அவனிற்கு முதலில், “பிரணவ் சான்வி இஸ் ப்ரெக்னன்ட்”, என்று சொல்லி இருந்தான் பார்த்தீவ்.
அவனோ சான்வியை பார்த்து, “கன்க்ரட்ஸ்”, என்றவன், “எல்லாரும் வந்து உட்காருங்க.. எல்லாரு கிட்டயும் விசாரணை நடத்தணும்”, என்கவும், “பிரணவ்.. இங்கயுமா?”, என்று ஜெய் ஷங்கர் சொல்லவும், “கண்டிப்பா நடத்தணும் அதுவும் இப்பவே நடத்தணும்”, என்று அழுத்தமாக வந்தது பிரணவ்வின் பதில்.
அனைவரும் அமர்ந்தே வேண்டும் என்கிற கட்டளை அவனின் தொனியில் இருக்க, ஸ்ரீதர் தனி நாற்காலியில் அமர, அவரின் பக்கத்தில் விஜய் மற்றொரு பக்கம் விக்ரம், விக்ரமின் அருகில் சான்வி, என்று மொத்த குடும்பமும் அமர்ந்தது.
“சரி நம்ப விசாரணையை ஆரம்பிக்கலாமா?”, என்று அவன் கேட்கவும், அனைவரும் அமைதியாக அமர்ந்து இருந்தனர்.
“மிஸ்டர் வேதாந்தம்”, என்றவன் அழுத்தமாக அவரை பார்த்து, “உங்க மனைவி…”, என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “சாரி உங்க மாஜி மனைவி.. உங்கள உங்க பிஏ கூட பார்த்த அன்னைக்கு என்ன நடந்தது?”, என்று கேட்கவும், வேதாந்தத்தின் நினைவுகள் அவரின் பழைய நினைவுகளை நோக்கி சென்றன.
அன்றைக்கு விக்ரமின் பிறந்தநாள் என்பதால், அவர் கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்ப வேண்டி இருந்தது.
ஆனால் அவருக்கு அன்று முடிக்க வேண்டிய முக்கிய வேலை ஒன்று இருக்க, ஒரு நபரையும் பார்க்க வேண்டியது இருந்தது.
“கொஞ்சம் சீக்கிரம் அவரை வர சொல்லு”, என்று ரீமாவிடம் அவர் சொல்ல, ரீமாவும் சரி என்று சொன்னவர், அன்று வித்யாசமாக நடந்து கொண்டார்.
அவரின் நடை உடை பாவனை என்று அனைத்தும் வித்யாசமாக இருந்தது. ஆனால் அதை பெரிதாக வேதாந்தம் எடுத்து கொள்ள வில்லை.
வேதாந்தம் பார்க்க வேண்டிய நபரும் வர, இருவருக்கும் வைன் தான் கொடுத்தார் ரீமா.
இன்று எந்த வித போதை தரும் பொருளும் வேண்டாம் என்று மறுத்து இருக்க, ஏன் இப்படி செய்தார் என்று வேதாந்தமிற்கும் தெரியவில்லை.
ஆனால், வேறு வழி இல்லை. இங்கு அந்த நபரின் முன் அவரை திட்டவும் அவருக்கு தோன்றவில்லை.
அவரும் பருக, அவருக்கு தலை சுத்துவது போல் இருந்தது.
இது வரை தான் அவருக்கு நினைவு இருந்தது. அதற்கு பிறகு அவருக்கும் நினைவு இல்லை.
இதை தான் சொல்லி முடித்து இருந்தார் வேதாந்தம்.
