13. செந்தமிழின் செங்கனியே!

4.7
(46)

செந்தமிழ் 13

 

“உங்க மேல மேகனா நீங்க அவ கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சிருக்கானு புகார் கொடுத்ததை ஏன் என்கிட்ட சொல்லல?”, என்று அவள் கேட்க, சட்டென எழுந்து நின்று விட்டான் இனியன்!

“உனக்கு… இது…”, என்று அவன் வார்த்தைகள் தடுமாற, “இன்னைக்கு சாயங்காலம் மிஸ்ஸஸ் சுரேஷ் கால் பண்ணிருந்தாங்க… அவங்க தான் சொன்னாங்க… ஏங்க உங்க கிட்ட அவ தப்பா நடந்துகிடத்த சொன்ன நீங்க ஏன் இத என்கிட்ட இருந்து மறச்சிங்க?”, என்று அவள் கேட்கவும், தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்.

“என்னனு சொல்ல சொல்ற? அவ என்னையும் அவளையும் எல்லா அங்கேல்லேயும் கேவலமா போட்டோ எடுத்து வச்சிருக்கா! என்கிட்ட என்ன ப்ரூப் இருக்கு? எல்லாரும் பெண்களுக்கு இந்த மாதிரி ஆண்களால பிரச்சனை வந்த போர் கொடி தூக்குவாங்க… ஆனா எங்க நிலைமை ரொம்ப மோசம்… இப்படி எல்லாம் பெண்களால எங்களுக்கு பிரச்சனை வரும் போது  வெளிய கூட சொல்ல முடியாத பாவ பட்ட ஜென்மங்கள் தான் ஆண்கள்..”, என்று அவன் சொல்லவும், அவனின் தோள்களை பற்றினாள் கனி.

“கண்ணீர், வலிகள், அழுத்தம் பெண்களுக்கு மட்டும் அல்ல! ஆண்களுக்கும் தான் கனி! என்ன நீங்க எல்லாரும் அழறீங்க… ஆனா நம்ப சொசைட்டி இன்னும் ஆண்கல்லாம் அழ கூடாதுனு தான் சொல்ராங்க… இவளோ ஏன் இப்பவும் அதையும் தாண்டி ஒரு ஆண் அழுதா என்ன சொல்றாங்க? “ஏன் பொம்பள மாதிரி அழற?” என்ன வார்த்தைகள் இதெல்லாம்… ஏன் எங்களுக்கு கண்ணீர் வராத? எங்களுக்கும் டியர் க்ளாண்ட்ஸ் இருக்கு தானே அதுல எங்களுக்கும் கண்ணீர் சுரக்கும் தானே… வெங்காயம் வெட்டுனா எல்லாருக்கும் கண்ணீர் வரும் அதே மாதிரி தான் வலி இருந்தா ஆண் பெண் பேதம் எல்லாம் இல்ல”, என்று அவன் சொல்ல, அவளோ, “அப்போ அழுங்க”, என்றவுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“அழுதுருங்க இனியன்”, என்று சொன்னதும் அவளை இறுகி அணைத்து அழுது விட்டான்!

மிகவும் தேவை பட்ட அணைப்பு அது!

ஆத்மார்த்தமான அணைப்பும் கூட! அந்த அணைப்பில் காமம் இல்லை, காதலும் இல்லை, எனக்காக நீ இருக்கிறாய் என்று இனியனின் நம்பிக்கையான அணைப்பு!

அவளோ அவனின் முதுகை தடவி விட்டு சிறிது நேரம் சமாதானம் செய்தவள், பின்பு அவனே பிரிந்து விட்டான்.

” உங்க அலுவலகத்துல இப்போ என்ன சொல்ராங்க?”, என்று அவன் கேட்க, ” இன்னும் இரண்டு நாள்ல ஒரு இன்வெஸ்டிகஷன் வச்சிருக்காங்க! வேலை என்ன ஆகும்னு தெரியல… மேபி ட்ரான்ஸபார் கிடைக்கும் நினைக்கிறன்”, என்று அவன் சொல்லவும், “நீங்க எதுக்கு ட்ரான்ஸபார் ஆகணும்? நான் சொல்றத செய்ங்க”, என்று அவள் யோசனையை சொல்லவும், அவனுக்கு தூக்கி வாரி போட்டது!

