சொர்க்கம் – 25
“உன்ன எழுபது லட்சம் கொடுத்து வாங்கி இருக்கேன்.. கொடுத்த பணத்துக்கு நாய் மாதிரி விசுவாசமா இருந்துக்கோ..” எனக் கூறிய விநாயக்கின் வார்த்தைகள் அவளுக்கோ தன் மீது சகதியை அள்ளி ஊற்றியது போல இருந்தது.
உண்மைதானே.?
அவள் பணத்திற்குத்தானே விலை போய் விட்டாள்..!
கொடுத்த பணத்திற்கு நாய் போல என்னை விசுவாசமாக இருக்கச் சொல்கிறான். சரிதான்.
அடிமை வாழ்க்கை வாழ வந்துவிட்டு இப்படி முகத்தைத் திருப்புவதும் எதிர்த்து பேசுவதும் சரி இல்லைதான்.
“ம.. மன்னிச்சிடுங்க இனி எதுவுமே பேச மாட்டேன்..” எனக் குரல் நடுங்க அவனிடம் கூறியவள் கால்களை மடித்து அமர்ந்து தன்னுடைய முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் கொள்ள சில நொடிகள் அவளைப் பார்த்திருந்தவன் அதன் பின்னர் எதுவும் கூறாது காரை ஸ்டார்ட் செய்தான்.
அவனைப் பொறுத்தவரை ஒருவர் அவனை எதிர்த்துப் பேசுவதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சொல்லுவார்கள் அல்லவா அது போல ஆகிவிட்டது அவனுடைய கதை.
சிறுவயதிலிருந்தே அவனை அதட்டி மிரட்டி வளர்த்திருந்தால் அவனுக்கும் அது பழகிப் போய் இருக்கும்.
அவனுடைய பெற்றோர்கள் அவனைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கூட ஒருபோதும் அவனைத் திட்டியதோ கஷ்டப்படுத்தியதோ கிடையாது. ஏன் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் வளர வேண்டும் என்று கூட அவனுக்கு விதிமுறைகள் விதித்ததே இல்லை எனலாம்.
அளவுக்கு மிஞ்சிய பணமும் அவன் தேர்ந்தெடுத்த தொழில்துறையும் அவனை இன்னும் புகழின் உச்சிக்கு தள்ளி இருந்தது.
இவ்வாறு கட்டுப்பாடற்ற காட்டாற்று வெள்ளமாய் இருந்தவனை முதலில் திட்டியதும் செந்தூரிதான்.
அடித்ததும் செந்தூரிதான்.
இதோ இப்போது கூட அவனைப் பார்த்து முகத்தை திருப்புவதும் எதிர்த்துப் பேசுவதுமாக இருக்க அவனுக்கோ அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
அனைத்து கோபத்தையும் தன்னுடைய காரில் காட்டியவன் மித மிஞ்சிய வேகத்தில் சில நிமிடங்களிலேயே தன்னுடைய வீட்டை வந்து சேர்ந்திருந்தான்.
அவன் வந்து நின்றதும் வாட்ச்மேன் கதவை விரியத் திறக்க அவனுடைய காரோ உள்ளே புயல் போல நுழைந்தது.
காரைத் திறந்து கொண்டு கீழே இறங்கியவன் இன்னும் காருக்குள்ளேயே தன் கால்களில் முகத்தைப் புதைத்தவாறு அமர்ந்திருந்த செந்தூரியைக் கண்டு வெறியாகிப் போனான்.
“மேடம் கார்ல இருந்து கீழே இறங்கி வர மாட்டீங்களா..? உங்களுக்கு நான் கார்க் கதவை வேற திறந்து விடணுமா..?” என அவன் ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்திக் கேட்க சடாரென நிமிர்ந்தவளின் விழிகள் முழுவதும் கண்ணீரில் நிறைந்திருந்தன.
வேகமாக வெளியே வந்தவளுக்கு நிற்க முடியாது தலை சுற்றத் தொடங்கியது.
