அரிமா – 12

4.8
(13)

ஆதித்யா மதியின் அலறலை கேட்டு தன் அறைக்கு வந்த நேரம், மதி சுவற்றுடன் சாய்ந்து நிற்க, ஆறடி உயரத்தில் ஒருவன்  அவளது கழுத்தை தனது ஒற்றை  இரும்பு கரங்களுக்குள்  இறுக்கமாக அடக்கி நெரித்தபடி ஆவேசத்துடன் நின்றிருந்தான் . அவளோ  அவனிடம் இருந்து விடுபட முடியாமல்  வலியில் துடித்த படி

மூச்சு காற்றுக்காக போராடிக்கொண்டிருந்தாள்.

புயலுடன்  ஆம்பல் மலர் சிக்குண்டால் என்ன ஆகும். அவள் சாக வில்லை அவ்வளவு தான், ஆனால் கடுமையான வலியில் துடித்தாள், விழிகளில் இருந்து நீர் சிந்தின  .

” துருவ் ” ஆதித்யாவின் கர்ஜனையில் வாசலை பார்த்த துரியன் மதியின் கழுத்தில் இருந்த தன் கரத்தின் இறுக்கத்தை மேலும் அதிகரிக்க, ஆதித்யாவின் விழிகள் ரத்தமென சிவந்தது .

” துரியன் டிராப் யுவர் ஹன்ட்ஸ் ரைட் நவ். இந்த நொடியே கையை கீழ  போடு  ” ஆவேசத்தில் ஆதித்யாவின் முகம் சட்டென்று சூடேறி சிவந்தது.

 ஆதித்யாவை பார்த்து இறுக்கமாக முறைத்த துரியன். மதுவின் கழுத்தில் இருந்த தன் கரத்தை மெதுவாக தளர்த்தினான். துரியனின் பிடி தளர்ந்ததும், இதற்காக தான் காத்திருந்தவள் போல அவனிடம் இருந்து தப்பித்து, முகமெல்லாம் வெளிறி போக தன் கழுத்தை பிடித்து கொண்ட மது ஓடி வந்து ஆதித்யாவின் பின்னால் ஒளிந்துகொண்டாள்.

‘உஸ் புஸ்’ என்று மேலும் கீழும் மூச்சு வாங்க. அவளது இதயம் வேகமாக தடதடத்தது. தேகமோ வியர்வையில் குளித்துவிட, பதற்றம் கொஞ்சமும் குறையாமல் ஆதித்யாவை பின்னால் இருந்து அணைத்தவள்  அவன் முதுகில் முகம் புதைத்தபடி நின்றாள் .

” ஏய் வெளிய வா டி ” என திடிரென்று வந்த துரியனின் கடுமையான குரலில் அதிர்ந்தவள். செய்வதறியாது திகைத்து நின்றாள் .

” ஏய் உன்னை தான், பயப்படுற மாதிரி நடிக்காத வெளிய வா ” அதே கர்ஜனையில் மீண்டும் அழைத்தான் துரியன். பயத்தில் ஆதித்யாவின் முதுகோடு இன்னும் ஒன்றினாள் மதுமதி.

அவளது கீழ்ப்படியாமை துரியனின் ஆவேசத்தை தூண்டியது. அவள் பயத்தில் அவனது கட்டளைக்கு இணங்காததை துரியன் திமிர் என்று நினைத்தான் அவன். சில நொடிகளுக்கு பிறகு மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள், ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் கண்களில் ஒருவித பழிவெறியுடன், பெயருக்கேற்றார் போல் கலியுக துரியோதனன் போலவே , துஷ்டனாக காட்சியளித்தான் அவன் துரியன் ஜித்தேரி. இந்த ஜித்தேரி சாம்ராஜ்யத்தின் தலைவன் அவன்.

” உன்னை” என துரியன் தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை தன் கைக்கு இடம் மாற்றவும் , துரியனை முறைத்த ஆதித்யா , மதுவை பார்த்து வெளியே வருமாறு செய்கை செய்ய, பயத்துடன் ஆதித்யாவை பார்த்தவள் தன் தலையை இடவலமாக ஆட்டி வர மாட்டேன் என்பதை தன் கண்களாலே கூறினாள் .

