19. விஷ்வ மித்ரன்

5
(1)

விஷ்வ மித்ரன்

 

💙 அத்தியாயம் 19

 

“டாடி எங்க போயிட்டீங்க” தந்தையைத் தேடிக் கொண்டு வந்தான் மித்ரன்.

 

ஹாலில் மாட்டப்பட்டிருந்த அன்னபூர்ணியின் ஃபோட்டோவை பார்த்தபடி நின்றிருந்தார் ஹரிஷ். அவரது மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருப்பது புரிந்து அருகில் சென்று தோளில் கை வைக்க திரும்பி பார்த்தார் அவர்.

 

“என்ன டாடி! உங்க ஆளு கூட தன்னந்தனியா டூயட் பாடிட்டு இருக்கீங்களா?” அவன் பக்கவாட்டாக அணைத்துக் கேட்க, “போடா உனக்கு எப்பவுமே குசும்பு தான்” கலங்கிய கண்களை அவன் அறியாமல் துடைத்துக் கண்ணாடியை மாட்டிக் கொண்டார்.

 

“இந்த சோடாபுட்டி போடலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதே” என்றான் மித்து.

 

“சின்ன வயசுல இருந்தே போட்டது. காலேஜ்ல இந்த சோடாபுட்டிய பார்த்து மயங்கியே பல பொண்ணுங்க எனக்கு தீவிர ரசிகையாக்கிட்டாங்க” கண்கள் பளிச்சிடக் கூறிய ஹரிஷைப் பார்த்து “அப்பப்பா ரொம்ப வழியுதுப்பா” கிளுக்கிச் சிரித்தான் மைந்தன்.

 

“போடா! என் காலேஜ் ஃபேன்ஸ் பத்தி சொல்லவும் உனக்கு பொறாமை வருது” என்று ஹரிஷ் மிதப்புடன் பார்க்க, “போயும் போயும் இந்த மூஞ்ச பார்த்து லொள்ளு விட்டு இருக்காங்களே. யாருக்கும் ரசனையே இல்ல போல. ஓ காட்! இப்போவும் இவரைப் பார்த்து வழியுற நர்ஸுங்களுக்கு நீதான் நல்ல புத்தியை கொடுக்கணும்” கடவுளிடம் வேண்டிக் கொண்டவனின் தலையில் நங்கென்று கொட்டு விழுந்தது.

 

தலை உயர்த்திப் பார்க்க “என் அப்பாவை ரொம்ப தான் டேமேஜ் பண்ணுற. அதை பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டா இந்த வைஷு” இடுப்பில் கை குற்றிக் கூறினாள் வைஷு.

 

“என் கன்னுக் குட்டி” மகளுடன் ஹைஃபை அடித்துக் கொண்டார்.

 

தலை சாய்த்து மித்ரனைப் பார்த்து “அண்ணா சாக்லேட் கேட்டேன்ல. கொண்டு வந்தியா” என்று வைஷு கேட்க,

“நீ சொல்லி நான் கொண்டு வராமல் இருப்பேனா?” என்று சாக்லேட்டை நீட்டினான் அவன்.

 

அவளோ சிரிப்புடன் அதைப் பிரித்து சாப்பிட ஆரம்பிக்க “ஹே லூசு குட்டி சாக்லேட்ட கண்ட உடனே சின்ன பாப்பான்னு ஃபீல் பண்ணாத. உனக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் நினைவிருக்கா?” அவளுக்கு நினைவூட்டினான் மித்ரன்.

 

“எனக்கு மட்டும் இல்ல மித்து டார்ல்ஸ். உனக்கும் தான்” என்றவளைப் பார்த்து “ஹ்ம்ம்” கன்னத்தில் இரு கைகளையும் வைத்து சோகமாய் பார்த்தான்.

 

“ஏன்? ஏன் இந்த தேவதாஸ் ஃபீலிங்” கையசைத்து வினவினாள்.

