விஷ்வ மித்ரன்
💙 நட்பு 50
பாதையில் இருளின் இடையே மெல்லமாய்க் கசிந்த ஒளிக் கீற்றை ஊன்றி அவதானித்தாள் வைஷ்ணவி.
ஓர் ஆடவன் வருவது நிழலாகத் தெரிய, அச்சத்தில் உள்ளம் பதை பதைத்தது. திரும்பிப் பார்க்க அங்கோ விஷ்வாவைக் காணவில்லை. இன்னும் பயந்து போனாள் அவள்.
அந்த உருவம் அவளை நெருங்கி வந்த சமயம் வீதி விளக்கும் அணைந்து விட, “விஷு” என அவள் அதிர்ந்தாள்.
“ஹேய் பேபி! ஐ லைக் யூ” இருளில் கரகரத்த ஒரு மாதிரியான குரலில் அவள் கையைப் பிடித்தது ஒரு கரம்.
“யா… யாரு? யாரு” கையை விலக்கி விட முயன்றாள் நவி.
“யார்னு தெரியலையா பேபி? உன் விஷு உன்னை விட்டுப் போனதைப் பார்த்தேன். உனக்கு அவன் வேணாம். நான் இருப்பேன் உனக்காக!” கைப்பிடி இறுகியது.
“ஆர் யூ க்ரேசி? எனக்கு என் விஷு மட்டுமே வேணும். வெறுத்தாலும் மறுத்தாலும் எனக்கு அவர் போதும்”
வெடித்துச் சிரித்தான் அந்த ஆடவன். அக்காரிருளில் அச்சிரிப்பு எங்கும் எதிரொலித்தது பயங்கரமாக இருந்தது.
“ஏன் இப்படி சிரிக்கிறீங்க?” அதிர்வுடன் கேட்டவளுக்கு பதிலளிக்காமல் சிரித்தான்.
சிறிது நேரத்தில் அவனது சத்தம் இல்லாததால் ஒரு வேளை சென்று விட்டானோ என்று நினைத்து கைகளை வீசி அவனைப் பிடிக்கப் பார்த்தாள். ஏனோ அவன் மீது ஓர் உணர்வு அவளுக்கு.
திரும்பி வேகமாகச் செல்ல ஒரு அடி எடுத்து வைத்தவள் எது மேலோ மோதினாள். “ஸ்ஸ் ஆஆஆ” என்று கேட்ட முனகலில் அது அவனாக இருக்குமோ என நினைத்தாள்.
மங்கலான வெளிச்சத்தில் அவன் கை நெஞ்சை வருடுவது புரிந்து “என்னாச்சு சார்?” சற்று பதற்றத்துடன் வினவினாள்.
“பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு அப்பாவி மாதிரி என்னாச்சுனு கேட்குறியா? நீ முட்டினதால் என் ஹார்ட் ஓட்டையாகிருச்சு. அவனவன் ஹார்ட்டுல லவ்வரை சுமப்பானுங்க. என் ஹார்ட்டுல இருப்பது யார் தெரியுமா?” கணீரென்ற குரலில் கேட்டான் அவன்.
இந்த வார்த்களைக் கேட்டு அவளுக்கு ஏதோ நினைவு வருவது போல் இருந்தது. ஏதோ குழப்பத்துடன் நகர்ந்தவளின் கையை மீண்டும் பிடித்தான் ஆடவன்.
“நீ கேட்டா தான் விடுவேன். இல்லைனா என் ஹார்ட்டை டேமேஜ் பண்ண வந்தன்னு பொலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன்” குழந்தையாக அடம்பிடித்தவனைக் கண்டு,
“சரி சொல்லுங்க” உச்சகட்ட கடுப்புடன் சொன்னவளுக்கு மின்னல் வெட்டினாற் போல் பளிச்சென வந்தது அந்நினைவு.
ஆம்! விஷ்வாவை முதன் முதலில் சந்தித்தது நினைவில் உதித்தது. இதே போல், இதே வார்த்தைகள்.