ஆதித்யா மீண்டும் மதியை வருமாறு கூற, வேறு வழியின்றி துரியன் முன்பு வந்தவள் அவன் முன்பு தன்னை ஒரு துரும்பாய் உணர்ந்தாள் .

” வீ..ரா ” – துரியனின் திடமான குரல் அவளது வயிற்றில் புளியை கரைத்தது. துரியனின் அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல் உடனே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அந்த பெயருக்கு சொந்தகாரன் .

வந்தவனின் தோற்றமும். தோரணையும் அவனை கொடூரனாக சித்தரிக்க, பீதியில் மதியின் கரங்கள் நடுங்க தொடங்கியது .

” உனக்கு ஆதி ரூம்ல என்ன டி வேலை ?? ” என்று அதட்டிய துரியன் ,

” வீரா இவளை பேஸ்மெண்ட் ரூமில கொண்டு போடு ” என தன் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் வீராவை பார்த்து அதிகாரத்துடன் கூறினான்.

” அப்டினா என்ன?ஏன் ? நான் ஏன் அங்க போனும் ?? நான் என்னை பண்ணினேன் ??” கலவரமான மதி ஆதியின் கரங்களை பாதுகாப்பாக பிடித்தாள் .

” வா டி ” என வீரா மதியின் கரங்களை பிடிக்க நெருங்கும் பொழுது ஏதோ ஒரு உறுத்துதலில் நிமிர்ந்து பார்த்தான்.

 ஆதித்யா தான் அவனை பார்த்துக்கொண்டிருந்தான் .ஜிவு ஜிவு வென்று சிவந்திருந்த ஆதித்யாவின் முகம் வீராவை அச்சுறுத்தியது.

மதியை பிடிப்பதற்காக நீண்டிருந்த வீராவின் கரங்கள் லேசாக நடுங்கியது. கண்களில் பறக்கும் தீப்பொறியை பற்றி எங்கோ படித்திருக்கிறான். ஆனால் நேரில் இப்போ தான் பார்த்தான் .

 ஆதித்யாவின் பார்வையில் தான் அப்படி ஒரு உக்கிரம். ஏன் என்று புறியாமல் விழித்தான். ‘அப்படி என்ன தவறு செய்து விட்டேன். துரியன் பாய் சொன்னதை தானே செய்யிறேன்.. ஆதி ஏன் முறைக்கிறான் ‘ என மனதிற்குள் எண்ணிய வீராவுக்கு , ஆதித்யாவின் கோபத்தின் காரணம் புரியவே நொடிகள் எடுத்தது.

வீராவின் மூளை காரணத்தை புரியவைத்து அவனை எச்சரித்த மறுநொடி, வீராவின் கால்கள் இரெண்டும் பின்னோக்கி செல்ல,

 நீண்டிருந்த அவனது கரங்கள் தானாய் தரையை நோக்கியது .

” இழுத்துட்டு போ ” துரியன் திடமான குரலில்  உறுமினான், ‘சொன்னதை செய்’என்று சொல்லியது துரியனின் குரல் .

‘செஞ்சி தான் பாரேன். உன் உயிர் உன்னிடம் இருக்காது ‘ சொல்லாமல் மிரட்டியது ஆதித்யாவின் விழிகள்.

இரெண்டு நண்பர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு முழித்தான் வீரா .

” ஆதி ஏன் வீராவை மிரட்டுற ” துரியனின் பார்வை ஆதித்யாவை தொட்டு மதியிடம் மீண்டது .

” என் பின்னாடி வாங்க ” ஆதித்யாவை பயத்துடன் பார்த்தபடியே வீரா மதுவை அழைக்க,

 ” நோ முடியாது எங்கேயும் போக மாட்டேன். ஆதி நோ ப்ளீஸ் ” கொஞ்சும் விழிகள் ஆதித்யாவிடம் கெஞ்சியது .

சில நொடிகள் மதுவையே பார்த்து கொண்டிருந்த ஆதித்யா, அவளிடம் எதுவும் பேசாமல் வீராவை நோக்கினான் .

தன் தலைவனின் கட்டளையை அவனது பார்வையில் இருந்தே உணர்ந்தவன் மதியை தன்னுடன் வருமாறு  அழைக்க, மதியோ ஆதித்யா தன்னை காப்பாற்றுவான் என்ற நம்பியுடன் அவனை பார்த்தாள் .

