சொர்க்கம் – 18
கோபத்தில் காவலாளியை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது.
எய்தவன் இருக்கும்போது அம்பை நொந்து யாதொரு பயனும் இல்லையே.
பெருமூச்சோடு விரியத் திறந்திருந்த கதவினூடு உள்ளே நுழைந்தவள் இன்னும் 20 நிமிடங்கள் நடந்தால்தான் வீட்டை சென்றடையலாம் என எண்ணி சோர்ந்து போனாள்.
அவள் சோர்ந்து போவதற்கு அவசியமே இல்லை என்பது போல மெயின் கேட்டின் அருகே வேகமாக வந்து நின்றது வெள்ளை நிறக் கார்.
“மேடம் சார் உங்கள கார்ல அழைச்சிட்டு வரச் சொன்னாரு..” என்றான் அந்தக் காரில் இருந்து இறங்கிய ட்ரைவர்.
அவளுக்கோ ‘என்னடா இது.?’ என்பது போலத்தான் தோன்றியது.
இவன் செய்வதை எல்லாம் பார்த்தால் பழிவாங்க அழைத்து வந்தது போல இல்லையே.
பார்த்துப் பார்த்துக் கவனிப்பது போல் அல்லவா இருக்கிறது.
அவனைப் பற்றி சிந்தித்துச் சிந்தித்து அவளுடைய மூளை குழம்பிப் போனதுதான் மிச்சம்.
“மேடம் கார்ல ஏறினா உங்களை வீட்டுக்கு பக்கத்துலேயே ட்ராப் பண்ணிடுவேன்..” என்றவனை சலிப்பாகப் பார்த்தவள்,
“இல்ல நான் நடந்தே வர்றேன்..” என்றாள்.
“ஐயோ… சார் என்ன கொன்னுடுவாரு..”
“யோவ் லூசாயா நீ, நான் நடந்து வந்தா உங்க சார் எதுக்கு உன்னக் கொல்லப் போறாரு.. வாய மூடிட்டு போகலைன்னா நான் உன்னைக் கொன்னுடுவேன்..” என எரிச்சலில் கத்தியவள் தன் கரத்தில் கொண்டு வந்திருந்த பையோடு நடக்கத் தொடங்க மீண்டும் அவள் முன்னே ஓடி வந்து நின்றவன்,
“மேடம் சார்தான் சொன்னாரு.. நீங்க சாரோட கீப்பாம்.. நீங்க நடந்து வந்தா அவருக்கு கால் வலிக்குமாம். அதனால உங்கள கார்லதான் கூட்டிட்டு வரணுமாம்..” என ட்ரைவர் கூறியதும் தன்னுடைய நடையை நிறுத்தியவளுக்கு உடல் இறுகியது.
இவன் தன்னுடைய பெயரை வேண்டுமென்றே கெடுக்கிறான் என்பது அப்போதுதான் அவளுக்குத் தெள்ளெனப் புரிந்தது.
மனதுக்குள் ஒரு விதமான பயம் கவ்வி இழுக்க இவர்களுடைய பார்வையில் எல்லாம் என்னைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணம் முகிழ்த்திருக்கும் என்பதை எண்ணியவளுக்கு விழிகள் கலங்கத் தொடங்கின.
“மேடம் ப்ளீஸ் மேடம்.. தயவு செஞ்சு கார்ல ஏறுங்க.. இல்லன்னா சார் என்ன வேலையை விட்டுத் தூக்கிடுவாரு..” என அவன் கெஞ்சத் தொடங்க, விழுந்து விடுவேன் என்ற கண்ணீரை இமை சிமிட்டி உள்ளே இழுத்துக் கொண்டவள் அமைதியாக அந்தக் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவனோ காரை மிதமான வேகத்தில் செலுத்தத் தொடங்க இவளுக்கோ பயப்பந்து வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில் உருளத் தொடங்கியது.
எப்படியும் ஆட்டோக்காரன் அவனுடைய செவிகளில் விழுந்த விடயத்தை பரப்பாமலா இருக்கப் போகின்றான்..?
சாதாரண ஒருவரின் விடயம் என்றால் அது பத்தோடு பதினொன்றாக சென்றுவிடும்.