“ம்ம் சொல்லுறேன். நான் என் ஹார்ட்டுல இது வரைக்கும் என் உயிர் நண்பன் மித்துவை சுமக்கிறேன். ஆனால் புதுசா என் ஹார்ட்டை ஆட்டையைப் போட ஒருத்தி வந்தாள்.
அவள் திருடி! சாதாரண திருடி இல்லை. என்னை மயக்கி, அவளில் விழ வைத்து, என் மனதைக் களவாடிய இதயத் திருடி” அவன் இதயத்தைத் தொட்டுக் காட்டுவது புரிந்தது.
அது யார் என்பது புரிந்து உள்ளம் பூரித்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், “சரி சொல்லிட்டீங்கள்ள. நான் போறேன்” என்று பொய்யான அலட்சியத்துடன் கூறியவள்,
“விஷு” என அழைத்த அதே நேரம் கேட்ட பெரும் சத்தத்தில்
அண்ணாந்து வானைப் பார்த்தவளின் விழிகள் அகல விரிந்தன. அவன் விசிலடிக்க, வான வேடிக்கை அழகாக வெடித்தது.
அப்போது ஏற்பட்ட மெல்லிய ஒளிக் கீற்றில் தனதருகே நிற்பவனின் முகத்தைப் பார்த்து விட முயன்றாள் மங்கை.
சட்டென வீதி விளக்கு எரிய முட்டி போட்டு, “ஐ லவ் ஹனி….!!” என்று கூறி அவள் கையைப் பிடித்து தன் முரட்டு இதழால் முத்தமிட்டான் விஷ்வஜித். நவியின் ஆருயிர்க் காதலன்.
“வி..விஷு நீங்களா?”
“எஸ்! நானே தான்” என்றவன், எழுந்து அவள் தோளில் கை வைத்து விழிகளால் உறவாடினான்.
“முதல் முதலா உன்னைப் பார்க்கும் போது எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. மித்து தங்கச்சியா மட்டுமே என் மனதில் நீ இருந்தாய். ஆனால் கொஞ்ச நாளுக்குள் என் மனதில் சிம்மாசனம் அமைச்சு ராணியாக அதில் கிரீடம் சூடினாய்.
பொண்ணுங்களைக் கண்டும் காணாமல் போன என் இதயத்தை அசைத்து, என்னை ஆட்டிப் படைத்து ஆள வந்த முதல் பெண் நீ! என் வாழ்வில் முதலும் நீ முடிவும் நீ என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு நிமிடமும் உன்னையே நினைக்க வைத்தாய். கண்ணாடியில் எனக்குப் பதிலாக உன்னைப் பார்த்தேன். உனக்காக சிரித்தேன், உன்னை ரசித்தேன், உனக்கெனப் பிறந்தேன் என்பதை உணர்ந்தேன். மொத்தத்தில் உனக்காகவே வாழ்ந்தேன்.
வாழ்ந்தேன் என்பது பிழை. உனக்காக வாழ்கிறேன். இனியும் உனக்காக மட்டுமே வாழ்வேன் டி. என் உயிர் நீ நவி. என் உலகமே நீ தானடி” அவள் கன்னத்தை இரு கைகளாலும் இறுகப் பற்றி நெற்றியில் ஆழமாய் அழுத்தமாய் இதழ் ஒற்றினான் மன்னவன் அவன்.
அவனது வார்த்தைகளில் அவள் கண்கள் கலங்கின. மனம் விம்மித் தணிந்தது.
