வஞ்சம் 21
நாட்கள் அதுபாட்டுக்கு நீண்டு கொண்டே சென்றன. நாட்கள் நீள ஸ்ரீநிஷாவின் மணி வயிற்றில் இருக்கும் சிசுவும் வளர்ந்து கொண்டே போனது.
இப்போதெல்லாம் அவளுக்கு தனது குழந்தையுடன் பேசுவதற்கே நேரம் போதவில்லை.
ஆம் எப்பொழுதும் குழந்தையுடன் இனிமையான மொழிகள் பேசி சிரித்து மகிழ்வதே அவளுக்கு பெரும் பொழுது போக்காகும்.
இப்போது ஸ்ரீ நிஷாவுக்கு எட்டாவது மாதம்.
ஒரு நாள் இளஞ்செழியன் ஸ்ரீநிஷாவை அழைத்து
“ஏய் இங்க வா..
என்ன தினமும் தூங்குறதும், சாப்பிடுவதும் தான் உனக்கு வேலையா..? என்ன ராமையா வந்ததும் உனக்கு நல்லா துளிர் விட்டு போச்சு என… இனிமே வீட்டு வேலைகளையும் நீ தான் செய்யணும் அவர் பாவம் அவருக்கு ஒன்று, இரண்டு உதவிகள் செய்து கொடு.. டாக்டர் மூன்று மாதம் வரை தானே கவனமாய் இருக்க சொன்னாங்க.. இப்போ..” என்று விரல்களை கைவிட்டு என்ன
“எட்டாவது மாதம்..” என்று ஸ்ரீ நிஷா முணுமுணுத்தாள்.
“ஓஹோ எட்டாவது மாதம் ஸ்டார்ட் ஆயிட்டா..? இன்னும் 3 வீக்சோ 4 வீக்ஸ்ல டெலிவரி டேட் நெருங்கிடும், அதுவரைக்கும் நல்லா சாப்பிட்டு தூங்குற பிளான் தான் போல… போய் ஹால்ல கிளீன் பண்ணு…” என்று அதட்டினான் இளஞ்செழியன்.
அவன் ஸ்ரீநிஷாவை பிடித்து திட்டிக் கொண்டிருப்பதை பார்த்து ராமையாவின் மனதிற்குள் ஆனந்த சாரல் வீசியது.
ஆம், காலையில் ஸ்ரீ நிஷா தாமதமாக எழும்ப ராமையா ஸ்ரீ நிஷாவுக்கு பேசிக் கொண்டிருந்தார்.
“என்னம்மா இவ்வளவு லேட்டா எழும்பினா உடம்புக்கு என்ன ஆகிறது? குழந்தை இனி பிறக்குற நேரம் வந்திருச்சு… எங்க ஊருல புள்ளத்தாச்சு பொண்ணுக எல்லாரும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யணும் என்று சொல்லுவாங்க நீ என்னன்னா புள்ள தங்கினதிலிருந்து ஒரே தூங்குறதும், எழும்புவதும் சாப்பிடுவதுமா இருக்கிறியேமா… சுகப்பிரசவம் நடக்கணும்னா..
குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யணும் இப்படியே இருந்தா.. ஆபரேஷன் பண்ணிதான் பிள்ளைய எடுப்பாங்க அது உனக்கு கூடாதுமா சொன்னா கேளு..” என்று ராமையா பரிவாகக் கூறியதும் மெத்தையில் இருந்து எழுந்த ஸ்ரீ நிஷா கண்களை கசக்கி கொண்டு,
“ராமையா எனக்கு உடம்புக்கு ரொம்ப முடியல ஒரே தூக்கம் தூக்கமா வருது… நாளையிலிருந்து நேரத்துக்கு எழுந்திருவேனாம் சரியா என்னோட அச்சா ராமையல்லோ…”
“இப்படியே எத்தனை நாளா தான் சொல்லிக்கிட்டு இருக்கம்மா.. மாசம் தான் போகுது மூன்றாவது மாசம் முடிஞ்சதிலிருந்து இப்படி தான் நீ சொல்றம்மா..” என்றதும் அசடு வழிந்து சிரித்தாள்.