புகழின் உச்சியில் இருக்கும் இந்த பணக்கார நடிகனின் கீப் என்றால் பரவாமலா இருக்கும்..?
திடீரென ஒரு விதமான பயம் அவளுக்குள் உள்ளோடியது.
அவளைப் பார்ப்பவர்கள் எல்லாம் இனி கேவலமான எண்ணத்துடன் தான் பார்ப்பார்களோ எனப் பயந்து போனாள் அவள்.
தனக்குள்ளேயே அவள் மருகிக் கொண்டிருந்த கணம் கார் வீட்டின் அருகே நின்றுவிட திகைத்து ட்ரைவரைப் பார்த்தாள் செந்தூரி.
“மேடம் இறங்குங்க..” என்றதும் “ப்ளீஸ்… இந்த மேடம் எல்லாம் வேணாமே..” எனக் கூறியவள் நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல என வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.
அப்படிப்பட்ட பெண் இல்லை என்றால் இங்கே எதற்கு வந்திருக்கிறாய் எனக் கேட்டால் என்னவென்று பதில் சொல்வாள்..?
வாயை இறுக மூடிக்கொண்டு கீழே இறங்கியவளுக்கு பிரம்மாண்டமாக தன் முன்னே நின்ற மாளிகை போன்ற வீட்டைப் பார்த்ததும் மீண்டும் பயம்தான் எழுந்தது.
வீட்டிற்குள் இருந்து இன்னொருவன் ஆரத்தி தட்டுடன் வந்து நிற்க, கையில் இருக்கும் பையைத் தூக்கி அப்படியே அவன் மீது அடித்து விடுவோமா என்ற எண்ணம் சடுதியில் அவளுக்குள் தோன்றி மறைந்தது.
அவனோ அவளுக்கு ஆரத்தி சுற்றத் தொடங்கினான்.
இதற்கும் என்ன காரணம் விநாயக் சொல்லி இருப்பான் என்பதை நன்கே புரிந்து வைத்திருந்தவள் வாயைத் திறக்காமல் நிற்க,
ஆரத்தி எடுத்தவன் “சார்தான் உங்கள…” எனக் கூற வந்ததை கூறி முடிக்கும் முன்னரே தன்னுடைய கையை உயர்த்தி நிறுத்தும்படி சொன்னவள் “நீங்க எதுவுமே சொல்ல வேணாம்..” என்றிருந்தாள்.
சலிப்போடு உள்ளே நுழைந்தவளுக்கு பாதங்கள் கூசின.
கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த வரவேற்பறையில் கைகட்டி நிற்க,
“வெல்கம் டார்லிங்…” என்றவாறு அவள் அருகே வந்து அவளுடைய கரத்தைப் பற்றிக் கொண்டான் விநாயக்.
அவன் திடீரென தன் அருகே வந்ததும் அல்லாமல் அவளுடைய கரத்தைப் பற்றிக் கொண்டதும் அவளுக்கோ உடலில் ஒரு விதமான நடுக்கம் பரவியது.
அவனுடைய கையை வேகமாக உதறிவிட்டு அவனைத் தள்ளிவிட வேண்டும் போல இருந்து ஆவேசத்தை அடக்கிக் கொண்டவள் கையறு நிலையில் நின்றாள்
இதற்குத்தானே தன்னை அழைத்திருக்கிறான்.
அவன் என்ன செய்தாலும் கைகள் கட்டி இருப்பதைப் போல அமைதியாகத்தான் இருக்க வேண்டும்.
இதயம் வேதனையில் தத்தளித்தது.
கரத்தைப் பிடித்த அவனுடைய கரமோ உயர்ந்து அவளுடைய தோள்களைச் சுற்றிப் படர வெளிப்படையாக அவளுடைய உடல் நடுங்கத் தொடங்கியது.
“எங்க வீட்ல எனக்கு என்ன மரியாதையோ அதே மரியாதைய உங்களோட சின்னம்மாக்கும் நீங்க கொடுக்கணும்.. ஆல்ரெடி இவ யாருன்னு உங்க எல்லாருக்குமே சொல்லிட்டேன்.. மறுபடியும் இன்ட்றோ பண்ணனும்னு அவசியம் இல்லைல்ல..?” என அவன் கூற அவளுக்கோ நிலத்தினுள் புதைந்து விடலாமா என்று இருந்தது.