“அன்னிக்கு கேட்டியே அந்த ஹனி யார்னு? இப்போ சொல்லுறேன். என் செல்ல பொண்டாட்டி தான் என்னோட ஹனி. யூ ஆர் மை ஹனி. ஐ லவ் யூ சோ மச் மை ஸ்வீட் ஹனி”
“ஐ லவ் யூ டூ ஜித்து” அவனைத் தாவி அணைத்துக் கொண்டவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
அவள் கண்ணீர் தனது சர்ட்டை நனைக்க தன்னவளின் முகம் நிமிர்த்தி, “பழசை பற்றி நினைக்காத. மறந்துரு. இனிமேல் நீ எதற்காகவும் அழக் கூடாது டி” பெருவிரலால் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
“இது ஆனந்தக் கண்ணீர். உங்க வாயால் ஹனினு சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனால் எனக்காக சொல்லி என்னைக் கூப்பிடக் கேட்டது இது முதல் தடவை. இந்த ஜென்மத்தோட பலனை அடைந்த மாதிரி நிறைவா இருக்கு” என்றவள்,
என் மேல இருந்த கோபம் போச்சா?” அவனை உணர்ச்சிப் பெருக்குடன் பார்த்தாள் பாவை.
“கொஞ்ச நஞ்சம் இல்லை முழுசா போயிருச்சு. உனக்கு சப்ரைஸ் தரத் தான் இப்படி பண்ணுனேன். சாரி டி” அவளை அணைத்தான் விஷ்வா.
“சாரி எதற்கு? அதை நான் தான் கேட்கனும்”
“ஹேய் விடு விடு! நான் என்னமோ எல்லாம் ப்ளான் பண்ணி வந்தா நீ சாரி கேட்டே நாளைக் கழிச்சுருவ போலிருக்கே?” முகத்தைச் சுருக்கினான் அவன்.
“அப்படி என்னத்த சார் ப்ளான் பண்ணுனீங்க?” இடுப்பில் கை வைத்துக் கேட்டாள் கயல் விழியாள்.
“அது சொல்ல முடியாது பேபிமா. செஞ்சா பார்த்துக்க” கண்ணடித்தான் காளை.
“ஆமா! உங்களுக்கு எப்படி இந்த ரோட்டுல உங்களை சந்தித்த விஷயம் தெரியும்?” என்று வினவினாள் அவள்.
“பூர்ணி தான் என் கிட்ட சொன்னா. அதான் இப்படி ப்ரபோஸ் பண்ணுனேன்” அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான் விஷ்வா.
“இந்த ரோட்டில் யாரென்றே தெரியாமல் வந்து எனக்கு விஷ் பண்ணுனீங்க. அப்போ எனக்குனு ஒரு உறவு கிடைச்ச மாதிரி இருந்துச்சு. ஆனால் எனக்கு உலகமாகவே மாறப் போறீங்கனு அப்போ தெரியல. இன்னிக்கு அதே இடத்தில் நீங்க லவ்வை சொன்னது அவ்ளோ சந்தோஷமா இருக்கு. நீங்க வேற எங்கே வெச்சு இதை விட பெருசா பண்ணி இருந்தாலும் இந்த அளவுக்கு என் மனசு நிறைந்திருக்காது” அவன் கழுத்தில் கைகைளை மாலையாகப் போட்டுக் கொண்டாள்.
“உன் இந்த சந்தோஷம் போதும் எனக்கு” அவள் நெற்றி முட்டிச் சிரித்தான்.
சில்மிஷங்களும், காதல் சேட்டைகளுமாக வீட்டை அடைந்தனர் புதிதாக இணைந்த அந்த ஜோடி.
வீட்டில் அனைவரும் தூங்கி இருக்க, அறையினுள் நுழைந்தவுடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் கணவன்.
“விடுங்க” என அவள் சிணுங்க, “நீயே விடுன்னு சொன்னாலும் இனிமேல் விட மாட்டேன். இத்தனை நாள் விட்டு வெச்சேன். இனி உன்னை விடறதா இல்லை” அவளைச் சற்றும் பேச விடாமல் அவளிதழில் தன்னிதழைப் புதைத்தான்.
முதல் இதழ் முத்தம்! தேனாய் இனித்தது இருவருக்கும். ஆணவன் அவளில் மயங்க, பெண்ணவள் தயங்க, தயக்கம் வென்ற வீரனாக தனக்கெனக் கிடைத்த காதல் தேசத்தை ஆளத் துவங்கினான் ஜித்து.
