்வையில் டேரக்டர் மயங்காமல் இருந்ததே ஆச்சரியம்.. “உங்கள தான் சார் கேக்குறேன்.. அந்த சோப்ல எந்தவித கெமிக்கலும் இல்லாம இருக்குனு நீங்க எத வச்சி ப்ரூஃப் பண்ணுவீங்க..”என்று நக்கலான குரலில் அவிரன் கேட்க
அதில் டேரக்டரின் கை நடுக்கம் கொண்டது.. “ம்ச் தெரியாதா.. வாட் எ ஃபன்னி.. அப்போ தெரியாமையா இந்த டையலாக்ஸ எல்லாம் எழுதிக்கொடுத்திருக்கீங்க.. ம்ச் வாட் இஸ் திஸ் மிஸ்டர் டேரக்டர் சார்..”அவிரன் கிண்டலாக கூறியவனின் இதழ்களோ கோணல் சிரிப்பை ஒன்று கொடுக்க.. அந்த சிரிப்பு அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரையும் பயம் காட்டியது.
அது வரை கோணலாக சிரித்தவனோ சட்டென்று தன் முகத்தை வேட்டையாடும் சிங்கம் போல சுருக்கியவன்.. “இங்க எதும் காமெடி சோ ஏதும் நடக்குதா.. இல்ல இந்த மாதிரி கன்ரிப்ரூட் எழுத்த பாத்தா எனக்கு அப்டிதான் இருக்கு.. கிட்டதட்ட ஏழு வருஷமா இந்த பிஸினஸ ரன் பண்றேன்.. இந்த கம்பெனிக்காக நான் எவ்ளோ எஃபெக்ட் போட்டுருப்பேன்.. என்னோட திறமையால இந்த கம்பெனி கடந்த மூணு வருஷமா பெஸ்ட் ஆட் கம்பெனின்னு விருது வாங்கிட்டு இருக்கு.. இதை எல்லாம் இந்த ஒத்த காசு புரோஜனம் இல்லாத ஆட்ல மொத்தமா தூக்கி குடுத்துருப்பீங்க நீங்க எல்லாம்..”என்றான் இடியாக கர்ஜனையுடன்
கிஷன் கையை பிசைந்தவாறே தலைகுனிந்து நிற்க.. அவனை முறைத்து பார்த்த அவிரனோ.. “புல் ஷிட் மாறி வேலைய பாக்க வேண்டியது.. இடியட்..”என்று கத்த.. அதில் கிஷனுக்கு கொஞ்சம் அவமானமாகி போனது. கொஞ்சமே கொஞ்சம் தான் ஏனென்றால் எப்போதாவது வாங்கினால் பரவாயில்லை ரோசப்படுவதற்கு.. எப்போதுமே வாங்குபவனிடம் அவ்வளவு ரோசம் இருக்குமா என்ன..
கிஷன் ஆனாலும் பயந்துக்கொண்டே தான் நின்றான்.. இல்லை என்றால் புலி ஓங்கி அடித்துவிடுமே..
“எப்டி.. எப்டி.. இதோட லாஸ்ட் லைன கொஞ்சம் பாறேன்.. இந்த சோப்ப யூஸ் பண்ணுனா உங்க கணவனா இருக்கட்டும், மனைவியா இருக்கட்டும் உங்க பக்கத்துல இருந்து நகரவே மாட்டாங்களா.. புல் ஷிட்..”என்று அந்த பேப்பரை திரும்ப தூக்கி போட்டவனின் இதழ்களோ நக்கலாக சிரித்தவாறே.. “அப்போ இந்த சோப்ப யூஸ் பண்லனா வேற ஆள பாத்துட்டு போய்ட்டே இருப்பாங்களா.. அப்டி என்ன அதிசயமான சோப் இது..”என்று அவன் கத்த
டேரக்டரின் முகமோ விழுந்து போனது.. ஏனென்றால் அந்த சோப் கம்பெனியின் விளம்பரத்தை பிடித்து வந்து கொடுத்ததே அவர் தானே.. அதற்காக தனி கமிஷனை வாங்கிக்கொண்டான் அது வேறு கதை..
“ம்ம் சொல்லுங்க சார்.. இந்த டயலாக்க எழுதுனது நீங்க தானே..”என்றவாறே டேரக்டரின் முன்னால் வந்து நிற்க
அவரோ எச்சில் விழுங்கியவாறே அவனை பயத்துடன் பார்த்து.. “சா.. சார் அது வந்து..”என்று இழுக்க..
அதில் மிரட்டலான பார்வை பார்த்தவன்.. “கெட் அவுட்..”என்று சீற
“சார்..”என்றான் டேரக்டர் பயந்தவாறே
“ஐ சே கெட் அவுட்..”என்று உறுமியவன்.. “என் கம்பெனிக்கு யாராலையாவது இது மாதிரி கெட்ட பேரோ இல்ல லாஸ்ஸோ வர நான் விடமாட்டே.. இந்த ஆட்க்கு நீ எழுதுன டையலாக்னால என் பிஸ்னஸ்க்கு எவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு யோசிக்கமாட்டியா.. இந்த சோப்ல எந்த கெமிக்கலும் இல்லனு நீ எப்டி சொல்ற.. அப்டி இருக்குனு யாராவது ப்ரூஃப் பண்ணிட்டா யாரு அதுக்கான கெட்ட பேர சம்பாறிக்கிறது.. எந்த சோப் கம்பெனி மேல கேஸ் போட்டாலும் அதுக்கு சப்போர்ட் பண்ணுன ஆட் கம்பெனி மேலையும் கேஸ் போடுவாங்கனு உனக்கு தெரியாதா.. நஷ்ட ஈடா பல கோடி கேட்பானுங்க.. கோடில கேட்டா பரவால்ல.. ஆனா என் பிஸ்னஸ்.. அதோட குட்வில்.. அதுக்கு ஏதாவது ஆனா என்ன செய்வ..”என்று கத்த.. அந்த டேரக்டரோ பயத்தில் கால் நடுங்க நின்றான்.
“எனக்கு இந்த கம்பெனிதான் முக்கியம்.. இதுக்கு டேஞ்சரா வர எவனா இருந்தாலும் ஐ வில் கில் தெம்..”என்று ஆக்ரோஷமாக கத்தியவனோ…
“கிஷன் இவன் இனி இந்த ஆபிஸ் பக்கம் கூட வரகூடாது.. தொறத்திவிடு..”என்று கத்தியவன் விறுவிறுவென தன் அறைக்கு சென்றுவிட்டான்.
கிஷனோ அவன் சொன்ன வேலையை முடித்துவிட்டே அவிரனின் அறைக்குள் சென்றான்.

(பார்க்காத..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!