43. விஷ்வ மித்ரன்

0
(0)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 43

 

மாலை மயங்கும் நேரம், அவளின் அழகில் மயங்கியவனோ, தன்னை அழைத்தவளைக் கேள்வியோடு ஏறிட்டான் அருள் மித்ரன்.

 

“எங்கே போகப் போறோம்?” புரியாத பாவனையில் கேட்டான் அவன்.

 

“அதையெல்லாம் சொல்ல முடியாது. கூட்டிட்டுப் போனதும் தெரியப் போகுது. நான் போய் பைக் எடுத்துட்டு வரேன்” கண்களைச் சிமிட்டினாள் அக்ஷரா.

 

“எதே நீ பைக் ஓட்டப் போறியா? ஏன்மா இந்தக் கொலை காண்டு?” பயத்துடன் நிற்கலானான் அவன்.

 

“மூடிட்டு வராமல் ஓவர் ரியாக்ஷன் கொடுத்தா உன் மேலேயே வண்டியை ஏத்திருவேன்” என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய,

 

“சரிடி எதுவும் பேசலை. ஆனால் கொஞ்சம் மெதுவா போ” என அவள் பின்னால் அமர்ந்து கொண்டான்.

 

புன்னகையுடன் கண்ணாடி வழியாகப் பார்த்தவளின் தோளில் கை போட்டான். சிறிது நொடிகளில் அவன் விரல்கள் கழுத்தில் சில்மிஷம் புரியத் துவங்க, “அருளு! சும்மா வா டா” என நெளிந்தாள் அவள்.

 

“நான் உன்னை எதுவும் பண்ணலை. என் பொண்டாட்டியைத் தான் பிடிச்சிட்டு இருக்கேன்” என கிசு கிசுத்தான் அருள்.

 

“அன்னிக்கு நான் பண்ணுனதை வேணும்னே ரிப்பீட் பண்ணுறியா? கூச்சமா இருக்கு” என்று கடுகடுக்க, சிரிப்புடன் கையை எடுத்துக் கொண்டான்.

 

நேரே வண்டியை நிறுத்தியது அவன் கற்ற காலேஜ் அருகில் உள்ள பானிப்பூரி கடையில் தான். “ஹேய் என் ஃபேவரைட் ப்ளேஸ்!” கண்கள் பளிச்சிட சொன்னான்.

 

“அப்படியா….??”

 

“ம்ம். காலேஜ் முடிந்து வரும் போது தினமும் விஷு கூட போய் பானிப்பூரி சாப்பிடுவேன். அவனுக்குப் பிடிக்கலைனாலும் எனக்காக வருவான். அந்த காலத்தில் எனக்கு இது ட்ரக் மாதிரி. அதுவும் செடர்டே விஷு கூட வருவேன். அந்த நாளைக்கு பானிப்பூரி ஸ்பெஷல் டேஸ்டா இருக்கும்.

 

அதைப் பண்ணுறது ஒரு பொண்ணுனு கடைக்கார அண்ணா சொன்னார். அந்த பொண்ணைப் பார்க்கனும்னு ஆசை” 

 

“அடிங்ங் படவா. ஒரு பொண்ணைப் பார்க்க ஆசைனு என் கிட்டயே சொல்லுவியா?” முறைப்புடன் பார்த்தாள் அக்ஷு.

 

“உன் கிட்ட சொல்லாமல் வேறு யார் கிட்ட டி சொல்லுவேன்? எல்லா விஷயத்தையும் என் செல்லப் பொண்டாட்டி உன் கூட தானே பகிர்ந்துக்க முடியும்” அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டான் மித்து.

 

“உடனே ஐஸ் வெச்சு தப்பிச்சுக்க. இன்னிக்கு சனிக்கிழமை தான். அந்த பொண்ணு இருக்காளானு போய் பார்க்கலாம்” அவன் கைகளைப் பிடித்து உள்ளே நுழைந்தாள்.

 

“ஹேய் பாசசிவ் குயீன். உனக்கு கோபமே வரலையா?அந்தப் பெண்ணைப் பார்க்கவே கூடாதுன்னு இழுத்துட்டு போயிருவியோனு நினைச்சேன்” வியந்து பார்த்தான் அவளை.

 

“ரொம்ப யோசிக்காம அண்ணாச்சி கூட பேசிட்டு இரு” எனும் போது அவள் அவைபேசி அலற, “ஒன் மினிட் அருள்” என்று வெளியே சென்று அழைப்பை ஏற்றாள்.

