சென்னையின் மத்தியில் இருக்கும் அந்த புகழ்பெற்ற திருமண மண்டபம் அந்த அதிகாலை நேரத்திலும் ஜொலித்துக்கொண்டிருந்தது. சென்னையின் புகழ்பெற்ற மண்டபத்தில் அந்த மண்டபமும் ஒன்று. புகழ்பெற்ற நடிகர்களுக்கும்,செல்வ சீமாங்களுக்கும்,சீமாட்டிகளுக்குமே அங்கு பெரும்பாலும் திருமணம் நடக்கும்.. கிட்டதட்ட பல்லாயிர ஏக்கர்களை உள்ளடக்கிய இடம்.. அங்கையே லேக் ரிசார்ட்டுகளுடனும், பீச்களுடனும் அந்த இடமே அதிர்ந்துக்கொண்டிருந்தது.. கிட்டதட்ட அந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே கிட்டதட்ட கோடிகளில் தான் தொடங்கும் என்று கூட கூறுகின்றனர்.
அப்படிப்பட்ட திருமண மண்டபத்தில் தான் ஊரே கலைக்கட்டிக்கொண்டு நின்றிருந்தது. பின்னே சும்மாவா.. இப்போது அங்கு நடக்கப்போகும் திருமணம் கூட மிகவும் பிரபலமானவர்களில் ஒருவருடையது தான்.. அமிர்தம் ஹோட்டலின் குடும்பத்தாரின் இல்லத்திருமணம் தான் அங்கு நடக்கவிருக்கின்றது.
அமிர்தம் ஹோட்டல்… உயர்தர சைவ உணவகத்தின் கூடாரம் என்று கூட சொல்லலாம்.. கிட்டதட்ட 100வருடங்களை தாண்டி அந்த ஹோட்டல் தங்களின் சுவையை மக்களிடையே ஊன்றி போக வைத்திருக்கின்றது.. அதற்கு காரணம் அந்த உணவகத்தின் சுத்தமும், உணவின் சுவையுமே ஆகும்..
கிட்டதட்ட நான்கு தலைமுறைகளை அந்த உணவகம் கைமாறிவிட்டது என்று கூட சொல்லலாம்.. அனைத்தும் சுத்தமான கைகள்… தங்களின் குடும்ப தொழிலை அவ்வளவு சிறப்பாக நடத்தி வருகின்றனர் அமிர்தம் க்ரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்.. சென்னையிலையே கிட்டதட்ட அறுபதிற்கும் மேற்பட்ட கிளைகளை ராட்சஸ அரச மரமாக விரித்துவிட்டுக்கொண்டு இருக்கின்றது இந்த அமிர்தம்.. அதுபோக மத்த ஊர்களிலும், வெளி மாநிலத்திலும் ஏன் வெளிநாடுகளிலும் கூட தங்கள் உணவின் ருசியை பரப்பிக்கொண்டு இருக்கின்றது…
சொல்லப்போனால் சிங்கப்பூரில் மட்டுமே கிட்டதட்ட நான்கு கிளைகளை பரப்பி இருக்கின்றது.. அனைத்து உணவுகளிலும் ருசி அப்படி இருக்கும்.. இல்லை என்றால் இந்த காலத்தில் இப்படி எல்லாம் வளரமுடியுமா என்ன…
கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமிர்தலிங்க அய்யரால் நிறுவப்பட்டது தான் இந்த உணவகம்… அவர் இந்த தொழிலை ஆரம்பிக்கும் போது அக்கிரகாரத்தில் அவர் வீட்டு திண்ணையில் குடுசை போட்டு சாதாரணமாக ஆரம்பித்தது தான் இந்த உணவகம்.
இன்று கிட்டதட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு புகழின் உட்சத்தில் கொடிக்கட்டி பறக்கின்றது.. எத்தனையோ எதிர் தொழில் போட்டியாளர்கள் இந்த அமிர்தம் ஹோட்டலை இழுத்து மூட எண்ணினார்கள்.. ஆனால் அதை எல்லாம் ஒற்றை சொடக்கில் காலி செய்தார்கள் அமிர்தலிங்கத்தின் வாரிசுகள்…
அமிர்தலிங்க அய்யர் கையில் இருந்த உணவகம் அவருக்கு அடுத்து அவரின் மகனான மகேஸ்வரன் கைக்கு தாவ… அதற்கு மேல் அவருக்கு பிள்ளைகள் இல்லை என்பது வசதியாக போனது.. ஆனால் மகேஸ்வரனுக்கோ நான்கு மகன்கள், இரண்டு மகள் பிறக்க மேலும் அமிர்தம் ஹோட்டல் நான்கு கிளைகளை பரப்பி பெரிதாகியது… அன்றில் இருந்து இப்போது வரை அந்த ஹோட்டல் வளர்ந்துக்கொண்டே தான் இருக்கின்றது.