 

“நானும் குடும்பஸ்தனாக போறேன். இத்தனை வருஷமா கட்டிக் காத்த பேச்சிலர் என்ட் முரட்டு சிங்கிள் பதவி எல்லாம் பறி போகப் போவுதே” என்க, “சார் அவ்வளவு கஷ்டப்பட்டு மிங்கிளாக வேண்டாம். அக்ஷுக்கு ஒரு கால் பண்ணி கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா எல்லாம் ஓகேயாகிடும்” என்று ஃபோனை எடுக்க எடுப்பது போல் பாவனை செய்தாள் வைஷ்ணவி.

 

அவளது செயலைக் கண்டு “அடியே என்ன பண்ணுற?” என பதறிப் போனான் மித்ரன்.

 

“நீங்க உங்க ஆசைப்படி சிங்கிள் சிங்கமாவே இருந்துக்கோங்க. நான் அண்ணி கிட்ட சொல்லிடறேன்” என்றவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டு, “அம்மா பரதேவதையே! என் லைஃப்ல ஃபுட்பால் விளையாடிடாத. அப்புறம் அந்த அக்ஷு மகராசி கிட்ட நான் வாங்கிக் கட்டிக்கணும்” என்று புலம்பித் தள்ளினான்.

 

“ஹ்ம் குட்! இனிமே இந்த கன்றாவி ரியாக்ஷன மாத்திட்டு ஹேப்பியா மூஞ்ச வச்சுக்கோ” அவன் கன்னங்களை பிடித்து ஆட்டினாள் வைஷு.

 

“இதே மாதிரி என் விஷுவையும் நீ நல்லபடியா சந்தோஷமா பார்த்துக்குவேல?” தங்கையிடம் கேட்டான் மித்ரன்.

 

“கண்டிப்பா! என் விஷுவைப் பார்த்துப்பேன்….” என்று சிறிதும் யோசிக்காமல் பட்டென்று சொல்லிவிட ‘என் விஷு’ எனும் அவளது பேச்சில் உள்ளுக்குள் மகிழ்ந்து போனான் விஷுவின் மித்ரன்.

 

அவர்களது சம்பாசனையை பார்த்துக் கொண்டிருந்த ஹரிஷ் “முருகா! இவங்க இப்படி சந்தோஷமா இருக்கணும். எனக்கு அது போதும்” என்று வேண்டுதல் வைக்க, அவரைப் பார்த்து விதி பாவமாக சிரித்தது.

 

இந்த சந்தோஷம் தலைகீழாக மாறி கண்ணீருடன் நீயே உன் மகனுக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும் என்று!

………………….

 

“எங்க போய் தொலைஞ்சான் இவன்? வர வர பொறுப்பே இல்லை. என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டான்ல” என்று புலம்பிக் கொண்டே கிட்சனில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் பூர்ணி. அவன் மேல் இருந்த கோபத்தை கரட்டின் மீது காட்டிக் கொண்டிருந்தாள்.

 

“பூ பழம்னு கொஞ்சிட்டு வருவல்ல அப்போ உன் வாயில இந்த பச்சை மிளகாயை தேச்சி விடுறேன்” அவனென்று நினைத்து பச்சை மிளகாயை முறைத்துப் பார்த்தாள்.

 

“பொண்டாட்டி” என்ற குரல் பின்னாலிருந்து கேட்க, “அப்போவும் இப்படித்தான் என்னைக் கூப்பிட்ட. ஆனா நீ வரவே இல்ல. இப்போ திரும்பி பார்க்க மாட்டேன் போ” முறுக்கிக் கொண்டாள்.

 

அவள் கழுத்தில் நாடி பதித்து “இப்போ நம்புவியா டி?” என்று கேட்டவனின் மூச்சுக்காற்று அவளைச் சிலிர்க்க வைக்க “ம்ம்” என சன்னமாக முனகியவள் “முன்னாடி வா” என கூப்பிட்டாள்.

 

அவள் முன் வந்து நின்று “ஏதாச்சும் தரப் போறியா? அப்படி தரதா இருந்தா இங்க தா” என கன்னத்தை காட்டிக் கொண்டு நிற்க அவன் கன்னத்தில் வலிக்காமல் அடித்தாள் பெண்ணவள்.

 

“ஏன்டி எவ்வளவு ஆசையா வந்தேன்” என்று உதடு பிதுக்கினான் ரோஹன்.

