சாஷ்வதனும் கஜனும் வேலை நிமித்தமாக அலுவலகம் சென்று விட வைதேகிக்கோ காயத்ரியோடு பொழுது கழியத் தொடங்கியது.
சற்று நேரத்தில் சமையலுக்குத் தேவையான உதவிகளை தன்னுடைய மாமியாருக்குச் செய்து கொடுத்தவள் தன்னுடைய வீட்டில் இருந்து அழைப்பு வந்ததும் மகிழ்ச்சியோடு அதனை ஏற்று தன் அன்னையோடு பேசத் தொடங்கினாள்.
“அங்கே எல்லாம் ஓகே தானே வைஷு..?”
“ஆமாம்மா.. இங்க எல்லாருமே ரொம்ப ஸ்வீட்டா பழகுறாங்க.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என அவள் கூறியதும்தான் அவளுடைய அன்னை லட்சுமிக்கு நிம்மதியாக இருந்தது.
“நல்லதுடா.. இந்த கல்யாணத்துல உனக்கு பெருசா இஷ்டம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா என்ன நடந்தாலும் அனுசரிச்சு போ கண்ணம்மா.. பெரியவங்கள எதிர்த்து பேசாத புருஷன் சொல்றத கேட்டு நடந்துக்கோ..” என அவர் அறிவுரைகளை அள்ளி வழங்க,
“அம்மா ப்ளீஸ் இதெல்லாம் எனக்கு நிறைய தடவை நீங்க ஆல்ரெடி சொல்லிட்டீங்க…. போதுமே..” என அவள் சலிப்போடு கூற,
“இதெல்லாம் உன்கிட்ட சொல்றது என்னோட கடமைடி… ஒழுங்கா நான் சொன்ன மாதிரி நடந்துக்கோ… இங்க நம்ம வீட்ல கோபத்துல தையத்தக்கான்னு குதிக்கிற மாதிரி அங்கேயும் குதிக்காத… பொறுமையா இருந்து பழகு..”
“சரிமா சரி..” என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
சற்று நேரத்தில் எழுந்து தன்னுடைய அறைக்குள் வந்தவளுக்கோ காலையில் எதற்காக உடல் வலித்தது போல இருந்தது என்ற கேள்வி எழுந்தது.
உடல் நிஜமாகவே வலித்ததா இல்லை வலித்தது போல இருந்ததா..?
குழம்பிப் போனாள் அவள்.
உதடுகள் கூட காந்துவதைப் போல இருந்தனவே.
எதுவும் புரியாமல் தன்னுடைய குழப்பங்களுக்கு தடை போட்டு நிறுத்தியவள் இன்று போல நாளையும் வெகு நேரம் தூங்கி விடக்கூடாது என்ற முடிவை உறுதியாக எடுத்துக் கொண்டாள்.
அதன் பின்னர் சார்ஷ்வதனின் எண்ணங்கள் அவளுக்குள் எழுந்தன.
ஆரம்பத்தில் அவன் மீது இருந்த கோபம் இப்போது அவளுக்கு துளி அளவு கூட இல்லை.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவன் இல்லாத நேரம் அவளுக்கு சலிப்பைக் கொடுத்தன.
எப்போது அவன் வருவான் என அடிக்கடி நேரத்தைப் பார்த்த வண்ணமே காத்திருக்கத் தொடங்கினாள் அவள்.
அவனுடைய காத்திருப்பை பொய்யாக்காமல் முக்கியமான மீட்டிங் ஒன்றை முடித்துவிட்டு இரண்டு மணி நேரத்திலேயே மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தான் சாஷ்வதன்.
அவன் வந்த நேரமோ அவள் படுத்து உறங்கி விட அறைக்குள் வந்தவன் சத்தமின்றி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
பிரஷ் ஆகி அவன் வந்த பின்பும் கூட அவள் துயில் நீங்காது உறங்கிக் கொண்டிருக்க அவளுக்கு அருகே சென்று அமர்ந்தவனின் பார்வையோ அவளுடைய முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளின் மீது விழுந்தன.
மெல்ல தன்னுடைய விரல்களால் அவளுடைய முடிக்கற்றையை விலக்கி விட்டவன் அவளுடைய சிவந்த உதடுகளைப் பார்த்து மையல் கொண்டான்.
பின் அவளுக்காக வாங்கி வந்த தங்க வளையல்களை மெல்ல எடுத்தவன் அவளுடைய மென்மையான கரங்களை மென்மையாகவே பற்றி இரண்டு கரங்களிலும் தங்க வளையல்களை அணிவித்து விட்டு சத்தமின்றி எழுந்து கொண்டான்.
“நிச்சயமா இது உனக்கு சர்ப்ரைஸா இருக்கும் வைதேகி..” என முணுமுணுத்து விட்டு அவளை விட்டு விலக,
அவனுடைய அலைபேசியோ சத்தமாக சிணுங்க பதறிப்போய் எங்கே அவள் எழுந்து விடுவாளோ என வேகமாக அந்த அழைப்பை அவன் துண்டிக்க அந்த சத்தத்தில் விழித்தே விட்டாள் வைதேகி.