இப்போது மகேஸ்வரனுக்கு 85வயது ஆகிறது.. இப்போது தான் இந்த திருமணத்தில் பட்டு அங்கவஸ்திரத்துடன் அந்த தள்ளாடும் வயதிலும் கல் போன்ற உடல்கட்டோடு ஜொலித்துக்கொண்டிருக்கின்றார். அவரின் மனைவி கோசலை கொஞ்சம் உடல்நிலை முடியாமல் இருக்க.. கேர் டேக்கரின் உதவியுடன் தன் அருகில் உட்கார வைத்திருக்கின்றார் அவர்.
மகேஸ்வரனின் மூத்த மகன் ஆதிசங்கரன் அவரை தாண்டி செல்ல… “ஏன்டா ஆதி.. எல்லாம் சேமமா நடுக்கும் இல்லையா…”என்று கொஞ்சம் பதட்டத்துடன் கேட்க…
ஆதிசங்கரனோ அவரை பார்த்து புன்னகைத்தவர்… “ஏன் தான் உங்களுக்கு இவ்ளோ பயமோ தெரிலப்பா… அதுலாம் உங்க பேத்தி விவாகம் நன்ன படியா நடக்கும்… கிட்டதட்ட உங்க பேத்தி வர்ஷி நிச்சயத்துல இருந்து இதே கேள்விய தான் கேட்டுன்டு இருக்கேள்… நானும் இதையே பல தடவை சொல்லிட்டு தான் இருக்கேன்…”என்று கொஞ்சம் அலுத்த குரலில் கூற…
“அடேய் மூத்தவனே… கோச்சிக்காதேடா கண்ணா… உனக்கே தெரியும்னோ… நம்ம குடும்பத்துக்கு கொஞ்ச வருஷமா நேரம் நன்னா இல்லடா கண்ணா… உன் அம்மாவ பாத்தியா… நன்னா கல்லு மாதிரி இருந்தவ இப்போ ஊடு மாறி ஆகிட்டா… அதுதான் நேக்கு கொஞ்சம் பயமா இருக்குடா ஆதி..”என்று கண்கள் கலங்கியவாறே தன் மனைவியை பார்த்து கூற…
கோசலையோ மருந்தின் வீரியத்தில் உறக்கம் கண்களை தவினாலும் அதனை தடுக்க போராடியவாறே தன் பேத்தியின் திருமணத்தை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். தன் கணவன் கூறுவதை கேட்டவருக்கும் சிறிது வருடங்களாக தன் குடும்பத்தின் நிம்மதியும், சந்தோஷமும் கேள்விக்குறியாகி இருப்பதை நினைத்து கலங்க… அதனை கண்ட அவரின் கேர் டேக்கரோ…
“அம்மா இந்த மாதிரி நேரத்துல வெசனப்பட கூடாதுன்னு நோக்கு தெரியாதுன்னோ…“என்றார்… கேர்டேக்கர் அம்புஜம்.. ஒருவகையில் கோசலைக்கு அக்கா மகள் தான்.. கொஞ்சம் தூரத்து உறவு… எப்போதும் அம்புஜம் இப்படிதான் உரிமையாக பேசுவார்.
“ப்பா… நீங்க கொஞ்சம் சும்மா இருக்கேலா… நீங்க பேசுறத கேக்குறச்ச தான் அம்மாவுக்கு மனசு கலக்கமா இருக்குது… நீங்க தைரியமா இருக்கறச்ச தான் அவங்களும் தைரியமா இருப்பா…”என்ற அம்புஜமோ…. “நான் போய் நோக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்ம்மா..”என்று கோசலையிடம் கூறிக்கொண்டு நகர…
ஆதிசங்கரனும்… “அம்புஜம் சொல்றது சரிதானப்பா.. அம்மா ஏற்கனவே உடம்பு முடியாம இருக்கறச்ச இப்டி மனசு கலங்குற மாதிரி பேசப்படாதுப்பா… ஏற்கனவே டாக்டர் என்ன சொன்னாரு… அம்மா இதயம் பலவீனமா இருக்கு கண்டதையும் நினைச்சி வருத்தப்பட்டுட்டு இருக்கா… அதுல இருந்து அவாள மீட்டு எடுங்கோன்னு சொன்னாளா இல்லையா… இப்போ என்னனா நீங்களே இப்டி பேசுனா அவா தான் என்ன செய்வா…”என்ற மெல்ல அதட்டலை போட்டவர்… தன் அன்னையின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து ஆதரவாக வருடியவர்…
“அம்மா நோக்கு ஒன்னும் இல்லை… இன்னிக்கி உன் பேத்திக்கு விவாகம் இருக்கு.. இந்த நேரத்துல கலங்கிட்டு இருக்காதேள்… கண்டதையும் நினைக்காதேள்.. அதும் கண்டவாள பத்தி நினைக்கவே நினைக்காதேள்…“என்று கடைசி வரியை இன்னும் அழுத்தி கூற… அது கோசலையின் முகத்தில் இன்னும் வேதனையில் சாயலை தான் கூட்டியது..