“உள்ளே போ..” என்றான் அவன்.
எதுவும் கூறாது அவனைத் தாண்டி நடந்து சென்றவளின் கால்கள் பின்னத் தொடங்கின.
வரவேற்பறைக்குள் நுழைந்து அதற்கு மேல் சமாளிக்க முடியாது அப்படியே கால்கள் மடங்கி தரையில் சரிந்து விட்டாள் அவள்.
நொடியில் அவள் மயங்கி விழுந்து விட்டதைக் கண்டதும் இவனுக்கோ எதுவும் புரியவில்லை.
ஒரு நொடி உறைந்து அசையாமல் நின்றவன் அடுத்த கணமே வேகமாக அவளை நெருங்கி அவளுடைய முகத்தைப் பார்க்க அவளோ மயக்கத்தின் பிடியில் இருந்தாள்.
நொடியும் தயங்காது அவளைத் தன்னுடைய கரங்களில் ஏந்திக் கொண்டவன் தங்களுடைய படுக்கை அறைக்குள் அவளைக் கிடத்திவிட்டு மருத்துவரை அலைபேசியில் அழைத்து உடனே அங்கே அழைத்தான்.
அவர் இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவேன் எனக் கூறி அழைப்பை துண்டித்து விட தன்னுடைய அலைபேசியை வைத்துவிட்டு தண்ணீரை எடுத்து வந்து அவளுடைய முகத்தில் தெளிக்க இமைகளை மிகச் சிரமப்பட்டு பிரித்து அவனைப் பார்த்தாள் செந்தூரி.
“ஆர் யூ ஓகே..?”
“ம்ம்..”
“மயங்கி விழுற அளவுக்கு உனக்கு என்ன ஆச்சு..?” மென்மையாக வெளிவந்தன அவனுடைய வார்த்தைகள்.
“எ.. எதுவுமே சாப்பிடல…”
“வாட்…? கடைசியாக எப்போ சாப்பிட்ட..?”
“இங்க வந்ததுல இருந்து நான் சாப்பிடவே இல்லை.. ரொம்ப சோர்வா இருக்கு.. அதனாலதான் இந்த மயக்கம்னு நினைக்கிறேன்..” என அவள் கூறியதும் அதிர்ந்து போனான் அவன்.
அவன் ஒரு நேர உணவைக் கூட இதுவரை தவறவிடவில்லையே.
“என்ன சொல்ற..? நான் சாப்பிடும் போது எல்லாம் நீயும் என் கூட தானே இருந்த..?”
“உங்ககூடதான் இருந்தேன்.. ஆனா சாப்பிடலை..”
“வாட் முட்டாளா நீ..?” என அவன் திட்டிக் கொண்டிருக்கும் போதே வைத்தியர் வெளியே வந்து காத்திருப்பதாக அவனுக்கு அழைப்பு வர பெருமூச்சுடன் வைத்தியரை உள்ளே அழைத்து வரும்படி கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் விநாயக்.
சில நிமிடங்களில் உள்ளே வந்த வைத்தியரோ அவளை பரிசோதித்து விட்டு அவரிடம் சில கேள்விகளை கேட்டு முடித்ததன் பின் “இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க…” என விநாயக்கிடம் கூறினார்.
“ட்ரிப்ஸ் போட்டு விடட்டுமா..?” என வைத்தியர் கேட்க பதறிப் போய் வேண்டாம் என மறுப்பாக தலை அசைத்தாள் செந்தூரி.
“எனக்கு ஊசின்னாலே ரொம்ப பயம்.. ப்ளீஸ் அதெல்லாம் வேணாம்..” என மறுத்தவளை முறைத்தவன் டாக்டரை அனுப்பிவிட்டு அவள் அருகே வந்தான்.
“சாப்பாடு இங்க ரூம்கே வரும்.. எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிட்டு கொஞ்சம் தூங்கு..” என்றவன் அங்கிருந்து சென்றுவிட விழிகளை மூடிக் கொண்டவளுக்கு பசியில் வயிறு அலறத் தொடங்கி விட்டது.