அவனோ தன் கரத்தை இறுக்கமாக பிடித்திருந்த மதியின் கரத்தை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு, அவளது முகத்தை கூட பார்க்காது பாறை போல இறுகி நின்றிருந்தான் . அவனது முகத்தில் தெரிந்த இயலாமை சில நொடிகள் மட்டும் தோன்றி பின்பு யாரும் பார்க்காது மந்திரம் போல மறைந்தது .

ஆதித்யாவை சந்தித்ததில் இருந்து இந்த நிமிடம் வரை மது ஆதித்யா கூறியதற்கெல்லாம்  மந்திரம் போட்டது போல தலையசைத்தாள் என்றால் அதற்கு ஒரே காரணம் , அவளுக்கு கொடுத்த நம்பிக்கையை  அவன் எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாமல் காப்பாற்றியது தான், மதுவின் மனதை அவள் அறியாமலே ஆதித்யா பக்கம் சாய வைத்தது .

ஆனால் இந்த நிமிடம் ஆதித்யாவின் செய்கையில் அவன் மீது உள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரிய துவங்க, வேறு வழியில்லாமல் கண்ணீருடன்  ஆதித்யாவை பார்த்தபடியே அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.

@@@@@@

ஆதித்யாவின் அலுவலக அறையில் எந்திரம் போல உணர்வுகளற்ற முகத்துடன்  அமர்ந்திருந்த துரியனுக்கு எதிரில் விக்டர் தேசாய் அமர்ந்திருக்க, ஆதித்யாவோ இறுக்கமான முகத்துடன் ஜன்னல் கம்பிகளை அழுத்தமாக பிடித்து கொண்டு நின்றிருந்தான் .

இவர்கள் இருவரும் தான் துரியனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்.

நிழல் உலகில் ஆத்தியா மற்றும் துரியனின் நட்பை பற்றி தெரியாதவர்களே கிடையாது. தன் சொந்த நிழலை கூட நம்ப முடியாத இவர்களின் உலகில் , துரியன் மற்றும் ஆதித்யாவின் உறவு மட்டும் விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. மிகவும் குறுகிய காலத்தில் இருவரின் நட்பும் விருட்ச்சமாய் வளர்ந்திருந்தது.

துரியன் என்னும் நிழல் தேடும்  நிஜமாய் ஆதித்யாவும். ஆதித்யா என்னும் நிழல் தேடும்  நிஜமாய் துரியனும் என இருவரும் அவ்வளவு இணக்கமாக இருந்தனர்.

ஆதித்யாவுக்காக துரியன், துரியனுக்காக ஆதித்யா என நகமும் சதையுமாக ஒற்றுமையாய்  வாழ்ந்த அவர்களின் நட்பில், இப்பொழுது நெற்கதிருக்கு இடையே புதிதாய் வளரும் புல்லுருவி போல, மதுமதி என்னும் புதிய மலரின் வருகையால் ஆதித்யா மற்றும் துரியனுக்கு இடையே பூசல் உண்டாக, அவர்களின் உறுதியான உறவு இன்று பிளவுண்டு இரு கூறுகளாய் பிரிந்து இருவரும் எதிர் எதிர் திசையில் நிற்கின்றனர்.

ஜித்தேரியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர்களை போன்றவர்களுக்குள் பிளவு ஏற்பட்டால் அது ‘ ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் ‘ என்னும் நிலை தான். ஜித்தேரியின் எதிரிகளுக்கு  கொண்டாட்டமாகிவிடும். ஏன் ஜித்தேரி என்னும் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இதை நன்றாக உணர்ந்திருந்த விக்டர் தீவிரமாக சிந்தித்து கொண்டிருக்க, துரியன்  ஆதித்யாவின் முகத்தையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒவ்வொரு விதமான உணர்ச்சி குவியல்கள். ஆக யாருடைய மனத்திலும் அமைதி இல்லாமல் இருக்க.அந்த ஹாலில் மட்டும் அப்படியொரு அமைதி. புயலுக்கு முன் வரும் அமைதி போன்று அந்த அறையில் நிலவிய அமைதி எந்த புயலுக்கான அறிகுறியோ ?அது அவர்களுக்கே வெளிச்சம் .

” ஆதி “- துரியனே நிலவிய அமைதியை முதலில் உடைத்தான்.

