என்ன என்னும் விதமாய் அவன் பார்க்க, “ஏன் பேராண்டி உன் லவ்வு சாஸ்ஸாகிருமா…?” (சக்ஸஸ் )
“ங… ஸாஸ் ஆ…” என இன்னுழவன் விழித்து வைக்க…
அவன் தோள் தட்டி பின்புறம் வந்து நின்ற இனிதுழனியோ சக்ஸஸ் என திருத்திக் கூறினாள் செய்கை மொழி தன்னில்.
ஏனென்றால் தினமும் இவர்கள் இருவரின் காதல் சம்பாஷனைகளை ஊர் கேக்குதோ இல்லையோ மொத்த பேரும் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். சக்திவேல், கோதாவரி, சோமசுந்தரம், மைதிலி, தங்கமணி ஐவரை தவிர.
மேக விருஷ்டி பேசியதை எண்ணி யோசனையில் வந்தவன், “ப்ச்… அப்பத்தான் உன் 30 நாள் இங்கிலீஷ குழி தோண்டி மூட போறேன் பாரு” என்றவனாய்,
“ஏன் என் லவ்வுக்கு என்ன குறைச்சல் அதெல்லாம் நல்லபடியா சக்ஸஸ் ஆகும். ஏன் ஏஞ்சல் கண்டிப்பா என்ன வந்து சேர தான் போறா. நாங்க உனக்கு டசன் கணக்குல பெத்து போட தான் போறோம்.” என்றவனாய் பெருமூச்சு விட்டு மேலே சென்றான் இன்னுழவன்.
நேரம் கடக்க…
இன்னுழவன் வீட்டு வாசலில் கையில் பழம், பூ, தாம்பாழம் சகிதம் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தனர் சோமசுந்தரமும் மைதிலியும் ஒருவருக்கொருவர் வாதாடியவர்களாய்.
“ஏங்க இவங்களுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் செய்யணுமா?” மைதிலி எரிச்சலாய் வினவ…
“ப்ச்… மைதிலி ஊர் தலைவர் எங்கிற முறையில நாம மரியாதை கொடுத்து தான் ஆகணும்.” என்றார் சோமசுந்தரம் உறுதியாக.
“சரி எவ்வளவு நேரம் தான் இங்கேயே நிற்கிறது, வாங்க உள்ள போலாம்” என இருவரும் உள்ளே செல்ல…
“அங்கயே நில்லுங்க…” என்று குரல் அதிர நடுக்கூடத்தில் இருந்து கத்தி இருந்தார் சக்திவேல்.
வாசலை கடக்காது அதிர்ந்து நின்றனர் சோமசுந்தரமும் மைதிலியும். இதை அவர்கள் எதிர்பார்த்தது தான்.
இதற்காகத்தான் மைதிலி வரமாட்டேன் என்று கூறியபோதும் சோமசுந்தரம் வலுகட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்தார்.
சக்திவேலை பல வருடங்கள் கழித்து பார்த்த மைதிலிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. எனினும் அதை வெளிகாட்டிக்காது நின்றார் அன்று போல் இன்றும் கணவன் கை பிடித்து.
சோமசுந்தரமும் மனைவி கையை அழுத்த பற்றி நிற்க, சக்திவேலின் குரல் கேட்டு அனைவரும் வெளியே வந்திருந்தனர்.
கோதாவரி கண்களிலோ தமையனை பார்த்ததும் விழி நீர் வெள்ளம்.
“ஏண்டி இவள இந்த கத்து கத்துனா உன் அப்பனுக்கு ஆட்டு(ஹார்ட்) அட்டாக்கு வராது?” கேட்டார் அம்பிக்காமா மௌனமாய் இனிதுழனியிடம்.
அவளோ முறைக்க, “நான் என்னடி தப்பா கேட்டுடேன். வயசான காலத்துல ஆட்ட வேற தச்சு வச்சிருக்காங்களே இவன் கத்துற கத்துல கிழிச்சிட கூடுமோ என்ற நல்ல எண்ணத்துல தான கேட்டேன். அதுக்கு ஏன் இந்த முறை முறைக்கிறவ” என்றார் அம்பிகாமா உதடை சுழித்து.