அவன் கூறிவிட்டு சென்றதைப் போலவே சில நொடிகளில் உணவு அவளைத் தேடி வந்து விட மெல்ல எழுந்து அமர்ந்தவள் தன் முன்னே வைக்கப்பட்டிருந்த மூன்று தட்டுகளை விழி விரித்துப் பார்த்தாள்.
ஒரு தட்டில் சப்பாத்தியும் குருமாவும் இருந்தது.
மற்றைய இரண்டில் தோசையும் இட்லியும் இருக்க எதை முதலில் சாப்பிடுவது எனச் சிந்தித்தவள் சப்பாத்தியை முதலில் எடுத்து வேகமாக உண்ணத் தொடங்கினாள்.
அவளுடைய பசிக்கு அதுவோ அமிர்தமாக இருந்தது.
அவள் ஆரம்பித்த வேகத்திலேயே சப்பாத்தி முடிந்து விட அவளுடைய அடுத்த குறி தோசையாக மாறிப்போனது.
அந்தத் தட்டில் இருந்த மூன்று தோசைகளையும் உண்டு முடித்தவளின் பார்வை இட்லியை மேய,
அதையும் ஏன் விட்டுவைக்க வேண்டும் என எண்ணியவள் நான்கு இட்லிகளில் இரண்டு இட்லியைப் பிசைந்து உண்டு விட்டு நிமிரும் போது அவளை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் விநாயக்.
‘அச்சோ இவன் எப்ப வந்தான்னு தெரியலையே.. நான் இவ்வளவு வேகமா சாப்பிடுறத பார்த்து என்ன நினைச்சு இருப்பான்..?’ என எண்ணி அவள் தலையை குனிந்தவாறு தட்டை வைக்க,
“இவ்வளவு போதுமா..? எதுக்கு அந்த இட்லியையும் மிச்சம் வச்சிருக்க..? அதையும் சாப்பிடு..” என உண்மையான அக்கறையில் அவன் கூற,
அவளுக்கோ அவன் தன்னை கேலி செய்வது போல இருந்தது.
“இல்ல எனக்கு போதும்..” என மறுத்தவள் தட்டை மேசை மீது வைத்து விட்டு கைகளைக் கழுவிக் கொண்டு மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்து விட்டாள்.
“இன்னைல இருந்து நான் சாப்பிடும் போது நீயும் சாப்பிட்டு முடிச்சிருக்கணும்..” என புது கட்டளை விதித்தான் அவன்.
“நீங்கதான் உங்களுக்கு ஊட்டி விடணும்னு சொல்லி இருக்கீங்களே..”
“அப்போ நான் சாப்பிட முதலே நீ சாப்பிட்டு முடிச்சிடு.. அதுக்கு அப்புறமா எனக்கு ஊட்டி விடு..”
“ம்ம்..” என்றாள் அவள்.
அவளுக்கோ மறுக்கத் தோன்றவில்லை.
எப்படியும் சில நாட்கள் இங்கேதான் இருக்க வேண்டும்.
அதுவரை அவளால் உணவில்லாமல் வாழ முடியாது.
மறுத்து பிடிவாதம் பிடிப்பதை விட கிடைக்கும் உணவை உண்டு விட்டு தெம்பாக இருந்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தவள் சரி என்று இருந்தாள்.
அதன் பின்னர் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.
அவனும் வெளியே சென்றுவிட அவளோ பல்கனியில் தஞ்சம் அடைந்தாள்.
அவளுக்கு தனிமையில் நேரம் போனதே தெரியவில்லை.
சற்று நேரத்தில் அவளை விநாயக் அழைத்ததாக கீழே வரச் சொல்லும்போதுதான் இரவு நேரம் வந்துவிட்டது என உணர்ந்தவள் கீழே சென்றாள்.
அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவன் அவளைப் பார்வையால் அருகே அழைக்க மீண்டும் மீண்டுமா எனத் தோன்றியது அவளுக்கு.