 

“மித்து! ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. எங்களை எல்லாம் மறந்துட்டியாப்பா?” என்று கேட்டார் கடைக்காரர்.

 

“அவ்வளவு சீக்கிரம் இந்த கடையை, உங்களை எல்லாம் மறக்க முடியாதுண்ணா. விஷு கூட நான் போற எந்த இடமும் என் நினைவை விட்டு நீங்காது”

 

“அது சரி. அந்த பானிப்பூரி பொண்ணு இன்னிக்குனு பார்த்து வந்திருக்கா” என்று சொல்ல,

 

“அப்படியா?” என விழி விரித்தான்.

 

“ம்ம் அதுக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. உனக்காக ஸ்பெஷலா செஞ்சிட்டிருக்கா. அவ கையிலேயே கொடுத்து விடுறேன்” என உள்ளே சென்று விட ஏனோ அவன் மனம் படபடவென அடித்துக் கொண்டது.

 

“இந்த அம்முலு எங்கே போனாளோ? யாராவது கால் எடுத்தா அதிலேயே மூழ்கிப் போயிர வேண்டியது” என்று அலுத்துக் கொள்ள, ஒரு பெண் வந்தாள்.

 

“நீயாம்மா பானிப்பூரி செய்தது?” என்று கேட்டவனிடம், “இல்லை என் அக்கா செஞ்சது. அவங்க உள்ளே தான் இருக்காங்க. உங்களை வரச் சொன்னாங்க” என்று விட்டுச் சென்றாள்.

 

அவனுக்கோ ஒரு வித தயக்கம். தனியாக செல்வது சரியில்லை அக்ஷு வரட்டும் என்று காத்திருக்க, முதலில் வந்த பெண் மீண்டும் வந்து அவனை கையோடு கூட்டிச் சென்றாள்.

 

அடர்சிவப்பு நிறத்தில் பாவாடை தாவணி அணிந்து முதுகு காட்டி நின்றவளைக் கண்டு திரும்பிச் செல்ல எத்தனிக்க, “ஹலோ சார்! இங்கே வந்துட்டு பானிப்பூரி சாப்பிடாம போகக் கூடாது. வாங்க” எனற குரல் அவன் செவி தீண்டியது.

 

சடாரெனத் திரும்பினான் மித்ரன். விரிந்த விழிகள் மூட மறுத்தன. பாவாடை தாவணியில் கையில் தட்டுடன் இதழ்களில் புன்னகை தவழ, இடையில் ஒற்றைக் கையைக் குற்றி நின்றிருந்தாள் அவள்.

அவனவள். அருளின் அவள்!

அக்ஷரா.

 

“அ…அம்முலு நீயா? எப்படி?” என்றவனுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சற்று நேரம் தேவைப்பட்டது.

 

அவளை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. “எஸ் இட்ஸ் மீ மை லவ்லி அருள்” ஒய்யாரமாய் நடந்து அருகில் வந்தவள் அவன் வாயில் தன் கையால் செய்ததை ஊட்டி விட்டாள்.

 

அதைச் சுவைத்தவனுக்கோ மனதெங்கும் பரவசம் ஊற்றெடுத்தது.

 

“என்னை நீ எதிர்பார்த்து இருக்க மாட்டியே. நீ காலேஜ் விட்டு வரும் போது இங்கே வர்ரதைக் கண்டு அண்ணாச்சி கிட்ட கெஞ்சி கூத்தாடி எப்படியோ கத்துக்கிட்டேன். உனக்காக செடர்டே மட்டும் இங்கே வந்து செஞ்சு குடுத்து, நீ அதை சாப்பிடுறதை மறைஞ்சு இருந்து பார்த்து சந்தோஷப்படுவேன்” என்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான் மித்ரன்.

 

“ஐ கான்ட் கன்ட்ரோல் டி. எனக்காக நீ எவ்ளோ பண்ணி இருக்கே. உன் காதலுக்கு முன்னாடி நான்லாம் நிற்க முடியாது டி. நான் காலேஜ் போகும் போது உனக்கு சின்ன வயசு. அப்போ இருந்து எனக்காக நீ வாழ்ந்திருக்கே” அவளைத் தனக்குள் புதைத்துக் கொள்ளும் வேகம் அவனுக்கு.