சக்திவேல் அவர்களின் முன்வந்து நின்றவர், “கொலைகார பாவிங்களா உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டு வாசப்படி மிதிச்சிருப்பீங்க, உங்கள…” என்றவர் கொதித்துக் ஏழுந்தார்.
பொறுமை இழக்க மைதிலி வார்த்தை தொடங்கும் முன்
“என்ன பண்ணுவீங்க அவங்கள நீங்க…?” என அதே அதிரும் குரலில் கர்ஜித்தவனாய் படியில் இருந்து இறங்கி வந்தான் கை காப்பினை நரம்பு புடைக்க ஏற்றி விட்ட வண்ணம் இன்னுழவன் கூர் விழிகளுடன்.
கீழ இறங்கி வந்தவனோ மூவருக்கும் நடுவில் முன் வந்து நின்றவனாய் சக்திவேலை பார்த்து “சொல்லுங்க என்ன பண்ணிடுவிங்க நீங்க?” கேட்டான் குரலில் கடுமை ஏகத்திற்க்கு விரவியிருக்க.
அவரும் சற்றும் அசராது, “வெட்டி போட்ருவேண்டா. இவ்வளவு நாள் கையில சிக்கல இன்னைக்கு எவ்வளவு தைரியம் இருந்தா ஏன் வீட்டுக்கே வந்து என் முன்னாடியே இப்படி நிப்பாங்க இவங்க” என்றவர் கைகள் பரபரத்தன ஆத்திரத்தில்.
“எங்க வெட்டுங்க பார்ப்போம் என்ன மீறி எப்பிடி உங்க கை அவங்க மேல படுதுன்னு நானும் பாக்குறேன். அன்னைக்கு நீங்க ஆடுன ஆட்டத்துக்கு கேட்க யாரும் இல்லை, அன்னைக்கு மாதிரி இன்னைக்கு இல்ல. அப்புறம் எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கவும் மாட்டேன்” என அர்ச்சித்தவன்,
இந்த வீடு உங்க வீடா இருக்கலாம் அதே நேரம் என்னோட வீட்டுங்கிறதையும் மறக்க வேண்டாம். இங்கு யார் வரணும் யார் வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எந்த உரிமை இல்லை. பேசாம விலகி இருங்க” என்றவன் நீங்க உள்ள வாங்க என சோமசுந்தரத்தையும் மைதிலியும் கை கூப்பி புன்முறுவலுடன் வரவேற்றான் இன்னுழவன்.
சோமசுந்தரமும் மைதிலியுமே சற்று ஆடிப்போய் தான் நின்றிருந்தனர். இன்னுழவன் பேச்சை கண்டும் சக்திவேலை ஆட்டிப்படைக்கும் அவனின் ஆளுமையை கண்டும்.
இன்னுழவன் அழைத்தது கூட தெரியாத சிலையாய் நின்றவர்களை “மாமா… அத்தை… உங்கள தான் உள்ள வாங்க. எவ்வளவு நேரம் வாசல்லையே நிப்பீங்க” என்று அழுத்தமாக அழைத்தவன் குரலிலே தன்நிலை தெளிந்தவர்கள் “ஹான்…” என உள்ளே வந்தனர்.
“தம்பியா…” என சோமசுந்தரத்தை பார்த்து ஓடி வந்தார் கோதாவரி பாச உணர்வில்.
வந்தவர் அவர் கைப்பற்ற “எப்படிடா இருக்க? அக்காவ பாக்கணும்னு உனக்கு தோணவே இல்லையா? நீ நல்லா இருக்கியாமா? இன்னைக்கு தான் உங்களுக்கு இங்க வரணும்னு தோணுச்சா” என விழி நீர் மல்க அவர் பேசிக் கொண்டிருக்க…
சகோதரியின் கண்ணீரை பார்த்தவுடன் மனமது உடைய அவரை கட்டியணைத்து “உன்ன நான் என்னைக்குக்கா மறந்தேன்னு” கூற துடித்த மனமானது அவரை உந்தித்தள்ள அதை கட்டுப்படுத்திவராய்
எச்சிலை கூட்டி விழுங்கி, “நான் என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் மா இந்த ஊர்ல. ஊர் தலைவரையும் அவர் குடும்பத்தையும் முறையா கல்யாணத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக வந்திருக்கேன்மா” என்றார் சோமசுந்தரம் தூக்கி வளர்த்த சகோதரியை மூன்றாவது மனுஷியாய் பாவித்து.