ஆதிசங்கரன் கூறிய கண்டவாள் என்ற வார்த்தையை கேட்ட மகேஸ்வரனின் முகமோ ஏனோ இறுக… ஆதியை கோவத்துடன் முறைத்தவர்… “ஆதிசங்கரா… தேவை இல்லாதத பத்தி எதுக்கு இப்போ பேசனும்… அதும் என் ஆசை பேத்தியோட விவாகம் அப்போ இந்த பேச்சி அபசக்குணம் போல தான் நேக்கு தோன்றது… போய் வேலைய பாருடா…”என்றவரின் முகமோ கோவத்தில் கருத்து போக… அதனை கண்ட ஆதிசங்கரனின் முகமோ சங்கடத்தை பூசிக்கொண்டது..
கோசலையோ தன் கைகளால் மகேஸ்வரனின் கையை ஆதரவாக வருடிவிட.. தன் தர்ம பத்தினியின் முயற்சி புரிந்தவறாக எங்கோ பார்வையை வெறித்தவாறே இருந்தார்.
ஆதிசங்கரனோ அங்கிருந்து எழுந்தவர்… “கொஞ்சம் முகத்த சிரிச்ச மாதிரி வைங்கோப்பா… இன்னும் செத்த நாழில காசி யாத்திர வச்சிடுவா… அதுக்கு அப்புறம் புண்ணியாதானம் பண்ணனும் நம்ம ஆத்துப்பொண்ணுக்கு.. இந்த நேரத்துல இப்டி மூஞ்சிய வச்சிக்காதேள்… அப்புறம் நம்ம சொந்தக்காரவாக்கு நாமளே அவுலாகிடுவோம்… புரிஞ்சிக்கோங்கோ…”என்றவரோ… “நான் போய் மாப்ளைபிள்ளையாண்டான பாத்துட்டு வந்துடுறேன்…”என்றவர் அங்கிருந்து வேகமாக சென்றுவிட… அந்த பெரியவரின் முகமோ கொஞ்சமும் விடியவில்லை…
“ஏன்னா…”என்று கோசலை முடியாத குரலில் அழைக்க…
அதில் வழக்கம் போல உருகி போனார் பெரியவர்… “என்னம்மா முடிலையா… வேணும்னா நம்ம அறையில போய் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிறியா…”என்று பரிவுடன் கேட்க…
கோசலையோ இல்லை என்று வேகமாக தலையாட்டியவர்… “நேக்கு ஒன்னுமில்லன்னா… நீங்க இப்டி கோவத்தோட இருக்காதேள்… அப்புறம் நம்ம பிள்ளங்க தான் சங்கடப்படுவாங்க…”என்று மெதுவாக எடுத்துரைக்க…
அதில் கொஞ்சமே கொஞ்சம் முகம் தெளிந்தவறோ… “சரிம்மா… நான் யார பத்தியும் பேசலை.. இன்னிக்கி என் பேத்தியோட விவாகம் அத மட்டும் தான் நானு ரசிக்க போறேன் போதுமா…”என்றவர் சின்ன புன்னகையுடன் கல்யாண மேடையை நோக்கி தலை திருப்பிக்கொள்ள,… ஆனாலும் கோசலையின் முகம் மட்டும் மலரவில்லை…
“டேய் ரிஷி கண்ணா.. காசியாத்திரைக்கு எல்லாம் ரெடியா…”என்று ஆதிசங்கரன் தன்னுடைய முதல் மகனாகிய ரிஷிவதனனிடம் கேட்க…
“அதெல்லாம் எப்போவோ ரெடிப்பா… நீங்க கொஞ்சம் ஃப்ரீயா இருங்கோ… ஏற்கனவே உங்களுக்கு ப்ரஷர் இருக்கு…”என்று பரிவுடன் கூற…
தன் டாக்டர் மகனின் தன் மீதான அக்கறையை நினைத்தவருக்கோ அவ்வளவு சந்தோஷம்… “அதானே.. ஏன்னா கொஞ்சம் அமைதியா இருங்க.. ஏற்கனவே இந்த வாரம் ஹாஸ்பிட்டல் போய்ருக்க வேண்டியது போகவும் இல்ல.. இப்டி நீங்க பாட்டுக்கு தலைவலிய இழுத்துவிட்டுக்காதீங்கோ…”என்றவாறே அங்கு வந்தார் ஆதியின் தர்ம பத்தினி பத்மினி…