 

“என்னை அம்போனு விட்டுட்டு நீ ஊரு சுத்திட்டு வருவ. நான் அப்படியே வாங்க மாமானு ஆசையா கூப்பிட்டு முத்தம் கொடுக்கனுமாக்கும்” உதட்டைச் சுளித்தாள்.

 

சுழித்த உதடுகளில் தடுமாறிப் போனவன் சுதாகரித்து “அப்படின்னா என்னைத் தேடினியா நீ? பார்த்தியா உனக்கு என் மேல அவ்வளவு லவ். என்ன விட்டு ஒரு மணி நேரம் கூட இருக்க முடியலையே” என்று சொல்ல, “ஆசை தோசை! தனியா இருக்க பயமா இருந்துச்சு அதான் தேடினேன்” என்றாள், வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு.

 

“நீ எப்போதான் உண்மை ஒத்துக் கொண்டிருக்க? உண்மைகள் சில நேரம் கசக்க தான் செய்யும்” என சிரித்து விட்டு அவளை ரசித்துக் கொண்டு நின்றான்.

 

“சும்மா இருக்கவே மாட்டியா” என அவள் முறைக்க, “நான் என்னடி பண்ணேன்? சும்மா பார்த்ததும் குத்தமா?” புருவமுயர்த்திக் கேட்டான்.

 

“நீ பார்க்குறது தான் குற்றம். குறுகுறுன்னு பார்க்குறே. என்னால எதுவுமே பண்ண முடியல” என்றபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

திடீரென “ஆஆ” என்று அவளின் அலறல் சத்தம் கேட்டு “என்னாச்சுடி?” என அவளை பார்க்க விரலில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

 

“ஒன்னுல்ல” என கையை மறைத்துக் கொள்ள, “ஒன்னும் இல்லையா லூசு? ப்ளட் வருது” கடுகடுத்துக் கொண்டு அவளது விரலை தன் வாயில் வைத்து உறிஞ்சினான் ரோஹன்.

 

“ரோஹி விடு” என்றவளை முறைத்தவன், அவளைத் தூக்கி சமையல் மேடையில் உட்கார வைத்து விட்டு கட்டுப் போட்டு விட்டான்.

 

அவனது ஒவ்வொரு செயலிலும் தன் மீது கொண்ட அளவிட முடியாத அன்பையே கண்டாள் அவன் மனைவி!

 

“இனிமே கிச்சன் பக்கம் வந்த பல்ல பேத்துருவேன்” என கத்தி விட்டு மீதமிருந்த காய்கறிகளை வெட்டத் துவங்கினான்.

 

நெற்றி தொட்டு விளையாடும் சுருள் முடிகள். அலைபாயும் விழிகள். கூர்மையான நாசி. சிவந்த இதழ்கள் என இருந்தவனை தன்னையும் மீறி சைட் அடிப்பது அவளின் முறையானது. அவளது பார்வை உணர்ந்து “ஓய் பப்புமா! எனக்கு பார்க்க வேண்டாம்னு சொல்லிட்டு நீ அப்பட்டமா சைட் அடிக்கிறியே” என்றான்.

 

அவனது கேள்வியில் வெளிப்படையாக ரசித்த தனது செயலை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள் அந்தக் கள்ளி!

 

“பேச்சையே காணோம் ” என அவள் முகம் பார்க்க, “வாட்? நான் உன்ன சைட் அடிச்சேனா. நோ நெவர்! அதுக்கு சான்சே இல்ல. நான் சுவருல ஓடின பல்லிய தான் பார்த்தேன்” என்று மழுப்ப, “ஓஓ நம்பிட்டேன்.. பல்லி மேலே அவ்வளவு காதல் போல” என்று நமட்டுச் சிரிப்பைச் சிந்தினான் ரோஹன்.

 

அவன் வம்பிழுக்க, இவள் தீயென முறைக்க, சீண்டல்களும், சிணுங்கல்களுமாக ஒருவாறு சமையலை முடித்தான் ரோஹி! டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டவளுக்கு ஏதோ தோன்ற எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

“பூ… பூ எங்க போய்ட்ட?” என அவளைத் தேடி வந்தவனுக்கு படுக்கையில் அமர்ந்திருந்த பூர்ணியைக் கண்டு “சாப்பிட வராமல் இங்க என்ன பண்ணுற” என்று கேட்க,

 

“உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் டா” என்றாள் அவள்.