 

“வாழுறது என்னடா உனக்காக தானே நான் பிறந்தேன்? அப்புறம் உனக்காக வாழாம யாருக்காக வாழ்வேன்? அப்போவே உன் முன்னாடி வரத் தான் துடிச்சேன். ஆனாலும் இதே மாதிரி கல்யாணம் முடிஞ்சு உன்னைக் கூட்டிட்டு வந்து சப்ரைஸ் பண்ணனும்னு இருந்தேன். அதே மாதிரி பண்ணிட்டேன்” அவன் மார்பில் தஞ்சம் கொண்டாள் காரிகை.

 

“லவ் யூ டி அம்முலு” அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைத்தான் வேங்கை.

 

“ஐ லவ் யூ டூ டா” அவனது உணர்ச்சிகள் நிறைந்த முத்தத்தில் புதிதாய் ஜனித்தாள் அவள்.

 

அவனிடமிருந்து விலகியவள் அவனுக்காக பானிப்பூரி செய்ய, அவளை ரசனையுடனும் காதலுடனும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். திடீரென சிரித்து விட, “என்னடா தனியா சிரிக்கிறே?” என வினவினாள்.

 

“உனக்கு இதெல்லாம் செய்யத் தெரியும்னு சொன்னா விஷுக்கு மைல்ட் அட்டாக்கே வந்துரும். உன் காஃபிக்கே அந்த அலப்பறை பண்ணுவான். இதைக் கேட்டா அவ்வளவு தான். அதை நினைச்சதும் சிரிப்பு வந்துருச்சு”

 

“அவன் எப்போ தான் என்னை சும்மா இருக்க விடுவான்? சின்ன வயசுல இருந்து இன்னிக்கு வரைக்கும் என்னைக் கடுப்பேத்தி, நக்கலடிக்கிறதில் அப்படி ஒரு சந்தோஷம். கிறுக்குப் பய” சிரிப்புடன் கூறினாள் அக்ஷரா.

 

“அடி ராட்சசி! அவன் கிறுக்குப் பயலா?” என்று அவளது மூக்கைக் கிள்ளினான்.

 

“ஆமா! அந்தக் கிறுக்கு அவனோட வீணாப் போன ப்ரெண்டுக்கும் வந்திருக்கு”

 

“வருமே வருமே. உன்னைக் கண்டால் கிறுக்கு மண்டைக்கு ஜிவ்வுனு ஏறிடும். அப்புறம் உன்னையும் அப்படியே பறக்க வைக்க தோணும்” அவளைத் தூக்கிக் கொண்டான் ஆடவன்.

 

“விடு மித்து”

 

“முடியாது டி. அதெப்படி குயிக்கா ட்ரெஸ் கூட சேன்ஜ் பண்ணுன?” விலகிய தாவணி வழியே ஒளிக்கீற்றாக அவன் பார்வை ஊடுறுவியது.

 

“எல்லாம் பக்கா ப்ளானிங்கு. அண்ணாச்சி தான் நான் சொன்னபடி கோல் பண்ணார். ஆன்ஸ்வர் பண்ணுற மாதிரி கொல்லைப் புறமா போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு இங்கே வந்துட்டேன்” குறும்பாக கண்ணடித்தவளின் பற்களுக்குள் அகப்பட்ட இதழைப் பிரித்தெடுத்து தன் பற்களுக்கு இரையாக்கி இதழ்களுக்கு விருந்தாக்கத் தான் மனம் பரபரபத்தது அவனுக்கு.

 

“நல்லா பண்ணி இருக்கே ப்ளான். உன்னைப் பார்க்கும் போது எனக்கு இப்போ ஒரு சூப்பரான ப்ளான் தோணுது”

 

“என்ன ப்ளான்? நல்லா இருந்தால் வர்க்அவுட் பண்ணிரலாம்” கேள்வியாக அவனை நோக்கினாள் அவள்.

 

“உன்னை அப்படியே நெருங்கி முத்தத்தால் குளிப்பாட்டி….” என மேலே சொல்ல வந்தவனின் வாயைத் தன் கரம் கொண்டு அடைத்தாள்.

 

“ஷ்ஷ்! உன் சில்மிஷம் எல்லாம் வீட்டோட நிறுத்திக்க. நமக்கு ப்ரைவசி தந்துட்டு கடைக்கார அண்ணாவும் அவரோட பொண்ணும் இருக்காங்க. வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்” கண்களை உருட்டி மிரட்டினாள்.

