“அப்பா அச்யுத்க்கு ஜாப்பனீஸ் தெரியும்”, என்று சொல்லவும், இருவரும் அதிர்ந்து விட்டனர்.
“என்ன டி சொல்ற?”, என்று கனி கேட்க, “ஆமா அம்மா அவன் நிறைய அனிமே பார்ப்பான்… அப்பறோம் ஸ்கூல்லயும் ஒரு வாட்டி யாராச்சு இன்டர்நேஷனல் மொழி பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பானீஸ் அப்பறோம் சைனீஸ் கத்துக்க ஆசைன்னா சொல்லுன்னு சொன்னாங்க.. அச்யுத் பேரு கொடுத்து அந்த கிளாஸ்ல சேர்ந்து இருந்தான். அவனுக்கு நிறைய மொழிகள் படிக்க பிடிக்கும் போல!”, என்று அவள் சொல்லும் போதே, அச்யுத் பள்ளி செல்ல தயாராகி வந்தான்.
“அச்யுத் உனக்கு ஜாப்பனீஸ் தெரியுமா?”, என்று இனியன் கேட்கவும் அதிர்ந்து தான் விட்டான் அவனும்!
அவன் தான் யாருக்கும் சொல்லவில்லையே! இப்போது தான் அடி வேறு வாங்கி இருக்கிறான்!
“ம்ம் ஆமா அப்பா.. ஓரளவுக்கு பேசுவேன்”, என்று அவன் சொன்னதும், “இன்னைக்கு நீ ஸ்கூல் லீவு போட்டுட்டு என்கூட வா”, என்று அவன் சொன்னதும், அச்யுத்தின் கண்கள் விரிந்தன!
“அவன் போய் எப்படிங்க?”, என்று கனி கேட்க, “யாருமே இல்லாம பேந்த பேந்த முழிக்கறதுக்கு இவனாச்சு ஏதாச்சு சமாளிப்பான் டி”, என்று சொல்லவும், “போய் யூனிபோர்ம் மாத்திட்டு வேற நல்ல டிரஸ் போட்டுட்டு வா”, என்று சொல்லவும் அவனும் வேறு உடை மாற்றி வந்தான்.
கனிக்கு சற்று நெருடல் தான்! ஒன்பது வயது பிள்ளை அவன்! எப்படி அத்தனை பெரிய கம்பெனியின் மீட்டிங் ட்ரான்ஸ்லேட்டர் ஆக பணியாற்ற போகிறான்!
“அவன் ஏதாச்சு சொதப்பிட்டா அடிச்சீராதீங்க…”, என்று மனதில் பட்டதை சொல்லவும், இனியனுக்கு சுருக்கென்று தைத்தது!
“என் மேல அப்போ நம்பிக்கை இல்ல”, என்றவனின் கண்கள் சிவக்க, “ஐயோ அப்படி சொல்லலைங்க… அவளோ பெரிய மீட்டிங் இல்ல ஏதாச்சு தப்பு பண்ணிட்டா அதான்”, என்று அவள் சொல்லவும், “அவன் தப்பு பண்ண மாட்டான்… அப்படியே பண்ணாலும் அடிக்கிற நிலமைல நான் இல்ல! அவன் தான் இன்னைக்கு எங்க கோல்டன் பாய்”, என்று சொல்லி அச்யுத்தை அழைத்து கொண்டு சென்றான் இனியன்.
“இன்னைக்கு அவன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகம வந்துட்டான்னா ஜெயிச்சிட்டான் மா”, என்று கயல் சொல்லவும், “நீ வேற ஏன் டி! போய் ரெஸ்ட் எடு”, என்று சொல்லிவிட்டு அவள் சென்றாலும் சற்று பயமாக தான் இருந்தது!
அச்யுத் அங்கு வர, “மிஸ்டர் இனியன் ட்ரான்ஸ்லேட்டர் எங்க?”, என்று சுரேஷ் கேட்க, “இவன் தான் சார் இன்னைக்கு நம்ப ட்ரான்ஸ்லேட்டர்”, என்று அச்யுத்தை காட்ட, அவருக்கோ, “என்ன சொல்றிங்க!”, என்று அதிர்ந்தே விட்டார்!