 

“உனக்கு சூடு ஆற முன்னால சாப்பிடுறது தானே பிடிக்கும். சாப்பிட்டுட்டே பேசலாம்” என்று அவளை அழைத்தான் அவன்.

 

“அது முன்னாடி தான். ஆனா இப்போல்லாம் சாப்பிடவே முடியல. உன் புள்ள சாப்பிடவே விடுறதில்ல” என்று கூறினாள் அவள்.

 

“விடறதில்லையா? யாரு விடுறதில்ல” என புரியாமல் விழித்தவனுக்கு ஏதோ புரிபட “என்ன சொன்ன நீ? மறுபடியும் சொல்லு” என்றவாறு அவள் காலடியில் முட்டி போட்டு அமர்ந்து கொண்டான்.

 

அவனைப் பார்த்து சிரித்துவிட்டு “யாஹ் ஐ ஆம் கன்சீவ்” அவன் கைகளில் தன் கைகளை கோர்த்தாள் காரிகை.

 

ஒற்றை வார்த்தை தான்! கேட்டதில் முகம் மலர்ந்தது! அவன் கைகளில் கொடுத்த அழுத்தம் கூடிக் கொண்டே செல்ல கண்களும் கூட ஆனந்தமாய் கலங்கியது.

 

“நா…நான் அப்பாவாகப் போறேன். என் பூ அம்மால்ல?” என்றவன் உணர்ச்சிக் குவியலாய்த் தான் மிதந்தான்.

 

அவனது உணர்வு புரிந்தவளுக்கோ தன்னவனை அணைத்து அவன் முகத்தைத் தன் வயிற்றில் புதைத்துக் கொள்ளத்தான் தோன்றியது.

 

ஆகினும் அழையா விருந்தாளியாக அவன் சந்தேகப்பட்டு நிற்கும் காட்சி மனக்கண்ணில் தோன்ற இரும்பாய் இறுகிப் போனாள்.

 

“என் பாப்பா…!!” என்ற ரோஹனின் கை அவள் வயிற்றைத் தொடப் போன சமயத்தில் சடாரென விலகி நின்று கொண்டாள்.

 

“என்னடி” என்றவனது கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்து,

 

“நான் உன் கிட்ட இதை ஆசையா சொல்லல. மித்து கல்யாணத்துக்கு போன இடத்துல இது தெரியாம நீ முழிச்சீனா ஏன் உன் கிட்ட சொல்லலைன்னு என் கிட்ட தான் விசாரணை நடக்கும்! அந்த ஒரு காரணம் தான் இப்போ உன் கிட்ட சொல்ல வெச்சது” என கடுமையாக சொல்லி விட்டுச் சென்றாள்.

 

அவள் வார்த்தைகளில் இத்தனை நேரம் இருந்த பூரிப்பு போய் விட, வலியுடன் அவள் சென்ற திசையை வெறித்துப் பார்த்தான் காளை.

 

“சாரிமா! உன்ன சந்தோஷமா வச்சுக்க முடியாத பாவியாகிட்டேன்” அவனது இதழ்கள் தன் உயிரானவளிடம் மன்னிப்பை யாசித்து நின்றன.

……………………….

 

சோஃபாவில் சாய்ந்து ஹெட்செட் வழியாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் அக்ஷரா. அவள் அருகில் வந்தமர்ந்த விஷ்வா “என்ன பண்ணுறே?” என்று கேட்க “வட சுட்டுட்டு இருக்கேன். சாப்பிடுறியா?” என்றவளை முறைத்தான்.

 

“பார்த்தா தெரியல? சாங் கேட்டுட்டு இருக்கேன். என் ஃபீலிங்க்ஸ கெடுக்காம போ” கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

 

“எனக்கும் கேட்குறதுக்கு போடு டி” என்று விஷு சொல்ல, “கேட்கல சத்தமா” என்பது போல் காதில் கை வைத்து சைகை செய்தாள்.

 

“பிகில் விஜய் நினைப்பு. அடச்சீ தா” என்றவன் அவள் காதில் இருந்து கழற்றி தனது காதில் பொருத்திக் கொண்டான்.