 

“ஹேய் போடி. உன் கூட முடியல”

 

“உனக்கு எப்போ பாரு முத்தமும் அதுவும் இதுவும் தான். சமத்து பையனா இரு. இல்லேனா சூடு வெச்சிருவேன்” அடுப்பில் எரியும் கொல்லியைக் காட்டினாள்.

 

“ஆத்தீஈ! வில்லங்கம் புடிச்சவ பண்ணுனாலும் பண்ணுவாள்” வாயில் கை வைத்து நல்ல பிள்ளையாக இருந்தவனைக் கண்டு மனைவிக்கு இதழோரம் மென்னகை பரவியது.

 

……………………

கட்டிலில் ஏறி அலுமாரியில் ஏதோ எடுக்க எட்டிக் கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு பக்கென சிரித்து விட்டான் விஷ்வா.

 

இவ்வளவு நேரம் அவள் செய்யும் வேலைகளைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றவன் இப்போது அடக்க முடியாமல் சிரிப்பை வெளிப்படையாக வெளியிட்டான்.

 

“சிரிக்காதீங்க. கடுப்பாகுது” கடுப்புடன் அவனைப் பார்த்தாள் வைஷ்ணவி.

 

“எனக்கு கிக்கா ஃபீலாகுது. அப்படியே கொஞ்சம் பில்லோவை அடுக்கி அது மேல ஏறி ட்ரை பண்ணு” சிரிப்பூடே அவன் சொல்ல,

 

“என்னைப் பார்த்தால் நிலத்தோடு ஒட்டிக்கிட்ட மாதிரி இருக்கா? அந்தளவுக்கு ஒன்னும் நான் உயரம் குறைவில்லை” தீயென முறைத்தாள் அவள்.

 

“அந்தளவுக்கு உயரம் இல்லைனு சொல்லு குள்ளச்சி” என்க, கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கி சாரியை இடையில் சொருகிக் கொண்டு, “என்ன சொன்னீங்க? ஹான் திரும்ப சொல்லுங்க” என்று கேட்டாள்.

 

“ஒரு வாட்டி இல்லை எத்தனை தடவை கேட்டாலும் சொல்லுவேன். குள்ளக் கத்திரிக்காய், குள்ளச்சி, குட்டி பேபி” என்று கத்தினான்.

 

“உங்களை இப்படியே விடக் கூடாது. வாய் ஓவர் உங்களுக்கு” என அவனைத் தள்ளி விட கட்டிலில் விழுந்தான்.

 

“நீங்க நெடு நெடுன்னு வளரத் தெரியாமல் வளர்ந்தா நான் என்ன செய்ய முடியும்? இன்னிக்கு இந்த வாய்க்கு ஒரு வழி பண்ணுவேன்” இருந்த கடுப்பில் அவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

அவனுக்கு அடிக்க வந்தவள், முழுதாக அவன் மீது படர்ந்திட அவனுக்கு அடிப்பதை நோக்கமாகக் கொண்டவளோ அவன் வாயில் அடித்தாள்.

 

ஆனால் அவள் பால் மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருக்கும் ஆணவனுக்கோ தன் உயிரானவளின் ஸ்பரிசமும், அவள் மேனியில் வீசும் பிரத்தியேக வாசனையும் ஓர் இன்ப அவஸ்தையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

 

“எந்திரு நவி” அவளை விலக்க முயன்றான் விஷ்வா.

 

ஆனால் அவளோ அவன் நிலை உணராமல், “முடியாது. உங்களை விட மாட்டேன். அப்படியே கொஞ்ச நேரம் இருங்க” என்று சொல்ல, அவன் நிலை இன்னும் மோசமாகிப் போனது.

 

போதாததற்கு பளிச்சென்று தெரிந்த வெற்றிடை வேறு அவனைப் பித்தம் கொள்ளச் செய்ய, இடை தீண்டி இதழ் பதிக்கச் சொல்லும் இருதயத்தின் உணர்வுக் குவியலை அடக்க முடியாமல் திண்டாடினான் அவன்.

 

“என்ன சைலன்ட் ஆகிட்டீங்க?” என்று பார்த்தவளுக்கோ அவனது பார்வையில் நெஞ்சம் சில்லிட பட்டென எழுந்தவளுக்கு தன்னை நிலைப்படுத்த சில நொடிகள் சென்றன.