இருக்காதா பின்ன அத்தனை பெரிய மீட்டிங்கிற்கு வெறும் ஒன்பது வயது சிறு பாலகன் மொழிபெயர்ப்பாளர் என்று சொன்னால் அவரும் என்ன தான் செய்வார்!
“சார் நம்ப கா ன்பார்ம் பண்ண பெர்சன் வர மாட்டேன்னு சொல்லிட்டான். என் பயனுக்கு ஜாப்பனீஸ் தெரியும்… லெட்ஸ் ட்ரை ஹிம்”, என்று அவன் சொல்ல, வேறு வழி இல்லையே அவரும் சரி என்று தலை ஆட்டி விட்டு சென்றார்.
பின்பு அந்த ஜாப்பனீஸ் கிளைண்ட்ஸ் வர, “கொன்னிச்சிவா (வணக்கம்)”, என்று அவர்கள் சொல்ல, “அவங்க வணக்கம்னு அவங்க மொழில சொல்ராங்க அப்பா”, என்று அச்யுத் சொல்லவும், அவர்களும் கொன்னிச்சிவா என்று சொல்லி வாழ்த்து கூறினர்.
இன்று வெறும் அறிமுகம் என்பதால் பெரிதாக அவர்கள் பிசினஸ் விஷயத்தை பத்தி பேசப்போவது இல்லை என்று முன்னமே மின்னஞ்சல் வந்திருந்தால் சற்று அவர்களுக்கும் பரவாயில்லை என்று தான் தோன்றியது!
“அனத்த நோ ஜிமோடோ நோ டபேமோனோ ஓ வாட்ஸஹிட்டாச்சி நீ டாபே ஸசெட் குதசை”, என்று அவர்கள் சொல்லவும், அங்கிருந்த அனைவர்க்கும் ஏதோ வேற்றுகிரக வாசிகள் பேசுவது போல் தான் இருந்தது!
“டேய் என்ன டா சொல்ராங்க?”, என்று இனியன் அச்யுத் காதுகளை கடிக்க, “அவங்களுக்கு நம்ப ஊரு உணவு சாப்பிடணுமாம், அத தான் கேக்குறாங்க”, என்று அவன் சொல்லவும், “தரோம்னு சொல்லு! காரம் கம்மியா வேணுமா இல்ல அதிகமா வேணுமான்னு கேளு டா?”, என்றவுடன், அவனும் அவர்களை பார்த்து, “மோசிரோன் சோ சிம்ஸ, நோ க īதேசு க, சூடோமோ சோறே ஓடோ சுரகுநைடேசு க?”, என்றதும், அவர்களும் கொஞ்சமே கொஞ்சம் காரமாக இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.
இப்படியாக அந்த மீட்டிங் நல்லபடியாக முடிந்தது!
இறுதியாக போகும் போது, “அரிகத்தோ”, என்று அவர்கள் சொல்லவும், “அப்பா நன்றி சொல்ராங்க”, என்றவுடன், அவர்களும், “அரிகத்தோ”, என்று சொன்னதுமே அவர்களும் விடை பெற்று விட்டார்கள்.
“இனியன் உங்க பையன் செம்ம ஸ்மார்ட்! இந்த வயசுல இப்படி ஒரு டேலண்ட் சான்ஸ் லேஸ்! உனக்கு எத்தனை மொழி தெரியும்?”, என்று அச்யுத்தை பார்த்து வினவ, அவனோ யோசனையாக, “தமிழ், இங்கிலிஷ், மலையாளம், தெலுங்கு, ஸ்பானிஷ், ஜாப்பனீஸ் அப்பறோம் கொஞ்சமே கொஞ்சம் கொரியன் தெரியும் அங்கிள்”, என்று அவன் சொன்னதும், அனைவருக்கும் ஆச்சர்யம் தான்! இனியன் உட்பட!