 

🎼 ஒரு முறை என்ன பார்த்து….

ஓரக் கண்ணில் பேசு….

நீ நெருங்கி வந்தா காதல் வாசம்….

என் உசுரு மொத்தம் உன்னை பேசும்…. 🎼

என்று ஒலித்த பாடலில் ஏதோ சுகமான உணர்வு அவனைத் தாக்க, வைஷ்ணவியின் எண்ணத்தில் அவன் முரட்டு அதரங்கள் விரிந்து கொண்டன.

 

அண்ணனின் முகத்தை வாய் திறந்து பார்த்தாள் தங்கை.

 

“அடியே” என்று அவளை உலுக்க, அப்போதும் கண் சிமிட்டாமல் நின்றவளின் வாயை அவன் மூடிவிட என்ன என்பது போல் பார்த்தாள்.

 

“நாலு கொசு வாயால போய் காது வழியா வந்தது கூட தெரியாம எதுக்கு என் மூஞ்ச பார்த்துட்டு இருந்த?” என்று கேட்கவும், “உலக அதிசயம் ஒன்னு கண்டேன்” என்ற பதிலில் புருவம் நெறித்து, “என் மூஞ்சில அப்படி என்ன அதிசயம் இருக்கு?” யோசனையானான் விஷ்வா.

 

“இதே ஷாங்க நாம அன்னிக்கு ஒரு நாளும் கேட்டோம் ஞாபகம் இருக்குல்ல. அப்போ நீ என்ன சொன்ன?” என்று கேட்டுவிட்டு “ஏன் வாய் பேச முடியாதா? எதுக்கு கண்ணால பேசணும்? அதுவும் ஓரக் கண்ணால அப்படின்னு மொக்கை பண்ண. அதுக்கு பிறகு என்ன சொன்னே” என்றவளைப் பார்த்து அசடு வழிந்து கொண்டே,

 

“காதல்ங்குறது ஒரு பூவா? அதுலருந்து எப்படி வாசம் வீசும்? நெருங்கி வந்தா அவளோட வாசம் தானே வீசும்? அது வாசமோ நாற்றமோ” அன்று சொன்னது போலவே முகத்தை சுருக்கி சொல்லிக் காட்டினான் ஆடவன்.

 

அக்ஷரா “அதே அதே தான்! அன்னைக்கு அப்படி எல்லாம் அந்த பாட்டுக்கு கன்றாவியா கமெண்ட் பண்ணிட்டு இன்னிக்கு என்னடான்னா காதல் மன்னன் ரேஞ்சுக்கு அதுல மூழ்கிட்ட. முகத்தில் வேற டியூப் லைட் எல்லாம் எரியுது…! அதான் அதிசயம்னு சொன்னேன்” என்றாள், ஏதோ அரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தது போல்.

 

“அட ஆமால்ல. இத நான் யோசிக்கவே இல்லையே” என நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

 

“ரொம்ப யோசிக்காத இட்ஸ் சிம்பிள். உன் மனசுல வைஷு ஒரு செடியை நட்டுட்டா. அது வளர்ந்து பூ பூக்கும் போது அதிலிருந்து காதல் வாசம் வீசும்” என்று பூ பூப்பது போல் சைகையை செய்து கூறினாள் அக்ஷு.

 

“உன் கற்பனைக்கு ஒரு லிமிட்டே இல்லாம போயிட்டிருக்கு. சும்மா உளறாமல் இரு” என்று முறைத்தான் விஷ்வா.

 

“பூ பூக்குதோ இல்லையோ. ஒரு நாள் கையில பூவை புடிச்சுட்டு ஐ லவ் யூ வைஷுனு அவளுக்கு கொடுக்க தான் போறே” என்றவளுக்கு ஒரு அடியைப் பரிசளித்தான் அவன்.

 

அவ்வேளை தயங்கித் தயங்கி இவர்களை நோக்கி வந்தார் நீலவேணி. அதைக் கண்டும் காணாதது போல் இருவரும் பேசிக் கொண்டிருக்க “விஷு கண்ணா” என்று அழைத்த தாயை நிமிர்ந்து பார்த்தான்.