 

“அ…அது மேலே என் ட்ரெஸ் வெச்சிருக்கும் பேக் விழுந்துச்சு. எடுத்து தரீங்களா?” மெல்லிய குரலில் கேட்க,

 

“நீயே எடுத்துக்க” என்று அவளைத் தூக்க, எடுத்துக் கொண்டாள்.

 

கீழே இறக்கி விடும் போது மின்னல் கீற்றாக ஒளிர்ந்த இடையில் குடி கொள்ளத் தான் ஆவல் கிளர்ந்தெழுந்தது. கால் வழுக்கி விழப் போனவளின் இடை பற்றித் தாங்கினான் அவன்.

 

அவளோ அதிர்ந்து போய் பார்க்க, ரதியவளின் விரிந்த விழிகளில் விழுந்து தான் போகலானான் மன்மதன் அவனும்.

 

“வி…விஷு” காற்றோடு கலந்த அக்குரல் அவளுக்கே கேட்கவில்லை என்பது தான் உண்மை.

 

குயிலினும் இனிய குரல் அவனது இதய வீணையை இதமாய் இசை மீட்டியது போலிருந்தது. அவளை தன்னிலிருந்து விலக்க அவனுக்கு மனமே இல்லை.

 

அவனில் இருந்து விடுபட அவளும் முயற்சிக்கவில்லை. தன்னை இதயத்தில் சிறைப்பிடித்து, தனது இதயத்தில் முடிசூடியிருக்கும் மன்னவனின் கைச்சிறையில் இருந்து விலகவும் முடியுமோ அவளால்? சொர்க்கத்தில் இருப்பது போல் மிதந்தாள் மங்கை.

 

இடையில் பதிந்த கரத்தை விலக்கி தன்னை நோக்கி இழுக்க அவன் மார்பில் மோதி நின்றாள் நவி. அவளை மேலும் தன்னோடு சேர்த்துக் கொண்டான் அவன்.

 

இத்தனை நாட்கள் சேர்த்து வைத்திருந்த மொத்தக் காதலையும் அவளில் இனிய சுமையாய் இறக்கி வைத்திட மனம் துடித்தது. தன்னுள் அவளைச் சுமந்து வாழ்வின் எல்லை வரை செல்ல நினைத்தது.

 

ஒற்றைக் கை மேலெழுந்து அவளது கன்னக்கதுப்பை வருட, அந்த மென்மையைத் தன் இதழ்களும் சுகித்திட வேண்டுமென எண்ணி அவளை நெருங்கினான் விஷ்வா.

 

அவன் செய்யப் போகும் காரியம் உணர்ந்து நாணத்துடன் இமை மூடியவளின் மனதில் சம்மட்டியால் அடித்தது போல் தோன்றியது ஆராவின் நினைவு.

 

‘இதை மறைத்து அவனோடு வாழ்வது சரி தானா? இல்லை அவனுக்கும் தனக்கும் எந்த ஒளிவு மறைவுமே இருக்கக் கூடாது. நிச்சயம் கோபப்படுவான், ஆனால் இதை வாழ்நாள் முழுவதும் மறைத்து விடுவது தவறு’ என மனம் சண்டித்தனம் செய்தது.

 

எனவே சொல்லி விட முடிவு செய்தாள். மனம் சுணங்கினாலும் அதை மறைத்து குற்றவுணர்ச்சியோடு வாழ்வதை விட சொல்வதே மேல் என்று எண்ணினாள்.

 

ஆக! சொன்னாள். சொல்லி முடிப்பதற்குள் திக்கித் திணறித் தான் போனாள். இறுதியாக அவன் முகத்தை ஏறிட்டாள்.

 

இதுவரை தன்னைச் சூழ்ந்திருந்த மோகவலை முற்றாக கிழித்து எறியப்பட, அவளை விட்டும் தீச்சுட்டாற்போல் விலகினான் விஷ்வஜித்.

 

எதிர்பார்த்தது தான்!

ஆனாலும் வலித்தது அவளுக்கு. தெரியாமல் செய்து விட்டேன் என்று அதனைச் சரி செய்யவும் நா எழவில்லை. தெரிந்தோ தெரியாமலோ அவனைத் தவறாக நினைத்து விட்டாள் அல்லவா?

 

“யாரோ ஒருத்தி சொன்னதுக்காக என்னை சந்தேகப்பட்டு இருக்கியே. அவள் யாரோ எவளோ எனக்கு அது அவசியமே இல்லை. ஆனால் நீ…?