அவரின் ஓட்டா வார்த்தையில் இதயம் வலிக்க அவரின் கைப்பற்றி இருந்த கோதாவரியின் கரங்கள் தானாக விடுவித்தன.
“டேய் சோமு என்னடா பேசுற நீ… ஊர் தலைவர் அது இதுன்னு” என வேகமாக அம்பிகாமா முன் வர…
அவரோ கல்லாக்கியா மனதுடன் இன்னுழவன் புறம் திரும்பியவர், “இந்த ஊர் தலைவரா என்னோட அழைப்ப நீங்க ஏத்துக்கிட்டீங்கன்னா நாங்க கிளம்புவோம் சந்தோசமா. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு” என வெட்டு ஒன்று தொன்று இரண்டாக பேசிக் கொண்டிருந்தார் சோமசுந்தம்.
ஆனால் இவை அனைத்தையும் கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ சக்திவேல் தான்.
இன்னுழவன் சோமசுந்தரத்தின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று அலைபேசியில் அவனுடன் பேசும் பொழுதே யாரிடமோ பேசுவது போல் பேசியவர் அல்லவா!
அவர்களின் கையில் இருந்த தாம்பூலத்தை இன்னுழவனை பார்த்து நீட்ட.. அதைப் பெற்றுக் கொண்டவன், “ஊர் தலைவரா உங்க வீட்டு கல்யாணத்தை என் வீட்டு கல்யாணமா நெனச்சு அதை சிறப்பிச்சி கொடுக்குறதுக்கு எங்க குடும்பத்தோட நாங்க கண்டிப்பா அங்க இருப்போம். நீங்க சந்தோஷமா போயிட்டு வரலாம்” என்றான் அழுத்தமாக வாசலை பார்த்து.
மாமன் அவனுடன் பேச வேண்டியவை ஏராளம் இருந்தாலும் இப்பொழுது பேசுவது முறையாகாது, நெடு வருடங்கள் கழித்து நல்லதொரு காரியதிற்க்காக சொந்த மண்ணை மிதித்துள்ளதால் வந்த காரியம் இனிதுடன் முடிந்த பின்பே பேசிக்கொல்லாம் என முடிவு எடுத்து மௌனம் காத்தான் இன்னுழவன்.
“என்னது கல்யாணமா யார் ஊர்ல வந்து யாருக்கு கல்யாணம் வச்சிருக்க. யாரைக் கேட்டு முதல்ல நீங்க கல்யாணத்தை வச்ச உன் பொண்ணுக்கு. உனக்கே முதல்ல இந்த ஊர்ல இடம் கிடையாது” என அமைதியாய் கொதித்துக் கொண்டிருந்த சக்திவேல் மீண்டும் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தார்.
இன்னுழவனோ தன் கையில் இருந்த தாம்பூலத்தை கலங்கி நின்ற கோதாவரியின் கையில் கொடுத்து அவர் விழி நீரை துடைத்தவன், நான் இருக்கிறேன் என்னும் விதமாய் இமை அசைத்து “பூஜை ரூம்ல வையுங்கம்மா” என சாந்தமாக கூறியவன் திரும்பி சோமசுந்தரம் மைதிலி பார்த்தான்.
சோமசுந்தரமும் மைதிலியும் சக்திவேலை விழி அசையாது பார்த்தபடி அங்கிருந்து நகர… “ஒரு நிமிஷம்” என நிறுத்தியிருந்தான் அவர்களை இன்னுழவன்.
அவர்களோ திரும்பி பார்க்க, “யார பற்றியும் நீங்க கவலைப்பட வேண்டாம். முக்கியமா பயப்பட வேண்டாம். உங்க பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கும்.” என அழுத்த திருத்தமாக தீர்க்கமாக கூறினான் இன்னுழவன்.
வந்ததில் இருந்து இன்னுழவன் செய்கை தன்னை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கோ அவன் வாய்மொழிதனில் சற்று நம்பிக்கை பிறக்க, தன் சகோதரியிடம் கலங்கிய விழிகளால் மன்னிப்பு யாசித்து சோமசுந்தரம் வெளியே செல்ல அவர் பின் மைதிலியும் வெளியே சென்றார்.