அடுத்து பிரணவ், “மிஸ் கலாவதி, உங்க புருஷன்… சாரி எக்ஸ் புருஷனோட உங்க உறவு எப்படி இருந்தது? விக்ரம்க்கு ஒரு வயசு ஆனதும் நீங்க விஜய்க்கு கன்சீவ் ஆகிருக்கிங்க.. அப்போ உங்களுக்குள்ள எல்லாமே நல்லா தானே போய்ட்டு இருந்தது? அப்போ உங்களுக்கு ஏன் உங்க புருஷன் மேல நம்பிக்கை இல்லாம போச்சு? சரி நீங்க எப்படி அடுத்த நாள் வந்து மிஸ்டர் ஸ்ரீதர் கூட வாழ போறேன்னு சொன்னிங்க?”, என்று கேட்கவும், கலாவதியின் நினைவுகளும் பின்னோக்கி சென்றது.
அன்று காரை எடுத்து கொண்டு சென்றவர் எங்கே செல்வது என்று தெரியாமல் அலைந்து கொண்டு இருக்க, அங்கே ஸ்ரீதரை ஒரு சாலை ஓரத்தில் பார்த்தார்.
அவரும் கலாவதியின் காரை பார்க்க, “என்ன மேடம் இங்க வந்து இருக்கீங்க?”, என்றவரிடம், அனைத்தையும் ஒப்பித்து இருந்தார் அவர். ஐயோ மேடம், வேதாந்தம் சார் நல்லவரு.. அவரு அப்படி பண்ணுவாருனு எனக்கு தோணல..”, என்கவும், “இல்ல அவருக்கு வலிக்கனும்… எனக்கு வலிக்கிற மாதிரி வலிக்கனும்.. எனக்காக ஒரு உதவி செய்யுறீங்களா?”, என்று கேட்ட கலாவை கேள்வியுடன் பார்த்தார் ஸ்ரீதர்.
“உங்க கூட கொஞ்ச நாள் இருக்கேனே… ப்ளீஸ்..”, என்கவும், “சரி”, என்று ஒப்புக்கொண்டார்.
“நான் அவர் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிக்கலாம்னு இருக்கேன்”, என்றவுடன், “மேடம் நல்லா யோசிங்க”, என்று ஸ்ரீதர் சொன்னதெல்லாம் அவரின் காதுகளில் அடைய வில்லை.
அடுத்த நாள் வந்து, ஸ்ரீதருடன் இருக்கிறேன் என்று சொன்னவருக்கு அதிரிச்சியாக கிடைத்த தகவல் தான் அவர் மாதமாக இருப்பது. ஆனால் குழந்தையை அழிக்கும் எண்ணம் இல்லை.
“நான் வேணா சார் கிட்ட போய் சொல்லட்டுமா?”, என்று ஸ்ரீதர் கேட்கவும், “இல்ல சொல்ல வேணாம்… நீங்க எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க?”, என்று கேட்டவரிடம், “மேடம் எனக்கு கல்யாணம்லாம் ஆகாது.. உங்க கிட்ட வேதாந்தம் சொல்லலையா? நான் ஒரு ஏசெக்ஸுவல்”, என்கவும் காலாவதிக்கு அதிர்ச்சி தான்.
அவருக்கு இன்னும் வேதாந்தத்தின் மேல் இருந்த கோவம் தீரவே இல்லை. அவரை ஏமாற்றி விட்டார் என்கிற ஆதங்கம். அதையும் தாண்டி அவருக்கு கிடைத்தது ரீமாவின் கருக்கலைப்பிற்கான காகிதம் ஒன்று. இவை எல்லாம் அவரை நிலை குலைய செய்து இருந்தது.
“உங்க கிட்ட நான் ஒரு உதவி கேட்பேன்..”, என்றவர் தயங்கி…”என் குழந்தைக்கு நீங்க தான் அப்பான்னு சொல்லட்டுமா?”, என்கவும், தூக்கி வாரி போட்டது.
“ஐயோ என்ன பேசுறீங்க?”, என்றவரிடம், “அவருக்கு வலிக்கனும்… நிறைய வலிக்கனும்… என்ன ஏமாத்திருக்காரு.. என் கனவுகளை சிதைச்சி இருக்காரு”, என்று ஆதங்கமாக வந்தது அவரின் வார்த்தைகள்.
கோவத்தில் மதி இழந்து விட்டார் கலாவதி.