 

“என்ன?” என்று மொட்டையாக கேட்க… “அ…அது வந்து” என்றவருக்கோ அவன் வேறு யாருடனோ பேசுவது போல் ஒட்டாமல் பேசியது வேதனையைக் கொடுத்தது.

 

“எதுக்கு கூப்பிட்டீங்களோ அதை மட்டும் சொல்லுங்க. வந்து போயினு இழுக்க வேண்டாம்” என்றான் கடுமையாக.

 

“உனக்கு நிச்சயம் பண்ணப் போற பொண்ண பார்க்க எனக்கு ஆசையா இருக்கு. அவ போட்டோ காட்டுறியா” ஆசை பொங்கக் கேட்டார் அந்தத் தாய்.

 

“எதுக்கு? இல்லை எதுக்குன்னு கேட்குறேன். ஃபோட்டோவ பார்த்து என் அண்ணிய தேடிப் போய் நிச்சயதார்த்தத்தை நிறுத்த ப்ளான் போடுறியா?” இம்முறை ஆவேசமாகக் கேட்பது அக்ஷராவின் முறையாயிற்று.

 

“இல்லம்மா நான் அப்படி செய்வேனா?” என்று கவலைப்பட, “உங்க பையன்னு சொல்லி வளர்த்த மித்துவையே மிரட்டுனீங்க. வைஷுவுக்கும் இதையே மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்றாள் காட்டமாக.

 

“குட்டிமா போதும்” என்று அதட்டிய விஷ்வா தாயின் புறம் திரும்பி “நாளைக்கு தானே நிச்சயதார்த்தம். அப்போ பாத்துக்கோங்க” என்றிட, தலையைப்புடன் சென்று விட்டார் நீலவேணி.

 

“அண்ணா! எதுக்கு என்ன அமைதியா இருக்க சொன்ன? அவங்க பண்ணத மறந்துட்டியா?” தாம் தூம் என குதித்தாள் அவள்.

 

“என்ன இருந்தாலும் அவங்க நம்ம அம்மா. தப்பு பண்ணாலும் அவங்கள ஹர்ட் பண்ணிடாத. நமக்கு பண்ணது பெரிய விஷயமாவே இருந்தாலும் அதுக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். இல்லனா கூட பரவால்ல! தயவு செஞ்சு எனக்காக அம்மாவ எதுவும் சொல்லாத” என்று விஷ்வா வசனம் பேசிட புரியாமல் பார்த்தவள், “இது யார் சொன்ன டயலாக்?” என்று சரியாகக் கேட்டிருந்தாள்.

 

“ஹி ஹி மித்து தான்! எனக்குமே மாம் மேல செம கோபம் இருக்கு டி. இப்போ கூட ஏதாவது சொல்ல வாய் துடிச்சுது. பட் அவன் அவங்கள எதுவும் சொல்ல கூடாதுனு சொன்னதால தான் அமைதியா இருந்தேன்” எனக் கூறினான் விஷ்வா.

 

“பார்த்தியா டா இவ்வளவு பண்ணியும் அவனுக்கு அம்மா மேல இருக்குற பாசம் குறையவே இல்ல. நம்மள விட அவனுக்கு அம்மாவைப் புடிக்கும்” இப்படிப்பட்ட மித்ரனை தாய் அனாதை என்றெல்லாம் வலிக்க வைத்து விட்டாரே என்ற ஆதங்கம் அவளிடம்.

 

“நாளைக்கு நிச்சயதார்த்தம்ல. உன் மூஞ்சுல எந்த பெயின்ட்டையுமே காணோமே” எனக் கேட்டவனின் குரலில் இருந்த நக்கலை அறியாமல் “பெயின்ட் பண்ணுறதுக்கு என் மூஞ்சு சுவரா?” என வினவினாள்.

 

“வெளியே போகும் போதே மேக்கப் என்குற பெயருல வெள்ளை பெயிண்ட்ட அள்ளிப் பூசிட்டு போவ. நிச்சயதார்த்தத்துக்கு அதை விட டபுளா பூச வேண்டாமா அதான் கேட்டேன்” என்று சிரித்தவனைக் கண்டு கொலை வெறியாகி, “தடிமாடு சாவுடா” என அவனை மொத்தி எடுத்தாள் அக்ஷரா.

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!