ஏனோ அவளது புன்னகையை பார்த்த பின்பு அவருக்கு பேசவே தோன்றவில்லை அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இளஞ்செழியன் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தான் இவ்வாறு ஶ்ரீனிஷாவை பிடித்து திட்டி வைத்தான் என்பது நன்றாக ராமையாவிற்கு தெரியும்.
இளஞ்செழியன் வேலை செய்ய சொன்னதும் ஸ்ரீ நிஷா பசிக்கிறது என்று உணவை நன்றாக வயிறு நிரம்ப உண்டு விட்டு மறுபடியும் போய் தூங்கி விட்டாள்.
அவளது இந்த சிறு சிறு விளையாட்டுகளைப் பார்த்து சிரிப்புடன் மீண்டும் சென்று இளஞ்செழியன் அவளை தட்டி எழுப்பினான்.
சிறு பிள்ளை போல சிணுங்கிய வண்ணம் எழுந்த ஸ்ரீநிஷா,
“இன்னும் கொஞ்சம் தூங்க விடுங்க ப்ளீஸ் எனக்கு தூக்கம் தூக்கமா வருது…” என்றபடி மீண்டும் மெத்தையில் விழுந்து உறங்கத் தொடங்கினாள்.
“எழும்புறியா இல்லையா..?” என்று அவன் அதட்ட மெதுவாக தனது மணி வயிற்றை ஒரு கையால் பிடித்து மறு கையை அருகில் மெத்தையில் வைத்து எழும்பி நின்றவள் கண்களை சிமிட்டிய படி “என்ன..?” எனக் கேட்டாள்.
“உன்ன நான் என்ன செய்ய சொன்னேன்… நீ இப்ப என்ன செஞ்சுகிட்டு இருக்க..?” என்று முறைத்தான் இளஞ்செழியன்.
“எனக்கு தூக்கம் தூக்கமா வருதே நான் என்ன பண்ண..?”
“உனக்கு என்ன இப்ப தூக்கம் கலையணும் அவ்வளவு தானே..” என்று அவளது கரத்தினை பிடித்து இழுக்க அவள் நிலை தடுமாறி அவன் மேல் சரிய உடனே அவளது இதழ்களில் தனது இதழை முத்திரையாகப் பதித்தான்.
அவளது கீழுதடை கவ்வி சுவைத்துக் கொண்டு அவளது கண்களை பார்க்க அவளது கண்களோ அங்கும் இங்கும் அலைபாய்ந்த வண்ணம் இருந்தன.
ஏனோ இன்று அவள் அந்த இதழ் ஒற்றலுக்கு எந்த வித எதிர்ப்பும் காட்டவில்லை.
அந்த செயலே அவனுக்கு வானத்தில் சிறகடித்து பறப்பது போல அவ்வளவு ஏகாந்தமாக இருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பின் அவளது அருகாமை அவனை ஏதோ செய்ய தக்க சமயம் பார்த்து மெதுவாக கைகளை எடுத்து அவளது மணி வயிற்றில் கரம் பதித்தான்.
கரம் பதித்ததும் உடல் ஒரு தடவை சிலிர்த்து அடங்கியது. தனது இதழை அவளது ஸ்ட்ராபெரி சுவை நிறைந்த இதழ்களில் இருந்து பிரிக்க விருப்பமின்றி பிரித்தெடுத்தவன். தனது கரம் சென்ற இடத்தினை உற்று நோக்கினான்.
அவள் அணிந்திருந்த டி ஷர்ட் உயர்த்தி அம்மணி வயிற்றினை சிறு நடுக்கத்துடன் இரு கரங்களால் மெதுவாகத் தடவிப் பார்த்தான்.
அப்படியே முழந்தாழிட்டு அமர்ந்து சிறிது நேரம் கண்ணிமைக்காமல் வயிற்றில் கரம் வைத்தபடி அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்பு கண்கள் கண்ணீரில் குளம் கட்ட அதனை உள்வாங்கியபடி நிமிர்ந்து ஸ்ரீ நிஷாவைப் பார்த்து,
“பேபிமா உதைக்க மாட்டாங்களா..? என்று சிறு குழந்தை போல ஏக்கத்துடன் வினவினான்.