“நம்ப ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்”, என்றவரிடம் என்ன சொல்வது என்று அவருக்கு தெரியவில்லை.
ஒரு வாரம் கடந்த நிலையில் தான் சரி என்று சொல்லி இருந்தார்.
இப்படியாக தான் விஜய் பிறந்தான். விஜய் பிறந்ததும் அவரது மகன் போலவே பார்க்க துவங்கினார் ஸ்ரீதர். எந்த மாற்றமும் இல்லை.
கலாவும் அவரின் அலுவலகத்தை துவங்கி இருக்க, விஜய்க்கு ஒரு வயது இருக்கும் போது தான் ஸ்ரீதர் வந்தார்.
“உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்”, என்று தயங்கி தயங்கி நின்று இருக்கவும், “சொல்லுங்க”, என்று புன்னகைத்து தான் பதில் அளித்தார் கலாவதி.
“எனக்குன்னு ஒரு குழந்தை வேணும்”, என்றவர் சட்டென நிமிர்ந்து பார்த்தார்.
கலாவதியின் பார்வையே ஸ்ரீதரை சுட்டெரித்தது.
“ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. என் உயிரனவுல இருந்து ஒரு குழந்தை.. உங்கள மாதிரி வேணும்”, என்கவும் அவருக்கு கடுப்பாகி விட்டது.
“ரொம்ப பேசுறீங்க.. உங்களுக்கு வேணும்னா சரோகசி ட்ரை பண்ணுங்க”, என்றவர் விஜயை அழைத்து கொண்டு செல்ல, “ப்ளீஸ் கலா எனக்காக.. உங்க கூடவே வாழ்க்கை முழுக்க உங்களுக்கு பாதுகாப்பா இருந்துடறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ்.. எனக்காக என் பேர சொல்ல ஒரு பிள்ளை வேணும்”, என்கவும், “நோ… முடியவே முடியாது.. என்னால ஒரு போதும் இதுக்கு சம்மதிக்கவே முடியாது… நான் இப்பவே விஜய கூட்டிட்டு போறேன்”, என்கவும், “உங்களுக்காக எவளோ பழி நான் சுமந்து இருப்பேன்.. எனக்காக உங்களை இது கூட பண்ண முடியாதுல”, என்று சரியாக அவரை அடித்து இருந்தார் ஸ்ரீதர்.
“இல்ல.. நான் என்ன பண்ணேன்.. உங்கள என்ன சொல்லுறாங்க?”, என்றவரை பார்த்து, “விஜய் மட்டும் இருந்தா இது வேதாந்தம் குழந்தை தாணு ஆல்ரெடி எல்லாரும் சொல்ராங்க.. அது மட்டும் இல்ல நான் தான் உங்கள மயக்கி கூட்டிட்டு வந்துட்டேனாம்”, என்றவர் கண்ணீர் விட, “இங்க பாருங்க எனக்கு புரியுது.. ஆனா உங்களுக்கு வேற ஒரு நல்ல சரோகேட்டா நம்ப பார்ப்போம்”, என்றவரை விடாமல் அவரின் உணர்வுகளை எப்படியோ தட்டி எழுப்பி சம்மதிக்க வைத்து விட்டார்.
கலாவதிக்கு மனமே இல்லை. அவருக்காக காவலாய் இருக்கிறவருக்காக அவர் செய்யும் தியாகமா இது? அல்லது அவரின் மனதை உருக்கொலைத்து கொண்டு இருக்கும் நரகமா இது? முன்பாவது அவர் வேதாந்தத்துடன் சேர்ந்து விடுவார் என்று ஒரு நம்பிக்கை அவருக்கே இருந்தது.
வர்ஷா பிறந்த பிறகு அது மொத்தமாக தவிடு போடி ஆகி விட்டது. எப்படி போக முடியும்? இன்னொருவனின் கருவை சுமந்து இருக்கிறார்? அவர் மீது ஆத்திரம், வேதாந்தம் மீது ஆத்திரம், சமுதாயத்தின் மீதும் ஆத்திரம் தான்.