ஆனால் ஆதித்யாவிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை .

” என்ன காரியம் பண்ணிருக்க ஆதி. ??நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்லை , இவ யாருன்னு தெரிஞ்சும் உன்னால எப்படி இவளை காப்பாத்த  முடிஞ்சது . அதுவும் உன் உயிரை பணயம் வச்சு! உனக்கு ஏதாவது ஆகிருந்தா..?? என்ன பண்ணிருக்க முடியும். ??அப்படி என்ன உனக்கு அவ மேல… நீ அவ உயிரை காப்பாத்திருக்க  என்பதற்காக அவ அப்பன் ஒன்னும் உனக்கு பாராட்டு விழா நடத்த மாட்டான். சமையம் கிடைச்சா உன்னை போட்டுட்டு போயிட்டே இருப்பான்” துரியனின் ஆவேசமான குரல் அறையெங்கும் எதிரொலித்தது.

அனைவரும் ஆதித்யாவின் பதிலுக்காக காத்திருந்தார்கள். ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அறை அமைதியாக இருந்தது. நொடிகள் யுகமாய் கடந்து கொண்டிருக்க,

” ஷீ இஸ் இன்னோசென்ட்   ” –  காரிருளில் பாய்ந்த மின்னலை போல நிலவிருந்த அமைதியை கிழித்தெறிந்தது ஆதித்யாவின் குரல். விக்டரின் நம்பிக்கை நிலைகுலைந்து போனது. அவருக்கு ஆதித்யா மீது பயங்கர கோபம் வந்தது .

” அவ இன்னோசெண்டா.?? ஷீ கான்ட் பீ இன்னோசென்ட்.. ” அடக்கப்பட்ட கோபத்துடன் கத்தினான் துரியன் .

” ஏன் ?? ” என்று கேட்டான் ஆதித்யா .

” நாகத்தோட குட்டி , நாகமா தான் இருக்கும். என்னதான் நீ அதுக்கு பாலை கொடுத்தாலும். அதுக்கு விஷயத்தை மட்டும் தான் கக்க தெரியும்  ” – கோணல் புன்னகையுடன் கூறினார்  விக்டர். அந்த புன்னகையில் தெரிந்த எள்ளலை கண்டுகொண்ட ஆதித்யா கோபத்துடன் அவரை பார்த்தான் .

” நம்மளோட குறிக்கோள் அவ இல்லை “

” அதுக்காக அவளை விட முடியாது ஆதி ” என்றான் துரியன் .

” விட முடியாதுன்னா என்ன பண்ண போற. அவளை கொன்னு உன் வீரத்தை காட்ட போறியா ” நக்கலாக கேட்டான் ஆதித்யா .

” ஆதி நீ இப்படி அவளுக்கு சப்போர்ட் பண்ணி எங்க கூட ஆர்க்யூ பண்ண பண்ண. எனக்கு வெறி ஏறுது. அவளை கொடூரமா கொலை பண்ணனும்ன்னு  தோணுது ” கட்டுப்பாடு இழந்து கத்தினான் துரியன் .

” அவளை கொலை பண்றதுனால உனக்கு என்ன கிடைக்கும் ” கோபத்தை மறைத்தபடி கேட்டான் ஆதித்யா .

” நிம்மதி! நிம்மதி கிடைக்கும்  ” தீர்க்கமாக கூறினான் துரியன் .

” ஆதித்யா அவ வலையில விழுந்திடாத ” என்ற விக்டரின் பேச்சில் எரிச்சலடைந்த ஆதித்யா,

” நீங்க நினைக்கிறது போல இல்ல அங்கிள், அவள நான் பாதுகாக்குறதுக்கு வேற ஒரு காரணம் இருக்கு, கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க ” கோபத்தை உள்ளடக்கிய குரலில் தன்மையாக கூறினான்.

 அதைக் கொஞ்சமும் காதில் வாங்காத விக்டர், “ஆதித்யா நீ யாரு ?? ஜித்தேரிக்கு ஏன் வந்த ?? உனக்கு இங்க இருக்கிற பொறுப்பு என்ன என்பதை மறந்துடாத ?? ” என்க அவரது எச்சரிக்கும் குரல் ஆதித்யாவை வெறியனாக்கியது .