அதில் இன்னும் சிரித்தவறோ… “உன் மகன் தான் பத்து டாக்டர் நீ இல்ல…“என்றார் கேலியாக
அதில் பத்மினியும் பொய்யாக அவரை முறைக்க… “என்ன பண்ணேல்ப்பா.. அம்மா கண்ணாலையே பயர் விட்டுட்டு இருக்காளே…”என்றவாறே வந்தான் மகிழன்… பத்மினி, ஆதிசங்கரனின் இரண்டாம் மகன்…
“அதில்லடா கண்ணா… நீ நம்ம ஹோட்டலோட ஒன் ஆஃப் த மேனேஜிங் டேரெக்டர்ன்னோ அதான் நீ ஒழுங்கா பிஸினஸ பாத்துக்கிறியோன்னு கேட்டுண்டேன்…”என்றார் அவனின் அன்னை பத்மினி கிண்டலாக
அவரின் கிண்டலில் மகிழன் கடுப்பாக… “ஏன்ம்மா இங்கையும் அதையே நியாபகம்ப்படுத்துறேள்… படிச்ச கையோட தொழில என் தலையில கட்டிட்டேள்… இப்போ என்னனா நிக்க கூட நேக்கு நேரமே இல்லாம போய்டுத்து…”என்று அலுத்துக்கொள்ள..
“ஹாஹா…”என்று அதற்கு பெரிதாக புன்னகைத்தார் சிவசங்கரன்… “ஆனாலும் உனக்கு இத்தன கடுப்பு ஆகாதுடா புத்திரா…“என்று கேலி செய்ய…
“இருக்கும் உங்களுக்கு நன்னா சிரிப்பா தான் இருக்கும்… உங்க இஷ்டப்படி படிக்கிறேன்னு சொன்னது தப்பா போச்சிப்பா நேக்கு… கொண்டு போய் எம்பிஏ பிஸினஸ் மேனேஜ்மென்ட சேர்த்துட்டு இப்டி என்ன டார்ச்சர் பண்றேள்…”என்றான் அலுத்தவாறே…
பின்னே ரிஷி நேக்காக டாக்டர் என்று ஒதுங்கிவிட… இப்போது இவன் அல்லவா மாட்டிக்கொண்டான்…
“அடேய் மகி நீ என்னவோ தனியா மாட்டிக்கிட்டமாதிரின்னோ பேசிட்டு இருக்க… என்னையும் இல்லடா நேக்கா மாட்டிவிட்டே…“என்றவாறே அங்கு வந்தான் ஆதிசங்கரனின் சகோதரன் விநாகத்தின் மகன் விபியன்.
“மீ டூ…”என்றவாறே அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான் ஆதிசங்கரனின் இன்னொரு சகோதரனின் மகன் ஈஸ்வர்.
“அப்போ நான் மட்டும் என்ன தொக்கா… என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்கோ…”என்றவாறே வந்தாள் அபிநிதி.
இப்படியே அடுத்து அடுத்து மகேஸ்வரனின் பேரன், பேத்திகள் வந்து ஆஜர் ஆக… இதை எல்லாம் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது இரு ஜோடி கண்கள்… இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஆளுமையான உடற்கட்டோடு மண்டபத்தின் படிகளை ஏறிக்கொண்டிருந்தது ஒரு உருவம்…..
அந்த உருவத்தை பல கண்கள் வெறுப்பாகவும், அருவருப்பாகவும் பார்க்க… இன்னும் சில கண்களோ ஆச்சரியமாக பார்க்க… ஒரு ஜோடி கண்களோ ஆத்திரமாக பார்க்க… இதற்கு எதற்குமே சம்பந்தம் இல்லாமல் ஒரு ஜோடி கண்களோ அந்த உருவத்தை ரசனையாக பார்த்தது.