விழிகளை உயர்த்தி யாரையும் பார்க்காது தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“சரி இப்போ எல்லாரும் போய் உங்களோட வேலையப் பாருங்க…” என அவன் கூறியதும் மற்றைய அனைவரும் வேகமாக அங்கிருந்து களைந்து சென்றுவிட அதன் பின்னரே அவளுடைய தோள்களில் போட்டிருந்த தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டான் விநாயக்.
அதுவரையிலும் நரகத்திற்குள் சிக்கியதைப் போல துடித்துக் கொண்டிருந்தவள் அவனுடைய கரம் விலகியதும்தான் நிம்மதியாக உணர்ந்தாள்.
“எதுக்காக இப்படி எல்லாம் பண்றீங்க..?” சீறினாள் அவள்.
“என்ன பண்ணினேன்..?” மிகவும் கூலாகக் கேட்டான் அவன்.
“எதுவுமே தெரியாத மாதிரி தயவு செஞ்சு நடிக்காதீங்க.. வாட்ச்மேன்ல இருந்து ட்ரைவர் தொடக்கம் இந்த வீட்ல வேலை செய்ற எல்லார்கிட்டயும் எதுக்காக என்னை உங்களோட கீப்னு சொல்லி வச்சிருக்கீங்க.?”
எவ்வளவோ கோபமாகக் கேட்க முயன்றும் அவளுடைய குரல் இறுதியில் உடைந்து தழுதழுத்தது.
அவளுடைய கேள்வியில் அவனோ அவளுடைய கழுத்தை உற்றுப் பார்க்க பதறிப் போனவள் தன்னுடைய துப்பட்டாவை இழுத்து சரி செய்து கொண்டாள்.
“உன் கழுத்துல நான் தாலி எதுவும் கட்டி இங்க அழைச்சிட்டு வரலையே..? தாலி கட்டாம அழைச்சிட்டு வந்தா கீப்னுதானே அர்த்தம்..? சோ நீ என்னோட கீப் தானே..? சரியாதானே சொல்லி இருக்கேன்..” எனத் தோள்களைக் குலுக்கியவாறு அலட்சியமாக அவன் கூற, வாயடைத்துப் போனாள் அவள்.
“இப்போ உனக்கு எப்படி ஃபீல் ஆகுது..?” என அவளுடைய விழிகளைப் பார்த்தவாறு கேட்டான் அவன்.
அவளோ தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளுடைய கன்னத்தை அழுத்தமாகப் பற்றித் தன்னைப் பார்க்கும்படி அவன் திருப்பி விட அவளுக்கோ தாடை வலித்தது.
தன்னை அடித்து கொடுமைதான் செய்யப் போகின்றான் போலும் என உள்ளுக்குள் அலறிய மனதை அடக்க வழி இன்றி சட்டென பின்னால் நகர்ந்து நின்றவள் அவனைப் பயத்தோடு பார்க்க,
“நான் கேள்வி கேட்டா பதில் சொல்லணும்..” என அழுத்திக் கூறினான் விநாயக் மகாதேவ்.
அவனுடைய விழிகள் வெளிப்படுத்திய சினத்தில் அவளுடைய உதடுகளோ தானாகத் திறந்தன.
“ந… நரகத்துல வந்த மாதிரி ஃபீல் ஆகுது.” என மனதில் உள்ளதை அப்படியே போட்டு உடைத்தாள் அவள்.
“க்ரேட் நீ அப்படித்தான் ஃபீல் பண்ணனும்..” என்றானே பார்க்கலாம்.
அவளுக்கோ சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
“ஓகே தேர்ட் ஃப்ளோர்ல இருக்கிற முதலாவது ரூம் தான் நம்ம ரூம்.. மீதிய அங்க வச்சு பேசிக்கலாம்.. நீ போய் ஃபிரஷ் ஆயிட்டு எனக்காக வெயிட் பண்ணு..” என்றவன் தன்னுடைய அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியேற முயற்சிக்க,
“ப்ளீஸ் எ.. என்னை மன்னிச்சு விட்ருங்களேன்.. எ.. என்னால நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் வா… வாழ முடியாது..” தவிப்புடன் கெஞ்சினாள் அவள்.