 

உன்னை எவ்ளோ நேசிச்சேன். ஆனால் அதற்குப் பதில் நீ என்னைத் துரோகியாக நினைச்சது தானா?” வலி நிறைந்த குரலில் சொன்னான் அவன்.

 

“விஷ்வா…..!!”

 

“ம்ம் விஷ்வா. நீ சந்தேகப்பட்ட அதே விஷ்வா தான். உன்னை சந்தித்தித்த நாளில் இருந்து ஒவ்வொரு தடவையும் என்னை தப்பா தான் புரிஞ்சுக்கிட்ட. அக்ஷுவை என் லவ்வர்னு நினைச்சுக்கிட்ட, அதற்கு நான் உன்னை க்ளப் வைஷ்ணவினு ஒரு பெயரைச் சொல்லி டீஸ் பண்ணுனது காரணம்னு சொன்னே. ஏத்துக்கிட்டேன்.

 

ஆனால் நீ இவ்ளோ ச்சீப்பா என்னை நினைக்க என்ன காரணம்? ஹ்ம் நம்பிக்கை! கல்யாணம் பண்ணுன புருஷன் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? இப்படி நம்பிக்கை இல்லாமல் உன்னைக் கட்டிக்கிட்டதை நினைச்சு வருத்தப்படுறேன்.

 

லவ் பண்ணி கழற்றி விட்டு, கல்யாணம் பண்ணி டிவோர்ஸ் பண்ணி ச்சே! அந்தளவுக்கு கேவலமானவனா உன் பார்வைக்கு நான் தெரிஞ்சிருக்கேன்” தலையை அழுந்தக் கோதிக் கொண்டான் அவன்.

 

நினைக்க நினைக்க மனம் தாளவில்லை. இதயத்தை யாரோ கத்தியால் குத்திக் கிழிப்பது போன்று இருந்தது. நாம் நேசிப்பவர்கள் எம்மை சொற்பளவு தவறாக நினைப்பது தாங்க முடியாத ஒரு வலியைத் தான் கொடுக்கும் அல்லவா?

 

“விஷ்வா நான் நடந்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கவலைப்படாதீங்க. உங்களை என்னால இப்படி பார்க்க முடியலை” கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு கூறினாள் வைஷு.

 

“எப்படி டி கவலைப்படாமல் இருக்க முடியும்? ஒருத்தியைக் கல்யாணம் பண்ணி அவளை உள்ளுக்குள் உருகி உருகி காதலிச்சு, இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம்னு ஒவ்வொரு நொடியும் அவளுக்கு ப்ரபோஸ் பண்ண ப்ளான் பண்ணி, என் காதலை அவளுக்கு ரொம்ப எதிர்பார்ப்போடு சொல்ல வர்ர நேரத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்தால் எப்படி சும்மா இருக்க முடியும்?

 

அதுவும் மித்துவை நினைக்கும் போது முடியல டி. ஒரு பொண்ணோட அண்ணன் அவ சொன்னதை நம்பி நான் அவளைக் காதலிச்சு கை விட்டுட்டேனு சொன்னதுக்கு ரொம்ப கோபப்பட்டு அவனைப் போட்டு அந்த மாதிரி அடிச்சான்.

 

அவனோட கோவத்துக்குப் பின்னாடி கவலை இருக்கும். அதீத கவலை அவனுக்கு கோபத்தைக் கொடுக்கும். அவனைக் கவலைப்பட வெச்சுட்டான்னு நான் அந்த பையனை அடிச்சேன்.

 

ஆனா இப்போ நீ என்னை அவ்ளோ தப்பா பேசியதைக் கேட்டு அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? அவனுக்கு கோபம் வந்திருக்குன்னா அவன் மனசு நிச்சயம் காயப்பட்டிருக்கும். அதுவும் அவன் உயிரையே வெச்சிருக்குற நீ என்னைப் பத்தி பேசும் போது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்.

 

நீ என்னை மட்டுமல்ல. என் மித்துவையும் சேர்த்து நோகடிச்சுட்ட. போ நவி” கோபத்துடன் அறைக்கதவைக் காலால் உதைத்து விட்டுச் சென்றான் அவன்.

 

அவனது கோபத்தில் உடைந்து போய் உறைந்து நின்றவளின் விழிகளில் அணை கடந்து பாய்ந்தது, கண்ணீர் வெள்ளம்!

 

நட்பு தொடரும்…….!!

 

✒️ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!