அவனுக்கும் தெரியாதே! இத்தனை மொழிகள் அச்யுத்திற்கு தெரியும் என்று!
“ப்பா வேற லெவல் செல்லம் நீ! உண்மையா பெரிய பெரிய ஆளுங்களுக்கு மொழி பெயர்பாளரா இருக்கறதே பெரிய வேலை தெரியுமா! இவன் டேலண்ட்டா வேஸ்ட் பண்ணாதீங்க இனியன்”, என்று சொல்லிவிட்டு செல்லவும், இனியனும் அச்யுத்தை வாரி அணைத்து கொண்டான்.
அவனின் இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தான்.
நான்கு தினங்களுக்கு முன் அவன் அடித்த அதே கன்னங்கள் தான் இன்று முத்தங்களும் பெற்றன!
“ஹப்பாடா நான் கூட எங்க இன்னைக்கும் உங்க கிட்ட கன்னம் பழுக்க போகுதோனு நினைச்சேன் அப்பா”, என்று அவன் சொல்லவும், இனியனுக்கு இன்னுமே மகனுக்கு அவனின் மீது உள்ள பயம் புரிந்தது!
“ஏன் டா இவளோ மொழி தெரியும்னு சொல்லல? எப்பவோம் தமிழ் மட்டும் பேசுற?”, என்று அவன் கேட்டதும், “அப்பா நிறைய மொழி கத்துக்க எனக்கு பிடிக்கும் அதுக்காக தமிழை மறக்க முடியுமா? அம்மாக்கு கூட தெரியும்! ஜாப்பனீஸ், ஸ்பானிஷ் தெரியும்னு மட்டும் தெரியாது! மீதி எல்லா மொழியும் பேசுவேன்னு தெரியும்!”, என்று சொல்லவும், தன் மனைவியின் சாயல் மகனில் பார்த்தான் இனியன்!
கனி அடிக்கடி சொல்லுவாள் தான், “எத்தனை மொழி வேணாலும் கத்துக்கலாம் அதுக்காக எங்களுக்கு தமிழ் தேவ இல்லன்னு சொல்றது தான் முட்டாள் தனம்”, என்று அவள் அன்று கூறியதை வேறு விதமாக அச்யுத் கூறவும் அவனுக்கும் அவர்களின் தமிழ் பற்று புரிந்தது!
“சரி டா இதோட நீ மொழிகளின் வேந்தன் என்று அழைக்க படுவாயாக!”, என்று இனியன் சொல்லவும், “தங்கள் வாக்கு வேத வாக்கு மன்னா!”, என்று அவனும் தலை கவிழ்ந்தான்!
“உனக்கு என்ன வேணும்னு சொல்லு வாங்கி தரேன்”, என்றவனிடம், “இப்போ எதுவும் வேணாம் பா… தோணும் போது கேக்குறேன்”, என்று சொல்ல, “சரி வா வீட்டுக்கு போகலாம்”, என்று அழைத்து கொண்டு அவன் வெளியே செல்லும் போதே, அச்யுத்தை நிறைய நபர்கள் வாழ்த்தி விட்டு சென்றனர்.
வீட்டிற்கு வந்த இனியன், கை நிறைய ஸ்வீட் உடன் தான் வந்தான்!
“என்ன டா கன்னம் தப்பிச்சிருச்சா?”, என்று கயலை பார்த்து அச்யுத் முறைக்க, “இன்னைக்கு அப்பா முத்தம் தான் கொடுத்தார்”, என்று சொன்னவுடன், “அப்படியா அப்பா?”, என்று கயலும் இனியனை நோக்கி சென்றாள்.
அவன் வாங்கி வந்த, பைகளை பார்க்க அவளுக்கு பிடித்த நிறைய தின்பண்டங்களும் அதில் இருந்தது!
அதை வாங்கி கோரிக்க ஆரம்பித்து விட்டாள்!