எதுவும் பேசாமல் அங்கே இருந்த உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விடத் தொடங்கியவளுக்கு தன்னுடைய கரங்களின் மீது கோபம் எழுந்தது.
ஒவ்வொரு முறை அவனுக்கு உணவு ஊட்டும் போதும் அவனுடைய உதடுகள் தன் விரல்களில் உராய்வதை உணர்ந்தவள் வெறுப்போடு தன் கரத்தை வெறித்துப் பார்த்தாள்.
ஒருவாறாக உணவை ஊட்டி முடித்ததும் அவளை உண்ணும் படி கூறினான் விநாயக்.
“நீங்க போங்க.. நான் சாப்பிடுறேன்..” என்றாள் அவள்.
“இல்ல என் முன்னாடியே சாப்பிடு.. நான் போனதுக்கப்புறம் நீ சாப்பிடாம வந்துட்டேன்னா உன்னோட உடம்பு இன்னும் வீக்காகிடும்..” எனக் கூற அவளுக்கு வியப்பாக இருந்தது.
இவனுக்கு எப்போது தன் மீது அக்கறை முளைத்தது என எண்ணி அவள் அமைதியாக உணவுத் தட்டை எடுத்து உண்ணத் தொடங்க,
“நீ சாப்பிட்டு ஸ்ட்ரோங்கா இருந்தா தானே என்னால உன்ன பழி வாங்க முடியும்..” எனக் கூறி அவளுடைய வியப்பை ஒன்றுமில்லாமல் செய்திருந்தான் அவன்.
அதற்கு மேல் அவளால் அந்த உணவைத் தொட முடியவில்லை.
சாப்பிட்டேன் என பேர் பண்ணிவிட்டு எழுந்து கைகளைக் கழுவச் சென்றுவிட அதன் பின்னர் அவனும் தன்னுடைய அறைக்குச் சென்றிருந்தான்.
இனி அறைக்குள் சென்றால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தவளுக்கு மனம் படபடக்கத் தொடங்கியது.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாலும் யாராவது ஒருவர் வந்து எழுந்து செல்லச் சொல்லி விடுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தவள் மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினாள்.
இதயம் மீண்டும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
நேற்றைய இரவு அவள் பட்ட துயரத்தை வார்த்தைகளால் கூறிவிட முடியாதே.
மீண்டும் அவன் முன்பு அனைத்து ஆடைகளிலும் களைந்து விட்டு நிர்வாணமாக நிற்க வேண்டுமா..?
அந்த நினைப்பே அவளுக்கு உச்சகட்ட வெறுப்பை உண்டு பண்ணியது.
தினம் தினம் விபச்சாரத்திற்கு செல்வதைப் போல அவளுடைய உடல் கூசியது.
தனக்கு சொந்தமே இல்லாத வேற்று ஆடவனின் முன்பு தன் உடலை காண்பிக்க வேண்டி இருக்கிறதே என்ற அவலம் அவளை உயிரோடு கொன்றது.
இதைவிட அவன் ஊரின் முன்னே அவளுடைய கன்னத்தில் அறைந்திருக்கலாம்.
அந்த வலி கூட அவளுக்கு சீக்கிரமே இல்லாது போயிருக்கும். ஆனால் அவன் இங்கே அழைத்து வந்து நான்கு சுவருக்குள் யாருக்கும் தெரியாது கொடுக்கும் இந்தத் தண்டனை எவ்வளவு கொடியது.
அதை நினைக்கும் போதெல்லாம் அவளுடைய மூச்சு முட்டுகின்றதே.
தேகம் அருவருப்பில் கூனிக் குறுகுகின்றதே.
விழிகளில் கண்ணீர் வழுந்தே விட துடைத்துவிட்டு அந்த அறைக் கதவில் தன்னுடைய கரத்தை வைத்தவளுக்கு கரங்கள் நடுங்க ஆரம்பித்தன.
அவன 🔪🔪🔪🔪🔪🔪🔪
So sad