இப்பொழுது இன்னுழவன் பார்வையோ சக்திவேலின் மீது காரமாக படிந்தது.
“அவன் எப்படி இந்த ஊருக்கு வரலாம் அது மட்டும் இல்லாம இந்த ஊர்ல எப்படி கல்யாணத்தை வைக்கலாம்” எற்றார் சக்திவேல் தொண்டை கிழிய.
இன்னுழவன் அவர் முன் வெறப்பாய் நின்றவன், “முதல்ல அவர் இந்த ஊருக்கு வரதுக்கு யார கேட்கணும்? அப்புறம் அவரு பொண்ணு கல்யாணத்தை இந்த ஊர்ல வைக்க கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு?”
“டேய் பேராண்டி அவனுக்கு இந்த ஊர்ல இடமில்லன்னு வேற சொன்னான் டா இந்த வெஸ்ட்பாலோ?” (வேஸ்ட் ஃபெல்லோ )என அப்பத்தா எடுத்துக் கொடுக்க…
“ஹான்… இடமில்லன்னா எப்படி இந்த ஊர் மொத்தத்தையும் நீங்க பட்டா போட்டு எழுதி வாங்கிட்டீங்களா…? கேட்டான் இன்னுழவன் புருவம் இடுக்க சக்திவேலை பார்த்து.
“நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். அவனால தான் என் தங்கச்சி செத்தா… அவனையும் அவன் குடும்பத்தையும் கருவறுக்காம விடமாட்டேன்” என சக்திவேல் பேசி கொண்டே போக…
“என்னங்க…” என கோத்தாவரி பதற
“அப்பாஆஆஆஆ…” என வீடே அதிரும் அளவிற்கு கத்தியிருந்தான் இன்னுழவன் முகமது தனலாய் சிவக்க.
“இப்ப பேச சொல்லு உன் அப்பன… ஹிம் டல்… டல்…” (டெல் டெல்) என அப்பத்தா முணுமுணுத்தார் இனிதுழனியிடம் அருகில் இருந்த ஆப்பிளை எடுத்து கடித்த வண்ணம்.
இன்னுழவன் சத்ததில் சக்திவேல் அதிர்ந்து வாயை மூடி கொள்ள, “அவங்க குடும்பத்து மேல உங்களால ஒரு தூசு பட்டாலும் அப்புறம் நான் இப்பிடி பேசிட்டு இருக்க மாட்டேன். நீங்க சொன்னத உங்களுக்கு செஞ்சுட்டு தான் மறு வேலை பார்ப்பேன். அப்பான்னு கூட பார்க்க மாட்டேன் ஜாக்கிரதை.” என தீர்க்கமாக எச்சரித்தவன்…
“என்னமா நீ இப்பிடியே சிலையாட்டம் தான் நிற்க போறியா? நாளைக்கு உன் தம்பி மக கல்யாணத்துக்கு மாமன் வீட்டு சார்புல என்ன வாங்கணும்னு பார்க்க போறியா…?” என்றான் கோதாவரி புறம் திரும்பி சற்று கோவம் மட்டுப்பட.
அவன் முன் வந்து நின்றவர், “நான் பார்த்துக்குறேன் பேராண்டி பர்சசிங்க… இந்தா கிளம்பிட்டேன்ல ஜாப்பிங்க்கு…” என்றவரிடம் கட்டு ரூபாய் பணத்தை எடுத்து வந்து நீட்டினான் இன்னுழவன்.
அதை வாங்காதவர், “டேய் பேராண்டி என்கிட்ட காடு (கார்டு) இருக்கு டா. நான் சுவைப்பு (ஸ்வைப்) பண்ணிக்கிறேன்” இத நீயே வச்சுக்கோ என்றார் அம்பிகாமா புன்னகையுடன்.
“சரி பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க. அப்புறம் நகை கடைக்கு போனதும் எனக்கு கால் பண்ணு மறந்துறாத” என்றவன் அமர்ந்திருந்த சக்திவேல் மீது அனல் பார்வையை வீசி சென்றான்.
செங்கோதை மணம் வீசும்…
டியர் ஃப்ரெண்ட்ஸ் ப்ளீஸ் your likes or comment and ratings also 😍