“ஜித்தூஹ்” அவளது அழைப்பு இவனைக் கிறங்கடிக்க, அவனது செயல்கள் இவளைத் திணறடிக்க சீண்டலும் தீண்டலுமாய், மோகமும் தாகமுமாய் இனிமையாக அவ்விரவு இருவருக்கும் இன்பம் அளித்தது.
………………..
ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும் கணவனை விழி மூடாமல் பார்த்திருந்தாள் அக்ஷரா.
“அருளு!” என்று அழைக்க, “என்ன?” ஒற்றை வார்த்தையில் கேட்டு வைத்தான் அவன்.
“என்னாச்சு? ஏன் சைலன்டா இருக்கே?”
“உனக்கு என் கூட பேச பிடிக்காதே. அப்பறம் எதுக்கு கேட்குற?”
“போரடிக்குது டா. அதனால உன் கிட்ட கேட்டேன். சொல்லு பார்ப்போம்” அவனை நெருங்கி அமர்ந்தாள்.
“நீ கிட்ட கிட்ட வந்து என்னை திசை திருப்பாத. பிறகு வருத்தப்படுவ” அவளை விட்டும் தள்ளிச் சென்றான்.
“தள்ளி தள்ளி போகாதய்யா நில்லு நில்லு. உன் ப்ராப்ளம் தான் என்னனு சொல்லு சொல்லு” பாட்டாகப் பாடியவாறு அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.
“என்னை படுத்தி எடுக்கிற ஐடியாவில் இருக்கே” அவளை ஒரு கையை வளைத்துப் பிடித்துக் கொண்டான் அருள் மித்ரன்.
“உன்னைப் படுத்தி எடுக்காம வேற யாரைப் பண்ணுறது? சரி சொல்லு”
“ஹேய் பெருசா ஒன்னும் இல்லைடி. நாளைக்கு ஆஃபிஸ்ல போர்ட் மீட்டிங் இருக்கு. அதில் முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் பத்தி பேச போறோம். விஷு கண்ட பல வருடக் கனவு அது. அது மட்டும் சக்ஸஸ் ஆச்சுனா அக்ஷரா கன்ஸ்ட்ரக்ஷன் வேற லெவலுக்குப் போயிரும்”
“இதுக்குப் போய் ஏன்டா மூஞ்சை நாலு முழத்துக்கு தூக்கி வெச்சுட்டு இருந்த?”
“எதுவும் ப்ராப்ளம் வந்துரக் கூடாதுனு பயமா இருக்கு. ஏனோ மனசு படபடன்னு அடிச்சுக்குது. எனக்கு என்னவோ இன்னிக்கு அவன் மனசு சரியில்லாத மாதிரி இருந்துச்சு” கவலையுடன் உரைத்தான் அவன்.
“ஏதாச்சும் இருந்தால் உன் கிட்ட சொல்லுவான் தானே? நீ எதுவும் ஃபீல் பண்ணாம விடு”
“ஒரு பேச்சுக்கு கூட மடியில் சாஞ்சுக்கனு சொல்லுறாளா அழுத்தக்காரி” அவளுக்குக் கேட்கவே முனகியவனின் பேச்சு தப்பாமல் அவள் செவியை எட்டிற்று.
“ஆசை தோசை! இவரு பண்ணுறதை எல்லாம் பண்ணுவாராம். நாம மடியில் தூக்கி வெச்சு கொஞ்சனுமாம்” நொடித்துக் கொண்டாள் அக்ஷு.
“அந்த தோசையை நீ சுடலனாலும் நான் உன் மடியில் சாயத் தான் போறேன்” அவள் மடியில் தலை சாய்த்தான் ஆணவன்.
“அப்பறம் எதுக்கு சும்மா முனகிட்டு கிடந்த டுபுக்கு” அவன் முடியைப் பிடித்து இழுத்தாள்.
“ஏய் பிசாசு விடுடி வலிக்குது”
“பிசாசு சொல்லாதே. விஷு மூட்டையும் அப்படித் தான் சொல்லுவான்” முறைத்துப் பார்த்தாள் அவள்.