“இப்படியே சாப்பிட்டா டம்போ மாறி ஆகிடுவ”, என்று அச்யுத் சொல்ல, “பாருங்க அப்பா என்ன யானை மாறி ஆகிருவேன்னு சொல்றான்”, என்று முறுக்கை சாப்பிட்டு கொண்டே கூறினாள் கயல்!
“அவன் கெடக்குறான் மா! நீ யானைன்னா அவன் மட்டும் என்ன பூனையா?”, என்று இனியன் கேட்க, “ரொம்ப உங்க பொண்ணுக்கு ஜால்ரா தட்டாதீங்க இனியன்”, என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் கனி!
“அம்மா இன்னைக்கு எல்லாரும் என்ன பாராட்னாங்க தெரியுமா?’, என்று அவள் வந்தவுடன், அவன் வீர தீர பாராக்ரம செயல்களை சொல்ல துவங்கினான் அச்யுத்!
“உங்க மகன் உங்க பேரை உயர்த்திட்டான் போல?”, என்று அச்யுத்தை காட்டி கேட்கவும், “அவன் என் பேரை உயரத்துலனாலும் என் மகன் தான்”, என்றவுடன் இனியனின் மனமாற்றம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது!
“கயலுக்கு இன்னும் இரண்டு நாள்ல டான்ஸ் காம்பெடிஷன் இருக்கு!”, என்று கனி சொல்ல, “நாளைல இருந்து ப்ராக்டிஸ் பண்ணட்டும்”, என்று வந்தது இனியனின் பதில்!
“என்ன பாட்டுக்கு ஆட போற?”, என்று பொன்னம்மாள் கேட்க, “இன்னும் அத நான் முடிவு பண்ணல அப்பத்தா”, என்று அவள் சொன்னவுடன், “கண்ணும் கண்ணும் கலந்து ஆடு… அந்த காலத்துல பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் எவளோ அழகா ஆடுனாங்க தெரியுமா?”, என்று அவர் சொல்ல, “ஆமா ஆமா ஆடு உனக்கு தக்காளி முட்டை அபிஷேகம் தான் அக்கா”, என்று சொல்லி சிரித்து விட்டான் அச்யுத்.
“அப்பத்தா, பாட்டு நாட்டு அல்ல மொழி பற்று இருக்க பாடலா இருக்கணும்னு சொல்லிருக்காங்க”, என்று சொன்னவுடன், “செந்தமிழ் நாடெனும் போதினிலேக்கு ஆடு”, என்று சொன்னது இனியன் தான்!
“நீங்களா சொல்றிங்க?”, என்று ஒருசேர கேட்டனர் கனி, கயல் மற்றும் அச்யுத்!
“ஏன் டி அதான் நாட்டு பற்று இல்ல மொழி பற்றுனு சொல்லிட்டாங்களே! தினமும் காலைல நீ தான் இந்த பாட்டை சுப்ரபாரதம் மாறி கேக்குறியே! அதுவும் எனக்கு சித்ராவோட குரல் பிடிக்கும்”, என்று கூறினான்!
“அப்பறோம் என்ன அந்த பாட்டுக்கே ஆடு அக்கா”, என்று அச்யுத் சொல்லவும், தலை ஆட்டினாள் கயல்!
“இரண்டு நாள் ப்ராக்டிஸ் பண்ணிக்கோ! நாளைக்கு எனக்கும் ஒரு வேலை இருக்கு…”, என்று சொன்னவள் அன்று இரவு உணவு சமைக்க, எல்லாமே அச்யுத்திற்கு பிடித்த உணவு வகைகள் தான்!
அன்று இரவும் அவள் உறங்க உள்ளே நுழைய, இன்று இனியனின் கைகளில் அச்யுத்தின் புகை படம்!
“என்ன இன்னைக்கு மகனுக்காக கண்ணீரா?”, என்று கேட்டவுடன், இனியன் கேட்ட அடுத்த கேள்வியில் உறைந்து நின்று விட்டாள் செங்கனி!
Dei ippo nee ennada ketta
Apdi enna ketan