“ஹேய் வந்துட்டீங்களா..?” என்றவாறு கரங்களை நீட்டி சோம்பல் முறித்தவாறு படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவள் அப்போதுதான் தன்னுடைய கரங்களில் குலுங்கிய வளையல்களைக் கண்டு விழி விரித்தாள்.
“வாவ்… இது எப்படி என்னோட கைல வந்துச்சு..?” என திகைத்துப் போனவளாய் அவள் கேட்க,
“நகைக் கடை வாசல்ல நின்னு லிப்ட் கொடுக்க முடியுமான்னு கேட்டாங்க.. சோ நான் தான் வாங்கன்னு சொல்லி அத்தனை பேரையும் ஏத்திட்டு வந்து பெட் ரூம் வரைக்கும் விட்டேன்.. அவங்களா ஏறி வந்து உன்னோட கைக்குள்ள நுழைஞ்சுக்கிட்டாங்க..” என அவன் சிரிக்காமல் சொல்ல அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.
“ஹா ஹா.. கூல்… நான்தான்டி போட்டு விட்டேன்… பிடிச்சிருக்கா..?”
“என்ன கிப்ட் எல்லாம் கொடுக்குறீங்க..? என்னை இம்ப்ரஸ் பண்ண பாக்குறீங்களா..?” என அவள் கேட்டாலும் அவளுடைய விழிகள் ஆசையாக அவன் வாங்கிக் கொடுத்த வளையல்களை வருடிக் கொண்டே இருந்தன.
“என்னோட ப்ரண்டுக்கு நான் வாங்கிக் கொடுப்பேன் உனக்கு என்ன வந்திச்சு..?” என அவன் புருவம் உயர்த்திக் கேட்க சட்டென சிரித்தவள்,
“ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.. இந்த கொடி மாதிரி டிசைன் இன்னும் ரொம்ப அழகா இருக்கு.. தேங்க்யூ சோ மச்…” என முத்துப் பற்கள் காட்டி அவள் சிரிக்க தடுமாறிப் போனான் சாஷ்வதன்.
“ஹேய்..”
“ம்ம்..? சொல்லுங்க..”
“இன்னைக்கு ஈவ்னிங் அம்மாவோட ரிலேஷன்ஸ் எல்லாரும் நம்ம வீட்டுக்கு டின்னர் வர்றாங்க. அவங்களால கல்யாணத்துக்கு வர முடியல.. அதனால ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணி ஊர்ல இருந்து நம்மள பாக்குறதுக்காகதான் வர்றாங்க.. அவங்க வரும்போது மட்டும் புடவை கட்டிக்க முடியுமா..?” என கேட்டான் அவன்.
“இதுல என்ன இருக்கு..? தாராளமா கட்டிடலாம்..” என்றாள் அவள்.
“குட் கேர்ள்..” என்றவனின் கரம் அவளுடைய கன்னத்தில் தட்டி விட்டு விலக ஒரு கணம் சிலிர்த்துப் போனவள்,
“ப்ரண்ட்ஸ்ஸா இருந்தாலும் இப்படி எல்லாம் டச் பண்றது தப்பு..” என அவள் கண்டிப்போடு கூற அவனின் புன்னகையோ மேலும் விரிந்தது.
அதன் பின்னர் அவனோடு அவளுக்கு கலகலவென நேரம் போக மதிய உணவை இருவரும் ஒன்றாகவே உண்டு முடித்தனர்.
வைதேகி மாலையில் அழகிய புடவை ஒன்றை எடுத்து உடுத்திக் கொண்டவள் இன்னும் சற்று நேரத்தில் சாஷ்வதனின் உறவினர்கள் வந்துவிடுவார்கள் என்பதை அறிந்து ஏதேனும் உதவி வேண்டுமா என கலாவிடம் கேட்டாள்.
“நம்ம ஆளுங்கள வச்சு எல்லா வேலையும் முடிச்சுட்டேன் அம்மாடி.. நீ பூஜை அறைல விளக்கு மட்டும் ஏத்தி வெச்சிடு…” என்றார் அவர்.
“சரி அத்தை..”
அதே கணம் கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட உறவுகள் வீட்டிற்குள் நுழைய,
“அடடே வாங்க வாங்க..” என பரபரப்போடு அவர்களின் அருகே நெருங்கிச் சென்று உள்ளே வரவேற்றார் சாஷ்வதனின் அன்னை.