“எனக்கு தெரியும். என் வேலை என்னன்னு நீங்க எனக்கு சொல்ல வேண்டாம்.” முதலில் மிதமான கோபத்தில் ஆரம்பித்தவன், பின்பு ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவரிடம் கத்தியே விட்டான்.

” உன் நண்பன் அவ பிடியில சிக்கிட்டான் துரியன். இனிமேல் கஷ்டம்  ” ஆதித்யாவை தீ பார்வை பார்த்த அந்த கிழட்டு சிங்கம் (விக்டர் ) அங்கிருந்து வேகமாக கிளம்பினார் .

” அங்கிள் கிட்ட ஏன் இப்படி நடந்து கிட்ட? அவர் அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரு. அவர் நமக்கு குரு அவர்கிட்ட நீ இப்படி நடந்திருக்க கூடாது. உன்னை இதுவரை இப்படி நான் பார்த்ததே இல்லை ஆதி. அவ ஒரு சூனியக்காரி. வந்த அன்னைக்கே உன்னை எங்க எல்லாருக்கும் எதிரா திருப்பிட்டா. “

” அவரு தான் என்னை நம்பாம நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்காம பேசிட்டு போறாருன்னா. நீயும் என்னை நம்பாம பேசுறது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஜித்தேரிய அடையனும் என்பது என் லட்சியம் கிடையாது. என் நண்பன் நீ கேட்ட என்கிற ஒரே காரணத்துக்காக தான் நான் இங்க வந்தேன். உன் சந்தோசம் மட்டும் தான் எனக்கு முக்கியம். எப்போ உனக்கு என் மேல உள்ள நம்பிக்கை போச்சோ இனிமே நான் பேசுறதுல அர்த்தமே கிடையாது. போ அவளை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.இதோ என் கன்(துப்பாக்கி ) ” என தன் துப்பாக்கியை தூக்கி மேஜை மீது வைத்த ஆதித்யா,

” போ துருவ். என் குறுக்கீடு இருக்காது. உன் ஆசை தீர அவளை கொலை பண்ணு. கில் ஹெர். ஆனா ஒரு விஷயம் துரியன் எவன் ஒருவன்

தன்னுடைய கோபத்துக்கு கடிவாளம் போடலையோ அவனை அவனுடைய எதிரி இல்லை , அவனுடைய   ஆத்திரமே  ஒரு நாள்  மண்ணுல சாய்ச்சிடும் . இதை என்னைக்கும்  மறந்துடாத ” என்றவன்  தன் இருக்கையில் சென்று அமர,

 துரியனின் விழிகள் மேஜை மேல் இருந்த துப்பாக்கியை சில நொடிகள் பார்த்து விட்டு ஆதித்யாவிடம் மீண்டது.

மதுவை அறைக்குள்  விட்டு வெளிப்புறமாக கதவிற்கு தாளிட்ட வீரா  அங்கிருந்து சென்று விட மதுமதிக்கு தான் ஏதோ பாதாளத்தில் சிக்கிக்கொண்டது போல பயத்தில் மூச்சு முட்டியது.

 “எப்படி இங்க இருந்து தப்பிக்க போறேன் ” வாய்விட்டு கதறியவள். பயத்தில் முழங்காலில் முகம் புதைத்து கால் இரண்டையும் கட்டிக்கொண்டு குலுங்கி அழுதாள் .

அந்த இடத்தில் இருந்த ரத்தவாடை அவளுக்கு வயிற்றை பிரட்டி கொண்டு வர, மேலாடையால் மூக்கை மூடிகொண்டவளால் எவ்வளவு முயன்றும் ஆதித்யாவின் புறக்கணிப்பை நம்பவே முடியவில்லை.

” எவ்வளவு நம்பிக்கையா பேசினான் ” மனம் வலியில் துடித்தது. ஒரு மனம் அவனை நம்ப சொல்ல, இன்னொரு மனமோ அவனை நம்பாதே என எச்சரித்தது.

போதா குறைக்கு துரியனின் கொலை மிரட்டலால் வேறு  அச்சத்தில் உறைந்திருந்த மதுமதியால்  சரியாக யோசிக்க முடியவில்லை. குழப்பத்தில் சிக்கி கொண்டு தவித்த மதி பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் ஒரு முடிவு எடுத்தாள்.

அரிமா வருவானா?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!