“அவன் சொல்லுறதை நானும் சொல்லியே ஆகனும் பிசாசு” அவளை இன்னும் கடுப்பாக்கி பார்க்க ஆவல் கொண்டான்.
“வேணாம் என் கிட்ட வாங்கி கட்டிக்காத”
“சரி சொல்லலை மோகினி”
“அடேய் இதற்குப் பிசாசே பரவாயில்லை” அவன் வாயில் அடித்தாள் அக்ஷரா.
“இல்லை மோகினி கரக்டா இருக்கு. சாதாரண மோகினி இல்லை. என்னை மயக்கிய மாய மோகினி. என் கண்ணுக்குள் விரலை விட்டு நித்தமும் ஆட்டிப் படைக்கும் மோகினி” அவளைக் கள்ளப் புன்னகையுடன் ஏறிட்டான் மித்து.
“அவனவன் தன் பொண்டாட்டியை தேவதை, ரதி என்று சொல்லுவாங்க. நீ என்னனா சுடுகாட்டில் இருக்கிறவன் மாதிரி பேய், பிசாசு, மோகினினு சொல்லுற”
“நாம எப்போவுமே வேற மாறி அம்முலு” ஆப்பிளை இரண்டாக வெட்டி வைத்தாள் போன்ற சிவந்த கன்னத்தைக் கிள்ளினான் மித்ரன்.
“விளங்குது டா விளங்குது”
“அம்முலு….!!” என்று அவளை அழைக்க, “என்ன ஒரு மார்க்கமா பேசுற சரியில்லையே!?” நாடியில் விரல் தட்டி யோசித்தான் மாது.
“இல்லையே! உனக்குத் தான் ஏதோ தோணுது போல. நான் கூப்பிட்டது எதுக்குன்னு நெனச்ச?” அவளுக்கே கிடுக்கிப்பிடி போட்டான் அவன்.
“நா..நான் எதுவும் நினைக்கலையே” வேகமாக மறுத்தாள்.
“பொய் சொல்லாத ஏதோ நினைச்ச”
“ஆமா நெனச்சேன். அதுக்கு என்ன இப்போ?”
“ஒன்னும் இல்லை. நீ நெனச்சத சொல்லாத. செஞ்சு காட்டு” கன்னத்தைக் காட்டினான் அவன்.
“என்னையே மடக்கிப் பார்க்கிறியா? நீ கிஸ் கேட்கிறனு நெனச்சேன். அதைத் தானே நீ கேட்க வந்த?” வெடுக்கென கேட்டாள் அக்ஷு.
“நோ நோ! நான் அப்படி நினைக்கவே இல்லை. நீ தான் தப்பு தப்பா யோசிக்கிற. டூ பேட் அம்முலு”
“ஆமா நான் தப்பு தப்பா யோசிக்கிறேன். நீ தப்பே பண்ணாத மகான் போடா” கோபமாக எழுந்து சென்றாள்.
“அடியே என் கோவக்காரி” அவளது கையைப் பிடித்தான்.
“விடு விடு” என்று கையை விடுவிக்கப் போராடியவளை நெருங்கிச் செல்ல அவளோ பின்னாடி நகர்ந்தாள்.
“போ அருள்” அவனது நெஞ்சில் கை வைத்துத் தள்ள, யானை பலம் படைத்தவனிற்கு முன்னால் சிறு முயல் குட்டியால் என்ன செய்திட முடியும்? அவனை அசைக்கக் கூட முடியவில்லை.
“என்னடி எப்போ பாரு போ போ என்று விரட்டுற? உன்னை விட்டுப் போறதுக்காகவா காதலிச்சேன்? உன் கழுத்தில் தாலி கட்டினேன்?” இன்னும் அவளை நெருங்க சுவரில் மோதி நின்றாள் பெண்ணவள்.
அவனது கூரிய லேசர் பார்வை அவளுள் பல்லாயிரம் உணர்வுகளைத் தோற்றுவிக்க, அந்த விழிச் சிறையில் இருந்தும் மீள முடியாது கைதியாகிப் போனாள்.