அதனைப் பார்த்ததும் ஏதோ போல் ஆகியது ஸ்ரீநிஷாவிற்கு அவனது ஒவ்வொரு உணர்ச்சிகளையும் கவனித்தபடி,
“எப்படி நீங்க இது பொண்ணுன்னு சொல்லுவீங்க உள்ளே இருக்கிறது பையன் தான்..” என்று ஆணித்தனமாக கூறினாள்.
“இல்ல உள்ள இருக்கிறது பொண்ணு எனக்கு நல்லா தெரியும்..”
“எப்படி சொல்லுவீங்க..?”
“அது தெரியும் நீ சொல்லு எப்போ உதைப்பாங்க..”
“அவங்களோட சிரிச்சு பேசினா உதைப்பாங்க அப்புறம் சாப்பிடும்போது உதைப்பாங்க நைட்ல தூங்கும்போது என்ன தூங்க விடாம ஒரே உதைப்பாங்க..”
“அப்படியா செம வாலு தான்..” என்றபடி ஸ்ரீநிஷா கண்ணிமைக்கும் நேரத்தில் வயிற்றினில் அன்பாக முத்தமிட்டான்.
அவன் முத்தமிட்ட மறு கணம் வயிற்றில் அசைவு தெரிந்தது. ஒரு சிறு அதிர்வு அவனது உதட்டில் ஏற்பட்டது.
உடனே பேரதிர்ச்சியுடன் ஸ்ரீ நிஷாவை நிமிர்ந்து பார்க்க அவளும் அதே ஆச்சரியத்துடன் ஆம் என தலையாட்டினாள்.
ஆம் அவன் எதனை எதிர்பார்த்து இவ்வளவு நேரம் காத்திருந்தானோ அது ஒரு கணப்பொழுதிலே நடந்து முடிந்தது. அவனுக்கு சந்தோஷம் என்றால் அவ்வளவு சந்தோஷம்.
தனது குழந்தை தனக்கு உதைத்து விட்டது.
ஏதோ பெரிய கின்னஸ் சாதனை படைத்தது போல எழுந்து அவளைப் பார்த்து
“என்னோட பேபி மா எனக்கு உதச்சிட்டாங்க..” என்று கூறினான்.
அவளும் ஆம் என தலையாட்ட படிகளில் இருந்து இறங்கி கீழே ஓடிச் சென்று “ராமையா.. ராமையா..” என்று வீடு முழுவதும் ராமையாவை தேடித்திரிந்தான்.
தோட்டத்தில் இருந்த
ராமையா ஓடிவந்து “என்ன என்ன ஆச்சு தம்பி… ஏதும் பிரச்சனையா..?”
“இல்ல ராமையா என்னோட பேபி மா எனக்கு உதைச்சிட்டாங்க..”
“பேபிமாவா..?” என்று இளைஞன் சொல்வது புரியாமல் தலையை சொரிந்தார்.
“ஆமா ஶ்ரீ யின் வயிற்றுக்குள் இருக்கும் என்னோட பொண்ணு எனக்கு உதைச்சிட்டாங்க..” என்று சொல்லி துள்ளி குதித்து சிரித்து மகிழ்ந்தான்.
அவனது புன்னகையைப் பார்த்து ஏனோ ஸ்ரீ நிஷாவிற்கு புதுவிதமான ஒரு மகிழ்ச்சி மனதில் தொற்றிக் கொண்டது. நீண்ட நாட்களுக்குப் பின் அவள் உண்மையாக புன்னகைத்தாள்.
அன்றைய தினம் இளஞ்செழியன் சந்தோஷத்தில் அங்கும் இங்கும் அலைபாய்ந்து திரிந்தான். இரவு உணவு கூட எடுக்காமல்
“எனக்கு வேணாம் ராமையா எனக்கு மனசும் வயிறும் நிறைந்த மாதிரி இருக்கு நீங்களும் ஸ்ரீயும் சாப்பிட்டு தூங்குங்க..” என்று கூறிவிட்டு உறங்கச் சென்று விட்டான்.