ஹாய்… என்னைப்பற்றிய அறிமுகம் ஏற்கனவே தந்திருக்கேன். rajani எனும் பெயரை vageeswari என மாற்றி எழுதுகிறேன். இனிமேல் என்னுடைய கதைகள் அனைத்தும் vageeswari எனும் penname ல வெளிவரும்.
பொழுது விடிந்து எழுந்தவள் அவனின் குறுஞ்செய்திக்காக மொபைலை எடுக்க, அதில் நேற்று இரவு செய்தி மட்டுமே இருந்தது.
தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு வியப்பு என்ன இது எதுவுமே அனுப்பாம இருக்காரு, ஒன்றும் புரியாமல் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தவளுக்கு அப்பொழுதுதான் நிதர்சனம் உரைக்க,
தான் செய்த காரியத்தினால் சுக்கு நூறாக உடைந்த மனதை தேற்றும் வழி புரியாது அழுது கரைந்தாள்.
அவளது ஒரு செக்கன் அழைப்பு பார்த்தவனுக்கும் புரிந்தேதான் இருந்தது. தூக்க கலக்கத்தில் அவளை அறியாது அவனை தேடியிருக்கிறாள் என்று, அவனது இதழ்களில் ஒரு வெறுப்பான புன்னகை உதயமாக,
தன்னை நினைத்தே அசிங்கமாய் இருந்தது அவனுக்கே. எவ்வளவு எளிதாய் ஏமாந்து போயிருக்கிறான். தன்னோடு தன் தாய் தந்தையையும் அல்லவா தலை குனிய வைத்துவிட்டோம்.
நாகமானது மகுடியின் திசைக்கு ஏற்ப அசைந்தாடும். அதுபோல இக்கதையானது மேற்கண்ட பழமொழிக்கு ஏற்ப செல்லுமா அல்லது காலத்தின் மாறுதலால் அன்பின் வழியில் செல்லுமா பார்ப்போம்.