“சொல்லு! உன்னை விட்டுப் போயிடவா?” மென்மையான மித்ரன் இன்று அவளிடம் முரடனாக மாறிப் போய் அழுத்தமாகக் கேட்டான்.
“இல்..இல்லை” பொம்மை போல் தலையை இடம் வலமாக ஆட்டினாள்.
“திரும்ப சொல்லு. என்னை விட்டுப் போக மாட்டேன்னு சொல்லு. திரும்பவும் போ என்று சொல்ல மாட்டேன்னு சொல்லு”
“உன்னை விட்டுப் போக மாட்டேன் அருள். என்னை விட்டுப் போயிராத. எனக்கு நீ வேணும்” கிளிப்பிள்ளையாக அவன் சொன்னதைச் சொன்னவளின் பின்னந்தலையில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இதழைச் சிறைப்பிடித்தான்.
இன்று ஏனோ வன்மையாக இருந்தது அவனது தாக்குதல். ஆயினும் அதில் விரும்பியே தொலைந்தாள் மலர்க் கொடியாள். உணர்வு மிகுதியில் அவன் சர்ட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
மீண்டும் மீண்டும் அவளிடம் தொலைந்தான் அருள். இதழுக்கு விடுதலை கொடுத்தவனுக்கு அவளுக்கு விடுதலை கொடுக்கும் எண்ணம் இல்லை போலும்.
கதைகள் பேசும் விழிகளில் இதழ் பதித்தான். இமைகளில் கவி பாடினான். மூக்கைக் கடித்து கன்னம் தீண்டி நெற்றியில் இளைப்பாறினான்.
அவள் முகமெங்கும் முத்தத்தால் ஈரமாக்கினான். இடையில் கையிட்டு இன்னும் தன்னை நோக்கி இழுத்து இறுகக் கட்டிக் கொண்டான்.
“அருள் ஆர் யூ ஓகே?” அவன் முகத்தைப் பார்த்து மெதுவாக வினவினாள்.
“யாஹ் ஃபைன்” அவளிடமிருந்து விலகி தலையைக் கோதிக் கொண்ட பின் இதழ் கடித்து, “என்ன பயந்துட்டியா?” என்று கேட்டான்.
“இல்லையே” ஆம் என்று சொல்ல நினைத்தும் கெத்தை விடாமல் இல்லை என்றாள்.
“அப்படினா நல்லதாப் போச்சு” மீண்டும் அவளில் ஓர் தேடுதல் வேட்டையை நடாத்திட முனைந்தான்.
“நீ அப்போ என்ன நினைச்ச? கிஸ் தர சொல்லத் தானே என்னைக் கூப்பிட்ட” என்று கேட்டாள் அம்முலு.
“அது இல்லை. நீயே கண்டுபிடி”
“ம்ம் சரி” பல விதமாக யோசித்தாள்..
“கண்டுபிடிக்கலைனா நான் நினைச்சத சொல்லுவேன். நீ அதைச் செய்யனும்”
“ஓகே” என ஒப்புக் கொண்டவள் ஒவ்வொன்றைச் சொல்லியும் இல்லை என மறுத்தான்.
“எனக்குத் தெரியலை. நீயே சொல்லு” என்று விட, “உன் கிட்ட முத்தங்கள் கேட்கவே அழைத்தேன்” என்றான்.
“நானும் அதைத் தானே சொன்னேன்” சண்டைக்கு வந்தாள் அவள்.
“இல்லை. நீ கிஸ் என்று மட்டுமே சொன்ன. நான் ஒன்னு கேட்க வரலை. நிறைய கேட்டேன். சோ நீ அப்படியே தரனும்” வெற்றிக் களிப்புடன் அவளைப் பார்த்தான்.
“ஃப்ராடு இது ச்சீட்டிங் டா” என முறைத்தாலும் அவன் கேட்டதை மனமுவந்து கொடுத்தாள்.
நட்பு தொடரும்……!!
✒️ஷம்லா பஸ்லி