அவருக்கு வர்ஷாவை பிடிக்கும் தான் ஆனாலும் விஜய் அளவிற்கா என்று கேட்டால் அவருக்கே தெரியாது. அவர் பெற்ற மகவு தான். ஆனால் அவர் காதலித்தவனுடைய மகவு இல்லையே!
அவரின் கோவத்தால் வெளியே வந்து விட்டார். விஜயை ஈன்று விட்டார். ஸ்ரீதர் பேசியதில் வர்ஷாவை ஈன்றும் விட்டார். ஆனால் மனநிம்மதி தான் போய் விட்டது. மொத்தமாக போய் விட்டது.
வர்ஷாவை அவரின் தந்தையின் கையிலேயே வளர விட்டு விட்டார். அவர் செய்த ஏதோ ஒரு பாவத்தை நினைவு ஊட்டி கொண்டே இருந்தாள் வர்ஷா. அவளை காணும் போதெல்லாம் வேதாந்தத்திற்கு அவர் துரோகம் செய்து விட்டது போன்ற உணர்வு.
அதுவும் அவள் தான் விக்ரம் மற்றும் வாகினியுடன், நெருங்கி பழகினாள். அவருக்கு கோவமாக வரும். விஜய் அப்படி இருந்து இருந்தால் கூட இரத்த பாசம் என்று விட்டுவிட்டு இருப்பாரோ என்னவோ.. ஆனால் வர்ஷா.. அவருக்கு அவரின் மீதே இன்னும் அந்த கோவம் இருந்தது தான்.
அவரின் மொத்த உணர்ச்சிகளையும் உடைத்து அழுது இருந்தார். அவரை பார்ப்பதற்கே அனைவருக்கும் பாவமாக இருந்தது.
“என் புருஷன் எனக்கு துரோகம் பண்ணிட்டாருனு நான் வெளிய வந்தேன். இன்னைக்கும் நான் அவருக்கு மனசு மற்றும் உடல் அளவுல உண்மையா தான் இருக்கேன்.. ஆனா… எங்கயோ அவருக்கு துரோகம் பண்ணிட்டது போல எனக்கு தோணும்.. வர்ஷா எனக்கு நான் என் புருஷனுக்கு பண்ண துரோகத்தை தான் அதிகம் நினைவு படுத்துவா.. அதனாலேயே அவளை என்கிட்ட இருந்து தள்ளி வச்சேன்… ஆனா அதுக்காக அவ மேல பாசம் இல்லாம இல்ல.. நிச்சயம் இருக்கு… ஆனா குற்ற உணர்வும் இருக்கு”, என்று அவர் சொல்லவும், வாகினி தான் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தாள்.
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதை விட பிரம்மை பிடித்தது போல் அமர்ந்து இருந்தாள் வர்ஷா. அவளின் மனதுக்கும் ஆயிரம் எண்ணங்கள். மொத்தமாக உடைந்து இருந்தாள்.
பிரணவ்வோ மேலும் தொடர்ந்து, “சரி மிஸ் கலாவதி, வர்ஷா சரோகேட் சைல்ட்.. உங்க புருஷன் மேல தான் கோவம்.. ஆனா ஏன் நீங்க உங்க பொண்ணு வாகினி சடங்கானத்துக்கு வரல.. சரி அவங்க கல்யாணத்துக்கு வரல.. ஏன் சீமந்தத்துக்கு கூட வரல.. ஆனா விக்ரம் ரிசெப்ஷனுக்கு வந்திங்க? ஏன் அப்படி என்ன உங்களுக்கு நீங்க பெத்த பிள்ளைங்க மேல கோவம்? உங்களுக்கும் உங்க புருஷனுக்கும் பிறந்த பிள்ளைங்க மேல கூடவா உங்களுக்கு கோவம்”, என்கவும், அவர் சொன்ன பதிலில் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
Super sis