“என்ன டி சொல்ற? இதெல்லாம் நான் பண்ணி தான் ஆகணுமா?”, என்றவனின் முகம் அஷ்டகோணலை மாறியது!

“உண்மை ஜெயிக்க என்ன வேணா பண்ணலாம்! சுழிச்சியை சுழிச்சியால் தான் வெல்ல முடியும்… “, என்று அவள் சொல்ல, “அவளுக்கும் நமக்கும் அப்பறோம் என்ன டி வித்தியாசம்?”, என்று அவன் கேட்க, “இப்படி கிருஷ்ணா பரமாத்மா நினைச்சி இருந்தா மஹாபாரத்துல பாண்டவர்கள் ஜெய்ச்சி இருக்கவே முடியாது! சில நேரம் விதிகளை புறம் தள்ளி மதியை வைத்து விளையாடுவது தான் புத்திசாலித்தனம்! ஷத்ரியனா இருக்கறத விட சாணக்யனா இருக்கனும்”, என்று அவள் சொல்லவும், “அடிப்பாவி இவளோ நாள் ஹீரோயின் மாறி இருந்துட்டு.. இப்போ வில்லி மாறி பேசுற?”, என்று ஆச்சர்யமாக கேட்டான் இனியன்.

“எல்லா பெண்களுக்கு உள்ளும் ஹீரோயினும் இருகாங்க வில்லியும் இருகாங்க… அந்த அந்த சந்தர்ப்ப சூழ்நிலை தான் எங்களை மாத்திருது”, என்று சொன்னவளிடம், “கடைசி வரைக்கும் ஹீரோவ தான் காமெடி பீஸ் ஆகிடரிங்க”, என்று அவன் சொல்லவும், “ரொம்ப பீல் பண்றிங்களோ”, என்று அவள் கேட்க, “இல்லையா பின்ன? நாங்க என்ன தான் ரொமான்ஸ் பண்ணாலும்… ஹீரோயின்க்கு ஒரு மாஸ் டயலாக் வந்ததும்.. சிங்கபெண்ணெனு பாட்டு பாடுனா… எரியுமா எரியதா?”, என்று அவன் கேட்க, “சரி சரி நான் சொன்னதை செஞ்சிட்டு வந்து சொல்லுங்க… நாளைக்கு நானும் ஸ்கூல் போகணும் குட் நைட்”, என்று அவள் நகர போக, “ஸ்வீட் தரேன்னு சொன்னியே”, என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்கும் சிறு குழந்தையானான் இனியன்.

“நாளைக்கு நான் சொன்னத செஞ்சிட்டு இரண்டு நாள் கழிச்சி உங்க இன்வெஸ்டிகஷன் முடிச்சிட்டு வாங்க.. ஸ்வீட் தரேன்”, என்று அவனின் கன்னம் கிள்ள, “இதெல்லாம் பொங்கு… அட்லீஸ்ட் சக்கரையாச்சு கொடு டி”, என்று அவன் சொல்லவும், “சமையல் கட்டுக்கு போனீங்கன்னா இருக்கும்… ஆனா ராத்திரி சக்கரை சாப்ட்டா தூக்கம் வாராது.. தூங்குங்க…”, என்று அவள் சொல்லிவிட்டு படுத்து கொள்ள, “ஆண் பாவம் சும்மாவே விடாது டி”, என்று சொல்லிக்கொண்டே அவனும் படுத்து கொண்டான்.

அடுத்த நாள் கதிரவன் அவனின் கதிர்களை பரப்ப துவங்கினான்.

கனி நேரத்திற்கே எழுந்து அனைத்தையும் தயார் செய்து, பிள்ளைகளையும் தயார் செய்து விட்டு, இனியனிற்கு முன்னே அவள் கிளம்பிவிட்டாள்.

இனியன் எழுந்து அவனும் தயாராகி அலுவலகம் சென்று விட்டான். செல்லும் போதே, அவன் திட்டத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொண்டு தான் போனான்.