தகாத உறவில் அவனுடன் இருக்க வேண்டும் என்பதே அவளை வருத்தி எடுத்தது.
“ஒருத்தனை கைநீட்டி அடிக்கிறதுக்கு முன்னாடி நீ இதைப் பத்தி எல்லாம் யோசிச்சு அடிச்சிருக்கணும்..”
“தப்புதான் வேணும்னா இப்போ நீங்க என்ன அடிச்சுக்கோங்க..” என்றவள் விழிகளை மூடி அசையாது நிற்க,
“ரப்பிஷ்..” எனக் கூறிவிட்டு அவன் அங்கே நிற்காது சென்றுவிட செல்லும் அவனுடைய முதுகையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள் அவள்.
கடவுள் அவளுடைய தலையில் இப்படித்தான் வாழ்க்கை என எழுதி வைத்து விட்டார் போலும்.
அவன் சென்றதன் பின்பு வேலையாட்களின் நடமாட்டம் வரவேற்பறையில் அதிகமாக, அவளுக்கோ அவர்களை சந்திக்கவே உடல் கூசியது.
வேகமாக அவன் கூறிய மூன்றாவது தளத்திற்கு வந்து அங்கே இருந்த முதல் அறைக்குள் நுழைந்து கொண்டவள் ‘இனி இதுதான் நம்ம அறை..’ என அவன் கூறிய வார்த்தைகள் மீண்டும் காதல் ஒலிக்க தடுமாற்றத்தோடு அங்கே இருந்து பெரிய படுக்கையைப் பார்த்தாள்.
அந்தப் பஞ்சு மெத்தையைப் பார்த்ததும் உடல் முழுவதும் அதிர்ந்தது.
கடைசியில் இவ்வளவு கேவலமான நிலைக்குத் தான் தள்ளப்பட்டு விட்டோமே என்ற சுய கழிவறக்கத்தில் கண்ணீர் பொங்கி வர தன்னுடைய பையை அங்கே இருந்த மேசை மீது வைத்தவள் அந்த அறைக்குள் இருந்த குளியல் அறையைக் கண்டுபிடித்து அதற்குள் நுழைந்து கொண்டாள்.
எல்லாத்தையும் பிரமாண்டமாக செதுக்கி வைத்திருந்தான் அவன்.
ஆனால் அவற்றின் அழகை ரசிக்கும் மன நிலையில் அவள் இல்லையே.
கண்ணீர் தடம் மறையும் விதத்தில் முகத்தை தண்ணீரால் கழுவி விட்டு அங்கே இருந்த சோபா ஒன்றில் அமர்ந்தவளுக்கு தலை வலித்தது.
வேறு எதுவும் செய்யத் தோன்றாது கால்களை மடித்து அவள் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக அப்படியே அமர்ந்திருக்க சற்று நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் விநாயக்.
“ஹாய் பேப்..” என்றவனின் குரலில் பதறி அவள் எழுந்து நிற்க,
ஏசியை ஆன் செய்துவிட்டு படுக்கையில் வந்து அமர்ந்தவன் “இங்கே வா..” என அவளை அருகே அழைத்தான்.
மூச்சடைத்தது அவளுக்கு.
கரங்களோ நடுங்கத் தொடங்கிவிட்டன.
“கம்..” மீண்டும் அழைத்தான் அவன்.
மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டவள் வெளியே விட மறந்தவளாக தயங்கித் தயங்கி அவன் அருகே வந்து நிற்க நேரடியாக அவளுடைய இடையில் தன் கரத்தை பதித்து அழுத்தியவன் அவள் அதிர்ந்து துள்ளி விலக,
“ஓ மை காட் என்ன சாதாரணமா தொட்டதுக்கே இப்படிக் கூச்சப்படுற..?” எனக் கேட்டான்.
“இ. இங்க எல்லாம் இது வரைக்கும் யா.. யாரும் தொட்டது இ.. இல்லை..” என்றவளின் உதடுகள் அழுகையில் துடித்தன.
“வாட்…? ஆர் யு வெர்ஜின்..?” என அதிர்ந்து போய் கேட்டான் அவன்.
🔥💜🔥
Pavam sindhu
Adei nasama ponavane apa unaku ava Virgin nu theriyathu 😏😏😏😏