அதே கணம் சாஷ்வதனும் கீழே வந்து விட அவனோடு இணைந்து வைதேகி அவர்களை வரும்படி வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமரச் செய்தவள்,
“விளக்கு வச்சிட்டு வந்துர்றேன்..” என கலாவிடம் கூறிவிட்டு பூஜை அறைக்குள் செல்ல,
அப்படியே அவர்களுடைய உரையாடல் நீண்டு கொண்டே போக, “வீல்…” என்ற வைதேகியின் அலறல் வரவேற்பறையில் அமர்ந்து மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்த அனைவரின் காதுகளிலும் மோத ஒருசேர அத்தனை பேரும் பதறிப் போய் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து கொண்டனர்.
“ஐயோ நம்ம வைதேகிதான் கத்துறா.. என்ன ஆச்சுன்னு தெரியலையே..?” என கலா பதறினார்.
அதற்குள் மின்னலெனப் பாய்ந்து அவள் அலறிய சத்தம் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடியிருந்தான் சாஷ்வதன்.
பூஜை அறைக்குள் இருந்துதான் அவள் அலறும் சத்தம் கேட்க வேகமாக பூஜை அறைக்குள் பாய்ந்தவன் புடவையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க அழுதவாறே போராடிக் கொண்டிருந்த தன் மனைவியைக் கண்டு அதிர்ந்து போனான்.
“ஐயோ வைதேகிஇஇஇ…” என அலறியவன் அடுத்த கணமே வேகமாக அவளை நெருங்கி அவளுடைய புடவை முந்தானையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தன்னுடைய கரங்களால் அடித்து அடித்து அணைக்க அச்சத்தில் கதறித் துடித்து விட்டாள் அவள்.
தீயை அவ்வளவு சீக்கிரத்தில் கட்டுப்படுத்த முடியாது போய்விட சட்டென அவளுடைய முந்தானையை உருவி எடுத்தவன் தரையில் போட்டு தன்னுடைய கால்களால் புடவையை மிதிக்க தீயோ கட்டுப்பாட்டுக்குள் வந்து அணைந்து போனது.
தன்னை மறைத்தவாறு விம்மி விம்மி அழுது கொண்டிருந்தவளின் நிலையைப் புரிந்து கொண்டவன் சட்டென வேறு யாரும் உள்ளே வராது அந்த பூஜை அறைக் கதவை உள்ளிருந்தவாறு தாழிட்டுக் கொண்டான்.
“சா.. சாஷு..” என்றவளுக்கு வார்த்தைகள் வராமல் அழுகை பொங்கி வெடிக்க அவளை நெருங்கி இறுக்கமாக அணைத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன்,
“ஹேய்… ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. ஒன்னும் இல்ல… அதான் நான் வந்துட்டேன்ல… இனி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. யூ ஆர் சேஃப்..” என்றவன் அவளுடைய முதுகை வருடி விட்டான்.
அதற்குள் ஹாலில் அமர்ந்திருந்த அனைவரும் பூஜை அறையை நோக்கி ஓடி வந்தவர்கள் என்னானதோ ஏதானதோ எனத் தெரியாது பூட்டி இருந்த அறைக் கதவை வெளியே இருந்து தட்ட பதறிப் போய் அவனைப் பார்த்தாள் வைதேகி.
அவனோ வேகமாக தான் அணிந்திருந்த ஷர்ட்டினை கழற்றி அவளின் பிளவுஸிற்கு மேலாக அணிவித்து விட்டவன் அதன் பின்னரே அந்த பூஜை அறையின் கதவைத் திறந்தான்.
“அம்மாடி என்ன ஆச்சு..?”
“அண்ணி என்ன ஆச்சு..?”
“சிஸ்டர் உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..?” என கலா காயத்ரி கஜன் என மூவரும் முதலில் உள்ளே நுழைய அறையின் வாயிலில் நின்று திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் உறவினர்கள்.
“அவ ஓகேமா.. அவ சாரில தீ பிடிச்சிருச்சு.. நல்ல வேளை சீக்கிரமா அணைச்சிட்டேன்.. நீங்க யாரும் டென்ஷன் ஆகாதீங்க..” என அனைவரையும் சமாதானம் செய்தான் சாஷ்வதன்.
“ஐயோ அண்ணா உங்க கை முழுக்க தீக்காயம்… முதல்ல நீங்க உங்க கைய பாருங்க..” என அலறினாள் காயத்ரி.
அப்போதுதான் குனிந்து தன்னுடைய கரத்தைப் பார்த்தவன் “ஓஹ் ஷிட்…” என முனகியவாறு பூஜை அறையை விட்டு வெளியேற முயற்சிக்க,
“சகுனமே சரி இல்லையே… மருமக வந்த நேரம் சரியில்லையோ..?” என ஒருவர் முணுமுணுக்க அதைக் கேட்ட வைதேகியின் உடலோ இறுகிப்போனது.
Ok
என்ன கெட்ட எண்ணம் இவர்களுக்கு ச்சே 😬😬😬😬💜💜💜💜💜 ஶ்ரீமா 💜💜💜💜💜💜💜💜
Indha madhiri alungalai ellam enna panradhu