கனிக்கு அவளின் வேலை மிகவும் பிடித்து தான் இருந்தது! அவளுக்கு தான் ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு மூன்று வகுப்புகளுக்கும் எடுப்பதற்கு அனுமதி வழங்கி இருந்தார்கள் அல்லவா!

அவளின் நாள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை! பிள்ளைகள் மற்றும் சக ஆசிரியர்களுடன் கழிந்து விட்டது! கனியின் நேர்த்தியான பேச்சிற்கு மத்த ஆசிரர்களும் மயங்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்! அதை விட அவளின் புடவைக்கு ஒரு சிறிய ரசிகர்களே உருவாகி விட்டனர்!

அந்த நாள் அப்படியே செல்ல, அனைவரும் வீடு வந்து சேர்ந்து சாப்பிட்டு உறங்கவும் சென்று விட்டனர்!

அவளோ அப்போது தான் உள்ளே வர, அவளை கட்டி அணைத்து இருந்தான் இனியன்!

அதோட நிறுத்தினானா? அவளின் முகத்தில் முத்த மழையை பொழிய வைத்து விட்டானே!

“போதும் போதும் என்ன பண்றீங்க?”, என்று அவள் விலக, “நீ ஒரு ஜெனியஸ் டி… இன்வெஸ்டிகஷன் கன்செல் பண்ணிட்டாங்க”, என்று அவன் சொல்லவும், “எப்படி?”, என்று அவள் கேட்க, “நீ சொன்ன பிளான் தான் ஆனா கொஞ்சமே கொஞ்சம் மாத்திட்டேன்”, என்று சொல்லவும் புருவங்கள் சுருங்கி பார்த்தாள்.

“நீ சொன்ன மாறியே அந்த பேன் காமெராலம் வாங்கிட்டு பார்த்தேன் ஆனா அதுக்கான அக்சஸ் டிரெக்டா மிஸ்டர் சுரேஷ் கிட்டயே கொடுத்துட்டேன்… அவரு எல்லா மேலதிகாரியையும் லஞ்சுக்கு அவரோட கேபின் வர சொல்லிருக்காரு… நானும் அப்போ தான் மேகனாவ கூப்பிட்டேன்… நீ சொன்ன மாறியே அவ கிட்ட பேசி அவ வாயாலேயே எல்லா உண்மையும் சொல்ல வச்சிட்டேன்”, என்று சொல்லவும் தான் அவளுக்கும் நிம்மதியாக இருந்தது!

அவளுக்கும் நேற்று மிஸ்ஸஸ் சுரேஷ் விஷயத்தை சொன்னதற்கு பிறகு   சிறு பதற்றம் தான்… இனியனின் வேலையை விட அவனின் மேல் இப்படி ஒரு கரை படிவதை தான் அவள் விரும்ப வில்லை!

“இதோட இப்படி எல்லாம் பிரச்சனை வந்தா கொஞ்சமாச்சு யோசிச்சி முடிவு எடுங்க.. இப்படி நீங்களும் டென்ஷன் ஆகி எங்களையும் டென்ஷன் ஆக்காதிங்க”, என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்து கண்ணாடியின் முன் நின்றாள்.

அவனே வந்து இன்று அவளிற்கு அணிகலன்களை கழட்டினான்.

முதலில் அவளின் காதணிகளை கழட்டியவன், அங்கே ஒரு முத்தம் பதிக்க, “கனி”, என்று கிறக்கமாக வந்தது அவனின் குரல்.

“ம்ம்”, என்று அவளும் அவனுக்கு வாகாக குரல் எழுப்ப, அடுத்து அவனின் கையை பின்னால் இருந்து பற்றி அவளின் கை வளையல்களை கழட்டினான்.

அடுத்து அவன் சேலையின் முந்தானையில் இருந்த பின்னை எடுத்து விட்டு, அதை கழட்டும் முன், “லைட் அனச்சுருங்க”, என்று அவள் சொல்ல, “நான் பார்க்காததா டி?”, என்று கேட்கவும், “புரிஞ்சிக்கோங்க”, என்று அவள் சிணுங்கவும், அவள் நினைத்தது போலவே மின்விளக்கை அணைத்து விட்டு, காதல் என்னும் அகல் விளக்கில், அன்பு என்கிற எண்ணையை ஊற்றி, அவனின் மோக தீபத்தை ஏற்றி, முழு பிரகாசமாக அவளின் முனங்கல்களுடன் முடித்து இருந்தான் இனியன்!

அடுத்த நாள் காலை அவள் எழுந்து பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருக்க, அப்போதும் வந்து அவளை பின்னால் இருந்து அணைக்க, “நான் கிளம்பனும்”, என்று அவள் சொல்ல, “இப்படியேவா?’, என்று அவளின் கழுத்தில் இருக்கும் காயத்தை காட்ட, அவளுக்கோ அப்போது தான் தூக்கி வாரி போட்டது!

அப்பட்டமாக தெரிந்தது அவன் அவளுக்கு கொடுத்த பரிசின் அச்சு!

“நீங்க இருக்கீங்களே! இப்போ எப்படி நான் போவேன்? இன்னைக்கு வேற எங்க பள்ளியில ஒரு விழா இருக்குனு நேத்தே சொன்னாங்க”, என்று அவள் கோவப்பட, அவனோ அவனின் அலுவலக பையில் இருந்து கன்சீலர் ஒன்றை எடுத்து கொடுத்தான்.

“என்ன இது?”, என்று அவள் வினவ, “லவ் பைட்ஸ் மறைக்க தான்”, என்று அவனும் வெட்கம் கலந்த புன்னகையுடன் கூற, “இதெல்லாம் கூடவா இருக்கு”, என்று அவள் கேட்க, “இப்போ எல்லாம் யூஸ் பண்றங்க மா”, என்று அதை எப்படி உபயோகிப்பது என்கிற யு டியூப் விடியோவையும் காட்ட, “அப்போ இதையெல்லாம் தான் யு டியூப்ல பாக்குறீங்களா?”, என்றவளிடம், “இதுவோம் ஜெனரல் நாலெட்ஜ் தான் டி”, என்றான்.

“பூ வெக்கல?”, என்று அவன் கேட்க, அவளோ அந்த பக்கத்தில் இருந்த பூ சாரத்தை காட்ட, அவனே அவளுக்கு பூவும் வைத்து விட்டான்.

“உங்க ஸ்டேட்டஸ் ஆளுங்கலாம் பூ வெப்பாங்களா மிஸ்டர் இனியன்?”, என்று கேட்க, “ஏன் டி ஏன்? ஒருத்தன் நல்லவனா மாற கூடாதா?”, என்று அவன் சலிப்பாக தலையாட்ட, “என்னால அப்பறோம் ஸ்கோர் பண்ண முடியாதே… உங்க பசங்க உங்க பின்னாடி வந்துட்டா?”, என்று அவள் கேட்க, “பொறாமை பிடிச்சவளே… ஸ்கூல்க்கு கெளம்பு டைம் ஆகிருச்சு”, என்று அவன் சொல்லவும், அவள் அறையை விட்டு சென்று விட்டாள்.

வெளிய வந்தவள் காலை உணவை சாப்பிட்டு விட்டு அவளுக்கு தேவையான மதிய உணவை எடுத்து கொண்டு அப்படியே அவளின் பள்ளிக்கு சென்று விட, பிள்ளைகளும் சென்று விட்டார்கள்!

இனியனின் அலுவலகத்தில் தான் அவனுக்கு இன்று வேலை அதிகமாக இருந்தது!

இத்தனை நாள் அந்த மேகனா என்னும் மோகினி பிசாசால் அவனால் வேளையில் முழு கவனம் செலுத்த முடியாமல் அல்லவா இருந்தது!

வேலை சுமையும் அதிகமாகியது!

இன்று தான் அதை அனைத்தையும் முடித்து கொண்டு இருந்தான்.

அப்போது தான் அவனின் கைபேசி சிணுங்கியது! எடுக்க மனம் இல்லை தான் ஏதோ ஒரு ஊந்துதலின் பெயரில் அதை எடுத்து காதில் வைக்க அவனின் கண்களும் விரிந்தன!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 46

No votes so far! Be the first to rate this post.

1 thought on “13. செந்தமிழின் செங்கனியே!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!